Pages

Saturday, August 20, 2022

ஶ்ராத்தம் - 57 - நிறைவு




இந்த ஶ்ராத்தங்களால் யாரெல்லாம் த்ருப்தி அடைகிறார்கள் என்று பார்க்கலாம்.
நமது வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபிகளான தந்தை தாத்தா அவரது அப்பா ஆகியோ த்ருப்தி அடைவது தெளிவு. உபசாரங்களாலும், ஹோமத்தாலும் அன்னத்தை 'ஏஷதே தத' என்று மந்திரங்களால் அர்ப்பணிப்பதாலும் அவர்கள் சந்தோஷிக்கிறார்கள். அதே போல விஶ்வேதேவர்களும் விஷ்ணுவும் நம்மை ஆசீர்வாதம் செய்கிறார்கள்.
ஈஶான விஷ்ணோ என்னும் மந்திரத்தால் அந்த தேவதைகளை த்ருப்தி செய்து பித்ருக்கள் முக்தி அடைய வழி செய்கிறோம்.
விகிரான்ன சமயத்தில்: அஸோமபா மந்திரத்தால்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னம்.
அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னம்.
வாய்ஸ பிண்டத்தால்: யே அக்னி தக்தா: விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படியான அக்னி இன்றி எரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.
பிண்டப்ரதானத்தில் பிண்டம் கொடுப்பதால் பித்ருக்களை அனுசரித்து வரும் பித்ருக்களுக்கும் த்ருப்தி. இது உபஸ்தான மந்திரத்தால் தெரிகிறது. 'யே சத்வாமனு' என்று சொல்லி பிண்ட லேபத்தை கொடுத்து பித்ருக்களை சார்ந்து உள்ளவர்களுக்கு த்ருப்தி.
பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’ என்று சொல்லி பத்னிக்கு கொடுக்க வேண்டும். இப்படியும் ஒரு நல்லது நடக்கிறது.
மேல் வஸ்திரத்தை பிழிவதால் ( மந்திரம்: யே கே சாஸ்மத்குலே) தன் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் பலனடைகிறார்கள்.
கீழ் வஸ்த்ரத்தை பிழியும்போது (மந்திரம்: உச்சிஷ்ட பாகினோ) ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும் என்கிறோம்.
தீர்த்தத்ஶ்ராதத்தால் இன்னும் பலர் த்ருப்தி அடைகிறார்கள்.
ஆகவே இவ்வளவு பேர் த்ருப்தி அடைய, பித்ருக்களின் ஆசிகளைப்பெற ஶ்ரத்தையுடன் நாம் ஶ்ராத்தம் செய்ய இறைவன் துணை நிற்கட்டும்.!
ஶ்ராத்த சமாசாரங்கள் நிறைந்தன.
🙏
 

Wednesday, August 17, 2022

ஶ்ராத்தம் - 56 பிண்ட பித்ரு யக்ஞம் -3




பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
மையிடுதல்: ஆங்க்‌ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு
ஆங்க்‌ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னு
ஆங்க்‌ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு
நல்லெண்ணை தருதல்
அப்யங்க்‌ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு
அப்யங்க்‌ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னு
அப்யங்க்‌ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு
துணியின் நூல் தருதல்:
ஏதானி வ: பிதரோ வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிதரோ மா யோஷ்ட
ஏதானி வ: பிதாமஹா வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிதாமஹா மா யோஷ்ட
ஏதானி வ: பிரபிதமஹா வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிரபிதமஹா மா யோஷ்ட
பின் ஜபம் : நமோ வ: பிதரோ ரஸாய ... பூயாஸம்|
உபஸ்தானம்: க்ருஹான்ன: பிதரோ தத்த ஸதோ வ:பிதரோ தேஷ்ம.
கும்பத்தில் இருந்து நீர் வார்த்தல்: ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் * பித்ரூன்னு
மீண்டும் உபஸ்தானம் :மனோன்வா ஹுவாமஹே * ஸசேமஹி||
பின் நின்று கொண்டு பித்ருக்கள் கிளம்புமாறு ப்ரார்த்தனை - - உத்திஷ்டத பிதர: * பாகதாம் தேவதாஸு
பித்ருக்களை அனுப்பிவைக்க மந்த்ரம் - பரேத: பிதரஸ் * ஸதமாதம் மதந்தி
உபவீதி
ப்ரஜாபதே நத்வ...
கார்ஹ்யபத்யம் /ஔபாஸனாக்னி அருகில் செல்க. அதன் உபஸ்தானம்:
யதந்தரிக்‌ஷம் ப்ருத்வீ * கரோது மாமனேனஸம்|
ப்ராசீனாவீதி
குழந்தை வேண்டி இருந்தால் :
'அபாம் ஸ்தௌஷதீனாகும் * கர்பம் தத்ஸ்வ' என்று சொல்லி மத்திய பிண்டத்தை பத்னிக்கு கொடுத்து உண்ண செய்க.
பத்னிக்கு மந்த்ர ஆவ்ருத்தி:
'ஆதத்த பிதரோ * புருஷோஸத் |
யே ஸஜாதாஸ்ஸமனஸோ * ஶதகும் ஶமாஹா| - இதை சொல்லி யஜமானன் உண்ண வேண்டும். (செய்யாமலும் இருக்கலாம்)
மிகுந்த பிண்டங்களை சேர்த்து எடுக்கவும்.
யே ஸமானாஸ்ஸமனஸ: பிதரோ * தேவேஷு கல்பதாம். என்று சொல்லி தர்ப்பைகளை சேர்த்து அக்னியில் இடுக.

அபூன்னோ தூதோ * புனரப்யேஹி தேவான்
இதைச்சொல்லி ஏகோல்முக அக்னியை தக்‌ஷிணாக்னியில் மீண்டும் சேர்க்க வேண்டும்.
(இதற்கு மேல் ஜீவபிதாக்களுக்கும் உண்டு.)
உபவீதி. பாத்திரங்களை புரோக்‌ஷித்து இரண்டிரண்டாக எடுத்து வைக்கவும்.
முகராத பிண்டங்களை எடுத்து வைக்கவும். இதை ப்ராஹ்மனன் சாப்பிடலாம். ஆனால் சருஸ்தாலீயில் இருப்பது நுகரப்பட்டதால் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கலாகாது. கிணறு முதலியவற்றில் தான் சேர்க்கவேண்டும்.
ஏகோல்முக அக்னி நடுவில் அணைந்து இருந்தால்: அஸ்மின் பிண்ட பித்ரு யக்ஞே ஏகோல்முகாக்னி நாஶ ப்ராயச்சித்தார்த்தம் பூர்ணாஹுதி ஹோஷ்யாமி - பூர் புவ.... ப்ரஜாபதய இம்
அஸ்மின் பி.பி யக்ஞே யஜுர் ப்ரேஷ ப்ராயச்சித்தம் ஹோஷ்யாமி - புவ ஸ்வாஹா: வாயவ இதம்.
காயே ந வாசா.. 
 

Tuesday, August 16, 2022

ஶ்ராத்தம் - 55 பிண்ட பித்ரு யக்ஞம் -2




அடுத்து பிண்டப்ரதானம்.

அத்வர்யு - ப்ராசீனாவீதி
ஏகோல்முகம் என்னு அக்னியை தக்‌ஷிணாக்னியில்/ ஔபாஸனத்திலிருந்து ஒரு புகையும் விராட்டித்துண்டத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏகோல்முகத்திலுள்ள அக்னி மறுபடியும் ஔபாஸனத்திற்கு வந்து சேரும் வரையில் அணையாமல் இருக்கவேண்டும். அணைந்தால் மறுபடியும் இதே மந்த்ரத்தால் எடுத்துவைக்கவும், ப்ராயச்சித்தமும் உண்டு. அதற்கு மந்த்ரம்:
அபயந்த்வசுரா: * ப்ரனுதஸ்வ லோகாத்||
(மந்திரங்களுடன் முழு ப்ரயோகம் தேவையானவர் எனக்குத்தெரிவிக்கவும்.)

வலது கையால் தென்கிழக்காக ஸ்ப்யத்தால் ஒரே ஒரு கோடு கிழித்து நீர் தொட்டு
உதீரதாம் அவ * பிதரே ஹவேஷு என்று நீரால் அவோஷணம் செய்து ஏகோல்முகத்தை தென் நுனியில் வைக்க வேண்டும்.
யஜமானனும் அத்வர்யுவும் ப்ராசீனாவீதியாகி கர்மம் செய்க.
பின் யஜமானன் முன்னேயே வைத்த உத கும்பத்தில் இருந்து மார்ஜனம் செய்யவேண்டும். ஒரு முறை மந்திரத்துடம், இரு முறை மந்திரமில்லாது.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
... மூன்று பரிசேஷணம்.
மூன்று பிண்டங்கள் பிடிக்கவும். ஸ்தாலியில் சிறிது மீதி இருக்க வேண்டும்.
வலது கையால் பிண்டம் அளிக்கவும்.
ஏதத்தே ததஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர வஸுரூப .. யே சத்வாமனு
ஏதத்தே பிதாமஹாஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர ருத்ரரூப... யே சத்வாமனு
ஏதத்தே ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர ஆதித்ய ரூப
யே சத்வாமனு
மந்திரமில்லாமல் நான்காவது வைக்கலாம் வைக்காமலிருக்கலாம்.
(அமுக என்னுமிடத்தில் தம் கர்மாவுக்கானதை இட்டுக்கொள்ளவும்)
.உபஸ்தானம்:
யன்மே மாதா * அபபத்யதாம்|
பித்ருப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
பிதாமஹேப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: இது உபஸ்தானம்.
அத்ர பிதரோ யதா பாகம் மந்தத்வம்.
இப்படிச் சொல்லி பின் அக்னிக்கு முதுகைக்காட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் உட்காரவும்.
அமீமதந்த பிதரோ ஸௌம்யா: .. என்று மீண்டும் திரும்பிக்கொண்டு அக்னியை பார்க்கவும்.
ஸ்தாலியில் மீதமாக வைத்த சருவை நுகரவும்.அதற்கு மந்திரம்: யே ஸமானாஸ்ஸமனஸ: * வீரம் தத்த பிதர:
பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.
 

Monday, August 15, 2022

ஶ்ராத்தம் - 54 பிண்ட பித்ரு யக்ஞம் -1





இந்த இழையின் கடைசியில் பிண்ட பித்ரு யக்ஞம். இத்துடன் பதிவுகள் முடியும்.
இதுவும் அமாவாசை தர்ப்பணமும் செய்தால் அந்த மாதன் ஒருவன் செய்ய வேண்டிய ஶ்ராத்த காரியங்கள் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். (வருஷாப்திகம் தவிர). நீளம் கருதி கொஞ்சம் தந்தி பாஷை.
இதை ஆஹிதக்னியோ ஔபாசனம் செய்பவரோ செய்யலாம்.
தந்தை ஜீவித்து இருப்பவருக்கு கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.
காலம்: பிண்டபித்ருயஜ்ஞ காலம் -
நல்ல பஞ்சாங்கங்களில் பிண்ட பித்ரு யஜ்ஞம் என்று அமாவாஸ்யை அல்லது அதற்கு அடுத்த நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அமாவாஸ்யை இன்றும் இருந்து நாளை காலையிலும் சிறிது இருந்தால் நாளை செய்யவேண்டும். மற்றபடி அமாவாஸ்யை அன்றே செய்யவேண்டும்.
பிற்பகல் வேளையிலோ ஸாயம் ஔபாஸனத்திற்கு முன்பு ஸூர்ய ரச்மிகள் மரங்களின் உச்சிகளைத் தொடும் நேரம் வந்தவுடனோ செய்யவேண்டும்.
ப்ராசீனாவிதியாகி ஸங்கல்பம் செய்யவும் - பிண்டபித்ருʼயஜ்ஞேன யக்ஷ்யே .
வித்யுதஸி இல்லை
ப்ராசீனாவீதியாக அடிப்பகுதியுடன் கூடிய தர்பைகளைக் வெட்டி கொண்டுவரவும் - (அபாம் மேத்யம்) (இது ஜீவபிதாக்களுக்குக் கிடையாது.)
ஔபாஸன அக்னிக்கு/ தக்‌ஷிணாக்னிக்கு அப்ரதக்ஷிணமாக பரிஸ்தரணம் போடவும். கிழக்கிலும் மேற்கிலும் தர்பைகளின் நுனி தெற்கு புறம். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கு புறம். அக்னிக்குத் தெற்கே சில தர்பைகளைப் போட்டு அவைகளின் மேல் பாத்ரங்களை ஒவ்வொன்றாக வைக்கவும். பாத்ரங்களின் நுனி தென்கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
பாத்ரங்களாவன - மரக்கரண்டி, ஆஜ்யஸ்தாலீ, சருஸ்தாலீ, அரிசி எடுக்க கிண்ணம், உபஸ்தரணாதிகளுக்கு தர்வீ, மண்பாத்ரம், ஒரு தொன்னை.
உபவீதி
மண் பாத்திரத்தில் தர்ப்பை ஒன்று வைத்து அரிசி இடவும். - பித்ருப்யோ வோ ஜுஷ்டம் நிர்வபாமி.
இதை சரு ஸ்தாலியில் சேர்க்கவும்.
ப்ராசீனாவீதியாக அக்னியில் அரைவேக்காடு சருவாக்கி இறக்கவும்.
‘அபஹதா அஸுரா ரஷாகும்ஸி பிஶாசா வேதிஷத:’ ஸ்ப்யத்தால் தென் கிழக்காக கோடு போட்டு அப உப...
ஶுந்ததாம் பிதர என்று நீரால் அவோக்‌ஷணம்.
ஆயந்து பிதரோ மனோ ஈஜவஸ: என்று அபிமந்த்ரணம்.
ஸக்ருதாச்சின்னம்* சானுகைஸ்ஸஹ தென்கிழக்காக தர்பைகளை வேதியில் பரப்புக.
ப்ரதான ஹோமம்:
சருவில் அபிகாரம். பின் வேதியில் இறக்கி வைக்கவும். சரு ஸ்தாலீ, மேக்‌ஷணம் சாதனம்.
உபச்சாரத்திற்காக வேதிக்கு தெற்கே படுக்கை, தலையணை, கண்மை, எண்ணை, ஜலகும்பம் ஆகியன வைக்கவும்.
உபவீதியாகி வலது காலை ஊன்றி குத்திட்டு அமர்ந்து ...
மேக்‌ஷணத்தில் உபஸ்தீர்ய. சரு எடுத்து மேலே அபிகாரம் பாதி மட்டும் ஹோமம். மீதியை தொன்னை/ மண் பாத்திரத்தில் சேமிக்கவும்.
ஹோமம் ஸோமாய பித்ருபீதாய ஸ்வதா நமஹ. இதம்
அதே போல் - யமாயாங்கிரஸ்வதே பித்ருமதே ஸ்வதா நமஹ. இதம்.
உபஸ்தரணம் அபிகாரம் இல்லாமல் இந்த சேமித்த மீதியை எடுத்து ஹோமம்: அக்னயேகவ்யவாஹனாய ஸ்வதா நமஹ. இதம்.
மந்திரமில்லாமல் மேக்‌ஷனத்தையும் அக்னியில் இடுக.
(இதுவரையில் தான் ஜீவபிதாக்களுக்கு முக்கிய ப்ரயோகம். இதன்பிறகு ப்ராயச்சித்தாதிகள் மட்டும் உண்டு. அவைகளுக்குக் கடைசியில் பார்க்கவும்.)
அடுத்து பிண்டப்ரதானம்.
 

Sunday, August 14, 2022

ஶ்ராத்தம் - 53




 


முன் பதிவுகளில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று. (இதை பின்னால் மின் நூலாக்கும்போது சரியான இடத்தில் சேர்த்து விடுகிறேன்.)

இந்த ஶ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். இது எல்லா ஸ்நானங்களுக்கு பின் செய்யக்கூடியது. பூணூலை இடம் செய்து கொண்டு… 
 
மேல் வஸ்திரத்தை பிழிய மந்திரம்: யே கே சாஸ்மத்குலே ஜாதா அபுத்ரா கோத்ரஜா ம்ருதா: தே க்ரஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ரம் நிஷ்பீடனோதகம். பொருள்: என் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் என்னால் கொடுக்கப்பட்ட வஸ்திரத்தை பிழிந்த ஜலத்தை க்ரஹித்துக் கொள்ள வேண்டும்.

கீழ் வஸ்த்ரத்தை பிழிய மந்திரம்:உச்சிஷ்ட பாகினோ தாஸா யே ம்ருதாஸ்தேத்வமந்த்ரகா: துப்யந்து தருதாம் ப்ராப்தா மம ஸம்பந்தினோ ம்ருதா: - பொருள்: ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும்.

பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும்.
 

Friday, August 12, 2022

ஶ்ராத்தம் - 52




ஆசனத்தில் வைக்கப்பட்ட அன்னம் முதலியன; காலால் தொடப்பட்டவை;; அசுத்தமான இடங்களில் இருந்து வந்தவர்கள் தொட்டவை, பழையது, இரண்டு முறை சமைக்கப்பட்டது, முன்னால் சாப்பிடப் பட்டது; சுக்கான், ரோமம், புழுக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது; அதிக உப்பு உள்ளது, முந்தைய நாளில் தயார் செய்யப்பட்ட பக்ஷணங்கள், தோஷமுள்ளவர்கள் தொட்டது துணியால் விடப்பட்டது ஆகியவை விலக்க தக்கன. அன்னம் சூடாக இருக்க வேண்டும் என்று அதை மீண்டும் அடுப்பின் மேல் வைக்கலாம், தவறில்லை.
போக்தா சாப்பிடும் முன் அதிலிருந்து எவரும் எடுத்து சாப்பிட்டு விட்டால் அது சிரார்த்தத்துக்கு உதவாது. உப்பை பிரத்யட்சமாக வைக்கக்கூடாது. ஆன்ஹிக காண்டத்தில் தினசரி உணவில் எது தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறதோ அதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். சமையலுக்காக அரிசியை பாயி போடுவது முதல் போஜனம் பூர்த்தி ஆகும் வரை உணவை மது அருந்துபவன், வியபசாரி,ஆகியவர்கள் பார்க்கக்கூடாது. பன்றி, கோழி, நாய், பூனை, வீட்டு விலக்கான பெண்கள், பிரசவம் ஆகி தீட்டு கழியாதவர்கள், தீட்டு உடையவர்கள் பெண்ணின் சம்பாத்தியத்தில் ஜீவனம் நடத்துபவர்கள், பணத்தை வட்டிக்கு விட்டு ஜீவனம் நடத்துபவர்கள், அங்கஹீனம் உள்ளவர்கள், காரணமில்லாமல் சடை உள்ளவர்கள், மொட்டை அடித்துக் கொண்டவர்கள், மகாபாதகம் செய்தவர்கள், அலி - இவர்கள் சாப்பிடும் பிராமணர்களை பார்க்கக்கூடாது. கஷாயம் அணிந்தவர்கள் குஷ்டரோகம் உடையவர்கள் பதிதன் கர்ப்பத்தை கொன்றவர்கள் கலப்பு திருமணம் செய்த பிராமணர்கள் இவர்களும் விலக்கத் தக்கவர்கள்.
அப்படி பார்த்துவிட்டால் அன்னத்துக்கு சுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஹோமம்,ப்ராம்ஹண போனம், பிண்டப்ரதானம் ஆகிய உக்கிய காரியங்களுக்கு வேறு அன்னம் தயார் செய்ய வேண்டும். பக்குவமான ஹவிஸுகளை தள்ள சக்தி இல்லை என்றால் மண்ணுடன் கூடிய தண்ணீரால் ப்ரோக்ஷணம் செய்யவும். வெண்கடுகு கருப்பு எள் ஆகியவற்றையும் இறைக்க வேண்டும் குரு சூரியன் அக்னி ஆடு இவற்றை அவசியம் தரிசனம் செய்யவேண்டும். சுத்தவதிகள் கூஶ்மாண்டிகள் பாவமானிகள் தரத்ஸமங்கள் என்ற மந்திரங்களால் அபிமந்த்ரணம் செய்த ஜலத்தை தர்ப்பைகளால் தெளித்தும் சுத்திகரிக்கச் செய்யலாம் ரோமம் முதலியவற்றால் அசுத்தம் ஆனால் எவ்வளவு எடுத்து எறிய முடியுமோ அதை விலக்கி விட்டு மீதியை காயத்ரியால் ப்ரோக்‌ஷித்து அல்லது நெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
 

Wednesday, August 10, 2022

ஶ்ராத்தம் - 51




 
இன்னும் சமையல் சமாசாரங்கள் பாக்கி இருக்கிறது.

கருப்பு உளுந்து, எள், யவை, நெல், கோதுமை, பயறு, கடுகு ஆகியவை ஶ்ராத்தத்தில் பயன்படுத்தலாம். எள் உளுந்து பயறு தவிர்த்த மற்ற கருப்பு தானியங்களை பயன்படுத்தக்கூடாது. கோதுமை, உளுந்து இரண்டையும் அவசியம் பயன்படுத்த வேண்டும்.

வில்வம் நெல்லி திராட்சை பலா மாதுளை இவற்றின் பழங்கள்; குங்குமப்பூ கருவேப்பிலை எலுமிச்சை வாழை இலந்தை திப்பிலி மிளகு புடலை எல்லாவிதமான இனிப்புகள் தரமானவை. சுக்கு ஆகியவை ஏற்றுக் கொள்ளத் தக்கன. பாகற்காய் புடலங்காய் சிலாக்கியம். பசுவின் பால் நெய் காய்கறிகள் தேன் கரும்பு ரசம் வெல்லம் தும்பைப்பூ சிறுகீரை இவை கொடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும் பித்ருக்களுக்கு திருப்தி தருபவை. பாலுடன் கூடிய சர்க்கரை அவல் அளவற்ற திருப்தி கொடுக்கும். நெய் நிறைய விட வேண்டும். காட்டில் உண்டாகும் பழங்கள் கிழங்குகள் ஆகியவற்றை கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தரும். முள்ளு கத்தரிக்காய் மிகவும் சிறந்தது.

பசுவின் பால் பாயசம் ஆகியவற்றால் ஒருவருஷம் வரை பித்ருக்கள் திருப்தி அடைகின்றனர். கொடுக்கப்படும் நெல் உளுந்து கிழங்குகள் பழம் ஆகியவற்றால் ஒரு மாதம் வரை அவர்கள் திருப்தி அடைகின்றனர் கருவேப்பிலை தேன் அளவற்ற திருப்தி கொடுக்கின்றன. கொடுக்கப்படும் நெய் ஒரு வருஷம் வரை திருப்தி கொடுக்கிறது. கோதுமை மூன்று வருடங்கள் வரை திருப்தி கொடுக்கும்.

மாமிசம் கொடுப்பது ஷத்திரியர்களுக்கு என்று அறியவும். இந்தப் பட்டியல்களில் மீன் மாம்சம் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கலியுகத்தில் தடை செய்யப்பட்ட சில பல விஷயங்களில் சிராத்தத்தில் மாமிசம் கொடுப்பதும் ஒன்று.

இவை சிராத்தத்தில் விலக்க வேண்டியவை என்று ஒரு பட்டியலை பார்க்கலாம். எதாக இருந்தாலும் அதை சம்பாதிக்க பயன்பட்ட பணமானது லஞ்சம் முதலியவற்றால் அடையப்பட்டது, பதிதனால் சம்பாதிக்கப்பட்டது, அநியாயமாக சம்பாதிக்கப்பட்டது, பெண்ணை விட்டு கிடைத்தது என்று இருந்தால் சாதுக்கள் இப்படி சம்பாதிக்கப்பட்டவற்றை விலக்க வேண்டும்,

வேதத்தை விற்று சம்பாதிக்கப்பட்டது பெண்கள் சம்பாதித்தது கழுதையால் சம்பாதிக்கப்பட்டது ஆகிய தனமும் கொடுக்க தகுந்தது இல்லை.

கொள்ளு, வரகு - ஶ்ராத்தத்துக்கு உகந்ததல்ல. பெருங்காயம் - சில ரிஷிகள் அதை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் சில ரிஷிகள் விலக்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆகவே எப்படி செய்தாலும் தவறில்லை.

கருப்பு, பச்சை நிறமில்லாத பயறு, மொச்சை, துவரை ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற த்விதளங்களை (dicotyledons, இரண்டாக உடைபடும் தான்யங்கள்) கொடுக்கலாம் . முருங்கையும் மிளகாயும் சிராத்தத்தில் கூடாது. பூசணி, சுரைக்காய், கத்தரி, சிறுகீரை, பூண்டு வகைகள் எருமைப்பால்/ தயிர் ஆகியவையும் விலக்க தக்கன.

தாமிர பாத்திரத்தில் வைத்த/ உப்பு சேர்ந்த பால் கூடாது.

ராத்திரி எடுக்கப்பட்ட தண்ணீர் கூடாது. காலையில் எடுத்தே பயன்படுத்த வேண்டும்.


 

Saturday, August 6, 2022

காஶி யாத்திரை - 36 குடல்வால்





குடல்வால்? அதாங்க அபெண்டிக்ஸ்! :-)
சொல்ல நினைத்த சில விஷயங்கள் விட்டுப்போயின. எதுக்கும் சொல்லிடலாம்ன்னு...
முதலாவது நிவேதனம் குறித்து. முன்னேயே எழுதி இருக்கிறேன். இந்த காசி வாத்தியார் நிறைய கற்றவர். அப்படிப்போன்றவர்கள்தான் வழக்கமாக பையரின் நண்பர்கள். ஆச்சரியமில்லை.
பிண்ட பிரதானம் முடித்து பித்ருக்களுக்கு வடை அப்பம் அதிரசம் என்று நிவேதனம் செய்யச்சொல்லி இருக்கிறது, வழக்கத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் வாத்தியார் மற்றவர்கள் போலவே ப்ராணாய ஸ்வாஹா என்று ஆரம்பித்தார். முதல் முறை சரி என்று அது போல் செய்துவிட்டேன். இரண்டாம் முறை 'கொஞ்சம் இருங்க. நீங்க சம்ஸ்க்ருதம் படிச்சவர். நிவேதனம்ன்னா என்ன அர்த்தம்ன்னு உங்களுக்குத்தெரியும்தானே? பின்ன இந்த ப்ராணாய ஸ்வாஹா எல்லாம் எங்கே வந்தது?’ என்று கேட்டேன். அவர் 'நீங்க சொல்லறது கரெக்ட்தான். ஆனா பெரியவர்கள் செஞ்சு கொண்டு வந்ததை மாத்த எனக்கு தைரியம் இல்ல. நீங்க உங்க விருப்பப்படி செய்ங்க.’ என்றார். னும் அதிலிருந்து என் வழக்கப்படி நிவேதயாமி என்று காட்டுவதுடன் நிறுத்திக்கொண்டேன்.
இரண்டாவது ... ப்ரயாகை போனதில் இருந்து வயிற்றுப்போக்கு ஆரம்பித்து இரண்டு வாரம் சென்று கடலூர் திரும்பி வேறு மருந்து ஒரு வாரம் சாப்பிட்டுத்தான் சரி ஆயிற்று என்று சொல்லி இருந்தேன். பின்னே இவ்வளவு காரியம் செய்ய எங்கிருந்து சக்தி வந்தது என்று கேள்வி. சரியான கேள்வி!
காலை குடிக்கும் காபி அரை மணியில் வெளியே வந்துவிடும். மதிய உணவும் இரவு உணவும் அப்படியேதான். அந்த அரை மணியில் உடம்பால் என்ன எடுத்துக்கொள்ளப்பட்டதோ அவ்வளவுதான். நிச்சயமாக போறாது.
29-3-2014 இல் கோவையில் ஸ்வாமி ஓங்காரின் ப்ராணக்ரியா பயிற்சி பெற்றேன். உடலில் ப்ராண சக்தியை கூட்டுவதற்கன பயிற்சி அது. திரும்பும் போது அவர் என்னை பஸ்ஸ்டாண்டில் கொண்டு விடுவதாக சொல்லி இருந்தார். அதற்கு அவர் வந்தபோது பேச்சு எப்படியோ ப்ராண சக்தி இருந்தால் உணவு அவசியமா என்று திரும்பியது. அந்த சுவாரசியமான பேச்சில் ஏறத்தாழ பஸ்ஸை கோட்டை விட்டேன்!
இந்த காஶி பயணத்தின் போது நேரடியாக அதை அனுபவித்தாயிற்று. அறுவை சிகிச்சை இரு முறை செய்து கொண்ட நாட்கள் தவிர பயிற்சியை நிறுத்தியதே இல்லை. ‘அது இல்லாமல் என்னால் ஒரு காரியமும் எந்த நாளும் செய்ய முடியாது' என்று சொல்லும் ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார்.
இந்த ப்ராணக்ரியாதான் எனக்கு தேவையான சக்தியை கொடுத்தது என்றே நம்புகிறேன். ஸ்வாமி ஓங்காருக்கு நன்றி!
அடுத்து ஸ்வாமி ஓங்கார் காஶியில் இயற்கையாகவே மூச்சு இரு நாசிகளிலும் சமமாகப் போய் வரும் என்று சொல்லி இருந்தார். அதை உறுதிப்படுத்திக்கொள்ள நானும் ஆர்வத்துடன் இருந்தேன். முதல் நாளே உண்மைதான் என்று தெரிந்தது. என் ஆச்சரியம் அது கயாவிலும் தொடர்ந்தது. ஸ்வாமிக்கு செய்தி அனுப்பினேன். இல்லை, அது சாத்தியம் இல்லை. காஶியில் அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வட்டாரத்தில் மட்டுமே கால பைரவர் அதை அனுமதிப்பார் என்று பதில் வந்தது. ஆனாலும் தொடர்ந்தது. கடலூர் திரும்பிய அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் தியேட்டருக்குள் காஶிக்கயிறை கழட்டிய பின் மாலையில் மூச்சு பழைய படி இருப்பதை உணர்ந்தேன்!
பதிவுகளில் நிறையவே என் மோசமான உடல்நிலை குறித்து புலம்பி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. மன்னிக்க!

அவ்ளோதான்.
இப்போ நிஜமாகவே...
ஶுபம்!

Friday, August 5, 2022

காஶி யாத்திரை - 35 மீண்டும் ராமேஸ்வரம்.




 
மீண்டும் ராமேஸ்வரம் செல்லும் அந்த நாளும் வந்தது. இரவு பத்தரைக்கு ரயில். கடலூர் முது நகர் போய் ஏற வேண்டி இருந்தது. காத்திருந்தோம் காத்திருந்தோம் காத்திருந்தோம்… ஒரு வழியாக அரை மணி தாமதமாக வந்து சேர்ந்தது. ஏறிப்படுத்தோம். நல்ல வேளையாக ஆட்டம் அதிகமில்லை. காலை வழக்கம் போல நான்கு மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. பாம்பனில் புதியதாக கட்டிக்கொண்டு இருக்கும் பாலத்தை பார்க்க முடிந்தது.
 

 

 

பையர் பாடசாலை பசங்களுடன் முன்னேயே ராமேஸ்வரம் போயாச்சு. பாம்பன் தாண்டும் போது ‘நாங்க தனுஷ்கோடி போறோம்’ வாத்தியார் சிஷ்யன் வந்து ரயில்நிலையத்தில் அழைத்துக்கொள்வார் என்று போனில் சொன்னார். பிரச்சினை ஏதும் இல்லை என்றோம். அதே போல் சிஷ்யர் வந்துவிட்டார். ஆட்டோ பிடித்து முன்னே தங்கின அதே இடத்துக்குப்போய் சேர்ந்தோம். இம்முறை கீழேயே ஒழித்து கொடுத்துவிட்டார்கள். போகும் முன் மருமகள் டிபன் செய்து வைத்துவிட்டு போய்விட்டார்.
11 மணி போல பூஜை ஆரம்பித்தது. 11 பேர் ஶ்ரீருத்ரம் ஜபம் செய்து பின் பூஜை செய்து முடித்து சமாராதனை செய்தோம். உணவு ஏற்பாடு வேறு இடத்தில் இருந்தது. அதனால் பையர் போய் அதை கவனித்தார். வழக்கம் போல கோவில் போவதை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போயிற்று. 3 மணிக்கு போகலாம் என்றார்கள்.
பசங்களுக்கு ஃஜூம் இல் உணர்வு சார் நுண்ணறிவு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். சரியாக மூச்சுப்பயிற்சி பாடம் அன்று அமைந்தது. நேரிலேயே அவர்களை செய்ய வைத்து புரிய வைக்க முடிந்தது.
வண்டி பிடித்து கோவிலுக்கு போனோம். சிஷ்யர் கூடவே வந்தார். நான் பாட்டுக்கு அனுமாரை பார்த்துக்கொண்டேதான் உள்ளே போனேன். அங்கே இருந்த கல்வெட்டு ஒன்றில் எழுத்துக்களை வெள்ளை பெயிண்டால் எழுதும் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அது என்ன என்று படிக்கப்போய் பெயிண்டர் எக்கச்சக்க எழுத்துப்பிழை செய்திருப்பதை பார்த்து பக்குவமாக சுட்டிக்காட்டி திருத்த வைத்தேன். அவரே குழப்பமாக இருந்த சிலதை இது என்ன என்று கேட்டுக்கொண்டார். இன்னும் 30% வேலை பாக்கி இருந்தது. திரும்பும் போது பார்க்க வேண்டுமென்று நினைத்து கடைசியில் மறந்து போயிற்று! இந்த காலத்தில் எழுத்தறிவு இல்லாமலா இருக்கிறார்கள் என்று ஆச்சரியம். எழுத்துக்கள் மறைந்து கொண்டிருந்தாலும் தமிழ் தெரிந்தால் கண்டுபிடித்துவிடும் அளவில்தான் இருந்தது. இப்போது எந்த அளவில் இருக்கிறதோ! யாரும் போனால் பார்த்துச்சொல்லுங்கள்.
100 ரூபாய் டிக்கட் வாங்க சிஷ்யர் போனார். நேரமாகிறதே என்று பதஞ்சலியை பார்க்கபோய்விட்டேன். பசங்களையும் கூப்பிட்டு காட்டினேன். அங்கேயே பக்கத்தில் ஜோதிர்லிங்கத்தையும் தரிசித்தோம்.
சிஷ்யர் வர வெகு நேரமாயிற்றூ. என்னடா என்று பார்த்தால் 100 க்கு பதில் 200 டிக்கட்டை டிக்கட் கொடுப்பவர் கிழித்துவிட்டு அதை யார் தலையில் கட்டலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தார் போலிருக்கிறது! யாரும் வாங்கவில்லை என்று எங்கள் தலையிலேயே கட்டிவிட்டார். நாராயணா என்று வாங்கிக்கொண்டு நகர்ந்தோம்.
நிதானமாக வெளியே பசங்களுக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு மீண்டும் சேது மாதவரையும் தரிசித்து சந்நிதிக்குப்போய் சேர்ந்தோம். அர்ச்சகர் கொஞ்சம் இருங்கள் கூட்டம் சற்று குறையட்டும் என்றார்.
பேரன் இந்த கங்கை நீர் பாத்திரம் மூடியிருக்கிறதே என்ன செய்வார்கள் என்று கேட்டான். சாதாரணமாக சூடு வைத்தால் ஈயம் உருகி மூடி கழன்றுவிடும். நாங்கள் வீட்டில் அனல் வைத்து பிரித்திருக்கிறோம். அனேகமாக இங்கே கொடு வாளால் மூடியை வெட்டி அபிஷேகம் செய்வார்கள் என்று பிசிக்ஸ் பாடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அர்ச்சகர் வந்து சங்கல்பம் செய்துகொண்டு கங்கை சொம்பை வாங்கிக்கொண்டு போனார். போகும் வழியிலேயே இடது கையில் சொம்பை வைத்துக்கொண்டு வலது கையை தட்டையாக வைத்துக்கொண்டு ஓங்கி அறைந்தார். மூடி சுத்தமாக கழன்றுக்கொண்டு வந்துவிட்டது! அதே மூவ்மெண்டில் அதை பிடித்து எறிந்தார். மொத்தம் 2 வினாடி கூட ஆகவில்லை! அபிஷேகத்துக்குப்போய்விட்டார்! நான் புதிய பிசிக்ஸ் பாடம் கற்றுக்கொண்டேன்.
மனம் நிறைவாக தரிசனம் செய்து திரும்பினோம். அம்பாள் சந்நிதிக்குபோய் சுற்றும் முற்றும் தரிசனம் செய்தோம். பேத்தி அபிராமி அந்தாதி பாடினாள். திரும்பினோம். ஹனுமார் எதிரில் நின்றார்கள். நான் தரிசனம் பண்ணிவிட்டேன் என்றேன். இல்லை இவரை கடைசியாகத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். அனுமார் 18 அடி ஒசரம். பத்தடி பூமிக்கு அடியிலே இருக்கார் என்று சிஷ்யர் சொன்னார். ஓஹோ என்று கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம். மற்றவர்கள் இன்னும் எங்கோ போக வேண்டும் என்று திட்டமிட நானும் மனைவியும் இருப்பிடத்துக்கு திரும்பலானோம்.
நான் தனுஷ்கோடியில் பல ஆண்டுகள் முன் வைத்து பூஜை செய்த அனுமாரை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அதனால் ஆட்டோ ட்ரைவரிடம் சிஷ்யர் பேசி வைத்து இருந்தார். போகும் வழியில் இல்லத்தரசி தன் எல்லாம் கொள்ளும் மஹராஜன் கப்பலை துழாவிவிட்டு ஃபெப்ரக்ஸ் ப்ளஸ் வாங்கணும் என்றார். ட்ரைவரிடம் சொன்னேன். அவர் சரி என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு நாற்சந்தியில் நிறுத்திவிட்டார். இந்த 30 அடி நேராக போய் இடது பக்கம் திரும்பினால் முதல் கடை மருந்துக்கடை என்றார். மனைவியிடம் 50 ரூபாய் நோட்டுதான் இருந்தது. நாலு மாத்திரை போறும் என்றார் மனைவி. சரி என்று போய் வாங்கினேன். கடைக்காரர் சில்லறை கேட்பார் என்று நினைத்தால் அவர் பாட்டுக்கு மீதி சில்லறை எடுத்துக்கொடுத்தார்! பில்லை பார்த்தால் 20 சொச்சம். தூக்கிவாரிப்போட்டது. ஹும்! இவ்வளவு நாளும் சொன்னால் மருந்து வந்துவிடுகிறது என்று நிலையில் விலைவாசியே தெரியாமல் இருக்கிறேன்!
வண்டி கிளம்பியது. ஆச்சரியமாக வெகு நாட்கள் கழித்து பசித்தது. வீட்டில் ஏதேனும் சாப்பிட இருக்கிறதா என்று மனைவியை விசாரித்தேன். இருக்கு. போனதும் கொடுக்கிறேன் என்றார். இந்த பசி அதுவைரை காத்திருக்குமா என்று யோசித்தேன்.
ஆட்டோ அனுமார் கோவில் போய் நின்றது. பூஜை சாமான்களை எல்லாம் வெளி முற்றத்தில் போட்டு ஒரு பெண்மணி தேய்த்துக்கொண்டு இருந்தார். இன்னொரு பெண்மணி பைப் ஹோசில் தண்ணீர் ஊற்றி மண்டபத்தை அலம்பி விட்டுக்கொண்டு இருந்தார். ‘ஸொல்பா அட்ஜஸ்ட் மாடி’ அனுமார்கிட்டே போய் தரிசித்தோம். ப்ரதக்‌ஷிணம் செய்து திரும்பும் வேளை அர்ச்சகர் வந்தார். கொஞ்சம் இருங்கோண்ணா என்று கற்பூரம் ஏற்றிக்காட்டினார். பூஜை சாமான் எல்லாம் தேய்ச்சுண்டு இருக்கா என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் சொன்னார். பரவாயில்லை என்றோம். அந்த சுஷ்கமான பூஜை முடிந்து திரும்பும் போது ‘அண்ணா ப்ரசாதம் சாப்பிடறேளா?” என்று அர்ச்சகர் கேட்டார். தலையாட்டியதும் தொன்னைகளில் (ம்ம்.. இல்லை ப்ளாஸ்டிக் கப்பா? நினைவில்லை) தயிர்சாதம் கொடுத்தார். ‘பகவானே என்னே உன் கருணை!’ என்று நினைத்துக்கொண்டு எடுத்துக்கொண்டேன்.
வீட்டுக்குத்திரும்பினோம். பையர் அண்ட் கோ அடுத்த நாள் ஆதி சேது, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி போவது என்று திட்டம். நாங்கள் இரவு வண்டியை பிடித்துவிட்டோம். போன முறை விழுப்புரம் போய் இறங்கினோம். கடலூர் வழியில் ரோடு நன்றாக இல்லை என்று சுற்றிப்போக வேண்டி இருந்தது. அதனால் விருத்தாசலத்தின் இறங்கலாம் என்று மனைவி முடிவெடுத்துவிட்டார். காலை 3 மணிக்கு போகும். திருப்பி தூக்கம் பணால். என்னத்த ஆட்சேபணை செய்து என்ன?
இரவு இரண்டரை அலாரம் வைத்து விழித்துப்பார்த்தால் விருத்தாசலம் அவுட்டரில் வண்டி நின்றுகொண்டு இருந்தது. அரை மணி நேரம் சீக்கிரமாக வந்தாச்சு. ஆனால் அங்கேயே மண்டகப்படி போட்டு அரை மணி கழித்துத்தான் ஜங்ஷனுள் விட்டார்கள். அழைத்துபோக வந்திருந்த ட்ரைவர் மானேஜர் இடம் லக்கேஜை கொடுத்து தள்ளாடி காரை அடைந்தோம். பின் கடலூர் வந்து சேர்ந்தோம். அப்பாடா! ஒரு வழியாக தூக்கம் கெட்டுப்போகும் நாட்கள் ஒரு வழியாக முடிவடைந்தன என்று தோன்றியது.
இவ்வாறாக காஶி யாத்திரை பூர்த்தி!
ஶுபம்!

Thursday, August 4, 2022

காஶி யாத்திரை - 34 மீண்டும் கொல்கொத்தா


முதல்முறையாக அகாலத்தில் போய் சேராத ஒரு வண்டியில் பயணித்தேன் பயணித்தோம். கொல்கொத்தா போய் சேரும் போது மணி ஆறு. ஒரு அரை மணி தாமதமாக போகின்றது என்று நினைக்கிறேன்.
இங்கே கூடவந்த உதவியாளர் அஷ்டாவக்கிரன் விடை பெற்றுக் கொண்டார். அவருடைய சகோதரி வீட்டுக்கு போய்விட்டு தான் திரும்பிக் கொள்வதாக முன்னாலேயே சொல்லியிருந்தார். அதற்காக முந்தின நாளே அவருக்கான சம்பாவனையை கொடுத்துவிட்டோம்.
நாங்கள் எல்லோரும் ஏற்பாடாகியிருந்த ஒரு பெரிய வண்டியில் கிளம்பி கொல்கத்தா நண்பர் வீட்டுக்குப் போனோம். குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு நல்ல அசதியில் தூங்கினேன். மதிய உணவு முடித்து மீண்டும் ஓய்வு எடுத்தோம். அரவிந்தனை நண்பரின் சகோதரர் ரயில் ஏற்றிவிட்டார். மாலை ஏழரை மணிக்கு விமானம். ஒரு மணி நேரம் முன்னால் போகவேண்டுமென்று நான்கு மணி போல விமான நிலையத்துக்கு கிளம்பினோம். வாடகை வண்டிக்காரர் ஏசி போடவில்லை. ஏனென்று கேட்டால் அரசு அதை தடைசெய்து இருக்கிறது; இன்னும் கோவிட் முடிந்து அனுமதி கிடைக்கவில்லை என்று பதில் வந்தது. ஆனால் இந்த பிரச்சனை முதல் முறை கல்கத்தா வந்து போனபோதும் இன்று காலை நண்பர் வீட்டுக்கு வந்த போதும் எழவில்லை. கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்.
மாலை நேர கல்கத்தா போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டுக் கொண்டோம். நான் முன்பக்கம் டிரைவர் இருக்கை பக்கத்தில் உட்கார்ந்து இருந்தேன். அவருடைய அலைபேசியில் முன்னே ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என்றெல்லாம் இல்லாமல் அரை மணி நேரம் தொடர்ந்து 19 கிலோமீட்டர் போகவேண்டிய தூரம் என்று காட்டிக்கொண்டிருந்தது. எட்டு கிலோமீட்டர் வந்தாலும் அதே தான் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னப்பா இது என்று கேட்டால் அவர் பார்த்துவிட்டு ஓ, தொலைதொடர்பு பிரச்சனை என்று சுலபமாக முடித்தார். நேரம் ஆக ஆக கொஞ்சம் பதட்டம் அடைவோமோ என்று தோன்றிக் கொண்டிருந்தது. நேரம் பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. ஆனால் போக வேண்டிய தூரமோ குறையவே இல்லை. என்னுடைய அலைபேசியில் கூகுள் படத்தை கிளப்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக நேர அவகாசம் இல்லாமல் போய் சேருவோம் என்று தோன்றியது. அதேபோல நாங்கள் போய் சேர்ந்த போது உத்தேசித்த நேரத்துக்கு 10 நிமிடம் தான் இருந்தது. அவசரம் அவசரமாக உள்ளே போனோம். போன பிறகுதான் அவசரப்பட்டு இருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை என்று தெரிந்தது. விமானம் தாமதமாக கிளம்பும் என்று அறிவிப்பு பார்த்தேன். காத்திருந்து காத்திருந்து கடைசியில் இரண்டு மணி நேரம் தாமதமாக ஒன்பதரைக்கு கிளம்பியது.
கொரோனாவில் அடிவாங்கிய விமான கம்பெனிகள் எங்கே காசு பார்க்கலாம் என்று தேடுகிறார்கள். இந்த இருக்கை வேண்டும் என்றால் கூடுதலாக கட்டணம் என்கிறார்கள். பொதுவாக ஜன்னல் ஓரம் அல்லது நடைவழி ஓரம் விரும்புகிறார்கள் என்பதால் காசு கூடுதலாக கட்டாதவர்களுக்கு நடு இருக்கைகளையே கொடுத்து விடுகிறார்கள். இதனால் வழக்கம்போல் ஆளுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தோம்.
ஒருவழியாக எங்களை அழைக்க விமானத்தில் ஏறுவதற்காக கிளம்பினோம். பின்னால் பார்த்தால் ஒரு நடுத்தர வயது இளைஞரும் இரண்டு சிறுவர்களும் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். பேச்சு சம்ஸ்கிருதம் பற்றியும் வேதம் பற்றியும் இருந்ததால் ஆச்சரியப்பட்டுக் கொண்டு யார் என்ன என்று விசாரித்தேன். அவர் சென்னையில் பாடசாலையில் நடத்திக்கொண்டிருக்கிறார். வக்கீல் தொழில் புரிகிறார் என்று தெரிந்தது.
பயணம் பற்றி குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை. வழக்கம்போல் அகாலத்தில் சென்னை வந்து சேர்ந்தோம். அங்கே வந்திருந்த எங்கள் வண்டியில் எங்கள் உறவினர் வீட்டுக்குப் போய் சேர்ந்தோம். படுக்கையில் விழுந்தேன்.
அடுத்த நாள் காலை ஆறு மணி போல் எழுந்து காலைக்கடன்களை முடித்து சிற்றுண்டி முடித்து ஊருக்கு கிளம்பி விட்டோம். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம். இப்படியாக காசி யாத்திரையின் இரண்டாவது கட்டம் பூர்த்தியாகிறது. அடுத்து கடைசி கட்டமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இதுவரை பிரயாகையில் கிரஹித்த கங்கை நீருக்கு தினசரி கங்கா பூஜை செய்ய வேண்டும். முதலில் கையோடு கையாக இராமேஸ்வரத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தாலும் ராமேஸ்வரம் வாத்தியார் காலநிலை சரியாக இருக்காது என்று சொன்னதால் ஒரு மாதம் கழித்து போவதாக முடிவு செய்து ரயில் இருக்கைகள் பதிவு செய்து இருந்தன.
 

Tuesday, August 2, 2022

காஶி யாத்திரை - 33 கயா- 4



அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.
காலையில் நானும் பையரும் சீக்கிரமாகவே கிளம்பி போனோம் . பல்குனி தீர்த்தத்தை கிரகித்துக் கொண்டு அங்கே இருக்கிற கதாதரர் கோவிலை பார்க்க வேண்டுமென்று போனோம். பூ வாங்கிக்கொண்டு போகலாம் என்றேன். ஒரு சிலரே கடை வைத்திருந்தார்கள். ஒருவர் கொஞ்சம் பூ வைத்திருந்தார். அவரிடம் 50 ரூ. க்கு சில்லறை இல்லை. கோவிலுக்கானதை கொடுக்கவா என்று கேட்டார். சரி என்றோம். கொஞ்சம் பூ, சின்ன மாலை, கர்ப்பூரம், நிவேதனத்துக்கு ஒரு பேடா என்று சிலதை கட்டிக்கொடுத்து மீதி சில்லறை கொடுத்தார்!
நடை சார்த்தி இருந்தது. எங்களை பார்த்துவிட்டு எலும்பும் தோலுமாக வறுமை என்று எழுதி ஒட்டி இருந்த கிழவர் ஒருவர் வந்தார். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு இடத்தை பெருக்கினார். வேலையாள் போலிருக்கிறது என்று நினைத்தேன். பெருக்கிவிட்டு கையலம்பி கதவருகே வந்தார். கதவை மெலிதாக தட்டினார். இரன்டு மூன்று முறை தட்டிவிட்டு அப்புறம் திறந்தார்! அப்புறம்தான் இவர்தான் இங்கே பண்டா என்று தெரிந்தது.
கிழவருக்கும் தெய்வத்துக்கும் இருந்த உறவு புரிந்தது. குழந்தைக்கு செய்வது போல அன்புடன் வாத்ஸல்யத்துடன் செய்தார். சின்ன பூஜை முடித்து பேடா, பூ ஆகியவற்றை பிரசாதமாக கொடுத்தார். கதாதரர் சின்ன மூர்த்தம். அவ்ளோ அழகு! பொதுவாக வட இந்திய கோவில்களில் இப்படி அழகான மூர்த்தங்களை பார்ப்பது அரிது!
 
கதாதரர்


நிறைவான மனத்துடன் திரும்பினோம். வந்த வழியே திரும்பாமல் இடது புறமாகவே போனதில் இன்னும் சில சன்னதிகள் எல்லாம் பார்த்துக்கொண்டு போனோம். கடைசியில் இந்த பாதை நேற்று பார்த்த கல்மண்டபத்தில் கொண்டு வந்து விட்டது. ஈசானாதி சதுர்தச பாதங்களை மீண்டும் மெதுவாக பார்த்துக்கொண்டு இருப்பிடத்துக்கு வந்தோம்.

போக்தாக்களை கொஞ்சம் சீக்கிரம் வர வாத்தியார் சொல்லி இருந்தார். 11 மணி போலவே வந்துவிட்டனர். உபசாரங்கள் முடிந்து ஹோமம் முடிந்து உணவிட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு பிண்டங்களை எடுத்துக்கொண்டு அக்‌ஷய்ய வடத்துக்கு இரண்டு ஆட்டோவில் போனோம். சாலைகள் படு மோசம். ஒரு முக்கியமான யாத்ரை ஸ்தலத்தை இப்படியா வைத்திருப்பது! தினசரி எவ்வளவு பேர் வந்துபோகிறார்கள்!
ஆட்டோ போய் நின்ற இடம் ஒரு வளாகம். அதில் சுட்டெரிக்கும் வெய்யிலில் முற்றத்தை கடந்து மாடிப்படி ஏறினோம். போன முறை இப்படி படியேறி போன நினைவு ஏனோ இல்லை. ஏறிப்போன பாதை அக்‌ஷய்ய வடத்தில் கொண்டு விட்டது. சரிதான் மேடு பள்ளம் இருந்ததால் ஏதோ சரி செய்து மாடி ஏறி போவதாக அமைத்து விட்டார்கள். நிறைய்ய மக்கள். கீழே தரையில் சலவைக்கல் பதித்திருக்கிறார்கள். ஆங்காங்கே பண்டாக்கள் மந்திரங்கள் சொல்லிகொடுத்து பிண்டங்களை ஆல மரத்தின் கீழ் போடசொன்னார்கள்.
நாங்கள் பத்தடி தள்ளி கிழக்கு பார்த்து உட்கார்ந்து கர்மாவை ஆரம்பித்தோம். அரவிந்தனை வாத்தியார் ஜலம் கொண்டுவரசொன்னார். ஒரு நிமிஷத்தில் வந்து விட்டான். என்னடா என்று பார்த்தால் இந்த ‘மாடி’யிலேயே கிணறு இருக்கிறது! இன்று மாத்ரு ஷோடசிக்கும் கூடுதலாக 24 (என்று நினைவு) ஜோடி (ஆண்-பெண்) மந்திரங்கள் சொல்லி பிண்டங்கள் வைத்தோம். நேற்று மறந்துபோன/ விட்டுப்போனவர்களுக்கும் வைத்தோம். இந்த கூடுதல் பிண்டங்கள் விஷ்ணுபாதத்திலேயே வைத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. நேரமாகிவிடும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று வாத்தியார் சொல்லிவிட்டதாக பையர் பின்னால் சொன்னார்.
பிண்டங்களை சேர்த்து ஆலமரத்தின் கீழ் இட்டோம். அங்கிருந்த பண்டா ஏதோ ஸ்லோகம் சொல்லி போடச்சொன்னார். வாத்தியார் வைதீகமாக செய்து வைத்திருந்தால் என்ன? இவர்கள் கடைசியில் சொல்லவே சொல்கிறார்கள். அவர்களைப்பொறுத்த வரை அது இல்லாமல் கர்மா பூர்த்தியாவது இல்லை. தக்‌ஷிணை கொடுத்தோம். அவரோ சீதையின் சாபத்தை மெய்ப்பித்தார். போகிறது என்று கூடுதலாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்று திரும்பினோம். கடைசி நாள், நேரமாகிவிடும், 5- 10 க்கு ப்ளேன் பிடிப்பது கஷ்டம் என்று வாத்தியார் சொன்னதை பொய்யாக்கும் விதமாக இன்று ஒன்னரை மணிக்கே கர்மா முடிந்து சாப்பிட்டோம்.
வாத்தியாருக்கு இவ்வளவு நாட்கள் கர்மாக்களை செய்து வைத்ததற்கு தக்‌ஷிணை கொடுத்து ஆசீர்வாதங்கள் பெற்றோம். அவர் அடுத்த வேலையை உத்தேசித்து 4 மணிக்கெல்லாம் காரில் கிளம்பிவிட்டார்.
தங்கின இடத்துக்கான விஷயங்களை செட்டில் செய்தோம். மானேஜர் இளைஞர் வந்து சில குறைபாடுகள் இருந்திருக்கும்; மன்னித்துகொள்ளுங்கள் என்றார். பரவாயில்லை; தவறுகள் நடக்க நடக்க அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள். மீண்டும் அது நடக்காமல் இருக்க முயற்சி செய் என்றேன்.
கொல்கொத்தா திரும்ப அதே ஜன் சதாப்திதான். எட்டு பத்துக்கு ட்ரெய்ன்.
இதற்குள் இன்னொரு குழப்பம் நடந்துவிட்டது. கொல்கொத்தா சென்னை புக் செய்த விமானம் சென்னைக்கு ஆறு மணி போல வர வேண்டும். எங்கேயும் போக வேண்டாம். ஏர்போர்டுக்கு காரை வரச்சொல்லிவிட்டு அதில் கடலூர் திரும்பி விடலாம் என்று திட்டம். இண்டிகோ ஆசாமி கொஞ்சம் விளையாடிவிட்டார். அந்த விமானம் கிளம்பும் நேரத்தை மாற்றி இருக்கிறோம். ராத்திரி 9 மணிக்குத்தான் கிளம்பும். சரி என்றால் சரி. இல்லையானால் கேன்சல் செய்துகொள் என்று பையருக்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நண்பர் வீட்டில் தங்கியே போவது என்று முடிவாகிவிட்டது.
இரவு ட்ரெய்ன் பிடிப்பதில் சிக்கல் இல்லை. நிம்மதியாக தூங்கினோம்.

Sunday, July 31, 2022

காஶி யாத்திரை - 32 கயா- 3




அடுத்த நாள் விஷ்ணுபாத ஶ்ராத்தம்.
நாங்கள் கயையில் 3 ஶ்ராத்தங்கள் செய்தோம். மொத்தம் 126 ஓ என்னவோ ஶ்ராத்தங்கள் கயையில் செய்ய இருக்கின்றனவாம். அனைத்து இடங்களும் இந்த விஷ்ணு பாத கோவிலை மையமாகக்கொண்டு சுற்றி அமைந்துள்ளன. கயை நகரமே
மங்கள-கௌரி, ஶ்ரீசிங்கஸ்தான், ராம்-சிலா, பிரம்மஹோனி என்ற குன்றுகள் மற்றும் கிழக்கில் பல்குனி நதியும் சூழ அமைந்துள்ளது. நதிக்கு அந்தப்பக்கமும் குன்றுகளை பார்த்தேன். இந்த ஶ்ராத்த இடங்கள் அனைத்தும் இந்த குன்றுகளிலும் கூட இருக்கின்றன. அவற்றுக்கு கஷ்டப்பட்டே ஏறிப்போக வேண்டும். அனைத்து சாமான்களையும் கூடவே தூக்கிகொண்டு போக வேண்டும். இந்த காலத்தில் எவ்வளவு சிரம சாத்தியம்!
இன்று மாத்ரு ஷோடசி சொல்லி பிண்டங்களை வைக்க வேண்டும். அதனால் கூடுதல் பிண்டங்கள் வேண்டும் என்று வாத்தியார் சொன்னார்.
இன்றும் காலையில் பையரும் நானும் கிளம்பிப்போய் தீர்த்தம் கொண்டு வந்தோம். நேற்று நடந்த ஶ்ராத்தத்துக்கும் இன்றைய ஶ்ராதத்துக்கும் கூடுதல் பிண்டங்களே வித்தியாசம். ஏறக்குறையே அதே நபர்கள்தான் இன்றைக்கும் வந்திருந்தனர். சாப்பிடும் நேரத்துக்கு குழாய் ரிப்பேர்காரர் வர கதவுகளை சார்த்திப்பார்த்து சரிப்பட்டு வராமல் அவரை அப்புறம் வரச்சொன்னோம்.
ஶ்ராத்தம் ஒன்றரை மணிக்கு முன்பு முடிந்துவிட்டது. மந்திரங்கள், நடைமுறை எல்லாம் இப்போது வெகுவாகவே பழக்கம் ஆகிவிட்டு இருந்ததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த பிண்டங்களை விஷ்ணு பாத கோவிலில் வைக்க வேண்டும் என்று கிளம்பிப்போனோம். வந்திருந்த ப்ராம்ஹணர்களில் ஒருவர் நான் உதவி செய்ய வருகிறேன் என்றார். சரி என்று அழைத்துக்கொண்டோம். ஏகப்பட்ட செக்யூரிட்டி! செல்போன் போன்ற எதையும் அனுமதிக்கவில்லை. உள்ளே நடை சார்த்தி இருந்தது! இதோ திறந்து விடுவார்கள் என்றார்கள். அந்த இதோ இரண்டரை வரை ஆயிற்று!
என்னடா என்று பார்த்தால் பின்னல் தினமுமே ஒன்று முதல் இரண்டரை வரை நடை சார்த்தி சுத்தம் செய்து விஷ்ணு பூஜை செய்கிறார்கள் என்று தெரிய வந்தது. இவ்வளவு முறை இங்கே வரும் வாத்தியாருக்கும் இது தெரியவில்லை. போகிறது அந்த உள்ளூர் ப்ராம்ஹணராவது சொல்ல வேண்டாமோ? கொஞ்சம் சுருக்க வந்திருந்தால் முடித்திருக்கலாம் போல தோன்றியது.
நாங்கள் போன போது ஓரிருவரே இருந்தனர். இதோ என்று சொன்னதால் முன்னால் க்யூவில் நின்றோம். அந்த இதோ இப்போதில்லை என்று தோன்றிய போது நல்ல கூட்டம் கூடிவிட்டது. திருப்பதி மாதிரியான மக்கள். நானும் பையரும் கிளம்பிவிட்டோம்.
ஶ்ராத்தம் குறித்த தொடரில்
/ ஶ்ராத்தத்தின் போது உபவீதியாக ‘ஈசான விஷ்ணு’ என்ற ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதில் ஈசானன், விஷ்ணு, பிரம்மா, குகன், ஆஹவனீயம் தக்ஷிணாக்கினி என்று மூன்று அக்னிகள், சூரியன், சந்திரன், பிள்ளையார், க்ரௌஞ்ச மலை, தேவ இந்திரன், அகஸ்தியர், கச்சியப்பர் இவர்களுடைய பாதங்களை பித்ருக்கள் முக்தி பெறுவதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். (இந்த பாதங்கள் கயையில் சிலா ரூபமாக உள்ளன.) /
என்று எழுதி இருந்தேன் நினைவிருக்கிறதா? இவற்றை போய் பார்த்தோம். பெரிய்ய்ய்ய கல் மண்டபத்தில் இவை எல்லாம் கல் தூண்கள் ரூபத்தில் உள்ளன. பாதி தூண்களில் பெயர் எழுதி இருக்கிறது. மீதியில் இல்லை. எப்படியும் அவற்றை வேறு படுத்திப்பார்க்க ஒரு அடையாளமும் காணோம். தரை மேடு பள்ளமாக இருக்கும். அண்ணாந்து பார்த்துக்கொண்டு நகர்வது உசிதம் அல்ல. சுற்று முற்றும் பார்த்துவிட்டு பின் வேறு இடம் போய் நின்றுக்கொண்டு பார்ப்பதே உசிதம்.
விஷ்ணுபாத கோவில் குறித்து பார்க்கலாம். சுருங்கச்சொல்ல… அழகு!
விஷ்ணுபாத் என்ற குன்றின் மீது விஷ்ணுவின் பாதம் உள்ளது. கயாசுரனைக் கொல்லும் போது, ஒரு காலை இக்குன்றின் மீதும், அடுத்த காலை அசுரனின் மார்பின் மீது வைத்ததால், அப்பாதம் உருவானது என்று ஐதீகம். இப்பொழுதுள்ள விஷ்ணு பாத கோவில் அஹல்யாபாய் ஹோல்கர் என்ற இந்தூர் மஹாராணியால் 1780ல் கருங்கற்களினால் கட்டப்பட்டதாகும். ஆமாம். காசி விஸ்வநாத ஆலயத்தை கட்டிய அதே அஹல்யாபாய் ஹோல்கர்தான்.
அஷ்டகோண வடிவில் 100 உயரத்தில் உள்ள பிரகாரத்தின் நடுவில் இப்பாதம் கருங்கல்லில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 16 இன்க் இருக்கலாம். கூரை வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. அழகாகச் செதுக்கப்பட்ட பல தூண்களால், இரண்டு அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் பிரகாரங்கள், சன்னதிகள் உள்ளன. பூஜையின் போது, வெள்ளியினால் செய்யப்பட்ட அஷ்டகோணத்தில் உள்ள பீடத்தைச் சுற்றிலும் இருக்கும்படி வைத்து அபிஷேகம், ஆராதனை செய்து அலங்காரம் செய்கிறார்கள்.

இங்கே இன்னொரு விசேஷமான கோவில் மங்கள–கௌரி கோவில். சக்தி பீடம்: சதியின் உடல் பாகங்களில் இரு மார்பகங்கள் இங்கு விழுந்ததால் புனிதமாகக் கருதப்படுகிறது. உண்மையில் இரு உருண்டையான கற்கள் கோவிலில் காணப்படுகின்றன என்கிறார்கள்.. இக்கோவில் சுற்றும் இடிந்த பகுதிகள் காணப்படுகின்றன. கோவில் அக்‌ஷய்ய வடம் போகும் வழியில் சற்றே விலகி இருக்கிறது என்றூ பின்னால் தெரிய வந்தது. முன்னால் தெரிந்திருந்தால் போயிருக்கலாமோ என்னவோ. முன்னே சொன்னது போல கோவில்கள் பற்றி சிந்தனையே இல்லை.

சரி சரி… அதோ கொஞ்சம் பரபரப்பு. நடை திறக்கிறார்கள் போலும். நானும் பையரும் போய் க்யூவில் சேர்ந்து கொண்டோம். அடித்துப்பிடித்து மக்கள் முன்னே போனார்கள். இதற்கு அங்கே உள்ளே இருந்தவர் ஒருவரிடம் அழைத்து வந்த ப்ராம்ஹணர் ஏதோ ஜாடை காட்டிவிட்டார். அவரும் கூப்பிட்டு இங்கே உக்காருங்கள் என்று உட்கார்த்தி வைத்துவிட்டார். கிழக்கே பார்த்து உட்கார்ந்து கர்மாவை ஆரம்பித்துவிட்டோம். நேரடியாக விஷ்ணு பாதத்தில் சமர்ப்பணம் என்பதால் தர்ப்பை போடுவது ஆவாஹனம் என்பது இல்லை. அதே போல வரிசை இல்லை. அந்த அஷ்ட கோண தொட்டியில் போட்டால் போதுமானது என்றாலும் முடிந்த வரை விஷ்ணு பாதத்திலெயே போட முயற்சி செய்தேன். 10 நிமிடங்களில் மொத்த கூட்டமும் காலி! அப்புறம் நாங்கள் மட்டுமே இருந்தோம். எல்லாரும் அவரவர் கொண்டு வந்த பிண்டங்களை மூட்டையில் இருந்து கொட்டிவிட்டு தக்‌ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். நிதானமாக செய்து முடித்து பண்டாவுக்கும் கூட்டி வந்த ப்ராம்ஹணருக்கும் தக்‌ஷிணை கொடுத்து மீண்டோம். மூன்றே கால் போல சாப்பிட்டோம்.
அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.

Friday, July 29, 2022

காஶி யாத்திரை - 31 கயா- 2




12 மணி அளவில் கயாவாலிகளை வரச் சொல்லியிருந்தார்கள்.
இந்த கயாவால் பிராமணர்கள் மாத்வர்கள். உத்தராதி மடத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே இங்கே ஶ்ராத்தங்கள் முதலானவைகளுக்கு புரோகிதர்கள் ஆக இருக்கிறார்கள். விஷ்ணு பாத கோவில், அக்‌ஷய்ய வட கோவில் ஆகிய இடங்களுக்கு இவர்களே பாண்டாக்கள். 11 மணி அளவில் சிலர் வந்துவிட்டார்கள். மனைவி பார்த்துவிட்டு சின்ன குழந்தை முதல் கொள்ளுத் தாத்தா அவரை வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். ஆமாம் அதில் ஒருவர் மிகவும் வயதானவர். பையாஜி என்று மற்றவர்கள் மிகவும் மரியாதையுடன் அவரை நடத்துகிறார்கள். சின்ன குழந்தைக்கு பூணூல் இன்னும் போடவில்லை சும்மா வந்து இருந்தாற்போல் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் யாரோ அழைத்துப்போய்விட்டார்கள்.
இந்த கயா பிராமணர்களைப் பற்றி சில விஷயங்களை முன்னாலேயே சொல்லி இருந்தார்கள். இவர்களுடைய தேசாசாரம் நமக்கெல்லாம் ஒத்து வராது. இவர்கள் எதையும் தூக்கி குடிப்பதில்லை. எச்சில் செய்தே குடிக்கிறார்கள். நம் பக்கத்து ஶ்ரார்த்த உணவு இவர்களுக்கு சரிப்பட்டு வருவதில்லை என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அதெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நம்முடைய சாப்பாட்டுக்கு பழகிவிட்டார்கள் என்றும் இரண்டு விதமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டு வாத்தியார் இந்த யாத்திரை போய்விட்டு வந்தவர். அவர் வந்து இவர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பால்பாயசம் பூரி ஆகியவை. ஆகவே அதை நிச்சயமாக செய்து விடுங்கள் மற்றபடி நம் சௌகரியம் போல் செய்யலாம் என்று சொல்லியிருந்தார். பெண்கள் அதற்கு சரியாகவே தயார் செய்து கொண்டிருந்தனர் நிறைய பால் பாயசமும் பூரியும் செய்து மற்றபடி நம் வழக்கமான தமிழ்நாட்டு ஶ்ராத்த சமையல் ஆக செய்திருந்தார்கள்.
எப்படி இருந்தாலும் நம் பக்க மக்கள் இவர்களை கொஞ்சம் இளக்காரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு ஶ்ராத்தத்தில் போக்தாவாக இருந்தால் ஆயிரம் காயத்ரி ஜபம் செய்து அடுத்த கர்மாவுக்கு அருகதை ஆவார்கள் என்று சாஸ்திரம். ஆனால் இவர்களோ தினசரி ஏதோ ஒரு ஶ்ராத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தியாவந்தனம் செய்கிறார்களோ இல்லையோ என்று நம்மவர்கள் சந்தேகிக்கிறார்கள். அது எப்படி இருந்தாலும் க்ஷேத்திர வாசிகளை தூஷிக்கக் கூடாது என்று இருக்கிறது. இவர்கள் இல்லாமல் நாம் இங்கிருந்து யாரையும் அழைத்துப் போய் எல்லாம் சரிப்படாது. ஆகவே இவர்களை வைத்து ஶ்ராத்தத்தை நடத்த வேண்டியது.
நம் பக்கத்து சிரார்த்த நடைமுறை அனைத்தும் அந்த தாத்தாவுக்கு தெரிந்து இருந்தது. சரியாக பிரதி வசனமும் சொன்னார். கொஞ்சம் முன்னே பின்னே மற்றவர்கள் இருந்தாலும் இவரை ஒட்டி அவர்களும் பிரதி வசனம் சொல்லிக் கொண்டு போனார்கள். வரணம் எல்லாம் நான் செய்தேன். சில உபசாரங்கள் என் பையர் செய்தார்.
இவர்களுடைய ஆச்சாரத்தை பற்றி அவ்வளவு சொல்லி இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனித்தேன். வழக்கமான இந்த மாதிரி விஷயங்களுக்கு போகக்கூடிய பிராமணர்கள் கைகால்களை பார்த்தாலே சில விஷயங்கள் புரிந்துவிடும். அதிகமாக பிரதி கிரகம் வாங்கின தோஷங்களும் காயத்ரி செய்யாமல் ஶ்ராத்தங்களில் திருப்பி திருப்பி பங்கெடுக்கும் தோஷங்களும் காலில் இருக்கும் தோல் வியாதியில் தெரிந்துவிடும். இவர்களுடைய கால்களை நாம் கழுவி விடும்போது இதைப் பார்த்து விடலாம். ஆனால் இவர்கள் கால்கள் நன்றாகவே இருந்தன உண்மையில் மிகவும் சுத்தமாக இருந்தன. இந்த இடத்தின் விசேஷமோ இல்லை விஷ்ணு பாதத்தின் விசேஷமோ எப்படி இருந்தாலும் இவர்கள் சுத்தர்கள் என்று என் மனதில் ஒரு திருப்தி உண்டாயிற்று.
ஹோமம் முடிந்து இவர்களுக்கு இவர்களுக்கு உணவிடும் நேரம் வந்தது. இவர்களுக்காக பிளாஸ்டிக்கில் டம்ப்ளர்கள் வாங்கி வைத்திருந்தார்கள். அவற்றை ஒன்றுக்கு இரண்டாக பக்கத்தில் வைத்துவிட்டார்கள். தண்ணீர் பாயசம் முதலியவை இதிலேயே கொடுத்தார்கள். பார்த்த அளவில் அவர்களுக்கு நம் பக்கத்து உணவு சரிப்படவில்லை தான். நாம் நம் பாரம்பரியத்தின் படியே சமைப்போம் என்று இருப்பதை விட்டுக் கொடுத்துவிட்டு இவர்களுக்கு தகுந்தாற்போல் சமைத்து கொடுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்கள் சாப்பிட்டு திருப்தி அடைவதே மிகவும் முக்கியம். நீங்கள் திருதியாகவே இருக்க மாட்டீர்கள் என்று சீதை சாபம் கொடுத்து இருந்தாலும் ஶ்ராத்தத்தின் முடிவில் இவர்கள் இரு கைகளையும் தூக்கி திருப்தி சொல்லி ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
இவர்களை அனுப்பிவிட்டு பிண்ட தானத்துக்கு உட்கார்ந்தோம். இதைப்பற்றி கொஞ்சம் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால் இறந்துபோன என் உறவினர்கள் ஜாபிதா தயாராக வைத்திருந்தோம். காருண்ய பித்ரு என்று சொல்லி இவர்கள் அனைவருக்குமே பிண்டம் கொடுத்தோம். இது இல்லாமல் என் மனைவியும் பையனும் சில பெயர்கள் வைத்திருந்தார்கள். சிலர் அவர்களுடைய நண்பர்கள். சில நாட்களுக்கு முன் கோதாவரியில் நதியில் தண்ணீரில் மாட்டிக்கொண்டு இறந்துபோன பாடசாலை வாத்தியார் வித்யார்த்தி அவர்களுக்கும் பிண்டம் தரப்பட்டது. இந்த சமயத்தில் திடீரென்று தோன்றி ட்விட்டரில் இருந்து ஒரு சின்ன பதிவு போட்டு யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் பெயரும் கோத்திரமும் சொன்னால் பிண்டம் வைக்கிறேன் என்று சொல்லி ஒரு பத்து பன்னிரண்டு பெயர்கள் கிடைத்தது கிடைத்தன. அவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பிண்டங்கள் வைத்தோம்.
இதில் ஸக்த பிண்டம் என்று ஒன்று வருகிறது. கோதுமை மாவை வறுத்து கொஞ்சம் நீர்த்த பால் சேர்த்து இதை பிண்டமாக பிடிக்கிறார்கள். அது ஒன்று வைக்க வேண்டி இருந்தது. யாரைக்குறித்து என்று நினைவில்லை.
இப்படியாக பல்குனி நதி ஶ்ராத்தம் முதல் நாள் இரண்டரை மணி போல முடிந்தது.
12 மணி அளவில் கயாவாலிகளை வரச் சொல்லியிருந்தார்கள்.
இந்த கயாவால் பிராமணர்கள் மாத்வர்கள். உத்தராதி மடத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே இங்கே ஶ்ராத்தங்கள் முதலானவைகளுக்கு புரோகிதர்கள் ஆக இருக்கிறார்கள். விஷ்ணு பாத கோவில், அக்‌ஷய்ய வட கோவில் ஆகிய இடங்களுக்கு இவர்களே பாண்டாக்கள். 11 மணி அளவில் சிலர் வந்துவிட்டார்கள். மனைவி பார்த்துவிட்டு சின்ன குழந்தை முதல் கொள்ளுத் தாத்தா அவரை வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். ஆமாம் அதில் ஒருவர் மிகவும் வயதானவர். பையாஜி என்று மற்றவர்கள் மிகவும் மரியாதையுடன் அவரை நடத்துகிறார்கள். சின்ன குழந்தைக்கு பூணூல் இன்னும் போடவில்லை சும்மா வந்து இருந்தாற்போல் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் யாரோ அழைத்துப்போய்விட்டார்கள்.
இந்த கயா பிராமணர்களைப் பற்றி சில விஷயங்களை முன்னாலேயே சொல்லி இருந்தார்கள். இவர்களுடைய தேசாசாரம் நமக்கெல்லாம் ஒத்து வராது. இவர்கள் எதையும் தூக்கி குடிப்பதில்லை. எச்சில் செய்தே குடிக்கிறார்கள். நம் பக்கத்து ஶ்ரார்த்த உணவு இவர்களுக்கு சரிப்பட்டு வருவதில்லை என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அதெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நம்முடைய சாப்பாட்டுக்கு பழகிவிட்டார்கள் என்றும் இரண்டு விதமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டு வாத்தியார் இந்த யாத்திரை போய்விட்டு வந்தவர். அவர் வந்து இவர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பால்பாயசம் பூரி ஆகியவை. ஆகவே அதை நிச்சயமாக செய்து விடுங்கள் மற்றபடி நம் சௌகரியம் போல் செய்யலாம் என்று சொல்லியிருந்தார். பெண்கள் அதற்கு சரியாகவே தயார் செய்து கொண்டிருந்தனர் நிறைய பால் பாயசமும் பூரியும் செய்து மற்றபடி நம் வழக்கமான தமிழ்நாட்டு ஶ்ராத்த சமையல் ஆக செய்திருந்தார்கள்.
எப்படி இருந்தாலும் நம் பக்க மக்கள் இவர்களை கொஞ்சம் இளக்காரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு ஶ்ராத்தத்தில் போக்தாவாக இருந்தால் ஆயிரம் காயத்ரி ஜபம் செய்து அடுத்த கர்மாவுக்கு அருகதை ஆவார்கள் என்று சாஸ்திரம். ஆனால் இவர்களோ தினசரி ஏதோ ஒரு ஶ்ராத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தியாவந்தனம் செய்கிறார்களோ இல்லையோ என்று நம்மவர்கள் சந்தேகிக்கிறார்கள். அது எப்படி இருந்தாலும் க்ஷேத்திர வாசிகளை தூஷிக்கக் கூடாது என்று இருக்கிறது. இவர்கள் இல்லாமல் நாம் இங்கிருந்து யாரையும் அழைத்துப் போய் எல்லாம் சரிப்படாது. ஆகவே இவர்களை வைத்து ஶ்ராத்தத்தை நடத்த வேண்டியது.
நம் பக்கத்து சிரார்த்த நடைமுறை அனைத்தும் அந்த தாத்தாவுக்கு தெரிந்து இருந்தது. சரியாக பிரதி வசனமும் சொன்னார். கொஞ்சம் முன்னே பின்னே மற்றவர்கள் இருந்தாலும் இவரை ஒட்டி அவர்களும் பிரதி வசனம் சொல்லிக் கொண்டு போனார்கள். வரணம் எல்லாம் நான் செய்தேன். சில உபசாரங்கள் என் பையர் செய்தார்.
இவர்களுடைய ஆச்சாரத்தை பற்றி அவ்வளவு சொல்லி இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனித்தேன். வழக்கமான இந்த மாதிரி விஷயங்களுக்கு போகக்கூடிய பிராமணர்கள் கைகால்களை பார்த்தாலே சில விஷயங்கள் புரிந்துவிடும். அதிகமாக பிரதி கிரகம் வாங்கின தோஷங்களும் காயத்ரி செய்யாமல் ஶ்ராத்தங்களில் திருப்பி திருப்பி பங்கெடுக்கும் தோஷங்களும் காலில் இருக்கும் தோல் வியாதியில் தெரிந்துவிடும். இவர்களுடைய கால்களை நாம் கழுவி விடும்போது இதைப் பார்த்து விடலாம். ஆனால் இவர்கள் கால்கள் நன்றாகவே இருந்தன உண்மையில் மிகவும் சுத்தமாக இருந்தன. இந்த இடத்தின் விசேஷமோ இல்லை விஷ்ணு பாதத்தின் விசேஷமோ எப்படி இருந்தாலும் இவர்கள் சுத்தர்கள் என்று என் மனதில் ஒரு திருப்தி உண்டாயிற்று.
ஹோமம் முடிந்து இவர்களுக்கு இவர்களுக்கு உணவிடும் நேரம் வந்தது. இவர்களுக்காக பிளாஸ்டிக்கில் டம்ப்ளர்கள் வாங்கி வைத்திருந்தார்கள். அவற்றை ஒன்றுக்கு இரண்டாக பக்கத்தில் வைத்துவிட்டார்கள். தண்ணீர் பாயசம் முதலியவை இதிலேயே கொடுத்தார்கள். பார்த்த அளவில் அவர்களுக்கு நம் பக்கத்து உணவு சரிப்படவில்லை தான். நாம் நம் பாரம்பரியத்தின் படியே சமைப்போம் என்று இருப்பதை விட்டுக் கொடுத்துவிட்டு இவர்களுக்கு தகுந்தாற்போல் சமைத்து கொடுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர்கள் சாப்பிட்டு திருப்தி அடைவதே மிகவும் முக்கியம். நீங்கள் திருதியாகவே இருக்க மாட்டீர்கள் என்று சீதை சாபம் கொடுத்து இருந்தாலும் ஶ்ராத்தத்தின் முடிவில் இவர்கள் இரு கைகளையும் தூக்கி திருப்தி சொல்லி ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
இவர்களை அனுப்பிவிட்டு பிண்ட தானத்துக்கு உட்கார்ந்தோம். இதைப்பற்றி கொஞ்சம் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால் இறந்துபோன என் உறவினர்கள் ஜாபிதா தயாராக வைத்திருந்தோம். காருண்ய பித்ரு என்று சொல்லி இவர்கள் அனைவருக்குமே பிண்டம் கொடுத்தோம். இது இல்லாமல் என் மனைவியும் பையனும் சில பெயர்கள் வைத்திருந்தார்கள். சிலர் அவர்களுடைய நண்பர்கள். சில நாட்களுக்கு முன் கோதாவரியில் நதியில் தண்ணீரில் மாட்டிக்கொண்டு இறந்துபோன பாடசாலை வாத்தியார் வித்யார்த்தி அவர்களுக்கும் பிண்டம் தரப்பட்டது. இந்த சமயத்தில் திடீரென்று தோன்றி ட்விட்டரில் இருந்து ஒரு சின்ன பதிவு போட்டு யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் பெயரும் கோத்திரமும் சொன்னால் பிண்டம் வைக்கிறேன் என்று சொல்லி ஒரு பத்து பன்னிரண்டு பெயர்கள் கிடைத்தது கிடைத்தன. அவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பிண்டங்கள் வைத்தோம்.
இதில் ஸக்த பிண்டம் என்று ஒன்று வருகிறது. கோதுமை மாவை வறுத்து கொஞ்சம் நீர்த்த பால் சேர்த்து இதை பிண்டமாக பிடிக்கிறார்கள். அது ஒன்று வைக்க வேண்டி இருந்தது. யாரைக்குறித்து என்று நினைவில்லை.
இப்படியாக பல்குனி நதி ஶ்ராத்தம் முதல் நாள் இரண்டரை மணி போல முடிந்தது.
 

Wednesday, July 27, 2022

காஶி யாத்திரை - 30 கயா - 1





காஶி யாத்திரை - 30 கயா - 1
கயாவில் முதல் நாள் கர்மா ஆரம்பித்தது. இப்போது ஒரு சௌகரியம். வாத்தியார் பக்கத்து ரூமில் தான் இருந்தார். கயை தவிர வேறு எங்கும் காரியத்தை இப்போது ஏற்றுக் கொண்டு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட முடியாது. தங்கியிருந்த இடம் சங்கர மடம். வழக்கம்போல ப வடிவில் கட்டிடம். தங்கும் அறைகள் பரவாயில்லை. எக்கச்சக்க ஈக்கள். ஏதோ பிரச்சனை. அடிக்கடி தண்ணீர் வரவில்லை மோட்டார் போடுங்கள் என்று சொல்லி போட்டுக் கொள்ள வேண்டி இருந்தது. அங்கே நிர்வாகி பிரம்மச்சாரி இளைஞர். பாவம் அனுபவமில்லை. என்ன பிரச்சனை என்று புரியவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சப்ளை சீக்கிரம் நின்று விடுகிறது என்றால் சப்ளை லைனில் எங்கோ லீக் இருக்கிறது. கவனியுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். ஆள் கிடைக்காமல் அடுத்த நாள் குழாய் ரிப்பேர் செய்பவர் வந்து லீக் பார்த்து சரி செய்தார். அதேபோல மின்சார சப்ளை ஏதோ பிரச்சனை. அடிக்கடி போய்க்கொண்டிருந்தது. பக்கத்து ட்ரான்ஸ்பார்மர் பிரச்சினை என்றார்கள்.
வாத்தியார் 9 மணி போல ஆரம்பிக்கலாம் என்று சொல்லி நிஜமாகவே ஒன்பது மணிக்கு ஆரம்பித்துவிட்டார். மடத்திலிருந்து கோவில் ஐந்து நிமிட நடைதான். ஆனால் நிஜமாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆட்டோ பிடித்து போய் விடலாம் என்றார்கள். நான்தான் கிறுக்கு ஆயிற்றே. நீங்கள் ஆட்டோவில் வாருங்கள் நான் முன்னால் போகிறேன் என்று நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு 50 மீட்டர் போவதற்குள் போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு ஸ்கூல் பஸ் எதிரே வான் முதலியவை, ஒன்றையொன்று தாண்ட முடியாமல் பிரச்சனைகள் இருந்தது. அதனால் மற்றவர்களும் ஆட்டோவிலிருந்து இறங்கி என் பின்னாலேயே நடந்து வந்து விட்டார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமப்பட்டு அந்த நெரிசலான இடத்தை கடந்து விட்டோம்.
எங்கள் செருப்புகளை எல்லாம் போகும் வழியில் ஒரு கடையில் விட்டுவிட்டோம். அந்த கடையில் விஷ்ணு பாதம் முதலான சில விஷயங்களை மக்கள் வாங்கினார்கள்.
 
வறண்ட பல்குனி நதி

பல்குனி நதி வறண்டு கிடந்தது. படத்தை பாருங்கள். போன வாரம் போன போதும் கூட அப்படியேதான் இருந்தது. ஆனால் ஒரு இரண்டடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால் நாமே தூண்டி தண்ணீரை எடுத்துக் கொள்ள முடிந்தது. இங்கே ஒரு அடி பம்ப் போட்டிருக்கிறார்கள். இது பல்குனி நதி தண்ணீர் தானே; இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். ஏனோ எங்களுக்கு திருப்தி ஆகவில்லை. ஒரு 100 தப்படி தூரத்தில் ஒரு பண்டா ஷமியானா போட்டிருந்தார். கிணறு தோண்டி வைத்திருக்கிறார் என்று தெரிந்தது. நானும் பையரும் அங்கே போய் கை கால் சுத்தி செய்து கொண்டு கொஞ்சம் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ஒரு தாமிர பாட்டிலில் அனுஷ்டானத்துக்கு தண்ணீரைக் கொண்டு வருவதற்காக தயாரானோம். கை பம்பில் தண்ணீர் அடித்து கைகால்களை கழுவிக்கொண்டு உடனே கூடியவரை ஓடிப்போய் போய்விட வேண்டும்; மீதி தூரத்தை சூட்டை பொறுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதுபோலவே நான் முதலில் ஓடிப் போய் விட்டேன் பையனும் பின்னாலேயே ஓடி வந்துவிட்டார். இரண்டு பேரும் ஷமியானா நிழலுக்கு போய் சேர்ந்து அப்பாடா என்று மூச்சு விட்டோம். ஏறத்தாழ 75 பர்சன்ட் தூரத்தை பிரச்சினையில்லாமல் கடந்துவிட்டோம். மீதி தூரம் சூடான மணல் ஒரு கை பார்த்து விட்டது.
எங்களைப் பார்த்தவுடன் அந்த பண்டா வரவேற்றார். அவர் அனுமதியுடன் முதலில் பையர் கீழே இறங்கினார். சுமார் 15 அடி ஆழம் ஆறு அடி விட்டத்திற்கு குழி. அதில் நடுவில் ஒரு இரண்டரை அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. நீரை முகர்ந்து கொண்டு குழியின் ஓரத்துக்கு தள்ளி வந்து கைகால்களை சுத்தம் செய்துகொண்டு பின்னால் பாட்டிலை நிரப்பிக்கொண்டு தலையையும் ப்ரோக்‌ஷணம் பண்ணிக்கொண்டு மேலே வந்து சேர்ந்தார். என்ன கொடுக்கட்டும் இவருக்கு என்று கேட்டார். ஒரு ஐம்பது ரூபாய் கொடுக்கலாம் என்று சொன்னேன். அவர் திருப்தியுடன் வாங்கிக்கொண்டு விட்டார். நானும் கீழே இறங்கி ப்ரோக்‌ஷணம் செய்துகொண்டு கைகால்களை சுத்தி செய்து கொண்டு மேலே வந்து விட்டேன். இப்போது கால்கள் ஈரமாக இருந்ததால் மீண்டும் ஓட்டமாக ஓடி பாதி தூரத்தை கடந்து, பின்னால் சூடான மணலில் மீதி தூரத்தை கடந்தோம். நேராகப் போய் கை பம்பி தண்ணீர் அடித்து கால்களை குளிர்வித்து கொண்டோம்.

ஆனால் வரும் காலத்தில் இது பிரச்சினையாக இருக்காது என்று தோன்றுகிறது. ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் செக் டேம் ஒன்றை கட்டுக்கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டவர் வாழிய!
இந்த ஆற்றங்கரையில் இருந்து பார்த்தால் நிறைய படிகள் இருக்கின்றன. வெறுமனே அடுத்த படி பார்த்துக்கொண்டு மேலே ஏறுவது உசிதம். அந்த காலத்து மக்கள் பத்தடி உயரம் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு தோதாக ஒன்னரை அடி உயரம் படிகள் இருந்தன. சிரமப்பட்டுதான் ஏற வேண்டியிருந்தது. இந்த இடம் கொஞ்சம் மாறிப் போய் விட்டாலும் பெரும்பாலும் அப்படியே இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இந்தப் படிகளுக்கு இடையே கொஞ்சம் தட்டையான பூமி வரும். இங்கேதான் போனமுறை வந்தபோது கூட வந்த உதவியாளர் ஒன்பதே ஒன்பது விராட்டிகளை வைத்துக்கொண்டு எப்படி சரு தயார் செய்வது என்பதை காட்டினார். மூன்று லேயராக முக்கோணமாக 3 விரட்டிகளை வைத்து கீழே கொளுத்திப்போட்டுவிட்டு மேலே உங்கள் பாத்திரத்தை வைத்து அரிசியை களைந்து போடுங்கள் என்றார். பல்குனி நதியில் இருந்து வந்து கொண்டிருக்கும் இதமான காற்று அதை எரிய வைத்துக் கொண்டே இருந்தது. வெகு சீக்கிரத்தில் சரு தயாராகிவிட்டது.
இப்போது தீர்த்த சிராத்தத்தை பார்வண விதமாக செய்வதாக இருந்ததால் இங்கே வெறும் சங்கல்பம் மட்டும். படிகளின் முடிவில் ஒரு கோவில் இருக்கிறது. அதன் முன் மண்டபத்திற்கு போய் சேர்ந்தோம். இதன் எதிரே இருந்த இடத்தில் ஆறுக்கு ஆறு வரிசையில் ஒரு பேட்ச் ஹோமம் செய்து விட்டு போயிருந்தார்கள். அதைப் போலப் பிண்டங்களையும் வைத்து விட்டு போயிருந்தார்கள். கோவில் பண்டா பெண் போல் இருக்கிறது; ஒருவர் எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்தார். நாங்கள் உட்கார்ந்து கயா யாத்திரை சங்கல்பம் செய்தோம். பிறகு அன்றைய பல்குனி நதி ஶ்ராத்த சங்கல்பத்தை செய்தோம். முடித்துவிட்டு அங்கேயே தர்ப்பணம் செய்தோம். கோவில் பண்டாவிடம் கேட்டு தர்ப்பணத்துக்கு சில தட்டுகளை வாங்கிக் கொண்டோம். இதெல்லாம் முடிந்த பிறகு அவருக்கு தட்சிணையை கொடுத்துவிட்டு தங்கும் இடத்துக்கு வந்து விட்டோம். பெண்கள் சமையல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
 

 

Saturday, July 23, 2022

காஶி யாத்திரை - 29 காஶி - 12



நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய குடும்பமே பயணம் செய்து கொண்டிருந்தது. வயதானவர் ஒருவர். அவருடைய இரண்டு மகன்கள். இரண்டு நாட்டுப் பெண்கள். இரண்டு குழந்தைகள். ஒரு கை குழந்தை. இப்படி பெரிய குடும்பம். வாரணாசி கூட தாண்டாத நிலையில் ஏதோ ஒரு இடத்தில் வண்டி நின்றது. நாங்கள் நின்ற இடத்தில் பிளாட்பார்ம் கூட இல்லை. ஆனால் ஒரு முதியவர் கூட நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உதவியுடன் முதியவர் வண்டியில் ஏறினார். இந்த குடும்பம் உடனடியாக போய் அவர் காலை தொட்டு கும்பிட்டது. அவர் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு கட்டாக எடுத்தார். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 40 ரூபாய் கொடுத்தார். எல்லோருக்கும் பரம சந்தோஷம். வாங்கி வந்திருந்த இரண்டு பக்கெட் ஐஸ்கிரீம் ஐ கொடுத்துவிட்டு எல்லோருக்கும் ஆசிர்வாதம் செய்து விட்டு இறங்கிப் போய்விட்டார். குழந்தைகள் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இந்த பயணங்களில் நான் கவனித்த இன்னொரு விஷயம் குழந்தைகள் பாட்டுக்கு மணி பத்து பதினொன்று என்று என்ன ஆனாலும் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். எட்டு மணி ஆனால் கண்கள் சுற்றும், தூங்கி விடுவோம் என்ற எங்கள் காலம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
ரயில் சோன் நதியை நெருங்கியது. முன்னே எங்கள் அப்பா அம்மாவுடன் வந்து திரும்பும் போது இதை பார்த்த நினைவு இருக்கிறது. பலத்தில் நுழைந்த பின் அது பாட்டுக்கு பாலத்தின் மீது போய் கொண்டேஏஏஏஏஏ இருந்தது. பக்கத்தில் இருந்தவரிடன் விசாரித்தேன். ‘இது ஸோன் நதி பாலம். இந்தியாவிலேயே மிக நீளமான பாலமாக்கும்! 99 தூண்கள் இருக்கிண்றன’ என்றார். இப்போது எதிரே சின்னப்பையன் ஒருவன் இருந்தான். இந்த பாலம் பற்றி தெரியுமா என்றேன். தெரியாது என்று தலை அசைத்தான். சொன்னேன். அது அப்போது மிக நீளமானது. இப்போது அசமில் போகிபீல் பாலம். இன்னும் பலதும் கூட வந்துவிட்டன.
முன்னே சொன்னது போல இது தாமதமாக போய்க்கொண்டிருக்கும் ரயில். ஆகவே சூப்பர் எக்ஸ்பிரஸ் முதல் நேரத்துக்கு போய்க் கொண்டிருக்கும் மிக மிக மெதுவான கூட்ஸ் வண்டி வரை எல்லாவற்றுக்கும் இது வழி கொடுத்து பிறகு கிளம்பி போய்க்கொண்டிருக்கிறது. ரபி கஞ்சில் பாதி சீட் காலி ஆகிவிட்டது. கீழே படுத்திருந்தவர்களுக்கு நிம்மதி. இந்த இடத்தில் அநியாயமாக ஐந்து வண்டிகள் தாண்டிப் போயின. ஸ்டேஷன்கள் இடையில் வண்டி மிக வேகமாக தான் போய்க் கொண்டிருந்தது. இந்த தாமதங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் ஏற்கனவே இருந்த இரண்டு மணி நேரத்தில் நிச்சயம் ஒரு மணியாவது சரிசெய்து இருக்கும். இப்போது எங்கே இருக்கிறோம் என்று பார்த்துக்கொண்டு கடைசியில் இரவு … இல்லை காலை 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம். அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள். எங்கள் லக்கேஜை அவர்கள் வாங்கிக் கொண்டதால் பெரிய ரிலீப் கிடைத்தது. வண்டியில் சங்கரமடத்திற்கு போய் சேர்ந்தோம். அடுத்து அரைகுறையாக தூங்கினேன். காலை எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே நிறைய நேரம் படுத்திருந்தேன். என்ன செய்வது? ஒவ்வொரு சமயமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போகும்போது நடுராத்திரி போய் சேர்வதாக அமைந்துவிட்டது. நல்ல காலமாக கயை கடைசி இடம். இங்கிருந்து கல்கத்தா போகும் வண்டி காலையில் தான் போய் சேருகிறது தூங்கி எழுந்த பிறகு போய் சேரும். சௌக்கியம்.
காலையில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தர்மபத்னி சமையலுக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தும் ப்ரயாகை, காசியில் ஆள் கிடைக்கவில்லை. உதவி இல்லாமல் சிரம்பப்பட்டார்கள். இதை கேள்விப்பட்டுவிட்டு கொல்கொத்தா நண்பரின் மனைவி இரவு ரயிலில் கிளம்பி கயை வந்து சேர்ந்துவிட்டார்! ஆட்டோவில் வரும் வழியில் பால் கறப்பதை பார்த்தாராம். வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!

Wednesday, July 20, 2022

காஶி யாத்திரை - 28 காஶி - 11




காஶி யாத்திரை - 28 காஶி - 11
அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் 7 மணிக்கு கயாவுக்கு கிளம்பும் ஒரு வேனில் கிளம்புவதாக ஏற்பாடு. அவர்கள் 12 மணி போலத்தான் போய் சேர்வார்கள். நாங்கள் எட்டரைக்கு போய்விடுவோம்.
சற்று ஓய்வெடுத்துவிட்டு எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்தோம். அடுப்படியை ஒழித்து எல்லாவற்றையும் சுத்தி செய்து ஒப்படைத்துவிட்டு மூன்று மணிக்கே கணக்கைத் தீர்த்து விட்டு கிளம்பினோம். ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தபோது மணி மூணரை. அங்கே வழியே லாபியில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். வழக்கம் போல் போதிய இருக்கைகள் இல்லை; ம்ம்ம்ம் இருக்கைகளுக்கு இடமுமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். இந்த இடத்தில்தான் இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு பெரிய மின்விசிறியை பார்த்தேன். படம் எடுத்தேனா என்று நினைவில்லை. இல்லை போலிருக்கிறது. அறிவிப்பு பலகை வண்டி வரும் நேரம் 4-10 என்று காட்டிக்கொண்டிருந்தது. அது மெதுவாக நாலரை என்றாகிவிட்டது. நான்கு மணி போல நாங்கள் லாபியில் இருந்து கிளம்பி எட்டாவது பிளாட்பார்ம் போக வேண்டியிருந்தது. அங்கே போனோம். இந்த ரயில் நிலையத்தில் ஒவ்வோர் இடத்திலும் எஸ்கலேட்டர் இருக்கிறது. உடல்நிலை சரியில்லாத வயதான நடக்க சிரமப்படும் என்னைப் போன்றவர்களுக்கு எது பெரிய வரம். இன்னும் எஸ்கலேட்டரில் ஏற இறங்க தடுமாற்றம் வரவில்லை என்பது இன்னும் பெரிய வரம். எட்டாவது பிளாட்பாரத்துக்குப் போய் அங்கே கொஞ்சம் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். அரவிந்தன் கைபேசியை பார்த்து அரைமணி தூரத்தில்தான் இருக்கிறது என்று ஒரு மணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார். அது நகரவே இல்லை போலிருக்கிறது. இது ஒரு பிரச்சனை. எப்போதுமே தாமதமாகும் வண்டி மேலே மேலே தாமதமாகிக் கொண்டே போகும் என்பது எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இருக்கிறது. அது இன்னும் அப்படியேதான் இருக்கிறது போலிருக்கிறது. இது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். அறிவிப்பு பலகையில் நேரம் மாறிக் கொண்டே இருந்தது. இதற்குப் பின்னால் வருவதாக சொல்லப்பட்ட வண்டிகள் முன்னதாகவே வந்து கிளம்பி போய்க் கொண்டிருந்தன. ஒரு ஆறு மணி போல் இது அறிவிப்பு பலகையில் இருந்தே காணாமல் போய்விட்டது.
இந்த எட்டாம் பிளாட்பாரத்தில் இன்னும் கட்டுமான வேலைகள், கொஞ்சம் கூடுதல் வேலைகள் கொஞ்சம் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. சிறுநீர் கழிப்பதற்காக இடத்தை தேடி பிளாட்பார்மில் முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர் போய் பார்த்தாகிவிட்டது. ஒரு இடத்தையும் காணோம். இதற்கு நடுவில் அறிவிப்பு பலகையில் இருந்து போய்விட்ட இந்த வண்டி வந்துவிட்டதானால் என்ன செய்வது என்று ஒரு பிரச்சனை வேறு மனசில் இருந்தது. கடுப்பாகிப் போய் கடைசியில் கைபேசியில் தேடிப்பிடித்து டிவிட்டரில் ஒரு மெசேஜ் போட்டேன்.

Worst times. Send railways have not improved at all since Inc days. been waiting for Doon express in Varanasi since 3-30. Still no signs of train. Worst experience for a 69 year old with ill health.
@RailMinIndia
6:23 PM · Apr 22, 2022·
பதில் வந்தது.
Kindly share your PNR number and mobile no. via DM so that we may assist you. You may also raise your concern directly on http://railmadad.indianrailways.gov.in or dial 139 for speedy redressal. #OneRailOneHelpline139

உடனே அதுக்கு பதில் போட்டேன்.

PNR 2337829948 Cell.. 7*******26

6:31 PM · Apr 22, 2022·

அப்பறம் ஒண்ணும் நடக்கலை. ஆனா திடுதிப்புன்னு ரயில் வந்தாச்சு. வழக்கம் போல நான் என் பையை மட்டும் எடுத்துகொண்டு தனியிடம் ஓடினேன். பத்து கோச் தள்ளிதான் என்னோடது. எட்டரை மணிக்கு போய் சேர்வதாக டைம் டேபிள். அதனால் சீட் மட்டுமே வாங்கி இருந்தது. இப்போது எட்டரைக்கு எங்கே போய் சேர்வது? இரவு டிபனும் தண்ணீரும் பையர் கொண்டு வந்து கொடுத்தார்.
ரிசர்வ் கம்பார்ட்மெண்ட். ஆனா கூட்டமோ கூட்டம்! அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் நிறைந்திருந்தார்கள். என் சீட்டை கண்டுபிடித்தேன் ஜன்னலோரம் தனி இருக்கை. அங்கே பார்த்தால் ஒரு குண்டு பெண்மணி உட்கார்ந்திருந்தார். இது என் சீட் என்றேன். பிரச்சினை இல்லாமல் பக்கத்து சீட்டுக்கு போய்விட்டார்.
அதே போல எதிர் சீட்டுக்கு வந்தவர் அங்கே இருந்தவரை எழுப்பி விட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டார். டிடிஈ எல்லாம் கடைசி வரை வரவே இல்லை. டாய்லெட்டில் தண்ணீர் இல்லை! கோச்சே வழக்கமான கோச் போல இல்லை. ஏதோ ‘அஜீஸ்’ செய்தது மாதிரி இருந்தது.
ஒரு வழியாக செட்டில் ஆகிவிட்டு செல்லை திறந்தால் இப்படி ஒரு மெசேஜ்:

RailwaySeva
@RailwaySeva
Replying to
@drtvasudevan
Sir, We are still waiting for details (http://M.No. and PNR No.) so that we register your complaint and expedite resolution.

6:38 PM · Apr 22, 2022·OneDirect Suite - P

ராமான்னு நினைச்சுண்டு பதில் போட்டேன்.

I have sent it. At last train arrived and am seated. Wonder what you can do for me now thanks anyway.
6:51 PM · Apr 22, 2022·
ஒரு வழியா அந்த பஞ்சாயத்து முடிஞ்சது.
கொல்கத்தாவில் தங்கியிருந்தபோதே பயணத்துக்கு உகந்த உணவு பற்றி பேச்சு எழுந்தது. அப்போது நான் சொன்னேன் இதை பாருங்கள் நாம் வீட்டில் சாப்பிடுவது படி சாப்பிடுவோம் என்று எதிர்பார்க்கக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் இருப்பார்கள். டாய்லெட்டில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. கை சுத்தப்படுத்திக் கொள்ள முடியுமா முடியாதா என்பதெல்லாம் விஷயங்கள். அதனால் என்ன செய்யவேண்டும் என்றால் முடிந்தவரை பிரச்சனை இல்லாதபடிக்கு சாப்பிடும்படி செய்ய வேண்டும். உதாரணமாக பூரி செய்வதாக இருந்தால் சின்னச் சின்னதாக. ஒன்று எடுத்தால் அப்படியே வாயில் போட்டுக் கொள்ளும்படி செய்ய வேண்டும். பெரியதாக வழக்கம்போல் செய்துவிட்டு அதை உடைத்து கொண்டு என்று செய்வதே சரியாக வராது. எதானாலும் சின்ன சின்ன யூனிட்டாக ஒவ்வொன்றும் வாயில் கொள்ளும் அளவில் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போது தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்றார்கள். முடிந்தவரை ஈரம் இருக்கும் விஷயமாக வேண்டாம். காய்கறிகள் போட்டு ஏதாவது செய்தால் என்ன? அந்த பாத்திரத்தையும் கழுவ வேண்டி இருக்கும். அதை பொட்டலமாக்க முடியாது. ரொம்ப அருமையான ஐடியா சொல்லுகிறேன். வாயில் கொள்ளும்படியான சமோசா. யோசித்துப்பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் அவசியமில்லை. எல்லாம் உள்ளே இருக்கிறது. ஒரு சின்ன பேப்பர் டவல் வைத்துவிட்டால் கையை கழுவிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் கூட இந்த பேப்பர் டவலால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு முடித்துவிடலாம்.
 இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இந்த நேரத்துக்கு இரவு உணவு சின்ன சின்ன பூரியாக கொடுத்திருந்தார்கள். டாய்லெட்டில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன் அல்லவா. இப்போது பிரச்சினையே இல்லை.
சில பேருக்கு பயணத்தில் மற்றவர்களை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. பொதுவாக இந்த பயணங்களில் நான் ஜெபத்தில் உட்கார்ந்து விடுவேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காததால் மனது ஒன்றவில்லை. ஆகவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். கங்கையைத் தாண்டி ரயில் போவது, வழியில் வரும் ஸ்டேஷன்கள் அப்போது செல்பேசியில் நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்ப்பது என்று நேரம் போய்விட்டது.

ரயிலில் இருந்து வரனாசி 'காட்' கள்.

 
 

Tuesday, July 19, 2022

காஶி யாத்திரை - 27 காஶி - 10




 
ஆரம்பத்திலேயே போவது பித்ரு காரியங்களுக்காக. கோவில் போன்ற சமாசாரங்கள் இரண்டாம் பட்சம்தான் என்று தெளிவாக இருந்தேன்.
 



புதிய கட்டுமானம்.

வாராநதி சேருமிடம்.

வாரா காட்

வாரா காட் பிள்ளையார் கோவில்.

புதிய கட்டுமானம்.

 

அதைப்போல எதையும் வாங்க வேண்டும் என்று உத்தேசித்து இருக்கவில்லை. இதனால் பல விஷயங்கள் சௌகரியமாக போய் விட்டது. இருந்த உடல்நிலைக்கு மேற்கொண்டு எந்த ஒரு  வருத்தும் விஷயமும் இல்லாமல் போய்விட்டது.
 அடுத்த நாள் விடிகாலையில் இரண்டரை மணிக்கு எழுந்து காசி விஸ்வநாதர் கோவிலில் மங்கள ஆரத்தி பார்க்க போக வேண்டும் என்று சொன்னார்கள். நான் தெளிவாக முடியாது என்று சொல்லிவிட்டேன். மெதுவாக நான் போய் அவரை தரிசித்து கொள்கிறேன்; இந்த இரண்டரை மணிக்கு கிளம்பி போவதெல்லாம் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்காக என் பையர் ‘சரி நான் அப்பாவை அப்புறமாக அழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று சொல்லி தங்கிவிட்டார். பெண்கள் இருவரும் அரவிந்தனை துணைக்கு அழைத்துக்கொண்டு  இரண்டரை மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றால் இங்கே ஒன்றரை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கிளம்பிவிட்டார்கள். ஏற்கனவே வண்டிக்கு சொல்லி வைத்திருந்தார்கள். அங்கே நேரத்துக்கு போய் சேர்ந்து ஏகப்பட்ட கெடுபிடிகள்… ஆதார் கார்டு முதலியவற்றை காண்பித்து டிக்கெட்டை காண்பித்து உள்ளே போனார்கள் என்று தெரிந்தது. இவர்களுக்கு கர்ப்பகிரகத்தில் உள்ளே போய் தொடும்தூரத்தில் சிவலிங்கத்தை பார்த்து தரிசனம் செய்ய முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.
 நான் வழக்கம்போல 4 மணிக்கு எழுந்து ப்ராணக்ரியா முடித்து குளித்து பையனுடன் கிளம்பி கோவிலுக்கு போனேன். நான்காம் நம்பர் கேட்டுக்கு போங்கள் என்று திருப்பி திருப்பி சொன்னார்கள். டிக்கெட் வாங்கிவிட்டு இருந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அதுவோ அந்த இரண்டரை மணி தரிசனத்துக்கு தான். எப்படியும் செல்போன் கொண்டு போகாதே, அதைக்கொண்டு போகாத, இதைக்கொண்டு போகாதே என்று சொன்னதால் பேசாமல் நான் வெறும் கையுடன் கிளம்பிவிட்டேன். பையர் பணத்துக்காக பவுச் மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். வண்டி ஓட்டுனர் நான்காம் நம்பர் கேட் முகப்பில் கொண்டு விட்டுவிட்டார். இறங்கி நாங்கள் பாட்டுக்கு நேரே போக ஆரம்பித்தோம். டிக்கெட் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொன்னோம். சரி போங்க என்று உள்ளே அனுப்பி விட்டார்கள். உள்ளே போய் நீண்ட நெடிய கியூவில் போய் நின்றோம். கொஞ்சம் சீக்கிரமாகவே நகர்ந்தது. கர்ப்பகிரகத்திற்கு முன்னால் மூன்றாக பிரித்து விட்டார்கள். ஒன்று நேராக போக, இரண்டாவது இடது பக்கம் மூன்றாவது வலது பக்கம் போயிற்று. நாங்கள் வலது பக்கம் போனோம். தவறு செய்து விட்டோம் என்று  பின்னால் தெரிந்தது. மேலே நகர்ந்து போனால் சுவாமிக்கு நேராக திறப்பு இருக்கிறது. நன்றாக பார்க்க முடிகிறது. இங்கே ஒரு சூட் (chute)வைத்திருக்கிறார்கள். இதில் நாம் கொண்டுபோன கங்கைஜலம் பூ முதலியவற்றை போட்டு விடலாம். ஜலத்தை விட்டால் அது பூவையும் எடுத்துக்கொண்டுபோய் நேரே சுவாமியின் மேலே விழும்படி அமைத்திருக்கிறார்கள். இதனால் பலரும் சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு பூஜையும் செய்து கொண்டு போக முடிகிறது. அங்கே இருக்கிறதா பண்டா மாலை பூ முதலியன போட்டால் ஏற்கனவே போட்ட அவற்றை அதாவது நிர்மால்யத்தை எடுத்து கொடுக்கிறார். சட்டுப்புட்டென்று தரிசனம் முடிந்து விட்டதால் மேலே என்ன செய்வது என்று தெரியவில்லை. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சன்னதிக்கு வலது பக்கம் இருக்கிறோம். இப்போது பிரதட்சணம் வர வேண்டுமென்றால் அது முடியவில்லை க்யூவை தாண்ட வழி இல்லை. ஆகவே சோமசூக்த பிரதட்சிணம் செய்வது போல இடது பக்கமாக போய் முக்கால்வாசி தூரம் போய் அங்கேயே உள்ளவற்றைப் பார்த்துக்கொண்டு அதே மாதிரி திரும்பினோம். அடுத்து ஞானவாபி எங்கே என்று தேடினோம். பார்த்தோம். கிணறை சலவைக்கல் போட்டு மூடிவிட்டார்கள்.  இந்த சன்னதியை ஒட்டிய வளாகம் மிகவும் பெரியதாக இருக்கிறது. நிறைய பேர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஜபம் தியானம் முதலியவற்றைச் செய்ய முடிகிறது; செய்தார்கள்; பார்த்தோம். ஓரிடத்தில் ஒரு பெரிய பேட்ச் பிராசசிங் நடந்துகொண்டிருந்தது. பல பேரை உட்காரவைத்து ஏதோ சங்கல்பம் செய்து பிராமணர் ருத்ர ஜபம் செய்து கொண்டிருந்தார். பிறகு வெளியே வந்தோம். அன்னபூரணியை தேடிக் கொண்டு போனோம். வழியில் பிள்ளையாரையும் பார்த்தோம். அன்னபூரணி கோவில் வெளியே தனியாக இருக்கிறது. இந்த இடம் இன்னும் கொஞ்சம் முன்னேறலாம். ஏதும் செய்யப்படாமலேயே இருக்கிறது. தெரு குறுகியது. கூட்டமும் அதிகம். கொஞ்சம் சிரமப்பட்டு க்யூவில் நின்று உள்ளே போனோம். தரிசனம் செய்தோம். வெளியே வந்தால் சிவப்பு தொப்பியை மாட்டிக் கொண்டு ஒரு ஐம்பது அறுபது பேர் இருந்தார்கள். குழு சுற்றுலாவாக வருபவர்களுக்கு இப்படி ஒரு ஏற்பாடு போலிருக்கிறது. கூட்டத்தில் தவறினால் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று தெரிகிறது. ஏறத்தாழ போன வழியே திரும்பிவந்து விசுவநாதர் கோயில் வாசலுக்கு வந்து அங்கிருந்த நாலாம் நம்பர் வீட்டுக்கு வந்து வெளியே வந்தோம். டுக் டுக் வண்டியோட்டி காத்துக்கொண்டிருந்தார். அதில் ஏறி திரும்பினோம். வரும் வழியில் ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தோம். இந்த டுக்டுக் வாங்க ஏறக்குறைய இரண்டரை லட்சம் செலவாகிறது. ஐம்பதாயிரம் போட்டால் மீதி கடனாகவும் மானியமாகவும் கிடைக்கிறது. இரண்டு வருஷத்துக்கு பின்னால் ஒரு 20000 செலவு செய்து பேட்டரியை பேட்டரி புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. ‘பரவாயில்லையே! அப்படியானால் ரன்னிங் காஸ்ட் என்ன?’ என்று கேட்டோம். ‘அது ஒன்னும் பிரச்சினை இல்லை 50 ரூபாய் செலவாகும் தினமும் அவ்வளவுதான்.’ 
‘அதை எங்கே சார்ஜ் செய்வீர்கள்?’
‘எந்த கடை பக்கத்திலும் நிறுத்தி சார்ஜ் போட்டு விட்டு வீட்டுக்கு போய்விடலாம்’  என்றார் அவர். பரவாயில்லை இது நிச்சயமாக ஒரு பெரிய முன்னேற்றம் தான் என்று நினைத்துக் கொண்டேன். சத்தம் இல்லை புகை இல்லை. சீக்கிரமாகவே போக வேண்டிய இடத்திற்கு போக முடிகிறது.
 திரும்பி வந்த பிறகு சமாராதனைக்கு பெண்கள் எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னால் தம்பதி பூஜை கங்கா பூஜை முடித்து விட்டு வந்து விடலாம் என்று வாத்தியார் வீட்டுக்கு போனோம். வாத்தியார் அப்பாவை செய்து வைப்பார் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு வேறு வேலையாக போய்விட்டார். வாத்தியாரின் அப்பா வயோதிகர். அதாவது என்னைவிட வயது கம்மியாக இருந்தாலும் இயலாமை என்னைவிட அதிகமாக இருக்கிறது. இப்படி சிலரை பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம்; உடம்பு பரவா இல்லை என்பதெல்லாம் தெரிகிறது!  வாத்தியாரின் அப்பா நிதானமாக  சங்கல்பம் முதலியவற்றை செய்து வைத்து பூஜையை செய்து வைத்தார். அவருக்கும் அவரது தர்ம பத்னிக்கும் தம்பதி பூஜை. ப்ரயாக் இலிருந்து தமிட குடுவையில் கொண்டு வந்த கங்கை ஜலத்தில் கங்கா பூஜை. பூஜை மிக விஸ்தாரமாக இல்லாமல் அதேசமயம் மிகவும் சுருக்கமாக இல்லாமல் ஒரு அரை மணிநேரம் செய்து முடிக்கப்பட்டது. கொண்டு போயிருந்த வஸ்திரங்கள் முதலியவற்றை அவர்களுக்கு சமர்ப்பித்து விட்டு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதங்களை பெற்று ரூமுக்கு திரும்பினோம். ஒரு பதினோரு மணி போல சமாராதனைக்காக பிராமணர்கள் வந்துவிட்டார்கள். சங்கல்பம் செய்து அவர்களுக்கு சுருக்கமான பூஜை செய்து உணவளித்து உண்டபின் உபசாரங்களை செய்து புக்த தக்ஷிணை கொடுத்து நமஸ்காரங்கள் செய்து ஆசீர்வாதங்களை பெற்றோம். ஏறத்தாழ ஒரு மணிக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  மாலையில் வண்டி நாலு மணிக்கு.  இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது அரவிந்தன் கைபேசியை பார்த்துவிட்டு இந்த டூன் எக்ஸ்பிரஸ்… நேற்றைய வண்டி இன்னும் கல்கத்தா போய் சேரவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதுவே காலை 7 மணிக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். இன்னைய வண்டி? அரை மணி தாமதம். சரி சரி.