Pages

Showing posts with label அந்தணர் ஆசாரம். Show all posts
Showing posts with label அந்தணர் ஆசாரம். Show all posts

Monday, April 23, 2018

அந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை




சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறார் ஹாரீதர். சக்தி அற்றவனானால் பாத்திரத்தில் எள்ளை போட்டு இன்னொரு பாத்திரத்தில் செய்யலாம். ஆனால் மண் பாத்திரம் கூடாது. நிஷித்த காலமானாலும் அரிசி கலந்த ஜலத்தால் செய்யலாம்.
தேவர்களும் பித்ருக்களும் இந்த ஜல அஞ்சலியை விரும்புகிறார்கள். அதிகாரியாக உள்ளவர்கள் இதை செய்யாவிட்டால் நிராசையுடன் திரும்புகிறார்கள். இவர்களது சாபங்களுக்கு பாத்திரமாவான் எனக்கருத்து.
தேவ பூஜை
பூஜை செய்ய சா¢யான காலம் அவரவர் சாகையில் சொல்லப்பட்ட நித்ய கர்மாக்களை செய்து
அக்னிஹோத்ரம் முடித்த காலம். அதாவது ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், ப்ரஹ்ம யக்ஞம், ஸூர்ய நமஸ்காரம் முடித்த பிறகு எங்கிறார் ஹாரீதர்.
விக்ஞானேஸ்வரர் மாத்யான்ஹிகத்தில் தர்ப்பணம் முடித்து, சந்தனம் புஷ்பம் அக்ஷதை ஆகியனவற்றை சேகரித்துக்கொண்டு அவரவர் பக்திக்கு தகுந்தபடி ப்ரஹ்மா விஷ்ணு சங்கரன் இவர்களுள் ஒருவரை வேத மந்திரங்களாலும் நான்காம் வேற்றுமையுடன் நம: நம: என்ற சப்தத்துடன் ஆஸனம் முதலிய உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும் என்கிறார். ஆகவே காலையிலோ மாத்யான்ஹிக வேளையிலோ பூஜை செய்யலாம். ஸூர்யனிடத்தில் இருந்து ஆரோக்கியத்தையும் அக்னியிடமிருந்து செல்வத்தையும் சங்கரனிடமிருந்து ஞானத்தையும் விஷ்ணுவிடமிருந்து மோக்ஷத்தையும் வேண்டி பெற வேண்டும். தன் விருப்பப்படி ஒருவரையோ பலரையோ வைத்து பூஜை செய்யலாம்.

Wednesday, March 14, 2018

அந்தணர் ஆசாரம் - 24 - தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள்





12 நாழிகைக்கு மேல் மாத்யாஹ்ணிக ஸ்னானம் செய்ய வேண்டும். பின் மாத்யாஹ்ணிகம் செய்ய வேண்டும். இயன்ற அளவு காயத்ரி ஜபித்து பின் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலரும் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் ப்ரஹ்ம யக்ஞத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இது மாத்யாஹ்ணிகத்துக்கு பின் மட்டுமே செய்யப்படுவது. ப்ரஹ்ம யக்ஞம் முன் சொன்னது போல் முதல் பாகத்தில் செய்யப்படுவது. அந்த காலத்தில் சொல்லவில்லையானால் இப்போதாவது சொல்ல வேண்டும்.
வ்யாஸர் சொல்லியபடி பிரணவத்துடன் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களை நாமா சொல்லி தர்ப்பயாமி என்றூ தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவர்களையும் ப்ரஹ்ம ரிஷிகளையும் அக்‌ஷதையுடன் கூடிய ஜலத்தாலும் பித்ருக்களை எள் கலந்த ஜலத்தாலும் உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவர்களுக்கு பூணூலை உபவீதமாக தரித்து ஒரு முறையும், நிவீதியாக ( மாலைபோல) தரித்து ரிஷிகளுக்கு இரு முறையும், இடமாக தரித்து பித்ருக்களுக்கு மும் முறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலரும் தாய் தந்தையர் உயிருடன் இருந்தால் இந்த பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை/ கூடாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இங்கே உத்தேசித்து தர்ப்பணம் கொடுக்கப்படுவோர் வருடாந்திர ச்ராத்தத்தில் வரும் வஸு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் இல்லை. இவர்கள் ஸோமன், யமன், அக்னி என பித்ரு தேவதைகள். மந்திரங்களை கூர்ந்து கவனித்தால் இது புலப்படும். ஆகவே அனைவருமே பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதே போல பூணூலை பிடித்துக்கொண்டு தர்ப்பணம் செய்வது எப்படியோ வழக்கில் இருக்கிறது. இதற்கு ப்ரமாணமும் காணப்படவில்லை. நிவீதி பற்றி விளக்கும் இடத்தில்
मानुषेष्वंसयोः सक्तं मैथुने पृष्ठभागिकम्। तर्पणेऽङ्गुष्ठयोः सक्तं निवीतं त्रिविधं स्मृतम्॥
நிவீதம் மூன்று விதம். சாதாரண மநுஷ்ய கார்யங்களில் இரண்டு தோள்களிலும்
(
சமமாக/முன்புறம் தொங்கி) இருப்பது. ஸ்த்ரீ ஸங்கத்தில் பின் புறம்
தொங்குவது. (ருஷி) தர்ப்பணம் போது (நதியில்) இரண்டு கட்டைவிரல்களிலும்
மாட்டிக்கொண்டிருப்பது.
என்று சொல்லி இருப்பதால் ரிஷி தர்ப்பணத்துக்கு மட்டுமே ஆதாரம் காணப்படுகிறது.

Tuesday, March 13, 2018

அந்தணர் ஆசாரம் - 23 - பகல் 2 ஆம் பாகம்





ப்ரஹ்ம யக்ஞத்துடன் பகலின் முதல் பாகத்தில், அதாவது சூர்யோதயத்துக்கு பின் வரும் முதல் மூணே முக்கால் நாழிகைகளில், அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் முடிந்தன. இனி இரண்டாம் பாகம்.வேத சாத்திரங்களை சிந்தனம் செய்ய வேண்டும். சிஷ்யர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். பூஜைக்கான புஷ்பங்கள், ஹோமங்களுக்கான ஸமித், தர்ப்பைகளை க்ரஹிக்கலாம். துளசியை க்ரஹிக்க தனி மந்திரங்கள் இருக்கிறன. அவற்றை சொல்லிக்கொண்டு க்ரஹிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி மன்வாதிகள், (மாதப்பிறப்பு) யுகாதிகள், மத்யாஹ்னத்துக்குப்பிறகு, ஆகிய வேளைகளில் துளசி க்ரஹிக்கக்கூடாது. அதே போல ஸங்க்ரமணம், அமாவாசை, பௌர்ணமி, த்வாதசீ, இரவு சந்த்யா காலம் ஆகிய காலங்களும் விலக்கத்தக்கவை. மீறி க்ரஹித்தால் விஷ்ணுவின் சிரசை ஹிம்சித்த தோஷம் உண்டு என்கிறது சாஸ்த்திரம்.
காலை ஏழரை நாழிகைக்கு மேல் பதினொன்றரை நாழிகைக்குள் செய்ய வேண்டியன சொல்லப்படுகிறது.
க்ருஹஸ்தனால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தாய், தந்தை, குரு, பத்னீ, குழந்தைகள், தாசன், அண்டிப்பிழைப்பவன், அப்யாகதன், அதிதி, அக்னி என்கிறார் ஹாரீதர். மேலும் ஞாதி (பங்காளி), பந்து, பணமில்லாதவன், பந்துக்களால் கைவிடப்பட்டவன், தரித்திரன் இவர்களும் கூட ரக்‌ஷிக்கத்தகுந்தவர்கள் என்கிறார். இவர்களை போஷித்து காப்பாற்ற தர்மமான வழியில் பணம் சம்பாதிக்க இந்த நேரத்தை செலவிட வேண்டும். தார்மீகமான ராஜாக்களை அண்டும்படி ஹாரீதர் சொல்கிறார். ஆனால் இந்த கால கட்டத்தில் ராஜாக்களே இல்லாமல் போய்விட்டதால் மற்ற தர்ம வழிகளில் திரவியம் சம்பாதிக்கலாம். இப்படி சம்பாதித்து தன்னால் ரக்‌ஷிக்கத்தகுந்தவர்களை ரக்‌ஷிப்பது புண்ணியம்; நல்ல லோகங்களை அடையலாம் என்கிறார் ஹாரீதர். சம்பாதித்து தன் வயிறை மட்டுமே வளர்க்கிறவன் செத்தவன் போலவாம்.

Saturday, November 4, 2017

அந்தணர் ஆசாரம் - 22 - ப்ரம்ஹ யக்ஞம்




ப்ரம்ஹ யக்ஞம்
பசுவை முதுகில் சொறிந்து அரச மரத்தை ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்து பெரியோர்களையும் குருவையும் நமஸ்கரித்து பின் ப்ரம்ஹ யக்ஞம் செய்ய வேண்டும்.
சூரிய உதயத்துக்கு பின்பு கிழக்கு, வடக்கு அல்லது ஈசான்ய திக்கை பார்த்து செய்ய வேண்டும்.
கிராமத்தின் வெளியில் அதாவது எங்கிருந்து கிராம வீடுகளின் கூரை தெரியாதோ அங்கு இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது வேதம். தற்காலத்தில் யாரும் அப்படி செய்வதாக தெரியவில்லை. காலையில் செய்வதானால் சந்த்யா, ஔபாசனம் முடிந்த பிறகு சொல்ல வேண்டும் . மாத்யாஹ்ணிகம்/ வைஸ்வதேவம் முடித்த பிறகும் சொல்லலாம். பின் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பகல் போஜனத்துக்கு முன் ஜல சமீபத்தில் ஸ்வயம் சுத்தனாய் இருந்து கொண்டு சுத்தமான ப்ரதேசத்தில் வேதம் சொல்வதே ப்ரம்ஹ யக்ஞம் என்கிறார் ஆபஸ்தம்பர்.
ஹாரீதர் இன்னும் விளக்கமாக சொல்லுகிறார். தர்ப்பங்களில் அமர்ந்து தர்பம் தரித்து ப்ரம்ஹ யக்ஞ விதிப்படி செய்ய வேண்டும். ப்ரம்ஹ யக்ஞேன யக்ஷ்யே என்று சங்கல்பம். வித்யுதசி மந்திரத்தால் உள்ளங்கை புறங்கைகளை ஜலத்தால் துடைக்க வேண்டும்.இடது கை கால்களை அலம்பி ஆசமனம் செய்து இரு முறை ஜலத்தால் உதடுகளை சேர்த்துத்துடைத்து தலை கண்கள், மூக்கு, காதுகள், மார்பு இவற்றை ஸ்பர்சித்து , தர்ப்பங்க்களை ஆசனமாக பரத்தி அதில் இடது கால் மீது வலது கால் இருக்கும் படி அமர்ந்து, பவித்ரம் தரித்து யோக வேஷ்டியுடன் கிழக்கு முகமாய் இருந்து ப்ரணவத்துடனும் வ்யாஹ்ருதிகளுடனும் காயத்ரி, வேதாதிகளை சொல்லி பின் வேதத்தை வரிசையாக சொல்ல வேண்டும். முதல் நாள் முடித்த இடத்திலிருந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும். முடிந்த அளவு சொல்லி பின் நமோ ப்ரஹ்மனே என்ற ரிக்கை மூன்று முறை சொல்லி முடிக்கவேண்டும். பெரியோர்களிடம் நன்கு தெரிந்து கொண்டு செய்யவும்.
வேதம் சொல்ல கால அவகாசம் இல்லாத பட்சத்தில் புருஷ சூக்தத்தை ஜபம் செய்யலாம். வேதம் ஜபித்த புண்ணியம் கிடைக்கும்.
பகலில் செய்ய தவறிய கர்மாவை இரவில் முதல் யாமம் வரை செய்யலாம் என்று இருக்கிறது இல்லையா? ஆனால் ப்ரஹ்ம யக்ஞமும் சூர்ய நமஸ்காரமும் அஸ்தமனத்துக்குப்பின் செய்யலாகாது.

Friday, November 3, 2017

அந்தணர் ஆசாரம் - 21 -ஔபாசனம் தொடர்ச்சி 2




ஔபாசன அக்னியை எப்போதும் பராமரிக்க வேண்டும். ஏதேனும் காரணத்தால் அணைந்து போனால் அரணியை மதனம் செய்து க்ரஹிக்கலாம் அல்லது வேத அத்யயனம் செய்த க்ருஹஸ்தன் வீட்டிலிருந்து க்ரஹிக்கலாம்.
அக்னி அணையாமல் பராமரிக்கப்பட்டாலும் நான்கு நாட்களுக்கு ஹோமம் செய்யவில்லையானால் அது லௌகீக அக்னியாகிவிடும். அதாவது ஹோமம் செய்ய அருகதை அற்றதாகிவிடும் என்று பொருள்.
ஹோம காலத்தில் அக்னியை விட்டுவிட்டு தம்பதிகள் வெளியூர் போய்விட்டாலும் அது லௌகீகம் ஆகிவிடும். யஜமானன் அருகில் இல்லாவிட்டாலும் பத்னி இருந்தால் போதும். ஏழு வேளைகளுக்கு அவளே ஹோமம் செய்யலாம். மந்திரமில்லாமல் பரிசேஷனம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னி அனுகதமாகி 3 நாட்களுக்குள் அயஸே அக்னயே என்னும் மந்திரத்தால் ப்ராயச்சித்த ஹோமம் செய்து மேற்கொண்டு ஔபாசனம் செய்யலாம்.
பின் 6 நாட்கள் வரை தந்துமதீ என்னும் ரிக்கினால் ப்ராயச்சித்தம் செய்யலாம். பின் 12 நாட்கள் வரை மனோர்ஜ்யோதி என்ற ரிக்கினால் ப்ராயச்சித்தம் செய்யலாம். அதற்கு மேற்பட்டால் புனர் சந்தானம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் அவரவர் க்ருஹ்ய சூத்திரத்தை அவசியம் பார்த்து செய்யவும். வேறாக இருக்க வாய்புகள் அதிகம்.
அக்னியை ப்ரத்யக்‌ஷமாக வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் அரணியிலோ, ஸமித்துக்களிலோ தன்னிலோ ஆரோபணம் செய்து கொள்ளலாம். இதில் ஆத்ம சமாரோபணம் யஜமானனே செய்ய வேண்டியது. மற்றதை ரித்விக்குகள் செய்யலாம்.
ஸ்வர்ணமயமான மேருவை அல்லது சகல பூமியையும் ஒருவன் தானம் செய்தால் உண்டாகும் புண்ணியம், ப்ராதர்- ஸாயம் ஔபாசனத்தை முறைப்படி செய்யும் ஒருவன் புண்ணியத்துக்கு ஈடாகுமா இல்லையா என்று தெரியவில்லை என்கிறார் ஆங்கீரசர்!
அக்னியில் செய்யப்படும் ஹோமம் சூரியனை அடைகிறது. சூரியனால் மழை பெய்விக்கப்படுகிறது. மழையால் பூமியில் அன்னம், ஔஷதிகள் ஆகியன உற்பத்தி ஆகின்றன. இதனால் ஜனங்களுக்கு சௌக்கியம் ஏற்படுகிறது. ஆகவே முறைப்படி ஔபாசனம் செய்பவன் உலகை ரக்ஷிக்கிறான் என்று அறியவும் என்கிறார் மனு.
மழைக்காலத்தில் விராட்டி, தவிடு/ உமி, ஆகியவற்றை உலர்ந்ததாக இருக்கும்படி கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். பக்‌ஷத்துக்கு ஒரு முறை ஸ்தாலீபாகம் செய்யும் போது உகையை பசுஞ்சாணத்தால் மொழுகி வைத்துக்கொள்வது நன்று.

Thursday, November 2, 2017

அந்தணர் ஆசாரம் - 20 ஔபாசனம் தொடர்ச்சி.




நெல் யவை ஆகியன நூறு கொண்டது ஒரு ஆஹுதி பரிமாணம். அன்னமானால் இரண்டு மடங்கு, மயில் முட்டை அளவு. கோழிமுட்டை அளவு பிண்டம் எனப்படும். அவதானம் என்பது பெருவிரல் கணு அளவாகும். ஸ்விஷ்டக்ருத் அவதானத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். அது அவதானத்தைவிட பெரியதாக இருக்க வேண்டும். அது நான்கு கணு அளவாகும். ஔபாசன ஹோமம் நுனி விரல்களால் செய்யக்கூடியது. விரல்களின் வடபுறமாக ஹோமம் செய்க. நிமிர்த்திய கையால் பெருவிரலின் நுனியால் பிடிக்கப்பட்ட ஹவிஸை விரல்கள் அனைத்தையும் சேர்த்த வண்ணம் மௌனமாக ஹோமம் செய்ய வேண்டும். மௌனம் என்பது மந்திரம் தவிர எதையும் பேசாமல் என்பதே.
வஸ்திரம், இலை, கை, முறம், வாய், கட்டை,விசிறி இவற்றால் அக்னியை ஜ்வலிக்க செய்யக்கூடாது.
ஊது குழாய், புல், கட்டை இவற்றில் ஒன்றை மத்தியில் வைத்துக்கொண்டு முகத்தால் (வாயால் ஊத்தி) ஜ்வலிக்க செய்ய வேண்டும். அதாவது வாயால் நேரடியாக ஊதக்கூடாது.
காய்ந்த கட்டைகளால் ஜ்வலிக்கிற, புகை இல்லாத. சின்ன சின்ன ஜ்வாலைகளுடன் சாந்தமாக இருக்கும் அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னியில் உள்ள தணல்கள் மெல்லியதான சாம்பலுடன் சேரும்போது நீல ஜ்வாலை உண்டாகும். இதில் ஹோமம் செய்வது பிரம்மத்திடம் ஹோமம் செய்வதாகிறது.
எல்லா அக்னி காரியங்களையும் அவரவர் க்ருஹ்ய சூத்திரத்தை அனுசரித்தே செய்ய வேண்டும்.
குளிக்கும்போது பேசினால் வருணன் அழகை அபகரிப்பான், ஹோமம் செய்கையில் பேசினால் அக்னி தனத்தை அபகரிப்பான். சாப்பிடும்போது பேசினால் ம்ருத்யு ஆயுசை அபகரிப்பான். ஆகையால் இந்த மூன்றையும் மௌனமாகவே செய்ய வேண்டும்.

Thursday, July 6, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 7




அடுத்து ஹோமத்தில என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா வேணாமா? கொஞ்சம் யோசனையா இருக்கு. இக்னரன்ஸ் ஈஸ் ப்லிஸ்!
------------
ரைட். பாத்துடலாம்.முடிஞ்ச வரை ஆரம்பம் முதல் கடைசி வரை நடுவில எழுந்து போகக்கூடாது. ஹோமம் ஆரம்பிச்ச பிறகு அவசியம் இல்லாம பேசக்கூடாது. அவசியம் ஆனாலும் முடிஞ்ச வரை சைகையால காரியத்தை சாதிச்சுக்கணும்.

ஆரம்பிச்சுட்டா அந்த அக்னியை நல்லா பலப்படுத்திண்டு மேலே செய்யணும். அக்னி அணைய விடக்கூடாது. விட்டுட்டு அப்புறம் அதுல தீக்குச்சி கொளுத்தி போடறது சிலாக்கியம் இல்லை.

அக்னி காரியத்தால ஒரு லாபம் - தனம் கிடைக்கறது. ஆனா அந்த நேரத்தில பேசினா தனம் கையை விட்டுப்போகும். தேவையா? இதே போலத்தான் குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் பேசினா முகத்தில காந்தியும் ஆயுஸும் குறையும்.

ஹோமம் செய்தவுடன் எந்த தேவதையை உத்தேசிச்சு செய்தோமோ அந்த தேவதையுடையது இது என்னுடையதில்லை ன்னு பொருள் தொனிக்க … இதம் ந மம ன்னு சொல்லணும். சில ஹோமங்கள் - ம்ருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ் ஹோமம் மாதிரி - இதுல கொஞ்சம் சிக்கலா இருக்கலாம். அதனால ஒட்டு மொத்தமா சொல்லறதும் உண்டு; தனித்தனியா தேவதை பேர் இல்லாம. ஆனா இப்படி ஒரு உத்தேச த்யாகம் இல்லாம பலன் இல்லை.

ஹோம திரவியத்தை சமர்பிக்கறப்ப சமர்பண பாவம் இருக்கணும். சமித்/ அன்னத்தை அக்னியில தூக்கி எரிவதோ விசிறுவதோ கூடாது. நெய் ஹோமம் செஞ்சா அதை தழல்ல தான் செய்யணும். மற்றதுக்கு அப்படி இல்லை. அக்னியில போட்டாப்போதும்.

அக்னில தண்ணீர் விழக்கூடாது. அப்படி விழுந்தா நமக்கு தீயால சுடறா மாதிரியாம் அக்னிக்கு. கொப்பளிச்சு போறதாம். அதனால ஒரு வேளை அக்னியை சமனப்படுத்த வேண்டி இருந்தா பாலோ சாணியை கரைச்சோ அக்னில சேர்க்கணும். இந்த "பால் ஊத்தறது" என்னன்னு இப்ப புரியறதா? சவத்தை எரிச்ச இரண்டாம் நாள் அக்னியை பாலால சமனப்படுத்திவிட்டு அஸ்தியை எடுப்பாங்க.

ஹோமம் செய்கிற எல்லாரும் செல்போனை எல்லாம் அணைச்சு வெக்கணும். அல்லது வேற யார்கிட்டயானா கொடுத்து வைக்கணும். நடுவில அது சத்தம் போட்டு கவனம் திரும்பறது சரியா இராது. தெரிஞ்ச வாத்தியார் ஒத்தர் அதை - அவர்கிட்ட வரும் வரை அதை - திட்டிண்டு இருந்தார். அதை அவர் வாங்கியப்பிறகு ஒரு நிகழ்ச்சி கூட ஒரு காலாவது அடென்ட் செய்யாம இருக்கறதில்லை. எஜமானனுக்கு தர்ம சங்கடம். 'ச்ராத்தத்துக்கு இன்னும் ஆள் வரலை'ன்னு ஆரம்பிச்சு 'இடம் எங்கே இருக்குன்னா?' வரை எல்லாத்துக்கு பதில் சொல்லிண்டு இருப்பார். பேசறவங்களாவது சட்டுன்னு பேசி கட் பண்ணுவாங்களா? மாட்டாங்க. சாங்கோபாங்கமா குசலம் விசாரிச்சுட்டு ஊர் கதை எல்லாம் பேசிட்டுத்தான் அது முடியும். எந்த வைதீகர் காலை நேரத்தில வேலையில்லாம இருக்காங்க? அந்த நேரம் பாத்து ஏன் இதுக்கு நாள் பாத்து சொல்லுன்னு போன் பண்ணனும்? என்னத்த சொல்லறது.

மந்திரத்தில கவனம் இருக்கணும். வாய் பாட்டுக்கு மந்திரம் சொல்ல செய்யறவங்க பாட்டுக்கு செல்போன், டேப் சகிதம் யார்கிட்டேயோ தொடர்பு வெச்சுண்டு சிரிச்சுண்டு பக்கத்துல இருக்கறவன்கிட்டேயும் ஷேர் செய்துண்டு… இது மாதிரி கவனமின்மை நிறைய கண்ணுல படறது. வாங்கற காசுக்கு வஞ்சனை இல்லாம உழைக்கனும்ன்னு தோண வேண்டாமோ? ஒரு வேளை இப்படி அவங்க செய்ய நினைச்சாலும்… பெரிய நிகழ்ச்சிகளில பாத்து இருக்கேன்.. ஆர்கனைசர் ஒத்தர் வந்து பேப்பரும் பேனாவும் ஒத்தர்கிட்ட கொடுத்து அந்த ஹோம குண்டத்தில உக்காந்து இருக்கறவங்க பேர் எல்லாம் எழுதித்தர சொல்லுவார். இவருக்கு எல்லாரையும் தெரியுமா? அதனால விசாரணை நடக்கும். மத்தவங்க கவனம் சிதறது மட்டும் இல்ல, அதை எழுதி முடிக்கற வரை இவர் செய்ய வேண்டிய ஹோமம் என்ன ஆகிறது? நாராயணா!

இன்னும் கொஞ்ச நாள் போனா விஷயம் தெரிஞ்ச யஜமானன் வைதீகர்கள்கிட்டேந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் நாள் வந்துடும்.

இன்னும் எழுதினா டிப்ரஷன் வந்துடும். முடிச்சுக்கலாம்.

Thursday, June 29, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 6





ஹோமங்களை விட்டுட்டு வைதீகரின் நிலைக்கு போயிட்டோம்.
வேதோக்த ஹோமங்களை பார்த்துவிட்டோம். சாஸ்த்ரோக்த ஹோமங்கள் என்கிறார்கள். எந்த சாஸ்திரங்கள்ன்னா தர்ம சாஸ்திரம் என்கிறார்கள். தர்ம சாஸ்திரம் எங்கிருந்து வந்ததுன்னு பார்க்கப்போனா அது புராணங்கள் இதிஹாஸங்களில இருந்துதான் வந்திருக்கு. பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கறப்ப சொன்ன தர்மோபதேசத்தில இருந்து நிறையவே வந்திருக்குன்னு இதை ஆராய்ச்சி செஞ்சவர் சொல்லறார். சூத்திர ரிஷிகள் சொன்னது இல்லாம கூடுதலா இவையும் சேர்ந்து இருக்கு.
அப்ப தாந்த்ரீகம்? இந்த ஹோமத்தை ஆரம்பிக்கற ப்ரொசீஜரும் முடிக்கற ப்ரொசீஜரும் நிலையானவை. வைதீகத்தில இது ஸ்தாலீபாகத்தை ஒட்டினது. தாந்த்ரீகத்துல தனி. இதுல ஆகம சாஸ்திரங்களில இருந்து வந்திருக்கும் ப்ரொசீஜர். எதை எதை எல்லாம் அக்னில போடலாம் எதை கூடாது என்கிறதுல எல்லாம் இரண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணமா தாந்திரீகத்தில மங்கள அக்ஷதை, புஷ்பங்கள், துணி எல்லாம் அக்னில போடுவாங்க. வைதீகத்தில செய்வதில்லை.
இப்பல்லாம் இதுல நிறையவே குழப்பங்கள் இருக்கு. வைதீகமும் தாந்த்ரீகமும் கலக்காம அது அது அததன் வழியிலேயே செய்யறதுதான் நல்லது. ஆனால் நடைமுறையை பார்க்கிறப்ப நிறைய கலவை தெரிகிறது. வைதீகமா ஆரம்பிச்சுட்டு முக்கிய ஹோமத்தில வைதிகத்தில விலக்கப்பட்ட த்ரவ்யங்களை உபயோகித்து செய்யறாங்க. ஸமித் அன்னம் ஆஜ்யம்தான் வழக்கமா வைதீகத்தில. மத்ததெல்லாம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. இன்னும் உள்ளே போனா குழப்பம்தான் மிஞ்சும்!
பொதுவா ஹோமத்துக்கு முந்தைய நாள் ப்ரம்மச்சர்யத்தோட இருக்கணும். பலகாரம்தான் சாப்பிடணும் என்பார்கள். அப்படி சொல்லிவிட்டு அரிசி சோறு இல்லாமல் டிஃபன் ஏதாவது ஒரு பிடி பிடிப்பார்கள். அது அப்படி இல்லை. ஃபல் ஆகாரம் அதாவது பழங்கள் மட்டுமே ஆகாரம். சரி சரி நான் ஒரே ஒரு பலாப்பழம் சாப்பிட்டுக்கறேன்னு சொல்றவங்களை ஒண்ணும் பண்ண முடியாது!
தாத்பர்யம் என்னன்னா அடுத்த நாள் ஹோமத்தில உக்காந்துட்டா டாய்லெட் போகும் அவசியம் வரக்கூடாது அவ்ளோதான். அதற்கு தகுந்தபடி சாப்பிட்டு காலையில் வயிறு குடல் எல்லாத்தையும் காலி பண்ணிடுங்க! காலை முதலே ஒன்றும் சாப்பிடாமல் இருப்பதே உத்தமம். (இக்காலத்தில் சில வாத்தியார்கள் காஃபி பரவாயில்லை என்பார்கள். ஏன்னா அவங்களுக்கு அது வேணுமே!) பழக்கமில்லாதவர்கள் உப்பு சேர்க்காத எதையாவது சாப்பிடலாம். இந்த காலத்தில் காலை நேர மருந்து சாப்பிடலாமா இல்லையான்னு ஒரு கேள்வி எழும். சிலது ஒரு வேளை ஸ்கிப் பண்ணா ஒண்ணு பெரிசா ஆகிடாது. சிலதுக்கு பிரச்சினை வரும். மருத்துவர் யோசனை படி செய்க.
சாதாரணமாக இப்போதெல்லாம் யாருக்கும் ஹோமங்கள் செய்து பழக்கமில்லை என்பதால் சங்கல்பம் செய்து, பிள்ளையாருக்கு பூஜை செய்துவிட்டு பவர் ஆஃப் அட்டார்னி வாத்தியார் கையிலே கொடுக்கறதாயும் ஹோமத்தை அவர் செய்யறதாகவும் இருக்கு. அப்பாடா வேலையை அவருக்கு கொடுத்தாச்சுன்னு பேப்பர் படிக்கவோ வாட்ஸாப் மேயவோ அழைத்திருக்கும் நண்பர்களை பார்த்து பேசவோ போவது உசிதமில்லை. உண்மையில் வேறு யாரையும் அழைக்காமல் இருப்பதே உசிதம். சற்று தள்ளி அமர்ந்து ஹோமத்தை பார்த்துக்கொண்டும் மந்திரங்களை கேட்டுக்கொண்டு இருக்கலாம். செய்பவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். எஜமானன் பாட்டுக்கு அந்தண்டை போய்விட்டா செய்யறவருக்கு என்ன உற்சாகம் இருக்க முடியும்? ஹோமம் எல்லாம் முடிந்த பிறகு யதோக்த தக்‌ஷிணையை தர வேண்டும். அது என்ன யதோக்த? யதா உக்த - அதாவது சொல்லப்பட்ட - முன்னேயே எவ்வளவு என்று பேசி வைத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? ஆதாற்கு கொஞ்சமும் குறைக்காமல் தர வேண்டும். அப்போதுதான் வர வேண்டிய முழு பலன் வந்து சேரும்.
அடுத்து ஹோமத்தில என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாஆமா வேணாமா? கொஞ்சம் யோசனையா இருக்கு. இக்னரன்ஸ் ஈஸ் ப்லிஸ்!

Tuesday, June 27, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 5





காலப்போக்கில் வைதிகர்கள் இந்த இரண்டையும் விட்டுவிட்டனர். ..

ஆரம்ப காலங்களில் சொந்த ஊரிலேயேத்தான் காரியம் இருக்கும். அல்லது பக்கத்து ஊராக இருக்கும். தூரத்து ஊரானால் முன்னேயே சென்று தங்கிவிடுவார்கள். கர்மாக்களுக்கு சங்கவ காலமே உசிதமானது. எப்படியும் சூரியோதயம் ஆகாமல் ஹோமங்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தன் நித்திய கர்மாக்களை முடித்து பின் மற்றவர்களுக்கு ஹோமங்கள் செய்யப்போவார்கள். 
இப்போது காலம் மாறிவிட்டது. எப்போதோ ஹோமம் செய்கிறோம் என்று செய்யும் ஹோமங்களில் பட்டியலை பெருக்கிக்கொண்டு போவார்கள். ஒரு மஹா கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், அப்படியே ஒரு நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் செய்துவிடலாமே என்று ஜோசியர் சொல்லுவார். புதுசா குளிகனை த்ருப்தி செய்யணும்ன்னு ரீதியில எதாவது சொல்லாம இருந்தா போறாதா? இவரும் தலையாட்டிவிடுவார். இவ்வளோ பெரிய லிஸ்ட்ன்னா எப்ப ஆரம்பிக்கறது எப்ப முடிக்கறது. ஆபீஸுக்கு அன்னைக்கு லீவு போடக்கூட ரெடியா இருக்க மாட்டாங்க. சென்னை மாதிரி இடங்களில வைதீகரும் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு இடங்களில வேலை ஒத்துப்பார். அப்புறம் என்ன? காலை நாலு -அஞ்சு மணிக்கு ஆரம்பிப்பாங்க. ஒன்பது பத்துக்குள்ள ஏறக்கட்டிட்டு அடுத்த வேலை பார்க்கப்போகணும்.
இப்படி அவசரம் அவசரமாக செய்வதால் என்ன நடக்கிறது? செய்விப்பவருக்கு பலனும் முழுமையாக கிடைப்பதில்லை. செய்த வைதீகருக்கும் பாபம் இன்னும் அதிகமாக சேருகிறது. காலை இந்த நேரத்துக்கு ஆரம்பிக்கறவர் ஔபாசனம் செய்ய முடியுமா? இல்லை 1008 காயத்ரிதான் ஜபிக்க முடியுமா? ஒரு நாள் அவர் போகும் மோட்டார் பைக் விபத்தில் மாட்டிக்கும்! இல்லை இது போல ஏதாவது!

Monday, June 26, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 4




போன வாரம் முழுக்க தெரியாத்தனமா மாட்டிண்ட ஒரு வேலையில நேரம் போயிடுத்து. போஸ்ட் போட முடியலை. மன்னிக்க!

ஹோமங்களை நமக்கு நாமே செய்து கொள்ளலாம். அதுவே உசிதம். சங்கல்பம் செய்த பலனை நாம் எந்த அளவிற்கு சரியாக செய்தோமோ அதை பொருத்து பெறுவோம்.
நாமே செய்து கொள்ள முடியாமலும் போகலாம். நோயால் படுத்த படுக்கை ஆனவர் தனக்குத்தானே எப்படி செய்வது? இன்னொருவரை நியமிக்க வேண்டும்.

ஸ்ரௌத்த கர்மாக்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டவை. வேதத்தின் கர்ம காண்டத்தில் இவற்றின் நடைமுறைகள் விவரிக்கப்பட்டு இருக்கும். வேதமே இந்த நடைமுறையை விவரிக்கும்போது என்ன தக்ஷிணை தர வேண்டுமென்று குறிப்பிட்டு இருக்கும். ஏனைய கர்மாக்களில் அப்படி இல்லை. நாம் என்ன பேசிக்கொள்கிறோமோ அவ்வளவுதான். இஷ்டியில் இதற்கு மந்திரத்தில் "காமோ தாதா காமப் ப்ரதிக்ரஹீதா" என்று வரும். காமமே கொடுக்கிறது; காமமே வாங்கிக்கொள்கிறது. ஹோமம் செய்விப்பவர் எதையோ ஒன்றை விரும்பித்தானே செய்வித்தார்? அதே போல செய்து கொடுத்தவரும் தக்ஷிணையை விரும்பித்தானே செய்தார்?

ஆனால் இப்படி த்ரவ்யத்தை பெற்றுக்கொள்வது கொஞ்சம் இழிவாகத்தான் சொல்லப்படுகிறது. ஹோமத்தின் பலனில் பதினாறில் ஒரு பங்கு செய்தவருக்கு கிடைக்கும். அதே சமயம் கொஞ்சம் தபோ சக்தி அவரை விட்டுப்போகும். இதை மீண்டும் சமன் செய்ய அக்னி காரியம் செய்யலாம்; காயத்ரி ஜபிக்கலாம்; புண்ய தீர்த்தங்களில் நீராடலாம்.
நாங்கள் தனுஷ்கோடிக்கு சென்ற போது அழைத்துச்சென்ற சாஸ்த்ரிகள் எங்களுக்கு சங்கல்பம் செய்து வைத்து நீராட சொல்லிவிட்டு தானும் சங்கல்பம் செய்து நீராடினார். பின்னர் சொன்னார் "எத்தனையோ பேருக்கு ப்ராயச்சித்த கர்மாக்கள் செய்து வைக்கிறேன். அதனால் எனக்கும் கொஞ்சமாவது பாபம் சேரும். அதை இப்படி அவ்வப்போது போக்கிக்கொள்கிறேன்".

நித்தியம் சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்பவருக்கும் அக்னி காரியம் - ஔபாசனம் - செய்பவருக்கும் பாபம் சேருவதில்லை. அது அவரை அடையும்போதே அவர் ஏற்கெனெவே செய்துள்ள தபசால் நசிந்துவிடுகிறது.


காலப்போக்கில் வைதிகர்கள் இந்த இரண்டையும் விட்டுவிட்டனர். 
(தொடரும்)

Tuesday, June 20, 2017

அந்தணர் ஆசாரம் - 18 ஹோமங்கள்- 3





நாம சர்ச்சையை தவிர்த்தாலும் சர்ச்சை நம்மை விடாது போலிருக்கு!
வாட்சாப்ல ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சுதா, இன்னொருத்தர் இதை தீவிரமா ஆராய்ஞ்சு தப்பு ரைட்டு கண்டு பிடிக்கறேன்னு இறங்கி இருக்கார். செய்யி, பகவான் எதையும் காரண காரியம் இல்லாம கிளப்பறது இல்லேன்னேன்.
இதனால சில விஷயங்கள் தெளிவாகறது. இன்னும் பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் குழப்பாம பகிர்ந்துக்கலாம்ன்னு…. என்ன செய்யறது? உங்க கஷ்டகாலம்!
முதல்ல சாஸ்த்ரோக்த ஹோமம் எல்லாம் எது? க்ருஹ்ய சூத்திரங்களில சொல்லப்பட்டது குறிச்சு யாரும் ஆட்சேபனை எழுப்ப முடியாது. பும்சவனம், ஜாதகர்மா, லௌகிகாக்நில செஞ்சாலும் செளளம், உபநயனம், வேத வ்ரதம், விவாஹம், உபாகர்மா இவற்றை ஒட்டிய ஹோமங்கள். பாக யக்ஞங்கள் - அஷ்டகா, ஸ்தாலீபாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ ஆகியன.
சோம யாகங்களும் ஹவிர் யாகங்களும் ஸ்ரௌத்தம் ஆகிவிட்டன. சாதா ஹோமங்களில் சேரா.
பாபங்களை தொலைக்க சொல்லப்பட்டது கூஶ்மாண்ட ஹோமம்.
நூதன க்ருஹ பிரவேசத்துக்கு ஹோமம் சொல்லி இருக்கிறது.
ஒவ்வொருவரும் சாதாரணமாக அவரவர் க்ருஹ்ய சூத்திரத்தில் ரிஷி சொல்லி இருப்பதையே அனுசரிக்க வேண்டும். தேவையானால் தன் ரிஷி வேறு விதமாக சொல்லாத பட்சத்தில் மற்ற ரிஷிகள் சொல்லியதை செய்யலாம்.
இப்படித்தான் போதாயனர் பலதை சொல்லி இருக்கிறார். நவக்ரஹஹோமம், ஆயுஷ் ஹோமம் போன்றவை இதில் அடக்கம். இவற்றை செய்யலாம்; தவறில்லை.
இதெல்லாம் இல்லாமல் வியாசர் இயற்றிய புராணங்களில் பலது சொல்லப்பட்டுள்ளன. வியாசர் ரிஷி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அப்படி நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
இவற்றை செய்வதற்கும் இடம் இருக்கிறது. ஆரம்பத்தில் சொல்லப்பட்டவற்றை அவசியம் செய்ய வேண்டும்; ஆனால் அவற்றை செய்வார் அருகிவிட்டனர். தேவையானால் செய்யலாம் என்பதில் பலத்தை செய்ய பலரும் தயாராக உள்ளனர்! தேவைகள் அதிகமாகிவிட்டன போலும்! டிவி சானல்களில் புதுசு புதுசா சொல்லப்படுகிற பலதும் இப்படி புராணங்களில் இருக்கும் போலிருக்கு!
தேவி பாகவதத்தில் நாலு பக்கத்துக்கு காயத்ரி ஹோமம் பத்தி சொல்லி இருக்கார். நாராயணன் நாரதருக்கு சொன்னதா பதினோராவது ஸ்கந்தத்தில இருபத்தி நாலாம் அத்தியாயத்தில வரது. நண்பர் அனுப்பின தமிழ் பக்கங்களில முக்கியமான ஒண்ணு காணோம்! "இது போலவே சாந்தியாதி கிருத்யங்களை சொல்லி அருளனும்" ன்னு நாரதர் கேட்கறதா வரது. சம்ஸ்க்ருத மூலத்தை பாத்தா காயத்ரியை பயன்படுத்தின சாந்தி பிரயோகம்ன்னு இருக்கு!
நாலு பக்கத்துக்கு பிரயோகங்கள் சொல்லப்பட்டு இருக்கு. பல வித சமித்துகள், ஹோம த்ரவ்யங்கள். ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு வித பலன்.

Friday, June 9, 2017

அந்தணர் ஆசாரம் 18 - ஔபாசனம்




ஔபாசனம் பற்றி சில கேள்விகள் வந்துள்ளன.
ஒருவர் ஔபாசனம் ஆரம்பிக்கவே இல்லை பிற்காலத்தில் ஆரம்பிக்கலாமா?
விடை ஆரம்பிக்கலாம். நமக்குத்தெரியாமலே பல சமயம் இது நடக்கிறது. அதாவது ஏதோ ஒரு காலகட்டத்தில் ச்ராத்தம் செய்ய வேண்டி வரும். அப்போது ச்ராத்தம் செய்வது ஔபாசன அக்னியில்தான். எப்போதுமே விட்டுபோன ஔபாசன அக்னியை உண்டாக்கிக்கொள்கிறேன்னு சங்கல்பம் செய்து உண்டாக்கி, விட்டுபோனதுக்காக அரிசியும் பணமும் கொடுத்து முந்தைய சாயங்கால ஔபாசனமும் இன்றைய காலை ஔபாசனமும் செய்துதான் மேலே ச்ராத்த காரியமே ஆரம்பிக்கிறது. பலரும் இதுவு ம் ச்ராத்தத்தின் ஒரு பகுதின்னு நினைக்கிறார்களே தவிர ஔபாசன அக்னியை உண்டாக்கி இருக்கிறோம் என்று நினைப்பதேயில்லை. வாத்தியாரும் சொல்வதில்லை. ச்ராத்தத்துக்கு மொத்தம் இவ்வளவு என்று முடிவு ஆகிவிடுவதால் அதைப்பற்றி பேச்சு எழாது. உண்மையில் விட்டுப்போன அத்தனை வேளைக்குமான அரிசியா கொடுக்கிறோம்? நிச்சயம் இல்லை. //ஒரு வருஷத்துக்கு 60 படி அரிசி, 3 படி நெய் என்று காத்யாயனர் கணக்கு சொல்கிறார்.// ந்னு பார்த்தோம் இல்லையா?நாமும் கொடுப்பதாக சொல்கிறோம்; அவரும் வாங்கிக்கொண்டதாக சொல்கிறார்.

அடுத்து ச்ரத்தையுடன் செய்யவேண்டிய ச்ராத்தத்தில் இப்படி செய்வதுமே தப்புத்தான்.
ஒருவர் விவாஹம் முடிந்ததுமே அந்த விவாஹ அக்னியில் தொடர்ந்து ஔபாசனம் செய்து வர வேண்டும். கீதா அக்காவுக்கு அந்த அக்னியை ஊருக்கு எடுத்துப்போனது நினைவிருக்கும். எனக்கு அதற்கு தக்குடு அடித்த கமெண்டுமே கூட நினைவிருக்கு!
வீட்டுக்கு எடுத்துவந்து செய்யும் ஹோமம் ஆக்னேய ஸ்தாலீபாகம். (இதுல சில வேரியேஷன்ஸ் இருக்கு. இப்ப சாய்ஸ்ல விட்டுடலாம்.) இரண்டு பக்ஷம் இப்படி செய்த பிறகு விட்டுவிட்டாலும் 12 நாள் வரை ப்ராயச்சித்தம் செய்து துவக்கலாம். அதற்கு மேல மீண்டும் உற்பத்தி செய்து துவக்கலாம். இரண்டும் வெவ்வேறு படிகள்.
ஐந்து வருஷம் செய்யாமலே விட்டுவிட்டால்? புனர் விவாஹம்ன்னு சொல்லி இருக்கு! அதாவது திருப்பி கல்யாணம் செஞ்சுக்கணும். (அதே பெண்ணையா? எனக்கு என்ன பைத்தியமான்னு நீங்க கேட்கிற கேள்வி என் காதில விழலை!)

இதில விரிவான திருமணம் போல இல்லாமல் மந்திரங்களை மட்டும் படனம் செய்யச்சொல்லி இருக்கு. எனக்கு அப்படித்தான் செய்து வைத்தார்கள்!

சரி ச்ராத்தத்துக்கு மீண்டும் ஔபாசனம் அக்னியை உண்டாக்கிக்கொண்டோம்ன்னு பார்த்தோம். இந்த அக்னியிலேயேதான் அரிசி களைந்து வைத்து சமைத்து ஹவிஸ் (அன்னம்) பக்குவம் செய்ய வேண்டும். யாரும் அதற்கான அவகாசம் -ஒரு 20 நிமிடங்கள் ஆகலாம் - தர தயாராக இல்லை என்கிறதால் லௌகிகாக்னியில் சமைத்ததை இந்த ஔபாசன அக்னியில் கா ட்டி எடுக்கிறார்கள். (சிலர் அதுவும் கூட செய்வதில்லை!) இதுவே நடைமுறையில் இருக்கு.இதுவும் சிலாக்கியமில்லை.