Pages

Thursday, May 31, 2018

பறவையின் கீதம் - 8


ஒரு ஞானிக்கு எறும்பு பாஷை தெரிந்து இருந்தது. பெரிய அறிஞர் போல தோற்றமளித்த ஒரு எறும்பை அணுகி கேட்டார்: கடவுள் எப்படி இருப்பார்?
எங்களைப்போலத்தான்! ஆனா எங்களுக்கு ஒரு கொடுக்குதானே இருக்கு? அவருக்கு ரெண்டு இருக்கும்.
! நீங்க சொர்க்கத்துக்கு போவீங்களா? அங்கே எப்படி இருப்பீங்க?
போவோமே? அங்கே எங்களுக்கும் ரெண்டு கொடுக்கு இருக்கும். ஆனா சின்னதா!
நீங்க என்ன செய்யறீங்க?
நா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கேன்.
எதப்பத்தி?
கடவுளோட ரெண்டாவது கொடுக்கு எங்கே இருக்கும்ன்னு!


Wednesday, May 30, 2018

பறவையின் கீதம் - 7ஞானி சொன்னார், “இறைவனை யாரும் உள்ளபடி அறிய முடியாது. அவன் இப்படி இருப்பான், இப்படி செய்வான் என்று யாரும் சொல்ல முடியாது. உண்மையில் அவனைப்பற்றி யாரும் எதுவும் சொன்னால் அதில் உண்மை குறைவாகவே இருக்கும்!”
கேட்டவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்!
"அப்படியானால் ஏன் கடவுளைப்பற்றி பேசுகிறீர்கள்?”
ஞானி கேட்டார், “ பறவை ஏன் பாடுகிறது?”

ஏன் பாடுகிறது? ஏனென்றால் அது பாட ஒரு பாடல் இருக்கிறது.
அறிஞரின் சொற்களை புரிந்து கொள்ள வேண்டும். மாஸ்டரின் சொற்கள் புரிந்து கொள்வதற்கு அல்ல. அவற்றை கேட்டுக்கொள்ள வேண்டும். மரங்களின் ஊடே ஒலிக்கும் காற்று போல... நதியின் இரைச்சலைப்போல... பறவையின் பாடலை கேட்பது போல. அவை இதயத்தின் உள்ளே எதையோ நிரடி வெளிக்கொண்டு வரும்.... அறிவுக்கு அப்பாற்பட்ட எதையோ!

Tuesday, May 29, 2018

பறவையின் கீதம் - 6

முல்லா தன் கழுதை மீது ஏறி நகரத்தெருக்களில் இங்கும் அங்கும் 'பறந்து' கொண்டிருந்ததைக்கண்டு நகர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முல்லா இவ்ளோ வேகமா ஏன் எதுக்கு போயிட்டுருக்கீங்க?”
நான் என் கழுதையை தேடிக்கிட்டு இருக்கேன்!”

ஜென் மாஸ்டர் ரின்சாய் ஒரு முறை தன் உடலை தேடிக்கொண்டு இருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு இது பெரிய தமாஷ் ஆக இருந்தது.
கடவுளை தேடுகிறேன் என்கிறவர்கள் கூட இருக்கிறார்கள்!

Monday, May 28, 2018

பறவையின் கீதம் - 5

முல்லா தன் கழுதை மீது ஏறி நகரத்தெருக்களில் இங்கும் அங்கும் 'பறந்து' கொண்டிருந்ததைக்கண்டு நகர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முல்லா இவ்ளோ வேகமா ஏன் எதுக்கு போயிட்டுருக்கீங்க?”
நான் என் கழுதையை தேடிக்கிட்டு இருக்கேன்!”

ஜென் மாஸ்டர் ரின்சாய் ஒரு முறை தன் உடலை தேடிக்கொண்டு இருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு இது பெரிய தமாஷ் ஆக இருந்தது.
கடவுளை தேடுகிறேன் என்கிறவர்கள் கூட இருக்கிறார்கள்!

Friday, May 25, 2018

பறவையின் கீதம் - 4

நசருதீன் கழுதையை ஓட்டிக்கொண்டு சந்தைக்கு போனார். கழுதை முதுகில் ஒரு உப்பு மூட்டையை ஏற்றி இருந்தார். வழியில் ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் மூட்டை நனைந்து உப்பு கரைந்து விட்டது. கழுதைக்கு ஒரே சந்தோஷம். துள்ளிக்குதித்தது; வட்டங்களில் ஓடியது.
நசருதீன் கடுப்பாகிவிட்டார். அடுத்த நாள் பஞ்சு மூட்டையை ஏற்றினார். கழுதை வேண்டுமென்றே தண்ணிரில் நனைந்தது. நீர் ஊறி சுமை அதிகமாகி விட்டது. சந்தோஷமாக கழுதையிடம் நசருதீன் சொன்னார்: "ம்ம்ம்ம் அது! ஒவ்வொரு முறையும் நீரில் நனைந்தால் சுமை குறையும் என்று நினைக்காதே!”

இரண்டு பேர் புதிய மதம் ஒன்றில் இணைந்தார்கள். ஒருவர் கரையேறிவிட்டார். மற்றவர் அமிழ்ந்து போனார்.

Thursday, May 24, 2018

பறவையின் கீதம் - 3

ஒரு குரங்கு தண்ணீரில் இருந்து மீன்களை பிடித்து மரத்தின் மீது வைத்துக்கொண்டு இருந்தது.
"என்ன செய்கிறாய்?" என்று யாரோ கேட்டார்கள்.
"பாவம் இதெல்லாம் தண்ணில முழுகி சாக இருந்தது. இதை எல்லாம் காப்பாத்தி சளி பிடிக்காம இருக்க காய வைக்கறேன்!”

கழுகுக்கு பார்வை தரும் சூரியன் ஆந்தையை குருடாக்கி விடுகிறது.

Wednesday, May 23, 2018

பறவையின் கீதம் - 2

நசருதீன் பிரதம மந்திரி ஆகிவிட்டார்! ஒரு நாள் அரண்மனையில் உலாவும் போது ராஜாவின் வேட்டைப்பருந்தை பார்த்தார். அவர் அது வரை அப்படி ஒரு பறவையை பார்த்ததே இல்லை. என்ன புறா இப்படி இருக்கிறது என்று நினைத்து கத்தி எடுத்து இறகுகளை கொஞ்சம் வெட்டினார். நகங்களை வெட்டினார். அலகுகளையும் வெட்டி முடித்துவிட்டு "இப்ப நீ பரவாயில்ல. பாக்க சுமாரா இருக்கே!” என்றார்.

நீ ரொம்ப வித்தியாசமா இருக்கே! அதனால உன்கிட்ட ஏதோ தப்பு இருக்கு!

Tuesday, May 22, 2018

பறவையின் கீதம் -1

மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர்!
அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினது ஒன் மினிட் நான்சென்ஸ்.
இப்போது மறுபடியும் பார்க்க அவற்றில் சிலதை குட்டிக்கதைகள் என்று முன்னேயே எழுதி இருக்கிறேன் என்று தெரிகிறது. ஆகையால் கொஞ்சம் பார்த்து எடுத்துத்தான் போட வேண்டும்.
இருந்தாலும் இதோ புதிய தொடர் - பறவையின் கீதம்.

காட்டில் ஒரு யானை ஆனந்தமாக தண்ணீரில் அமுங்கிக்கிடந்தது. அப்போது ஒரு எலி அங்கே வந்து இப்பவே தண்ணியை விட்டு வெளியே வா என்றது.
யானை ஏன் என்று கேட்டது.
சொல்ல மாட்டேன்!
நானும் வர மாட்டேன்!

நேரம் சென்றது. ஒரு வழியாக யானை நீரிலிருந்து வெளியே வந்தது. எலியின் முன்னே நின்று "சரி, இப்ப சொல்லு. எதுக்கு என்ன வெளியே வரச்சொன்னே?”
எலி சொன்னது: "என் ஜட்டியக்காணோம். அத நீ போட்டிருக்கியான்னு பார்க்கத்தான்!”

யானை எலியின் ஜட்டியில் அடங்கினாலும் அடங்கும்; இறைவன் அவனைக்குறித்த நம் கற்பனையில் உள்ளதில் அடங்க மாட்டான்!

Wednesday, May 16, 2018

கிறுக்கல்கள் - 206

"என்ன மனுஷன் இவன்" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. "இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு? மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லிக்கிட்டு இருக்கார்!

ஒரு பெண் சீடர் புன்னகைத்தார்.  

என்னிடம் ஒரு சமையல்காரி இருந்தார். பிரமாதமாக அவியல் செய்வார். ஒரு நாள் "இதை எப்படி செய்கிறாய்?” என்று கேட்டேன். அவள் சொன்னாள்: அம்மா, காய்கறிகள் விஷயம் இல்லை. கிழங்குகள் விஷயம் இல்லை; தேங்காய் விஷயம் இல்லை. இதெல்லாம் மத்த சமையல்லேயும் இருக்கே! ஆனா நான் அவியல் செய்யறதுல ஆழ்ந்து ஒன்றிப்போறேன் இல்லையா? அதான் விஷயமே!

Tuesday, May 15, 2018

கிறுக்கல்கள் - 205

மாஸ்டர் சொன்னார்:
உன் தாயின் கர்ப்பத்தில நீ மௌனமாக இருந்தாய். பிறந்த பின் பேச ஆரம்பித்தாய். பேசி பேசி பேசி … ஒரு நாள் உன்னை புதைத்து விடுவார்கள். அப்போது மீண்டும் மௌனமாய் இருப்பாய்.
இந்த மௌனத்தை பிடித்துக்கொள். அது ஆரம்பத்திலும் இருந்தது, கடைசியிலும் இருக்கும். இப்போது இந்த வாழ்க்கை என்னும் சத்தத்தின் நடுவேயும் இருக்கிறது. அதை கண்டு பிடித்து அனுபவி. இந்த மௌனமே உன் ஆழ்ந்த தனித்துவம்!

Friday, May 11, 2018

கிறுக்கல்கள் - 204

இந்த 'நிகழ்காலத்தில் வாழுங்கள், நிகழ்காலத்தில் வாழுங்கள்'ன்னு சொல்லறிங்களே அது எவ்வளவு நேரம்? ஒரு நிமிஷமா? ஒரு செகண்டா?
ரொம்பவே குறைச்சல்! அதே சமயம் ரொம்பவே அதிகம்!
ம்ம்?
குறைச்சல்ன்னு ஏன் சொல்லறேன்னா, நீ அதை உணர்ந்து மனசை அதில குவிக்கறதுக்குள்ள அது கடந்து போயாச்சு!
அதிகம்ன்னு ஏன் சொல்லறேன்னா, ஒரு வேளை நீ அதை கண்டுபிடிச்சு அதுக்குள்ள போயிட்டா காலத்தை கடந்தவனா ஆயிடுவே. யுகம் என்கிறது என்னன்னும் புரிஞ்சுடும்!

Thursday, May 10, 2018

கிறுக்கல்கள் - 203

மாஸ்டர் எப்போதும் மக்களை மதங்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்துவார்.

விதிகளை குருட்டுத்தனமாக கடைபிடிப்பதை மதங்கள் புனிதப்படுத்துகின்றன என்பார்.

ஒரு ராணுவ பயிற்சி முக்காமில் அதிகாரி புதியவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். துப்பாக்கியின் பின் பகுதி ஏன் வால்நட் மரத்தால் செய்யப்படுகிறது?
உற்சாகமாக ஒரு இளைஞர் "ஏன்னா அது உறுதியானது!” என்றார்.

இல்ல. அது காரணமில்ல.

இன்னொருவர் " அதுக்கு அதிக எலாஸ்டிக் தன்மை உண்டு!” என்றார்.
ம்ஹும்!

இன்னொரு இளைஞர் " மத்த எல்லா மரங்களையும் விட இதுக்கு இன்னும் வழவழன்னு பாலீஷ் போடலாம்!” என்றார்.
இல்லவே இல்ல. எல்லாருமே தப்பு!

மௌனம்.

பின் அதிகாரி விளக்கினார்: “ஏன்னா அப்படித்தான் செய்யணும்ன்னு ராணுவ கையேட்டில இருக்கு!”

Wednesday, May 9, 2018

கிறுக்கல்கள் - 202

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. அதை துரத்துங்கள்; அது உங்களுக்கு போக்கு காட்டிப்பறக்கிறது. பேசாமல் அமைதியாக உட்கார்ந்தால் அது வந்து உங்கள் தோளின் மீது அமர்கிறது!

அப்போ வாழ்க்கையில் சந்தோஷத்தை அடையணும்ன்னா நா என்ன செய்யணும்?

அதை துரத்துவதை விட்டுடு!

ம்ம்ம்? நான் செய்யக்கூடியது ஒண்ணுமில்லையா?

ம்ம்ம்ம்! சும்மா அமைதியா உக்கார பழகலாம் -உனக்கு தைரியமிருந்தா!

Tuesday, May 8, 2018

கிறுக்கல்கள் - 201

மாஸ்டருக்கு மத 'தலைவர்கள்' குறித்து ஒரு புகார் உண்டு. அது என்னவென்றால் அவர்கள் தம்மை பின் தொடர்பவர்களிடம் ஒரு குருட்டு நம்பிக்கையை வளர்க்கிறார்கள். எவ்வளவு தூரம் என்றால் அவர்கள் கேள்வி கேட்டாலும் அவர்கள் நம்புவதன் குறுகிய வரைமுறையிலேயே இருக்கும்.

வழக்கம்போல் ஒரு கதை சொன்னார்: ஒரு வித்தியாசமான பிரசங்கி இருந்தார். அவர் தன்னை பின் பற்றுவோர் தான் சொல்வதை கேள்விகள் கேட்டு தெளிய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கூட்டமோ கேள்வியே கேட்பதாக இல்லை. அதனால் ஒரு திட்டம் வகுத்தார். மக்களிடம் ஒரு கதை சொன்னார்.

ஒரு த்யாகி இருந்தார். அவருடைய தலையை எதிரிகள் வெட்டி விட்டார்கள். அதனால அவர் தன் தலையை கைகளில் எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பினார். வரும் வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றை நீந்தித்தான் கடக்க வேண்டி இருந்தது. அதற்கு அவர் தன் தலையை வாயில் கவ்விக்கொண்டு பத்திரமாக நீந்தி கடந்து விட்டார்.”

இவ்வளவு சொல்லிவிட்டு பிரசங்கி ஆவலுடன் சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தன. வழக்கம் போல யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை என்று நினைத்த தருணத்தில் ஒருவர் கையை தூக்கினார். "அப்படி இருக்க முடியாது!" என்றார்.

'ஆஹா!' என்று உற்சாகமடைந்த பிரசங்கி 'ஏன்?' என்று கேட்டார்.

பதில் வந்தது: "அவ்வளவு பெரிய தலையை வாயில் கவ்விக்கொண்டு நீந்தினால் மூச்சு முட்டி செத்துப்போயிருப்பாரே!”

Monday, May 7, 2018

கிறுக்கல்கள் -200

ஒருவர் மாஸ்டரை கேட்டார்: உங்கள் சீடர்களுக்கு நீங்க என்ன செய்கிறீர்கள்?
மாஸ்டர் சொன்னார். "ஒரு சிற்பி என்ன செய்வானோ அதைத்தான் செய்கிறேன். புலியின் சிலையை வடிவமைக்க சிற்பி ஒரு பெரிய கல்லை எடுத்து புலி போல இல்லாததை வெட்டி அப்புறப்படுத்துகிறார்.”

அவருடைய சீடர்கள் அப்புறமாக விளக்கம் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: “என் வேலை நீ அல்லாத எல்லாவற்றையும் உன்னிடமிருந்து உடைத்து எறிவது. உன் கடந்த காலம், கலாசாரத்தில் இருந்து உன்னுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள், மனப்பாங்கு, கட்டாயங்களை உடைத்து எறிவது. “

Friday, May 4, 2018

கிறுக்கல்கள் - 199

ஒரு பெண் சீடர் மாஸ்டரிடம் வந்தார். தான் உலக விஷயங்களில மிகவும் அமுங்கி சுய நலத்தோட ஆன்மீக முன்னேற்றமே இல்லாம இருப்பதாக உணர்ந்தார். ஆனால் ஒரு வாரம் மடாலயத்தில் தங்கின பிறகு மாஸ்டர் அவரிடம் "நீ இப்ப நல்லா இருக்கே. ஆன்மீக நாட்டம் இருக்கு" என்றார்.

ஆனா, நான் மத்த சீடர்கள் போல ஆன்மீக வழியில இல்லையே? அதுக்கு என்ன செய்யலாம்
 
மாஸ்டர் சொன்னார் " இத கேளு. ஒரு ஆசாமி புதுசா ஒரு கார் வாங்கினார்.ஆறு மாசம் ஓட்டிவிட்டு கணக்கு போட்டு அது மைலேஜ் நல்லா கொடுக்கலைன்னு முடிவுக்கு வந்தார். காரை வொர்க்‌ஷாப்புக்கு கொண்டு போனார். அங்கே மெகானிக் நல்லா சோதிச்சு பாத்துட்டு "கார் நல்ல கண்டிஷன்ல இருக்கு" ன்னு சொன்னார். இவர் கேட்டார்: பின்ன மைலேஜ் கிடைக்கலையே? மத்தவங்க சொல்ற மாதிரி மைலேஜ் கிடைக்க நான் செய்யக்கூடியது ஒண்ணுமில்லையா?"

, இருக்கே? மத்தவங்க மாதிரி நீங்களும் செய்யலாமே?

என்ன அது?

மைலேஜ் பத்தி பொய் சொல்லறது!

Thursday, May 3, 2018

கிறுக்கல்கள் - 198

என் முன்னாள் மாஸ்டர் பிறப்பையும் இறப்பையும் ஒப்புக்கொள்ள கத்துக்கொடுத்தார்!

பின்னே இப்ப நீ ஏன் எங்கிட்ட வந்தே?

ரெண்டுக்கும் நடுவில இருக்கிறதை எப்படி ஒப்புக்கொள்ளறதுன்னு கத்துக்க!

Wednesday, May 2, 2018

கிறுக்கல்கள் - 197

குழந்தைகளை ஒழுக்கத்தோட வளர்க்கிறது பத்தி மாஸ்டர் இதை சொன்னார்:

நான் பதின்ம வயசு பையனா இருந்தப்ப என் அப்பா என்னை கூப்பிட்டு நகரத்தில் சில இடங்களைப்பத்தி எச்சரிக்கை செஞ்சார்.
"மகனே இரவு விடுதிக்கு போகாதே!”
"ஏன்பா?”
"அங்கே போனா நீ பார்க்கக்கூடாததை எல்லாம் பார்க்க நேரும்!”
இது இயற்கையா என்னை உசுப்பி விட்டது, கிடைச்ச முதல் வாய்ப்பில இரவு விடுதிக்குப்போனேன்!
சீடர்கள் கேட்டார்கள்: “ அங்கே பார்க்கக்கூடாததை எல்லாம் பாத்தீங்களா மாஸ்டர்?”
மாஸ்டர் சொன்னார்: "ஆமாம்.அங்கே என் அப்பாவை பாத்தேன்!”

Tuesday, May 1, 2018

கிறுக்கல்கள் - 196

மாஸ்டரின் சீடர் ஒருவர் விருந்தாளி ஒத்தர்கிட்ட பெருமையா சொல்லிகிட்டு இருந்தார் "நிறைய பேர் சீடரா ஏத்துக்கச்சொல்லி மாஸ்டர்கிட்ட வந்தாங்க. ஆனா மாஸ்டர் அவங்களை எல்லாம் ஏத்துக்கல. என்னைத்தான் ஏத்துக்கொண்டார்!”

அப்புறமா மாஸ்டர் அவனைக்கூப்பிட்டு சொன்னார் : "அப்பனே, நா மத்தவங்களை விட்டுவிட்டு உன்னை சீடனா ஏத்துக்க காரணம் உனக்கு குருவின் தேவை அவங்களுடையதை விட அதிகமா இருந்தது!”