Showing posts with label *குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label *குட்டிக்கதைகள். Show all posts
Friday, December 8, 2017
Thursday, December 7, 2017
Wednesday, December 6, 2017
Tuesday, December 5, 2017
கிறுக்கல்கள் -167
சரியான
பார்வை என்கிறது ஏன் அவ்வளவு
கஷ்டம் என்று யாரோ கேட்டார்கள்.
மாஸ்டர்
கதை சொன்னார்.
சாம்
ஐரோப்பா பயணம் முடித்து
திரும்பினார்.அவருடைய
கம்பனி 'டிட்டி
ஆண்களின் ஜட்டி'
இல்
பார்ட்னராக இருந்தவர்
ஆர்வத்துடன் கேட்டார்:
சாம்,
ரோமுக்கு
போக முடிந்ததா?
ஓ!
போனேனே?
அட!
போப்பை
தரிசனம் செய்தீர்களா?
தரிசனமா?
அவரோட
தனியே ஆடியன்ஸ் கிடைச்சதாக்கும்!
அடாடாடா!
அவர்
எப்படி இருக்கார்?
ம்ம்ம்ம்?
அவர் 110
சென்டி
மீட்டர்ன்னு நினைக்கறேன்!
Monday, December 4, 2017
Friday, October 27, 2017
Thursday, October 26, 2017
கிறுக்கல்கள் -164
சீடர்
ஒருவரிடம் புதிதாக வந்த ஒருவர்
கேட்டார் "எனக்கு
மாஸ்டர் புனிதமாகிவிட்டாரா
என்று இப்போதே தெரிய வேண்டும்.
சீடர்
கேட்டார் "எதற்கு?
அதனால் என்ன
ஆகப்போகிறது?”
“அவரே
புனிதத்தை அடையவில்லை என்றால்
நான் ஏன் அவரை பின் பற்ற
வேண்டும்?”
“அவர்
புனிதராகி இருந்தால் மட்டும்
ஏன் நீங்கள் அவரை பின் பற்ற
வேண்டும்? அவர்
அடிக்கடி சொல்லுவார் 'நீ
என்றைக்கு ஒருவரை பின் பற்ற
ஆரம்பிக்கிறாயோ அன்றே உண்மையை
பின் பற்றுவதை நிறுத்திவிட்டாய்!”
சற்று
நேரம் கழித்து சொன்னார்:
“பாபிகளும்
சமயத்தில் உண்மை பேசுகின்றனர்.
புனிதர்களும்
சமயத்தில் மக்களை திசை திருப்பி
விடுகின்றனர். என்ன
சொல்லுகிறார்கள் என்பதை
கவனி. சொல்லுபவரை
அல்ல!”
Wednesday, October 25, 2017
கிறுக்கல்கள் -163
ஒரு
நாள் ஒரு சீடர் மாஸ்டரிடம்
நேரடியாகவே கேட்டுவிட்டார்.
நீங்கள் புனிதர்
ஆகிவிட்டீர்களா?
மாஸ்டர்
சொன்னார், எனக்கு
எப்படித்தெரியும்?
உங்களுக்கே
தெரியாது என்றால் யாருக்குத்தான்
தெரியும்?
மாஸ்டர்
சொன்னார்: சாதாரணமாக
இருக்கும் ஒருவரிடம் போய்
நீ சாதாரணமாக இருக்கிறாயா
என்று கேள்; ஆமாம்,
சாதாரணமாக
இருக்கிறேன் என்பார்.
அப்படியே
பைத்தியக்காரர் ஒருவரிடம்
போய் கேள். அவரும்
ஆமாம், சாதாரணமாக
இருக்கிறேன் என்பார்!
குறும்பு
சிரிப்புடன் தொடர்ந்தார்:
நீ பைத்தியம்
என்று உனக்குத்தேரிந்தால்
நீ அவ்வளவு ஒன்றும் பைத்தியம்
இல்லை அல்லவா? அதே
போல நீ புனிதனா என்று யோசிக்க
வேண்டுமானால் நீ அவ்வளவு
புனிதன் இல்லை சரியா?
புனிதத்துவம்
எப்போதும் அகங்காரம் போவதில்
இருக்கிறது.
Tuesday, October 24, 2017
கிறுக்கல்கள் -162
மாஸ்டர்
ஒரு நாள் திடீரென்று "தீவினையை
எதிர்த்து போராட நீங்கள்
தயாராக மாட்டீர்கள்,
அது செய்யும்
நல்லதை பார்க்க முடியும்
வரை!” என்றார்.
தீவினை
நல்லதா என்று குழம்பினர்
சீடர்கள். ஒரு
நாள் முழுதும் மாஸ்டர் இதை
கண்டுகொள்ளவே இல்லை.
அடுத்த நாள்
இரண்டாம் உலகப்போரின்
ரேவன்ஸ்ப்ருக் யூத ஜெயில்
முகாமில் கண்டெடுக்கப்பட்ட
ஒரு ஒரு பிரார்த்தனையை
வெளியிட்டார். ஒரு
புத்தகத்தின் அட்டையில்
எழுதப்பட்டிருந்த அதில் பின்
வருமாறு கண்டு இருந்தது.
“இறைவா!
நல்லதையே
நினைக்கும் ஆண்கள் பெண்களை
மட்டுமல்ல கெட்டதையே நினைக்கும்
நபர்களையும் நினைவில்
கொள்ளுங்கள். அவர்கள்
எங்களுக்கு இழைத்திருக்கும்
தீங்குகளை மட்டும் நினைவில்
கொள்ள வேண்டாம். அதனால்
எங்களிடம் உருவாக்கி இருக்கும்
நல்லதையும் நினைத்துப்பாருங்கள்:
எங்கள் நட்பு,
விசுவாசம்,
தன்னடக்கம்,
எங்கள் தைரியம்,
பெருந்தன்மை,
விசாலமான
ஹ்ருதயம்... தீர்ப்பு
சொல்லும் நாளில் இவை அனைத்தின்
பலன்களும் அவர்களுக்கு
வெகுமதியாகவும் மன்னிப்பாகவும் இருக்கட்டும்.”
Monday, October 23, 2017
Saturday, October 21, 2017
கிறுக்கல்கள் -160
ஆன்மிகத்தில்
செயலைவிட சரணாகதிக்கு அதிக
மதிப்பிருக்கிறது என்றார்
மாஸ்டர்.
நீந்தத்தெரியாத
ஒருவன் தண்ணீரில் விழுந்துவிடுகிறான்.
அவன் நான்
முழுகிவிடுவேனோ என்று பயந்து
கை காலை ஆட்டிக்கொண்டு இருந்தால்
பதட்டத்தில் தண்ணீரை குடித்து
கடைசியில் முழுகியும் விடுவான்.
மாறாக தன்
எண்ணங்களையும் செயல்களையும்
சரணாகதி செய்து சும்மா இருந்து
உடல் கீழே செல்ல அனுமதித்தால்
அது தானாக மேலே வந்துவிடுகிறது!
அது போலத்தான்
ஆன்மீகத்திலும்!
Friday, October 6, 2017
கிறுக்கல்கள் -159
யாரோ
மாஸ்டரை கேட்டார்கள்:
ஏன் மதங்கள்
விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையுடன்
இருக்கிறீர்கள்? அது
மனிதர்களுக்கு கிடைத்த மிக
நல்ல சொத்து அல்லவா?
ஆமாம்.
மிக நல்லதும்
அதுதான். மிகக்
கெட்டதும் அதுதான்!
கெட்டதா?
என்ன சொல்லுகிறீர்கள்?
பொதுவாக
மனிதர்கள் மற்றவர்களை
வெறுக்கப்போதுமான அளவு மதத்தை
கற்றுக்கொள்ளுகிறார்கள்;
மற்றவர்கள்
மீது அன்பு செலுத்தும் அளவு
கற்றுக்கொள்வதில்லை.
Thursday, October 5, 2017
கிறுக்கல்கள் -158
தன்
உரையில் மாஸ்டர் பழங்கால
புலவர் ஒருவரை மேற்கோள்
காட்டினார்.
உரை
முடிந்தபின் அவரை சந்தித்த
ஒரு இள வயதான மாது "
மனிதர்களை
ஏன் மேற்கோள் காட்டுகிறீர்கள்?
ஆகமங்களை
மேற்கோள் காட்டி இருக்கலாம்
அல்லவா? அந்த
மனிதருக்கு கடவுளை தெரியும்
என்று நினைக்கிறீர்களா?”
என்றார்.
மாஸ்டர்
சொன்னார்: பெண்ணே!
கடவுள்தான்
ஆகமங்களை உருவாக்கியது என்று
நினைத்தால் அதற்கு பல காலம்
முன்பே அவர் படைப்பு என்று
ஒன்றை உருவாக்கிவிட்டார்!
Wednesday, October 4, 2017
கிறுக்கல்கள் -157
கவர்னர்
மாஸ்டரை பார்க்க வந்தபோது
பத்திரிக்கைகள் மீது
செயல்படுத்தப்பட்ட தணிக்கை
மற்றும் கட்டுப்பாடுகள்
குறித்து தன் ஆட்சேபணையை
மாஸ்டர் தெரிவித்தார்.
சமீபகாலமாக
பத்திரிகைகள் எவ்வளவு
ஆபத்தானவையாக மாறிவிட்டன
என்று உங்களுக்குத்தெரியாது
என்றார் கவர்னர்.
எப்போதும்
தடை செய்யப்பட வார்த்தைகள்தான்
ஆபத்தானவை என்றார் மாஸ்டர்.
Tuesday, October 3, 2017
கிறுக்கல்கள் -156
ஒரு
வியாபார நிறுவன செயலர்
மாஸ்டரிடம் கேட்டார்:
வெற்றிகரமான
வாழ்க்கையின் ரகசியம் என்ன?
மாஸ்டர்
சொன்னார்: தினமும்
ஒருவரையாவது மகிழ்ச்சி
அடையச்செய்!
ஒரு
நிமிடம் கழித்து சொன்னார்:
அந்த ஒருவர்
நீயாக இருந்தாலும் பரவாயில்லை.
இன்னொரு
நிமிடம் யோசித்துவிட்டுச்சொன்னார்:
அந்த ஒருவர்
குறிப்பாக நீயாக இருந்தால்
மிக நல்லது!
Monday, October 2, 2017
கிறுக்கல்கள் -155
மாஸ்டரின்
கருத்தில் உலகில் நிறைய பேர்
மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள்
என்றால் அதற்கு ஒரு முக்கிய
காரணம் பலரும் கஷ்டப்படுவதில்
ரகசியமாக இன்பம் காண்பதுதான்!
அவருடைய
நண்பர் தன மனைவியைப்பற்றி
சொன்னதை மேற்கோள் காட்டினார்:
நண்பர்
சொன்னார்: அன்பே
நீ ஏன் ஊரை விட்டுப்போய்
நல்லபடியாக பொழுதை கழிக்கக்கூடாது?
மனைவி சொன்னார்: ம்க்கும்.
உனக்கு
நல்லாவே தெரியும்; நான்
நல்லபடியாக பொழுதை கழிப்பதில
மகிழ்ச்சி அடையறது இல்லே!
Friday, September 29, 2017
Thursday, September 28, 2017
கிறுக்கல்கள் -153
வித்தியாசமான
வேறு ஒரு கோணத்தில் இருந்து
பார்க்கும்போது கெட்டது
நல்லதே; பாபம்
என்பது அருளுக்கு ஒரு வாயில்
என்றார் மாஸ்டர்!
சீடர்கள்
திகைத்துவிட்டார்கள்.
மாஸ்டர்
சொன்னார்: கார்தேஜ்
பழைய ரோம சாம்ராஜ்யத்துக்கு
ஒரு முள்ளாக இருந்தது.
கடைசியில்
ரோம் அதை முற்றிலுமாக
அழித்துவிட்டது. அதன்
பின்னரே அது அமைதியாக இருக்க
முடிந்தது… கூடவே அது மெதுவாக
ஊளை சதையும் அழுகலுமாக
நாறத்தொடங்கிவிட்டது!
உலகத்தில்
கெட்டது என்று ஒன்றே இல்லாமல்
போகுமானால் மனித உள்ளம்
அழுகக்கூடும் என்றார் மாஸ்டர்!
Wednesday, September 27, 2017
கிறுக்கல்கள் -152
மாஸ்டரின்
சீடர்கள் சிலர் ஒரு பிரபல
மதத்தலைவரைப்பற்றி ஆஹா ஓஹோ
என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மாஸ்டரோ
மௌனம் காத்தார்.
இது
பற்றி அவரிடம் பின்னால்
கேட்டார்கள்.
மாஸ்டர்
சொன்னார்: பிறர்
மீது தன் சக்தியை காட்டுபவர்கள்
உண்மையான மத குரு இல்லை.
பின்னே?
மதத்தலைவரின்
வேலைதான் என்ன?
சட்டம்
போட அல்ல; ஊக்கமூட்ட.
வற்புறுத்த
அல்ல; விழிப்புணர்வு
ஊட்ட!
Wednesday, September 13, 2017
கிறுக்கல்கள் -151
ஒரு
விஞ்ஞானி நவீன அறிவியலின்
சாதனைகளைப் பற்றிய டாக்குமெண்டரி
ஒன்றை மாஸ்டருக்கு காட்டினார்.
“இதோ பாருங்கள்.
இப்போது
நாங்கள் பாலைவனத்தில் நீரூற்றி
சோலையாக்க முடியும்.
நயாகரா நீர்
வீழ்ச்சியை கட்டுப்படுத்தி
சக்தியை சேமிக்க முடியும்.
தொலை தூரத்தில்
இருக்கும் நக்ஷத்திரத்தின்
தன்மையை இங்கிருந்து கணிக்க
முடியும். அணுவின்
கூறுகளை ஆராய முடியும்.
சீக்கிரத்தில்
நாங்கள் இயற்கையை வென்று
விடுவோம்.”
மாஸ்டருக்கு
பிரமிப்பு ஏற்பட்டாலும்
சிந்தனை வயப்பட்டார்.
பின்னால்
சொன்னார்: “இயற்கையை
ஏன் வெல்லனும்? அது
நம் நண்பன்.இருக்கும்
ஆற்றலை எல்லாம் வெல்ல முடியாத
ஒன்றை வெல்வதில் காட்டினால்
என்ன? பயம்!
பயத்தை
எப்போது வெல்லப்போகிறோம்?”
Subscribe to:
Posts (Atom)

