Pages

Thursday, July 31, 2014

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 1

 
நம்மில் பலருக்கும் பிரச்சினை இந்த கோபம்தான். அதனால் இந்த காக்னிடிவ் ரீஸ்ட்ரக்சரிங் என்கிற புதிய பார்வைபடி கோபத்தை பார்க்கலாமா?
கோபம் கெட்டது, இருக்கக்கூடாதுன்னு சொன்னாலும் அது ஓரளவுக்கு பயன்படவும் செய்யுது. ரொம்ப சாதுவா இருக்கிறவங்களுக்கு இது காலம் இல்லைன்னு சொல்லக்கேட்டு இருக்கீங்கதானே? சாதுவா இருக்கிறது தனக்கு; மத்தவங்களுக்காக இல்லை. போகட்டும்.
கோபத்தில இரண்டு வகை இருப்பதா சிலர் சொல்கிறாங்க. இவங்க தியரியை பார்ப்போம்.
கொஞ்சம் 'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம்.
கொஞ்சம் 'நல்ல' கோபம் எது? இது எரிச்சலும், லேசான கோபமும். இவை தேவையான போது நம்முடைய உரிமையை நிலைநாட்ட உதவும்.
கெட்ட கோபம் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கும் மிகலேசா எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயத்துக்கும் அளவு மீறின எதிர்வினையை உருவாக்குது. மேலும் நம்முள்ளேயே கோபத்தை அடைச்சு வைக்கிறதும் கெட்ட கோபம்தான்! அதை சம்பந்தமில்லாதவர்களிடம் வெளிப்படுத்துவதும் கெட்ட கோபம்தான்.
எல்லா உணர்சிகளுமே தூண்டப்படுவது ஏதோ ஒரு செட் அப்பில்தான். அதாவது ஒரு சூழ்நிலை. நம்முடைய சொந்த விதிகளை மீறுவது; சொல்லாலோ செயலாலோ நம்முடைய சுய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பது; அல்லது நாம் நம் இலைக்கை அடைவதற்கு தடையாக இருப்பது.
இந்த கெட்ட கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?
 1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்கிற வளையாத பிடிவாதம்.
 2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது.
 3. என் சூழ்நிலை இப்படித்தான் இருக்கணும்; எனக்கு என் குறிக்கோள்களுக்கும் நடுவே யாரும் வரக்கூடாது.
 4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க.
 5. நான் சொல்வது செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான்!
 6. மத்தவங்களோட கருத்துக்கோ பார்வைக்கோ இங்கே இடமில்லை.
இதை எல்லாம் நமக்கு இருக்கான்னு பாரபட்சமில்லாம பார்த்தால் ஒழிய நாம் கெட்ட கோபத்தை தவிர்க்க முடியாது.
இந்த கெட்ட கோபத்தால பின் வருவதெல்லாம் நடக்கும்!
 1. நேரடியா சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது
 2. மறைமுகமாக சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது - உதாரணமா அவரோட வேலையை இன்னும் கடினமாக ஆக்குவது.
 3. உங்கள் கோபத்தை மூன்றாம் நபர்/ மிருகம்/ பொருள் - இடம் காட்டுவது.
 4. பழிக்குபழி என்று திட்டமிடுவது
 5. கருவிக்கொண்டு இருப்பது
 6. மற்றவர்களை நமக்கு வேண்டாதவருக்கு எதிராக திருப்பிவிடுவது.
 7. உம்மணாம் மூஞ்சியாக இருப்பது
 8. நமக்கு எதிராக செயல் பட அவருக்கு உள்நோக்கம் இருக்கிறதா என்று ஆராய்வது
 9. எப்போது அவர் மீண்டும் நமக்கு எதிராக செயல்படுவார் என்று காத்திருப்பது.
 10. நமக்குப்பிடிக்காதவர் எப்போது சிறிய தப்பாவது செய்வார் என்று கண்காணிப்பது.

வழக்கமா இவற்றுக்கான உடல்மொழி: இறுக்கிய கைகள்; இறுகிய தசைகள் (- வழக்கமாக கழுத்திலும் தோள்களிலும் தென்படும்.); உடல் துடிப்பது; பற்களை கடிப்பது; இதயம் வேகமாக துடிப்பது; சூடாக உணர்வது.
சிலருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். சிலருக்கு நேரமாகும். ஆனால் கோபம் வருகிறது என்று சில உடல் மாறுதல்கள் முன்னேயே உணர்த்தும். இதை கொஞ்சம் ஆராய்ந்து தெரிந்து கொண்டால் நாம் சீக்கிரமே இதை கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம்.
சரி! இந்தகொஞ்சம் 'நல்ல' கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி இருக்கும்? அதுக்கும் கெட்ட கோபத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?
 1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்பதில் வளையாத பிடிவாதத்துக்கு பதில் நெகிழும் பலமான தேர்வுகள்.
 2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது என்றில்லாமல் இப்படி இருந்தால் நல்லது என்று நினைப்பது.
 3. என் சூழ்நிலை இப்படித்தான் இருக்கணும்; எனக்கு என் குறிக்கோள்களுக்கும் நடுவே யாரும் வரக்கூடாது என்றில்லாமல் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று ஆசை படுவது.
 4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க என்று நினைக்காமல் யதார்த்தமாக பார்ப்பது.
 5. நான் சொல்வது செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான் என்றில்லாமல் அவற்றில் தவறு இருக்கக்கூடும் என்றும் மற்றவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொள்வது.
 6. மத்தவங்களோட கருத்துக்கோ பார்வைக்கோ இங்கே இடமில்லை எனாமல் மற்றவர் கருத்தையும் பாரபட்சமில்லாமல் ஆராய்வது.

இந்த மனப்போக்கு இருந்தா நாம் தன் நிலை இழக்க மாட்டோம். நம் சுய கௌரவம் பாதிக்கப்படாது. நம் கோபம் கட்டிலேயே இருக்கும். பிரச்சினை இருந்தால் அதை அதிகமாக்காமல் தீர்வு காண முயற்சிப்போம். மற்றவருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் என ஒப்புக்கொள்வோம்; ஆனால் அதே சமயம் மற்றவர் தம் போக்கையும் மாற்றிக்கொள்ள இடமிருக்கிறது என்று கோபப்படாமல் சுட்டிக்காட்டுவோம். அவர் வேண்டுமென்று நமக்கு எதிராக இல்லை என்பதற்கு ஆதாரங்களை தேடுவோம். மன்னிக்கவும் அம்றக்கவும் தயாராக இருப்போம். மொத்தத்தில் இந்த போக்கு நல்லது.
ஆகவே எப்படி கெட்ட கோபத்தை நல்ல கோபமாக ஆக்குவது என்று புரிகிறதல்லவா? நம் பார்வை மாற வேண்டும்!

 

ஶிவம் - 6041_6080
योगिनामधेयाय नमःயோகி³ நாமதே⁴யாய நம​:
योगिनाम शंभवेயோகி³நாம ஶம்ப⁴வே
योगीशायயோகீ³ஶாய
योगीश्वरायயோகீ³ஶ்வராய
योगीश्वरालयायயோகீ³ஶ்வராலயாய
योगीन्द्रसंस्तुतपदायயோகீ³ந்த்³ர ஸம்ʼஸ்துத பதா³ய
योगीश्वरेश्वरायயோகீ³ஶ்வரேஶ்வராய
योगेशायயோகே³ஶாய
योगेश्वरायயோகே³ஶ்வராய
याचनारूपायயாசனாரூபாய
याचकार्तिनिषूदनायயாசகார்தி நிஷூத³னாய
यजमानप्रियायயஜமானப்ரியாய
यजमानायயஜமானாய
यजमानात्मानेயஜமானாத்மானே
यजमानाद्यष्टमूर्तिव्यन्जितायயஜமானாத்³யஷ்ட மூர்திவ்யஞ்ஜிதாய
यजनोद्यदसद्दक्षशिक्षणायயஜனோத்³யத³ஸத்³த³க்ஷ ஶிக்ஷணாய
यज्वनेயஜ்வனே
यज्वमयायயஜ்வமயாய
यज्वस्तुताय नमः -६०६०யஜ்வஸ்துதாய நம​: -6060
याजाय नमःயாஜாய நம​:
यजनमयायயஜனமயாய
यजुर्मूर्तयेயஜுர்மூர்தயே
यजुर्मयायயஜுர்மயாய
यजुःपादभुजायயஜு​:பாத³பு⁴ஜாய
यजुर्वेदप्रियायயஜுர்வேத³ப்ரியாய
यजुरादिचतुर्वेदतुरङ्गायயஜுராதி³ சதுர்வேத³ துரங்கா³ய
यजुषेயஜுஷே
यजुर्वेदायயஜுர்வேதா³ய
यजुषां शतरुद्रीयायயஜுஷாம்ʼ ஶத ருத்³ரீயாய
यजुर्वेदमन्त्रजनकपश्चिमवदनायயஜுர்வேத³மந்த்ர ஜனக பஶ்சிமவத³னாய
याजकायயாஜகாய
याजिनेயாஜினே
युम्जमनायயும்ஜமனாய
योज्यायயோஜ்யாய
यज्ञमयायயஜ்ஞமயாய
यज्ञवाटीनिवाशिनेயஜ்ஞவாடீ நிவாஶினே
यज्ञघ्नेயஜ்ஞக்⁴னே
यज्ञभागविदेயஜ்ஞபா⁴க³விதே³
यज्ञपतये नमः – ६०८०யஜ்ஞபதயே நம​: – 6080

 

Wednesday, July 30, 2014

ஶிவம் - 6001_6040
योगसिद्धाय नमःயோக³ ஸித்³தா⁴ய நம​:
योगक्षेमदात्रेயோக³க்ஷேம தா³த்ரே
योगक्षेमंकराय யோக³க்ஷேமங்கராய
योगक्षेमधुरन्धरायயோக³க்ஷேம து⁴ரந்த⁴ராய
योगदात्रेயோக³தா³த்ரே
योगसंग्रहायயோக³ஸங்க்³ரஹாய
योगमार्गप्रदर्शकायயோக³மார்க³ப்ரத³ர்ஶகாய
योगसिद्धायயோக³ஸித்³தா⁴ய
योगप्रियायயோக³ப்ரியாய
योगकरायயோக³கராய
योगाध्यक्षयाயோகா³த்⁴யக்ஷயா
योगमूर्तिधरायயோக³மூர்தி த⁴ராய
योगासनाराध्यायயோகா³ஸனாராத்⁴யாய
योगाङ्गायயோகா³ங்கா³ய
योगध्यानपरायणायயோக³ த்⁴யான பராயணாய
योग्यायயோக்³யாய
योगनायकायயோக³ நாயகாய
योगगम्यायயோக³க³ம்யாய
योगवतेயோக³வதே
योगपट्टधराय नमः – ६०२०யோக³பட்டத⁴ராய நம​: – 6020
योगबीजाय नमःயோக³பீ³ஜாய நம​:
योगनिधयेயோக³ நித⁴யே
योगविदेயோக³விதே³
योगविदां नेत्रेயோக³விதா³ம்ʼ நேத்ரே
योगिपुङ्गवायயோகி³புங்க³வாய
योगिवैद्यायயோகி³வைத்³யாய
योगिसिंहह्रुदाश्रयायயோகி³ ஸிம்ʼஹ ஹ்ருதா³ஶ்ரயாய
योगिनेயோகி³னே
योगिध्यानान्तगम्यायயோகி³ த்⁴யானாந்த க³ம்யாய
योगिनीगणसेवितायயோகி³னீ க³ண ஸேவிதாய
योगिनां पतयेயோகி³னாம்ʼ பதயே
योगिमनस्सरोजदलसंचारक्षमायயோகி³ மனஸ்ஸரோஜத³ல ஸஞ்சாரக்ஷமாய
योगिह्रुत्पद्मवासिनेயோகி³ ஹ்ருத்பத்³மவாஸினே
योगिनां गुरवेயோகி³னாம்ʼ கு³ரவே
योगिनाम पतये யோகி³னாம பதயே
योगिनां ह्रुदिस्थायயோகி³னாம்ʼ ஹ்ருதி³ஸ்தா²ய
योगिध्येयायயோகி³ த்⁴யேயாய
योगिह्रुत्पङ्कजालयायயோகி³ ஹ்ருத்பங்கஜாலயாய
योगिपूज्यायயோகி³பூஜ்யாய
योगिनामन्नताय नमः -६०४०யோகி³னாமன்னதாய நம​: -6040

 

Saturday, July 26, 2014

ஶிவம் - 5961_6000
युक्तभावाय नमःயுக்தபா⁴வாய நம​:
युक्तयेயுக்தயே
युगाधिपायயுகா³தி⁴பாய
युगापहायயுகா³பஹாய
युगरूपायயுக³ரூபாய
युगकृतेயுக³க்ருʼதே
युगान्तकायயுகா³ந்தகாய
युगन्धरायயுக³ந்த⁴ராய
युगपत्सुरसाहस्राहङ्कारच्छेदिनेயுக³பத்ஸுர ஸாஹஸ்ராஹங்காரச்சே²தி³னே
युगादिकृतेயுகா³தி³க்ருʼதே
युगावर्तायயுகா³வர்தாய
युगाध्यक्षायயுகா³த்⁴யக்ஷாய
युगावहायயுகா³வஹாய
युगाधीशायயுகா³தீ⁴ஶாய
युगनाशकायயுக³ நாஶகாய
युगस्य प्रभवेயுக³ஸ்ய ப்ரப⁴வே
योगानां योगसिद्धिदायயோகா³னாம்ʼ யோக³ஸித்³தி⁴தா³ய
योगमायासमावृतायயோக³மாயா ஸமாவ்ருʼதாய
योगधात्रेயோக³தா⁴த்ரே
योगमायाय नमः – ५९८०யோக³மாயாய நம​: – 5980
योगमायाग्रसंभवाय नमःயோக³மாயாக்³ர ஸம்ப⁴வாய நம​:
योगर्धिहेतवेயோக³ர்தி⁴ஹேதவே
योगाधिपतयेயோகா³தி⁴பதயே
योगस्वामिनेயோக³ஸ்வாமினே
योगदायिनेயோக³தா³யினே
यागपीठान्तरस्थायயாக³பீடா²ந்தரஸ்தா²ய
योगस्यप्रभवेயோக³ஸ்ய ப்ரப⁴வே
योगरूपिणेயோக³ரூபிணே
योगारूपायயோகா³ரூபாய
योगज्ञाननियोजकायயோக³ஜ்ஞான நியோஜகாய
योगात्मनेயோகா³த்மனே
योगवतां हृत्स्थायயோக³வதாம்ʼ ஹ்ருʼத்ஸ்தா²ய
योगरतायயோக³ரதாய
योगायயோகா³ய
योगाचार्यायயோகா³சார்யாய
योगानन्दायயோகா³னந்தா³ய
योगाधीशायயோகா³தீ⁴ஶாய
योगमायासंवृतविग्रहायயோக³மாயா ஸம்ʼவ்ருʼத விக்³ரஹாய
योगमायामयायயோக³மாயாமயாய
योगसेव्याय नमः – ६०००யோக³ஸேவ்யாய நம​: – 6000


DOWNLOAD 


Friday, July 25, 2014

ஶிவம் - 5921_5960महोज्ज्वलाय नमःமஹோஜ்ஜ்வலாய நம​:
महोत्सवायமஹோத்ஸவாய
महोग्रशौर्यायமஹோக்³ரஶௌர்யாய
मुहूर्ताहःक्षणायமுஹூர்தாஹ​:க்ஷணாய
महिमापतयेமஹிமாபதயே
मह्यंமஹ்யம்ʼ
मह्यंबुवाय्वग्निमत्खात्ममूर्तयेமஹ்யம்பு³ வாய்வக்³னிமத்கா²த்ம மூர்தயே
मिहिरविधुदहनमण्डलावर्तिनेமிஹிர விது⁴ த³ஹன மண்ட³லாவர்தினே
मुहूर्तायமுஹூர்தாய
मोहिनीमुषेமோஹினீமுஷே
मोहिनीमोहनायமோஹினீ மோஹனாய
मोहिनेமோஹினே
मोहातीतायமோஹாதீதாய
मोहायமோஹாய
मोहावर्तनिवर्तकायமோஹாவர்த நிவர்தகாய
मोहस्तायமோஹஸ்தாய
मोहनायமோஹனாய
मोहिनीप्रियायமோஹினீ ப்ரியாய
मौलिभिन्नाण्डभित्तयेமௌலி பி⁴ன்னாண்ட³ பி⁴த்தயே
मौलिरत्नभासे नमः-५९४०மௌலி ரத்ன பா⁴ஸே நம​:-5940
मौलिखेलन्मुखरसुरनदीनीररम्याय नमःமௌலி கே²லன்முக²ர ஸுர நதீ³நீர ரம்யாய நம​:
मौलिभागेजटिलायமௌலிபா⁴கே³ ஜடிலாய
मौलिधृतचन्द्रशकलायமௌலி த்⁴ருʼத சந்த்³ரஶகலாய
मौलिधृतगङ्गायமௌலி த்⁴ருʼத க³ங்கா³ய
मौलिशोभाविराजितायமௌலி ஶோபா⁴ விராஜிதாய
मोक्षलक्षणबाहवेமோக்ஷலக்ஷணபா³ஹவே
मोक्षायமோக்ஷாய
मोक्षनिधयेமோக்ஷ நித⁴யே
मोक्षदायिनेமோக்ஷதா³யினே
मोक्षद्वारायமோக்ஷத்³வாராய
मोक्षदायமோக்ஷதா³ய
मोक्षार्थिनेமோக்ஷார்தி²னே
मोक्षलक्ष्मीविहारायமோக்ஷ லக்ஷ்மீ விஹாராய
मोक्षफलायமோக்ஷ ப²லாய
मोक्षरूपायமோக்ஷ ரூபாய
मोक्षकर्त्रे – ५९५६மோக்ஷகர்த்ரே – 5956
यकारस्य वायुर्देवता | भूताद्युच्चाटने विनियोगः |யகாரஸ்ய வாயுர் தே³வதா | பூ⁴தாத்³யுச்சாடனே வினியோக³​: |
यकाराय नमःயகாராய நம​:
यकाररूपायயகாரரூபாய
याकिनीप्रियायயாகினீப்ரியாய
युक्ताय नमः – ५९६०யுக்தாய நம​: – 5960

 

பொங்கல் - கவுன்டர்.....

மலேசிய விமானத்தில் போனவர்கள் அனைவரையும் கடவுள் ஏன் கைவிட்டார்?  உயர்வு தாழ்வு நிலைகளில் மக்களை ஏன் படைக்கிறார்?  குறையுடன் மக்களை ஏன் படைக்கிறார்? கருணை வழங்குவதில் ஏன் பேதம்?

இப்படி ஒரு மடலாடற்குழுவில் ஒருவர் பொங்கி இருந்ததாத வருந்தி ஒருவர் மடலிட்டு இருந்தார்!

காலங்காலமாக சில கேள்விகள் திருப்பித்திருப்பி எழுப்பப்படும். அதற்கு தக்க சமாதானமும் சொல்லப்படும். ஆனால் திருப்பி அந்த கேள்வி எழுப்பப்படும்! சமாதானம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இல்லை. ஏதேனும் சொல்ல வேண்டும்!
இதற்கு விதண்டாவாதம் என்று பெயர்.
மேலே சொன்னதுக்கும் "Eli, Eli, lema sabachthani? க்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!
இரண்டும் ஒன்றும் விவரம் சரிவர புரியாத அடிப்படையிலேயே எழுப்பப்படுகின்றன.
விஞ்ஞான கோட்பாடுகளை கேள்வி கேட்க வேண்டும் என்றால் விஞ்ஞானத்தை கொஞ்சமாவது புரிந்து கொண்டு அதன் அடிப்படையிலேயே கேட்கவேண்டும். ஆனால் ஆன்மீகத்தை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் இப்படி கேள்வி எழுப்பலாம்! ஹும்! அலுத்துவிட்டது!

ஹிந்து மதங்கள் ஏதாக இருந்தாலும் சில விஷயங்கள் அடிப்படையாக ஒப்புக்கொள்ளப்படுகின்றன. மறு பிறவியில் நம்பிக்கை என்பது அதில் ஒன்று. நாம் செய்த கர்மாவுக்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதும் ஒன்று.
ஜீவன் பிறக்கும் போதே அது அந்த ஜன்மாவில் என்ன என்ன அனுபவிக்கும் என்பது எழுதப்பட்டு விடுகிறது. நிர்ணயித்த நேரத்தில் உடலை நீத்து அடுத்த உடலை பெறுகிறது. ஆக பிறப்பு இறப்பு என்பது சட்டையை மாற்றுவது, அவ்வளவே! இதை புரிந்து கொண்ட ஹிந்து சாவுக்கு அஞ்சுவதில்லை!

முதலில் கேட்ட கேள்விகள் அறியா வினா என்று வைத்துக்கொண்டு எழுதுகிறேன்.
நாம் ‘உயர்’ நிலையில் பிறக்கிறோமா அல்லது ‘தாழ்’ நிலையில் பிறக்கிறோமா என்பதை நாமேதான் நிர்ணயித்துக்கொள்கிறோம்!
நாம் ‘குறையுடன்’ பிறக்கிறோமா அல்லது ‘நிறையுடன்’ பிறக்கிறோமா என்பதை நாமேதான் நிர்ணயித்துக்கொள்கிறோம்!
இவற்றை நம் செய்கையால் நாமேதான் உருவாக்குகிறோம்.

எத்தனை உயிரினங்களை கொல்கிறோம்? எத்தனை கொசுக்கள்? எறும்புகள்? ஓணான், கரப்பு, பல்லி, தவளை..... இன்னும் எத்தனையோ ஜீவன்கள்? எவ்வளவு பூச்சி மருந்து பயன்படுத்துகிறோம்? ஒரு வெடி வெடிப்பில் எத்தனை கண்ணுக்கு தெரியும்/ தெரியாத ஜீவன்கள் உயிரிழக்கின்றன? இதை எல்லாம் செய்வது நாம்தானே?
இறைவன் கருணை இல்லாதவன் இல்லை. இல்லாதிருந்தால் நாம் செய்யும் அநியாயங்களுக்கு ஒரு குந்துமணி சோறு கூட கிடைக்கக்கூடாது; ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கக்கூடாது; ஒரு நூல் கூட உடை கிடைக்கக்கூடாது. அப்படி இருந்தும் ஏதோ சோறு கிடைக்கிறது; குடிக்க நீர் கிடைக்கிறது; உடுக்க உடை கிடைக்கிறது எனில் அது அவன் கருணை இல்லாமல் வேறென்ன?

 

இன்ஸ்டின்க்ட் என்னும் உள்ளுணர்வு!

 
இன்ஸ்டின்க்ட் என்கிறது என்ன?

அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். நமக்கே கூட அனுபவம் இருக்கும். ஏன் எதற்கு என்று தெரியாமல் சிலதை சொல்லுவோம் அல்லது செய்வோம்!
ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, அந்த பஸ்ல போகலை. அப்புறம்தான் அந்த பஸ் ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னு தெரியவந்தது!....
ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, இந்த பையன் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். எல்லாரும் என்னடா இப்படி சொல்லறயே, நல்ல வேலை நல்ல சம்பளம் நல்ல குடும்பம் ன்னு சொன்னாங்க. இருந்தாலும் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அந்த பையன் அடுத்த வருஷமே செத்துப்போயிட்டான்.....
ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, இன்னைய பேப்பரை திருப்பியும் எடுத்துப்பாத்தா எனக்கு தோதான வீடு வாடகைக்கு வருதுன்னு விளம்பரம் பாத்தேன்......

ராத்திரி ஏறக்குறைய தூங்கிட்டேனா? அப்ப தோட்டத்துல டமால்ன்னு சத்தம். ஆத்துக்காரரை எழுப்பினா தென்னை மரத்து மட்டை விழுந்து இருக்கும், பேசாம படுன்னு சொன்னார். ஏன்னு தெரியலை, என்னவோ தோணித்து, திருடன் வந்து இருக்கான்னு. எதுக்கும் பாத்துடலாம்ன்னு தோட்டத்து விளக்கை போட்டு ஜன்னலை தெறந்து பாத்தா திருடன் மதில் ஏறிக்குதிச்சு ஒடறான்.....

இது போல பலதும் கேள்விப்பட்டு இருப்போம். நமக்கே கூட அப்படி நடந்து இருக்கும்.
இதை நாம் இன்ஸ்டின்க்ட் என்கிறோம். தமிழ்ல உள்ளுணர்வு.
அதாவது இது புத்தியால செய்வது இல்லை. மனசாலேயும் இல்லை. இதுல லாஜிக்கும் இராது. இருந்தாலும் சில சமயம் இது படி செய்து நல்ல பலனை பெறுவோம்.
இப்படி சில சமயம் நடந்துவிட்டால் நமக்கே எதோ சக்தி இருப்பதாக தோன்றிவிடுகிறது! யாராவது சொல்லவும் செய்வார்கள்.... நீ அப்பவே அப்படி சொன்னயா? அதே போல நடந்தது. பிறகு நம்மை இதுக்கு என்ன செய்யலாம், அதுக்கு என்ன செய்யலாம் என்கிற ரீதியில் கன்சல்ட் பண்ண ஆரம்பிக்க நமக்கும் நாம் ஏதோ பெரிய ஆள் என்று தோன்றிவிடுகிறது!
பிறகு காக்கை உட்கார பனம் பழம் கதையாக, லா ஆஃப் ஆவ்ரேஜ் படி, சொல்வது 50 சதவீதம் பலிக்க இந்த மாயை பலப்பட்டுவிடும்.
அல்லது இப்படி நாம் சொல்வதெல்லாம் சரி வருவதில்லை என்று நமக்கே புரிந்து சும்மா இருந்துவிடுவோம்.
இதெல்லாம் என்ன சமாசாரம்?
இந்த உள்ளுணர்வு என்ன? இந்த சொல்லே உணர்த்துவது போல இது உள்ளிருந்து வருகிற உணர்வு. இந்த உள் என்கிறது என்ன?

சிலர் ஆழ் மனம் என்பர்.
சிலர் இது மனச்சாட்சி, இறை உணர்வு என்பர்.
எல்லாம் ஒன்றே. என்னைப்பொறுத்தவரை இதை இறை உணர்வு என்றழைக்கிறேன்! இது எப்போதுமே இருந்து கொண்டுத்தான் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படி செய் அப்படி செய் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. நமக்குத்தான் காது கேட்பதில்லை! நாம் பாட்டுக்கு மனசால் தூண்டப்பட்டோ, புத்தியால் ஆலோசித்தோ எதையும் செய்து கொண்டு இருக்கிறோம். செய்ய வேண்டியதை சரியாக சொல்லும் இதை ‘நான்’ ‘எனது’ என்கிற அகந்தை அடித்துப்போட்டு விடுகிறது.
சில சமயம் மனசோ புத்தியோ வேலை செய்யாமல் இருக்கிறது. அப்போது இது வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது! குறைந்தது முயற்சி செய்தால் இதை மெலிதாக கேட்கவாவது முடியும்!
இது எப்போதும் நமக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தகவல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் அதை அடமடக்க கொஞ்ச நாளில் ‘நமக்கு ஏன் விடு’ என்கிற ரீதியில் விட்டுப்போய்விடுகிறது.
இந்த மனசோ புத்தியோ வேலை செய்யாமல் இருப்பது அரிதினும் அரிது! புத்தி அடிக்கடி வேலை செய்கிறதில்லை என்கிறது தெரிஞ்ச சமாசாரம்தான்! ஆனா இந்த மனசு வேலை செய்யாமல் இருப்பதே இல்லை. அலைந்து கொண்டே இருக்கிறது
 
இது இரண்டும் ஓய்வு எடுப்பது ஆழ் துயில் என்னும் சுஷுப்தியில்தான்! . பின் திருப்பியும் கனவு காணும் வகையில் மனம் எழுகிறது. இந்த சுழுத்தியும் கனவும் மாறி மாறி வருகிறது. சுழுத்தியில் நாம் இறைக்கு வெகு அருகில் இருக்கிறோம். இதனால்தான் நாம் தூங்கி எழும்போது ப்ரெஷ்ஷாக இருக்கிறோம். சில பிரச்சினைகளுக்கு ‘ஸ்லீப் ஆன் இட்’ என்பார்கள். தூங்கி எழுந்ததும் நமக்கு விடை கிடைத்துவிடும்! இது நடப்பது இறை உணர்வால்தான்!
நம்மால் மனசையும் புத்தியையும் அடித்துப்போட முடிந்தால் இந்த இறை உணர்வை வெளிக்கொண்டு வரலாம். ஸ்வீட் செஸ்ட்நட் (Sweet Chestnut) என்கிற ப்ளவர் மெடிசின் இப்படி செயல் படுவதாக சொல்கிறார்கள். எங்கே 'நான்' இல்லையோ அங்கே இந்த இறை உணர்வு வெளிப்படுகிறது. ஆன்மீகத்தில் உயர் நிலைக்கு சென்றவர்கள் இப்படி இருக்க முடிவதால்தான் அவர்கள் மூலம் இறைசக்தி வெளிப்பட்டு பல விஷயங்கள் நடக்கிறது. அவர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடிகிறது. அவர்கள் சொல்வது பலிக்கிறது

இதேதான் நமக்கும் சிறிய அளவில் நடக்கிறது. ஆனால் இதன் விளைவாக 'நான்' சொல்வது பலிக்கிறது என்று எப்போது தோன்றிவிடுகிறதோ அப்போது அகந்தை எழுவதால் இந்த உள்ளுணர்வும் காணாமல் போய் விடுகிறது!
ஆகவே நமக்கு இந்த இன்ஸ்டின்க்ட் இருக்கிறது என்றால் அது இறை அருள் என்று உணர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்வோம்!