Pages

Thursday, January 31, 2019

நொச்சூர் - கவனம்





சரீரம் ஆரோக்யமா இருக்கும்போதே தெரிஞ்சுக்கப்பா ... உபநிஷத்.. ஆக்ரோஷந்தி ... கூவறதாம். என்ன கூவறது? உனக்குள்ளேயே சத்தியம் இருக்குப்பா. உனக்குள்ளேயே இருக்கற வஸ்துவை நீ தெரிஞ்சுண்டாத்தான் உனக்கு நிம்மதி வரும். நீ ஆருன்னு உணர்ந்தாத்தான் நிம்மதி வரும். அதை தெரிஞ்சுக்காம நிம்மதி வரவே வராது ...என்கறதை ஸ்ருதி ஒரு தாய் குழந்தைக்கு உபதேசம் பண்ணுவதப்போல குழந்தைக்கு எது நல்லதுன்னு பாத்து அனுக்ரஹம் பண்ணுவதப்போல அன்போட பரம கருணையோட ரிஷிகள் நமக்கு இதை சொல்றா.
தாயுமானவர் சொல்லறார் சேர வாரும் ஜகத்தீரே. என்ன செய்யணும்? ஆன்மீகத்தில மேக்சிமம் எபர்ட் போடணும். அதுக்கு கையோ காலோ ஒரு எபர்டும் போட வேண்டாம். ஆன்மீகத்தில ரொம்ப முக்கியமா இருக்கற ஒரே விஷயம் நம்ம கவனம். நாம் என்ன செய்யறோம்... நம்ம கை, கால், தல, நம்ம கையில இருக்கற பணம் எல்லாத்தையும் பகவான்கிட்ட கொடுக்கறோம். ஆனா நம்ம கவனத்த உலகத்துக்கு கொடுத்துடறோம். இதோட சீக்ரெட்ட தெரிஞ்சுண்ட ரிஷிகள் என்ன சொல்றான்னா நீ உன் கை கால் தல, சரீரம் எல்லாத்தையும் உலகத்துக்கு கொடு; உன் பணத்த எல்லாம் லோகத்துல யாருக்கு வேணுமோ அவாளுக்கு கொடு. கவனத்த பகவான்கிட்ட கொடு.
நம்மளோடு பொருள் எங்கே இருக்கோ அங்கேதான் நம்ம கவனம் இருக்கும். நம்ம பேக் பக்கத்துல இருக்குன்னா அத பாத்துண்டே இருப்போம். ஏன் சின்ன சப்பல் ... அதக்கூட கவனமா பாத்துண்டே இருக்கோம் எங்கானா தொலைஞ்சுடப்போறதோன்னு. நம்மோடதுன்னு ஒண்னை நினைச்சுட்டா அதை பாத்துண்டே இருப்போம். ஆனா இது எல்லாத்தையும் விட பெரிய பொக்கிஷம்... ட்ரஷர் வீ ஹாவ் லாஸ்ட் இட்! என்ன நஷ்டமாகி இருக்கு? நிம்மதி போயிடுத்து. நம்மோட ஸ்வரூபத்தையே நாம இழந்துட்டோம். நாம் யாரு எங்கிறதை ஞாபகப்படுத்தறதுக்காகவே இந்த மஹான்கள் எல்லாம் வரா.

Wednesday, January 30, 2019

பறவையின் கீதம் - 104





பாயாஃஜித் ஒரு சுஃபி. தன்னைப்பற்றி இப்படி சொன்னார். “இள வயதில் நான் புரட்சியாளனாக இருந்தேன். கடவுளிடம் நான் வேண்டிக்கொண்டது இப்படி இருந்தது: “கடவுளே! உலகை மாற்ற எனக்கு சக்தி கொடு.”

நடு வயதை நெருங்கும்போது ஒரே ஒரு ஜீவனைக்கூட என்னால் மாற்ற முடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஆகவே என் பிரார்த்தனையை மாற்றிவிட்டேன். “கடவுளே என் தொடர்பில் வருவோரை மாற்ற எனக்கு சக்தியை கொடு. என் குடும்பம், நண்பர்கள் போதும் நான் திருப்தி அடைந்துவிடுவேன்.”

இப்போது நான் வயதானவனாகிவிட்டேன். என் நாட்கள் முடியப்போகின்றன என்பது தெளிவாகிவிட்டது. ஆகவே இப்போது என் ஒரே பிரார்த்தனை "கடவுளே என்னை மாற்றிக்கொள்ள அருள் செய்!” இதை நான் ஆரம்ப காலத்திலிருந்து பிரார்த்தனை செய்து இருந்தால் என் வாழ்நாட்களை மாற்றி இருக்க மாட்டேன்.

Tuesday, January 29, 2019

பினாக ஹஸ்த க்ருத்தி வாஸா:





ஶ்ரீவீரட்டேஸ்வரர் (கிருத்திவாசர்) திருக்கோவில், வழுவூர், நாகப்பட்டினம். சிவனின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே காண முடியும். சப்த கன்னியரில் ஶ்ரீ வாராஹி வழிபட்ட ஸ்தலம்.
சுட்டுக்கொடுத்தது (சுடக்கொடுத்தது?) ஶ்ரீ அஷ்வின்.

Monday, January 28, 2019

பறவையின் கீதம் - 103





ஒரு முக்கியமான ஆட்டத்துக்கு கத்தோலிக கால்பந்து குழு போய்க்கொண்டு இருந்தது. ட்ரெய்னில் ஏறிய ஒரு பத்திரிகை நிருபர் பயிற்சியாளரை அணுகி கேட்டார் "டீம் ஜெயிக்க பிரார்த்தனை செய்ய கூடவே பாதிரியை அழைச்சுப்போறீங்களாமே? அவரை அறிமுகம் செஞ்சு வெக்க முடியுமா?”
பயிற்சியாளர் சொன்னர் "நிச்சயமா. ஆனா எந்த பாதிரி? தடுத்து ஆடறவரா இல்ல ஆக்ரோஷமா தாக்கி ஆடறவரா?”

Friday, January 25, 2019

பறவையின் கீதம் - 102





சுற்றுலா பயணி தன் வழிகாட்டியிடம் "இந்த ஊர் நன்றாக இருக்கிறது. எத்தனை சர்ச்கள்! இங்கிருக்கும் மக்கள் கடவுளை மிகவும் நேசிக்கிறார்கள் போலிருக்கு!” என்றார்.
வழி காட்டி சொன்னார் : “இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒத்தரை ஒத்தர் வெறுக்கிறார்கள்!”
ஒரு சிறுமியிடம் 'பேகன்கள்' யார் என்று கேட்டார்.
அவள் மதம் குறித்து ஒத்தருக்கு ஒத்தர் சண்டை போடாதவர்கள்!” என்றாள்.

Thursday, January 24, 2019

பறவையின் கீதம் - 101





திருப்பியும் அந்த மத கண்காட்சிக்குப்போனேன். இப்போது அங்கே பலாக்ரி மதத்து பெரிய பூசாரி பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். இறைதூதர் பலாக்ரி மட்டுமே இறை தூதுவர் என்று அவர் 5 ஆம் நூற்றாண்டில் மெசாம்பியா நாட்டில் அவதரித்தார் என்று சொன்னார்.

அன்றிரவு கடவுளிடம் இன்னொரு பேச்சு வார்த்தை நடத்தினேன். “கடவுளே நீ மிகவும் பாரபட்சம் காட்டுகிறாய் அல்லவா? ஏன் 5 ஆம் நூற்றாண்டு மட்டுமே ஞானமடைந்த நூற்றாண்டாக இருக்க வேண்டும்? ஏன் மெசாம்பியா மட்டுமே புனித இடமாக இருக்க வேண்டும். என் காலகட்டத்துக்கும் இடத்துக்கும் என்ன குறை?

கடவுள் சொன்னார்: ஒருநாள் பண்டிகை என்று சொல்லுவது எல்லா நாட்களும் புனிதமானவை என்று உணர்த்தவே. ஓரிடம் புனிதத்தலம் என்பது எல்லா இடங்களும் புனிதத்தன்மை வாய்ந்தவை என்றூ உணர்த்தவே. இறை தூதரை தேவ குமாரன் என்று சொல்லுவது எல்லாருள்ளும் இறைத்தன்மை இருப்பதை உணர்த்தவே.

Wednesday, January 23, 2019

பறவையின் கீதம் - 100





ஜீசஸ் ஃபுட்பால் மேட்ச் பார்த்ததே இல்லை என்றார். ஆகவே ஒரு நாள் அவரை ஒரு மேட்சுக்கு அழைத்துப்போனோம். அது கத்தோலிக்க குருசேடர்களுக்கும் ப்ராடஸ்டண்ட் பஞ்சர்களுக்கும் இடையேயான ஆக்ரோஷமான போட்டி.
குருசேடர்கள் முதலில் கோல் போட்டார்கள். ஜீசஸ் ஆர்பரித்து தொப்பியை மேலே எறிந்து பிடித்தார். சில நிமிடங்களில் ப்ராடஸ்டண்ட்கள் கோல் போட்டனர். ஜீசஸ் மீண்டும் ஆர்பரித்து தொப்பியை மேலே எறிந்து பிடித்தார்.
பின்னால் உட்கார்ந்திருந்தவருக்கு இது புரியவில்லை. ஜீசஸ் தோளைத்தட்டி "நீங்கள் எந்தப்பக்கம்? யாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஜீசஸ் "நான் யாரையும் ஆதரிக்கவில்லை. போட்டியை ரசிக்கிறேன்!” என்று சொன்னார்.
கேள்வி கேட்டவர் தன் பக்கத்தில் இருந்தவர் பக்கம் திரும்பி "ஹும்! நாஸ்திகர் போலிருக்கிறது!” என்றார்.

மேட்ச் முடிந்ததும் நாங்கள் ஜீசஸை கேட்டோம். “எந்த பக்கமும் சாயாமல் இருக்கிறீர்களா என்ன?”
அவர் சொன்னார் "நான் மக்கள் பக்கம் இருக்கிறேன்; மதங்களின் பக்கம் இல்லை. மானுடம் முதலில்; வேலை செய்யாமல் விரதம் இருப்பதன் பக்கமில்லை.”

Monday, January 21, 2019

பறவையின் கீதம் - 99





மதங்களின் உலக கண்காட்சிக்கு நானும் என் நண்பனும் போனோம். அது வியாபார கண்காட்சி இல்லை. ஆனால் போட்டி பலமாக இருந்தது. பிரச்சாரம் சத்தமாக இருந்தது.

யூதர்களின் ஸ்டாலில் பிரசுரம் தந்தனர். அதில் கடவுள் எல்லோருக்கும் கருணை காட்டுபவர் என்றும் யூதர்கள் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் வேறு யாருமே கடவுளுக்கு அவ்வளவு பிரியமானவர்கள் இல்லை என்றும் சொன்னது

இஸ்லாமியர்கள் ஸ்டாலில் கடவுள் மிகவும் இரக்கம் காட்டுபவன் என்றும் முகமது மட்டுமே அவரது தூதுவன் என்றும் அவரது போதனைகளை கேட்டு நடந்தால் மட்டுமே ரட்சிக்கப்படுவோம் என்றும் தெரிந்து கொண்டோம்.

கிறிஸ்துவரின் ஸ்டாலில் கிடைத்த செய்தி கடவுள் அன்பு மயமானவர், சர்ச்சை விட்டால் வெளியே ரட்சிப்பு இல்லை என்பது. சர்ச்சில் சேருங்கள் அல்லது நிரந்தரமாக நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்றனர்.

வெளியே வரும்போது என் நண்பனை கடவுளைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டேன். “அவர் மத வெறி பிடித்தவர், வெறியர், கொடூரமானவர்" என்றான்.

வீட்டுக்கு வந்து இறைவனிடம் கேட்டேன். “இதை எல்லாம் ஏன் பொறுத்துக் கொள்ளுகிறாய்? காலங்காலமாக இவர்கள் உனக்கு கெட்டப்பெயர் சம்பாதித்து தருகிறார்கள் என்று உனக்கு தெரியாதா என்ன?”

கடவுள் சொன்னார் "நான் அந்த கண்காட்சியை ஏற்படுத்தவில்லை. உண்மையில் அங்கே போக நான் வெட்கப்படுவேன்!"

Friday, January 18, 2019

பறவையின் கீதம் - 98





விஷ்ணு தன் பக்தன் ஒருவனிடம் ஒரு நாள் சொன்னார் "இதோ பார், உன் முடிவே இல்லாத வேண்டுதல் எல்லாம் கேட்டு எனக்கு சலித்துவிட்டது. உனக்கு 3 வரம் கொடுக்கிறேன். வாங்கிக்கொள். பிறகு ஒரு வரமும் தர மாட்டேன்.”

பக்தனுக்கு படு சந்தோஷமாகிவிட்டது. அப்போதுதான் தன் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வந்திருந்தான். 'என் மனைவி சாகட்டும். நான் வேறு நல்ல பெண்னை திருமணம் செய்தி கொள்கிறேன்.' என்றான்.

ஆகட்டும் என்று சொல்லி விஷ்ணு மறைந்துவிட்டார்.

வீட்டுக்கு போனால் மனைவி இறந்து போயிருந்தாள். அக்கம் பக்கம் சுற்றத்தார் எல்லாரும் அவளுடைய நல்ல குணங்களை சொல்லி அழுதார்கள். இவனுக்கோ 'அட ஆமாம்! அவள் நல்லவள்தானே, இவளை விட நல்ல பெண் கிடைப்பாளா, அவசரப்பட்டுவிட்டோமே என்று தோன்றிவிட்டது. அவன் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தான் - 'இவள் உயிர் பிழைக்கட்டும்.' அவளும் தூக்கத்தில் இருந்து எழுபவள் போல எழுந்துவிட்டாள்.

இப்போது இன்னும் ஒரே ஒரு வரம்தான் பாக்கி இருந்தது. இதை வீணடிக்காமல் எதையாவது சரியாக கேட்டு வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தான். முன் போல தப்பாக கேட்டுவிட்டால் அதை சரி செய்ய இன்னோரு வரம் கிடைக்காதே? பலரையும் கலந்து ஆலோசித்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொன்னார்கள். குழப்பமே மிஞ்சியது. சாவே வேண்டாம் என்று கேட்கலாமா? அட உடல்நலமில்லையானால் சாவே வராமல் இருந்து என்ன பிரயோஜனம்? அப்போ நல்ல ஆரோக்கியம்? அட, காசே இல்லாமல் நல்ல ஆரோக்கியம் இருந்து என்ன புண்ணியம்? அப்போ நிறைய பணம்? அட நண்பர்களே இல்லையானால் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இப்படியே சில பல வருஷங்கள் சென்றன. குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் விஷ்ணுவையே கேட்டான் " நான் என்ன வரம் கேட்கட்டும்?”
பக்தனின் குழப்பத்தை கண்டு மனமிரங்கி அவர் சொன்னார் “என்ன கிடைத்தாலும் திருப்தியுடன் இருக்க வேண்டும் என்று கேள்!”

Thursday, January 17, 2019

பறவையின் கீதம் - 97





அந்த சன்னியாசி கிராமத்தில் எல்லையை அடைந்து அங்கிருந்த ஆல மரத்தின் கீழே இரவை கழிக்க தயாரானார். அபோது ஒரு கிராமவாசி அரக்க பரக்க ஓடிவந்தார். “அந்த கல்லு அந்த கல்லு, அத எங்கிட்ட கொடுங்க!!”
"என்ன கல்லுப்பா?” என்றார் சன்னியாசி.
நேத்து ராத்திரி சிவபெருமான் என் கனவில வந்து இன்னைக்கு சாயங்காலம் கிராம எல்லையில இருக்கற ஆல மரத்துகிட்ட போனா அங்க ஒரு சன்னியாசி எங்கிட்ட ஒரு கல்லை கொடுப்பார். அது என்ன ஏழு தலைமுறைக்கும் பணக்காரன் ஆக்கிடும்ன்னு சொன்னார்.”
தன் பையில் துழாவிய சன்னியாசி ஒரு பெரிய கல்லை எடுத்தார். “அவர் இதத்தான் சொல்லி இருப்பார். இது நேத்து காட்டில கிடைச்சது. உனக்கு வேணும்ன்னா வெச்சுக்கோ" கொடுத்துவிட்டார்.
ஒரு மனிதனின் தலை அளவு பெரியதாக இருந்த அந்த வைரத்தை பார்த்து கிராமவாசி திகைத்துப்போனார்.
அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை நேராக சன்னியாசியிடம் போய் சொன்னார், “இந்த கல்லை அநாயாசமாக தூக்கிக்கொடுக்க வைக்கும் உங்களது பெரும் செல்வத்தை கொடுங்களேன்!”

Wednesday, January 16, 2019

ஶ்ரீ ப்ருஹஸ்பதி த்யான மந்திரம், ஸ்தோத்திரம்




இன்று ஶ்ரீ சாணு புத்திரன் அவர்களுடைய ஃபேஸ்புக் பதிவ. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கு நன்றி சொல்லி பகிர்கிறேன்.

பெரியவா சரணம்.
மிக நீண்ட பதிவாகத் தான் அமையும் என தோன்றுகிறது. காரணம் மனசு முழுக்க ஒரு திருப்தி… ஒரு திகைப்பு… ஒரு ஆஸ்வாசம்… சங்கரா!\
இன்று காலையில் வீட்டின் அருகிலே உள்ள ஸ்ரீவிஜயகணபதி ஆலயத்துக்குச் சென்று இருந்தேன். தரிசனம் முடித்து பிரதக்ஷிணம் செய்துவிட்டு நமஸ்கரித்து எல்லோரையும் நன்னா வாழவையுங்கோ ஈஸ்வரா என பிரார்த்தித்து எழுந்தவனை நோக்கி ஒரு பெரியவர் மெதுவாக நடந்து வந்தார்.
“என்னப்பா… சௌக்யமா இருக்கியா? ரொம்ப நாள் கழிச்சு கோவிலுக்கு வந்துருக்கே போலருக்கே” என்றபடியாக அருகில் வந்தவரைக் கண்டு திகைத்தே விட்டேன்.
காரணம் அவருக்கும் நம் உம்மாச்சீ போலவே ஒரு கண்ணிலே பூ விழுந்திருந்தது. ஆனால் அவரை இதற்கு முன்பாக அடியேன் கண்டதாகத் தோன்றவில்லை. ஆனால் என்னை நன்றாகத் தெரிந்தவர் போலப் பேசினார். உண்மையில் வெகு நாட்களுக்குப் பிறகு இன்று உள்ளகரம் ஸ்ரீவிஜய கணபதி திருக்கோவிலுக்குச் சென்றிருந்தேன்.
“சொல்லூடாப்பா… என்ன பண்ணிண்டுருக்கே… எப்படி இருக்கே?” என்றவரிடம், சமீபகாலமாக க்டந்த மே 29, 2018 முதலாக ஐயனின் கருணையாலே நடந்து வருகின்ற உலகலாவிய லோகக்ஷேம பிரார்த்தனையான ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் சஹஸ்ர காயத்திரீ ஜபம் பற்றிக் கூறினேன்.
மிகவும் சந்தோஷப்பட்ட அவரோ, “எல்லாரும் தேவ குருவான பிருஹஸ்பதியை ஸ்தோத்தரிக்க மறந்துண்டு வர்றா. குரு ப்ரும்மா குரூர் விஷ்ணூ.. மந்திரம் மட்டும் தான் எல்லாருக்கும் தெரியறது. அவருக்கான த்யான மந்திரத்தையும் ஸ்லோகத்தையும் தெரிஞ்சுண்டு அதைச் சொல்லி பிரார்த்திக்கணுமாச்சே” என்றவர்… “ஒங்கிட்டே பேனா பேப்பர் இருக்கா? நான் சொல்றேன் எழுதிக்கோ” என்றார்.
மிகுந்த ஆச்சர்யத்துடன், கோவிலில் என் அருகிலே நின்றிருந்த பக்தர் ஒருவரிடம் இருந்து பேப்பரும் பேனாவும் வாங்கிண்டு எழுதிக்கொள்ளத் தொடங்கினேன். ஸ்லோகத்தின் அர்த்தத்தை அவர் கூறக் கேட்டறிந்ததும் மனம் வெகுவாக ஆனந்திக்கத் தொடங்கியது. இன்றைய பொழுதிலே அனைவருக்கும் மிகவும் அத்யாவசியமான ஒன்று தான் நமக்கு இன்று இந்த பெரியவர் கூறியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டதாலே, அதனையே இன்றைய தினம் இந்தப் பதிவிலே பகிர்கின்றேன்.

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

ஸ்ரீப்ருஹஸ்பதி த்யான மந்திரம்:

தப்த காஞ்சன வர்ணாபம் சதுர்புஜ ஸமன்விதம்
தண்டாக்ஷ ஸூத்ர மாலஞ்ச கமண்டலு வரான்விதம்
பீதாம்பரதரம் தேவம் பீதகந்தா நு லேபநம்
புஷ்பராக மயாபூஷம் வசித்ர மகுடோஜ்வலம்
ஸ்வர்ணாஸ்வ ரமாரூடம் பீதத்வஜ ஸுசோபிதம்
மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யக் ஆசரந்தம் ஸுசோபநம்
அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞ்சம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும்ஸதா.
இதனுடைய அர்த்தமானது, ”நன்றாக உருக்கப்பட்ட தங்கம் போன்ற காந்தி உடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், தண்டம், ஜபமாலை, கமண்டலு, ஆகியவைகளை வைத்திருப்பவரும், பீதாம்பரம், பீதவர்ணமான சந்தனம் உள்ளவரும், புஷ்பராக மயமான ஆபரணம் உள்ளவரும், விசித்ரமான கிரீடமணிந்தவரும், ஸ்வர்ண வர்ணமான குதிரை பூட்டிய ஸ்வர்ண ரதத்தில் பவனிவருபவரும், அழகானவரும் இஷ்டத்தை அளிப்பவரும் எல்லாம் அறிந்தவரும், தேவர்களாலே பூஜிக்கப்பட்டவருமான குருவை ஸகல இஷ்டமும் ஸித்திப்பதற்காக நமஸ்கரிக்கின்றேன்” என்பதாகும்.

ப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்:

ப்ருஹஸ்பதி: ஸுராசார்ய: தயவான் சுபலக்ஷண:
லோக த்ரய குரு: ஸ்ரீமான் ஸர்வக்ஞ: ஸர்வ கோவித
ஸர்வேச: ஸர்வதாபீஷ்ட: ஸர்வஜித் ஸர்வபூஜித:
அக்ரோதனோ முநிச்ரேஷ்ட: நீதிகர்தா குரு: பிதா
விஸ்வாத்மா விஸ்வகர்தா ச விஸ்வயோநிரயோநிஜ:
பூர்புவ: ஸுவ” ப்ரபுச் சைவபர்த்தாசைவ மஹாபல:
பஞ்ச்ச விம்சதி நாமானி புண்யாநி நியதாத்மனா
நந்த கோப க்ருஹாஸீன விஷ்ணுநா கீர்த்திதா
ய: படேத் ப்ராதருத்தாய ப்ரயத: ஸுஸமாஹித:
விபரீதோபி பகவான் ப்ரீத: ஸ்யாத்து ப்ரஹஸ்பதி:
ய: ச்-ருணிதி குருஸ்தோத்ரம் சிரம் ஜீவேத் நஸம்சய:
கோஸஹஸ்ர பலம் தஸ்ய நிஷ்ணோர்வச நதோ பவேத்
ப்ருஹஸ்பதி க்ருதாபீடா நகதாசித் பவிஷ்யதி.

இந்த ஸ்லோகமானது ஸ்ரீகுரு ப்ருஹஸ்பதியின் கவச மந்திரமாம். இதனில் குருவின் நாமாக்களைக் கூறி அந்தந்த அங்கங்களை காக்கும்படியாக வேண்டப்படுகிறதாம். ஸ்தோத்திரத்திலும் குருவின் 25 நாமாக்கள் கூறப்பட்டன. இதை நந்தகோபன் வீட்டில் கிருஷ்ணனாகத் தோன்றிய பகவான் கூறினாராம். இந்த ஸ்துதியை பக்தியுடனாக காலையும் மாலையும் படித்தாலோ, படிக்கக் கேட்டாலோ குரு நம் ஜாதக ரீதியாக விபரீதமான கெட்ட பயனைத் தருவதாக இருந்தாலும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷமடைந்து தீர்க்காயுளையும், சகல சம்பத்துக்களையும் தருவாராம். ஆயிரம் கோதானம் செய்த புண்ணியம் உண்டாகும்படியாக இந்த ஸ்தோத்திரத்தை ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கூறியிருக்கிறாராம்.
மேலும் நித்யமும் இதனைச் சொல்லிவந்தாலும், வியாழக் கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டைகடலை ஊறவைத்து அதனை வாழை நாரிலே கோர்த்து மாலை செய்து போட்டு, ஒரு புஷ்பம் சமர்ப்பித்து, மனதார பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். நைவேத்யம் என்ன செய்யனும்னு கேட்டதற்கு, அவா அவாளாலே என்ன முடியுமோ அதனைச் செய்யலாம். “ஒண்ணு முக்யம்டா கொழந்தே! இந்த ஸ்லோகம் வாஸிச்சு ப்ரார்த்திக்கும் போது மனசுல ஸ்ரத்தையும் பக்தியும் அவஸ்யம். ஒரு துளி தீர்த்தம் தந்தாக்கூட பகவான் சந்தோஷப்பட்டுடுவான். முக்யமே இங்கே மனசு லயிச்சு பண்றதும், ஸ்ரத்தையோட சமர்ப்பிக்கறதும் தான்” என்றாரே பார்க்கணும். திகைச்சு போய்ட்டேன். காரணம், அவர் கூறிய முறையானது, நம் உம்மாச்சீ பேசறது போலயே இருந்தது. அந்த அன்பு, அந்த பாசம், அந்த குரலின் முதிர்ச்சி, அந்த ஸ்திரமான பார்வை… அடேங்கப்பா… உடம்பை என்னவோ பண்ணிடுத்து. அவருக்கு கோயிலுக்குள்ளே நமஸ்கரிக்கப் படாது என்பதாலே மானசீகமாக அவருடைய பாதங்களை ஒரு முறை பார்த்து பெருமூச்சு விட மட்டுமே முடிஞ்சது. ஆனா அவரோ அதை கண்டுண்டுட்டாப்ல தெரிஞ்சது. காரணம், என்னை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு, புன்முறுவலோடு கோவிலின் பிரதான வாயிலை நோக்கி நகர்ந்தார். என் கால்களை யாரோ அங்கேயே கட்டிப் போட்டுட்டாப்ல இருந்தது. என்னால நகர முடியலை.. நகரணும்னு கூடத் தோணலை. அவர் கோவிலை விட்டு நகர்ந்து சில நிமிடங்கள் கழித்தே என்னால் நகர முடிந்தது என்பதை நன்றாக உணர்ந்தேன். பின்னர் மறுபடியும் ஸ்ரீராமர் சன்னதிக்கும் அவர் எதிரே கைகூப்பிய வண்ணமாக நின்று கொண்டிருந்த அனுமன் சன்னதிக்கும் நடுவே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் பிள்ளையாரை நோக்கிச் செய்துவிட்டு, பேனா கொடுத்த அன்பருக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பினேன். அவரோ, “சார்… எப்படியும் நிச்சயமாக இதையும் உங்க பேஸ்புக்லே ஷேர் செய்யுவேள்னு தோன்றது. நானும் அதனை காப்பி பண்ணிக்கறேன். என் பையனுக்கு ஜாதகரீதியாக இப்போ குருபகவானை ப்ரார்த்திக்கனும்னு ஜோஸ்யர் சொன்னார்; இப்படி அந்த பெரியவர் சொல்லி, அதனை எழுத எங்கிட்டேர்ந்து பேப்பரும் பேனாவும் நீங்க வாங்கிண்டத பார்த்தா நேக்காகவே அந்த ஈஸ்வரன் இதை இன்னிக்குச் சொன்னாப்ல தோன்றது. நான் அவனுக்காகத் தான் தினமும் இங்க வந்து எல்லா தெய்வங்களையும் தரிசித்து நவக்கிரஹ பிரதக்ஷிணம் செய்து வருகிறேன். மனசார பிரார்த்திச்சுண்டு பிரதக்ஷணம் செஞ்சுண்டுருக்கும்போது நீங்க என் கைலே பெரியவா சரணம் எனச் சொல்லிண்டே பெரியவா படத்தைக் கொடுத்தப்போ கூட மனசார நினைச்சேன். பெரியவா இருக்கா நமக்கு; அவர் காப்பாத்துவார்-நு. கண் கலங்க அவர் கூறியதே என்னை இன்று இதனை எல்லாருக்குமாக பகிர்ந்து விடுன்னு ஐயன் சொன்னதாகவே தோணிச்சு.
தேவகுருவான ப்ருஹஸ்பதி எனும் குருபகவானின் அருள் கிடைக்க வேண்டி நாம் செய்யக் கூடிய பிரார்த்தனைக்கான தியான ஸ்லோகம் மற்றும் ஸ்தோத்திரத்தை இன்றைய தினம் பெரியவர் ஒருவர் கூறக் கேட்டறிந்தது மனதுக்கு மிகமும் ரம்மியத்தைத் தந்தது. வந்தவர் உம்மாச்சீயா..? தேவகுருவேயா…? அல்லது ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவா… எப்படியிருந்தாலும், இந்த ஸ்லோகத்தை அவர்கூற எழுதுகையிலே எம் ஐயன் ஸ்ரீமஹாபெரியவா எனும் உம்மாச்சீயே மனசுல நிறைஞ்சார் என்பது மட்டும் சத்யம்.
எத்தனையோ பேர்கள் தங்களுக்கு விவாஹ ப்ராப்தம், சத்புத்ர பாக்கியம், நல்ல கல்வி, ரோக நிவாரணம், கஷ்ட நிவர்த்தி, ஜாதக ரீதியாக குருபகவானுக்குச் செய்யவேண்டிய பரிகாரம் முதலியன பற்றி எப்படித் தெரிந்து கொண்டு என்ன செய்வது என புரியாமல் தவிப்பவர்கள் உள்ளனரே! அவர்களுக்கு இந்த ஸ்லோகமும் ஸ்தோத்திரமும் ஒரு மஹா பொக்கிஷமாச்சே என்றே தோன்றியது. அதுமட்டுமல்ல, இன்று இதைச் சொல்லி வைத்து, எல்லார்க்கும் குடு என்பதற்கும் உணர்வில் தோன்றவும் செய்துட்டாரே!
சங்கரா! பலன் வேண்டுபவர்கள் இதனை காப்பி செய்து கொண்டு தினமும் சொல்லிப் பயன் பெறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு நினைச்சு பகிர்வை அடியேன் செய்துவிட்டேன். இனி பலன் பெறவேண்டிய உங்களுடைய பங்கினைச் செய்து பயன் பெறவைக்க வைக்க வேண்டியது அவருடைய அருள். பெரியவா சரணம். பெரியவா சரணம். ஸ்ரீமஹாபெரியவா அபயம்.
தைத்திருநாள் பொழுது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். எல்லோருக்கும் நல்லதோர் வாசல் திறக்கப்படட்டும். எல்லோரும் ஆனந்தமாக வாழ வழிவகை செய்யவல்ல தர்ம நியாயம் எல்லோர் மனதிலும் நிறையட்டும். வாழ்க வளமோடு!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
குறிப்பு: அந்தப் பெரியவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டது இது. இதனில் பிழை ஏதும் அறிந்த ஆன்றோர் கண்டால் தயவு செய்து அடியேனுக்குச் சொல்வதன் மூலமாக பதிவைத் திருத்திக் கொள்ளவும், அந்த பயனை அனைவரும் அடையவும் வழிவகை செய்யுங்களேன்.
ஸ்ரீகுருப்யோ நம:

Monday, January 14, 2019

பொங்கல் - 2019






நாளைய பதிவு அவசியம் கருதி இன்று:
சங்கல்பம் மாறுபடுகிறது.


ப்ரப4வாதி3ஷஷ்டி ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்3யே விலம்ப நாம ஸம்ʼவத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருʼதௌ மகர மாஸே சுகல பக்‌ஷே நவம்யாம் ஶுப4திதௌ2 பௌம வாஸர யுக்தாயாம்ʼ ஶ்வினீ நக்ஷத்ர யுக்தாயாம்ʼ சாத்3ய நாம யோக3 பா3லவ கரண யுக்தாயாம்ʼ ஏவம்ʼ கு3ண ஸகல விதஶேண விஶிஷ்டா2யாம்ʼ அஸ்யாம்ʼ நவம்யாம் ஶுப4திதௌ
மீதியை இந்த சுட்டியில் இருக்கும் டாக்குமெண்ட் படி நடத்தவும்.

 https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfMXhBNWQ1a2E5STA/view?usp=sharing

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

ஞானாம்ருதம் - 4





பல காலம் ப்ரவசனத்துக்கு வெளியூரே போகாம ஒரே இடத்தில... நொச்சூர்லயோ திருவண்ணமலையிலோ இருந்தாக்கூட இதை பாத்திருக்கேன். எங்கேந்தோ பாம்பேலேந்தோ... சில சமயம் வெளிநாட்டுலேந்து கூட.... வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எத்தனையோ கஷ்டங்களை சகிச்சுண்டு அபூர்வமா ... அது ஒண்ணும் ஜெனரல் பெனாமெனன் கிடையாது.. அபூர்வமா ... சத் சங்கத்துக்கு மட்டும் ஆசைபட்டுண்டு யாரானா பார்க்க வருவா. அவாள எந்த ஃபோர்ஸ் இங்க இழுத்துண்டு வந்துதோ அதே ஃபோர்ஸ் நமக்குள்ள பூந்துண்டு நம்ம பேசவும் வைக்கும். அத பார்க்கறப்பவே தெரியும்.... பகவானோட கிருபைன்னா என்னன்னு அப்பத்தான் நமக்கும் புரியும். அந்த விழைவு... அதப்பாத்துத்தான் ராமக்ருஷ்ணர் நரேந்திரனை நீ நாராயணன்னு சொன்னார். அந்த விழைவு... தலைல தீப்பிடிச்சுண்ட மாதிரி... வேதாந்தத்திலயே அப்படித்தான் எக்ஸாம்பிள் கொடுப்பா.. தலைல நெருப்பு பத்திண்டா ஜலத்த தேடிண்டு எப்படி ஓடுவோம் நாம? நாளைக்கு அணைச்சுக்கறோம்ன்னு உக்காண்டு இருப்போமானா? ப்ரதீப்த சிரஹா ஜலராசிரிவ ...
நமக்கு முன்னாடியே ம்ருத்யு ஜரா வியாதின்னு தோஷம் எல்லாம் கண்ணு முன்ன வந்து நிக்க... நமக்கு மரணம் இருக்கு என்கிற உண்மைய நாம எதிர்கொள்ளறப்ப .. நமக்கு வியாதி இருக்கு. நமக்கு இஷ்ட பட்டவா எல்லாரும் நம்ம கூடவே இருப்பான்னு சொல்ல முடியாது... அந்த துன்பம் யாரும் வராம இருக்கட்டும் ஆனா வந்தா என்ன பண்ணறது? இதுக்குத்தான் சம்சாரம்ன்னு சொல்றோம். அந்த துன்பங்கள் எல்லாம் இருக்கு லோகத்தில. அதை எல்லாம் பாக்கறத்த அந்த டீப் பெய்ன் எக்ஸ்க்ரூஷியேடிங் பெய்ன் அது ஒருவாட்டி பட்டுதானாத்தான் நாம முழிச்சுக்கறோம். நாம நினைச்சா மாதிரி இந்த லோகத்தில சுகமா இருக்க முடியாது. சுகமா இருக்கறதெல்லாம்.... பெரிவா ஒரு ... ரெண்டு உதாரணம் சொல்லுவா. ஒண்ணு பாம்பு வாயில இருக்கற தவளை. அது முன்னாடி போற ஒரு ஈய பிடிக்கப்போறதாம். அந்த பாம்பு வாய க்ளோஸ் பண்ணிடுத்துன்னா உள்ளா போயிடும். சக்‌ஷுஶ்வரண களஸ்தமாம் தர்புறம்ன்னு மலையாளத்துல... அத்யாத்ம ராமாயணத்துல.. அந்த தவள மாதிரி ஜீவன் இங்க எல்லாம் சுகம்தான் ஒரு துன்பமும் வராதுன்னு நினைச்சு தன்னத்தானே ஏமாத்திண்டு நித்யமான வஸ்துவ மறந்து அநித்தியமான த்ரவ்யங்களையே நித்யம்ன்னு நினைச்சுண்டு ஆஶ்ரயிச்சுண்டு இருக்கு.

நல்லா புரிஞ்சுக்கணும்.
அநித்யமான த்ரவ்யங்கள உபயோகப்படுத்தாம யாரும் இருக்க முடியாது. நான் பணம் சம்பாதிக்கறத நிந்த பண்ணல. அது எல்லாருக்குமே வேணும். எனக்கும் வேணும் உங்களுக்கும் வேணும். சாப்டறத்துக்கு வேணும். அது ஒன்லி அ மீன்ஸ்... நெசசிடி. அது வியவகாரத்துக்கு வேணும். த்ரவ்யங்கள ... தேகம், ஆரோக்யம், வீடு குடும்பம் இதெல்லாம் வியவஹாரம் செய்யலாம். ஶ்ரயிக்கப்படாது. அது எப்ப வேண்ணா ஏமாத்திடும். நித்யமான வஸ்துவ வியவகாரம் பண்ண முடியாது; அத ஆஶ்ரயிக்கணும். நாம் இதை தலைகீழா பண்ணறோம். அந்தியமான த்ரவ்யங்கள ஆஶ்ரயிக்கறோம். நித்யமானத வியவகாரம் செய்யப்பாக்கறோம். ஒரு கோவில கட்டி அந்த கோவில்ல அநேக கர்மாக்கள செஞ்சு வியவகாரம் பண்றோம். இதுக்கெல்லாம் பணம் வேணுமே? அப்படின்னு பணத்த ஆஶ்ரயிக்கறோம். பகவான் என்ன சொல்றார்னா நீ என்னா ஆஶ்ரயிச்சுக்கோ, அப்பறம் பணத்த வியவகாரம் பண்ணு, பரவாயில்ல. அப்படி நாம் பண்ணறதில்லை.

Sunday, January 13, 2019

போகி - 2019





நாளை - திங்கட்கிழமை - போகி அன்று இந்திரனுக்கும் பசுவுக்கும் பூஜை செய்வது விதிக்கப்பட்டுள்ளது.
பூஜா விதானம் பின் வருமாறு.


ஓம்ʼ
இந்த்³ர – கோ³ பூஜா
ஆசமனம்
ஶுக்லாம் ப³ரத⁴ரம்ʼ தே³வம்ʼ ஶஶி வர்ணம்ʼ சதுர்பு⁴ஜம் | ப்ரஸன்ன வத³னம்ʼ த்⁴யாயேத் ஸர்வவிக்⁴னோப ஶாந்தயே || ||
ப்ராணாயாம: ஒம்ʼ பூ⁴: + பூ⁴ர்பு⁴வஸுவரோம்ʼ
ஸங்கல்ப:
ஓம்ʼ அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோபிவா|
: ஸ்மரேத்‌ புண்ட³ரீகாக்ஷம்ʼ : பா³ஹ்ய ஆப்⁴யந்தர: ஶுசி:||
ஶுபே⁴ ஶோப⁴னே முஹூர்தே, ஆத்³யப்³ரஹ்மண: த்³விதீய பரார்தே⁴,
ஶ்வேதவராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்ʼஶதிதமே,
கலியுகே³, ப்ரத²மே பாதே³, ஜம்பூ³த்³வீபே, பா⁴ரத வர்ஷே ப⁴ரத க²ண்டே³,
மேரோர் த³க்ஷிணே பார்ஶ்வே, ஶகாப்³தே³ அஸ்மின்‌ வர்தமானே வ்யாவஹாரிகே
ப்ரப⁴வாதி³ ஷஷ்டி ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்⁴யே விலம்ப நாம ஸம்ʼவத்ஸரே த³க்ஷிணாயனே ஹேமந்த ருʼதோ த³னுர் மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் ʼ ஶுப⁴திதௌ² இந்து வாஸர யுக்தாயாம்ʼ ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம்ʼ ஶிவ நாம யோக³ பத்ரவ கரண யுக்தாயாம்ʼ ஏவம்ʼ கு³ண ஸகல விஶேஷண விஶிஷ்டா²யாம்ʼ அஸ்யாம்ʼ அஷ்டம்யாம்‘ ஶுப⁴திதௌ²
மமோபாத்த ஸமஸ்த து³ரிதயக்ஷய த்³வாரா ஶ்ரீபரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் அஸ்மாகம்ʼ க்ஷேமஸ்தை²ர்ய-வீர்ய விஜய- ஆயுராரோக்³- ஐஶ்வர்யாபி⁴வ்ருʼத்³த⁴யை ஸமஸ்த மங்க³ல அவாப்த்யர்த²ம்ʼ ஸமஸ்த து³ரிதோப ஶாந்த்யர்த²ம்ʼ ஶ்ரீ இந்த்³ராணி ஸமேத இந்த்³ர பூஜாம்ʼ ச கோ³ பூஜாம்ʼ ச கரிஷ்யே| ஆதௌ விக்னேஶ்வர பூஜாம் கரிஷ்யே |
ஶ்ரீக³ணேஶ பூஜா:
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து-
ததே³வ லக்³னம்ʼ ஸுதி³னம்ʼ ததே³வ தாராப³லம்ʼ சந்த்³ரப³லம்ʼ ததே³|
வித்³யாப³லம்ʼ தை³வப³லம்ʼ ததே³வ லக்ஷ்மீபதே தேங்க்⁴ரியுக³ம்ʼ ஸ்மராமி ||
கரிஶ்யமானஸ்ய கர்மண: நிர்விக்³னேன பரி ஸமாப்யர்தம்ʼ ஆதௌ விக்³னேஶ்வர பூஜாம்ʼ கரிஷ்யே.
³ஜானனம்ʼ பூ⁴த க³ணாதி³ஸேவிதம்ʼ கபித்த²ஜம்பூ³²லஸாரப⁴க்ஷிதம் |
உமா ஸுதம்ʼ ஶோக வினாஶ காரணம்ʼ நமாமி விக்⁴னேஶ்வர பாத³பங்கஜம் ||
அஸ்மின் ஹரித்ரா பி³ம்பே³ மஹா க³ணபதிம் த்⁴யாயாமி | மஹா க³ணபதிம் ஆவாஹயாமி |
மஹா க³ணபதயே நம: ஆஸனம்ʼ ஸமர்பயாமி |
மஹா க³ணபதயே நம: பாத³யோ: பாத்³யம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஹஸ்தயோ: அர்க்³யம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஸ்நபயாமி
மஹா க³ணபதயே நம: ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: உபவீதம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ³ந்தா⁴ன் தா⁴ரயாமி
மஹா க³ணபதயே நம: அக்ஷதான் ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: புஷ்பை: பூஜயாமி


ஸுமுகா²ய நம: |
ஏகத³ந்தாய நம: |
கபிலாய நம: |
³ஜகர்ணாகாய நம: |
லம்போ³³ராய நம: |
விகடாய நம: |
விக்⁴னராஜாய நம: |
வினாயகாய நம: |
தூ⁴மகேதவே நம: |
³ணாத்⁴யக்ஷாய நம: |
பாலசந்த்³ராய நம: |
³ஜானனாய நம: |
வக்ரதுண்டா³ய நம: |
ஶூர்பகர்ணாய நம: |
ஹேரம்பா³ய நம: |
ஸ்கந்த³-பூர்வஜாய நம: |


மஹா க³ணபதயே நம: தூ⁴பமாக்⁴ராபயாமி| | தீ³பம்ʼ ³ர்ஶயாமி| தூ⁴பதீ³பானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி| நைவேத்³யம்ʼ நிவேத³யாமி| தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி | கர்பூர நீராஜனம்ʼ ஸமர்பயாமி | ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
மந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி| ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி| மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்திஹீனம்ʼ மஹேஶ்வர| யத்பூஜிதம்ʼ மயா தே³வ பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே|
ப்ரார்த²னா:
வக்ரதுண்ட³ மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப⁴ | நிர்விக்⁴னம்ʼ குரு மே தே³வ ஸர்வகார்யேஷு ஸர்வதா³ ||
புன: ஸங்கல்ப: (மீண்டும் சங்கல்பம்) அத்³ய பூர்வோக்த ஸகல விஶேஷண விஶிஷ்டாயாம்ʼ .... பூஜாம்ʼ ச கரிஷ்யே|
மஹா க³ணபதயே நம: யதா²ஸ்தா²னம்ʼ ப்ரதிஷ்டா²பயாமி |
ஶோப⁴னார்தே க்ஷேமாய புனராக³மனாய ச ||
விக்⁴னேஶ்வரம்ʼ உத்³வாஸ்ய (வடக்கே தள்ளி வைக்கவும்)
கலஸ பூஜா:
(ஒரு கலசத்தில் நீர் நிரப்பி பூஜை)
³ங்கே³ ச யமுனே சைவ கோ³தா³வரீ ஸரஸ்வதீ |
நர்மதே³ ஸிந்து⁴ காவேரீ ஜலேஸ்மின ஸன்னிதி⁴ம்ʼ குரு ||
³ங்கா³ய நம:
யமுனாய நம:
கோ³தா³வர்யை நம:
ஸரஸ்வத்யை நம:
நர்மதா³யை நம:
ஸிந்த⁴வே நம:
காவேர்யை நம:
புஷ்பை: பூஜயாமி
ஶங்கு இருந்தால் அதற்கு பூஜை. இல்லையானால் விட்டுவிடலாம்.
ஶங்க² பூஜா:
கலஶோத³கேன ஶங்க²ம்ʼ பூரயித்வா (கலச நீரால் சங்கை நிரப்பி)
த்வம்ʼ ஸாக³ரோத்பன்னோ விஷ்ணுனா வித்⁴ருʼ: கரே |
தே³வைச்ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜன்ய நமோஸ்துதே ||


ஶங்க² ஜலேன பூஜோபகரணானி த்³ரவ்யாணி ஆத்மானம்ʼ ச த்ரி: ப்ரோக்ஷ்ய, புன: ஶங்க²ம்ʼ பூரயித்வா...
(சங்கு நீரால் பூஜை திரவியங்களையும் தன்னையும் மும்முறை ப்ரோக்ஷித்துக்கொண்டு மீண்டும் சங்கை நீரால் நிரப்பி...)
ஆத்ம பூஜா:
தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³: ஸனாதன: |
த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ()ஹம்ʼ பா⁴வேன பூஜயேத் ||
பீட² பூஜா:
ஓம ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம:|
ஆதா³ர ஶக்த்யை நம:|
மூல ப்ரக்ருʼத்²யை நம:
ஆதி³ வராஹாய நம:
ஆதி³ கூர்மாய நம:
அனந்தாய நம:
ப்ருʼதி²வ்யை நம:
ஆதி³த்யாதி நவ க்³ரஹ தே³வதாப்⁴யோ நம:
³ஶ தி³க்³ பாலேப்⁴யோ நம:
கு³ரு த்⁴யானம்ʼ :
கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணூ: கு³ருர்தே³வோ மஹேஶ்வர: | கு³ரு: ஸாக்ஷாத் பரப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம:
[பசுஞ்சாணத்தை ஒரு பிம்பமாக பிடித்து வைத்து, அதில் இந்திரனை ஆவாஹனம் செய்து அடுத்து வரும் பூஜையை செய்யலாம்.]
இந்த்³ரபூஜா ||
ஐராவத க³ஜாரூட⁴ம்ʼ ஸஹஸ்ராக்ஷம்ʼ ஶசீபதிம் | வஜ்ராயுத⁴ த⁴ரம்ʼ தே³வம்ʼ ஸர்வலோக மஹீபதிம் ||
இந்த்³ராண்யா ச ஸமாயுக்தம்ʼ வஜ்ரபாணிம்ʼ ஜக³த் ப்ரபு⁴ம் | இந்த்³ரம்ʼ த்⁴யாயேத் து தே³வேஶம்ʼ ஸர்வ மங்க³ல ஸித்³த⁴யே ||
அஸ்மின் கோ³மய பி³ம்பே³ இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம்ʼ த்⁴யாயாமி, இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம் ஆவாஹயாமி ||
இந்த்³ராய நம:, ரத்ன ஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி | ஐராவத க³ஜாரூடா⁴ய நம:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |
வஜ்ரபாணயே நம:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி | ஶசீபதயே நம:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஸஹஸ்ராக்ஷாய நம:, ஸ்நபயாமி | ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஸர்வலோக மஹீபதயே நம:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |
தே³வேஶாய நம:, உபவீதம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய நம:, ஆப⁴ரணானி ஸமர்பயாமி |
ஜக³த்: ப்ரப⁴வே நம:, ³ந்தா⁴ன் தா⁴ரயாமி | ³ந்த⁴ஸ்யோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராய நம:, புஷ்ப மாலாம்ʼ ஸமர்பயாமி |
அர்சனா:
இந்த்³ராய நம:, மஹேந்த்³ராய நம:, தே³வேந்த்³ராய நம:, வ்ருʼத்ராரயே நம:, பாகஶாஸனாய நம:, ஐராவத க³ஜாரூடா⁴ய நம:, பி³டௌ³ஜஸே நம:, ஸ்வர்ணாயகாய நம:, ஸஹஸ்ர நேத்ராய நம:, ஶுப⁴தா³ய நம:, ஶதமகா²ய நம:, புரந்த³ராய நம:, த்ரிலோகேஶாய நம:, ஶசீபதயே நம:
இந்த்³ராணீ ஸமேதாய இந்த்³ராய நம:, நானாவித⁴ பரிமல பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய இந்த்³ராய நம:, தூ⁴பம் ஆக்⁴ராபயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய இந்த்³ராய நம:, தீ³பம்ʼ ³ர்ஶயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய இந்த்³ராய நம:, மஹா நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |
நிவேத³னானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய இந்த்³ராய நம:, தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய இந்த்³ராய நம:, கர்பூர நீராஜனம்ʼ ஸமர்பயாமி | நீராஜனானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, அனந்த கோடி ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி |
ஹே தே³வ கா³ம்ʼ ரக்ஷ, மாம்ʼ ரக்ஷ, மம குடும்ப³ம்ʼ ரக்ஷ |


|| கோ³பூஜா ||
{பிரத்யஷ்யமாக பசு இல்லாவிடில் அதன் பிம்பம்; அதுவும் இல்லாவிடில் இந்த பசும் சாணத்திலேயே ஆவாஹணம் செய்யலாம். பசுஞ்சாணத்துக்கு எங்கே போக ன்னு கேட்டால்... சாரி! விடை இல்லை! }
காமதே⁴னோ: ஸமுத்³பூ⁴தே ஸர்வ காம ப²ல ப்ரதே³ | த்⁴யாயாமி ஸௌரபே⁴யி த்வாம்ʼ வ்ருʼஷ பத்னி நமோஸ்து தே || கா³ம்ʼ த்⁴யாயாமி |
ஆவாஹயாமி தே³வேஶி ஹவ்ய கவ்ய ப²லப்ரதே³ | வ்ருʼஷபத்னி நமஸ்துப்⁴யம்ʼ ஸுப்ரீதா வரதா³ ப⁴வ || கா³ம்ʼ ஆவாஹயாமி |
காமதே⁴னவே நம:, ஆஸனம்ʼ ஸமர்பயாமி | பயஸ்வின்யை நம:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |
ஹவ்ய கவ்ய ப²ல ப்ரதா³யை நம:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |
³வே நம:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஸௌரபே⁴ய்யை நம:, ஸ்நபயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
க்ஷீர தா⁴ரிண்யை நம:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |
மஹாலக்ஷ்ம்யை நம:, ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி |
ரோஹிண்யை நம:, ³ந்தா⁴ன் தா⁴ரயாமி, ³ந்தோ⁴பரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
ஶ்ருʼங்கி³ண்யை நம:, அக்ஷதான் ஸமர்பயாமி |
புஷ்பை: பூஜயாமி |
காமதே⁴னவே நம:, பயஸ்வின்யை நம:, ஹவ்ய கவ்ய ப²லப்ரதா³யை நம:, வ்ருʼஷபத்ன்யை நம:, ஸௌரபே⁴ய்யை நம:, மஹாலக்ஷ்ம்யை நம:, ரோஹிண்யை நம:, ஶ்ருʼங்கி³ண்யை நம:, க்ஷீர தா⁴ரிண்யை நம:, காம்போ³ஜ ஜனகாயை நம:, ³ப்⁴லு ஜனகாயை நம:, யவன ஜனகாயை நம:, மாஹேய்யை நம:, நைஶிக்யை நம:, ஶப⁴லாயை நம:, நானாவித⁴ பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி |
³ஶாங்க³ம்ʼ கு³க்³கு³லூபேதம்ʼ ஸுக³ந்த⁴ம்ʼ ஸுமனோஹரம் |
தூ⁴பம்ʼ தா³ஸ்யாமி தே³வேஶி வ்ருʼஷ பத்ன்யை நமோஸ்து தே ||
இந்த்³ராய நம:, இந்த்³ராண்யை நம:, தூ⁴பம்ʼ ஆக்⁴ராபயாமி |
ஸாஜ்யம்ʼ த்ரிவர்தி ஸம்ʼயுக்தம்ʼ வஹ்னினா யோஜிதம்ʼ மயா |
க்³ருʼஹாண மங்க³லம்ʼ தீ³பம்ʼ த்ரைலோக்ய திமிராபஹம் ||
ஜயந்த ஜனகாய நம:, காம்போ³ஜ ஜனிகாயை நம:, தீ³பம்ʼ ³ர்ஶயாமி |
தி³வ்யான்னம்ʼ பாயஸாதீ³னி ஶாகஸூபயுதானி ச |
ஷட்³ரஸாதீ³னி மாஹேயி காமதே⁴னோ நமோஸ்து தே ||
மஹேந்த்³ராய நம:, மாஹேய்யை நம:, தி³வ்யான்னம்ʼ க்⁴ருʼத கு³³ பாயஸம்ʼ நாரிகேலக²ண்ட³த்³வயம்ʼ கத³லீ ப²லம்ʼ ஶாக ஸூப ஸஹிதம்ʼ ஸர்வம்ʼ மஹா
நைவேத்³யம்ʼ நிவேத³யாமி | நிவேத³னோத்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஏலா லவங்க³ கர்பூர நாக³வல்லீ த³லைர்யுதம் |
பூகீ ³²ல ஸமாயுக்தம்ʼ தாம்பூ³லம்ʼ ப்ரதிக்³ருʼஹ்யதாம் ||
காஶ்யபேயாய நம:, ஸௌரப்⁴யை நம:, கர்பூர தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |
நீராஜனம்ʼ க்³ருʼஹாணேத³ம்ʼ கர்பூரை: கலிதம்ʼ மயா |
காமதே⁴னுஸமுத்³பூ⁴தே ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதே³ ||
ஹரயே நம:, மஹாலக்ஷ்ம்யை நம:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராய நம:, வ்ருʼஷபத்ன்யை நம:, வேதோ³க்த மந்த்ர புஷ்பம்ʼ ஸமர்பயாமி
யானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச |
தானி தானி வினஶ்யந்தி ப்ரத³க்ஷிணபதே³ பதே³ ||
ப்ரக்ருʼஷ்டபாபனாஶாய ப்ரக்ருʼஷ்டப²லஸித்³த⁴யே |
ப்ரத³க்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத³ க்ஷீரதா⁴ரிணி ||
ஜயந்த ஜனகோ தே³வ ஸஹஸ்ராக்ஷ: புரந்த³: |
புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம: ||
இந்த்³ராணீபதயே நம:, வ்ருʼஷபத்ன்யை நம:, அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி ||
²த்ர சாமராதி³ ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி ||
யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதி³ஷு |
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்தி ஹீனம் ʼ ஶசீபதே |
யத் பூஜிதம்ʼ மயா ப⁴க்த்யா பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ||
மயா க்ருʼதயா பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத்³ ப்³ரஹ்மார்பணமஸ்து |
உபாயன தா³னம் | (பலன் முழுக்க கிடைக்க பிராம்மணனுக்கு தக்ஷிணை)
இந்த்³ரஸ்வரூபஸ்ய ப்³ராஹ்மணஸ்ய இத³மாஸனம் | ஸகலாராத⁴னை: ஸ்வர்சிதம் |
ஹிரண்யக³ர்ப⁴ க³ர்ப⁴ஸ்த²ம்ʼ ஹேமபீ³ஜம்ʼ விபா⁴வஸோ: | அனந்த புண்ய ப²லத³ம் அத: ஶாந்திம்ʼ ப்ரயச்ச² மே ||
மயா க்ருʼதாயா: தே³வேந்த்³ர பூஜாயா: கோ³பூஜாயாஶ்ச ஸாத்³கு³ண்யார்த²ம்ʼ யத் கிஞ்சித் ஹிரண்யம்ʼ ஸத³க்ஷிணாகம்ʼ ஸதாம்பூ³லம்ʼ தே³வேந்த்³ர ப்ரீதிம்ʼ காமயமான: துப்⁴யமஹம்ʼ ஸம்ப்ரத³தே³ ந மம |