Pages

Thursday, July 30, 2015

இறுதிநாட்கள் -4இறுதி நாளன்று காலை பகவான் சிவானந்தஸ்வாமியைப் பார்த்து சந்தோஷம்என்றார். அனைவரும் புரியாமல் கவலையுடன் நின்றனர். சிவானந்தஸ்வாமிக்கு மட்டும் புரிந்தது! தம் பாக்கியம் நிறைவுற்றது என நினைத்தார். கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.மற்றவர்கள் விழிப்பதை பார்த்து பகவான் அதான் ஓய்! வெள்ளக்காரன் தேங்க் யூ ந்னு சொல்லுவான். நாம சந்தோஷம் ந்னு சொல்லுவோம்!” என்றார்.


பகவானின் அந்திம தினம் ஏப்ரல் 14. 1950. அன்று காலை முதலே ஜனங்கள் தரிசித்து சென்ற வண்ணம் இருந்தனர். ஓரிரு நொடிகள் மட்டுமே தரிசிக்க முடிந்தது. ஒரு இளம் தம்பதியினர் தம் 3 வயது பெண் குழந்தையுடன் வரிசையில் நின்றனர். கணவன் வேறு வரிசையில் போய்விட்டான். மனைவி குழந்தையுடன் நின்றார். அவளது முறை வந்தது. குழந்தையை கீழே இறக்கிவிட்டு நமஸ்கரித்தாள். நகர்ந்தாள்.

குழந்தை தன் சிறு கைகளை கூப்பி நமஸ்தே!’ என்றது; நகரவில்லை! கூப்பிய கைகளை பிரிக்கவில்லை. மீண்டும் நமஸ்தேஎன்றது. கூட்டம் ஆட்சேபித்ததால் தாய் குழந்தையை பிடித்து இழுத்தாள். குழந்தை பிடிவாதமாக அங்கேயே நமஸ்தேஎன்றபடி நின்றது!
பகவானை கிடத்தி இருந்தார்கள்! கண்கள் மூடி இருந்தன. யாரையும் பார்க்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இது தெரிந்து பெரியவர்கள் குழந்தையை தூக்குங்கஎன்றார்கள். குழந்தையோ இன்னும் பிடிவாதமாக நமஸ்தேஎன்றபடி நின்றது! சிறு களேபரமே ஏற்பட்டது. இது நடந்து கொண்டு இருக்கையிலேயே குழந்தையின் கண்களில் சந்தோஷம்! பகவான் தலை மெதுவாக குழந்தையை நோக்கி திரும்பியது. உதடுகள் மெதுவாக அசைந்து நமஸ்தேஎன்றன. குழந்தை சந்தோஷமாக தாயுடன் சென்றுவிட்டது!”

- இந்த தொடரின் பதிவுகள் நிறைந்தன-

   

Wednesday, July 29, 2015

உள்ளது நாற்பது - 45


உருவ மருவ முருவருவ மூன்றா
முறுமுத்தி யென்னி லுரைப்ப - னுருவ
மருவ முருவருவ மாயு மகந்தை
யுருவழிதன் முத்தி யுணர்.

உருவம் அருவம் உருவருவம் மூன்றாம்
உறும்முத்தி என்னில் உரைப்பன் - உருவம்
அருவம் உருவருவம் ஆயும் அகந்தை
உருஅழிதல் முத்தி உணர்.


சிலர் முத்தி என்பது உருவம் அருவம் உருவருவம் என மூன்று வகை என்பர். (அனுபவ பூர்வமாக நான்) உரைப்பது உருவம் அருவம் உருவருவம் இவற்றை ஆராயும் அகந்தை தோன்றாமல் நாசமாவதே முத்தி.


रूपिण्यरूपिण्युभयात्मिका च मुक्तिस्त्रिरूपेति विदो वदन्ति ।
इदं त्रयं या विविनक्त्यहन्धी-स्तस्याः प्रणाशः परमार्थमुक्तिः ॥ ४२ ॥

ரூபிண்யரூபிண்யுபயாத்மிகா ச முக்திஸ்த்ரிரூபேதி விதோ³ வத³ந்தி |
இத³ம்ʼ த்ரயம்ʼ யா விவினக்த்யஹந்தீ- ஸ்தஸ்யா: ப்ரணாஶ: பரமார்த²முக்தி: || 42 ||


सद्दर्शनं द्राविडवाङ्निबद्धं महर्षिणा श्रीरमणेन शुद्धम् ।
प्रबन्धमुत्कृष्टममर्त्यवाण्या-मनूद्य वासिष्ठमुनिर्व्यतानीत् ॥ ४३ ॥
ஸத்³³ர்ஶனம்ʼ த்³ராவிட³வாங்நிப³த்³ம்ʼ மஹர்ஷிணா ஶ்ரீரமணேன ஶுத்³ம் |
ப்ரப³ந்தமுத்க்ருʼஷ்டமமர்த்யவாண்யா- மனூத்³ய வாஸிஷ்ட²முனிர்வ்யதானீத் || 43 ||
ஶ்ரீ ரமண மஹர்ஷியால் தமிழ் மொழியில் இயற்றப்பட்டதும் சுத்தமானதும்
உயர்ந்ததுமான ஸத்தர்ஶநம் என்ற நூலை தேவர்களில் மொழியில் மொழிபெயர்த்து வாஸிஷ்ட முனி பரப்பினார்.


सत्तत्त्वसारं सरलं दधाना मुमुक्षुलोकाय मुदं ददाना ।
अमानुषश्रीरमणीयवाणी- मयूखभित्तिर्मुनिवाग् विभाति ॥ ४४ ॥

॥ सद्दर्शनं समाप्तम् ॥
ஸத்தத்த்வஸாரம்ʼ ஸரலம்ʼ ³தானா முமுக்ஷுலோகாய முத³ம்ʼ ³தா³னா |  
அமானுஷஶ்ரீரமணீயவாணீ- மயூக²பித்திர்முனிவாக்³ விபாதி || 44 || ||

நற்தத்துவ ஸாரத்தை ஸரளமாக உட்கொண்டதும் முமுக்ஷு ஜனங்களுக்கு
மகிழ்ச்சியளிப்பதும் (சாதாரண) மானுடத்தன்மையைத் தாண்டியவரான ஶ்ரீ ரமணர் கூறியதுமான இந்த முனிவரின் வாக்கானது (ஸூர்ய)  கிரணங்களால் அமைக்கப்பட்டது போல் பிரகாசிக்கிறது.
ஸத்³³ர்ஶனம்ʼ ஸமாப்தம்

நிறைவுற்றது.

Tuesday, July 28, 2015

அடியார்கள் - வெங்கடேஸ்வர சர்மா - 2


சர்மாஜியின் திருமண வாழ்க்கை தொடர்ந்தது. காலப்போக்கில் ஒரு மகன் பிறந்தார். தனது மகனின் ஜாதகத்தை கணித்துப்பார்கையில் அவரது மகன் இளம் வயதிலேயே இறக்க வேண்டும் என்று தெரியவந்தது. அது மோசமாக அதிர்ச்சியாக இருந்தது. இதை அவர் தன் மனைவியிடம் சொல்லவில்லை.  

ஜோசியம் என்னும் இலாபகரமான தொழிலை விட்டு விட்டு திருவண்ணாமலைக்கு அவரது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.  தொலைவில் உள்ள ஒரு ள்ளியில்  அவரது மகன் பாலுவை சேர்த்தார். அடி அண்ணாமலையில் ஒரு எளிய வாழ்க்கை தொடங்கியது. தினசரி அவர் அவரது மனைவியுடன் கிரி வலம் போவார். வழியில் பகவானை தரிசிப்பார். ஆசிரமத்தில் கோவிலில் அர்ச்சகர் வேலையை ஏற்கும்படி வேண்டினர். ஆனால் அதை நிராகரித்தார். தனது மகனை எப்போதாவது ஒரு முறை போய் பார்த்து வருவார்.

மகன் படிப்பை முடித்து பட்டம் பெற்ற பிறகு   திருவண்ணாமலையில் ஒரு வேலை கிடைத்தது. தன்னுடன் வாழும்படி அவரது பெற்றோர்களை கோரினார். அப்போது சர்மாஜிக்கு தனது மகனின் மரணத்தின் சரியான தேதி மற்றும் நேரம் தெரிந்து இருந்தது, அவரது மகன் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே வாழ்வார் என்று அறிந்திருந்தார்இருந்தாலும் அவரது கோரிக்கையை ஏற்று அவருடைய வீட்டில் குடியேறினர். விரைவிலேயே அவர் ஒரு கடுமையான காய்ச்சல் கண்டு விதித்த நேரத்தில் அவரது உடலை நீத்தார்

பின்னால் ஒரு நாள் தனது மகனின் மரணம் பற்றி சர்மாஜி கூறினார்: "என் மனைவி விசாலாட்சியால் இதை தாங்கிக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். அதனால் அவளிடம் மகன் சிறிய வயதிலேயே இறந்து போவான் என்ற உண்மையை மறைத்தேன்.. மாறாக, தன் மகனின் மரத்தை அவள் எதிர்கொண்ட விதம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவள் என்னை விட தைரியமாகவே அதை எதிர்கொண்டாள்அவர் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை. அதற்குப் பதிலாக அவள், ”அவன் மீண்டும் அருணாச்சலத்திடம்  போய்விட்டான். கவலைப்படவேண்டாம் " என்று கூறி என்னை ஆறுதல் படுத்தினாள். அவன் இங்கே வந்து அருணாச்சலத்துடன் இணைஎவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!  அவனது உடலை இங்கே விட்டான்; மிகவும் அதிர்ஷ்டசாலி! என்றாள்.”

 வயது இருபது வருடங்கள் ஆகும் முன்னால் ஒரே மகன் இறந்த நிலையில் எந்த துன்பமும் இல்லை!! ரமண மஹரிஷியின் குணப்படுத்தும் சக்தி இத்தகையது! பிற அறிவியல் துறைகள் எதிர்காலத்தை காட்டலாம்; ஆனால் பகவானின் அருள் வரக்கூடிய காலத்தை சக்தி இல்லாதபடி செய்கிறது.


வெங்கடேஸ்வர சர்மா பிரபலமாக அடி அண்ணாமலை சாஸ்த்ரிகள் என அழைக்கப்பட்டார். மௌண்டன் பாத் பத்திரிகையில் அவரது இறப்பு இப்படி இரங்கல் பகுதியில் குறிப்பிடப்படுகிறது. "கடைசி நாட்களில், பக்தர்கள்  அவரை பெரும் ஆன்மீக முதிர்ச்சி பெற்ற ஒரு ஸ்திதப் ப்ரக்னாக பார்த்தனர். இறுதியில் வரை முழுமையாக சுயநினைவுடன் இருந்தார். அவரது இறுதி டிசம்பர் 13, 1987 அன்று மிகவும் அமைதியாக வந்தது. அவர் கடைசி மூச்சின் போதும் 'அருணாச்சல சிவா அருணாச்சல சிவா,' என பக்தர்கள் கோஷமிட அதைக்கேட்டுக்கொண்டே உயிர் நீத்தார்! இந்த உண்மையான ரமண பக்தர் அப்போது அருணாச்சலத்துடன் ஐக்கியமாகி விட்டார்.

Monday, July 27, 2015

அடியார்கள் - வெங்கடேஸ்வர சர்மா


எதிர்காலத்தை அறியும் சக்தி என்றாலே மனித மனம் எப்போதும் கவரப்படுகிறது. அது அறிவியல் மூலமாகவோ அல்லது மற்ற வழிகள் மூலமாகவோ ஏற்படலாம். அது விஷயமில்லை. இதற்கு ஒரு உதாரணம்  ஸ்ரீ ஏ வெங்கடேஸ்வர சர்மா. அவர் கேரள மாநிலம், கொச்சினில் ஒரு பெரிய ப்ரச்ன ஜோதிட நிபுணர். அவர் பட்டப்படிப்பை முடித்ததும் அவரது குரு பகவான் சுப்பிரமணியரின்  படம் ஒன்றை கொடுத்தது அவர் பெற்ற அறிவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் சுப்ரமணியரை உபாசிக்கும்படி சொன்னார்.


 பின்னால் அவரது மாமா ரமண மஹரிஷியின் படம் ஒன்றையும் கொடுத்தார், அதையும் இவர் மிக்க மரியாதையோடு வாங்கி சுப்ரமணியர் படத்தின் அருகே பூஜை அறையில் வைத்தார்.  வழிபாட்டின் போது சர்மாஜி படத்தில் இருந்த ரமண மஹரிஷி சுப்ரமணியராக உருமாறுவதை கண்டு வியந்தார். இதை அவர் ரமண மஹரிஷியை போய் தரிசிக்க ஒரு சூசகமாக எடுத்துக்கொண்டார். 1917 ல் அவர் பகவான் ரமண மஹரிஷியை தரிசித்தார்.அவர் பகவானிடம்  " அனைத்து அறிவியல் துறைகளிலும் ஜோதிடம் சிறந்தது மற்றும் மிக துல்லியமானது இல்லையா?" என்று கேட்டார். அதற்கு பகவான் "தன்னை அறிவது அனைத்து பிற அறிவியல் துறைகளைவிட மேன்மையானதுஎன்று கூறினார். அந்த சமயத்தில் சர்மாஜி ஒரு ஜோசியரின் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். அவரது ஒவ்வொரு கணிப்பும் அவருக்கு செல்வம் மற்றும் புகழை நிறைய கொண்டு வந்தது. ஆனால் பகவானின் வார்த்தைகள், அவர் எல்லாவற்றையும் துறக்கவேண்டும் என்று உணர வைத்தது.

எனினும், பகவான் தாயார் அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி சொன்னார். அவர் அந்த விசாலாட்சி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டு தன் ஜோசிய வாழ்க்கையை தொடர்ந்தார்.

 பாரம்பரிய ஜோதிடம் போலல்லாமல் ப்ரச்ன ஜோதிடம் கேட்கும் நேரம், திசை, கணிப்புக்கள் ஆகியவற்றை பொறுத்தது. உள் உள்ளுணர்வில் இருந்து பதில் வரும்.
அவர் பூஜை அறையில் இருந்த போது ஒருமுறை அவரது மனைவி நாகப்ப செட்டியார் வந்திருக்கிறார் என்று சொன்னார். அவ்வளவே. சர்மாஜி "அவர் தனது வைர மோதிரத்தை தொலைத்து விட்டார். அவரது உதவியாளரை சந்தேகிக்கிறார்.  யார் மேலும் சந்தேகம் வேண்டாம் என்று அவரிடம் சொல். மோதிரம் உண்மையில் செட்டியார் விரலில் இருந்தது நழுவி விட்டது. அவரது முற்றத்தில் ஒரு வாழை மரத்தின் கீழ் அது இருக்கிறது என்றார். அந்த. கணிப்பு உண்மையாக இருந்தது. வியக்கத்தக்க இந்த ஆற்றலால் அவரை நிறைய பேர் தேடி வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

எடித் ஆசிரமத்துக்கு வந்த ஒரு ப்ரெஞ்சு பக்தை. ஆசிரமத்துக்கு கொண்டு வந்த பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட அவரது சாமான்களை அவர் வந்த குவைத் ஏர்லைன்ஸ் தவற விட்டுவிட்டது. பக்தைக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது ஆசிரமத்தில் இருந்த சர்மாஜி, வருந்த வேண்டாம். அவை அனைத்தும் குவைத் ஏர்போர்டில் ஒரு பெரிய ரூமில் இருக்கின்றன என்றார். எடித் தன் சாமான்களை காணவில்லை என்று ஏர்லைன்ஸிடம் புகார் செய்தார். ஏர்லைன்ஸ் விரிவாக தேடிவிட்டோம் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துவிட்டது. சர்மாஜியின் திறனை எடித் சந்தேகித்தார். குவைத் மூலம் திரும்பிய அவர் லாஸ்ட் பேக்கேஜ் அறைக்கு சென்று பார்த்த போது ஒரு மூலையில் அவரது சாமான்கள் பாதுகாப்பாக இருந்ததை கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டார். டேக்கிங் இல்  விமான நிறுவனம் தவறு செய்ததால்  தொலைந்து  போய் விட்டதாக சொல்லிவிட்டது!!

Saturday, July 25, 2015

உள்ளது நாற்பது - 44


பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற் - சித்தமாய்
நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முக்திசிந்தை முன்னிற்கு மோ

பத்தன்நான் என்னும்மட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தன்ஆர் என்றுதன்னைப் பார்க்குங்கால் - சித்தமாய்
நித்தமுத்தன் தான்நிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முக்திசிந்தை முன் நிற்குமோ.


நான் கட்டு உடையவன் என்று எண்ணும் போது மட்டுமே நான் பந்தம் உடையவன் முத்தி அடைந்தவன் என்னும் வித்தியாசங்கள் தோன்றுகின்றன. கட்டுடையவன் யார் என்று பார்த்து விசாரித்தால் எப்போதும் முத்தனாய் இருக்கும் தன்னை கண்டுகொள்வான். அப்போது கட்டுடையவன் என்னும் சிந்தனை நிற்காது. அப்படியெனில் தான் முத்தன் என்னும் சிந்தனை மட்டும் முன் நிற்குமோ? (நிற்காது)
தன்னை விசாரித்து தன்னை அறிந்தவனுக்கு 'தான் பந்தப்பட்டு இருந்தவன்; இப்போது முத்தியடைந்தவன்' என்னும் சிந்தனைகள் ஏதும் இரா.

बद्धत्वभावे सति मोक्षचिन्ता बन्धस्तु कस्येति विचारणेन ।
सिद्धे स्वयं स्वात्मनि नित्यमुक्ते क्व बन्धचिन्ता क्व च मोक्षचिन्ता ॥ ४१ ॥

³த்³த்வபாவே ஸதி மோக்ஷசிந்தா ப³ந்தஸ்து கஸ்யேதி விசாரணேன |
ஸித்³தே ஸ்வயம்ʼ ஸ்வாத்மனி நித்யமுக்தே க்வ ப³ந்தசிந்தா க்வ ச மோக்ஷசிந்தா || 41 ||

Friday, July 24, 2015

இறுதி நாட்கள் - 3விதேகம் அடையும் முன் சில நாட்கள் பகவான் உணவு கொள்வதை தவிர்த்தார். திரவமாகக்கூட ஒன்றுமே உட்கொள்ளவில்லை. டாக்டர்கள் அன்பர்கள் வற்புறுத்தியும் அதற்கு இணங்கவில்லை. உணவு ஏற்பது உபத்திரவம் செய்வதாக சொல்லிவிட்டார்.
நிலமை மோசமாகிக்கொண்டே போனது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அப்போது பகவான் தெலுங்கு பேசும் ஒரு சேவகரை கூப்பிட்டு மெதுவாக ஏதோ சொன்னார். அவர் வெளியே சென்று ஏதோ விசாரித்து அங்கே நின்ற ஒரு பெண்மணியிடம் ஏதோ வாங்கி வந்தார். பொட்டலத்தை பிரிக்க அதில் கொஞ்சம் திராட்சை, கற்கண்டு, ஒரு துண்டு ஆகியன இருந்தன. பகவான் திராட்சை கற்கண்டில் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் உணவு கொள்ளாமலே இருந்தவர் இதை வாயில் போட்டுக்கொண்டதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். துண்டால் தன் பாதங்களை துடைக்கச்சொன்னார். மிகுந்த சிரமத்துடன் தன் பாதங்களை அதற்கு வாகாக வைத்துக்கொண்டார். பின் மிகுந்த கற்கண்டு திராட்சை துண்டு ஆகியவற்றை அந்த பெண்மணியிடம் தரச்சொன்னார்.

சேவகர் நடந்ததை சொல்லி அந்த பெண்மணியிடம் அவற்றை கொடுத்த போது அவர் தேம்பித்தேம்பி அழுதார்.

அவர் பகவானின் நீண்ட நாள் பக்தையான விஜயவாடா மஹா லக்‌ஷ்மி அம்மாள். பகவான் ஆபரேஷன் செய்து கொண்டதைக்கேட்டு ஓடோடி வந்து தரிசித்து விட்டு சென்றார். பின் உடல்நிலை இன்னும் சீர்குலைந்து விட்டது என்று கேள்விப்பட்டு கடைசியாக ஒரு முறை தரிசனம் செய்து போக வந்தார். வரும்போது திராட்சை கற்கண்டு துண்டு ஆகியவற்றை கொண்டு வந்தார். துண்டை பகவான் பாதங்களில் சாற்றி எடுத்து வாழ்நாள் முழுதும் பூஜை செய்ய நினைத்தார். பார்வை பட்ட திராட்சை கற்கண்டை பிரசாதமாக எடுத்துக்கொள்ள நினைத்தார். ஆனால் இங்கே வந்து சேர்ந்த போது நிலைமை மோசமாக இருந்தது. தரிசனத்துக்கு மட்டுமே அனுமதித்துக்கொண்டு இருந்தார்கள்.அதற்கே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து இருந்தனர். இதனால் இவருக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. ஒன்றும் சொல்ல முடியாமல் கொண்டு வந்ததை என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு இருந்த போதே சேவகர் வந்து பகவான் சொல்லியதாகச்சொல்லி அவர் கொண்டு வந்ததை கேட்டார்!

பகவானின் இறுதி நாட்களில் தரிசனம் செய்ய நின்றிருந்த நெடும் வரிசையில் ஆச்சரியமாக ஒரு திருவண்ணாமலைவாசி நின்று இருந்தார். பெயர் மங்காராம். அவர் வட்டிக்கு பணம் கடன் கொடுப்பவர். அவரை யாருக்கும் பிடிக்காது. ஏனேனில் எல்லோரிடமும் அவர் கடுமையாகவும் திமிருடனும் நடந்து கொள்வார். ஆசிரமத்தின் அருகாமையில் அவர் அடாவடிகளில் ஈடுபடுவாரே தவிர ஒரு போது ஆசிரமத்துக்குள்ளே வந்ததில்லை.
வரிசை நீண்டு இருந்தமையால் ஓரிரு வினாடிகளே பகவானை தரிசனம் செய்ய முடிந்தது. மங்காராம் முறை வந்தது. அவர் பகவானின் காலடியில் ஒரு சீட்டை வீசினார்; நகர்ந்து விட்டார். பகவான் அந்த சீட்டை எடுத்து படிக்கச்சொல்லி சேவகரிடம் கேட்டார். பின் மங்காராமை அழைத்து வரச்சொன்னார். அவரை கருணையுடன் பார்த்து சரி என்பது போல தலையாட்டினார்.
சீட்டில் பகவானே காப்பாத்து!” என்று எழுதி இருந்தது!
 

Thursday, July 23, 2015

இறுதி நாட்கள் - 2
பகவானின் இறுதி நாட்களில் முதல் ஆபரேஷன் முடிந்து இருந்த சமயம். பகவானை யாரும் தொந்திரவு செய்யக்கூடாது என்று டாக்டர்கள் கடுமையாக உத்திரவு இட்டு இருந்தார்கள். ஆகவே அதற்காகவே ஒருவரை நியமித்து இருந்தார்கள்.
ஒரு சாது பகவானை பார்க்க வந்தார். காவலர் காரணத்தை சொல்லி அனுமதி மறுத்தார். சாது ஆபீஸுக்கு சென்று அனுமதி கேட்டார். மறுக்கப்பட்டது. இன்னைக்கு ஊரைவிட்டு போக ஏற்பாடு ஆகியிருக்கு. அதனால் தயை செய்து அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார். “டாக்டர்கள் உத்திரவு ஸ்வாமி! நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார்கள்.
சாது தனக்கு பாக்கியம் இல்லை என்று சொல்லியபடி வெளியே வந்தார். ஆச்சரியமாக வழியில் பகவான் நின்று இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆனந்தமாக பத்து நிமிடம் போல் பார்த்துக்கொண்டு நின்றனர்! பின் சாது அவர் வழியில் சென்றார். பகவான் ரூமுக்குள் போனார்.

விதேகத்துக்கு இரு நாட்களுக்கு முன் சில பக்தர்களுக்கு பகவான் இல்லாமல் தம் எதிர்காலம் குறித்த அச்சம் இருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் பகவானிடமே முறையிட முடிவாயிற்று. குஞ்சுஸ்வாமி முருகனார் போன்ற சிலருடன் பகவானை பார்க்க சென்றனர். அப்போது அங்கே டாக்டர்கள் குழுமி இருந்தனர். அவர்களுக்கு குழப்பம். எந்த மருந்தும் வேலை செய்யாத நிலை. பரீட்சார்த்தமாக மருந்து ஒன்றை உள்ளே செலுத்தலாமா வேண்டாமா?
டாக்டர் தம் குழப்பத்தை தெரிவிக்கும் வண்ணம் பகவானே! இனிமே என்ன செய்யறது? நீங்களேதான் வழி காட்டணும்!” என்றார். இது பக்தர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருந்தது. பதிலுக்கு காத்திருந்தார்கள்.
பகவான் மெதுவாக தன் கடைசி உத்திரவை பிறப்பித்தார்.
படிச்சதை ப்ராக்டீஸ் பண்ணுங்கோ!”Wednesday, July 22, 2015

உள்ளது நாற்பது - 43


வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வினவித் - தனையறியக்
கர்த்தத் துவம்போய்க் கருமமூன்றுங் கழலு
நித்தமா முத்தி நிலை.
வினைமுதல் நாம்ஆயின் விளைபயன் துய்ப்போம்
வினைமுதல்ஆர்என்று வினவித் - தனைஅறியக்
கர்த்தத்துவம் போய் கருமம்மூன்றும் கழலும்
நித்தமாம் முத்தி நிலை.

நான் செயல்களை செய்பவன் என்னும் நினைப்பு இருந்தால் அந்த வினைகளின் விளைவையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும். செயல்புரிபவன் யார் என்று விசாரித்து தன்னை அறிந்து கொள்பவனின் 'நான் செய்கிறேன்' என்னும் பாவனைபோய்விடும். அவனது மூன்று வித கர்மங்களும் நீங்கும். இதுவே முத்தி நிலையாகும்.

करोमि कर्मेति नरो विजानन् बाध्यो भवेत्कर्मफलं च भोक्तुम् ।
विचारधूता हृदि कर्तृता चेत् कर्मत्रयं नश्यति सैव मुक्तिः ॥ ४० ॥

கரோமி கர்மேதி நரோ விஜானன் பா³த்யோ பவேத்கர்மப²லம்ʼ ச போக்தும் |
விசாரதூதா ஹ்ருʼதி³ கர்த்ருʼதா சேத் கர்மத்ரயம்ʼ நஶ்யதி ஸைவ முக்தி: || 40 ||

Tuesday, July 21, 2015

அடியார்கள் - சுந்தரம்


பகவானும் சுந்தரமும் ஒரு நாள் காலை சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்தார்கள். பாதி வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே பகவான் சுந்தரம் மரத்தடில நிறைய மாம்பிஞ்சு கொட்டிக்கிடக்கு. கொஞ்சம் கொண்டு வா!” என்றார். சுந்தரம் உம்என்றாரே ஒழிய அசையவில்லை. கை வேலையை முடித்துப் பின் போகலாம் என்று நினைத்தார். பகவான் சுந்தரம், இங்கே சர்வமும் நாந்தான்! சொன்னதை உடனே செய்!” என்றார்.

இந்த சுந்தரம்தான் பிற்காலத்தில் திரிவேணி ஸ்வாமியாக அழைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியை பற்றி பிற்காலத்தில் அவர் சொன்னார்:
முதல்ல பகவான்கிட்ட வந்தப்ப அவர் ஒரு நல்ல மனுஷன் என்கிறதுதான் என்னோட அபிப்ராயம். ஒரு நாள் அவர் என்னை மாங்காய் எடுத்துண்டு வரச்சொன்னார். அன்னைலேர்ந்து நான் சாட்சாத் இறைவனோட சன்னிதியில இருக்கேன் என்கிறது புத்தியைத் தாண்டி புரிஞ்சது. பகவானோட இருந்தது மட்டுமே என் ஆன்மீக சாதனை.
முதல் பாடமா பகவான்கிட்டே நான் படிச்சது என்னோட சுய சிந்தனையை தூக்கிபோட்டுட்டு அவர் சொல்லறதுக்கு மறுப்பில்லாமே கீழ்ப்படியறதுதான்.
எந்த ஒரு வேலையிலும் பகவான் சொல்கிற வழியை விட சிறப்பா செய்யக்கூடிய வழி இருக்கலாம்; பகவான் சொல்கிற வழியில செய்யறதாலே அந்த காரியமே கெட்டும் போகலாம். இப்படி எல்லாம் தோணினாலும் கேள்வி கேட்காமல் பகவான் சொல்லறதை செய்யறதுதான் ஆன்மீகத்தோட ரகசியம்! யாருக்கு இது கைவரப்பெற்று இருக்கோ அவனுக்கு ஆத்ம ஞானமும் தூறவும் கரதலக்கனி!

துறவு என்கிறது குருகிட்டே நம்ம அபிப்ராயத்தை துறக்கிறதுதான்! அதேதான் ஆத்ம ஞானமும்!
 

Monday, July 20, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -40
பகவானை தரிசிக்க ராமநாதபுரம் ராஜா வந்திருந்தார். அவர் வந்த போது பகவான் பாகசாலையில் கீரை ஆய்ந்து கொண்டுஇருந்தார். ராஜா வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தன் வேலையைதொடர்ந்து அதே போல செய்து கொண்டு இருந்தார். முடிக்க அவசரமே காட்டவில்லை. ராஜா காத்திருந்தார். வேலையை முடித்த பிறகு பகவான் வந்து சோஃபாவில் அமர்ந்தார்.
ராஜா நமஸ்காரம் செய்துவிட்டு பகவானுடம் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். சில சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றார். விடை பெற்றார்.
தண்டபாணி ஸ்வாமியும் இன்னும் சிலரும் அவரை வழி அனுப்ப கோவில் வரை சென்றனர். தண்டபாணிஸ்வாமிதான் அப்போது ஆசிரம நிர்வாகத்தை கவனித்து வந்தார்.செல்லும் வழியில் தண்டபாணிஸ்வாமி ராஜாவிடம் நீங்களே பார்த்தேள்! பகவான் தங்க ஒரு நல்ல கட்டிடம் இல்லை. அதுக்கெல்லாம் பணம் இல்லை. சமயத்தில் எங்களுக்கே சாப்பாடுகூட இல்லாமல் போய்விடும்என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். அதாவது நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக நன்கொடை ஏதும் தந்தால் உதவியாக இருக்கும் என்று சொன்னார்.
இந்த விஷயம் பகவான் காதுக்கு போயிற்று. அவர் கடுமையானார்.
நீங்க அந்த ராஜாவோட நம்பிக்கையை கெடுத்துட்டேள். அவாகிட்டே அரண்மனை இருக்கு; காசு இருக்கு; அது கொடுக்கிற சந்தோஷம் கூட இருக்கு. ஆனா விரக்திதான் மிஞ்சறது. காசு பணம் கொடுக்கிறது உண்மையான சந்தோஷம் இல்லைன்னுதான் கௌபீனம் கட்டிண்டு இருக்கற எங்கிட்ட வரா. நான் துக்கத்துல இருக்கேன். சுகப்பட ஏதாவது வழி உண்டான்னு கேட்டுண்டு வரா.
அவா அமைதியை தேடி இங்கே வந்தவா. நீங்க அவா கிட்டே குறைபாட்டு பாடி அவா நம்பிக்கயை கெடுத்துட்டேள். இப்ப என்ன நினைப்பா? இவனும் நிம்மதியா இல்லே. ஏன்னா பொருள் கேக்கறான்.
அவா அரண்மனைக்குப்போய் யோசிப்பா. துறவு இதுக்கெல்லாம் பதில் இல்லை. காசு பணம் இருந்தாத்தான் நிம்மதி. அது கொடுக்கறதே சந்தோஷம்னு. நீங்க ஒரு மனுஷனோட நம்பிக்கையை கெடுத்துட்டேள்.
தயவு செஞ்சு இனிமே யார்கிட்டேயும் ஸ்வாமிக்கு அது இல்லே இது இல்லேன்னு யாசிக்காதீங்கோ. பணம் காசு கேக்கவே கேக்காதீங்கோ!” என்றார் பகவான்.