பல
வருஷங்களுக்கு பிறகு
சிவராத்திரிக்கு ஏகா தச
ருத்ரம் சொல்லவில்லை.
ஆரம்பகாலத்தில்
எங்கள் பகுதி பிள்ளையார்
கோவிலில் செய்து கொண்டு
இருந்தோம். குருக்கள்
மாறின போது ஜன ரஞ்சகமாக பஜனை
வைக்க முடிவு செய்தார்கள்.
அதற்குள்
வேத பாடசாலை செயலுக்கு
வந்துவிட்டதால் நிகழ்வை
அங்கே மாற்றிவிட்டோம்.
ஆறேழு
வருடங்களாக அங்கேதான்
சிவராத்திரி.
கடந்த
மூன்று மாதங்களாக சளியால்
நுரையீரல் பாதிப்பு திருப்பி
திருப்பி வந்து கொண்டு இருந்தது. உடம்பு வேலை செய்ய கஷ்டப்பட்டது.
சந்தேகத்தில்
ரத்தத்தில் சர்க்கரை அளவை
பார்த்தால் டபுள் செஞ்சுரி
ட்ரிபிள் செஞ்சுரி என்று அது
பாட்டுக்கு கிரிக்கெட்
ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது!
அதுதான்
இயலாமைக்கும் களைப்புக்கும்
காரணம் என்று தெரியவந்தது.
ஆக
ஏகாதச ருத்ரம் நிகழ்வுக்கு
போகும் நிலையில் இல்லை.
இயலாமை
ப்ரத்யட்சமாக தெரிந்தாலும்
மனசில் ஒரு வருத்தம் இருந்தது
போல் இருக்கிறது.
***
நேற்று
என் ஜன்ம தினம். ஏனோ
வழக்கமாக போகும் மருத்துவ
மனையிலும் வேலை இல்லை.
காலை எட்டு
மணி போல சக ட்ரஸ்டி போன்
செய்தார். நண்பர்
ஒருவருடன் சிதம்பரம் வந்தேன்.
இன்று அமாவாசை.
தர்பணம்
செய்ய வேண்டும்.
சாப்பாட்டுக்கு
அங்கே எங்காவது ஏற்பாடு செய்ய
முடியுமா என்று கேட்டார்.
எங்காவது
என்ன, வீட்டுக்கே
வந்துவிடுங்கள் என்றேன்.
சுமார்
11 மணி
போல வந்தார்கள். ட்ரஸ்டி,
சிகாகோ
கெல்லாக் மேனேஜ்மென்ட்
இன்ஸ்ட்யூடில் வேலை பார்க்கும்
நண்பர், இன்னும்
ஒரு வயதான தம்பதிகள்.
நாலு அதிதிகளுக்கு
உணவு அளித்து மகிழ்ந்தோம்.
கிளம்பும்
முன் சிதம்பத்தில் நேற்று
சிவராத்திரிக்கு இருந்தோம்;
ப்ரஸாதம்
கிடைத்தது என்று ப்ரஸாதம்
கொடுத்தார்கள்! விபூதி,
குங்குமம்,
வில்வம்,
புஷ்பங்கள்,
ஜாங்கிரி,
மைசூர் பாக்
என்று ஏகத்துக்கும்....!
இறைவன்
கருணை மிக்கவன்!