Pages

Wednesday, May 6, 2015

உள்ளது நாற்பது - 22


நாமன்றி நாளேது நாடேது நாடுங்கா
னாமுடம்பே னாணாட்டு ணாம்படுவ நாமுடம்போ
நாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்கு மொன்றா
னாமுண்டு நாணாடினாம்.

நாம்அன்றி நாள்ஏது நாடுஏது நாடுங்கால்
நாம் உடம்பேல் நாள்நாட்டுள் நாம்படுவம் நாம் உடம்போ
நாம் இன்றுஅன்றுஎன்றும்ஒன்றுநாடு இங்குஅங்குஎங்கும் ஒன்றால்
நாம்உண்டு நாள்நாடு இல்நாம்.

விசாரணையில் நாம் இல்லாமல் நாளும் இல்லை; நாடும் இல்லை. நாம் என்பதாக உடம்பு ஒன்று இருந்தால் ஏதோ ஒரு நாளுடனும் நாட்டுடனும் சம்பந்தப்பட்டு இருக்கிறோம். காலமும் இடமும் பாதிப்பது உடலை மட்டுமே. நாம் என்பது உடம்போ? இல்லை. நாம் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஞான ஸ்வரூபமாகவே இருக்கிறோம். அதே போல இங்கும் அங்கும் எங்கும் ஒரே ஞான ஸ்வரூபமாகவே இருக்கிறோம். இந்த ஞான் ஸ்வரூபமான நாம் மட்டுமே உண்மை. நாளும் நாடும் உண்மையல்ல. விசாரித்தால் அவையும் நம்மில் இருந்தே உதிப்பன.

क्व भाति दिक्कालकथा विनाऽस्मान् दिक्काललीलेह वपुर्वयं चेत् ।
न क्वापि भामो न कदापि भामो वयं तु सर्वत्र सदा च भामः ॥ १८ ॥

க்வ பாதி தி³க்காலகதா² வினா()ஸ்மான் தி³க்காலலீலேஹ வபுர்வயம்ʼ சேத் |
ந க்வாபி பாமோ ந கதா³பி பாமோ வயம்ʼ து ஸர்வத்ர ஸதா³ ச பா: || 18 ||

No comments: