Pages

Tuesday, January 30, 2018

கிரஹணம் 31-01-2018




Copied from Pattu Vadyar

பூர்ண சந்த்ர க்ரஹணம்.

ஹே விளம்பி வருஷம் தை மாதம் 18 ஆந் தேதி 31/01/2018 புதன் கிழமை.

பூசம் நக்ஷத்ரத்தில் பிடித்து ஆயில்யம் நக்ஷத்ரத்தில் விடுகிறது.

ராஹு க்ரஸ்தம்..

பூர்ண க்ரஹண ஆரம்பம்: 1822 hours IST.

க்ரஹண  உன்மீலனம் 1938 hours IST.

க்ரஹண  மோக்ஷம்  2041 hours IST.

இந்த புண்ய காலத்தில் முதல் ஸ்நானம் இந்திய நேரப்படி மாலை 06:22…

அதற்குப் பிறகு ஸ்நானம்/ஜபம்/தாநம் ஆகியவை  இந்திய நேரப்படி இரவு 08:41.வரை விசேஷமாகச் சொல்லப் பட்டுள்ளன;

தர்ப்பணம் செய்யக் கூடியவர்கள்...உன்மீலன காலம் – அதாவது க்ரஹணம். விட ஆரம்பிக்கும் நேரத்தில் - இந்திய நேரப்படி இரவு 07:38 முதல் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கலாம்..அதிக பட்சமாக இரவு 08:41 வரை தர்ப்பணம் செய்யலாம்.

இரவு 08:41 க்குப் பிறகு மோக்ஷ ஸ்நானம்/போஜனம்.

அன்றைய தினம் பகல் போஜநம் கூடாது. இது சாஸ்திரம்... இருந்தாலும் - குழந்தைகள்/வயதானோர்/வியாதியஸ்தர்கள்/கர்ப்பிணிகளுக்கு இதில் விலக்கு உள்ளது...

(அவர்களால் எவ்வளவு நேரம்...தங்களுடைய தேக ஆரோக்யத்திற்கு கெடுதல் இல்லாமல்  உபவாஸம் இருக்க முடியும் என்பதை அவர்களே தீர்மானித்து நடந்து கொள்ளலாம்).

பூசம்/ஆயில்யம் நக்ஷத்ரத்தில் பிறந்தவர்கள் பரிஹாரம் செய்து கொள்ள வேண்டும்.


க்ரஹண சமயத்தில் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள் :
அதனுடன் இதையும் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த்ர: அனல: தண்ட தரஸ்ச ருக்ஷ:
பாசாயுதோ வாயு குபேர ஈச:
குர்வந்து சர்வே மம ஜன்ம ரக்ஷ...
ராசிஸ்த சந்த்ர க்ரஹண தோஷ சாந்திம்!

அன்றைய தினம் செய்ய வேண்டிய ஸ்ராத்தத்தை மறுநாள் செய்ய வேண்டும்..  

எனக்குத் தெரிந்ததை மட்டுமே இங்கு பதிவு செய்துள்ளேன்...மேலும் முழு விவரம் தேவைப்படுவோர் தயவு செய்து அவர்கள் ஆத்து வாத்யாரைக் கலந்து ஆலோசிக்கலாம்...

Saturday, January 13, 2018

மகர சங்க்ராந்தி 2018




வாக்கியப்பஞ்சாங்கப்படி நாளை ஞாயிறு மாலை நாலே முக்கால் மணிக்கு சூர்ய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். ஆகவே புண்ணிய காலம் அது முதல் அஸ்தமன நேரமான ஆறு மணி வரைதான். இந்த நேரத்திலேயே ஸ்நானம் செய்து தர்ப்பணம் தானம் சூர்ய பூஜை உண்ணுதல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ராகு காலமாக இருப்பது பரவாயில்லை; வேற வழியில்லை. அடுத்த நாள் புண்ணிய காலமில்லை.

த்ரிகணித பஞ்சாங்கம் கடைபிடிப்பவர்களுக்கு மத்யான்ஹிகம் 2 மணிக்கே புண்ணிய காலம் பிறக்கிறது. அவர்கள் அதன்பின் ஸ்நானாதிகளை செய்யலாம்.
இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்றெல்லாம் கேட்டு பிரயோசனமில்லை. அவரவர் உடம்பு இடம் கொடுக்கும்  அளவுக்கு அவரவர் தர்மத்தை கடைபிடிக்க பார்க்கவும்.