Pages

Friday, January 13, 2017

2017 சங்க்ராந்தி
2017 வருஷ சங்க்ராந்தி பூஜைக்கான பூஜா விதானம் இங்கே:
https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfMXhBNWQ1a2E5STA/view?usp=sharing

Thursday, January 12, 2017

போகி
ஒண்ணுமில்லை,. சின்ன ரிமைண்டர். நாளைக்கு போகிக்கான பூஜை இந்திர பூஜையும் கோ பூஜையும்.
பூஜை செய்முறை இங்கே இருக்கு.
https://anmikam4dumbme.blogspot.in/2016/01/blog-post_14.html

Friday, January 6, 2017

அந்தணர் ஆசாரம்- 11
நெற்றி இட்டுக்கொள்வது.
அவரவர் குல ஆசாரப்படி எப்படி நெற்றி இட்டுக்கொள்ள வேண்டும். ஊர்த்வ புண்டரத்தின் மீது கிடைமட்டமாக புண்டரம் தரிக்கக்கூடாது என்றோ அல்லது மாறாகவோ ரிஷிகள் சொல்லி இருப்பதை பார்த்து குழப்பம் அடையத்தேவையில்லை. பஸ்மாவை தரிக்க கண்டனம்; அதை கண்டனம் செய்து ஒரு கண்டனம் என்றெல்லாம் க்ரந்தங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் வித்வான்களுக்கு விட்டுவிடுவோம். நாம் குல ஆசாரத்தை கடைபிடிப்பதே நல்லது. நாமாக அதை மாற்றிவிடக்கூடாது. வெற்று நெற்றியுடன் செய்யும் கர்மாக்களால் பலனே இல்லை.

கோபீ சந்தனத்தினால் ஊர்த்வ புண்டரம் தரிக்கும் முறை இருக்கிறது. கோபி சந்தனம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த இடம் க்ருஷ்ணன் வாசம் செய்யும் த்வாரகை என்றே சொல்லுகிறார்கள். வாஸுதேவோபனிஷத்தில் தரிக்கும் விதி விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. பார்த்துக்கொள்ளவும்.
நமஸ்கரித்து சந்தனத்தை எடுத்து ப்ரார்த்தித்து, இமம்மே கங்கே மந்திரத்தால் நீர் சேர்த்து விஷ்ணோர்நுகம் மந்திரத்தால் குழைத்து அதோ தேவா அவந்து ந: மந்திரத்தாலும், மும்முறை விஷ்ணு காயத்ரியாலும் அபி மந்த்ரணம் செய்து சங்க சக்ர கதா* ரணாகதம் - மந்திரத்தால் த்யானம் செய்து இட்டுக்கொள்ள வேண்டும்.
க்ருஹஸ்தன் ‘கேசவ’ எனத்துவங்கும் நாமங்களால் நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, வல இடைப்பகுதி, தோள், கழுத்து; இடப்பக்க இடைப்பகுதி, தோள், கழுத்து; பின் இடுப்பு, பின் கழுத்து ஆகிய இடங்களில் தரிக்க வேண்டும். கடைசியாக வாஸுதேவ என சிரசில் தரிக்க வேண்டும்.
ப்ரம்மச்சாரிகளுக்கு 5 இடங்கள் மட்டும். நெற்றி. கழுத்து, மார்பு, தோள்கள்.
பரம ஹம்ஸ சன்யாசிக்கு நெற்றி மட்டும்; மற்ற சன்யாஸிகளுக்கு சிரஸ், நெற்றி, மார்பு மட்டில்.
யக்ஞம், தானம், ஜபம், ஹோமம், வேதம் சொல்லுதல், பித்ரு தர்பணம் இவை புண்டரம் இல்லாமல் செய்தால் பலனில்லை எனப்படுகிறது.

காலாக்னி ருத்ரோபநிஷத்தில் விபூதி தாரண முறை சொல்லப்படுகிறது. அக்னியில் உண்டான பஸ்மாவை ஸத்யோஜாதம் முதலான 5 மந்திரங்களால் எடுத்து ‘அக்னிரிதி பஸ்ம, வாயுரிதி பஸ்ம, ஜலமிதி பஸ்ம, ஸ்தலமிதி பஸ்ம, வ்யோமேதி பஸ்ம’ என்று மந்திரிக்க வேண்டும். ‘மாநஸ்தோகே’ எனும் மந்திரத்தால் கையில் எடுத்துக் கொண்டு ‘மாநோ மஹாந்தம்’ எனும் மந்திரத்தால் ஜலம் சேர்த்துக் குழைக்க வேண்டும். ‘த்ரியாயுஷம்’ எனும் மந்திரத்தால் தலை, நெற்றி, மார்பு, தோள்களிலும் ‘த்ரியாயுஷம், த்ரியம்பகம், த்ரிசக்தி’ என்று மூன்று கோடுகளில் குறுக்காக இட்டுக் கொள்ள வேண்டும். இது சாம்பவ விரதம் எனப்படும். பரமேஶ்வரனுக்கு ப்ரீதியை கொடுப்பது.
இப்படி தெரிந்து தரிக்கிற நாலு ஆஶ்ரமிகளும் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டவர் ஆவார்; எல்லா தேவதைகளையும் த்யானம் செய்தவராவார்; எல்லா புண்ய தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தவராவார். எல்லா செல்வங்களையும் அடைவார். எல்லா விஷய சுகங்களையும் அனுபவிப்பார். எல்லா வேதங்களிலும் உள்ள ருத்ர மந்திரங்களை ஜபம் செய்தவராவார். சரீர த்யாகம் செய்த பின் ஶிவ ஸாயுஜ்யம் அடைவார்; மீண்டும் பிறக்க மாட்டார் என்கிறார் பகவான் காலாக்னி ருத்ரர்.
ெற்றி, இரண்டு கைகள், வயிறு, சிரஸ், மார்பு, இடுப்பின் பக்க வாட்டில் ஜலத்துடன் கலந்து தரிக்க வேண்டும். வேதமறிந்து கர்மாக்கள் செய்யும் ப்ராம்ஹணன் அவசியம் தரிக்க வேண்டும். ச்ராத்தம், யக்ஞம், ஜபம், ஹோமம், வைஶ்வதேவம், தேவ பூஜை ஆகியவற்றில் அவசியம் தரிக்க வேண்டும். இல்லாமல் செய்தால் பலனில்லை எனப்படுகிறது.
ஆயுஸ், செல்வம், மோக்ஷம் ஆகியவற்றை விரும்புகிறவன் அவசியம் செய்ய வேண்டும். இது நான்கு வர்ணத்தாருக்கும் பொருந்தும்.

விபூதியை எப்போதும் நெற்றியில் கிடைவாட்டிலேயே தரிக்க வேண்டும்; கோபி சந்தனத்தை ஊர்த்வமாக; சந்தனம் இரு வழிகளிலும் செய்யலாம். ஒரு போதும் வட்டமாக பொட்டு போல இட்டுக்கொள்ளக்கூடாது. உமி சாம்பல், கல் பொடி முதலியவற்றை தரிக்கக்கூடாது. பிரசாதமாக கிடைத்த மஞ்சள் குங்குமம் தவிர எந்த பொடியையும் தரிக்கக்கூடாது

Thursday, January 5, 2017

அந்தணர் ஆசாரம்- 10
வஸ்த்ரம் தரித்தல்:
ஜலத்திலிருந்து கரையை அடைந்த பின் இரண்டு வெளுப்பான துணிகளை உடுத்த வேண்டும். (க்ருஹஸ்தன் என்பதால் 2. ப்ரம்மச்சாரிக்கு ஒன்றே.) மண் கலந்த ஜலத்தால் கால்களை அலம்ப வேண்டும். தலை மயிரை உதறக்கூடாது.
நதி குளங்களில் ஸ்னானம் செய்தால் மேலே காய்ந்த வஸ்திரத்தை சுற்றிக்கொண்டு ஈர ஆடையை கழட்டி கீழே விட வேண்டும். கிணறு போன்ற இடங்களில் ஸ்னானம் செய்தால் உத்தரீயத்தை தலையில் சுற்றிக்கொண்டு கீழ் ஈரத்துணியை மேலாக எடுத்து போட வேண்டும். பூணூலை காதில் சுற்றிக்கொண்டு வஸ்திரம் தரிக்க வேண்டும்.
எந்த வஸ்திரத்தை தரிக்கக்கூடாது?
சிவப்பு நீலம் கருப்பு ஆகிய அதிக சாயமேற்றிய வஸ்திரங்கள்; ஈரமான வஸ்திரம்; நீல கருப்பு கரை போட்ட வஸ்திரம் ஆகியன விலக்கப்பட வேண்டும்.
கச்சமில்லாதவனும், வஸ்திரத்தின் நுணி பாகத்தை ஒரு பக்கம் செறுகிக்கொண்டு மற்றதை விட்டு வைக்கிறவனும், தலைப்பை விட்டு நடுவில் செறுகுகிறவனும்,மேல் தூக்கியோ அரைஞாண் கயிற்றிலோ கச்சம் கட்டியவனும் துணி உடுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள். அதே போல் அரைஞாண் கயிறு கட்டாதவனும் துணி உடுத்தாதவனே. இது இல்லாமல் ஒருவன் செய்யும் கர்மா நிஷ்பலனாகும். தட்டுச்சுற்று வேட்டியும் உகந்ததல்ல. எப்படியோ இது தமிழ்நாட்டில் ப்ரம்மச்சாரிகளுக்கு தேசாசாரமாக ஆகியிருக்கிறது. இவர்கள் செய்யும் கர்மா ஆசுரமாகும்; அதாவது அசுரர்களுக்கு உவப்பளிக்கும்.
உலர்ந்த வஸ்திரம் இல்லாத போது ஆபத் தர்மமாக ஈர வஸ்திரத்தை ஏழு முறை உதறி கட்டிக்கொள்ளலாம்.

சுசீவஹ என்ற மந்திரத்தால் புரோக்ஷித்து; தேவஸ்யத்வா என்ற மந்திரத்தால் எடுத்து; அவதூதம் என்ற மந்திரத்தால் உதறி; தரணி அலல்து உதுத்யம் என்ற மந்திரங்களால் சூரியனிடம் காண்பித்து; ஆவஹந்தி என்ற மந்திரத்தால் தரித்துக்கொள்ள வேண்டும்.

Wednesday, January 4, 2017

அந்தணர் ஆசாரம்-9
 
நாய் உடம்பில் பட்டால் கட்டிய துணியுடன் ஸ்னானம் செய்ய வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர். அல்லது பட்ட இடத்தை/ உறுப்பை அக்னியில் காட்டிவிட்டு கால்களை அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். சிலர் ஒருவன் நாபிக்கு கீழ் பட்டால் ஆசமனம் போதும்; நாபிக்கு மேல் பட்டால்தான் ஸ்னானம் என்கிறார்கள்.
க்ரஹணம், ஸங்கரமணம், விவாஹம், ஜனனம் இவற்றில் ராத்திரியிலும் ஸ்னானம் தானம் செய்யலாம். இவற்றை தவிர்த்த மற்ற நேரங்களில் இரவில் ஸ்னானம் கூடாது.
ஒரு வேளை அப்படி செய்ய நிர்பந்தம் இருந்தால் பகலில் கொண்டு வந்த ஜலத்தால் ஸ்வர்ண சம்பந்தத்துடன் செய்யலாம். அல்லது அக்னியை சாட்சியாக வைத்துக்கொண்டு குளம் நதிகளில் செய்யலாம்.
க்ரஹண புண்ய காலத்தில் எல்லா தீர்த்தங்களும் கங்கைக்கு சமம். எல்லா ப்ராஹ்மணர்களும் விஷ்ணுவுக்கு சமம். எல்லா தானங்களும் பூமி தானத்துக்கு சமம்.
அந்த நேரத்தில் கங்கையிலேயே ஸ்னானம் செய்தால் கோடிக்கணக்கான பசுக்களை தானம் செய்த பலன் உடனேயே கிடைக்கிறது. சகல புண்ய தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்த புண்ணியம் கிடைக்கிறது.
க்ரஹண புண்யகாலத்தில் ஸ்னானம், தானம், பித்ருக்களை உத்தேசித்து ஹிரண்ய ச்ராத்தம் இவற்றை அவசியம் செய்ய வேண்டும். இதனால் அளவற்ற புண்ணியத்தை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை சூரிய க்ரஹணமும் திங்கட் கிழமை சந்திர க்ரஹணமும் சம்பவித்தால் அதற்கு சூடாமணி புண்ய காலம் என்று பெயர்.
ஜனன மரண ஆசௌசம் இருந்தாலும் க்ரஹண நேரத்தில் சுத்தி இருக்கிறது. அதனால் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்யலாம்.
சூர்ய பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு ப்ரவேசம் செய்யும் நேரமே சங்க்ரமணம், சங்க்ராந்தி எனப்படுகிறது. அந்த நேரத்தில் செய்யும் ஸ்னானம், தானம், ஹவ்யம், கவ்யம் ஆகியவற்றுக்கு சூரிய பகவான் 7 வருஷம் நல்ல பலன்களை தருகிறார்.
க்ரஹணம் தெரியும் வேளையில் மட்டுமே புண்ய காலம். முன்னும் பின்னும் இல்லை. ஆனால் சங்க்ரமணம் சூஷ்மமானது. எப்போது நடக்கிறது என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. ஆகையால் முன்னும் பின்னும் 30+30 நாழிகைகள் புண்ய காலமாகும்.
இரண்டு அயனங்கள், 4 ஷடசீதிகள், 4 விஷ்ணுபதிகள், 2 விஷுக்கள் சங்க்ராந்தி ஆகும். உத்திராயணம் மகர மாசத்திலும் தக்‌ஷிணாயனம் கர்க்கட மாசத்திலும் வரும்., மேஷமாசத்திலும் துலா மாசத்திலும் விஷூ வரும். அயனத்துக்கு பின்னும் விஷுவுக்கு பின்னும் விஷ்ணுபதி, ஷடசீதி என்பன கிரமாக வரும்
அயனம் கோடி புண்ணியம்; விஷு ஆயிரம் புண்ணியம்; ஷடசீதி, விஷ்ணுபதி இரண்டும் ஆயிரம் ஆயிரம் புண்ணியம் என புகழப்படுகிறது.


Tuesday, January 3, 2017

அந்தணர் ஆசாரம் - 8


ஸ்னானத்துக்கு உகந்த ஜலங்கள்:
மனிதர்கள் வெட்டி உருவாக்கியது குளம், தடாகம். இயற்கையாக அமைந்தது தேவகாதம், ரிஷிகள் சேவித்த ஜலம் ஸரஸ். 8000 கோல் தூரம் ஓடியது நதி ஆகும். அதற்கும் குறைவான ஓடும் நீர் கர்த்தம் (வாய்க்கால்).
அரசர்கள், ரிஷிகள், தேவர்கள் நிமானித்த கிணறு குளங்களில் தினமும் ஸ்னானம் செய்யலாம். கிணற்றில் இருந்து எடுத்து ஸ்னானம் செய்வதைவிட பூமியில் உள்ள நீர்நிலையில் மூழ்கி ஸ்னானம் செய்வது உத்தமம். இதே போல வரிசையில் ஒன்றை விட ஒன்று உகந்தது என்பதாக: மலை அருவி. ஸரஸ். நதி, தீர்த்தம், கங்கை இவை ஒன்றை விட ஒன்று உத்தமம்.
பிறர் நிர்மாணம் செய்த ஜலங்களில் குளிப்பதானால் மூன்று மண் பிண்டங்களை ஜலத்தில் இருந்து எடுத்து கரையில் போட்டுவிட்டு குளிக்கலாம். (இது தானும் அதற்கு உபகாரம் செய்ததாக ஆகிறது.) பிறரது கிணற்றில் ஸ்னானம் செய்வதானால் மூன்று குடங்கள் நீரை இறைத்துவிட்டு செய்க. தர்மத்துக்கு என கட்டிவிடப்பட்ட கிணறு குளங்களுக்கு இந்த நியமங்கள் இல்லை. ஆனால் இவற்றை நிர்மாணம் செய்தவர் நாஸ்திகராகவோ பதிதராவோ இருப்பின் ப்ராஜாபத்ய கிருச்சரம் செய்து கொள்ள வேண்டிய தோஷம் உண்டு. பெரிய ஜலாசயம் இருக்கையில் சிறியதில் ஸ்னானம் செய்யலாகாது. நதி இருக்கையில் கிணறு முதலியவற்றில் ஸ்னானம் செய்யலாகாது.
ராம சேதுவைத்தவிர மற்ற இடங்களில் கடல் நீரில் ஸ்னானம் செய்வது அமாவாசை பௌர்ணமி அன்று மட்டுமே. பிற நாட்களில் கூடாது. அதுவும் மனைவி கர்ப்பமாக இருக்கையில் ஒருவன் கடலில் ஸ்னானம் செய்யலாகாது.
அக்னி சம்பந்தம் பெற்ற ஜலம் விசேஷமானது. ஆகையால் உடல் நோய்வாய்ப்பட்டவர் அதில் ஸ்னானம் செய்வது விசேஷமானதாகும்.
வீட்டு விலகானவள், பிரஸவித்தவள், பதிதன், பிணம், பிணத்தை தொட்டவன், இவர்களை தொட்டவன் உடனே கட்டிய துணியுடன் ஸ்னானம் செய்ய வேண்டும். நாய் மேலே பட்டாலும் ஸ்னானம் செய்யவேண்டும்.
கெட்ட கனவு கண்டவன், வாந்தி எடுத்தபின், மைத்துனம் முடிந்த பின், சவரம் செய்தபின், தன் உடம்பில் பிணம் எரிக்கும் புகை பட்டாலும் உடனே ஸ்னானம் செய்க.
நகரத்தில் செல்லும் போது, நெருக்கமான இடங்கள், கடைத்தெரு போன்ற இடங்களில் மற்றவர் மேலே படாமல் முடிந்த வரை - மாடு வாலை வீசும் தூரமாவது - ஒதுங்க வேண்டும்.

தேவதை உற்சவம் தரிசித்தபின்னும், மங்களமான காரியங்கள் செய்தபின்னும், பந்துக்கள்/ சினேகிதர்களை வழி அனுப்பிய பின்னும் ஸ்னானம் செய்யக்கூடாது. சாப்பிட்ட உடனோ பாதி ராத்திரியிலோ கூடாது.