Pages

Tuesday, January 14, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 73

70 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஶங்கரானந்தேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: ஶ்ரீ ஶங்கர விஜயேந்திர ஸரஸ்வதி
பிறப்பு: 5069 கீலக பால்குண கிருஷ்ண தசமி (கும்ப மாஸ உத்ராஷாட நக்ஷத்ரம்), 1969-மார்ச்-13
பிறந்த இடம்: திருவள்ளூர் மாவட்டத்தில் தண்டலம் கிராமம், தமிழ்நாடு
பூர்வாஶ்ரம பெயர்: ஶங்கர நாராயணன்
பூர்வாஶ்ரம கோத்ரம்: பாரத்வாஜ
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்கள்: அம்பலஷ்மி, முத்கமல கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி
ஸன்யாஸம்: 5084 ருத்ரோத்கரி வைசாக கிருஷ்ண திரிதியை, பொது ஆண்டு 1983-மே- 29, வயது 14
பதிவுகள் அனைத்துக்கும் உசாத்துணை:
http://trueindianhistory-kvchelam.blogspot.in/…/age-of-sri-…
http://kmrao.wordpress.com/…/sri-kota-venkatachalam-a-comp…/
http://www.thevedicfoundation.org/bhartiya_h…/chronology.htm
Kamakoti Mutt: A Myth or Reality, W R Antarkar, Bhandarkar Oriental Research Institute, 2001
Shankara Vijaya-s: a Comparative and Critical Study, a Ph D thesis by W R Antarkar under Prof R D Karmarkar, Bhandarkar Oriental Research Institute, 1960
(Both above books are available at: https://sites.google.com/… - 72/site/hindulibrary/document-list)

பதிவுகள் அனைத்தும் ஶ்ரீ ரமண ஶர்மா ஆன்லைன் வலைதளத்தில் இருந்து தமிழாக்கம்.

- நிறைவான பதிவுகள் !

Monday, January 13, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 72

69 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி
பிறப்பு: 5036 யுவ கர்கட ஶ்ரவிஷ்டா நக்ஷத்ரம், பொ.ச. 1935-ஜூலை -18
பிறந்த இடம்: மன்னார்குடி அருகே இருள்நீக்கி கிராமம்.
பூர்வாஶ்ரம பெயர்: சுப்ரமண்யன்
பூர்வாஶ்ரம கோத்ரம்: ஔசத்ய
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்கள்: ஸரஸ்வதி, மகாதேவ சாஸ்திரி
ஸன்யாஸம் : 5054 விஜய பால்குண கிருஷ்ண த்ரிதியை, பொ.ச. 1954-மார்ச் 22, 18 ஆம் வயது
சித்தி: 5118, ஹேவிளம்பி, பால்குண சுக்ல த்ரயோதசி பொ.ச 2018, பிப்ரவரி 18.
சித்தி அடைந்த இடம்: காஞ்சி ஶ்ரீமடம்.
இந்த ஆச்சார்யரின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சாதனைகள் பல பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

Saturday, January 11, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 71

68 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (7)
அடைமொழி: மஹாஸ்வாமி, பரமாச்சார்யா, நடமாடும் தெய்வம்
பிறந்த இடம்: தமிழ்நாட்டில் விழுப்புரம்
பூர்வாஶ்ரம பெயர்: ஸ்வாமிநாதன்
பூர்வாஶ்ரம பெற்றோரின் பெயர்கள்: மகாலக்ஷ்மி, ஸுப்ரமணிய சாஸ்திரியார்
ஆண்டுகள் பீடாதிபதியாக : 87
சித்தி: 5094 பவ மார்கசீர்ஷ கிருஷ்ண த்வாதசி (பொ.ச. 1994-ஜன -2010)
சித்தி அடைந்த இடம்: காஞ்சி ஶ்ரீமடம்
பிற:
சமீபத்திய ஆண்டுகளில் சனாதன தர்மத்திற்கான மிகப்பெரிய கலங்கரை விளக்காக இந்த ஆச்சார்யர் பணியாற்றினார். பாரதத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில், அவர் மேற்கத்திய-பிறழ்ந்த நவீன "நாகரிகம்" உடன் ஊக்கமுடைய ஆழமான இருளில் விழுந்துகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை அழிவில் இருந்து மீட்டார்.
இந்த ஆச்சார்யரின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சாதனைகள் பல மொழிகளில் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

Friday, January 10, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 70

67 ஆவது ஆச்சார்யர் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி (8)
பிறப்பு இடம்: திருவீசைநல்லூர் தமிழ்நாடு
பூர்வாஶ்ரம பெயர்: லக்ஷ்மிகாந்தன்.
பூர்வாஶ்ரம பெற்றோரின் பெயர்கள்: லட்சுமி, நரசிம்மன்
பீடாதிபதியாக காலம்: 7 நாட்கள்
சித்தி: 5007 பராபவ அதிக ஃபல்குன சுக்ல ப்ரதமை (பொ.ச. 1907) 17 வயதில்
சித்தர் இடம்: வேலூர் மாவட்டத்தில் கலவை
வேறு:
இந்த ஆச்சார்யர் பிரம்மச்சாரிய ஆஶ்ரமத்தில் அவரது முந்தைய குரு/ ஆச்சார்யருக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அவரது குரு, அவரது பூர்வாஶ்ரம உறவினரான ஸ்வாமிநாதனுக்கு (அவர் பின்னர் அடுத்த ஆச்சார்யர் ஆனார்) சன்னியாசத்தை கொடுக்க உத்தேசித்திருந்தார். ஆனால் அவர் திடீரென்று நோயால் பாதிக்கப்பட்டார், அவரது முடிவு உடனடியாக வருவதை உணர்ந்தார், மஹாதேவேந்திர ஸரஸ்வதி என்ற பெயருடன் லட்சுமிகாந்தனுக்கு சன்னியாச ஆஶ்ரமம் கொடுத்தார். எனினும், ஶ்ரீ மஹாதேவேந்திரர் அவரது குருவின் தொற்று நோயை பெற்றார். ஏழு நாட்களுக்குப் பிறகு, காஷாயம் மற்றும் தண்டத்தை ஸ்வாமிநாதனுக்கு கொடுப்பதற்காக ஆசிர்வதித்து உடலை நீக்கினார். நேரில் சன்னியாசம் பெற இயலாத ஸ்வாமிநாதன் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற பெயரால் ஆசிர்வதிக்கப்பட்டார்.
சீடரான ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி பின்னர் இந்த ஆச்சார்யர் ஏழு நாட்களுக்கு மட்டுமே பீடாதிபதி என்பதால் அவரது தபசின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது எனக் குறிப்பிட்டார்.

Thursday, January 9, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 69

66 ஆவது ஆச்சார்யர் விவரங்கள் :
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (6)
பிறப்பு இடம்: உதயம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.
பூர்வாஶ்ரம பெயர்: ஸ்வாமிநாதன்
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்: மங்களாம்பிகா, சீதாராம பண்டிதர்.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 17
சித்தி: 5007 பராபவ மாக கிருஷ்ண அஷ்டமி (பொ.ச. 1907 - பிப்ரவரி 06) அவரது 35 வயதில்
சித்தி இடம்: வேலூர் மாவட்டத்தில் கலவை
வேறு:
இந்த ஆச்சார்யர் சரளமாக உரை ஆற்றுபவர். அத்வைத வேதாந்த சாஸ்திரத்தின் ஆய்வுகளின் பாதுகாப்பிற்காகவும், அவற்றை ஊக்குவிப்பதற்காகவும் அத்வைத சபாவை அவர் நிறுவினார்.

Wednesday, January 8, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 68

65 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி (7)
அடைமொழி: சுதர்ஷன மஹாதேவா
பிறப்பு : மத்யார்ஜுனம்
பூர்வாஶ்ரம பெயர்: மஹாலிங்கர்
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்: சுப்புலட்சுமி, சேஷாத்ரி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 39
சித்தி: 4990 விரோதி பால்குன அமாவாசை (பொ.ஆ. 1890 மார்ச் 20)
சித்தியான இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் விஷ்ராமபுரா (இளையாத்தங்குடி)
இந்த ஆச்சார்யர் (40 ஆவது ஆச்சார்யர் ஷோபன மஹாதேவரைப் போன்ற) தெய்வீக அழகைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏழைகளுக்கு உதவுவதில் அவரது பெருந்தன்மையும், கலைகளுக்கு அவர் அளித்த ஆதரவும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக அவர் சிறந்த ஶ்ரீவித்யா உபாசகர்.

Saturday, January 4, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 67

64 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (5)
பிறப்பு இடம்: கும்பகோணம், மடத்துக்கு அடுத்த வீடு
பூர்வாஶ்ரம பெயர்: வெங்கடசுப்ரமண்யன்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4951 சாதாரண கார்த்திக கிருஷ்ண ப்ரதமை (பொது ஆண்டு 1850- நவம்பர் -20)
சித்தி இடம் : கும்பகோணம் மடம்
மற்றவை:
இந்த ஆச்சார்யர் சிறந்த ஶ்ரீவித்யா உபாசகர்.
காஞ்சி காமாட்சி கோயிலின் கும்பாபிஷேகத்துக்காக போதுமான நிதியை ஏற்பாடு செய்ய சென்னையில் தங்கியிருந்தபோது தேவி அவரது கனவில் வந்து அவரை காஞ்சிபுரத்திற்குத் திரும்பும்படி உத்தரவிட்டார். அங்கு தேவையான நிதி வந்து சேரும் என்றாள். அதே போல தேவையான நிதி தானாக வந்து சேர்ந்தது. பெரிய அளவில் சிறந்த முறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மாற்று கருத்துடைய சிலர் உருவாக்கிய கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்க பிரதிஷ்டை செய்தார். பின்னர் தஞ்சாவூர் மன்னன் தனது கனவில் சிவபெருமான் இட்ட கட்டளைப்படி அவருக்கு கனகாபிஷேகம் செய்தார். இது மேலே கூறிய கஷ்டங்களால் ஏற்பட்ட செலவினங்களை ஈடுகட்ட உதவியது.

Friday, January 3, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 66

63 ஆவது ஆச்சார்யர் பற்றிய விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி (6)
பிறப்பு இடம்: கும்பகோணம்
பூர்வாஶ்ரம பெயர்: அன்னு ச்ரௌதி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 31
சித்தி: 4914 ஶ்ரீமுக ஆஷாட சுக்ல த்வாதசி (பொது ஆண்டு 1813-ஜூலை -10)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் தர்ம சாஸ்திரத்தில் ஒரு நிபுணர் என்று அந் நாளைய முஸ்லீம் ஆட்சியாளர்களால் கூட மிகவும் மதிக்கப்பட்டார். ஆகையால் அவரது சொல்லே அனைத்து தர்மம் குறித்த சர்ச்சைகளிலும் இறுதி வார்த்தை என்று கருதப்பட்டது. கர்நாடக போர்கள் நடந்து கொண்டு இருந்த போதிலும், இவர் பக்தர்களின் இடங்களுக்குச் சென்று, வழிகாட்டுதல் மற்றும் ஆறுதலளிக்கும் வகையில் பயணிக்க அனுமதி அனைத்து தரப்பினராலும் வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஶ்வரர் கோவிலில் சோமாஸ்கந்த மண்டபம் கட்டியுள்ளார்.

Thursday, January 2, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 65
62 ஆவது ஆச்சார்யர் பற்றிய விவரங்கள்

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி (4)
பூர்வாஶ்ரம விவரங்கள்: இந்த ஆச்சார்யரின் பூர்வாஶ்ரம விவரங்கள் கிடைக்கவில்லை. காஞ்சிபுரத்துக்கு அருகில் நடைபெற்ற கர்நாடக போர்கள் காரணமாக காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணத்துக்கு ஶ்ரீமடம் மாற்றப்பட்டதால், சில ஆவணங்கள் அழிந்திருக்கலாம்.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4883 சுபகிருது பௌஷ கிருஷ்ண திவிதியை (பொ.ச. 1783-ஜனவரி 20)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் ஜெயதேவரின் அஷ்டபதி போல சிவஅஷ்டபதியை எழுதினார்.

Wednesday, January 1, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 65

61 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி (5)
பூர்வாஶ்ரம பெயர்: நாராயணன்
பீடாதிபதியாக வருடங்கள்: 42
சித்தி: 4846 க்ரோதன ஜேஷ்ட சுக்ல நவமி (பொ.ச 1745-ஜூன்-08)
சித்தி இடம்: திருவொற்றியூர் (சென்னை அருகே)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் ஒரு பெரிய யோகியாக இருந்தார் என்று கூறப்படுகிறது. 7 வயது முதல் உலர் இலைகள் மற்றும் தண்ணீர் மட்டுமே குறைந்த அளவில் உணவாக உட்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.