Pages

Showing posts with label சத்தர்சனம். Show all posts
Showing posts with label சத்தர்சனம். Show all posts

Wednesday, July 29, 2015

உள்ளது நாற்பது - 45


உருவ மருவ முருவருவ மூன்றா
முறுமுத்தி யென்னி லுரைப்ப - னுருவ
மருவ முருவருவ மாயு மகந்தை
யுருவழிதன் முத்தி யுணர்.

உருவம் அருவம் உருவருவம் மூன்றாம்
உறும்முத்தி என்னில் உரைப்பன் - உருவம்
அருவம் உருவருவம் ஆயும் அகந்தை
உருஅழிதல் முத்தி உணர்.


சிலர் முத்தி என்பது உருவம் அருவம் உருவருவம் என மூன்று வகை என்பர். (அனுபவ பூர்வமாக நான்) உரைப்பது உருவம் அருவம் உருவருவம் இவற்றை ஆராயும் அகந்தை தோன்றாமல் நாசமாவதே முத்தி.


रूपिण्यरूपिण्युभयात्मिका च मुक्तिस्त्रिरूपेति विदो वदन्ति ।
इदं त्रयं या विविनक्त्यहन्धी-स्तस्याः प्रणाशः परमार्थमुक्तिः ॥ ४२ ॥

ரூபிண்யரூபிண்யுப⁴யாத்மிகா ச முக்திஸ்த்ரிரூபேதி விதோ³ வத³ந்தி |
இத³ம்ʼ த்ரயம்ʼ யா விவினக்த்யஹந்தீ⁴- ஸ்தஸ்யா​: ப்ரணாஶ​: பரமார்த²முக்தி​: || 42 ||


सद्दर्शनं द्राविडवाङ्निबद्धं महर्षिणा श्रीरमणेन शुद्धम् ।
प्रबन्धमुत्कृष्टममर्त्यवाण्या-मनूद्य वासिष्ठमुनिर्व्यतानीत् ॥ ४३ ॥
ஸத்³த³ர்ஶனம்ʼ த்³ராவிட³வாங்நிப³த்³த⁴ம்ʼ மஹர்ஷிணா ஶ்ரீரமணேன ஶுத்³த⁴ம் |
ப்ரப³ந்த⁴முத்க்ருʼஷ்டமமர்த்யவாண்யா- மனூத்³ய வாஸிஷ்ட²முனிர்வ்யதானீத் || 43 ||
ஶ்ரீ ரமண மஹர்ஷியால் தமிழ் மொழியில் இயற்றப்பட்டதும் சுத்தமானதும்
உயர்ந்ததுமான ஸத்தர்ஶநம் என்ற நூலை தேவர்களில் மொழியில் மொழிபெயர்த்து வாஸிஷ்ட முனி பரப்பினார்.


सत्तत्त्वसारं सरलं दधाना मुमुक्षुलोकाय मुदं ददाना ।
अमानुषश्रीरमणीयवाणी- मयूखभित्तिर्मुनिवाग् विभाति ॥ ४४ ॥

॥ सद्दर्शनं समाप्तम् ॥
ஸத்தத்த்வஸாரம்ʼ ஸரலம்ʼ த³தா⁴னா முமுக்ஷுலோகாய முத³ம்ʼ த³தா³னா |  
அமானுஷஶ்ரீரமணீயவாணீ- மயூக²பி⁴த்திர்முனிவாக்³ விபா⁴தி || 44 || ||

நற்தத்துவ ஸாரத்தை ஸரளமாக உட்கொண்டதும் முமுக்ஷு ஜனங்களுக்கு
மகிழ்ச்சியளிப்பதும் (சாதாரண) மானுடத்தன்மையைத் தாண்டியவரான ஶ்ரீ ரமணர் கூறியதுமான இந்த முனிவரின் வாக்கானது (ஸூர்ய)  கிரணங்களால் அமைக்கப்பட்டது போல் பிரகாசிக்கிறது.
ஸத்³த³ர்ஶனம்ʼ ஸமாப்தம்

நிறைவுற்றது.

Saturday, July 25, 2015

உள்ளது நாற்பது - 44


பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற் - சித்தமாய்
நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முக்திசிந்தை முன்னிற்கு மோ

பத்தன்நான் என்னும்மட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தன்ஆர் என்றுதன்னைப் பார்க்குங்கால் - சித்தமாய்
நித்தமுத்தன் தான்நிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முக்திசிந்தை முன் நிற்குமோ.


நான் கட்டு உடையவன் என்று எண்ணும் போது மட்டுமே நான் பந்தம் உடையவன் முத்தி அடைந்தவன் என்னும் வித்தியாசங்கள் தோன்றுகின்றன. கட்டுடையவன் யார் என்று பார்த்து விசாரித்தால் எப்போதும் முத்தனாய் இருக்கும் தன்னை கண்டுகொள்வான். அப்போது கட்டுடையவன் என்னும் சிந்தனை நிற்காது. அப்படியெனில் தான் முத்தன் என்னும் சிந்தனை மட்டும் முன் நிற்குமோ? (நிற்காது)
தன்னை விசாரித்து தன்னை அறிந்தவனுக்கு 'தான் பந்தப்பட்டு இருந்தவன்; இப்போது முத்தியடைந்தவன்' என்னும் சிந்தனைகள் ஏதும் இரா.

बद्धत्वभावे सति मोक्षचिन्ता बन्धस्तु कस्येति विचारणेन ।
सिद्धे स्वयं स्वात्मनि नित्यमुक्ते क्व बन्धचिन्ता क्व च मोक्षचिन्ता ॥ ४१ ॥

ப³த்³த⁴த்வபா⁴வே ஸதி மோக்ஷசிந்தா ப³ந்த⁴ஸ்து கஸ்யேதி விசாரணேன |
ஸித்³தே⁴ ஸ்வயம்ʼ ஸ்வாத்மனி நித்யமுக்தே க்வ ப³ந்த⁴சிந்தா க்வ ச மோக்ஷசிந்தா || 41 ||

Wednesday, July 22, 2015

உள்ளது நாற்பது - 43


வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வினவித் - தனையறியக்
கர்த்தத் துவம்போய்க் கருமமூன்றுங் கழலு
நித்தமா முத்தி நிலை.
வினைமுதல் நாம்ஆயின் விளைபயன் துய்ப்போம்
வினைமுதல்ஆர்என்று வினவித் - தனைஅறியக்
கர்த்தத்துவம் போய் கருமம்மூன்றும் கழலும்
நித்தமாம் முத்தி நிலை.

நான் செயல்களை செய்பவன் என்னும் நினைப்பு இருந்தால் அந்த வினைகளின் விளைவையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும். செயல்புரிபவன் யார் என்று விசாரித்து தன்னை அறிந்து கொள்பவனின் 'நான் செய்கிறேன்' என்னும் பாவனைபோய்விடும். அவனது மூன்று வித கர்மங்களும் நீங்கும். இதுவே முத்தி நிலையாகும்.

करोमि कर्मेति नरो विजानन् बाध्यो भवेत्कर्मफलं च भोक्तुम् ।
विचारधूता हृदि कर्तृता चेत् कर्मत्रयं नश्यति सैव मुक्तिः ॥ ४० ॥

கரோமி கர்மேதி நரோ விஜானன் பா³த்⁴யோ ப⁴வேத்கர்மப²லம்ʼ ச போ⁴க்தும் |
விசாரதூ⁴தா ஹ்ருʼதி³ கர்த்ருʼதா சேத் கர்மத்ரயம்ʼ நஶ்யதி ஸைவ முக்தி​: || 40 ||

Saturday, July 11, 2015

உள்ளது நாற்பது - 40


சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற
சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே - நித்திரைவிட்
டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்றுபொய்ம்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்.


சித்தமாய்உள் பொருளைத்தேர்ந்து இருத்தல் சித்திபிற
சித்திஎலாம் சொப்பனம்ஆர் சித்திகளே - நித்திரைவிட்டு
ஓர்ந்தால் அவைமெய்யோ உண்மைநிலைநின்று பொய்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்.


எப்போதும் ஸ்வபாவமாக இருக்கிற பொருளை அறிந்து அம்மயமாக இருப்பதே சிறந்த சித்தியாகும். பிற சித்திகள் எல்லாம் கனவில் இருக்கும் சித்திகள் போலவே. தூக்கம் கலைந்து எழுந்தபின் சிந்தித்துப்பாத்தால் அவை உண்மையாக இருப்பதில்லையே! தம் உண்மை நிலையில் அமர்ந்து அஞ்ஞான தூக்கத்தை ஒழித்தவர் மயக்கமுற்று அந்த சித்திகளை அடைய விரும்புவார்களோ? விரும்பார் என அறி.


सिद्धस्य वित्तिः सत एव सिद्धिः स्वप्नोपमानाः खलु सिद्धयोऽन्याः ।
स्वप्नः प्रबुद्धस्य कथं नु सत्यः सति स्थितः किं पुनरेति मायाम् ॥ ३७ ॥
ஸித்³த⁴ஸ்ய வித்தி​: ஸத ஏவ ஸித்³தி⁴​: ஸ்வப்னோபமானா​: க²லு ஸித்³த⁴யோ(அ)ந்யா​: |
ஸ்வப்ன​: ப்ரபு³த்³த⁴ஸ்ய கத²ம்ʼ நு ஸத்ய​: ஸதி ஸ்தி²த​: கிம்ʼ புனரேதி மாயாம் || 37 ||

Wednesday, July 8, 2015

உள்ளது நாற்பது - 39


என்று மெவர்க்கு மியல்பா யுளபொருளை
யொன்று முளத்து ளுணர்ந்துநிலை -நின்றிடா
துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே
சண்டையிடன் மாயைச் சழக்கு.


என்றும் எவர்க்கும் இயல்பாய் உளபொருளை
ஒன்றும் உளத்துள் உணர்ந்து நிலை -நின்றிடாது
உண்டுஇன்று உருஅருஎன்று ஒன்று இரண்டு அன்று என்றே
சண்டை இடல் மாயைச் சழக்கு.


எல்லோருக்கும் என்றும் இயல்பாக இருக்கிற பொருளை மனம் ஒன்றுகிற இதயத்தில் அறிந்து அங்கேயே நிலையாக நின்றிடாமல் அவ்விதப்பொருள் இருக்கிறது என்றும்; இல்லை என்றும்; அது ஒன்று என்றும்; இல்லை இரண்டு என்றும்; ஒன்றுமில்லை, இரண்டுமில்லை என்றும் சண்டை போடுவது மயக்கத்தை அதிகமாக்குகிற மடமையே ஆகும்.

हृत्प्राप्य सद्धाम निजस्वरूपे स्वभावसिद्धेऽनुपलभ्य निष्ठाम् ।
मायाविलासः सदसत्सरूप-विरूपनानैकमुखप्रवादाः ॥ ३६ ॥
ஹ்ருʼத்ப்ராப்ய ஸத்³தா⁴ம நிஜஸ்வரூபே ஸ்வபா⁴வஸித்³தே⁴(அ)நுபலப்⁴ய நிஷ்டா²ம் |
மாயாவிலாஸ​: ஸத³ஸத்ஸரூப- விரூபனானைகமுக²ப்ரவாதா³​: || 36 ||

Saturday, July 4, 2015

உள்ளது நாற்பது - 38


 என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு - மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யால்.

என்னை அறியேன்நான் என்னை அறிந்தேன்நான்
என்னல் நகைப்புக்கு இடனாகும் - என்னை
தனைவிடயம் ஆக்க இருதான் உண்டோ ஒன்றாய்
அனைவர் அனுபூதி உண்மையால்.

நான் என்னை அறிந்தேன்; நான் என்னை அறியவில்லை என்றெல்லாம் சொல்லுவது நகைத்தலுக்கு உரியது. காரணம் என்ன? தன்னை அறிவதற்கு உரிய விஷயமாக ஆக்க தன்னைத்தவிர இன்னொரு நான் உண்டோ? அப்படி இல்லாமல் ஒரே 'தான்' மட்டுமே இருக்கிறது என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து.

न वेद्म्यहं मामुत वेद्म्यहं मा- मिति प्रवादो मनुजस्य हास्यः ।
दृग्दृश्यभेदात् किमयं द्विधात्मा स्वात्मैकतायां हि धियां न भेदाः ॥ ३५ ॥

ந வேத்³ம்யஹம்ʼ மாமுத வேத்³ம்யஹம்ʼ மா- மிதி ப்ரவாதோ³ மனுஜஸ்ய ஹாஸ்ய​: |
த்³ருʼக்³த்³ருʼஶ்யபே⁴தா³த் கிமயம்ʼ த்³விதா⁴த்மா ஸ்வாத்மைகதாயாம்ʼ ஹி தி⁴யாம்ʼ ந பே⁴தா³​: || 35 ||

Thursday, March 12, 2015

உள்ளது நாற்பது - 7

 
உருவந்தா னாயி னுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி – னுருவத்தைக்
கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணதுதா னந்தமிலாக் கண்.
உருவம் தான்ஆயின் உலகுபரம் அற்றாம்
உருவம் தான்அன்றேல் உவற்றின் – உருவத்தை
கண்ணுறுதல் யாவன்எவன் கண்அலால் காட்சி உண்டோ
கண்அதுதான் அந்தம்இலாக் கண்.
நான் என்பது உருவம் உள்ள உடலே தான் என்றால் உலகமும் கடவுளும் கூட அப்படியேத்தான் உருவத்துடன் தோன்றுவர்.. தான் உருவம் உள்ள உடல் இல்லை என்று ஆகிவிட்டால் உலகத்தின் / கடவுளின் உருவத்தை காண யாருமில்லை. ஏனெனில் கண் இல்லாமல் காட்சி இல்லை. ஆன்ம ஸ்வரூபத்தை அடையும் வரை கண் மூலமாக கண்டுக்கொண்டு இருந்த மனமானது ஆன்ம ஸ்வரூபத்தை அடைந்த பின் விரிந்து எல்லையில்லாத ஆன்ம மயத்தில் ஒடுங்கி விடுகிறது. இந்த மனமில்லாமல் காட்சிகள் தோன்றுவதில்லை.
सरूपबुद्धिर्जगतीश्वरे च सरूपधीरात्मनि यावदस्ति ।
अरूपकात्मा यदि कः प्रपश्येत् सा दृष्टिरेकाऽनवधिर्हि पूर्णा ॥ ६ ॥
ஸரூபபு³த்³தி⁴ர்ஜக³தீஶ்வரே ச ஸரூபதீ⁴ராத்மனி யாவத³ஸ்தி |
அரூபகாத்மா யதி³ க​: ப்ரபஶ்யேத் ஸா த்³ருʼஷ்டிரேகா(அ)நவதி⁴ர்ஹி பூர்ணா || 6 ||
 

Monday, March 9, 2015

உள்ளது நாற்பது - 6


  உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்

றுலகுசுக மன்றென் றுரைத்தெ – னுலகுவிட்டுத்

தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற

வந்நிலையெல் லார்க்குமொப் பாம்.
 
உலகு மெய் பொய்த் தோற்றம் உலகுஅறிவாம் அன்றுஎன்று
உலகுசுகம் அன்றுஎன்று உரைத்துஎன் – உலகு விட்டுத்
தன்னைஓர்ந்து ஒன்றுஇரண்டு தான் அற்று நான்அற்ற
அந்நிலை எல்லார்க்கும் ஒப்பாம்.
பலரும் வாதத்தில் ஈடு படுகின்றனர். உலகம் மெய் என ஒரு சாராரும்; இல்லை அது பொய் என ஒரு சாராரும் வாதிடுகின்றனர். அது போலவே உலகம் சித் என்றும், இல்லை ஜடம் என்றும்; உலகம் சுகமானது என்றும், இல்லை துன்பமயமானது என்றும் வாதிடுகின்றனர். இதனால் பெறும் பயன் ஏதும் இல்லை. உலகத்தை கவனிப்பதை விட்டுவிட்டு தன்னை யார் என்று விசாரித்தலே நன்று. தான் இருக்கிறோம் என்பது எல்லாருக்குமே சொந்த அனுபவமாக இருக்கிறது. அதில் யாருக்கும் சந்தேகம் இருப்பதில்லை. இந்த தான் யார் என்று விசாரித்து அறிவதே ஆன்ம ஸ்வரூபத்தை உணர்தல். இதை உணர 'தான்' அத்வைதமோ த்வைதமோ என்னும் சந்தேகமும் நீங்குகிறது. நான் என்னும் அகங்காரமும் நீங்குகிறது. இப்படி ஆன்ம ஸ்வரூபத்தில் திளைக்கும் உயர்ந்த நிலை எல்லா விவேகிகளுக்கும் ஒப்பாகும்.

सत्यं मृषा वा चिदिदं जडं वा दुःखं सुखं वेति मुधा विवादः ।
अदृष्टलोका निरहंप्रतीति- र्निष्ठाऽविकल्पा परमाऽखिलेष्टा ॥ ५ ॥
ஸத்யம்ʼ ம்ருʼஷா வா சிதி³த³ம்ʼ ஜட³ம்ʼ வா து³​:க²ம்ʼ ஸுக²ம்ʼ வேதி முதா⁴ விவாத³​: |
அத்³ருʼஷ்டலோகா நிரஹம்ப்ரதீதி- ர்னிஷ்டா²(அ)விகல்பா பரமா(அ)கி²லேஷ்டா || 5||