Pages

Thursday, May 30, 2013

ரமணர் - காலக்கணக்கு.

 
பகவான் புன் சிரிப்புடன் "ஆமாம். அது ஒரு கர்வம்தான். அதற்கு ஒரு கதை இருக்கிறது” என்றார்.....(போன பதிவின் தொடர்ச்சி)

ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன், சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு 'இல்லை அப்பனே, உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள்.' என்றாராம். 'அதெப்படி? எல்லாரையும் படைப்பவன் நானாச்சே? என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள்? ' என்றார். 'சரி, வா, காட்டுகிறேன்' என்று மஹாவிஷ்ணு அழைத்துக்கொண்டு போனார்.

"ஒரு இடத்தில் லோமசர் என்று ஒரு மஹரிஷி காணப்பட்டார், அவரிடம் மஹாவிஷ்ணு 'ஐயா, தங்கள் வயதென்ன? இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள்?' என்று கேட்டார். அவர் 'அப்பனே என் வயதை கேட்டாயா? சொல்கிறேன். கேள். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலி யுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும்' என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது.

அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் 'ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுஸில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும்' என்றாராம்.

இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது. இபப்டி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. சரியான ஞானம் ஏற்பட்டால் இந்த சரீரம் யாருக்கு வேண்டும்? ஸதா ஸர்வ காலமும் நிர்மலமாக இருக்கும் தனக்கு இந்த சரீர சுமை எதற்கு?” என்றார் பகவான்.
"குரு கிருபை இல்லாமல் அந்த ஞானம் கிடைக்குமா? ஜடம் போலிருந்த ராமனுக்கு குரு போதனையினால்தானே அறிவு உண்டாகியது!” என்றார்கள் அந்த பக்தர்கள்.

"ஆஹா! சந்தேகமென்ன? குரு கிருபை அத்தியாவசியமே! அதனால்தான் தாயுமானவர் பத்துப்பாடல்களில் குருவை துதித்துள்ளார். மற்றொரு பெரியவர், 'குருநாதா, உன் பார்வை பட்டாலே போதும்; புலி பூனையாகிவிடும். பாம்பும் அணில் போல் சாதுவாகிவிடும். துஷ்டன் நல்லவனாகிவிடுவான். இன்னும் எதுதான் சித்திக்காது? உன் கடைக்கண் பார்வையாலேயே எல்லாம் மேன்மையடைகிறது. உன் மஹிமையை எப்படி வர்ணிப்பேன்?' என்று பாடி இருக்கிறார். குரு கிருபை என்றால் சாதாரணமான விஷயமா?” என்றார் பகவான்.

விஜயவாடாவிலிருந்து வந்தவர்கள் இந்தக்கதையை கேட்டு "குரு கிருபை எங்களுக்கு எவ்வளவு வாய்த்திருக்கிறது பாருங்கள். பகவான் இந்த கதைகள் மூலம் ஞானபோதனை செய்து எங்கள் விசனத்தை எல்லாம் போக்கிவிட்டார்” என மகிழ்ந்தனர்.

Wednesday, May 29, 2013

ரமணர் - ஞானிகள் போக்கு....

 
மல்லிகார்ஜுன ராவ் என்று ஒருவர் ஆச்ரமத்துக்கு வந்தார். அவர் அங்கே அடிக்கடி வந்து போகிறவரே. அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள். நடுவில் 5 ஆண் குழந்தைகள் பிறந்து இறந்தன. ஆறாவது ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் அதற்கு அன்ன ப்ராசனம் செய்ய எண்ணி அதை பகவான் கையாலேயே செய்விக்க வேண்டும் என்று ஆவலாய் திருவண்ணாமலை வந்தனர். அந்த முஹூர்த்தம் நாளை மறு நாள் என்று இருக்கும் போது குழந்தை இறந்துவிட்டது. பின் ஊருக்கு போக எண்ணி பகவானிடம் விடை பெற்றுப்போக வந்து இருந்தனர். அவர்கள் துக்கத்தை தணிப்பதற்கு கேட்டது போலவே ஒரு பக்தர் பகவானிடம் கேட்டார்...

"ஸ்வாமி ப்ராணாயாமம் போன்ற சாதனைகளால் சரீரத்தை நீண்ட காலம் இருக்கச்செய்யலாம் என்று அப்படிப்பட்ட ஞானிகள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்களே, அது உண்மைதானா? ”

அதற்கு பகவான் சற்று நிதானித்து, “ஆமாம். செய்கிறார்கள். ஆனால் ரொம்ப காலம் ஜீவித்து இருந்தால் மாத்திரம் ஒருவர் ஞானி ஆகிவிடுவாரா? அல்லது சொற்ப காலம் இருந்தவர்கள் ஞானி ஆகாமல் இருப்பார்களா? சங்கரர் 32 வருஷகாலம்தான் இருந்தார். மாணிக்க வாசகர் 32. சுந்தரர் 18. சம்பந்தர் இன்னும் சீக்கிரமாகவே, 16 வயசிலேயே சரீர த்யாகம் செய்துவிட்டார். அவர்கள் எல்லாம் ஞானிகள் இல்லையா என்ன?”

"ஞானிகளுக்கு உண்மையில் இந்த சரீரத்தின் மீது ப்ரியமே இருக்காது. ஆனந்த மயமான அவர்களுக்கு இந்த உடல் ஒரு வியாதியாகவே தோன்றும். இது இருப்பதால்தான் பல் துலக்குவது, மல ஜலம் கழிப்பது, ஸ்னானம் செய்வது, ஆகாரம் எடுத்துக்கொள்வது போன்று பல தொல்லைகள். ஒரு சிரங்கு வந்தால் அதை அலம்பி மருந்து போடாமல் இருந்து விட முடிகிறதா? அதைப்போலவே இந்த சரீரத்தை கவனிக்காமல் போனால் அது கேடடைந்து விடுகிறது. ஞானியானவன் கூலிக்கு சுமை தூக்குவது போல இந்த தேகத்தையும் சுமக்கிறான். போக வேண்டிய இடம் எப்படா வருமென்று பார்த்து கொண்டு இருப்பானே தவிர பிராணாயாமாதிகளும் காயகல்பங்களும் செய்து இந்த வியாதியை வெகு நாட்கள் தங்க வைக்க வேண்டும் என்று அவன் நினைப்பானா? அதெல்லாம் சித்தர்களின் வழிகள். நான் மலை மீது இருக்கும் போது சில சித்தர்கள் இருந்தார்கள். அவர்களை பார்க்க யாரேனும் வந்தால் , உட்காரச்சொல்லி 'உங்கள் ஊர் எது அப்பனே' என்பார்கள். இன்ன ஊர் என்று பதில் வரும். 'உங்கள் தாத்தா பேர் என்ன , கொள்ளு தாத்தா பேர் என்ன' என்று கேட்டு தெரிந்து கொண்டு ', அதுதான். அதேதான். உன் தாத்தாவின் தாத்தா இவ்வளவு சின்ன பையனாக இருந்த போது நான் இங்கே வந்தேன்!' என்பார்கள். வந்தவர்களும் 'அடேயப்பா, இவ்வளவு காலம் உயிரோடு இருக்கிறார்களே, எவ்வளவு பெரிய மஹான்கள்!' என்று நமஸ்கரித்து தக்ஷிணை கொடுத்து போவார்கள். இதெல்லாம் உலகத்தை பிரமிக்க வைக்கத்தானே தவிர அதனால் ஞானிகள் ஆகிவிடுவார்களா?”

"ராமர் தீர்த்த யாத்திரை செய்து திரும்பியதும் இந்த உலகமெல்லாம் துக்கமானதுதான், சரீர காரணமே துக்கம் என்று விரக்தியுடன் ஆகாரம் ஜலம் எல்லாவற்றையுமே பிறரிச்சைக்கு ஏற்று, ஜடம் போல ஆகிவிட்டாராம். விச்வாமித்திரர் யாக ரக்ஷணைக்காக ராமரை அனுப்பும் படி தசரதரை கேட்டதற்கு 'அவன் ஏதோ பித்து பிடித்தாற்போல் இருக்கிறான் ஸ்வாமி' என்று சொல்லி அந்த பித்தின் குணங்களை விவரித்தாராம். விச்வாமித்திரர் மகிழ்ந்துபோய் 'சந்தோஷமாக இருக்கிறது. இந்த பித்து எல்லோருக்கும் பிடிக்குமா? அவனை சபைக்கு வரச்சொல்!' என்றார். ராமர் வந்து எல்லோரையும் நமஸ்கரித்து உட்கார்ந்தார். விச்வாமித்திரர் ராமரைப்பார்த்து விசனத்தின் காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு வஸிஷ்டரிடம் 'என்னய்யா! நம்மிருவருக்கும் ப்ரம்ஹா உபதேசித்த ஆத்ம தத்துவத்தை ராமனுக்கும் உபதேசித்து அவன் கவலையை போக்கடியும்' என்று கேட்டுக்கொண்டார். வஸிஷ்டரும் உபதேசம் செய்தார். அதுதான் வாஸிஷ்டம் என்பது. அதை கேட்க விண்வெளியிலிருந்து சித்தர் கூட்டம் இறங்கி வந்தது. 'இந்த ராமன் சிறு வயதிலேயே இவ்வளவு ஞானம் பெற்றுவிட்டானே! என்ன ஆச்சரியம்!' என்று புகழ்ந்து, நாம் எத்தனை நாள் வாழ்ந்து என்ன லாபம்' என்று நினைத்துக்கொண்டார்களாம்.” என்றார் பகவான்.

"நிஜம்தான். சிலர் நான் 80 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இனி என்ன வேண்டும் என்பார்கள். அது ஒரு பெருமை" என்றார்.

பகவான் புன் சிரிப்புடன் "ஆமாம். அது ஒரு கர்வம்தான். அதற்கு ஒரு கதை இருக்கிறது” என்றார்.....

(இந்த பதிவும் ரமணர் குறித்த இன்னும் பல பதிவுகளும் சூரி நாகம்மா எழுதிய ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள் என்னும் புத்தகத்தை மூலமாக கொண்டவை.)

Tuesday, May 28, 2013

ரமணர் - தோசை


ஆச்ரமத்தின் பக்கத்தில் இருந்த த்ரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நாள் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆச்ரமத்துக்கும் ஏராளமான பக்ஷணங்களுடன் வந்து சேர்ந்தனர். பகவான் அனுமதியுடன் அவை அங்கிருந்த பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்போது கிழவி ஒருத்தி ஒரு கழியை ஊன்றியபடி உள்ளே வந்தாள். அவள் கையில் ஆலிலைகளால் தைத்த ஒரு தொன்னை இருந்தது. அதில் 2-3 தோசைகள் இருந்தன. அவள் சர்வ ஸ்வதந்திரமாக பகவானிடம் சென்று, “இதோ இந்த தோசையை சாப்பிடு சாமி. வேற ஒண்ணும் கொண்டுவர முடியலை. என்ன செய்வது?” என்று சொல்லிக்கொண்டு அவர் கையிலேயே கொடுக்கப்போனாள். அங்குள்ளவர்கள் குறுக்கிட்டு "அங்கே பக்கத்திலேயே வையுங்கம்மா” என்றார்கள்.

அவள் கோபத்துடன், “இருங்கைய்யா, ரொம்பவும் சொல்ல வந்துட்டீங்க! நேத்து முந்தா நேத்து வந்தவங்க நீங்க! உங்களுக்கு என்ன தெரியும்? அந்தக்காலத்திலேயே இங்கே திண்ணை கட்டி அதிலே சாமியை உக்கார வெச்சது நான்தானே? என்னை என்னமோ கிட்டே போகக்கூடாது என்கறீங்க! போதும் போதும்” என்று அதட்டி பேசினாள்.
எல்லோரும் வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

பகவான் பணிவிடையாளர்களை தடுத்து அவளிடமிருந்து தொன்னையை வாங்கிக்கொண்டு "பாட்டி! அவர்கள் விவரம் தெரியாத குழந்தைகள். நீ ஒண்ணும் மனசில போட்டுக்காதே! இந்த தோசையை எந்த மாவிலே செய்தாய்? இப்போ உன் அண்ணா பசங்க யாரும் உன்னை சரியா பாத்துக்கிறதில்லையாமே? எப்படி ஜீவனம் நடக்கறது? வண்டியில வந்தாயா, நடந்து வந்தாயா? ” என்றெல்லாம் விசாரித்தார். பின் பணிவிடையாளர்களிடம் "இந்த பக்ஷணங்களை எல்லோருக்கும் பங்கு போட்டு கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள். நான் இந்த தோசைகளை சாப்பிடுகிறேன்” என்று அமுதுண்பது போல சாப்பிட ஆரம்பித்தார்.
அந்ந்தக்கிழவி அளவற்ற சந்தோஷத்துடன் பூரித்துப்போய் உட்க்கார்ந்திருந்தாள். பகவான் பக்ஷணங்களையும் கொண்டு வரச்சொல்லி துளித்துளி எடுத்துக்கொண்டு "எனக்கு அந்த தோசைகளே போதும்” என்றார்.

கிழவி எழுந்து நின்று "சாமி, என்னை யாரானா பாத்துகிட்டா என்ன, பாத்துக்கலைன்னா என்ன? உங்க கருணையாலே நான் தோசை சுட்டு வித்து பிழைச்சுக்கிறேன். என் காலம் இப்படியே கழிஞ்சால் போதும்” என்று கூறி நமஸ்கரித்து, பிரசாதம் பெற்றுப்போனாள்.

அவள் சென்ற பிறகு பணியாளர்கள் பகவானைப்பார்த்து "பக்ஷணங்களை விலக்கி விட்டு அந்த அரைவேக்காட்டு தோசையை சாப்பிட வேணுமா பகவான்? அதை யாருக்காவது கொடுத்துவிட்டு பக்ஷணங்களை சாப்பிடக்கூடாதா?” என்றார்கள்.

"ஓஹோ! இதைவிட அதெல்லாம் இன்னும் ருசியாக இருக்குமோ? வேணுமென்றால் நீங்கள் அதை எல்லாம் சாப்பிடுங்கள். எனக்கு இது போதும்.” என்றார் பகவான். அதன்பின் பணிவிடையாளர்கள் ஏதும் பேசவில்லை.

பகவான் என்னைப்பார்த்து (சூரி நாகம்மா) “பாவம் அந்த கிழவி என்ன செய்வாள்? தன்னிடம் என்னெ இருந்ததோ அதைக்கொண்டு வந்தாள். நான் மலை மீது இருந்த காலத்திலேயே தன்கணவனுடன் வருவாள். எனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வருவாள். கணவன் போன பிறகு தன் அண்ணாவோடு இருந்தாள். அவனும் போய்விட்டான். அதன் பின் அண்ணா பிள்ளைகள் சரிவர பார்த்துக்கொள்ளாமல் துரத்திவிட்டனர். எங்கேயோ இருந்து கொண்டு தோசை விற்று ஜீவனம் செய்து கொண்டு இருக்கிறாள். முதன் முதலில் அம்மாவின் சமாதி அருகே நான் உட்கார திண்ணை கட்டி தென்னை ஓலையினால் கூரை போட்டுக்கொடுத்தது இவள்தான். அது வரை மரத்தடியிலேயே உட்கார்ந்து இருந்தேன். 'ஐயோ பாவம் சாமி, கீழே உக்காந்திருக்காரே, வெய்யில்லே உக்காந்திருக்காரே' என்று திண்ணை கட்டிக்கொடுத்தாள். இப்போது திரௌபதி அம்மன் கோவிலை புணருத்தாரணம் செய்தது இவள் அண்ணா பிள்ளைதான். இப்போது இவளுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி இங்கே வருவதில்லை. கோலை ஊன்றிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாளோ!” என்றார்.
தோசைகளில் ஒரு துளிக்கூட மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடித்தார் பகவான்.

 

Sunday, May 26, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -4


முனிவர் சரி என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பின் ஜனகரை நெருங்கி 'ராஜன் ஏன் இப்படி நிச்சலனமாய் இருக்கிறாய்?' என்று கேட்டார்.
அதற்கு அவர் "ஸ்வாமி, இந்த சரீரத்தின் மீது எனக்கு எந்த சொந்தமும் கிடையாது. இந்தக்கைகள், கால்கள், நாக்கு, காது, கண்கள் ஆகிய ஸர்வேந்திரியங்களும் எனதில்லை. இந்த ராஜ்யம் எனதில்லை. உண்மையாகவே என் உடல், உடம்ப்பு, பொருள் எல்லாவற்றையும் உங்கள் பாதத்தாமரையில் சமர்ப்பித்துவிட்டேன். அதனால் உங்கள் அனுமதி இன்றி எவ்விதமான செயலுக்கும் நான் உரிமை இல்லாதவன். அதனால் இப்படி இருக்கிறேன்” என்றார்.
சிரத்தை பக்தியுடன் கூடிய அந்த சொற்களைக்கேட்டு உளம் மகிழ்ந்த அஷ்டாவக்கிர முனிவர் அந்த மஹாராஜனின் தலை மீது தம் கையை வைத்து 'அப்பனே நீ முக்தி பெறுவதற்கு தக்க அதிகாரிதானா இல்லையா என்று தெரிந்து கொள்ளவே இப்படி பரீட்சை செய்ய வேண்டி இருந்தது. அனுக்ரஹிப்பதற்கு தக்க அதிகாரி நீ இப்போது கிடைத்துவிட்டாய். இப்பொழுது நீ ப்ரம்ஹ ஸ்வரூபம்தான். நீ என்றும் முக்தன். பிறவிப்பயனடைந்தவன். பெறற்கரியது பெற்றவன். ஸதா அகண்ட ஸச்சிதானந்த ஸ்வரூபமே நீ' என்றார்.
அந்த அரசன் 'பேத உணர்ச்சியும் மனோ விகாரமும் போகாத அஞ்ஞானியன்றோ நான்? பிரம்ம ஸ்வரூபம் எப்படி ஆனேன்? ' என்று தன்னுள் தர்கித்துக்கொண்டு முனிவரை நமஸ்கரித்து 'ஸ்வாமி, ஞானம் பெறுவது எவ்வாறு? முக்தி நிகழ்வது எப்படி? வைராக்யம் வருவது எவ்வகையில்? அதை எனக்கு மொழிந்திட வேண்டும்.' என்று ப்ரார்த்தித்தார்.

"இப்படித்தான் அஷ்டாவக்கிர கீதை பிறந்தது. சிஷ்யர்கள் கேள்வி கேட்பதும் குரு விடையளிப்பதுமாக பிரச்சனோத்தர (கேள்வி பதில்) உருவில் இந்த கதை வாயிலாக அஷ்டாவக்கிரர் ஜனகருக்கு உபதேசம் செய்தார். அந்த உபதேசத்தினால் ஜனகருக்கு இரவு முழுதும் ஒரு நொடிப்பொழுதாக கழிந்துவிட்டது.

சூர்யோதயம் ஆனதும் வாயிற் கதவு திறந்திருக்கவே மந்திரி ஸாமந்தர்கள் எல்லாரும் உள்ளே வந்து பரமானந்தத்தினால் நிறைந்திருந்த மன்னனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்பொழுது முனிவர் ஜனகரைப்பார்த்து 'என்ன! குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாத்திர வாக்கியத்தில் இன்னும் சந்தேகம் ஏதும் இருந்தால் கேள்' என்று சொன்னார். ராஜா பக்தி நிறைந்த மனதுடன் 'என் மனதில் எந்தவித சந்தேகத்துக்கும் இப்போது இடமில்லை. சாஸ்திர வாக்கியம் உண்மைதான். தங்கள் எல்லையில்லா க்ருபையினால் நான் க்ருதார்த்தனானேன்' என்றார்.

இதுதான் கதை. இந்த அஷ்டாவக்கிர கீதை ரிபு கீதையைப்போலவே அதீதமான கைவல்லிய நிலையை தெரியப்படுத்துகிறது. அதாவது, ஜனகர் உண்மையிலேயே தனது உடல் உள்ளம் பொருளை சமர்ப்பணம் செய்தவுடனேயே தன்னிலையில் ஒடுங்கி சமாதி பெற்றார். 'இந்த நிலையே உனது ஸ்வரூபம். இதிலேயே நீ ஸஹஜமாக அனுபவி!' என்று அந்த கீதையின் மூலம் அஷ்டாவக்கிரர் விளக்கினார்.

-நிறைந்தது- 

Saturday, May 25, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -3



சூர்யாஸ்தமனம் ஆயிற்று. ராஜா திரும்பி வரவில்லையே என்று மந்திரி ப்ரதானிகள் கவலையடைந்து காட்டிற்கு வந்து பார்த்தால் பல்லக்கு இருந்ததே தவிர அஷ்டாவக்கிரரை காணவில்லை. ராஜா அசையாமல் சிலை போல நின்று கொண்டிருந்தார். எல்லாரும் பயந்து போய் நின்றார்கள். முக்ய மந்திரி அருகில் போய், 'பிரபு இந்த நிலைக்கு காரணமென்ன?' என்று கேட்டார். ராஜா பதில் சொல்லவில்லை. முனிவர்தான் ஏதோ மந்திரம் போட்டுவிட்டார் என்று நினைத்து முனிவரை தேடினார்கள்; கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ராஜாவை பல்லக்கில் இட்டு அரண்மனைக்கு எடுத்துச்சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள். அவர்கள் படுக்க வைத்தபடியே ராஜா சலனமற்று இருந்துவிட்டார். அநேக சேவகர்களை அழைத்து எப்படியாவது முனிவரை தேடி அழைத்து வர வேண்டுமென்றும் அவர் இல்லாமல் திரும்பக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு அனுப்பினார்கள்.

ஜனகர் ஆகாரம்தான் உட்கொள்ளவில்லை என்றால் பேச்சும் இல்லை. ஜலம் வாயில் இட்டாலும் விழுங்கவில்லை. இந்நிலையை கண்டு மஹாராணி மற்றும் ராஜ வம்சத்தினர் மற்றும் பரிவாரங்கள் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். விஷயம் எங்கும் பரவி விட்டது. பிரஜைகள் கலங்கினார்கள். சூரியோதமான பிறகு கூட ராஜா எழுந்திருக்கவில்லை. முனிவரும் வரவில்லை. சூரியம் அஸ்தமனம் ஆகும் போது ஒரு சேவகன் அஷ்டாவக்கிரரை பல்லக்கில் ஏற்றி அழைத்து வந்தான்.

அவரை பார்த்தவுடன் மந்திரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் காரியம் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் கோபத்தை வெளிக்காட்டாமல் ஸ்வாமி 'எங்கள் பிரபுவுக்கு ஏதேனும் மந்திரம் போட்டீர்களா?' என்று விநயத்துடன் கேட்டார்.
'உங்கள் பிரபு மீது மந்திரம் போடுவதால் எனக்கு என்ன லாபம் அப்பா? ருந்தாலும் அதை உங்கள் பிரபுவிடமே கேட்பதுதானே?' என்றார் முனிவர்.
'நாங்கள் பிரபுவிடன் கேட்டாலும் எந்த பதிலுமில்லையே! இரண்டு நாட்களாக அவர் ஜலபானம் கூட செய்யவில்லை. எப்படியாவது ஆகாரம் உட்கொள்ளச்செய்யுங்கள் ஸ்வாமி' என்றார் மந்திரி.'
முனிவர் ராஜாவை நெருங்கி 'ராஜன்!' என்று அழைத்தார்.
'என்ன ஸ்வாமி ஆக்ஞை?' என்று பதில் கொடுத்தார் ஜனகர்.
'உனக்கு நான் என்ன செய்தேன்?'
'ஒன்றும் செய்யவில்லையே! அப்படி யார் சொன்னார்கள்?'
'அது சரி! அதற்கென்ன? நீ எழுந்து ஆகாரம் எடுத்துக்கொள்!'
அரசர் எழுந்து ஆகாரம் உட்கொண்டு மீண்டும் அசைவில்லாமல் உட்கார்ந்துவிட்டார்.
'கருணை கொண்டு எங்கள் பிரபுவை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்' என்று வேண்டிக்கொண்டார் மந்திரி. முனிவர் சரி என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பின் ஜனகரை நெருங்கி 'ராஜன் ஏன் இப்படி நிச்சலனமாய் இருக்கிறாய்?' என்று கேட்டார்.
 

Friday, May 24, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -2


"கொஞ்ச காலத்துக்குப்பின் அஷ்டாவக்கிர மஹாமுனி பட்டணத்துக்கருகில் வந்து ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறினார். அங்கிருந்த இரு பிராம்மணர்களிடன் "இந்த பட்டணத்தை ஆளும் ராஜா யார் அப்பனே?” என்று கேட்டார். அவர்கள் 'நீங்கள் இந்த பட்டணத்துக்குள் போக நினைக்கிறீர்களா என்ன?' என்று கேட்டார்கள். 'ஆமாம் அப்பா போக வேண்டும் என்று நினைப்பதால்தான் கேட்கிறேன்' என்றார் மாமுனி. அவர்கள் இருவரும் வினயத்துடன் 'ஸ்வாமி, அந்த பட்டணத்தை ஆளும் ராஜா எத்தனையோ பிராம்ஹணர்களை சிறையில் அடைத்து இருக்கிறார். அதனால் தாங்கள் அங்கே செல்ல வேண்டாம் என்று ப்ரார்த்திக்கிறோம். குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியுமா என்று ப்ராம்ஹணர்களிடன் ராஜா கேட்கிறார். முடியாது என்றால் அந்த வாக்கியத்தை சாஸ்திரத்தில் இருந்து எடுத்துவிடச்சொல்லுகிறார் ஸ்வாமி' என்றார்கள்.  
அஷ்டாவக்கிரர் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, 'ஓஹோ இதுவா சமாசாரம். அப்போது ஒன்று செய்யுங்கள். ஒரு பல்லக்கில் என்னை உட்கார வைத்து அந்த ராஜாவிடன் என்னைக்கொண்டு செல்லுங்கள். அந்த வாக்கியத்தை நான் நிரூபித்து பண்டிதர்களை நான் விடுவிக்கிறேன்' என்றார். அதைக்கேட்டதும் ப்ராம்ஹணர்கள் மகிழச்சி அடைந்து உடனேயே ஒரு பல்லக்கை கொண்டு வந்து அவரை உட்கார வைத்து தாங்களே அவரை சுமந்துபோய் ராஜ சபையில் இறக்கினார்கள்.
" தேஜோ மயமான அந்த முனிவரை கண்டதும் மன்னனுக்கு அவரை பூஜிக்கத்தோன்றியது. சட்டென்று சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்து கைகூப்பி, 'ஸ்வாமி! தாங்கள் இங்கே எழுந்தருளியதற்க்கு காரணம் ஏதும் உளதோ? என்னால் ஆக வேண்டிய காரியம் ஏதுமிருப்பின் தயை கூர்ந்து சொல்ல வேண்டும்' என்றான்.
"அரசனின் விநயமான பேச்சை கேட்டு மகிழ்ந்த முனிவர் 'எந்த அபராதத்துக்காக எல்லா பண்டிதர்களையும் சிறையில் அடைத்தாய்? அதை முதலில் சொல்; அப்புறம் என்னை விசாரிக்கலாம்' என்றார்.
'நான் ப்ராம்ஹணர்களை குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாத்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் முடியாதென்று சொன்னார்கள். அதனால் சிறையில் அடைத்தேன். அந்த வாக்கியத்தின் உண்மையை அறியவே இப்படி செய்தேன்' என்று கூறினார் ராஜா.
"சரியாப்போச்சு! சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அது கற்பனை என்று தீர்மானித்துவிடலாமா? அது பொய்யில்லை என்றும், சாஸ்திர வாக்கியத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் உண்மையே என்று நான் பிரதிக்ஞை செய்கிறேன் என்றார் முனிவர். அபப்டியானால் இப்போழுதே குதிரையை கொண்டு வரச்சொல்கிறேன். தாங்கள் சாஸ்திர வாக்கியத்தை உண்மை என்று நிரூபித்து அனுக்ரஹிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன். ' என்றார் ராஜா. 'உன் எண்ணம் உத்தமமானதுதான். சந்தோஷம். ஞானோபதேசம் அதற்கு அருகதை இல்லாதவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதை நீ அறிவாய் அல்லவா? ஆகவே உனக்கு ஞானோபதேசம் பெற சிரத்தை இருந்தால் என் மீது பூரண சிரத்தையுடன் பக்தி செலுத்தி முதலில் சிறையிலுள்ள பண்டிதர்களை விடுதலை செய்வாயாக. பின் குதிரை ஏறி என்பின்னே காட்டுக்கு வா. உன் அருகதையை சோதித்து உபதேசம் செய்கிறேன்' என்றார் முனிவர்.
மிகத்தீர்மானமாக சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளை கேட்டதுமே அரசனுக்கு ஆவல் அதிகமாகியது. அக்கணமே சிறையில் அடைக்கப்பட்ட எல்லா பண்டிதர்களையும் விடுவித்தான். அஷ்டாவக்கிரரை பல்லக்கிலேற்றி அனுப்பி, கூடவே தானும் குதிரையேறி மந்திரி பரிவாரங்களுடன் காட்டுக்குப்போனான்
 ஒரு ஆல மரத்தடியில் பல்லக்கை நிறுத்தி அரசனையும் நிற்கச்சொல்லி, பின் 'இந்த பரிவாரங்களை எல்லாம் அனுப்பிவிடேன். உபதேசத்துக்கு இவர்கள் தேவையில்லையே' என்றார் முனிவர். சரி என்று ஜனகர் எல்லோரையும் அனுப்பிவிட்டார். உபதேசம் பெறுவதில் தாமதத்தை பொறுக்காமல் முனிவர் அனுமதி பெற்று குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்து ஏறி, இரண்டாவது காலை உயர்த்தும் முன் முனிவர் 'நில் நில்' என்று கர்ஜித்து இரண்டாவது காலை அங்கவடியில் வைப்பதற்கு முன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்' என்றார். அரசன் 'ஆஹா! அப்படியே தங்கள் ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு சொல்கிறேன்' என்றார். 'நீ பரிசோதிக்கும் இந்த சாஸ்திரத்தில் இந்த வாக்கியம் மட்டும்தான் இருக்கிறதா அல்லது இன்னும் இருக்கிறதா?'
'இன்னும் பல வாக்கியங்கள் இருக்கின்றன ஸ்வாமி'
'ஞானம் பெற குரு ஒருவர் வேண்டுமென்று அதில் சொல்லி இருக்கிறதா இல்லையா?'
'ஆஹா! கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறது ஸ்வாமி'
'அப்படியானால் என்னை குருவாக வரிக்காமலே ஏன் ஞானம் பெற உபதேசித்து அருளும் படி அவசரப்படுத்துகிறாய்?'
'இல்லையில்லை. சாஸ்திர விதிப்படியே இந்த கணமே உங்களை குருவாக வரிக்கிறேன்.'
'குரு தக்ஷிணை?'
'இதோ இந்த க்ஷணமே என் உடல், உள்ளம். பொருள் எல்லாவற்றையும் தங்கள் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டேன். அனுக்ரஹம் செய்ய வேண்டும் ஸ்வாமி!'
"இதை கேட்ட அஷ்டாவக்கிரர் உடனே அருகில் இருந்த புதரில் மறைந்து காணாமல் போனார். ராஜா குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்தபடியும், இரண்டாவது காலை பூமியிலிருந்து எடுக்கும் நிலையிலும் அப்படியே நிலை பெயராமல் நின்றான்.

Thursday, May 23, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை

 
அஷ்டாவக்ர கீதை குறித்து பேச்சு எழுந்தது. அந்த கீதோபதேசம் ஏற்பட காரணமாக இருந்த ஜனகர், அஷ்டாவக்கிரர் சம்பாஷணை சுவையாக இருக்கும் என்றார் பகவான். பகவான் அந்த கதையை சொல்ல வேண்டுமென்று வேண்டுகோள் எழ, பகவான் சொல்லத்துவங்கினார்.

"எல்லா மிதிலாதிபர்களையும் ஜனகர் என்றே சொல்வார்கள் இல்லையா? அவர்களில் ஒருவர் ஆத்ம ஞானம் அடையுமுன் அவரது அரசவை பண்டிதர் ஒருவரின் மகன் ஜனகர் முன் சாஸ்திரம் வாசித்துக்கொண்டு இருந்தான். அப்படி இருக்கும் போஓது ஒரு நாள் குதிரையின் மேலே ஏறுகையில் ஒரு அங்கவடியில் கால் வைத்து ஏறி, இரண்டாம் அங்கவடியில் கால் வைக்குமுன் பிரம்ஹ ஞானம் பெறலாம் என்ற வாக்கியத்தை படித்தான். ஜனகர் "இந்த வாக்கியம் உண்மைதானா அல்லது கற்பனையா?” என்று கேட்டார். "உண்மைதான், அதில் அணுவளவும் சந்தேகம் இல்லை!” என்றான் சிறுவன். "அது நடக்கவொண்ணாது என்று தோன்றுகிறது. அது உண்மையானால் என் குதிரையை இப்போதே வரவைக்கிறேன். அதன் முதல் அங்கவடியில் கால் வைத்து ஏறி இரண்டாம் அங்கவடியில் காலை வைக்கு முன் பிரம்ஹஞானம் எனக்கு சித்திக்கும் படி செய்து நிரூபிக்க வேண்டும்!” என்றார் ஜனகர். சிறுவன் "எனக்கு அந்த திறமையில்லை; அது என்னால் முடியாது. ஆனாலும் இந்த வாக்கியம் பொய்யில்லை" என்றான். கோபம் கொண்ட ஜனகர் "அப்படியானால் அந்த வாக்கியத்தை சாத்திரத்தில் இருந்து எடுத்துவிடுங்கள்" என்றார். பையன் சிறிதும் பின் வாங்காமல் மீண்டும் "இந்த வாக்கியத்தின் உண்மை என்பது குறித்து எந்த சந்தேகமுமில்லை" என்றான் .

ராஜா அந்த பையனை சிறையிலிட்டார். பட்டணத்தில் இருக்கிற பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து சாத்திர வாக்கியத்தை நிரூபிக்கும் படி கேட்டார். அவர்கள் பையன் சொன்னது போலவே சொன்னார்கள். "அப்படியானால் உடனே குதிரையை வரவழைக்கிறேன், நிரூபியுங்கள்" என்றார் ராஜா. 'அதற்கு எங்களுக்கு திறமையில்லை' என்றார்கள். ஜனகர் அனைவரையும் சிறையில் அடைத்து, காவல்காரர்களிடம் பட்டணத்தில் புகும் ப்ராம்ஹணர்கள் யாரானாலும் தன்னிடத்தில் அழைத்து வரும் படி கட்டளை இட்டார். அது முதல் பிராம்ஹணர்கள் யார் வந்தாலும் அவர்களை ராஜாவிடம் அழைத்துப்போவதும், அவர் அதே கேள்வியை கேட்பதும் ப்ராம்ஹணர்கள் அதே பதிலை சொல்வதும் அவர்களை ராஜா சிறையிடுவதுமாக நடந்து கொண்டிருந்தது. நாளடைவில் செய்தி திக்கெட்டும் பரவி பண்டித ப்ராம்மணர்கள் மிதிலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்கள்.


Wednesday, May 22, 2013

ஸ்ரீ நரஸிம்ʼஹ அஷ்டோத்தரம்


வரும் நரசிம்ஹ ஜயந்தியை முன்னிட்டு....

ஸத்ய ஜ்ஞான ஸுக² ஸ்வரூபமமலம்ʼ க்ஷீராப்³திமத்யஸ்தி²தம்ʼ
யோகா³ரூடமதிப்ரஸன்ன வத³னம்ʼ பூஷா ஸஹஸ்ரோஜ் ஜ்வலம் |
த்ர்யக்ஷம்ʼ சக்ரபினாகஸாபயவரான் பி³ப்ராணமர்கச்ச²விம்ʼ
²த்ரீ பூ ²ணீந்த்³ரமிந்து³ வலம்ʼ லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹம்ʼ ஜே ||

ஶ்ரீ நரஸிம்ʼஹாஷ்டோத்தரம்

ஓம்ʼ நரஸிம்ʼஹாய நம:
மஹா ஸிம்ʼஹாய நம:
தி³வ்ய ஸிம்ʼஹாய நம:
மஹா ³லாய நம:
உக்³ ஸிம்ʼஹாய நம:
மஹா தே³வாய நம:
ஸ்தம்பஜாய நம:
உக்³ லோசனாய நம:
ரௌத்³ராய நம:
ஸர்வாத்³புதாய நம:
ஶ்ரீமதே நம:
யோகா³னந்தா³ நம:
த்ரிவிக்ரமாய நம:
ஹரயே நம:
கோலாஹலாய நம:
சக்ரிணே நம:
விஜயாய நம:
ஜயவர்தனாய நம:
பஞ்சானனாய நம:
பர ப்³ரஹ்மணே நம:
அகோராய நம:
கோ விக்ரமாய நம:
ஜ்வாலா முகா² நம:
ஜ்வாலா மாலினே நம:
மஹா ஜ்வாலாய நம:
மஹா ப்ரபவே நம:
நிடிலாக்ஷாய நம:
ஸஹஸ்ராக்ஷாய நம:
து³ர் நிரீக்ஷ்யாய நம:
ப்ரதாபனாய நம:
மஹா ³ம்ʼஷ்ட்ராயுதா நம:
ப்ராஜ்ஞாய நம:
சண்ட³கோபினே நம:
ஸதா³ஶிவாய நம:
ஹிரண்யகஶிபு த்வம்ʼஸினே நம:
தை³த்ய தா³னவ ஞ்ஜனாய நம:
கு³ த்³ராய நம:
மஹா த்³ராய நம:
³ த்³ராய நம:
ஸுபத்³ரகாய நம:
கராலாய நம:
விகராலாய நம:
விகர்த்ரே நம:
ஸர்வ கர்த்ருʼகாய நம:
ஶிம்ʼஶுமாராய நம:
த்ரிலோகாத்மனே நம:
ஈஶாய நம:
ஸர்வேஶ்வராய நம:
விபவே நம:
பைரவாட³ம்ப³ராய நம:
தி³வ்யாய நம:
அச்யுதாய நம:
கவயே நம:
மாதவாய நம:
அதோக்ஷஜாய நம:
அக்ஷராய நம:
ஶர்வாய நம:
வனமாலினே நம:
வரப்ரதா³ நம:
விஶ்வம்பராய நம:
அத்³புதாய நம:
வ்யாய நம:
ஶ்ரீ விஷ்ணவே நம:
புருஷோத்தமாய நம:
அனகாஸ்த்ராய நம:
நகா²ஸ்த்ராய நம:
ஸூர்ய ஜ்யோதிஷே நம:
ஸுரேஶ்வராய நம:
ஸஹஸ்ர பா³ஹவே நம:
ஸர்வஜ்ஞாய நம:
ஸர்வ ஸித்³திப்ரதா³யகாய நம:
வஜ்ர ³ம்ʼஷ்ட்ராய நம:
வஜ்ர நகா² நம:
மஹானந்தா³ நம:
பரந்தபாய நம
ஸர்வ மந்த்ரைகரூபாய நம:
ஸர்வ யந்த்ர விதாரணாய நம:
ஸர்வ தந்த்ராத்மகாய நம:
அவ்யக்தாய நம:
ஸுவ்யக்தாய நம:
க்த வத்ஸலாய நம:
வைஶாக² ஶுக்ல பூதோத்தா² நம:
ஶரணாக³ வத்ஸலாய நம:
உதா³ கீர்தயே நம:
புண்யாத்மனே நம:
மஹாத்மனே நம:
சண்ட³ விக்ரமாய நம:
வேத³ த்ரய ப்ரபூஜ்யாய நம:
³வதே நம:
பரமேஶ்வராய நம:
ஶ்ரீ வத்ஸாங்காய நம:
ஶ்ரீனிவாஸாய நம:
ஜக³த்³ வ்யாபினே நம:
ஜக³ன் மயாய நம:
ஜக³த் பாலாய நம:
ஜக³ன் நாதா² நம:
மஹா காயாய நம:
த்³வி ரூப ப்ருʼதே நம:
பரமாத்மனே நம:
பரஞ் ஜ்யோதிஷே நம:
நிர் கு³ணாய நம:
ந்ருʼகேஸரிணே நம:
பர தத்த்வாய நம:
பரந்தாம்னே நம:
ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம:
லக்ஷ்மீ நரஸிம்ʼஹாய நம:
ஸர்வாத்மனே நம:
தீராய நம:
ப்ரஹ்லாத³பாலகாய நம: