Pages

Thursday, May 31, 2012

பஞ்சதஶீ, 1 -35

  ஸாத்த்விகைர்தீ⁴ந்த்³ரியை​: ஸாகம்° விமர்ஷாத்மா மநோமய​: |
தைரேவ ஸாகம்° விஜ்ஞாநமயோதீ⁴ர்நிஶ்சயாத்மிகா || 35|| 

சலனமாகும் மனதும் ஐம்பொறிகளும் சத்வமாகும். இவை மனோ மய கோசமாகும். ஞான இந்திரியங்கள் பக்குத்தறியும் புத்தியுடன் சேர்ந்து விஞ்ஞான மய கோசமாகும்.
 

Wednesday, May 30, 2012

பஞ்சதஶீ, 1 -34


 ஸ்யாத்பஞ்சீக்ரு«தபூ⁴தோத்தோ² தே³ஹ​: ஸ்தூ²லோ'ந்ந ஸம்°ஜ்ஞக​: |
லிங்கே³ து ராஜஸை​: ப்ராணை​: ப்ராண​: கர்மேந்த்³ரியை​: ஸஹ || 34||

பஞ்சீகரணத்தால் ஐம் பூதங்களால் ஆன பரு சரீரம் அன்ன கோசம் எனப்படும். ஐந்து வாயுக்களும் ஐந்து கர்ம இந்திரியங்களும் சேர்ந்த சூக்ஷ்ம சரீரம் ப்ரக்ருதியின் ரஜஸ பாகமாகும். இது ப்ராண மய கோசம். 

Monday, May 21, 2012

பஞ்சதஶீ, 1-33


அந்நம்° ப்ராணோ மநோ பு³த்³தி⁴ராநந்த³ஶ்சேதி பஞ்ச தே |  
கோஷாஸ்தைராவ்ரு«த​: ஸ்வாத்மா விஸ்ம்ரு«த்யா ஸம்°ஸ்ரு«திம்° வ்ரஜேத் || 33||

 தன்னை (ஆத்மாவை) மூடியிருக்கும் ஐந்து கோசங்கள் அன்னம். ப்ராணன், மனம், புத்தி, ஆனந்தம் ஆகியன. இவற்றில் சிக்குண்ட ஜீவன்கள் தான் யார் என்பதை மறந்து அடுத்தடுத்த பிறவிக்கு ஆளாகின்றன.

Saturday, May 19, 2012

பஞ்சதஶீ, 1-32


உபதே³ஶமவாப்யைவமாசார்யாத் தத்த்வ த³ர்ஶிந​: |
 பஞ்சகோஷ விவேகேந லப⁴ந்தே நிர்வ்ரு«திம்° பராம் || 32||

 அதே போல சம்சார சுழலில் சிக்கிய ஜீவர்கள் ப்ரமத்தை அறிந்த – ஆகவே தானே ப்ரம்மமாகிய- நல்ல குருவால் பொருத்தமான உபதேசத்தை பெறுகிறார்கள். தன்னிலிருந்து ஐந்து கோசங்களையும் பிரித்து அறிந்து பரமமான விடுதலை பெறுகிறார்கள்.
 

Friday, May 18, 2012

பஞ்சதஶீ, 1-31

 
ஸத்கர்மபரிபாகாத்தே கருணாநிதி⁴நோத்³த்⁴ரு«தா​: |
 ப்ராப்ய தீரதருச்சா²யாம்° விஶ்ராம்யந்தி யதா²ஸுக²ம் || 31||

 நல்ல கர்மாக்களை அவை செய்து, அவற்றின் பலன் கிடைக்கும்போது இவை கருணை கொண்டவனால் எடுக்கப்பட்டு நதியின் கரையில் மர நிழலில் விச்ராந்தியாக இருக்க வைக்கப்படுகின்றன.

Thursday, May 17, 2012

பஞ்சதஶீ,1-30

 
நத்³யாம்° கீடா இவாவர்தாதா³வர்தாந்தரமாஶு தே |
 வ்ரஜந்தோ ஜந்மநோ ஜந்ம லப⁴ந்தே நைவ நிர்வ்ரு«திம் || 30||

நதிகளில் புழுக்கள் ஒரு சுழலில் இருந்து இன்னொரு சுழலுக்கு அடித்துச்செல்லப்படுவது போல இவர்கள் ஒரு பிறவியில் இருந்து இன்னொரு பிறவிக்கு செல்கின்றனர்;
நிர்வ்ருத்தி (அமைதி) கிடைப்பதே இல்லை.

Wednesday, May 16, 2012

பஞ்சதஶீ, 1-29


தே பராக்³ த³ர்ஶிந​: ப்ரத்யக் தத்த்வ போ³த⁴விவர்ஜிதா​: |
 குர்வதே கர்ம போ⁴கா³ய கர்ம கர்தும்° ச பு⁴ஞ்ஜதே | | 29||

 அவர்கள் (தைஜஸர்கள்) வெளிமுகமாக மட்டும் பார்க்கின்றனர். தன் உள்ளே உள்ள உண்மையை அறிவதில்லை. கர்மத்தை அனுபவிக்க அவர்கள் வேலை செய்கின்றனர். அனுபவிப்பதால் அவர்கள் மேலும் கர்மாவை செய்கின்றனர்.
 

Friday, May 11, 2012

பஞ்சதஶீ, 1-28தைரண்ட³ஸ்தத்ர பு⁴வநபோ⁴க்³யபோ⁴கா³ஶ்ரயோத்³ப⁴வ​: | ஹிரண்யக³ர்ப⁴​: ஸ்தூ²லே'ஸ்மிந்தே³ஹே வைஶ்வாநரோ ப⁴வேத் | தைஜஸா விஶ்வதாம்° யாதா தே³வ திர்யங்நராத³ய​:|| 28||

இந்த ஒன்று சேர்ந்த பூதங்களில் இருந்து பேரண்டம் தோன்றியது. இதிலிருந்து அனுபவிக்கும் பொருட்கள், அனுபவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தோன்றின. இந்த பருப்பொருட்கள் அனைத்துடன் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ளும்போது ஹிரண்யகர்பன் வைஶ்வாநரன் எனப்படுகிறான். தைஜஸன் தான் சம்பந்தப்பட்ட உடலுடன் மட்டும் தன்னை தேவன், மனிதன் அல்லது மற்ற பிராணிகளாக அடையாளப் படுத்திக்கொள்ளும்போது விஶ்வஸ் எனப்படுகிறான்.

Thursday, May 10, 2012

பஞ்சதஶீ, 1-27

த்³விதா⁴ விதா⁴ய சைகைகம்° சதுர்தா⁴ ப்ரத²மம்° புந​: | ஸ்வஸ்வேதரத்³விதீயாம்°ஶைர்யோஜநாத் பஞ்ச பஞ்ச தே || 27|| 

ஒவ்வொரு சூக்ஷ்ம பூதத்தையும் இரண்டாக பிரித்து; அதில் ஒரு பாகத்தை நான்காக பிரித்து நான்கு பாகங்களையும் மற்ற நான்கின் பாதியுடன் சேர்த்து ஒன்றாக்கினான். 

 

Wednesday, May 9, 2012

பஞ்சதஶீ, 1-26


தத்³போ⁴கா³ய புநர்போ⁴க்³யபோ⁴கா³யதநஜந்மநே | பஞ்சீகரோதி ப⁴க³வாந் ப்ரத்யேகம்° வியதா³தி³கம் || 26||

ஜீவர்கள் அனுபவிக்கவும், ஜீவர்களை அவற்றை அனுபவிப்பவனாக செய்யவும் பகவான் ஒவ்வொரு சூக்ஷ்ம பூதத்தையும் மற்றவற்றின் ஒரு பாகத்தை ஏற்று பஞ்சீகரணம் செய்தான்.Tuesday, May 8, 2012

பஞ்சதஶீ, 1- 25

 ஸமஷ்டிரீஶ​: ஸர்வேஷாம்° ஸ்வாத்மதாதா³த்ம்ய வேத³நாத் | தத³பா⁴வாத் ததோ'ந்யே து கத்²யந்தே வ்யஷ்டி ஸம்°ஜ்ஞயா || 25||

ஹிரண்யகர்பனான ஈஸ்வரன் சமஷ்டி எனப்படுவது அவன் எல்லா சூக்ஷ்ம சரீரங்களையும் தானாக அறிவதால். தைஜஸன் வ்யக்தி எனப்படுவது இந்த அறிவு இல்லாமல் தன் சூக்ஷ்ம சரீரத்தை மட்டும் தானாக அறிவதால். 

Monday, May 7, 2012

பஞ்சதஶீ, 1-24

ப்ராஜ்ஞஸ்தத்ராபி⁴மாநேந தைஜஸத்வம்° ப்ரபத்³யதே | ஹிரண்யக³ர்ப⁴தாமீஶஸ்தயோர்வ்யஷ்டிஸமஷ்டிதா || 24||

இந்த சூக்ஷ்ம சரீரத்துடன் தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டு ப்ராக்ஞன் தைஜஸன் ஆகிறான். ஈஸ்வரன் ஹிரண்யகர்பன் ஆகிறான். தைஜஸனுக்கும் ஈஸ்வரனுக்கும் வித்தியாசம் தைஜஸன் வ்யக்தி (தனித்தவன்) ஈஸ்வரன் ஹிரண்யகரபன் சமஷ்டி (கூட்டு) என்பதாம்.

 

Sunday, May 6, 2012

பஞ்சதஶீ, 1-23

பு³த்³தி⁴கர்மேந்த்³ரியப்ராணபஞ்சகைர்மநஸா தி⁴யா | ஶரீரம்° ஸப்தத³ஶபி⁴​: ஸூக்ஷ்மம்° தல்லிங்க³முச்யதே || 23||
ஐந்து கர்ம இந்திரியங்கள் ஐந்து ஞான இந்திரியங்கள் ஐந்து ப்ராணன்கள் மனம் புத்தி ஆகியன பதினேழும் சேர்த்து சூக்ஷ்ம சரீரம் எனப்படுகின்றன.

பல வித வேலைகளால் இவத பதிவு வேலை பாதிக்கப்பட்டது. இனி தொடரும் என எண்ணுகிறேன்.