Pages

Wednesday, April 1, 2015

உள்ளது நாற்பது - 12


 
இரட்டைகள் முப்புடிக ளென்றுமொன்று பற்றி
யிருப்பவா மவ்வொன்றே தென்று – கருத்தினுட்
கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை
கண்டார் கலங்காரே காண்.

இரட்டைகள் முப்புடிகள் என்றும் ஒன்றுபற்றி
இருப்பவாம் அவ்ஒன்று ஏதுஎன்று – கருத்தினுள்
கண்டால் கழலும் அவை கண்டவரே உண்மை
கண்டார் கலங்காரே காண்.

அறிவு அறியாமை; பிறப்பு இறப்பு போன்ற இரட்டைகளும்; காண்பவன், காணப்படும் பொருள், காணுதலான செய்கை போன்ற முப்புடிகளும் எப்போதும் ஒரு சத்ய வஸ்துவையே ஆதாரமாகக் கொண்டு தோன்றுகின்றன. அந்த வஸ்து எது என ஆராய்ந்து கண்டால் இரட்டைகளும் முப்புடிகளும் நீங்கிவிடும். இந்த ஆதாரப்பொருளை கண்டவரே உண்மையைக்கண்டவர். அவருக்கு இரட்டைகளும் முப்புடிகளும் கலக்கத்தை ஏற்படுத்தாது.

द्वन्द्वानि सर्वाण्यखिलास्त्रिपुट्यः किञ्चित्समाश्रित्य विभान्ति वस्तु ।
तन्मार्गणे स्याद्गलितं समस्तं न पश्यतां सच्चलनं कदापि ॥ ११ ॥
த்³வந்த்³வானி ஸர்வாண்யகி²லாஸ்த்ரிபுட்ய: கிஞ்சித்ஸமாஶ்ரித்ய விபா⁴ந்தி வஸ்து |
தன்மார்க³ணே ஸ்யாத்³³லிதம்ʼ ஸமஸ்தம்ʼ ந பஶ்யதாம்ʼ ஸச்சலனம்ʼ கதா³பி || 11 ||

 

No comments: