Pages

Thursday, June 29, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 6

ஹோமங்களை விட்டுட்டு வைதீகரின் நிலைக்கு போயிட்டோம்.
வேதோக்த ஹோமங்களை பார்த்துவிட்டோம். சாஸ்த்ரோக்த ஹோமங்கள் என்கிறார்கள். எந்த சாஸ்திரங்கள்ன்னா தர்ம சாஸ்திரம் என்கிறார்கள். தர்ம சாஸ்திரம் எங்கிருந்து வந்ததுன்னு பார்க்கப்போனா அது புராணங்கள் இதிஹாஸங்களில இருந்துதான் வந்திருக்கு. பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கறப்ப சொன்ன தர்மோபதேசத்தில இருந்து நிறையவே வந்திருக்குன்னு இதை ஆராய்ச்சி செஞ்சவர் சொல்லறார். சூத்திர ரிஷிகள் சொன்னது இல்லாம கூடுதலா இவையும் சேர்ந்து இருக்கு.
அப்ப தாந்த்ரீகம்? இந்த ஹோமத்தை ஆரம்பிக்கற ப்ரொசீஜரும் முடிக்கற ப்ரொசீஜரும் நிலையானவை. வைதீகத்தில இது ஸ்தாலீபாகத்தை ஒட்டினது. தாந்த்ரீகத்துல தனி. இதுல ஆகம சாஸ்திரங்களில இருந்து வந்திருக்கும் ப்ரொசீஜர். எதை எதை எல்லாம் அக்னில போடலாம் எதை கூடாது என்கிறதுல எல்லாம் இரண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உதாரணமா தாந்திரீகத்தில மங்கள அக்ஷதை, புஷ்பங்கள், துணி எல்லாம் அக்னில போடுவாங்க. வைதீகத்தில செய்வதில்லை.
இப்பல்லாம் இதுல நிறையவே குழப்பங்கள் இருக்கு. வைதீகமும் தாந்த்ரீகமும் கலக்காம அது அது அததன் வழியிலேயே செய்யறதுதான் நல்லது. ஆனால் நடைமுறையை பார்க்கிறப்ப நிறைய கலவை தெரிகிறது. வைதீகமா ஆரம்பிச்சுட்டு முக்கிய ஹோமத்தில வைதிகத்தில விலக்கப்பட்ட த்ரவ்யங்களை உபயோகித்து செய்யறாங்க. ஸமித் அன்னம் ஆஜ்யம்தான் வழக்கமா வைதீகத்தில. மத்ததெல்லாம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. இன்னும் உள்ளே போனா குழப்பம்தான் மிஞ்சும்!
பொதுவா ஹோமத்துக்கு முந்தைய நாள் ப்ரம்மச்சர்யத்தோட இருக்கணும். பலகாரம்தான் சாப்பிடணும் என்பார்கள். அப்படி சொல்லிவிட்டு அரிசி சோறு இல்லாமல் டிஃபன் ஏதாவது ஒரு பிடி பிடிப்பார்கள். அது அப்படி இல்லை. ஃபல் ஆகாரம் அதாவது பழங்கள் மட்டுமே ஆகாரம். சரி சரி நான் ஒரே ஒரு பலாப்பழம் சாப்பிட்டுக்கறேன்னு சொல்றவங்களை ஒண்ணும் பண்ண முடியாது!
தாத்பர்யம் என்னன்னா அடுத்த நாள் ஹோமத்தில உக்காந்துட்டா டாய்லெட் போகும் அவசியம் வரக்கூடாது அவ்ளோதான். அதற்கு தகுந்தபடி சாப்பிட்டு காலையில் வயிறு குடல் எல்லாத்தையும் காலி பண்ணிடுங்க! காலை முதலே ஒன்றும் சாப்பிடாமல் இருப்பதே உத்தமம். (இக்காலத்தில் சில வாத்தியார்கள் காஃபி பரவாயில்லை என்பார்கள். ஏன்னா அவங்களுக்கு அது வேணுமே!) பழக்கமில்லாதவர்கள் உப்பு சேர்க்காத எதையாவது சாப்பிடலாம். இந்த காலத்தில் காலை நேர மருந்து சாப்பிடலாமா இல்லையான்னு ஒரு கேள்வி எழும். சிலது ஒரு வேளை ஸ்கிப் பண்ணா ஒண்ணு பெரிசா ஆகிடாது. சிலதுக்கு பிரச்சினை வரும். மருத்துவர் யோசனை படி செய்க.
சாதாரணமாக இப்போதெல்லாம் யாருக்கும் ஹோமங்கள் செய்து பழக்கமில்லை என்பதால் சங்கல்பம் செய்து, பிள்ளையாருக்கு பூஜை செய்துவிட்டு பவர் ஆஃப் அட்டார்னி வாத்தியார் கையிலே கொடுக்கறதாயும் ஹோமத்தை அவர் செய்யறதாகவும் இருக்கு. அப்பாடா வேலையை அவருக்கு கொடுத்தாச்சுன்னு பேப்பர் படிக்கவோ வாட்ஸாப் மேயவோ அழைத்திருக்கும் நண்பர்களை பார்த்து பேசவோ போவது உசிதமில்லை. உண்மையில் வேறு யாரையும் அழைக்காமல் இருப்பதே உசிதம். சற்று தள்ளி அமர்ந்து ஹோமத்தை பார்த்துக்கொண்டும் மந்திரங்களை கேட்டுக்கொண்டு இருக்கலாம். செய்பவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். எஜமானன் பாட்டுக்கு அந்தண்டை போய்விட்டா செய்யறவருக்கு என்ன உற்சாகம் இருக்க முடியும்? ஹோமம் எல்லாம் முடிந்த பிறகு யதோக்த தக்‌ஷிணையை தர வேண்டும். அது என்ன யதோக்த? யதா உக்த - அதாவது சொல்லப்பட்ட - முன்னேயே எவ்வளவு என்று பேசி வைத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? ஆதாற்கு கொஞ்சமும் குறைக்காமல் தர வேண்டும். அப்போதுதான் வர வேண்டிய முழு பலன் வந்து சேரும்.
அடுத்து ஹோமத்தில என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாஆமா வேணாமா? கொஞ்சம் யோசனையா இருக்கு. இக்னரன்ஸ் ஈஸ் ப்லிஸ்!

Wednesday, June 28, 2017

ஜபம்

நண்பர் நெ.த ஜபம் பத்தி கேட்டிருந்தார்.
காயத்ரீ ஜபம் செய்யும்போது மனது ஒன்றுவதில்லை. இதற்கு உள்ள கிரமம் (அதாவது இன்ன DEITY படம் வச்சு, விளக்கேத்தி.... மாதிரி) என்ன.
என்ன செய்யலாம்? ம்ம்ம்ம்?
காயத்ரி தேவியையே கேட்கலாம். அம்மா, மனசு உன் ஜபத்தில பதிய வையேன்னு!
நமக்கு அவ்ளோ பக்தி போறாதேன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். அப்ப சில நம்ம யத்னத்தில (??!!) செய்யக்கூடியதை செஞ்சு பார்க்கலாம்.
கர்மா க்ரமம் எப்படி போட்டு இருக்கு? ஜபத்துக்கு முன்னே விதிச்சு இருக்கறது ப்ராணாயாமம். இது மத்த சில பயன்களோட மனசு ஒன்றவும் செய்ய வைக்கும். அதுக்கு சரியான விகிதத்தில செய்யணும். இதோட விவரங்களை இங்கே பாருங்க
செஞ்சாச்சு, அப்புறம்?
புதுசா கத்துக்கற எதையும் செய்ய நாம் மனசை குவிச்சே செய்வோம். உதாரணமா பூஜை செய்ய ஆரம்பிக்கிறோம். என்ன ஸ்லோகங்கள் / மந்திரங்கள் சொல்லணும்? எல்லாமே புதுசா இருக்கும். பாத்து பாத்து சொல்லிவிடுவோம். தப்பில்லாம சொல்லணுமேன்னு ஒரு சின்ன கன்சர்ன் இருந்தா முழு ஈடுபாடு இருக்கும். இதுவே பழகின பிறகு இன்னைக்கு காப்பி சுத்த மோசம். டிபன் என்ன செய்வா அதுவாவது சரியா இருக்குமான்னு இந்த ரீதியில் எதையாவது நினைச்சுண்டே பூஜை செஞ்சுண்டு இருப்போம்!
நான் பஞ்சாயதன பூஜை செய்ய ஆரம்பிச்சப்ப என் அத்தை மகன் ரா.கணபதிகிட்ட ரொம்ப நேரம் ஆகறது அண்ணான்னு புகார் பண்ணேன். அவர் சிரிச்சுண்டே "பரவால்லை. பாத்து செய்யறப்ப கான்சண்ட்ரேஷன் இருக்கும்"ன்னார்!
புதுசா ஒரு மொழியை கத்துக்கறப்ப முதல்ல பார்த்து, உரக்கப்படிப்போம். கொஞ்சம் பழகின பிறகு உதடு அசைய படிப்போம். அப்புறம் மௌனமாவே படிக்கலாம். அதே போல…
ஆரம்ப காலங்களில உரத்து சொல்லும் ஸ்லோகத்தை நாளாவட்டத்தில முணமுணத்துண்டே சொல்லுவோம். இதுக்கு உபாம்சு ன்னு பேர். உரக்க சொல்லறதைவிட இது நல்லதாம். பத்து மடங்கு பலன். இன்னும் நாளாச்சுன்னா அந்த முணமுணப்பு கூட இராது. மனசில சொல்லிண்டு போவோம். இதுதான் மானசீகம். இது இன்னும் சிலாக்கியம்ன்னு சொன்னாக்கூட இங்கதான் பிரச்சினை ஆரம்பிக்கறது! மந்திரத்தை கோட்டை விட்டுட்டு வேற எங்கேயோ புல் மேய மனசுக்குதிரை போயிடும்! சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மாதிரி திருப்பி அதை இழுத்துண்டு வரணும். வேற எங்கேயோ போயிடுத்துன்னா இழுத்துண்டு வரலாம். அது தெரியாமலேன்னா ஓடிப்போறது?
ரைட் இப்ப புரிஞ்சாச்சு. இரண்டு ட்ரிக்ஸ்!
ஒண்ணு புதுசா செய்யறதை கவனத்தோட செய்வோம். ஸோ ஒவ்வொரு முறை ஜபத்துக்கு உக்காரும்போதும் புதுசா எதையாவது புகுத்தலாமே? எப்படின்னா….
ஸ்வரத்தை சரியா சொல்லறோமான்னு கவனிக்கலாம். உச்சரிப்பு சரியா இருக்கான்னு கவனிக்கலாம். இதுக்கு நிறையவே ஸ்கோப் இருக்கு.
சரியாக ஸ்பீட்ல சொல்றோமான்னு கவனிக்கலாம்.
மந்திரம் சொல்லறப்ப ஒரு கோட்டோவியத்தை கற்பனை செய்து வரைந்து கொண்டே சொல்லலாம். இதை பத்தி இங்கே சொல்லி இருக்கேன்.
ரைட் அடுத்து, தெரியாம மனசு குதிரை ஓடிப்போறது இல்லையா? இதுக்கு ஏதாவது செய்யலாம்? லாம்! குதிரைய பாத்துண்டே இருந்தா அது ஓடாது. உண்மையில் அசையாமலே நின்னுடும். a watched mind is a quiet mindன்னு தயானந்த ஸ்வாமிகள் எங்களுக்கு பாடம் எடுத்தார். இதுக்கும் பயிற்சி தேவைதான்.

ராம க்ருஷ்ணர் சொல்றார் நீ சொல்லற மந்திரம் உன் காதிலேயே கேட்கணும்ன்னு.சொல்கிற மந்திரத்தை மூணாவது மனுஷன் மாதிரி வேடிக்கை பார்க்க கத்துக்கணும். எடுத்த எடுப்பில இது முடியவே முடியாதுன்னு தோணினாலும் நிச்சயமா முடியும்.
இப்படி பார்க்கிறது உரக்க சொல்கிற மாந்திரதுக்கு சுலபம். ஒலி காதுல கேட்கிறது இல்லை? அதனால. உபாம்சுவா சொன்னா உதடுகளோட அசைவில கவனம் வைக்கலாம். மானசீகதுக்கு மேலே சொன்ன ஸ்வரத்தை கவனிக்கறது போன்ற உத்திகள் வேணும். மந்திரம் சொல்கிற விதம் செட்டில் ஆயாச்சுன்னா அதுக்குள்ள வேடிக்கை பார்க்கவும் தெரிஞ்சுடும்.
என்ன செஞ்சாலும் ஆரம்ப காலங்கள் கஷ்டம்தான். அப்போ ச்சேன்னு விட்டுடாம விடாப்பிடியா செய்யணும். குதிரை ஓடிப்போயிடறதேன்னு கவலைப்படாம திருப்பி திருப்பி இழுத்துண்டு வரணும்.

Tuesday, June 27, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 5

காலப்போக்கில் வைதிகர்கள் இந்த இரண்டையும் விட்டுவிட்டனர். ..

ஆரம்ப காலங்களில் சொந்த ஊரிலேயேத்தான் காரியம் இருக்கும். அல்லது பக்கத்து ஊராக இருக்கும். தூரத்து ஊரானால் முன்னேயே சென்று தங்கிவிடுவார்கள். கர்மாக்களுக்கு சங்கவ காலமே உசிதமானது. எப்படியும் சூரியோதயம் ஆகாமல் ஹோமங்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தன் நித்திய கர்மாக்களை முடித்து பின் மற்றவர்களுக்கு ஹோமங்கள் செய்யப்போவார்கள்
இப்போது காலம் மாறிவிட்டது. எப்போதோ ஹோமம் செய்கிறோம் என்று செய்யும் ஹோமங்களில் பட்டியலை பெருக்கிக்கொண்டு போவார்கள். ஒரு மஹா கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், அப்படியே ஒரு நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் செய்துவிடலாமே என்று ஜோசியர் சொல்லுவார். புதுசா குளிகனை த்ருப்தி செய்யணும்ன்னு ரீதியில எதாவது சொல்லாம இருந்தா போறாதா? இவரும் தலையாட்டிவிடுவார். இவ்வளோ பெரிய லிஸ்ட்ன்னா எப்ப ஆரம்பிக்கறது எப்ப முடிக்கறது. ஆபீஸுக்கு அன்னைக்கு லீவு போடக்கூட ரெடியா இருக்க மாட்டாங்க. சென்னை மாதிரி இடங்களில வைதீகரும் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு இடங்களில வேலை ஒத்துப்பார். அப்புறம் என்ன? காலை நாலு -அஞ்சு மணிக்கு ஆரம்பிப்பாங்க. ஒன்பது பத்துக்குள்ள ஏறக்கட்டிட்டு அடுத்த வேலை பார்க்கப்போகணும்.
இப்படி அவசரம் அவசரமாக செய்வதால் என்ன நடக்கிறது? செய்விப்பவருக்கு பலனும் முழுமையாக கிடைப்பதில்லை. செய்த வைதீகருக்கும் பாபம் இன்னும் அதிகமாக சேருகிறது. காலை இந்த நேரத்துக்கு ஆரம்பிக்கறவர் ஔபாசனம் செய்ய முடியுமா? இல்லை 1008 காயத்ரிதான் ஜபிக்க முடியுமா? ஒரு நாள் அவர் போகும் மோட்டார் பைக் விபத்தில் மாட்டிக்கும்! இல்லை இது போல ஏதாவது!

Monday, June 26, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 4
போன வாரம் முழுக்க தெரியாத்தனமா மாட்டிண்ட ஒரு வேலையில நேரம் போயிடுத்து. போஸ்ட் போட முடியலை. மன்னிக்க!

ஹோமங்களை நமக்கு நாமே செய்து கொள்ளலாம். அதுவே உசிதம். சங்கல்பம் செய்த பலனை நாம் எந்த அளவிற்கு சரியாக செய்தோமோ அதை பொருத்து பெறுவோம்.
நாமே செய்து கொள்ள முடியாமலும் போகலாம். நோயால் படுத்த படுக்கை ஆனவர் தனக்குத்தானே எப்படி செய்வது? இன்னொருவரை நியமிக்க வேண்டும்.

ஸ்ரௌத்த கர்மாக்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டவை. வேதத்தின் கர்ம காண்டத்தில் இவற்றின் நடைமுறைகள் விவரிக்கப்பட்டு இருக்கும். வேதமே இந்த நடைமுறையை விவரிக்கும்போது என்ன தக்ஷிணை தர வேண்டுமென்று குறிப்பிட்டு இருக்கும். ஏனைய கர்மாக்களில் அப்படி இல்லை. நாம் என்ன பேசிக்கொள்கிறோமோ அவ்வளவுதான். இஷ்டியில் இதற்கு மந்திரத்தில் "காமோ தாதா காமப் ப்ரதிக்ரஹீதா" என்று வரும். காமமே கொடுக்கிறது; காமமே வாங்கிக்கொள்கிறது. ஹோமம் செய்விப்பவர் எதையோ ஒன்றை விரும்பித்தானே செய்வித்தார்? அதே போல செய்து கொடுத்தவரும் தக்ஷிணையை விரும்பித்தானே செய்தார்?

ஆனால் இப்படி த்ரவ்யத்தை பெற்றுக்கொள்வது கொஞ்சம் இழிவாகத்தான் சொல்லப்படுகிறது. ஹோமத்தின் பலனில் பதினாறில் ஒரு பங்கு செய்தவருக்கு கிடைக்கும். அதே சமயம் கொஞ்சம் தபோ சக்தி அவரை விட்டுப்போகும். இதை மீண்டும் சமன் செய்ய அக்னி காரியம் செய்யலாம்; காயத்ரி ஜபிக்கலாம்; புண்ய தீர்த்தங்களில் நீராடலாம்.
நாங்கள் தனுஷ்கோடிக்கு சென்ற போது அழைத்துச்சென்ற சாஸ்த்ரிகள் எங்களுக்கு சங்கல்பம் செய்து வைத்து நீராட சொல்லிவிட்டு தானும் சங்கல்பம் செய்து நீராடினார். பின்னர் சொன்னார் "எத்தனையோ பேருக்கு ப்ராயச்சித்த கர்மாக்கள் செய்து வைக்கிறேன். அதனால் எனக்கும் கொஞ்சமாவது பாபம் சேரும். அதை இப்படி அவ்வப்போது போக்கிக்கொள்கிறேன்".

நித்தியம் சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்பவருக்கும் அக்னி காரியம் - ஔபாசனம் - செய்பவருக்கும் பாபம் சேருவதில்லை. அது அவரை அடையும்போதே அவர் ஏற்கெனெவே செய்துள்ள தபசால் நசிந்துவிடுகிறது.


காலப்போக்கில் வைதிகர்கள் இந்த இரண்டையும் விட்டுவிட்டனர்
(தொடரும்)

Tuesday, June 20, 2017

அந்தணர் ஆசாரம் - 18 ஹோமங்கள்- 3

நாம சர்ச்சையை தவிர்த்தாலும் சர்ச்சை நம்மை விடாது போலிருக்கு!
வாட்சாப்ல ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சுதா, இன்னொருத்தர் இதை தீவிரமா ஆராய்ஞ்சு தப்பு ரைட்டு கண்டு பிடிக்கறேன்னு இறங்கி இருக்கார். செய்யி, பகவான் எதையும் காரண காரியம் இல்லாம கிளப்பறது இல்லேன்னேன்.
இதனால சில விஷயங்கள் தெளிவாகறது. இன்னும் பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் குழப்பாம பகிர்ந்துக்கலாம்ன்னு…. என்ன செய்யறது? உங்க கஷ்டகாலம்!
முதல்ல சாஸ்த்ரோக்த ஹோமம் எல்லாம் எது? க்ருஹ்ய சூத்திரங்களில சொல்லப்பட்டது குறிச்சு யாரும் ஆட்சேபனை எழுப்ப முடியாது. பும்சவனம், ஜாதகர்மா, லௌகிகாக்நில செஞ்சாலும் செளளம், உபநயனம், வேத வ்ரதம், விவாஹம், உபாகர்மா இவற்றை ஒட்டிய ஹோமங்கள். பாக யக்ஞங்கள் - அஷ்டகா, ஸ்தாலீபாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ ஆகியன.
சோம யாகங்களும் ஹவிர் யாகங்களும் ஸ்ரௌத்தம் ஆகிவிட்டன. சாதா ஹோமங்களில் சேரா.
பாபங்களை தொலைக்க சொல்லப்பட்டது கூஶ்மாண்ட ஹோமம்.
நூதன க்ருஹ பிரவேசத்துக்கு ஹோமம் சொல்லி இருக்கிறது.
ஒவ்வொருவரும் சாதாரணமாக அவரவர் க்ருஹ்ய சூத்திரத்தில் ரிஷி சொல்லி இருப்பதையே அனுசரிக்க வேண்டும். தேவையானால் தன் ரிஷி வேறு விதமாக சொல்லாத பட்சத்தில் மற்ற ரிஷிகள் சொல்லியதை செய்யலாம்.
இப்படித்தான் போதாயனர் பலதை சொல்லி இருக்கிறார். நவக்ரஹஹோமம், ஆயுஷ் ஹோமம் போன்றவை இதில் அடக்கம். இவற்றை செய்யலாம்; தவறில்லை.
இதெல்லாம் இல்லாமல் வியாசர் இயற்றிய புராணங்களில் பலது சொல்லப்பட்டுள்ளன. வியாசர் ரிஷி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அப்படி நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
இவற்றை செய்வதற்கும் இடம் இருக்கிறது. ஆரம்பத்தில் சொல்லப்பட்டவற்றை அவசியம் செய்ய வேண்டும்; ஆனால் அவற்றை செய்வார் அருகிவிட்டனர். தேவையானால் செய்யலாம் என்பதில் பலத்தை செய்ய பலரும் தயாராக உள்ளனர்! தேவைகள் அதிகமாகிவிட்டன போலும்! டிவி சானல்களில் புதுசு புதுசா சொல்லப்படுகிற பலதும் இப்படி புராணங்களில் இருக்கும் போலிருக்கு!
தேவி பாகவதத்தில் நாலு பக்கத்துக்கு காயத்ரி ஹோமம் பத்தி சொல்லி இருக்கார். நாராயணன் நாரதருக்கு சொன்னதா பதினோராவது ஸ்கந்தத்தில இருபத்தி நாலாம் அத்தியாயத்தில வரது. நண்பர் அனுப்பின தமிழ் பக்கங்களில முக்கியமான ஒண்ணு காணோம்! "இது போலவே சாந்தியாதி கிருத்யங்களை சொல்லி அருளனும்" ன்னு நாரதர் கேட்கறதா வரது. சம்ஸ்க்ருத மூலத்தை பாத்தா காயத்ரியை பயன்படுத்தின சாந்தி பிரயோகம்ன்னு இருக்கு!
நாலு பக்கத்துக்கு பிரயோகங்கள் சொல்லப்பட்டு இருக்கு. பல வித சமித்துகள், ஹோம த்ரவ்யங்கள். ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு வித பலன்.

Thursday, June 15, 2017

காயத்ரி யக்ஞம்- ஆட்சேபணைக்கு பதில்
அன்பின் நாராயணன், ஆசிர்வாதங்கள். நீங்க அனுப்பின செய்தி பார்த்தேன். காயத்ரி யக்ஞம் அபத்தம்ன்னு யாரோ சொன்னதாக சொல்லியிருந்தீங்க. அதுக்கு சமாதானம் சொல்ல வேண்டியது என் கடமை.
அதுக்கு முன்னே... யார் எந்த க்ரூப்பில் போஸ்ட் செய்வதையும் அதன் அட்மின் தவிர யாரும் தடுக்க முடியாது. யாரையாவது பிடிக்கவில்லைன்னா அவரை மட்டுமே ப்ளாக் செய்ய வசதி இருக்கே? நிறைய படங்கள் போடறாங்கன்னா கேட்டாலொழிய படத்தை இறக்காதேன்னு சொல்ல செட்டிங் இருக்கே? ஏன் அதை பயன்படுத்தலாமே? போகட்டும்; இது நீங்க உங்க நண்பர், அட்மின் நடுவில இருக்கிற சமாசாரம். கோபப்பட இதில ஒண்ணுமில்லைன்னு சொல்ல வந்தேன்.
விஷயங்கள் கேள்விப்படறப்ப இது சாஸ்திர சம்மதமான்னு நண்பர் ஆராய்ச்சி செய்கிறார் என்கிறதே ஆச்சரியமா இருக்கு. இது மாதிரி மனிதர்கள் இப்ப அருகிப்போயாச்சு! அவருக்கு என் நமஸ்காரங்கள்.
நண்பர் காயத்ரி ப்ராயச்சித்த கர்மான்னு சொல்லறார். நூத்துக்கு நூறு உண்மை. அப்படி செய்யறப்ப பலாச சமித்தால தனித்தனியா செய்யறதே வழக்கம் என்கிறார். இதுவும் சரியே. அடுத்து அப்படி இல்லாம 8 பேர் சேர்ந்து செய்யறதோ எட்டு த்ரவ்யங்கள் பயன்படுத்தறதோ தப்பு என்கிறார். அது அவர் அபிப்யராயம். அது சாஸ்த்ர விரோதம் என்கிறார். இங்கேதான் பிரச்சினை இருக்கு.
எது சாஸ்த்ர விரோதம்? எது சாஸ்திர சம்மதம் இல்லை என்கிற இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.
வேதத்தில் இப்படி சொல்லி இருக்கு; சாஸ்திரத்தில் அப்படி சொல்லி இருக்கு என்கிறது வேதோக்தம், சாஸ்த்ரோக்தம். காலையில இன்னின்ன குச்சியால பல் தேய்ன்னு சொல்லி இருக்கு. ஔபாசனம் செய்ன்னு சொல்லி இருக்கு.அது சாஸ்த்ரோக்தம். பூண்டு சாப்டாதேன்னு சொல்லி இருக்கு. இதை மீறி சாப்பிட்டா அது சாஸ்திர விரோதம்.
அநேகமா எல்லாரும் - நம் நண்பர் தவிர, அவர் சரியாத்தான் செய்வார்ன்னு நம்பறேன். 3 வேளை சந்தி காயத்ரி ஜபத்தோட, க்ருஹஸ்தரா இருந்தா ஔபாசனம் செய்து கொண்டுதானே இருப்பார்?- இப்ப குச்சியை பயன்படுத்தறதில்லையே? பிரஷ் பேஸ்ட்தானே பயன்ல இருக்கு? இது சாஸ்திர விரோதமா? இது சாஸ்திர சம்மதமில்லைன்னு சொல்லலாம். சாஸ்திர விரோதம்ன்னு சொல்லலாமா? நான் மாட்டேன்.
சாஸ்திரங்களில சிலது செய்யாதேன்னு சொல்லி இருக்கு; அதை செய்தா அது சாஸ்திர விரோதம். இந்த காலத்தில பலதும் புதுசா இருக்கறப்ப விரோதமான்னு நிர்ணயிக்கிறது கொஞ்சம் கஷ்டம். வேதத்தில் ஜலத்தில மலத்தை கழிக்காதேன்னு சொல்லி இருக்கு. நம் டாய்லெட்களில் என்ன இருக்கு?
இப்ப பாப்புலரா இருக்கிற பல ஹோமங்கள் பலதும் சாஸ்திரத்தில் சொல்லப்படலை. மஹாகணபதி ஹோமம், நவக்ரஹஹோமம், சண்டி ஹோமம் எல்லாம் சொல்லப்படலை. பின்னே செய்யறாங்களேன்னா அதெல்லாம் தாந்த்ரீகம். சாஸ்த்ரோக்தம் இல்லைன்னாலும் தப்பு இல்லை. அது போலவேதான் இந்த காயத்ரி ஹோமமும்.
தர்ம சிந்து என்கிற கிரந்தத்தை எடுத்து காயத்ரி புரச்சர விதியை படித்தால் சமித் இல்லாமல் ஹோமம் செய்யும் மற்ற பொருட்கள் பற்றி சொல்லி இருக்கு. ஸ்ரீ சோமதேவ சர்மா எழுதிய சந்தியாவந்தனம் என்கிற புத்தகத்தில் இருந்து நான்கு பக்கங்களின் படங்களை இத்துடன் இணைக்கிறேன். இன்னும் பல பொருட்கள் பயனாவதை பார்க்கலாம்.
நடைமுறை கருதி ஹோமத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்களை விட்டுவிட்டு ஹோமார்கமான பொருட்களையே ஹோமத்தில் பயன்படுத்துகிறோம். நண்பர் அடுத்த வருஷத்துக்கு 64512 பலாச சமித்துகள் - நல்ல தோல் உள்ளவையாக இருக்க வேண்டும். கோணலில்லாமல் நேராகவும்; 10-12 விரற்கடை நீளமும்; காய்ந்ததும் ஆனால் கொஞ்சமாவது ஈரத்துடனும்; சரியா வெட்டப்பட்டவையாகவும்; ஆள்காட்டி விரல் பருமனாகவும்; பிளக்கப்படாமலும்; கிளைக்காமலும்; புழுவெட்டு இல்லாமலும் இருக்கும் சமித்துகளாக பார்த்து அனுப்பித்தருவாரானால் அதையே பயன்படுத்த சித்தமாக இருக்கிறோம்.
சமஷ்டியாக செய்யகூடாது என்கிறார். தனியாக செய்த பாபத்தை தனியாக ஹோமம் செய்து கழித்துக்கொள்ளலாம்; சமஷ்டியாக செய்யும் பாபம்? நாட்டில் எத்தனையோ பாபம் நடப்பதை பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்ய முயலாமல்தானே சும்மா இருக்கிறோம்?
இது சாஸ்திர விரோதம், சுனாமி வரும் என்கிறார். நாங்கள் சுனாமியை பார்த்தாயிற்று. கடற்கரை மீனவ குடியிருப்புகள் சேதமாயின; நகரில் பாதிப்பே இல்லை. அப்போதைய கடலூர் கலெக்டர் முதன்முதலாக இந்தியாவில் சுனாமி தாக்கம் என்று ப்ளாஷ் செய்ததால்தான் கடலூர் பிரபலமாயிற்று. உண்மையில் நாகைப்பட்டினம் போன்ற இடங்கள் இன்னும் அதிக பாதிப்புக்கு உள்ளாயின.
இருக்கட்டும். இதனால் பயன் விளைகிறதா என்பது ஒரு முக்கிய பிரமாணம் இல்லையா?
கடந்த வருடங்களில் இங்கு மழை பெய்கிறதோ இல்லையோ ஜலத்துக்கு கஷ்டம் இல்லை. போன முறை மழை பொய்த்துபோயும் இப்பவும் எங்கள் வீட்டு கிணற்றில் 15 அடி ஆழத்தில் ஜலம் இருக்கு. ஏற்கெனெவே இந்த பதிவு பெரிசா போச்சு. அதனால ஜப யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களின் அனுபவம் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துக்கொள்ளலாம். https://goo.gl/2QZzf4
பதிவு நீண்டு விட்டதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.கிறுக்கல்கள் -131என் வாழ்க்கைக்கு ஒரு நிலையான அஸ்திவாரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்!

ம்ம்ம் இப்படிப்பாரேன்! கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளுக்கு ஏது நிலை? நதிகளால் ஆழ் கடலில் சேர்க்கப்படும் மீன்களுக்கு ஏது அஸ்திவாரம்?
 

Wednesday, June 14, 2017

கிறுக்கல்கள் -130மாஸ்டர் கதை சொன்னார்:
பூரான் ஆந்தைகிட்ட போய் யோசனை கேட்டது.
எனக்கு கவுட் வியாதியாம். நூறு காலும் ரொம்ப வலிக்கறது. என்ன செய்யலாம்?
ஆந்தை யோசனை செய்துவிட்டு சொன்னது: நீ அணிலா மாறிடு. அப்புறம் நாலு கால்தான் இருக்கும். உன் வலி 96 சதவிகிதம் குறைஞ்சுடும்!
ஆஹா! வாட் அன் ஐடியா சர்ஜி! சரி எப்படி அணிலா மாறறது?
ம்க்கும்! அதை ஏன் என்கிட்டே கேக்கறே? என்ன செய்யனும்ன்னுதான் நா சொல்லுவேன். எப்படின்னு இல்லை.