Pages

Showing posts with label பிள்ளையார். Show all posts
Showing posts with label பிள்ளையார். Show all posts

Friday, August 25, 2017

விநாயக சதுர்த்தி -2017




இன்னைக்கு நம்ம ஆளோட பொறந்த நாள்!
எத்தனையோ விதமா தெய்வங்களோட ரிலேட் பண்ணலாம். ஆனா மனசுக்கு ரொம்ப பிடிக்கறது இந்த பிள்ளையார்தான். அதுவும் நண்பர் இன்னைக்கு (சுட்டு) போட்ட பதிவிலேந்து சுட்டு போட்ட இந்த பிள்ளையார் வெகு அழகு!


 பூஜா விதானம் : இங்கே
அதில் இன்றைய பூஜைக்கான சங்கல்பத்தில் மாற்றம்:
ஹேமலம்ப நாம (2017) ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ
மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுப நாம யோக வணிஜா கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சுபதிதௌ,

Thursday, September 17, 2015

பிள்ளையார் ஸ்பெஷல்!



பிள்ளையாரைப்போல எல்லாருக்கும் பிடிச்ச தெய்வம் வேற இல்லை. சைவரோ வைணவரோ ஸ்மார்த்தரோ இல்லை இன்ன மதம்ன்னு இல்லாவரோ அனேகமா எல்லாருக்குமே இவரை ரொம்ப பிடிக்கும். பக்தனோட கற்பனைக்கு ஏற்ப வளைஞ்சு கொடுக்கறவர் இவர். பிடிச்சு வெச்சா பிள்ளையார் ந்னு சாணியோ களிமண்ணோ மஞ்சள் பொடியோ எதை பிடிச்சு வெச்சு இதுல வான்னு கூப்டாலும் வந்துடுவார். நம்மால் முடிஞ்ச அளவுக்கு எவ்வளோ எளிய பூஜைன்னாலும் ஏத்துப்பார். நம் பக்திக்கு ஏற்ப பலனும் கொடுத்துடுவார்!

பூஜை பண்ணமுடியாம அமீரகத்துல ஒட்டகம் மேய்க்கறவங்க, ஒபாமாவகத்துல பொட்டி தட்றவங்க போல சிலருக்கு இந்த பதிவு, பூஜைன்னு தனியா பண்ண முடியலைன்னாலும் கீழே கொடுத்து இருக்கற நாமாவளியை படிச்சு வேண்டிக்குங்க! போதும்!
நேத்து கொடுத்த பைல்ல இருக்கறது சித்திவிநாயக அஷ்டோத்திரம்.
இது வேற.

அதுக்கு முன்ன நம் ப்ரெண்ட்ஸ் க்கு பிடிச்ச மாதிரி ஒரு வித்தியாசமான பிள்ளையார். பக்தன் கற்பனைக்கு தக்கபடி வருவார்ன்னு சொன்னேன் இல்லையா? :-) நன்றி: தினமலர்.




ஶ்ரீக³ணேஶாஷ்டோத்தரஶதநாமாவலீ ॥
ௐ அகல்மஷாய நம: ।
ௐ அக்³னிக³ர்பச்சிதே³ நம: ।
ௐ அக்³ரண்யே நம: ।
ௐ அஜாய நம: ।
ௐ அத்³புத மூர்திமதே நம: ।
ௐ அத்யக்க்ஷாய நம: ।
ௐ அனேகாசிதாய நம: ।
ௐ அவ்யக்த மூர்தயே நம: ।
ௐ அவ்யயாய நம: ।
ௐ அவ்யயாய நம: ।
ௐ ஆஶ்ரிதாய நம: ।
ௐ இந்த்³ர ஶ்ரீப்ரதா³ய நம: ।
ௐ இக்ஷு சாப த்ருʼதே நம: ।
ௐ உத்பலகராய நம: ।
ௐ ஏகத³ந்தாய நம: ।
ௐ கலிகல்மஷ நாஶனாய நம: ।
ௐ காந்தாய நம: ।
ௐ காமினே நம: ।
ௐ காலாய நம: ।
ௐ குலாத்³ரி பேத்த்ரே நம: ।
ௐ க்ருʼதினே நம: ।
ௐ கைவல்ய ஶுக²தா³ய நம: ।
ௐ க³ஜானனாய நம: ।
ௐ க³ணேஶ்வராய நம: ।
ௐ க³தினே நம: ।
ௐ கு³ணாதீதாய நம: ।
ௐ கௌ³ரீ புத்ராய நம: ।
ௐ க்³ரஹ பதயே நம: ।
ௐ சக்ரிணே நம: ।
ௐ சண்டா³ய நம: ।
ௐ சதுராய நம: ।
ௐ சதுர் பா³ஹவே நம: ।
ௐ சதுர் மூர்தினே நம: ।
ௐ சந்த்³ரசூடா³மண்யே நம: ।
ௐ ஜடிலாய நம: ।
ௐ துஷ்டாய நம: ।
ௐ த³யாயுதாய நம: ।
ௐ த³க்ஷாய நம: ।
ௐ தா³ந்தாய நம: ।
ௐ தூ³ர்வா பி³ல்வ ப்ரியாய நம: ।
ௐ தே³வாய நம: ।
ௐ த்³வி ஜப்ரியாய நம: ।
ௐ த்³வை மாத்ரீயாய நம: ।
ௐ தீராய நம: ।
ௐ நாக³ராஜ யஜ்ஞோபவீதவதே நம: ।
ௐ நிரங்ஜனாய நம: ।
ௐ பரஸ்மை நம: ।
ௐ பாபஹாரிணே நம: ।
ௐ பாஶாங்குஶ தராய நம: ।
ௐ பூதாய நம: ।
ௐ ப்ரமத்தாதை³த்ய பயதாய நம: ।
ௐ ப்ரஸன்னாத்மனே நம: ।
ௐ பீ³ஜாபூர ப²லா ஸக்தாய நம: ।
ௐ பு³த்³தி ப்ரியாய நம: ।
ௐ ப்³ரஹ்மசாரிணே நம: ।
ௐ ப்³ரஹ்ம த்³வேஷ விவர்ஜிதாய நம: ।
ௐ ப்³ரஹ்ம விது³த்தமாய நம: ।
ௐ பக்த வாஞ்சி²த தா³யகாய நம: ।
ௐ பக்த விக்ன விநாஶனாய நம: ।
ௐ பக்திப்ரியாய நம: ।
ௐ மாயினே நம: ।
ௐ முனி ஸ்துத்யாய நம: ।
ௐ மூஷிக வாஹனாய நம: ।
ௐ ரமார்சிதாய நம: ।
ௐ லம்போ³³ராய நம: ।
ௐ வரதா³ய நம: ।
ௐ வாகீ³ஶாய நம: ।
ௐ வாணீப்ரதா³ய நம: ।
ௐ விக்னராஜாய நம: ।
ௐ விதயே நம: ।
ௐ விநாயகாய நம: ।
ௐ விபுதே³ஶ்வராய நம: ।
ௐ வீத பயாய நம: ।
ௐ ஶக்தி ஸம்யுதாய நம: ।
ௐ ஶாந்தாய நம: ।
ௐ ஶாஶ்வதாய நம: ।
ௐ ஶிவாய நம: ।
ௐ ஶுத்³தாய நம: ।
ௐ ஶூர்பகர்ணாய நம: ।
ௐ ஶைலேந்த்³ர தனுஜோத்ஸங்க³ கேலனோத்ஸுக மானஸாய நம: ।
ௐ ஶ்ரீகண்டா²ய நம: ।
ௐ ஶ்ரீகராய நம: ।
ௐ ஶ்ரீதா³ய நம: ।
ௐ ஶ்ரீப்ரதயே நம: ।
ௐ ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம: ।
ௐ ஸமஸ்த ஜக³தா³ தாராய நம: ।
ௐ ஸமாஹிதாய நம: ।
ௐ ஸர்வ தனயாய நம: ।
ௐ ஸர்வரீ ப்ரியாய நம: ।
ௐ ஸர்வ ஸித்³திப்ரதா³ய நம: ।
ௐ ஸர்வ ஸித்³திப்ரதா³யகாய நம: ।
ௐ ஸர்வாத்மகாய நம: ।
ௐ ஸாம கோஷ ப்ரியாய நம: ।
ௐ ஸித்³தார்சித பதா³ம்பு³ஜாய நம: ।
ௐ ஸித்³திதா³யகாய நம: ।
ௐ ஸ்ருʼஷ்டி கர்த்ரே நம: ।
ௐ ஸோம ஸூர்யாக்³னி லோசனாய நம: ।
ௐ ஸௌம்யாய நம: ।
ௐ ஸ்கந்தா³க்³ரஜாய நம: ।
ௐ ஸ்துதி ஹர்ஷிதாய நம: ।
ௐ ஸ்து²ல கண்டா²ய நம: ।
ௐ ஸ்து²ல துண்டா³ய நம: ।
ௐ ஸ்வயங்கர்த்ரே நம: ।
ௐ ஸ்வயம் ஸித்³தாய நம: ।
ௐ ஸ்வ லாவண்ய ஸுதாஸாரஜித மன்மத² விக்³ரஹாய நம: ।
ௐ ஹரயே நம: ।
ௐ ஹ்ரூʼஷ்டா²ய நம: ।
ௐ ஜ்ஞானினே நம: ।
இதி ஶ்ரீ வினாயக அஷ்டோத்தரஶத நாமாவலீ ஸம்பூர்ணம் ॥
 

பிள்ளையார் சதுர்த்தி - டாக்குமெண்ட் திருத்தம்.


நேற்று இட்ட பதிவில் குறிப்பிட்ட டாக்குமெண்டில் சிறு திருத்தம்.
ஸங்கல்பத்தில் கன்யா மாஸே என்பதற்கு பதிலாக ஸிம்ஹ மாஸே என திருத்திக்கொள்ளவும். கன்யா மாஸம் மத்யான வேளையில்தான் பிறக்கிறது.
​​
தவறுக்கு வருந்துகிறேன்.

Wednesday, September 16, 2015

பிள்ளையார் சதுர்த்தி

 
நம்ம ப்ரெண்ட் பிள்ளையாருக்கு நாளைக்கு பொறந்த நாளாம். கொண்டாட வேண்டாமா?
கொழுக்கட்டை, பாயசம்ன்னு அவர் பேரைச்சொல்லி நாம் சாப்டாலும் அவருக்கு ஏதாவது செய்யணுமே?
பூஜை செய்யலாம். அதுக்கான பூஜா முறை இந்த பிடிஎஃப்ல இருக்கு! தேவையான படி பயன்படுத்திக்கொள்ளவும்.
சில இலைகள், பூக்கள் பிள்ளையாருக்கு விசேஷம்.  அதை இப்பவே பாத்து முடிஞ்சால் சேகரிச்சு வெச்சுக்கலாம்.

https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfYjZoM2pDNUNBeU0/view?usp=sharing

டாக்குமெண்டில் சிறு திருத்தம்.
ஸங்கல்பத்தில் கன்யா மாஸே என்பதற்கு பதிலாக ஸிம்ஹ மாஸே என திருத்திக்கொள்ளவும். கன்யா மாஸம் மத்யான வேளையில்தான் பிறக்கிறது.
​​
தவறுக்கு வருந்துகிறேன்.

Friday, September 13, 2013

பிள்ளையார் விசர்ஜனம்...


பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சாச்சு! அங்கங்க ஏற்கெனெவே விசர்ஜன நிகழ்வுகளும் நடக்க ஆரம்பிச்சாச்சு.
வருஷா வருஷம் இதை ஒட்டி சில கேள்விகள் எழும். சில விஷயங்கள் விவாதிக்கப்படும்.
நீர்நிலை மாசு படுது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நீர்நிலைகள் மாசு படுவது பத்தி கவலைப்பட்டுத்தான் நீர்நிலைகளையே காணாமல் போகச்செய்கிறார்கள் என்று தோன்றுகிறது! போரூர் ஏரி தனியார் உடமை என்று சொல்லி அதை ஒரு பகுதியில் மண் போட்டு தூர்க்கிறார்கள் என்று செய்தி படித்தேன்.

முன் காலத்தில் வீட்டுக்கு வீடு கிணறு ஊருக்கு ஊர் குளம் இருந்த காலத்தில் பூஜை முடிந்து பிள்ளையரை அதில் சேர்ப்பதில் கஷ்டமில்லை. இப்போதோ கிணறே கிடையாது. ஊருக்கு ஊர் குளமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லை.

எங்கிருந்து பிள்ளையார் செய்ய மண் வந்ததோ அங்கேயே அது திரும்பிவிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் கலெக்ஷன் சென்டர் வைத்து அங்கே மண் பிள்ளையாரை பெற்று அவர் வந்த இடத்தில் சேர்க்க வழி செய்யலாம்.

இன்னொரு விஷயம் பிள்ளையாரை விசர்ஜனம் செய்கிறேன் பேர்வழி என்று விநாயகர் சிலைகளை காலால் உதைத்து ஒடித்து எல்லாம் செய்கிறார்கள் என்பது.
இதைத்தான் முக்கியமாக சொல்ல வந்தேன். இதில் நம் பேதமை கொஞ்சம் இருக்கிறது.
ஆன்மீகத்தில் ஒரு வழி அத்வைதம். இது மிக உயர்ந்த வழி எனப்படுகிறது. இதன் படி பார்த்தால் உதைப்பவனும் இல்லை உதை வாங்குகிற வஸ்துவும் இல்லை. ஆனால் இந்த நிலையில் சாதாரண மக்களாகிய நாம் இருக்க இயலவில்லை. இதை விட்டு விடலாம்.
சாதாரண மனித மட்டத்தில் இருந்து சரியாக இருந்து யோசித்தால் சில விஷயங்கள் புரிய வரலாம்.
கோவிலில் வைக்க ஒரு சிற்பி கல்லை செதுக்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க செதுக்க அது உருவம் பெறுகிறது. ஏறத்தாழ முழு உருவம் பெற்றுவிட்ட நிலையிலும் அவன் அதன் மீது ஏறி நின்று கூட வேலை செய்வான். அதில் அவன் தவறேதும் காண்பதில்லை. ஏன் என்றால் அது இன்னும் கல்தான். அது எப்போது ஸ்வாமி ஆகிறது? எப்போது அதை நெல்லிலும் நீரிலும் இட்டு வாசம் செய்வித்து மந்திரங்கள் ஓதி கண் திறந்து சடங்குகளை பூர்த்தி செய்கிறார்களோ அப்போதுதான் அது ஸ்வாமித்வம் பெறுகிறது. இப்போது அந்த சிற்பியை கூப்பிட்டு காலால் மிதி பார்க்கலாம் என்றால் அபசாரம் அபசாரம் என்பான்! விதிகள் படி பூஜைகள் நடக்க நடக்க அந்த இறைத்தன்மை அதிகரிக்கிறது. மாறாக பல வருஷங்களாக கும்பாபிஷேகம் செய்யாமலும் நித்திய பூசைகள் சரிவர இல்லாமலும் போனால் அப்போது அங்கே ஸ்வாமித்வம் குறைகிறது.

பூஜையின் போதே எப்படி ஒரு மஞ்சள் பிள்ளையாருக்கோ, சரஸ்வதி படத்துக்கோ எப்படி ஸ்வாமித்வம் வருகிறது? ப்ராணப்ரதிஷ்டை என்று செய்து பூஜை முடியும் வரை ப்ரீதி பாவத்துடன் இந்த சித்திரத்தில் / பிம்பத்தில் இரு என்று சொல்ல அந்த சித்திரத்தில்/ பிம்பத்தில் இறைத்துவாம் வருகிறது. இப்படி சங்கல்பம் செய்வதால் பூஜை முடிந்த பின் 'யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி' - உன் இடத்துக்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல அந்த இறைத்துவம் பொது இறைத்துவத்துடன் கலந்து விடுகிறது. அதன் பின் மஞ்சள் பிள்ளையார் வெறும் மஞ்சள்தான். படம் வெறும் சித்திரம்தான்.

பிள்ளையார் சதுர்த்தி சமாசாரமும் அப்படித்தான். பிள்ளையார் பிம்பத்தை மண்ணிலோ ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸீலோ காகிதத்திலோ செய்து பூஜை செய்ய சங்கல்பத்தால் அங்கே ஸ்வாமித்வம் வந்துவிடுகிறது. விசர்ஜன காலத்தில் கற்பூரம் காட்டி போய் வா என்று அனுப்பிவிட்டால் ஸ்வாமித்வம் போய் விடுகிறது! மீதி இருப்பது வெறும் மண் / ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்/ காகிதம். இதை நடைமுறைக்கு தகுந்தபடி டிஸ்போஸ் செய்வதில் ஒரு ஆட்சேபனையும் இருக்க முடியாது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பல வருஷங்கள் உயிருடன் இருந்த ஆசாமியை இறந்தபின் கொஞ்சம் மரியாதையுடன் கொண்டு எரிப்பது / புதைப்பது போல இதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடப்பதில்லை. அதனால் நமக்கு மனசு சமாதானம் ஆவதில்லை.இதுக்கு ரொம்ப துன்பம் வேண்டாம் என்கிறதே சொல்ல வந்தது.
நாமும் சோம்பேறித்தனமாக வீட்டில் இருக்கிற மண் பிள்ளையாரை கொண்டு வந்து உற்சவம் நடக்குமிடத்தில் வைத்துவிட்டு ஒரு ரூபாயை உண்டியில் போட்டுவிட்டு பொறுப்பு முடிந்ததாக எஸ்கேப் ஆகிவிடுகிறோம்! வண்டியில் இப்படி சேரும் ஆயிரக்கணக்கான பிள்ளையாரை என்ன செய்ய? தூக்கித்தான் எறிவார்கள். இதற்கு புலம்பினால் என்ன செய்ய? நமக்குத்தான் சிரத்தை போதவில்லை.

நம் வீட்டு பிள்ளையாரை நாமே டிஸ்போஸ் செய்வோம்