Pages

Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Monday, May 29, 2017

கிறுக்கல்கள் - 214






"ஏன் எப்பவும் ப்ரார்த்தனையிலேயே இருக்கே?” என்று கேட்டார் மாஸ்டர்.
"ஏன்னா அது என் மனசிலேந்து பெரிய பாரத்தை இறக்கி வைக்குது!”
"ஹும்! அதுதான் வருத்தம். “
"என்ன வருத்தம் அதில?”
"யார் அந்த பாரத்தை உன் மேலே வெச்சாங்க என்கிறதை அது மறைக்குதே!”

Tuesday, August 18, 2015

கிறுக்கல்கள்! - 4


குரு சொன்னார்: நம் குறைகளை கண்டறிய நல்ல ஒரு வழி மற்றவர்களுக்கு நாம் எப்படி எரிச்சலூட்டுகிறோம் என்று பார்ப்பது.

வழக்கம் போல ஒரு கிறுக்கலான கதை சொன்னார்: ஒரு முறை என் மனைவி சமையலறையில் ஒரு சாக்லேட்  டப்பா வைத்திருந்தார். ஒரு மணி நேரம் சென்ற பின் அதை எடுத்த போது எடை குறைவாக இருந்தது. திறந்து பார்த்தால் சாக்லேட்டில் ஒரு வரிசையே காணோம்! அவை ஒரு பேப்பர் பேகில் ஒழுங்காக அடுக்கப்பட்டு புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்த சமையல்காரரின் பை மீது இருந்தன! இதை பெரிசு படுத்த வேண்டாம் என்று என் மனைவி அவற்றை எடுத்து மீண்டும் டப்பாவில் வைத்து ஆசையை தூண்டாமல் இருக்க கப்போர்டில் கண்ணுக்கு தெரியாமல் வைத்து விட்டார்.
சமையல் காரி அன்றிரவே வேலையை விட்டு விலகுவதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.
ஏன் என்று கேட்டேன்.
அவள் சொன்ன பதில்: என்னிடமிருந்து திருப்பித் திருடுபவர்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன்!

Monday, August 17, 2015

கிறுக்கல்கள்! - 3


அந்த குரு விமர்சனம் செய்யத்தேவை இருக்கும் போது செய்யாமல் இருக்க மாட்டார்.

ஆனால் ஆச்சரியம் என்ன என்றால் யாரும் அவருடைய கடிந்துரைகளால் புண் பட மாட்டார்கள்! இதைப்பற்றி அவரை கேட்ட போது சொன்னார்: “மனிதர்கள் மலர் போல. மெதுவாய் விழும் பனித்துளிக்கு திறந்திருக்கும்; கடுமையாக பெய்யும் மழைக்கு  மூடி இருக்கும்!”

Friday, August 14, 2015

கிறுக்கல்கள்! -2


புத்த மடாலயத்துக்கு புதுசா வந்த சிஷ்யரைப்பாத்து வயசான சிஷ்யர் சொன்னார்: தோ பாரு! உனக்கு சரியான  மனநிலை இல்லைன்னா குரு சொல்லறது ஒண்ணுமே புரியாது!

சரி, சரியான மனநிலை என்கிறது என்ன?

ஒரு புது மொழியை கத்துக்கிறா மாதிரி! அவரோட பேச்சை கேட்கிறப்ப எதோ பரிச்சயமானது மாதிரி இருக்கும். ஏமாறக்கூடாது. அர்த்தம் வேறயா இருக்கும்!

Thursday, August 13, 2015

கிறுக்கல்கள்! -1


அந்தோனி தெ மெல்லொ நினைவிருக்கா? யெஸ்! குட்டிக்கதைகள். புது சீரிஸ் ஆரம்பிக்கிறது.

குருவை பார்த்துவிட்டு திரும்பிய ஒத்தர் சொன்னார்: இவரு பேசறதெல்லாம் கிறுக்குத்தனமா இருக்கு!
சிஷ்யர் ஒத்தர் சொன்னார். ஆமாம்! வார்த்தைகளில விவரிக்க முடியாத ஒண்ணைப்பத்தி சொல்லப்பாத்தா நீங்க சொல்ல்றது கூட கிறுக்குத்தனமா இருக்கும்!