Pages

Showing posts with label தினசரி பூஜை. Show all posts
Showing posts with label தினசரி பூஜை. Show all posts

Tuesday, April 30, 2013

ப்ரார்த்தனை


பூஜையின் முடிவில் ப்ரார்த்தனை செய்வது உண்டு அல்லவா? பலருக்கும் பல வேண்டுதல்கள் இருக்கும். அவற்றை வேண்டும் எனக்கேட்பதில் தவறே இல்லை. 

 இருந்தாலும் பல வருஷங்களாக என்னால் இதை செய்யவே முடியாமல் இருக்கிறது. ஓரிரு முறைகள் செய்திருப்பேன்; அவ்வளவே.
நமக்கு சரியாக வேண்டிக்கொள்ளத்தெரியாதுன்னு நம் பெரியோர்களுக்குத்தெரியும். ஆகவே அவர்களே எழுதி வைத்து விட்டார்கள். நான் பூஜை முடித்து அதன் அங்கமாக சொல்வது இதுவே.

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வர
அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ரிபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

என்ன பொருள்?

நான் உன்னையே சரணடைகிறேண். உன்னைத்தவிர வேறு யாரையும் இல்லை. ஆகவே மஹேஶ்வரா, கருணை கொண்டு என்னை காப்பாற்றுவாய்.

உன்னிடம் அப்படி என்ன கேட்கிறேன்? 
 
பிறந்தவர் எல்லாரும் ஏதோ ஒரு நாள் இறந்தே போக வேண்டும். அதை விட இயற்கையானது என்ன இருக்கிறது? ஆனால் எப்படி இறந்து போக வேண்டும் என்று கேட்க முடியும் இல்லையா? நோய்ப்பட்டு, இழுத்து பிடித்துக்கொண்டு, தானும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்தி, சேமிப்பு எல்லாவற்றையும் கரைத்து, தலையெடுத்து வரும் குழந்தைகளின் கனவுகளை சிதைக்கும் படி அவர்களுக்கு செலவு வைத்துக்கொண்டா போக வேணும்?? வேண்டாம், வேண்டாம். இன்றைக்கு படுத்தேன். நாளை காலை எழுந்திருக்கவில்லை என்பது போல போய் சேரவேணும். ஆயாசம் இல்லாமல்.

சரி, அந்த நாள் வரும் வரை? செல்வத்தில் திளைக்க வேண்டும் என்றா கேட்கிறேன்? அது உன்னை மறக்க வைத்து விடுமே? வேண்டாம் வேண்டாம்! அப்படிப்பட்ட செல்வமே வேண்டாம். அதற்கு என்று வறுமையில் கஷ்டப்பட வைத்துவிடாதே! வறுமை இல்லை என்ற நிலையில் வைத்துவிடு போதும்! என் ஜீவனம் வறுமையில்லாமல் இருக்கட்டும்.

அத்தகைய இந்த வாழ்வு எதற்கு? உன்னிடம் சஞ்சலப்படாமல் பக்தி வைக்கத்தான்!
பலரையும் பார்க்கிறேன். இன்றைக்கும் இந்த சாமி பின்னால் ஓடுகிறார்கள். நாளை இன்னொரு சாமி இன்னும் வரப்ப்ரசாதி என்று யாரும் சொன்னால் அங்கே ஓடுகிறார்கள். கோவில் கோவிலாக சுற்றுகிறார்கள். அப்படியும் த்ருப்தி வருவதில்லை! இன்னும் சிலர் ஏதேனும் வேண்டிக்கொள்கிறார்கள். அது நடக்கவில்லை என்றால் சலிப்பு வந்து விடுகிறது. தெய்வம் இருக்கிறதா என்றே கூட சந்தேகம் வருகிறது! இப்படி எல்லாம் சலித்துக்கொண்டு இராமல் நிலையான பக்தி வேண்டும். கருணை கூர்ந்து அதையும் அருள்வாயாக!

 

Thursday, September 13, 2012

எல்லோருக்கும் பொதுவான பூஜை முறை






எல்லோருக்கும் பொதுவான பூஜை :

முன்னே பஞ்சாயதன  பூஜையை பார்த்தோம். இப்போது எல்லா தெய்வங்களுக்கும் யாரும் செய்யக்கூடிய பொதுவான பூஜை முறையை பார்க்கலாம்.

1.ஆசமனம். கேசவாய நமஹ, நாராயணாய நமஹ, மாதவாய நமஹ என்று மும்முறை நீரை உள்ளங்கையில் உளுந்து முழுகும் அளவு எடுத்து அருந்தவும்.
மங்களாக்‌ஷதை + நீர் எடுத்துக்கொண்டு…

2.சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதக்‌ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம் …………. ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும். உ-ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ப்ரஸாத3 சித்தயர்த்த2ம்) இஷ்ட காம்யார்த்த2 சித்யர்த்த2ம் …………. ஆராதனம் கரிஷ்யே. (முன்போல உ-ம்: ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ஆராதனம் கரிஷ்யே.) யாவத் சக்தி த்3யான ஆவாஹனாதி ஷோடோபசார பூஜாம் கரிஷ்யே.
அக்‌ஷதை நீரை கீழே விட்டுவிடவும்.

3.த்3யான ஆவாஹனம்:
ஆக3ச்ச2 தே3வ தே3வேஶ மர்த்யலோக ஹிதேச்ச2யா
பூஜயாமி விதா4னேன ப்ரஸான்னஸுமுகோ2 ப4வ 

4.ஆசனம்:
பாதா3ஸனம் குரு ப்ராஞ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம்
பூ4ஷிதம் விவிதை4ர் ரத்னை: குரு பாதுகாஸனம்
ஆஸனம் சமர்ப்பயாமி

5.பாத்யம்
க3ங்காதிப்4ய: ஸுதீர்தே2ப்4யோ மயா ப்ரார்த்த2னயா ஹ்ருதம்
தோயமே தத் ஸுக2 ஸ்பர்சம் பாத்3யார்த்த2ம் ப்ரதி க்ருஹ்யதாம்.

6.அர்க்யம்
க3ந்தோ4த3கேன புஷ்பேண சந்த3னேன ஸுக3ந்தி4னா
அர்க்4யம் க்ருஹான தே3வேச ப4க்திம் மே அசலாம் குரு

7.ஆசமனம்:
கர்பூரோஶீர ஸுரபி4 சீதலம் விமலம் ஜலம்
க3ங்கா3யாஸ்து ஸமானீதம் க்ருஹாண ஆசமனீயகம்

8.ஸ்நாநம்
மந்தா3கின்யாஸ் ஸமானீதாம் ஹேமாம்போ4ருஹ வாஸிதம்
ஸ்னானாய தே மயா ப4க்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4
ஸ்நாநம் சமர்ப்பயாமி
இங்கே அபிஷேகம் செய்யலாம். சந்தன நீர், பால், தேன், தயிர், பழ ரசங்கள், பஞ்சகவ்யம் முதலானவை
படத்தை பூஜித்தால் இவற்றை ப்ரோக்‌ஷணம் செய்தால் போதுமானது.

9.ஆடை அணிவித்தல்:
வஸ்த்ரம் ஸூக்‌ஷ்மம் துகூலம் ச தேவானாமபி துர்லப4ம்
க்ருஹாண த்வம் ப்ரபோ4 தேவ ப்ரஸன்னோ ப4வ ஸர்வதா3
வஸ்த்ரம் சமர்ப்பயாமி

10.பூணூல் அணிவித்தல்
யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரம்ஹணா நிர்மிதம் புரா
ஆயுஷ்யம் தே3வ வர்சஸ்யம் உபவீதம் க்3ருஹாண போ4
யக்ஞோபவீதம் சமர்ப்பயாமி

11. சந்தனம்  இடுதல்:
ஶ்ரீக2ண்ட4ம் சந்தனம் தி3வ்யம் க3ந்தா4ட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரச்ரேஷ்ட மத்3த4த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
கந்தாந்தாரயாமி

12. அக்‌ஷதை தூவுதல்:
அக்‌ஷதான் சந்த்ரவர்ணாபா4ன் ஶாலேயான் தண்டு3லான் ஶுபான்
அலங்காரார்த்த2மானீதான் தா4ரயஸ்ய மஹா ப்ரபோ4
அக்‌ஷதை தூவ வேன்டும்.

13. அர்ச்சனம்:
பின் வசதி போல அர்ச்சனை. ஒவ்வொரு மூர்த்திக்கும் இருக்கும் அஷ்டோத்திர ஶத (அல்லது ஸஹஸ்ர) நாமாக்களை சொல்லி அர்ச்சனை. வசதி நேரம் இல்லாதவர் அந்தந்த மூர்த்தியின் பெயரையே சொல்லி 8 முறை அர்ச்சிக்கலாம்.
14. தூபம் காட்டுதல்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

15. நெய் தீபம் காட்டுதல்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்

16. நிவேதனம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்

17. வெற்றிலை பாக்கு சமர்ப்பித்தல்:
பூகீ3 ப2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம் ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி

18.கர்ப்பூர ஆரதி:
 ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம்
ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர

19. மந்தர புஷ்பம் :
ப2லேன ப2லிதம் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம்
தஸ்மாத்ப2ல ப்ரதானேன ஸப2லாச்ச மனோரதா:
மந்தர புஷ்ப ப்ரார்த்தனை செய்யவும்.

20. ப்ரதக்‌ஷிண நமஸ்காரங்கள் :
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருʼதானி ச|
தானி தானி விநஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³
என ப்ரதக்‌ஷிண நமஸ்காரங்கள் செய்க.

21. குறைபாடுகளுக்கு மன்னிப்பு வேண்டுதல்:
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஶுரேச்வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம் மயா
தாஸோயம் இதி மாம் மத்வா க்‌ஷமஸ்வ புருஷோத்தம

22. உபசாரங்கள்:
சத்ரம் (குடை) தாரயாமி, சாமரம் வீஜயாமி, ந்ருத்யம் நர்தயாமி, வாத்யம் கோஷயாமி, ஆந்தோளிகாம் ஆரோஹயாமி; ஸமஸ்த பக்த்யுபசார, ராஜோபசார, சக்த்யுபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
அனேன பகவான் … ஸுப்ரசன்னோ ப4வது
பகவத் ப்ரசாத சித்திரஸ்து..
என சொல்லி அக்‌ஷதை நீர் சமர்பிக்கவும்.
சுபம்




 

Wednesday, September 12, 2012

தினசரி பூஜை - 18



16 உபசாரங்கள் ஏற்கெனெவே முடிந்துவிட்டன. விசேஷ பூஜைகளை பொருத்து இவ்விடத்தில் சத்ரம் (குடை) சாமரம் (விசிறி), கீத (சங்கீதம்), ந்ருத்ய (நாட்டியம்), ஆந்தோளிகாண் (ஊஞ்சலில் ஏற்றி ஆட்டுவது), கஜ, ரதாரோஹணம் (யானை, ரதம் இவற்றில் ஏற்றி வலம் வரச்செய்வது) என்று பலதும் உண்டு. வீட்டு பூஜையில் இதுக்கெல்லாம் எங்கே போக? ! ஆகவே 
ஸமஸ்த ராஜோபசாரான் சமர்ப்பயாமி
 என்று சொல்லி பூக்கள் மங்களாக்ஷதை சமர்பித்து விடலாம்.
பூஜையின் பலனை உத்தேசத் த்யாகம் செய்துவிட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம்.

யத் ஸ்ம்ருத்யா நாம ஜப பூஜா கிரியாதிஷு
ஸர்வம் ஸம்பூர்ணதாம் யாதி சத்யம் வந்தேதமச்யுதம்
{யாரை நினைப்பதால் செய்த ஜபம், பூஜை ஆகியன நிச்சயமாக பூரணமாகுமோ அந்த அச்சுதனை நினைவு கூறுவோம்}

என சொல்லி மங்களாக்ஷதை சிறிதை நீர் ஊற்றி கீழே விடவேண்டும்.
இதனால் பூஜையின் போது விட்டுப்போன செயல்கள், கவனமின்மை, பூஜை திரவியங்களின் குறைபாடு ஆகியன நீங்கி பூரணமாகும்.
 
சங்கை வைத்திருந்தால் அதில் நீர் நிரப்பி பூஜா பலனை க்ரஹிக்க எல்லா ஸ்வாமியையும் மும்முறை சுற்றி தலையில் நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.

ஶங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் ஶங்க்ரயோபரி
அங்கலக்னம் மனுஷ்யானாம் ப்ரம்ஹ ஹத்யாயுதம் தஹேத்
வைணவர்கள் சாளக்ராம தீர்த்தத்தை இதே போல மேலே தெளித்துக்கொள்வதுண்டு.
ஸாளக்ராம சிலாவாரி
பாபஹாரி சரீரிணாம்
ஆஜன்ம க்ருத பாபானாம்
ப்ராயச்சித்தம் தினே தினே

பஞ்சாயதன பூஜையில் ஆவாஹனம் ஆரம்பிக்கும் முன்

ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கர
ஆகச்சத்வம் மஹாதேவ ஸர்வாவரணை ஸஹ

என வரவேற்பதுண்டு, பூஜை முடிந்த இந்த தருணத்தில்
ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கர
பிரவிஶத்வம் மஹாதேவ ஸர்வைராவணை: ஸஹ

{ஹ்ருத தாமரையின் மத்தியில் உமையுடன் வீற்றிருக்கும் சங்கரா, நீ எல்லா ஆவரணங்களுடன் மீண்டு செல்வாயாக.}
என சொல்லி நிர்யாண முத்திரையால் பூக்களை எடுத்து நுகர்ந்து, ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டு கீழே போடவும். {முத்திரை தெரியாவிட்டால் விட்டுவிடலாம்}

சிவ பஞ்சாயதனம் ஆனால் அபிஷேக தீர்த்தத்தை கொஞ்சம் உத்தரணியில் எடுத்து நந்திக்கும் அபிஷேகம் செய்து, ஶிவனுக்கு இட்ட சந்தனத்திலேயே கொஞ்சம் எடுத்து இவருக்கும் இட்டு, ஶிவனுக்கு சாற்றிய மலர்களில் ஒன்றையாவது இவருக்கு எடுத்து சாற்றுவார்கள். அவருக்கு நிவேதனம் செய்ததில் கொஞ்சத்தை இவருக்கும் நிவேதனம் செய்வர்.

ஸ்லோகம்:
பாண ராவண சண்டேஶ நந்தி ப்ருங்கி ரிடாதய
மஹாதேவ ப்ரஸாதோயம் ஸர்வே க்ருண்ஹந்து ஶாம்பவா:
என்று சைவர்களும்,

பலிர் விபீஷண: ஶம்பு: கபலோ நாரதேர்ஜுன:
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா:
என்று வைணவர்களும் சொல்வர்.

வேத மந்திரம் : ஈசான ஸர்வ....
என்று சொல்லி நந்தியின் பின் பாகத்தை தொட வேண்டும்.

நந்திக்கு நிவேதனம் செய்ததை அப்புறம் காகத்துக்கு போட்டு அந்த கிண்ணத்தை கழுவி ஈசான திசையில் ஊற்றுவர்.

அபிஷேக நீரை மந்திரம் சொல்லி பிறருக்கும் கொடுத்து தானும் அருந்தலாம்.

அகால ம்ருத்யு ஹரணம்
ஸர்வ வ்யாதி நிவாரணம்
ஸமஸ்த பாப க்ஷயகரம்
ஶிவ / விஷ்ணு பாதோதகம் சுபம்

அனயா பூஜயா ஸபரிவார ஶாம்பபரமேஶ்வர / நாராயண ப்ரீயதாம் என்று சிறிது நீரை கீழே விடலாம்.
இத்துடன் பூஜை முடிகிறது.
 
அடுத்த பதிவில் எல்லோரும் எந்த தெய்வத்துக்கும் பூஜை செய்ய பொதுவான முறை, ஸ்லோகங்கள் வரும்!
ஶுபம்!

Tuesday, September 11, 2012

தினசரி பூஜை 17

 

ரைட் , அர்ச்சனை முடிந்தது. அடுத்து தூபம். தசாங்கத்தை தணலில் தூவி புகை போடுவது நல்லது. தணலுக்கு இந்த காலத்தில் எங்கே போவது? விசேஷ பூஜைக்கே ஒரு துண்டு கரியை காஸ் அடுப்பில் வத்து தணலாக்கித்தான் கொண்டு வருகிறார்கள்! அதனால ஊதுவத்திதான் புழக்கத்தில் இருக்கிறது.
மந்திரம்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

தீபம் என்னது? எப்பவுமே அது ஏத்திதானே இருக்கும்ன்னா, ஆமாம், தீபம் ஒன்று எரியாமல் ஸ்வாமியை வெளியே எடுப்பதில்லை. ஆனாலும் இங்கே சொல்வது நெய் தீபம். சிலர் ஒரு டப்பாவில் நெய் ஊற்றி அதில் சின்ன திரிகளை போட்டு ஊற வைப்பார்கள். தேவையான போது அதில் ஒன்றை எடுத்து ஏற்றிவிட்டால் சிறிது நேரம் எரிந்து அணைந்துவிடும்.
மந்திரம்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்

மங்கள் தீபம் தர்சயாமி

அடுத்து நிவேதனம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடாதே என்பது சாஸ்திரம். நாம் உண்ணப்போவதையே நிவேதனம் செய்யலாம். ஆனால் உப்பு போட்டதை பொதுவாக நிவேதனம் செய்வதில்லை. அன்னத்துடன் பருப்பு போட்டாலும் அதை உப்பு போடாமலே வைத்து பின்னால் சாப்பாட்டுக்கு முன் உப்பு போட்டுக்கொள்வார்கள்.
விஷயம் தெரியாதவர்கள் "இவ்வளோ நாளா பூஜை செய்யறியே, ஒரு நாளாவது ஒரு பருக்கையாவது உங்க சாமி சாப்டாரா" என்று கிண்டல் செய்கிறார்கள். நிவேதனம் என்பது அறிவிப்பது, காட்டுவது. தேவதைகளுக்கு நம் போல் உண்ணத்தேவையில்லை. பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள். மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள். இதற்காகவே நிவேதனம்.

மந்திரம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்

வேத மந்திரம்: மதுவாதா ருதாயதே....

..... சால்யன்னம் நிவேதயாமி.

அடுத்து தாம்பூலம் சமர்பிப்பது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. சும்மா அக்கறையில்லாமல் வைக்கக்கூடாது. நாம் போட்டுக்கொள்வதானால் எப்படி அது இருக்குமோ அப்படி இருக்க வேண்டும்.

மந்திரம்:

பூகீ3 ப2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம் ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி

அடுத்து கர்ப்பூர ஹாரத்தி - மும்முறை சுற்றி, கண்களில் ஒத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
மந்திரம்:

 ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம்
ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர

வேத மந்திரம்:
ஸோமோ வா ஏதஸ்ய....

அடுத்து ஸ்தோத்திரங்கள்:

நம ஶிவாப்4யாம் நமயௌவனாப்4யாம்
பரஸ்பராஶ்லிஷ்ட வபுர்த4ராப்4யாம்
நாகேந்த3ர கன்யா வ்ருஷகேதனாப்4யாம்
நமோ நமஶ் ஶங்கர பார்வதீப்4யாம்

ஶாந்தாஹாரம் பு4ஜக ஶயனம் பத்மநாப4ம் ஸுரேஶம்
விஶ்வாஹாரம் க3க3ன சது3ர்ஷம் மேக4 வர்ணம் சுபா4ங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி3 ஹ்ருத்த்4யான கம்யம்
வந்தே3 விஷ்ணும் ப4வப4யஹரம் ஸர்வ லோகைக நாத2ம்

ஸர்வமங்க³ல மாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே
ஶரண்யே த்ரயம்ப³கே கௌ³ரீ நாராயணீ நமோஸ்துதே

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வர
அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ரிபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

{ஹே ஶம்போ! இறக்கும் போது கஷ்டமில்லாத இறப்பும், வாழும் போது வறுமை இல்லாத வாழ்வும் உன்னிடம் எப்போதும் சஞ்சலமில்லாத பக்தியும் அருள்வாய்.}

இப்படி ஸ்லோகங்களை சொல்லி , ஸ்வர்ண புஷ்பம் சாற்றி, மந்த்ர புஷ்பம் தெரிந்தால் சொல்லி பிரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும்.

பூஜை அறை அனுமதிக்குமானால் வலமாக சுற்றி வந்து (ப்ரதக்ஷிணம்) நமஸ்கரிக்க வேண்டும். மும்முறையோ மேலோ.

ஸ்லோகம்:
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருʼதானி ச|
தானி தானி விநஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³

{பிறப்பு முதல் எந்தெந்த பாபங்களை செய்தோமோ அவை அடி அடியாக வலம் வரும்போது விலகுகின்றன.}