Pages

Friday, August 31, 2012

தினசரி பூஜை -11

 
தினசரி பூஜைக்கு இப்படி விரிவான சங்கல்பம் செய்வது கட்டாயம் இல்லயானாலும் செய்வது நல்லது. ஒன்று அது சுலபமாகும். இரண்டாவது இந்த பஞ்சாங்க தேவதைகள் அவர்களை நினைவு கூறுவதால் மகிழ்ச்சி அடைந்து அனுக்ரஹிப்பர். போனஸ்!

தினசரி பூஜைக்கு சங்கல்பத்தில் இதற்குப் பிறகு
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் யாவத் சக்தி த்யான ஆவாஹனாதி பூஜாம் கரிஷ்யே" என்று சொல்லிவிடலாம். 'ஈஸ்வர' என்கிற சப்தம் இறைவன் என்றுதான் பொதுப்படையாக குறிப்பிடுகிறதே ஒழிய சிவனை இல்லை. அதனால் இப்படி யாரும் சங்கல்பம் செய்யலாம். சில வைணவர்கள் நாராயண ப்ரீத்யர்த்தம் என்பதுண்டு. அதுவும் தவறில்லை. குறிப்பாக பூஜை யாருக்கு செய்கிறோமோ அந்த தேவதையின் பெயரைச்சொல்லியே கூட சங்கல்பம் செய்யலாம்.
விசேஷ பூஜைகள் செய்யும் நாட்களில்தான் 'வீர்ய விஜய ஆயுராரோக்கிய...' என்று விஸ்தாரமாக சங்கல்பம் போகும். சந்தோஷமடையும் இறைவன் தானே நமக்கு வேண்டியதை அருளுவான் இல்லையா? ஆகவே ... ப்ரீத்யர்த்தம் என்று சொல்வதே கூட போதுமானது.
சரி. சங்கல்பம் சொல்லி முடித்து மங்களாக்ஷதையை கீழே தட்டில் போட்டுவிட்டு. நீரை தொட்டுக்கொள்ளலாம்.
பூஜை செய்யும் இடத்தை ஈரத்துணியாலோ நீர் விட்டோ சுத்தம் செய்ய வேண்டும். அவ்விடத்தில் இரட்டை இழை கோலம் போட வேண்டும். சிம்பிள் சதுரம் வட்டம் போதுமானது. ஒற்றை இழையில் கோலம் போடுவதில்லை.
மேலே செய்யப்போவதை பட்டியல் இடலாம். தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
கலச பூஜை, ஆசன பூஜை, ஶங்க பூஜை, கண்ட பூஜை, ஆத்ம பூஜை, ப்ரதான பூஜை, உத்தேச த்யாகம், (நந்தி பூஜை.)
தயாரிப்புகள்: பஞ்ச பாத்திரம் - உத்தரணி; அதில் மடியாக நீர்; மங்களாக்ஷதை, சந்தனம் இப்போது அரைத்தது; பூக்கள்; ஊதுவத்தி அல்லது தூபக்காலில் தசாங்கம்; நெய் தீபம், நிவேதனம்,வெற்றிலை -பாக்கு, கற்பூரம், கற்பூர ஆரத்தி எடுக்கும் கரண்டி, ஸ்வர்ண புஷ்பம்;
பஞ்ச பாத்திரம் தாமிரத்தில் -அதாங்க காப்பர்!- இருக்கலாம். வெண்கலமும் சரி. வெள்ளியில் இருந்தால் சுத்தம் செய்வது எளிது என்பது தவிர வேறு விசேஷமில்லை. தங்கத்தில் வைத்துக்கொள்வது அவரவர் சௌகரியம்! இதெல்லாம் முன் கூட்டியே இருக்கிறதா என்று சோதிப்பது நல்லது. இல்லாவிட்டால் "அடியே! .... எங்கே?" ன்னு கேட்க, "அதான் அங்கேயே வெச்சிருக்கே, கண்ணு தெரியலே?" ன்னு கடிஞ்சுக்கிற பிரச்சினை எல்லாம் வராம இருக்கும். நிம்மதியா பூஜைக்கு உட்கார்ந்தவருக்கு கோபம் வரா மாதிரி நிலை வரக்கூடாது!
 
மடியாக நீர் கிடைப்பது அறிதாகி வருகிறது. ப்ரெபரன்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்கலாம். அப்புறம் அதில் எது கிடைக்கும் என்ற யதார்த்த நிலையை ஒட்டி பயன்படுத்தலாம்.
ஆறு, நதம், ஓடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு.

அறிவியல் படியே 200 மீட்டர் நீர் ஓடிவிட்டால் இயற்கையாக ஆக்ஸிடேஷனில் நீர் சுத்தமாகிவிடுகிறது. ஆகவே இதுவே மிகச்சிறப்பானது. ஆற்று நீர் கிடைக்காத பக்ஷத்தில் பட்டியலை பார்த்து கிடைக்கும் நீரை சேகரம் செய்து கொள்க. இது எல்லாமே இல்லை, ஓவர்ஹெட் டாங்க் தண்ணிதான் கிடைக்கும் என்பவர்கள்... ம்ம்ம் என்ன பண்ணுவது? குறைந்த பக்ஷம் அப்படி தண்ணீர் மோட்டார் மூலம் ஏற்றும்போது தனி லைனில் ப்ரெஷாக தண்ணீர் பிடிக்க முடியுமா பாருங்கள்

 மேல்நிலை தொட்டி அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? பழைய தண்ணீரையேத்தான் திருப்பி திருப்பி பயன்படுத்துகிறோம்! நீர் பழையதானால் அதில் பாக்டீரியா வளரும். நீர் மட்டம் குறையும் போது நீரை மீண்டும் ஏற்றும்போது அது டைல்யூட் ஆகும். அவ்வளவே. இருக்கும் பாக்டீரியா இன்னும் வளரும். தொட்டியை காலி செய்து காய விடும் வரையோ க்ளோரின் சேர்த்தாலோதான் இது பாக்டீரியா இல்லாமல் போகும். கிணறு மட்டும் என்ன வாழுதுன்னா...... அதன் பரப்பளவு அதிகம். கிணற்றின் மேல் மட்ட நீர் காற்றுக்கு எக்ஸ்போஸ் ஆகி சுத்தமாகும். இதைத்தான் நாம் எடுக்கிறோம். தொட்டி தண்ணீரோ கீழே இருப்பதுதான் குழாயில் வருகிறது!

அக்ஷதை, சந்தனம் குறித்து பார்த்துவிட்டோம். பூக்கள் முடிந்த வரை அப்போது பறித்ததாக இருக்க வேண்டும். வாசனையுள்ள பூக்களே அர்ச்சனை செய்ய ஏற்றவை
 
சமீபத்தில் ஒரு பெரியவருடன் வாக்கிங் போனேன். அவர் நடை பயிற்சியுடன் பூக்களை பறிப்பதையும் செய்கிறார்! வழியில் பல விஷயங்களை சொல்லிக்கொண்டு போனார்.....

Thursday, August 30, 2012

தினசரி பூஜை - 10



வருஷம் தெரியாமல் இருக்காது. …. வருஷ பஞ்சாங்கம் என்றே போட்டு இருப்பார்கள்.
இப்போது இங்கே போட்டுள்ள படத்தை பாருங்கள். நம்மில் பலருக்கும் பழக்கமான பாம்பு பஞ்சாங்கத்தில் இருந்து ஒரு பக்கம்.


மேலே முதல் வரியை பாருங்கள்.
நந்தன ௵ ஆவணி ௴ என்று இருக்கிறதா? இதற்கு பொருள் இது நந்தன வருஷம் ஆவணி மாதம். இந்த ஆவணி இப்போது நமக்கு வேண்டாம்.
 வருஷத்துக்கு கீழேயே அயனம் இருக்கிறது. தக்‌ஷிணாயனம்.  
அடுத்து ருது. அதற்கு அடுத்து சாந்த்ரமான மாதம் இருக்கிறது. அது வேண்டாம். நமக்கு சௌரமான மாதம் வேண்டும். சுலபமாக கண்டு பிடிக்க வலது பக்கம் பாருங்கள். ஒரு படம் போட்டு கீழே சிம்ம மூர்த்தி என்று எழுதி இருக்கிறது. ஆகவே இது சிம்ம மாதம். 

 இப்போது முக்கிய பகுதியை பார்க்கலாம். வலது பக்கம் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் கட்டம்.கருப்பு வட்டமான  அமாவாசை எங்கு இருக்கிறது என்று பாருங்கள். அதே போல் வெள்ளை வட்டம் குறிக்கும் பௌர்ணமியையும். நாம் பார்க்கும் நாளுக்கு அடுத்து வருவது அமாவாசை என்றால் இது க்ருஷ்ண பக்‌ஷம். அடுத்து வருவது பௌர்ணமி என்றால் இது சுக்ல பக்‌ஷம். ஆமாம், பௌர்ணமி சுக்ல பக்‌ஷமா அல்லது க்ருஷ்ண பக்‌ஷமா? விடை இது வரை எழுதின பதிவுகளிலேயே இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள்!

திதி அடுத்து. பிர என்பது பிரதமை, துவி என்பது துவிதியை; திரு திருதியை; சதுர் சதுர்த்தி. சதுற் என்பது சதுற்தசி, கவனம். இதே போல மற்றவையும்.

துவி, திரு போன்றவற்றுக்கு அடுத்து ஏதோ எண்கள் இருக்கின்றன. இது என்ன என்று விழிக்க வேண்டாம். இந்த திதி  உதயம் முதல் எத்தனை நாழிகை இருக்கிறது என்று அது குறிக்கிறது. ஒரு நாளுக்கு 60 நாழிகை. அதனால் ஒரு நாழிகை 24 நிமிடம், கணக்கு சரியா சொல்லறேனா? ரொம்ப கஷ்டப்படாமல் 15 நாழிகை பகல் 12 மணி, 30 நாழிகை மாலை 6 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால்,  நாம் சங்கல்பம் செய்யும் நேரம் அந்த திதி இருக்கிறதா என்று கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம்.

 அடுத்து நக்‌ஷத்திரம். இதுவும் சுருக்கமாகவே கொடுத்து இருக்கிறது. பட்டியலை பார்த்து எது என்று தெரிந்து கொண்டு அதற்கான சங்கல்ப நக்‌ஷத்திரத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் கஷ்டமாக தோன்றினாலும் நாளடைவில் பழகிவிடும். இந்த நக்‌ஷத்திரமும் எது வரை இருக்கிறது என்று நாழிகை கணக்கு கொடுத்திருக்கிறது. அடுத்து யோகமும் அது எது வரை என்றும் கொடுத்திருக்கிறது. அடுத்ததாக கரணம். ஒரு திதிக்கு 2 கரணங்கள். ஆகவே திதி முடியும் போது கரணமும் முடிந்து அடுத்த கரணம் துவங்கும். ஒரே திதியில் முன் பகுதி ஒரு கரணமும் பின் பகுதி ஒரு கரணமும் இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டு பிடித்து விடலாம். இந்த சிரமப்படாமல் சோம்பேறித்தனம் மேலோங்கித்தான் யோகம் கரணம் சொல்லும் வழக்கம் விட்டுப்போயிற்று.

Wednesday, August 29, 2012

தினசரி பூஜை - 9


...நாமஸம்ʼவத்ஸரே ...அயனே ...ருʼதௌ ...மாஸே ஸு²க்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²திதௌ² ...வாஸரயுக்தாயாம்ʼ ...நக்ஷத்ரயுக்தாயாம்ʼ ...யோக³...கரணயுக்தாயாம் ஏவங்கு³ணவிஸே²ஷணவிஸி²ஷ்டாயாம் அஸ்யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²திதௌ²...

நாம ஸம்வத்ஸரே என்னும் இடத்தில் அந்தந்த வருஷத்தின் பெயரை சொல்ல வேண்டும்.
வருடம், அயனம், மாதம், பக்‌ஷம், திதி, நக்‌ஷத்திரம், வாரம், யோகம், கரணம் ஆகியவற்றை சரியாக முழு பட்டியலாக பார்க்க இங்கே செல்லவும்: http://tinyurl.com/rmdl3
அயனே என்னுமிடத்தில் தக்ஷிணாயனே அல்லது உத்தராயனே என்று தகுந்தபடி சொல்ல வேண்டும்.
ருதுக்கள் ஆறு. சித்திரை, வைகாசி - வசந்த ருது; ஆனி ஆடி - க்ரீஷ்ம ருது; ஆவணி புரட்டாசி - வர்ஷ ருது; ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது; மார்கழி தை - ஹேமந்த ருது; மாசி பங்குனி- சிசிர ருது.
மாதங்கள் சௌரமான மாதங்களே தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது. அவை மேஷம் முதல் மீனம் வரை.
தெலுங்கு மாதங்கள் என்று சொல்லப்படும் சாந்த்ரமான மாதங்கள் சைத்ர முதல் பால்குண வரை.
வளர் பிறை சுக்ல பக்ஷம்; தேய்பிறை க்ருஷ்ண பக்ஷம்

சங்கல்பத்தில் சொல்லும் கிழமைகள் இப்படி: திங்கள் = சோம வாஸரம்; செவ்வாய் = பௌம வாஸரம்; புதன் = ஸௌம்ய வாஸரம்; வியாழன் = குரு வாஸரம்; வெள்ளி = ப்ருகு வாஸரம்; சனி = ஸ்திர வாஸரம்; ஞாயிறு = பானு வாஸரம்.
அடுத்து நக்‌ஷத்திரங்கள் அஸ்2வினி முதல் ரேவதி வரை.
யோகங்கள் 27. கரணங்கள் 11.
பொதுவாக பலரும் சுப யோக சுப கரண என்று சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள். நல்ல யோகம் நல்ல கரணம் என்பது போல் தொனித்தாலும் பிரச்சினை ஒன்று இருக்கிறது. சுப யோகம் என்றே ஒரு யோகம் இருக்கிறது. அப்போது எல்லா நாளும் சுப யோகம் இருக்க முடியுமா?
சிரத்தை உள்ளவர் சரியான யோகம், கரணத்தை சொல்ல வேண்டும். அதற்கு பஞ்சாங்கம் பார்க்க தெரிய வேண்டும்.
எப்படி எனில்…….

Tuesday, August 28, 2012

தினசரி பூஜை - 8


மங்களாக்ஷதை எடுத்துக்கொண்டு நெற்றியில் குட்டிக்கொண்டி சுக்லாம்பரதரம் என துவங்கும் ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
 பின் ப்ராணாயாமம்.
பின் இடது கையை வலது துடை மேல் வைத்துக்கொண்டு வலது கையை அதன் மேலே வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்ய வேண்டும்.
மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீபரமேஸ்²வரப்ரீத்யர்த²ம்ʼ, அத்³ய ப்³ரஹ்மண: த்³விதீயபரார்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்ʼ ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே ...நாம ஸம்ʼவத்ஸரே ...அயனே ...ருʼதௌ ...மாஸே ஸு²க்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²திதௌ² ...வாஸரயுக்தாயாம்ʼ ...நக்ஷத்ரயுக்தாயாம்ʼ ...யோக³...கரணயுக்தாயாம் ஏவங்கு³ண விஸே²ஷண விஸி²ஷ்டாயாம் அஸ்யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²திதௌ² என்ற ரீதியில் இது போகும்.

இதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
சங்கல்பத்தில் எந்த கால கட்டத்தில், எந்த இடத்தில் இருந்து கொண்டு எதற்காக பூஜை செய்கிறோம் என்று தெளிவாக நினைவுறுத்திக் கொள்கிறோம்.
மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீபரமேஸ்²வரப்ரீத்யர்த²ம்ʼ= என்னால் அடையப்பட்ட எல்லா பாபங்களும் அழியவும், பரமேஶ்வரனை திருப்தி செய்யும் பொருட்டும்;
அத்³ய ப்³ரஹ்மண: த்³விதீயபரார்தே :
இப்போதுள்ள ப்ரம்ஹாவின் இரண்டாம் பரா வில்:
அதாவது, அனைத்துலகையும் ஸ்ருஷ்டித்து இரண்டு பரார்த்தகாலம் ஜீவிப்பவர் ப்ரஹ்மா. (நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் 4320000 வருடங்கள், ஆயிரம் சதுர்யுகம் பகலும், ஆயிரம் சதுர்யுகம் இரவும் கொண்டது ப்ரஹ்மாவின் ஒரு நாள், அத்தகைய 360 நாட்கள் அடங்கியது அவரது ஒரு வருடம், அத்தகைய நூறுவருடம் அவரது ஆயுட்காலம், இதுவே பரம் எனப்படும், இதில் பாதி பரார்த்தம், ஆக அவர் இரண்டு பரார்த்தம் ஜீவிக்கிறார்.) அவரது இரண்டாவது பரார்த்தத்தில்...

ஸ்வேத வராஹ கல்பே...
இப்போதுள்ள கல்பம் ஸ்வேத வராஹ கல்பம். மற்றது எது? க்ருஷ்ண வராஹ கல்பம்.
வைவஸ்வதமன்வந்தரே,.....
இப்போது ஆட்சியில் உள்ள மனு வைவஸ்வத மனு. ஸ்வாயம்புவர் ஸ்வாரோசிஷர் உத்தமர் தாமஸர் ரைவதர் சாக்ஷுஷர் என்ற ஆறு மனுக்களின் காலம் தாண்டியபின் ஏழாவதான வைவஸ்வத மனுவின் காலத்தில் இருக்கிறோம்.

அஷ்டாவிம்ʼ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³.....
இருபத்தெட்டாவது கலியுகத்தின் முதல் கால்-பகுதியில் இருக்கிறோம்.

ஜம்பூ த்வீபே....
ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் தீவில் இருக்கிறோம். மற்றவை: ப்லக்ஷம், ஶாகம், ஶால்மலி, குஶம், க்ரௌஞ்சம், புஷ்கரம் என்ற தீவுகள்.

பாரத வர்ஷே...
பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம் என்பன ஒன்பது வர்ஷங்கள் (தீவுப்பகுதிகள்). [இவை முறையே, இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்று சிலர் கருதுகின்றனர்]
பரதக்கண்டே மேரோஹோ,....
பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.
அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்ʼ ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே......
இப்போது புழக்கத்தில் இருக்கும் ப்ரபவ முதலிய அறுபது வருடங்களின் இடையில்....


 

Monday, August 27, 2012

தினசரி பூஜை - 7


பஞ்சாயதன பூஜை.

இது கல்பத்தில் இருந்து எடுத்து எழுதப்படுவதால் ஸ்லோகங்கள் முதலியன சம்ஸ்க்ருத்ததிலேயே இருக்கும். தமிழ் அபிமானிகள் மன்னிக்க!

பஞ்சாக்‌ஷரீ உபதேசம் பெற்றவர் மட்டுமே இதை செய்யலாம். ஆகவே அப்படி பூஜையை பல காலம் செய்து கொண்டிருப்பவர் யாரேனும் ஒருவரை அணுகி பஞ்சாக்‌ஷரீ உபதேசம் செய்து பூஜையை துவக்கி வைக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். சும்மா தானே ஆரம்பிப்பதை விட நல்லது. மந்திர சித்தி ஆகலைன்னாலும் கொஞ்சமாவது சக்தி ஏறி இருக்கணும். மந்திரம் இன்னதுன்னு தெரியும், உபதேசம் செய்யறேன் என்கிறது சரி வராது. மின்சாரம் உயர் அழுத்தத்தில் இருந்துதான் தாழ் அழுத்தத்துக்கு பாய முடியும்.அது போல மந்திர ஜபம் அதிகம் செய்தவர் உபதேசம் செய்தால் நமக்கும் மந்திர சித்தி சீக்கிரம் கிடைக்கும்.

சிவ பஞ்சாக்‌ஷரீ அல்லது சக்தி  பஞ்சாக்‌ஷரீ வழக்கத்தில் அதிகம் இருக்கிறது. கிடைக்கும் நேரத்துக்கு தகுந்த எண்ணிக்கையில் செய்யலாம் ஒவ்வொரு நாளும் பூஜை ஆரம்பிக்கும் முன் இதை ஜபம் செய்துவிட்டுத்தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்

முன்னே கொடுத்த பொதுவான முறைகளுடன் இன்னும் சிலது இந்த பூஜையில் சேர்ந்து வரும். அதனாலத்தான் இதுக்குன்னு தனியா எழுத வேண்டி இருக்கு.

முன்னால் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: இப்படி சீரியஸான பூஜைகள் செய்யும்போது ஸ்வாமியை விளக்கில்லாமல் வெளியே வைக்கக்கூடாது. ஒரு பெட்டி இதற்காக விசேஷமாக செய்து அதிலேயே வைக்க வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு வெளியே எடுத்து பூஜை முடிந்தபின் திருப்பி பெட்டியில் வைக்க வேண்டும். வசதியுள்ள பலர் தனியாக மணிகளுடன் பெட்டி செய்து வைத்துக்கொள்கிறார்கள். முன் காலத்தில் ஒரு ஓலைப்பெட்டியில் வைப்பர். ஓலைப்பெட்டியோ, மணிகள் வைத்த தேக்கு மர பெட்டியோ ஸ்வாமி ஜம்மென்று இருப்பார். அவர் பார்ப்பது நம் பக்தி, சிரத்தையைத்தான்.

ஸ்வாமியை வைக்கும் இடத்தை நீர் விட்டு/ஈரத்துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
முதலில் ஆசமனம். தலையில் குட்டிக்கொண்டு விநாயகரை நினைக்க வேண்டும். ஸ்லோகம்: சுக்லாம்பரதரம்….