Pages

Showing posts with label நல்வரவு. Show all posts
Showing posts with label நல்வரவு. Show all posts

Tuesday, February 12, 2008

நல்வரவு!


இந்த பக்கங்களுக்கு வந்ததுக்கு நன்றி!

கொஞ்சம் பக்கங்களை தயார் செய்து கொண்டு இறங்க உத்தேசம். கொஞ்ச நாள் ஆகும். உண்மையில் இந்த பக்கங்களை இன்னும் வெளியிடலை. என் அஞ்சல் ஒட்டில் இதை பார்த்து இங்கே வந்தவங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

இந்த வலைப்பூ யாருக்கு அப்படின்னு முதல்ல சொல்ல நினைக்கிறேன். ஆன்மீகத்துக்குத்தான் ஆயிரம் வலைப்பூ இருக்கேன்னு சொல்றீங்க, காதுல விழுது. இருந்தாலும் "அதெல்லாம் யாருக்கோ நமக்கு இல்லை, நமக்கு இதெல்லாம் புரியாது" அப்படி நினைக்கிறவங்களுக்குத்தான் இது.

எல்லாருக்குமே புரியுங்க - கொஞ்சம் சுலபமா புரியறாமாதிரி எழுதினா. அந்த மாதிரி ஒரு முயற்சி இது.
இது வரை எழுதினதை பாத்தீங்க இல்ல? இதே நடைலதான் எழுதப்போறேன். "திரிபுடி ஒழிய அந்தக்கரணம் ஒடுங்க.." அப்படியெல்லாம் எழுதி பயமுறுத்த மாட்டேன். ஏனோ ஆன்மீக சமாசாரம் எழுதறவங்க செந்தமிழுக்கு போயிடராங்க. எனக்கு செந்தமிழ் தெரியாது. அதனாலே நீங்க யோசிக்க வேணாம்.

ஆன்மீகம் ஏன் தெரியனும்னு கேக்கலாம்!
இந்த பேரெல்லாம் சும்மா பயமுறுத்ததாங்க. நம்மை நாமே புரிஞ்சுக்கனுமா இல்லையா? அதுதாங்க ஆன்மீகம். அது மட்டும் ஏன் புரிஞ்சுக்கனும்னு கேட்டா.. நம்ம உண்மையான நிலை, சக்தி என்னன்னு தெரிஞ்சுகிட்டா இன்னும் கொஞ்சம் சந்தோசமா இருக்கலாமே! யாருமே சந்தோசமா இருக்கறத விரும்புவாங்கதானே?

எழுத்தெல்லாம் ஆரம்பிக்கற முன்னே சில விசயம்.
நிறைய ஒவ்வொரு தரமும் எழுதி உசிர வாங்க மாட்டேன். ஒரு பேஜ் டவுன் மேல போகக்கூடாதுன்னு நினைக்கிறேன். தினமும்(!) சின்ன சின்ன டோஸ். அவ்ளோதான்.

எழுதினதுல சந்தேகம்னா பின்னூட்டம் இட்டு கேளுங்க. பதில் சொல்றேன். சில சமயம் இது பின்னால புரியும்னு சொல்லிடுவேன். வருத்தப்படாதீங்க.
சும்மாவாட்டி இடக்கு கேள்வி கேட்டா அதை வெளியிட மாட்டேன். அதுக்கும் வ.ப.


இதெல்லாம் நீங்க படிச்சி புரிஞ்சுக்கனும் அப்படி யாருக்கும் கட்டாயமில்ல. அதனால உங்க வழி உங்களுக்கு. என் வழி எனக்கு. எழுதறது யாருக்கான உபயோகமா இருந்தா எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதான். அவ்ளோதான்.