Pages

Saturday, April 9, 2022

ஶ்ராத்தம் - 48 நாந்தீ ஶ்ராத்தம்
 

ஏதேனும் ஒரு நிமித்தத்தை ஒட்டி செய்யப்படும் ஶ்ராத்தம் நைமித்திக ஶ்ராத்தம் ஆகும். ஸபிண்டீகரணம் வரை செய்யப்படும் ப்ரேத ஶ்ராத்தம், ஸங்க்ரமண ஶ்ராத்தம், க்ரஹண ஶ்ராத்தம், ஸோதகும்ப ஶ்ராத்தம், நாந்தீ ஶ்ராத்தம் - இவை நிமித்தம் ஒட்டிய நைமித்திக ஶ்ராத்தங்கள் ஆகும்.

நாந்தீ ஶ்ராத்தம்:

இது சுப காரியங்களை ஒட்டி செய்யப்படுவது. ஆகவே மங்கலமானது. பிள்ளை பிறந்த பின் செய்யப்படும் ஜாதகர்மா முதலான அனைத்து கர்மாக்களிலும் உண்டு. சௌளம், உபநயனம், விவாஹம்… சேர்த்து செய்யப்படும் பல சுப கர்மாக்களுக்கு ஒரு முறைதான் நாந்தீ செய்ய வேண்டும். முதலில் முந்தைய நாளில் மாத்ரு வர்க்கம், அடுத்து நிகழ்ச்சி அன்று பித்ரு வர்க்கம் மூன்றாவதாக மங்கல நிகழ்வுக்கு அடுத்த நாள் மாதாமஹ வர்க்கம் என்று 3 ஶ்ராத்தங்களாக செய்யச்சொல்லி இருக்கிறது. சரி சரி… முடியாவிட்டால் முந்தைய நாளிலேயே மூன்றும்.

மேலே போகலாம்.

ஶுப காரியங்களை ஒட்டிச்செய்வதால் பலதும் மாறும். இதன் முக்கிய காலம் காலை - ப்ராதஹ்காலம். பார்வண ரூபமாக செய்வதே நல்லது. இல்லை ஹிரண்யமாக செய்யலாம். அது இப்போது இல்லாமல் அரிசி வாழைக்காய் பணம் என்று தத்தம் செய்வதாக மாறிவிட்டது. இது ஆமம், அக்னியில்லாதவன், தேசாந்திரத்தில் இருப்பவன், ரஜஸ்வலாபதி  ஆகியோர் செய்யலாம். மற்றபடி ஆமம் அந்தணருக்கு உகந்ததல்ல. அதையே ஸ்யம்பாக அன்னம் ஸ தக்‌ஷிணாகம் ஸதாம்பூலம் என்று சொல்லி மாற்றி இருக்கிறார்கள். பராசரர் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் தான்யத்தை கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி கொடுப்பதானால் அன்னம் போல 4 மடங்கு கொடுக்க வேண்டும்

பார்வண விதானமாக செய்யப்படும் நாந்தி ஶ்ராத்தத்தில் விஶ்வேதேவர் சத்ய வஸூ என 2. பித்ரு வர்க்கம் 3. மாதா வர்க்கம் 3. ஸபத்னீக மாதாமஹ வர்க்கம் 3. (இவற்றில் 3 இல்லையானால் குறைந்தது 2) மஹா விஷ்ணு 2.

வரணம் முதல் எல்லா இடங்களிலும் கோத்ரம் நாமம் இல்லை. நாந்தீ முக பித்ரு என்ற ரீதியில் உறவை சொல்லியே வரணம் இத்தியாதி. எள்ளுக்கு வேலையே கிடையாது. எல்லாம் உபவீதியாகவே.

சிலர் இதில் தர்ப்பங்களை பயன்படுத்தாமல் அருகம்புல்லை பயன்படுத்துகின்றனர். ஆசனத்துக்கு மடிக்காத தர்ப்பைகள். எள்ளுக்கு பதில் யவை. அப்ரதஷிண பரிசேஷணம் இல்லை. ஸ்தாலீபாகம் போலவே ஹோமம். கோத்ரம் நாமம் இல்லை. நாந்தீ முக பித்ரு என்ற ரீதியில் எல்லாம் வரும். ஸ்வதா சப்தம் கூட வராது. அபிஶ்ரவணம் இல்லை.

பிண்டம் இலந்தம் பழம் தயிர் இவற்றை அன்னத்துடன் கலந்து. கிழக்கு நோக்கி அமர்ந்து கிழக்கு நுனி தர்ப்பங்களில் கையை மறிக்காமல்  வைக்கப்படும். பிண்ட பாத்திரங்களை கவிழ்ப்பது இல்லை.

24 பிண்டங்கள். வழக்கம் போல உருண்டை பிண்டமாக பிடிக்காமல் எடுத்து அப்படியே வைக்க வேண்டும்.

பார்வண ஶ்ராத்தம் போலவே 6. கூடுதலாக மாதாமஹ வர்க்கத்துக்கும் அப்படியே. 12 ஆயிற்று. ஒவ்வொரு பிண்டத்துக்கும் அருகில்  ‘யே சத்வாமனு’ என்று வைப்பது 12. ஆக 24.

Friday, April 8, 2022

ஶ்ராத்தம் - 47 தர்ஶ ஶ்ராத்தம்
 

தர்ச ஶ்ராத்தம் நித்ய கர்மா. செய்யாமல் இருக்கக்கூடாது. எள்-நீர் தர்ப்பணத்தை முதலில் செய்து பின் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். (மஹாளயத்தில் பின்பு; ப்ரத்யாப்திகம் எனப்படும் வருடந்திர ஶ்ராத்தத்தில் அடுத்த நாள் - பரேஹணிபார்வணமாக ஶ்ராத்தம் செய்ய முடியாவிட்டால் ஹிரண்யமாகவாவது செய்ய வேண்டும். அதற்கு பிராம்ஹணர்களை வரித்து உபசாரங்கள் செய்து உணவிட்டு தக்ஷிணை கொடுக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் கிடைக்காவிட்டால் கூர்ச்சம் போட்டு ஆவாஹனம் செய்து உபசரித்து உத்தேசித்த உணவை பசு மாட்டுக்கு கொடுத்துவிட்டு/ மண்ணில் புதைத்து விட்டு ஹிரண்யத்தை தத்தம் செய்து வைத்து பின்னால் கொடுத்துக்கொள்ளலாம். நடைமுறையில் உபசரித்து ஹிரண்யம் மட்டும் கொடுப்பது என்று சிலர் செய்கிறார்கள். ஆனால் பித்ருக்களை உத்தேசித்து எள்ளும் நீரும் இறைத்தால் பலன் உண்டு என்ற ரீதியில் தர்ப்பணம் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. இதற்கும் மெனக்கெடாமல் விட்டுவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதை செய்யாவிடில் 14 ஜென்மங்களுக்கு பாபி ஆகி மிகவும் தாழ்வான நிலையில் பிறப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் அவசியம் செய்ய வேண்டும். ஒருவேளை முன்னோர்களில் யாரும் சன்னியாசி ஆகி ஜீவன்முக்தி நிலையை அடைந்து மோக்ஷத்தையே அடைந்திருந்தாலும் அவர்களுடைய சந்ததிகள் ‘பிரம்மீ பூத’ என்று முன்னே சொல்லி அவருடைய க்ருஹஸ்த ஆஸ்ரம பெயரை சொல்லி தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம். அவ்வாறு செய்யாவிடில் பாபம் உண்டு.

மோட்சத்தை அடையாமல் புண்ணிய பாவங்களுக்கு தகுந்தபடி பிறவி எடுத்து இருக்கும் முன்னோர்களுக்கு அவர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்தபடி இந்த அன்னமோ எள்ளும் ஜலமுமோ ஆகாரமாக ஆகிறது

இந்த ஶ்ராத்தம் பித்ருக்களையும் மாதாமஹர்களையும் உத்தேசித்து செய்யப்படுவது. இரு வர்க்கத்துக்கும் பேதமில்லாமல் செய்ய வேண்டும். (சிலர் மாதாமஹர்களை விட்டுவிடுகிறார்கள். அல்லது மந்திரம் சொல்லாமல் செய்கிறார்கள். இது தவறு)

பார்வணத்தில் முதலில் தர்ப்பணம், பின் ஶ்ராத்தமானாலும் ஹிரண்ய ரூபத்தில் முதலில் ஶ்ராத்தம், பின் தர்ப்பணம்.

தர்ஶ ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேன கரிஷ்யே என்று ஸங்கல்பம்

வி.தேவர், வர்கத்வய பித்ரூன், விஷ்ணு என்று மூன்று கூர்ச்சங்களை வைத்து ஶ்ராத்தத்தில் எப்படி (தகுந்தபடி அக்‌ஷதை/ எள் கொண்டுஉபசாரங்கள் செய்வோமோ அப்படி செய்து (அல்லது ஸகலாராதனை ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி) அஸ்மின் ஹிரண்ய ஶ்ராத்தே கிஞ்சித் ஹிரண்யம் ச தக்‌ஷிணாகம் ச தாம்பூலம் … (வி,தே, வர்கத்வய பித்ரே விஷ்ணவே) இதன் நமம என்று சொல்லி சமர்ப்பணம். இவ்வளவு தக்‌ஷிணை என்றூ எங்கும் சொல்லப்படவில்லையாதலால் இயன்ற படி செய்யலாம். ஏற்கெனெவே வாத்தியாருக்கு கொடுத்துக்கொண்டு இருந்ததையே பகுதி பகுதியாக வைத்துவிடலாம்.

பின் உத்வாஸனம். ஆவாஹனம் செய்தவர்களை வழி அனுப்புவது

பின் ஶ்ராத்தாங்க தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்து  மந்திரம் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மீதி இது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த தர்ப்பணத்தில் தெற்கு நுனியாக கூர்ச்சம்/ தர்ப்பக்கட்டு (ஒற்றைப்படையாக 7 முதல் 15) போட்டு வர்க த்வய பித்ருக்களை ஆவாஹனம் செய்து ஆசனம் அளித்து ஆராதனை செய்து பின் தர்ப்பணம்.

எள்ளை எடுக்கும் போது ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்த்து எடுக்கக்கூடாது. அது அசுர முத்திரை. தேவ காரியங்களிலும் அகங்காரத்தின் அடையாளம் என்று சொல்லி ஆள்காட்டி விரலை தவிர்ப்பர்

சுலபமாக நீர் பாத்திரத்தில் எள் சேர்த்து அதை உத்தரணியால் எடுத்து தர்ப்பிக்கலாம். அப்படி செய்தால் ஆசமனாதிகளுக்கு அதை கொட்டிவிட்டு சுத்தம் செய்து வேறு ஜலம் எடுக்க வேண்டும். அல்லது வலது கையின் ஈரமான மோதிர விரலால் (அல்லது கட்டை விரலால்) எள்ளை தொட்டுக்கொண்டு உள்ளங்கையில் ஜலம் எடுத்து அதில் விரலை விட எள் சேர்ந்துவிடும்

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஜன்ம நக்‌ஷத்திரத்தில் செய்யும் தர்ப்பணத்தில் அரிசி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். சாஸ்திரம் வாக்கியம் எங்கும் காணவில்லை.

எல்லாம் முடித்து இதன் சாத்குண்யமாக (அதில் ஏற்பட்ட பாபங்களை விலக்க) ஏதேனும் ஒரு ப்ராம்ஹணனுக்கு தக்ஷிணை தர வேண்டும்

பவித்ரம் வாங்கிக்கொள்வது, ஸங்கல்பம், காயே ந வாசா ஆகியவற்றுக்கு அக்ஷதை உண்டு. வழக்கமாக எல்லோரும் செய்வதில் இங்கே கூர்ச்சம் ஆராதனை மட்டுமே அதிகம். பழகாமல் 10 நிமிடம் பழகிவிட்டால் 5 நிமிடம் கூடுதலாக ஆகும். ஆனால் சரியாக செய்ததாகும்.


Thursday, April 7, 2022

ஶ்ராத்தம் - 46 -ஷண்ணவதி ஶ்ராத்தம்
ஷண்ணவதி ஶ்ராத்தங்கள்:

96 நாட்கள் ஶ்ராத்தத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.  

இது சாஸ்திரத்தில் சொன்ன கணக்கு அல்ல. 96 என்பதும் வருடா வருடம் கூடும் குறையும்

வருட பிறப்பு -1

அயன பிறப்பு (தக்ஷிணாயனம், உத்தராயணம்) -2

ஸௌர மாத பிறப்பு -12

அமாவாசை -12

மன்வாதி 14

யுகாதிகள் 4

பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்டகா. 12

( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )

மஹாலய பக்ஷம் 15

வ்யதீபாதம் 12

வைத்ருதி 12

வ்யதீபாதம் என்பது என்ன? அமாவாசையுடன் ஸ்ரவணம், அஶ்வினீ, அவிட்டம், திருவாதிரை, ஆயில்யம், ம்ருகசீர்ஷம் ஆகிய நக்‌ஷத்திரங்களோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ  சேர்ந்தால் அது வ்யதீபாதமாகும்

அஷ்டகா ஶ்ராத்தத்தில் மாதாமஹ வர்க்கம் கிடையாது.

இவற்றில் இரண்டு ஒரே நாளில் வரும் வாய்ப்புகள் அதிகம். 360 நாட்களில் 96 என்றால் தோராயமாக 4 நாட்களுக்கு ஒரு முறை….

இவை அனைத்தையும் ஶ்ராத்தமாக செய்வோர் இக்காலத்தில் யாருமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் அந்த மஹானை அவசியம் தரிசித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.

96 ஐயும் தர்ப்பணமாக செய்கிறேன் என்கிறார்கள் சிலர். எள்ளும் நீரும் இறைத்தால் அதற்கு பலன் நிச்சயம் உண்டு என்பதைத்தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்படி செய்ய சாஸ்திரத்தில் சொல்லவில்லை.

ஆனால் இவற்றை ஹிரண்ய ரூபமாக செய்ய வாய்ப்புண்டு.

அதற்கு: ப்ராம்ஹணர் கிடைக்காவிட்டால் கூர்ச்சம் போட்டு விஶ்வேதேவர், பித்ருக்கள், விஷ்ணு காருண்ய பித்ரு உண்டு என்றால் அவர்கள் என வரித்து இயன்ற படியோ குறைந்தது அக்‌ஷதை எள்ளாலோ ஆராதனை செய்து ஹிரண்யம் தத்தம் செய்து; ஶ்ராத்த அங்கமாக தில தர்ப்பணம் செய்ய வேண்டியது. காருண்ய பித்ருக்கள் அந்த ஶ்ராத்தத்தில் உண்டென்றால் அவர்களுக்கும் ஆவாஹணம் தர்ப்பணம் உண்டு.

ஹிரண்யமாக செய்யப்புகுந்தால் ஒரே நாளில் இரண்டு வந்தால் என்ன செய்வது என்றால்…

அதைப்பற்றி பஞ்சாயத்து நடக்கிறது. ஒரு பக்கம் ஒரே நாளில் இரண்டு ஶ்ராத்தம் கிடையாது என்கிறார்கள். இன்னொரு பக்கம் எல்லாமே செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் எதை முன்னால் செய்வது என்றால் தர்ச ஶ்ராத்தமே.

Tuesday, April 5, 2022

ஶ்ராத்தம் - 45 - ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்
 

ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்:

வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார்அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 

  1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க முடியவில்லையானால் பத்னி இல்லாதவன், யாத்ரிகன், ரஜஸ்வலா பதி (அன்றைக்கு பத்னி வீட்டுவிலக்காக இருந்தால்) ஆம ஶ்ராத்தத்தை அந்தணர் செய்யலாம். அந்தணர் அல்லாதோருக்கு எப்போதுமே ஆம ஶ்ராத்தத்தில் அதிகாரம் உள்ளது. மாஸிகம், ப்ரத்யாப்திகம் ஆகியவற்றை ஆமமாக செய்யலாகாது. அக்னியை விட்டவனாக உள்ள வரை ஆமமாக செய்க. ஹோமத்தை வரிக்கப்பட்ட ப்ராஹ்மணன் கையில் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களுக்கு எதை கொடுக்க முடிகிறதோ அந்த அன்னத்தையே/ பக்குவம் செய்யப்படாததையே பிண்டமாக கொடுக்க வேண்டும். மற்றவை பார்வணம் போலவே.

  1. ஹிரண்ய ஶ்ராத்தம்: ஆமமாக முடியாவிடில் இதை செய்க.

ஆமத்துக்கான காரணங்கள் இங்கேயும் பொருந்தும். கூடுதலாக ப்ராம்ஹணர் கிடைக்காவிட்டாலும் புத்ர ஜனனத்திலும் இப்படி செய்யலாம். கூடிய மட்டில் மற்ற விசேஷங்களையும் அனுஷ்டிக்க வேன்டும்.

இதெல்லாமும் முடியாத பக்‌ஷத்தில் பசுவுக்கு புல்லையாவது கொடு. ஸ்நாநம் செய்து எள் ஜலத்தால் தர்ப்பணமாவது செய். நெருப்பினால் காய்ந்த புதரை எரிக்கவாவது செய். உபவாஸம் இருந்து ஶ்ராத்த மந்திரங்களையாவது ஜபி. ஏன் முடியவில்லை என்பதை பொருத்து ஶ்ராத்தம் செய்த பலன் கிடைக்கும்.