Pages

Showing posts with label யக்ஷப்ப்ரச்னம். Show all posts
Showing posts with label யக்ஷப்ப்ரச்னம். Show all posts

Tuesday, May 21, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 14

 
121. கே: எவன் ஜீவித்திருப்பவனாக கருதப்படுவான்?
புண்ணிய கர்மாக்களை செய்வதால் ஒருவனுடைய புகழ் பூமியிலும் தேவ லோகத்திலும் வியாபிக்கின்றது. எவ்வளவு நாள் வரை ஒருவனுடைய புகழ் நிலைத்திருக்கின்றதோ அவ்வளவு நாள் வரை அவன் ஜீவித்து இருப்பதாக கருதப்படுகிறான். அவனே புருஷன் என்றும் கூறப்படுவான்.

122. கே: எல்லாப்பொருள்களையும் பெற்று எல்லாக் காமங்களையும் அடைந்தவன் எவன்?
: ப்ரும்ஹ சாக்ஷாத்காரம் செய்தவனே எல்லாப்பொருள்களையும் பெற்று எல்லாக் காமங்களையும் அனுபவிப்பவன் ஆவான். அவன் சுகம் துக்கம், பிரியம், அப்பிரியம், சென்றது வரப்போவது, எல்லாவற்றையும் சமமாக கருதுவான்.

இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான பதிலை உரைத்த தருமபுத்திரரை மெச்சி, இவனுக்கு தர்மத்தின் அறிவு பூரணமாக இருக்கின்றது; தர்மத்தில் இவன் சொந்த நிலை எவ்வாறு இருக்கிறது என்று பரீக்ஷிக்க வேண்டும் எனக்கருதி , “ இங்கு இறந்து கிடக்கும் உன் சகோதரர் நால்வருள் நீ யாரை விரும்புகிறாயோ, அவன் இப்போது பிழைப்பான். யாரை நீ விரும்புகிறாய்? என அந்த யக்ஷன் தர்மபுத்திரரை நோக்கி வினவினான்.
தருமன் : இதோ கருத்த உடலுடனும், சிவந்த கண்களுடனும், விரிந்த மார்புடனும், நீண்ட கைகளுடனும் கிடக்கிறானோ அந்த நகுலன் பிழைத்தெழுந்திருக்கட்டும்.
யக்ஷன் : பதினாயிரம் யானை பலமுள்ள பீமனையும் நிகரற்ற வில்லாளியுமான அர்ஜுனனையும் விட்டு உன் சிறிய தாயின் மகனான நகுலன் பிழைக்கட்டும் என்று நீ கூறுவதன் காரணம் யாது?
தருமன் : மற்ற எல்லா தருமங்களையும்விட தயையுடன் அனைவரையும் சமமாக பாவித்தல் என்பதே சிறந்த தர்மமாகும். தர்மத்தை நாம் அழித்தால் அதாவது சரியாக அனுஷ்டிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும். தர்மத்தை நாம் இரக்ஷித்தால் அது நம்மை கட்டாயம் இரக்ஷிக்கும். ஆதலால் தர்மத்தை நான் ஒரு பொழுதும் கைவிடுவதில்லை. ஆதலால் என் தாயாராகிய குந்தியின் பிள்ளைகளுள் நான் ஒருவன் பிழைத்திருக்கிறேன். மாத்ரியின் பிள்ளைகளுள் ஒருவன் பிழைத்தால் குந்தீ -மாத்ரீ இருவரும் பிள்ளைகள் உள்ளவர்களாக ஆவர். நான் குந்தீ -மாத்ரீ இருவரையும் சமமாக பாவிப்பவன். ஒருவளுடைய பிள்ளை மட்டும் பிழைத்திருந்து மற்றவளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்க நான் சகிக்கமாட்டேன்.
யக்ஷன் : இவ்வாறு உன் மனம் தர்மநெறி தவறாமல் இருப்பதைக்கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆதலால் உன் சகோதரர்கள் அனைவருமே பிழைத்து எழுந்திருக்கட்டும்.

உடனே பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்ற நால்வரும் தூக்கத்தில் இருந்து விழித்தெழுவதைப்போல எழுந்திருந்து பசி தாகம் அற்றவர்களாக முகமலர்ச்சியுடன் காக்ஷியளித்தனர்.

நிறைவுற்றது.

Monday, May 20, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 13


111. கே: எப்பொழுதும் ஒருவன் நரகத்திலேயே வசிக்கும்படி நேருவதற்குக் காரணம் யாது?
: 1. யாசிக்கும் ஒரு ஏழை ப்ராம்ஹணனை, ஏதோ தருவதாக அழைத்து பிறகு இல்லை என்று எவன் கூறுகின்றானோ அவன் எப்பொழுதும் நரகத்திலேயே வசிப்பான்.
2.வேதங்கள் தர்ம சாஸ்திரங்கள் இவற்றை அறிந்த அந்தணர்கள், தேவதைகள், பித்ருக்கள் இவற்றைக்குறித்த சிராத்தம் முதலியவற்றை எல்லாம் " எல்லாம் பொய், ஒன்றுமே உண்மையல்ல" என்று எவன் கூறுகின்றானோ அவன் எப்பொழுதும் நரகத்திலேயே வசிப்பான்.
3.ஏராள்மான பொருள் இருக்கையிலே, தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் எவன் எப்பொழுதும் இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கிறானோ அவன் எப்பொழுதும் நரகத்திலேயே வசிப்பான்.

112. கே: ப்ராஹ்மண்யம் எதனால் சித்திக்கிறது? உயர்ந்த குலத்தில் பிறந்ததாலா? ஒழுக்கத்தாலா? வேதாத்யயனத்தாலா? வேதார்த்தத்தை உணர்ந்ததாலா? பல அறிஞர்களால் தீர்மானம் செய்யப்பட்ட பதிலை கூறுங்கள் பார்க்கலாம்!
: குலத்தாலோ, அத்யயனதாலோ, அல்லது அதன் பொருளை உணர்ந்ததாலோ ப்ராஹ்மண்யம் சித்திப்பதில்லை. நல்லொழுக்கத்தால்தான் ப்ராஹ்மண்யம் சித்திக்கிறது. இதில் ஐயமில்லை. ஆதலால் ப்ராஹ்மணனாக பிறந்தவன் நல்லொழுக்கத்துடன் வாழ பூர்ண முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணனாக பிறந்து ஒழுக்கமற்றவனாக இருந்தால் அவன் அழிந்தவன் என்றே கருதப்பட வேண்டும். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டதை அனுஷ்டிப்பவனே பண்டிதன். அனுஷ்டானமில்லாமல் ஏராளமாக படிப்பவர்களும் பிறருக்கு கற்பிக்கிறவர்களும், சாஸ்த்ர விமர்சனம் செய்பவர்களும் மூடர்கள்; வீணாக கஷ்டப்படுகிறவர்கள் என்றே கருதப்பட வேண்டும். நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்தவனாகிலும் கெட்ட ஒழுக்கமுடையவனாகில் அவன் நீசன் என்றும் அடக்க ஒடுக்கத்துடன் அனுஷ்டான சீலனாக இருப்பவனே சிறந்த ப்ராஹ்மணன் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

113. கே: பிரியமான வார்த்தைகளையே பேசுகின்றவன் எதை அடைகிறான்?
: அனைவருடைய அன்பை பெறுகிறான்.

114.கே :ஆலோசித்து காரியங்களை செய்பவன் எதை அடைகிறான்?
: எடுத்த காரியங்களில் அதிகமான வெற்றியைப் பெறுகிறான்.

115. கே: பல நண்பர்களை உடையவன் எதை அடைகிறான்?
: சுகமான வாழ்க்கையை நடத்துகிறான்.

116. கே: தர்மத்தில் ஈடுபட்டவன் எதை அடைகிறான்?
: தர்மத்தில் ஈடுபட்டவன் நற்கதியை அடைகிறான்.

117. கே : எவன் சந்தோஷத்துடன் வாழ்கிறான்?
: 5 அல்லது 6 நாட்களுக்கு ஒரு முறை அல்லது பகலை ஆறாகப்பிரித்து ஐந்தாம் பாகத்திலோ அல்லது ஆறாம் பாகத்திலோ தன் சொந்தமான க்ருஹத்தில் சாதாரண காய்கறிகளை சமைத்துப் புசிப்பவனும், கடனில்லாதவனும், தன் வீடு வாசல், பிள்ளை, குட்டி, அனைவரையும் விட்டுவிட்டு வேறு தேசத்துக்கு சென்று வசிக்காமல் இருப்பவனுமே சுகமாக வாழ்பவனாக கருதப்பட வேண்டும்.

118. கே: உலகில் எது ஆச்சரியம்?
: பிரதி தினம் பல பிராணிகள் யம லோகத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை பார்த்துக்கொண்டெ இருக்கும் மற்றவர்கள் தாம் மட்டும் அழிவற்றவர்களாகவே இருக்க விரும்புகின்றனர். இதை விட வேறு ஆச்சரியம் என்ன இருக்கிறது?

119.கே: நம் செல்ல வேண்டிய மார்க்கம் எது?
: தர்மத்தின் தத்துவம் குஹைக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அது எளிதில் புலப்படுவதில்லை. “ இது தர்மம், இது அதர்மம்" என்று நாம் நம் புத்தியால் ஊகிக்க முடியாது. ஏனெனில் நம் ஊகம் நிலையற்றது. நாம் ஒருவாறு ஊகித்தால் வேறு சில மேதாவிகள் வேறு விதமாக ஊகிக்கலாம். வேதங்களும் பலவிதமாக காணப்படுகின்றன. ரிஷிகளும் பலர் பல விதமாக கூறியிருக்கின்றனர். ஆதலால் அறிஞர்கள் எந்த மார்க்கமாக செல்கின்றார்களோ அதுவே நாம் செல்ல வேண்டிய சிறந்த மார்க்கம்.

120. உலகில் பிரதி தினம் நடைபெறும் செய்தி என்ன?
: காலன் என்ற புருஷன், அறியாமை என்ற பாத்திரத்தில், இரவு பகல் என்ற விறகில், சூரியன் என்ற நெருப்பை வைத்து எரியவிட்டு, மாசம், ருது என்ற கரண்டியால் பிறட்டி பிறட்டிப்போட்டு எல்லாப்பிராணிகளையும் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறான் என்பதே உலகில் பிரதி தினம் நடைபெறும் செய்தி.

Saturday, May 18, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 12

 
101. கே: பண்டிதன் என்பவன் யார்?
: தர்மத்தை அறிந்தவனே பண்டிதன்.

102. கே: “நாஸ்திகன் " என்பவன் யார்?
: 'பர லோகமில்லை' என்று கூறும் மூடனே நாஸ்திகன்.

103. கே: "மூர்க்கன்" எனப்படுபவன் யார்?
: நாஸ்திகனே மூர்க்கன் எனப்படுபவன்.

104. கே: காமம் என்றாலென்ன?
: ஸம்சாரத்துக்கு காரணமான வாசனைகளே காமம் எனப்படும்.

105. கே: “மத்ஸரம்" என்றால் எது?
: மனதில் ஏற்படும் தாபங்களே மத்ஸரம் எனப்படும்.

106. கே: “அஹங்காரம்" என்றாலென்ன?
: கொடிய அஞ்ஞானமே அஹங்காரம் எனப்படும்.

107. கே: “தம்பம்" என்பது யாது?
: தர்மத்தை அனுஷ்டிப்பதாக உலகத்தாரிடம் விளம்பரம் செய்தல்.

108. கே: "தெய்வம்" என்பது யாது?
: ஒருவன் செய்த தானத்தின் பலனே 'தெய்வம்' என வழங்கப்படுகிறது.

109. கே: "பைசூன்யம்" என்றாலென்ன?
: பிறரை தூஷித்தல்.

110. கே: தர்மம், அர்த்தம், காமம் இம்மூன்றும் பரஸ்பரம் முரண்பட்டவை அல்லவா? இவை மூன்றும் ஓரிடத்தில் எவ்வாறு சேர்ந்திருத்தல் கூடும்?
: தர்மமும் பார்யையும் பரஸ்பரம் விரோதமில்லாது இருக்க வேண்டும். அதாவது பார்யை தர்மத்துக்கு அனுகூலமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தர்மத்தில் இருந்து அர்த்தமும் பார்யையிடமிருந்து காமமும் உண்டாகும். ஆக அனுகூலமான பார்யையை அடைந்து தர்மத்தை அனுஷ்டித்து வந்தால் "த்ரிவர்க்கம்" எனப்படும் தர்மம், அர்த்தம், காமம் இம்மூன்றும் சித்திக்கும். அதன் மூலம் க்ருஹஸ்தனுக்கும் மோக்ஷத்தில் அதிகாரம் ஏற்படுகிறது.

Friday, May 17, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 11

 
91. கே: ஸாது எனக்குறிப்பிடக்கூடியவன் யார்?
: எல்லாப்பிராணிகளுக்கும் நன்மை செய்பவன்.

92. கே: அஸாது எனக்குறிப்பிடக்கூடியவன் யார்?
:தயை என்ற குணமற்றவன்.

93. கே: மோஹம் என்றாலென்ன?
: தர்மத்தில் அறிவில்லாமை.

94. கே:மானம் என்றால் எது?
: தானே பெரியவன் என்ற அஹங்காரத்துடன் இருத்தல்.

95. கே: “ஆலஸ்யம்" (சோம்பல்) என்று எதை கருத வேண்டும்?
: தர்மத்தை அனுஷ்டிக்காமல் இருத்தலே சோம்பலாம்.

96. கே: சோகம் என்பதென்ன?
: அறியாமையே சோகம்.

97. கே: “ஸ்தைர்யம்" (உறுதி) என்பதென்ன?
: சொந்த தர்ம அனுஷ்டானத்தில் இருப்பதே ஸ்தைர்யம்.

98. கே: “தைர்யம்" என்றாலென்ன?
: இந்திரியங்களை அதனதன் விஷ்யங்களில் இருந்து திருப்புதலே தைர்யம்.

99. கே: “ஸ்நாநம்" என்றாலென்ன?
: மனதில் உள்ள அழுக்குகளை -காமம் குரோதம் ம்தலியவற்றை த்யாகம் செய்தலே ஸ்நாநம் ஆகும்.

100. கே: தானம் என்றாலென்ன?
: பூதங்களை ரக்ஷித்தலே தானம்.

Thursday, May 16, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 10

 
81. கே: தவத்தின் இலக்ஷணம் என்ன?
:அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை விடாமல் அனுஷ்டிப்பதே தவமாம்.

82. கே: தமம் என்பதென்ன?
: மனம் போன படியெல்லாம் விடாது அடக்குவதே தமமாம்.

83. கே: க்ஷமா என்றால் என்ன?
: " த்வந்தவம்" [இருமை] எனக்கூறப்படும் பசி, தாகம், ராகம், த்வேஷம் முதலியவற்றை பொறுத்துக்கொள்ளுதலே க்ஷமா எனப்படும்.

84. கே:ஹ்ரீ: என்றால் என்ன?
: கெட்டக்காரியங்களை செய்ய வெட்கப்பட்டு அவற்றை செய்யாமல் இருத்தலே ஹ்ரீ: எனப்படும்.

85. கே: ஞானம் என்றாலென்ன?
:உண்மையான பொருளை அறிந்து கொள்ளுதலே ஞானம்.

86. கே: சமம் என்றாலென்ன?
: மனம் அடங்கி இருத்தலே சமமாம்.

87. கே: தயை என்றாலென்ன?
: அனைவரும் சுகமாக வாழவேண்டும் என விரும்புதல்.

88. கே: ஆர்ஜவம் என்றாலென்ன?
: அனைவரிடமும் சமமான எண்ணத்துடன் கூடியிருத்தல்.

89. கே: ஜெயிக்க முடியாத விரோதி யார்?
: கோபம்.

90. கே: தீராத வியாதி எது?
: பேராசை.

Wednesday, May 15, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 9

 

74. கே: எந்த சிராத்தம் நஷ்டமானதாக கருதப்படும்
: அத்யயனம் செய்த ப்ராம்ஹணன் இல்லாத சிராத்தம் நஷ்டமானதாக கருதப்படும். [எந்த சிராத்தத்தில் அத்யயனம் செய்த ப்ராம்ஹணன் வரிக்கப்படவில்லையோ அந்த சிராத்தம் நஷ்டமாம்.]

75. கே: எந்த யாகம் பயனற்றது?
: எதில் வேதத்தில் கூறியபடி தக்ஷிணை கொடுக்கப்படவில்லையோ அந்த யாகம் பயனற்றது'
லோபத்தை ஒழிக்காத மனிதன் இறந்தவனுக்கு சமம் என்று 72 ஆம் கேள்விக்கு சொல்லப்பட்டது. 73-75 வது கேள்விகளும் பதில்களும் அதை ஒட்டியவையே.

76. கே: திக் என்றால் எது? [அதாவது உபதேசம் செய்யக்கூடியவர் யாவர்?]
: வேதங்களை நன்கு கற்று அறிந்தவர்.

77. கே: ஜீவனுடைய ஸ்வரூபம் எது?
: ப்ருஹ்ம ஸ்வரூபமே ஜீவனின் ஸ்வரூபம்.

78. கே: எது அன்னம்?
.கே: எது அன்னத்தை உண்டு கரைப்பதைப்போல கரைக்கப்பட வேண்டியது?
: இந்திரியங்களும் அவற்றால் அறியப்படும் இப்பிரபஞ்சமும்.
.: இவை மித்யை என்று அறிந்து இவற்றை தள்ளிவிட வேண்டும்.

79. கே: எது விஷம்?
: காமமே விஷம்.
.: ஜனனம் மரணம் ஆகிய சம்சாரத்தை தருவதால் காமமே விஷம்.

76-79 காமத்தை ஒழித்து குரு உபதேசத்தால் பிரபஞ்சம் மித்யை என உணர்ந்து அதைத்தள்ளிவிட்டு ஜீவ பிரும்ஹ ஐக்கியத்தை அறிய வேண்டும் என்பது கருத்து.

80. கே: சிராத்தத்துக்கு காலம் எது?
: நல்ல பிராம்ஹணன் கிடைக்கும் காலமே சிராத்தத்துக்கு காலம்.
.: ஸத் பாத்திரம் கிடைக்கும் பொழுதே தானம் முதலியவற்றை செய்துவிட வேண்டும். நல்ல ஆசார்யன் கிடைக்கும் பொழுதே தத்துவத்தை அவரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும்.

Tuesday, May 14, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 8

 
61 .கே: எதை விட்டால் வருந்தாமல் இருக்கலாம்?
: கோபத்தை விட்டால் வருந்தாமல் இருக்கலாம்.

62. கே: எதை விட்டால் பணக்காரன் ஆகலாம்?
: காமத்தை விட்டால் பணக்காரன் ஆகலாம்.

63. கே: எதை ஒழித்தால் சுகத்தை அடையலாம்?
: லோபத்தை எதை ஒழித்தால் சுகத்தை அடையலாம்.
காமம் என்பது பொருள் இன்னும் வேண்டும் என்ற ஆசை. லோபம் என்பது கிடைத்த பொருளை எக்காரணம் கொண்டும் செலவு செய்ய மனமில்லாமை.

64. கே: ப்ராம்ஹணனுக்கு தானம் செய்தால் அதனால் உண்டாகும் பயன் யாது?
: தர்மம்.

65. கே: நடிகர்களுக்கு செய்யப்படும் தானத்துக்கு பயன் யாது?
: புகழ்.

66. கே: சேவகர்களுக்கு தானம் செய்வது எதற்காக?
: அவர்களை ரக்ஷிப்பதற்காக.

67. கே: அரசர்களுக்கு தானம் செய்வது (வரி கொடுப்பது) எதற்காக?
: பயமில்லாமல் இருக்க.
வரி கொடுக்காது போனால் தண்டனை கிடைக்குமே என்ற பயம் ஏற்படுவதால்.

68. கே: ஆத்ம ஸ்வரூபம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது?
: அஞ்ஞானத்தாலும் அதனால் தோன்றும் பிரபஞ்சத்தாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.

69. கே:சுஷுப்தி காலத்தில் ஆத்மா ஏன் பிரகாசிப்பதில்லை?
:அப்போது அஞ்ஞான காரியமான பிரபஞ்சம் தோன்றாது போனாலும் அஞ்ஞானம் அழியாமலே இருக்கிற படியால் ஆத்ம ஸ்வரூபம் பிரகாசிப்பதில்லை.

70. கே: சினேகிதர்களை எதனால் இழக்கிறான்?
: பேராசையால்.

Monday, May 13, 2013

யக்ஷப்ப்ரச்னம் -7



51.கே: மனிதனால் முக்கியமாக ஆஶ்ரயிக்கப்பட வேண்டியது எது?
: தானம்.
44 – 47 விடா முயற்சி, உண்மை பேசுதல், நல்லொழுக்கம், தானம் இவற்றை அவசியம் பின் பற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. அவற்றுள் தானமே பிள்ளை போல் ஆத்மா என்றும், மனைவி போல் உற்ற துணைவன் என்றும், மழை போல் வாழ்விற்கு சாதனம் என்றும் கருதப்படுகின்ற படியால் அதை அவசியம் செய்ய வேண்டும் என்று 48 – 51 வரை கூறப்பட்டது.

52. கே: தனத்தை சம்பாதிக்க பல சாதனங்களுள் சிறந்தது எது?
: விடா முயற்சி.

53. கே: பொருள்களுள் சிறந்தது யாது?
: அறிஞர்களிடமிருந்து சாஸ்திரங்களின் கருத்தை கேட்டு அறிதல்.

54. கே: லாபங்களுள் உயர்ந்தது எது?
: ஆரோக்கியம்.

55. கே: சுகங்களுக்குள் சிறந்தது யாது?
: திருப்தியுடன் இருத்தல்.

56. கே: சிறந்த தர்மம் எது?
: யாருக்கும் பயத்தை உண்டு பண்ணாமல் அனைவரிடமும் தயையுடனிருத்தல்.

57 .கே: எந்த தர்மம் அழிவற்ற பயனைத் தரக்கூடியது?
: வேதத்தில் உரைக்கப்பட்ட தர்மம்.

58. கே: எதை அடக்கினால் துன்பத்தை அடையாமல் இருக்கலாம்?
:மனதை அடக்கினால் துன்பத்தை அடையாமல் இருக்கலாம்.

59. கே: யாருடைய சினேகம் பயனுள்ளது?
: சாதுக்களுடைய சினேகம் பயனுள்ளது.

60. கே: எதை விட்டால் அனைவருக்கும் வேண்டியவனாக இருக்கலாம்?
:கர்வத்தை விட்டால் அனைவருக்கும் வேண்டியவனாக இருக்கலாம்.
 

Sunday, May 12, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 6



41. கே: எவன் அடிக்கடி பிறக்கின்றான்?
: சந்திரன்.
.கே: ஒன்றாக உள்ள ஆத்ம ஸ்வரூபத்தில் ப்ரபஞ்சம் எவ்வாறு பிறக்கிறது?
.: மனதினால். மனதுக்கு அதிஷ்டான தேவதை சந்திரன். ஆதலால் சந்திரன் அடிக்கடி பிறக்கின்றான் என்ற பதிலிலிருந்து பிரபஞ்சம் மனதினால் கற்பிக்கப்பட்டு தோன்றுகிறது அல்லாமல் உண்மையில் இல்லை என்று கொள்ள வேண்டும்.

42. கே: பனிக்கு மருந்து எது?
:நெருப்பு.
.கே: பனி போல் ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு இருக்கும் அவித்தையை நிவிருத்தி செய்யக்கூடியது எது?
.: தத்வமஸி முதலிய வாக்கியத்திலிருந்து உண்டாகும் ஞானம். இங்கு பனி என்பது அவித்தை என்றும், அக்னி என்பது அக்னியை அதிஷ்டான தேவதையாக கொண்ட வாக் என்றும் கொள்ள வேண்டும்.

43. கே: மிகப்பெரிய ஆதாரமான வஸ்து எது?
: பூமி
.: அஞ்ஞானம், அதனால் விளையும் பலவித சுகதுக்கங்கள், ஞானம் அத்னால் உண்டாகும் மோக்ஷம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது இந்த உடல். நமது உடலில் பூமியின் அம்சமே அதிகமானதால் பூமி என்றே அது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

44. கே: தர்மத்தை அனுஷ்டிக்க சிறந்த ஸாதனம் யாது?
: விடா முயற்சி.

45.கே: புகழைப்பெற சிறந்த ஸாதனம் யாது?
: கொடை

46. கே: ஸுவர்க்கத்தை அடைய சிறந்த ஸாதனம் யாது?
: உண்மை பேசுதல்

47.கே: சுகத்தை அடைய சிறந்த ஸாதனம் யாது?
: நல்லொழுக்கம்.

48. கே: மனிதனுடைய ஆத்மா எனக்கூறக்கூடியவன் எவன்?
: மகன்.

49. கே: தெய்வத்தால் அளிக்கப்பட்ட துணை யார்?
: மனைவி.

50. கே: மனித வாழ்வுக்கு ஸாதனம் எது?

: மழை
 

Saturday, May 11, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 5



31. கே: வேகத்தால் விருத்தி அடைவது எது?
: நதீ.

32. கே: வேறு தேசத்துக்குச் செல்லுகிறவனுக்கு துணைவர் யார்?
: தன்னுடன் கூட வரும் கூட்டத்தினரே துணைவர்களாம்.

33. கே:வீட்டில் இருக்கின்றவனுக்கு உதவி புரிகின்றவர் யார்?
: மனைவி.

34.கே: வியாதியால் பீடிக்கப்பட்டவனுக்கு துணைவன் யார்?
: வைத்தியன்.

35. கே: இறக்கின்றவனுக்கு எது துணை புரிகின்றது?
: தானம்.

36. கே: அனைவருக்கும் அதிதி யார்?
: ஆஹவனீயம் முதலிய அக்னி. (அனைவரும் அக்னி உபாசனம் செய்ய வேண்டும் என்பது கருத்து.)

37. கே: எந்த தர்மம் வெகு நாளாக உள்ளது?
: மோக்ஷத்திற்கு சாதகமான யாகம் முதலியவை வெகு நாட்களாக உள்ளன.

38.கே: அமிருதம் என்பது எது?
: மோக்ஷத்திற்கு சாதகமான ஹோமத்திற்கு உபயோகப்படுவதால் பசுவின் பாலே அம்ருதம் எனப்படும்.

39. கே: உலகம் முழுதும் வியாபித்து இருப்பது எது?
: வாயு.

மேற்கண்ட 4 கேள்வி-பதில்களால் கோக்ஷீரத்தால் ஹோமம் முதலியவற்றை செய்து வாயு ஸ்வரூபமாகி பிறகு மோக்ஷத்தை அடையலாம் என்று கூறப்பட்டதாகிறது.

40. கே: ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பான், யார்?
: சூரியன்.
.கே: உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் வாயு அழியும் காலத்திலும் எஞ்சி நிற்பவன் யார்?
.: சூரியன் போல ஒளி மயமான ஆத்மாதான் எஞ்சி நிற்பவன்.
.