Pages

Showing posts with label சயன்ஸ் 4 ஆன்மீகம்.. Show all posts
Showing posts with label சயன்ஸ் 4 ஆன்மீகம்.. Show all posts

Monday, September 19, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்




பூக்கள்:
இறைவனுக்கு பூக்களாலும் இலைகளாலும் அர்ச்சனை செய்யலாம். அனேகமாக எல்லா பூக்களையும் முழுமையாகவும் அனேகமாக எல்லா இலைகளையும் பிய்த்தும் அர்ச்சிக்க வேண்டும். (துளசியும் வில்வமும் எக்ஸெப்ஷன்.)
வாசனை இல்லாத பூக்களால அர்ச்சிக்கக்கூடாது.
பூவோ இலையோ பறித்த சில மணி நேரங்களில் - சுமார் 4 - பயன்படுத்திவிட வேண்டும். நேரம் ஆக ஆக அதிலிருந்து ப்ராண சக்தி வெளியேறி பயன் இல்லாம போகும். எல்லாத்துக்கும் விதி விலக்கு இருக்கு இல்லையா? சண்பகம் (1 முழு நாள்), அரளி (3 நாட்கள்), விஷ்ணு க்ரந்தி(3) தாமரை (5), தாழை (5), துளசி (3 மாதங்கள்) வில்வம் (6 மாதங்கள்)
வில்வத்தை நீரால் சுத்தி செய்து அதே தேவதைக்கு திருப்பித்திருப்பி பயன்படுத்தலாம். மற்ற எதையும் மீண்டும் பயன்படுத்துவதில்லை.

நம்ப ஃப்ரெண்டு பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்சது அருகம்புல். சிவப்பு மலர்கள் எல்லாம் இவருக்குப்பிடிக்கும். உதாரணமா சிவப்பு தாமரை, செம்பருத்தி, ரோஜா. இன்னும் பல இருக்கு.

சீசல்பீனியே குடும்பத்தை சேர்ந்த எல்லா பூக்களும் சிவனுக்கு உகந்தவையா சொல்லிருக்காங்க. இன்னும் சிம்பிளா கஷ்டமே கொடுக்காத சமாசாரம் ஒண்ணு இருக்கு. அதை பறிக்க மரம் ஏற வேணாம். அதை பறிக்கப்போய் முள்ளு குத்திக்க வேணாம். கஷ்டப்பட்டு வளர்க்க வேணா. ரோடு ஓரம் அது பாட்டுக்கு வளந்து கிடக்கும். இப்பல்லாம் ரோடு ஓரமே முழுக்க சிமெண்ட்ன்னு சொல்லறீங்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் அப்படி கிடைக்கும். அதுதான் தும்பைப்பூ!

சிவனுக்கு ரொம்ப பிடிச்சது நாகலிங்கப்பூ. மேலும் அலரி, செவ்வந்தி, தாமரை ஆகியன உகந்தவை. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியவற்றின் இலைகள் சிவனுக்கு உகந்தவை.

விஷ்ணுவுக்கு உகந்த இலைகள்: துளசி, மகிழம், சண்பகம், தாமரை. வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி ஆகியன. பரம சந்தோஷத்தை கொடுக்கக்கூடியது துளசி. ஆசிமம் ஜீனஸ். குடும்பம் லெமிஸீ. இதில பல வகைகள் இருக்கு. நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, கஞ்சாங்கோரை, திருத்துழாய், காடு துளசி ன்னு சில வகைகளை விக்கிபீடியா சொல்லுது. திருத்துழாய் என்கிறது கருந்துளசி போலிருக்கு.
Ocimum tenuiflorum என்கிறதுதான் இந்தியாவில பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுது. இதெல்லாம் இல்லாம பல ஹைப்ரிட்ஸ் இருக்கு. இத்தலில இனிக்கிற துளசி, தாய்லாந்து துளசி, எலுமிச்சை சுவையோட துளசின்னு பலதும் உண்டு! மேலும் நீல நிறமான பூக்களை பெருமாளுக்கு பூஜிக்கலாம். உதாரணமா நீல சங்குபுஷ்பம். பொதுவா வேறு எந்த தெய்வத்துக்கும் நீல நிற பூக்களால பூஜிக்கறதில்லை.
 
வெண்மையான பூக்கள் சாத்விகம். இதனால் முக்தி விரும்பறவங்க பூஜை செய்யலாம். இந்த காலத்துல அதை யாரும் விரும்பறது இல்லை. இந்த லோகத்துக்கான வசதியைத்தான் விரும்பறாங்க. அப்படிப்பட்டவங்க சிவப்பு நிற பூக்களால அர்ச்சிக்கலாம். தங்க நிற பூக்களால இது ரெண்டுமே கிடைக்கும்! முருகனுக்கு பிடிச்சது கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகியன. மஹாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்தது தாமரை. 
 
காலையில் பயன்படுத்தக்கூடியவை தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை. மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் ஆகியன. 
 
நடுப்பகலுக்கு வெந்தாமரை அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம். 
 
மாலைக்கு செந்தாமரை, அல்லி, மல்லி, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம். 
 
பொதுவா வாடிப்போன பூக்கள், பூச்சி அரிச்சது, பின்னமானது, முகர்ந்து பார்த்தது அசுத்தமான இடத்தில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில வெச்சது, தானாக விழுந்தது - இதெல்லாம் சிலாக்கியமில்லை. பாரிஜாதம் செடியில் இருந்து விழு முன்னே பறிக்கப்பாருங்க!

துர்கைக்கு மல்லி, முல்லை, செவ்வரளி, செம்பவள்மல்லி, சூரிய காந்தி உகந்தவை.
சூரியனுக்கு நந்தியாவட்டை சிலாக்கியம்.

இதெல்லாம் இல்லாம சில தெய்வங்களுக்கு சில பூக்கள் பயன்படுத்துவதில்லை. விஷ்ணுவுக்கு அக்ஷதையால அர்ச்சனை செய்யறதில்லை (எல்லா பூஜைக்கும் முன்னால் செய்யற பிள்ளையார் பூஜைக்கு எல்லாத்தையும் அக்ஷதையால செய்யறாப்போல). அது போலவே வெள்ளெருக்கு, ஊமத்தையாலும் அர்ச்சனை இல்லை. பொதுவா இந்த விஷமுள்ள இலைகள், பூக்கள் எல்லாம் சிவனுக்குப்பயனாகும்.

தாழம் பூ சிவனுக்கு ஆகாதுன்னும் ஏன்னு கதையும் தெரிஞ்சிருக்கும். அதே போல குந்தம், கேசரம், குடஜமம், ஜபா புஷ்பம் ஆகியவையும் அவருக்கு ஆகாது. பிள்ளையாருக்கு விருப்பமான அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் ஆகியன அம்மனுக்கு சரிப்படாது. பஞ்சாயதனத்துல பக்கத்து பக்கத்துல இருக்கிறதால் கவனமா இருக்கவும். பிள்ளையாருக்கு துளசி; வில்வம் சூரியனுக்கு; பவழமல்லி சரஸ்வதிக்கு கூடாது.

இதைப்பத்தி இன்னும் எக்கச்சக்க சமாசாரம் இருக்கு. ஆனா இங்கே இது போதும்!
ஆர்வம் இருந்தா இங்கே படிக்கலாம். http://rightmantra.com/?p=7545


Monday, August 29, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - பச்சை கற்பூரம்




அப்படியே இந்த பச்ச கற்பூரத்தையும் பாத்துடலாம். பச்ச கற்பூரம் என்கிறதால பச்சையா இருக்காதுன்னு ஜோக் அடிச்சா திட்டுவீங்க. அதனால….
கற்பூரத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
அபாரண்ட்லி ஒண்ணுமே இல்ல!
ஆனா நிச்சயமா வாசனைல வித்தியாசம் இருக்கு.
நெட்ல தேடிப்பாத்தா குழப்பமே மிச்சம். இருந்தாலும் கிடைக்கிற தகவல் ரெண்டுமே ஒண்ணுன்னு சொல்லுது.
edible camphor ந்னு தேடிப்பாத்தா அமேசான்லயும் கிடைக்குது.
Cinnamomum camphora என்கிற சுகந்த மரத்துலேந்து இது கிடைக்கிறதா இங்கே http://senthuherbals.blogspot.in/2014/08/cinnamomum-camphora-chukantamaram.html சொல்றாங்க.
https://en.wikipedia.org/wiki/Camphor பாத்தா இதே மாதிரிதான் இருக்கு. எதுலேந்து தயாரிக்கறாங்க என்கிறதைப்பொருத்து வாசனை இருக்கும்போல இருக்கு.
இயற்கையா கிடைக்கிறது ஆர் இனாடியமராம். ரசாயன் தொழிற்சாலையில செய்யறது எல் இனாடியமர். இனாடியமர்? ஆப்டிகல் ஐஸோமர்.
மூலக்கூறுல வித்தியாசங்கள் வரலாம். ஒரே கெமிக்கலா இருந்தாலும் பௌதிக அளவில அதோட அமைப்பு வித்தியாசமா இருக்கும். சில சமயம் கண்ணாடி பிம்பம் போல இருக்கும். ஆர்வமிருந்தா அது பத்தி தேடி படிங்க!
ஊசியிலை மரங்களில் இதுக்கான மூலப்பொருள் நிறையவே கிடைக்குதாம்.
கற்பூரம் பத்தி சொல்லறப்ப சப்லிமேஷன்னு சொன்னேன் இல்லையா? இதுல அதை நல்லாவே பார்க்கலாம். கொஞ்சமே கொஞ்சம் திறந்து வெச்சாக்கூட காத்தில காணாமப்போகும். உணவுப்பொருட்களுக்கு நறுமணம் கூட்ட காலங்காலமா நம் நாட்டில பயன்படுத்தறாங்களாம். குறிப்பா அரபு நாட்டு ரெசிப்பில எல்லாம் இது நிச்சயம் இருக்குமாம். திருப்பதி லட்டுல கூட சுவைச்சு இருக்கோமில்ல?
பிஜி முடிச்சுட்டு வந்தவுடன் ஒரு வருஷம் தனியார் மருத்துவ மனை ஒண்ணுல வேலை பார்த்தேன். அப்ப அங்கே இருந்த சின்ன கோவில்ல தினசரி பூஜை பண்ண ஒரு குருக்கள் வருவார். கூடவே ஜோசியம் பாக்கிறது. ஹோமங்கள் செஞ்சு கொடுக்கிறது….
இவரோட வயித்து வலியை சரி செஞ்சதால எனக்கு ஃப்ரெண்ட் ஆயிட்டார். பேச்சுவாக்கில எம்ஜிஆருக்காக ஹோமம் செஞ்சதை சொன்னார். தேவதா ஆவாஹணம் செஞ்சு இருந்த ஜலத்தை பிரசாதமா எம்ஜிஆருக்கு கொடுக்க அப்போலோ டாக்டர்கள் ஒத்துக்கலையாம்.
எம்ஜிஆருக்கு கிட்னி மாத்தி இருந்தது இல்லையா? அப்ப இம்யூன் சப்ரசண்ட் மருந்து கொடுத்து இருந்தாங்க. அதனால இன்பெக்‌ஷன் வந்துடும்ன்னு தயக்கம். இவரோ இதுல ஒரு சாம்பிள் எடுத்துண்டு போய் என்ன வேண்ணா டெஸ்ட் செய்யுங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னு உறுதி செஞ்சுண்டு கொடுங்கன்னு கான்ஃபிடெண்டா சொன்னாராம். அவங்களும் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு பிரச்சினை இல்லைன்னு கொடுத்ததா சொன்னார்.
அது பிரச்சினை இல்லைன்னு எப்படி அவ்வளோ உறுதியா சொன்னீங்கன்னு கேட்டேன். அவர் “ அதுல பாக்டீரியா எப்படி இருக்கும்? நாதான் பச்ச கற்பூரம் போட்டுட்டேனே?” ந்னார்.
ஆமாம். ஹோமங்களில தேவதா ஆவாஹனம் செய்கிற குடத்தில தண்ணீரோட இதை கலக்கிறது வழக்கம்தான். ஒஹோ அதுவும் அப்படியா ந்னு நினைச்சுண்டேன். அதுலேந்து பயணம் செய்யறப்ப ஒரு சின்ன டப்பால பச்ச கற்பூரம் எடுத்துண்டு போய் கிடைக்கிற தண்ணில கலந்து பயன்படுத்த ஆரம்பிச்சேன்.
தினசரி செய்யற பூஜையில பயன்படுத்தற தண்ணீர்ல இதை கொஞ்சமே கொஞ்சம் கலப்போம். கம கமன்னு இருக்கும். பெருமாள் கோவில்ல கொடுக்கிற தீர்த்தத்திலும் இது இருக்குமில்ல?
அதே போல சந்தனம் அரைக்கவும் இதை கொஞ்சம் - சில கிரிஸ்டல்ஸ்- பயன்படுத்துவோம். அது தண்ணில இங்கேயும் அங்கேயும் அலையறதை வேடிக்கைக்கூட பார்க்கலாம். சந்தனம் அரைக்கும்போது இதை பயன்படுத்த சந்தனம் சட்டுன்னு நிறைய கிடைக்கும். குங்குமப்பூ சேர்க்க அது உடனே நீரை உறிஞ்சுண்டு திரளும். இது ரெண்டுத்தையும் போட்டு அரைக்கற சந்தனம் நல்ல வாசனையோடவே இருக்கும்.

 

Monday, August 15, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - கற்பூரம்





ரைட், இப்பபதிவிலே விளக்குத்தண்டை வடிவம் மாத்தினது பத்தி பாத்துடலாம்.
எண்ணை கேப்பிலரி ஆக்‌ஷனால உரியப்பட்டு எரியுதுன்னு பாத்தோம். இந்த கேப்பிலரி ஆக்‌ஷனுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதாவது கொஞ்சம் உயரம்தான் இதால எண்ணையை தூக்கிவிட முடியும். அதுக்கு மேலே முடியாது. எவ்வளோ உயரம் என்கிறது அந்த எண்ணை, திரி இழைகள் நடுவில இருக்கிற இடைவெளி எவ்வளவு குறுகலானது போன்றவற்றால நிர்ணயிக்கப்படும். இதை கணக்கு போடத்தெரியாத காலத்திலேயே அனுபவத்தால் இவ்வளவு உயரம்தான் எண்ணை இழுக்கப்படும்ன்னு தெரிஞ்சு விளக்கை வடிவமைச்சு இருக்காங்க. அதனாலத்தான் விளக்கு பெரிசா ஆனா அது இன்னும் அகலமாகுமே தவிர ரொம்ப ஆழமாகாது. எங்க வீட்டில் இதை மறு வடிவமைச்சப்ப விளக்குத்தண்டு இந்த உயரத்தை ஏறத்தாழ தொட்டுடுத்து. அதனால எண்ணைக்கு பதிலா திரியே அதிகமா எரியும்; அதனால சீக்கிரம் அணைஞ்சும் போகும்.

அடுத்து எரியற இன்னொரு சமாசாரமான கற்பூரத்தை பாத்துடலாம். முன்னே இதை கற்பூரமரத்தில இருந்து - அதன் மரம், பட்டை - டிஸ்டில் பண்ணி எடுத்தாங்க. இப்ப டர்பெண்டைன் எண்ணையிலேந்து தயார் செய்யறாங்க. முன்னே கடையிலேந்து வாங்கி வந்த உடனே பயன்படுத்தினா ஆச்சு. இல்லைன்னா காத்திலேயே கரஞ்சுடும். இத ஆங்கிலத்தில சப்ளிமேஷன்னு சொல்வாங்க. அதாவது அது அறை சூட்டிலேயே நிறைய ஆவியாகுது. வேப்பர் ப்ரஷர் அதிகமா இருக்கும். இந்த சுட்டில ‘கூல்’ எக்ஸ்பெரிமெண்ட் ஒண்ணை பாருங்க. அப்படியே அது எந்த மொழின்னு கண்டுபிடிங்க! (மொழி தெரியாட்டாலும் பார்க்கலாம்.) https://www.youtube.com/watch?v=8qCdxh5a58Q

காலங்காலமா இதை மருத்துவ குணத்துக்காக பயன்படுத்தி இருக்காங்க. விக்ஸ் வேபரப்ல இருக்கறது இதான். வித விதமா விளம்பரம் செஞ்சாலும் பெரும்பாலான ‘ரப்’ மருந்துகள்ல இது இருக்கும்! இந்த சூடம் மிட்டாய் சிலதுல கூட இது இருந்தாலும் இருக்கும். யூஎஸ்ஏ ல 
கற்பூர எண்ணை மருந்தோட விற்பனையை தடுத்து இருக்காங்க. இருந்தாலும்…..

சில சமயம் கற்பூரம் ஏத்தின உடனேயே அணைஞ்சுடும். அப்ப அந்த சூட்டில அதோட ஆவி மேலெழறதை பார்க்கலாம். இதை திருப்பி கொளுத்தறது சுலபமே. இந்த ஆவி ஏதாவது ஒரு தழல்ல பட்டா போதும். குப் ந்னு பிடிச்சுக்கும். இதை வெச்சு சின்ன வயசுல சில பல சோதனை எல்லாம் பண்ணி இருக்கேன். இந்த ஆவியை ஒரு கண்ணாடி குழாய் மூலமா ஒரு அடி தூரம் கடத்தி அங்கே ஒரு வத்திக்குச்சியை கொளுத்திக்காட்டி… அப்ப கூட பிடிச்சுக்கும்!

இப்ப வர ‘கற்பூரம்’ நிறையவே அசுத்தமா இருக்கு. கற்பூரம் எரிஞ்சு முடிஞ்சப்பறம் கற்பூரத்தட்டை பாத்தா தெரியும். ஆனாலும் இதை பாத்து பாத்து அது வர பாலிதீன் பையிலேயே பொத்தி பொத்தி வைக்க வேண்டி இருக்கு. இதனாலேயே இப்பல்லாம் கோவில்களில கற்பூரம் ஏத்தாம நெய்தீபத்தையே பயன்படுத்தறாங்க.
எங்கூருக்கு பக்கத்தில பண்ணுருட்டில ஒத்தர் இதை செஞ்சு விற்க ஆரம்பிச்சார். எரிஞ்சு முடிச்சா தட்டு அவ்ளோ பளீச்ன்னு இருக்கும். ஆனா அது கொஞ்சம் ஆபத்தானதாவே இருந்தது, பட்டுன்னு பிடிச்சுக்கும். இப்ப கொஞ்சம் கலப்படம் செஞ்சு சமப்படுத்தி இருக்காங்க!
இதெல்லாம் சொன்னது பூஜை சமயத்துல கவனமா இருங்கன்னு சொல்லத்தான்!

Monday, August 8, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - 1





என்னடா தலைப்பு இதுன்னு குழம்பாதீங்க. வாழ்க்கையில நடக்கற பல விஷயங்களையும் சயன்ஸ் அடிப்படையில் புரிஞ்சுக்கறதுல சில பல லாபங்கள் இருக்கு. ஆன்மீகம் ஆன்மாவை சார்ந்தது; ஆனாலும் அதன் வழில பயன்படற பல விஷயங்களை அறிவியல் ரீதியில புரிஞ்சு கொண்டா சில லாபங்கள் இருக்கு. இப்படிப்பட்ட சில விஷயங்களை இந்த தலைப்பில பார்க்கலாம்.
இப்படி எழுத உடனடி காரணமா இருக்கறது என் வீட்டில ஒத்தர் செய்த ஒரு தவறு.
பலரும் கடையில் விளக்கு வாங்கி பயன்படுத்தறோம். தப்பில்லை. தப்பு அதை ரிப்பேர் செய்யறேன்னு இறங்கறதுதான். படத்தை பாருங்க. 


இந்த விளக்கோட நடுவில இருந்த வளைவான தண்டை நிமித்திட்டாங்க. ஆப்டர் ஆல் இதை வடிவமைச்சவங்க யோசிச்சோ அல்லது அனுபவத்தாலேயோ ஒரு வடிவம் கொடுத்து இருக்காங்க. அதை மாத்த ரொம்பவே யோசிக்கணும். இதுக்கப்பறம் விளக்கு எண்ணை இருக்கும்போதே அடிக்கடி அணைந்து போக ஆரம்பிச்சது. நல்லாவும் எரியலை. ஏன்? பதிலை அடுத்த பதிவில பார்க்கலாம். உங்களுக்கு விடை தோணினா கமெண்ட்ல எழுதுங்க!


இது தண்டை பழையபடி நிமிர்த்தப் பாத்தது. வளைவு முன்ன மாதிரி ஸ்மூத்தா வரலை.

விளக்கில பயன்படற திரி சுத்த பஞ்சால செய்திருக்கணும். இப்ப கடையில் கிடைக்கிற பலதும் செயற்கை இழை கலந்ததுதான். நல்ல பஞ்சு திரி வளைச்சப்படி வளையும். செயற்கை இழை சேர்த்ததுக்கு கொஞ்சம் மெமரி உண்டு. வளைச்சா பழைய வடிவத்துக்கு போகப்பார்க்கும். இதனால திரி விளக்கில சரியா நிக்காது.
இப்ப எல்லா துணியும் செயற்கை இழை சேர்த்த காட்டனில செய்யறதுதான். ஆமாம், 100% காட்டன்னு சொன்னாக்கூட அது சந்தேகமே. நூற்பாலைகளில கிடைக்கிற காட்டன் வேஸ்ட் என்கிறதால திரியை செய்யறதால மோசமான திரியே கடையில கிடைக்குது. சிரத்தை இருக்கறவங்க சுத்த பஞ்சா வாங்கி அப்பப்ப நூலா திரிச்சு பயன்படுத்துங்க. இந்த தலைமுறையில இதை பார்க்கறது அரிதாப்போச்சு!

எண்ணை திரியோட இடுக்குகளால உறிஞ்சப்பட்டு (கேப்பிலரி ஆக்‌ஷன்) திரி முழுதும் பரவும். திரியோட நுனில இருக்கிற தழல் இதை ஆகாரமாகக் கொண்டு எரியும். இதனால் மேலும் கொஞ்சம் எண்ணை உறிஞ்சப்படும். இப்படி உறிஞ்சப்படுகிற எண்ணை எரிகிற தேவைக்கு அதிகமா இருந்தா அது புவி ஈர்ப்பு விசையால கீழே சொட்டும்! இதுக்காகத்தான் விளக்குகளில மையத்தில தண்டு அமைப்பாங்க அல்லது கீழே அடிப்பகுதி விளக்குத்தட்டைவிட கொஞ்சம் பெரிசா அமைப்பாங்க!




ஆதர்சமா ஒரு முறை பயன்படுத்திய திரியை அடுத்த முறைக்கு பயன்படுத்தக்கூடாது. எவ்வளவு எரிஞ்சு இருந்தாலும் அதை தூக்கி எரிய வேண்டியதுதான். எரிகிற விளக்கை அப்படி எரிந்து அணையட்டும்ன்னு விடக்கூடாது. அடெண்ட் பண்ணாத நெருப்பு இருக்ககூடாது என்கிறதுக்காக இருக்கலாம்.
ஆண்கள் இதை அணைக்கக்கூடாது. பெண்கள் சொட்டு பாலையோ ஒரு பூவையோ கொண்டு திரியை எண்ணையில் இழுத்துவிட்டு ‘குளிர’ ச்செய்யணும். இது அறிவியல் இல்லை; நடைமுறை! :-)
கேள்விகள்: 1. திரி நுனி மட்டும் ஏன் எரியுது? முழுக்க ஏன் எரியலை? எப்ப ஏன் முழுக்க எரியும்?

2. எண்ணை ஏன் பத்திக்கலை?