Pages

Tuesday, March 31, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -6
ௐ ப⁴ஸிதாங்கா³ய நம: ।    சாம்பலை பூசிய அங்கங்கள் உடையவனே

ௐ ப⁴யத்ராத்ரே நம: ।பயத்தில் இருந்து காப்பவனே
ௐ பா⁴நுமதே நம: ।அழகியவனே
ௐ ப⁴யநாஶநாய நம: ।பயத்தை நாசம் செய்பவனே
ௐ த்ரிபுண்ட்³ரகாய நம: ।முப்பட்டை அணிந்தவனே
ௐ த்ரிநயநாய நம: ।மூன்று கண்களை உடையவனே
ௐ த்ரிபுண்ட்³ராங்கிதமஸ்தகாய நம: ।முப்பட்டை உள்ள தலையை உடையவனே
ௐ த்ரிபுரக்⁴நாய நம: । முப்புரங்களை எரித்தவனே
ௐ தே³வவராய நம: ।தேவர்களில் உயர்ந்தவனே
ௐ தே³வாரிகுலநாஶகாய நம: । 110அசுர குலத்தை நாசம் செய்பவனே
ௐ தே³வஸேநாதி⁴பாய நம: ।தேவர்களின் சேனைக்கு தலைவனே
ௐ தேஜஸே நம: ।ஒளிமயமானவனே
ௐ தேஜோராஶயே நம: ।ஒளி பொருந்தியவன்
ௐ த³ஶாநநாய நம: ।பத்து முகங்களை உடையவனே
ௐ தா³ருணாய நம: ।கலைஞனே
ௐ தோ³ஷஹந்த்ரே நம: ।தோஷங்களை (குற்றங்களை) நீக்குபவனே
ௐ தோ³ர்த³ண்டா³ய நம: ।நீண்ட கைகளை உடையவனே/ கைத்தடியை ஏந்தியவனே
ௐ த³ண்ட³நாயகாய நம: ।தண்டனை அளிப்பவனே
ௐ த⁴நுஷ்பாணயே நம: ।வில்லை ஏந்தியவனே
ௐ த⁴ராத்⁴யக்ஷாய நம: । 120 மலைகளின் தலைவனே
ௐ த⁴நிகாய நம: ।செல்வந்தனே
ௐ த⁴ர்மவத்ஸலாய நம: ।தர்மத்தில் பிரியம் வைத்தவனே
ௐ த⁴ர்மஜ்ஞாய நம: ।தர்மத்தை அறிந்தவனே
ௐ த⁴ர்மநிரதாய நம: ।தர்மத்தில் நிலை பெற்றவனே
ௐ த⁴நு:ஶாஸ்த்ர பராயணாய நம: ।வில் வித்தையில் கரை கண்டவனே
ௐ ஸ்தூ²லகர்ணாய நம: ।பெரும் காதனே
ௐ ஸ்தூ²லதநவே நம: ।பெரும் இடுப்பை உடையவனே
ௐ ஸ்தூ²லாக்ஷாய நம: ।பெரும் கண்களை உடையவனே
ௐ ஸ்தூ²லபா³ஹுகாய நம: ।பெரும் கைகளை உடையவனே
ௐ தநூத்தமாய நம: । 130 உத்தமமான உடலை உடையவனே
ௐ தநுத்ராணாய நம: ।உடலை காப்பவனே
ௐ தாரகாய நம: ।காப்பவனே / நக்‌ஷத்திரமே
ௐ தேஜஸாம்பதயே நம: ।ஒளி பொருந்தியவற்றின் தலைவனே
ௐ யோகீ³ஶ்வராய நம: ।யோகீஸ்வரனே
ௐ யோக³நித⁴யே நம: । யோக செல்வமே
ௐ யோகீ³நாய நம: ।யோகத்தின் விற்பனனே
ௐ யோக³ஸம்ஸ்தி²தாய நம:।யோகம் பொருந்தியவனே
ௐ மந்தா³ரவாடிகாய நம:।மந்தார மரத்தின் கீழ் அமர்ந்தவனே
ௐ மத்தாய நம: ।கள் வெறி கொண்டவனே
ௐ மலயாலசலவாஸபு⁴வே நம: । 140 மலயாசலத்தில் (மேற்கு தொடர்ச்சி மலை) இருப்பிடம் உடையவனே
ௐ மந்தா³ரகுஸுமப்ரக்²யாய நம: ।மந்தார பூக்கள் போல் தோன்றுபவனே
ௐ மந்த³மாருதஸேவிதாய நம: ।மந்த மாருதத்தால் வணங்கப்படுபவனே
ௐ மஹாபா⁴ஸாய நம: ।பேரொளியனே
ௐ மஹாவக்ஷஸே நம: ।பெரு மார்பனே
ௐ மநோஹரமதா³ர்சிதாய நம: ।மனதுக்கினிய வஸ்துக்களால் பூஜை செய்யப்பட்டவன்.
ௐ மஹோந்நதாய நம: ।மிக உன்னதமானவனே
ௐ மஹாகாயாய நம: ।பெரும் உடலுடையவனே
ௐ மஹாநேத்ராய நம: ।பெரும் கண்கள் உடையவனே
ௐ மஹாஹநுவே நம: ।பெரும் தாடை உடையவனே
ௐ மருத்பூஜ்யாய நம: । 150மருத்துக்களால் பூஜை செய்யப்படுபவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

101. பஸிதாங்க: விபூதி தரித்தவன்.
102. பயத்ராதா: பயத்தில் இருந்து காப்பவன்.
103. பானுமான் : கிரணங்களை உடையவன்.
104. பயநாசன: ஆபத்துத் தாரகன்.
105. த்ரிபுண்ட்ர தார விபூதி புண்டரம் பூண்டவன்.
106. த்ரிநயன: முக்கண்ணன்.
107. த்ரிபுண்றாங்கித மஸ்தக: விபூதி புண்டரம் அணிந்த தலை உடையவன்.
108. த்ரிபுரக்ன:முப்புரம் எரித்தவன், சிவன்.
109. தேவவர : தேவர்களுள் மேன்மையானவன் தேவர்களை உயர்ந்தோராகக் கருதியவன்.
110. தேவாரி குல ஸமர: தேவர்களின் சத்துருக்களை அழித்தவன்.
111. தேவஸேனாதிப: தேவர்களின் படைத்தலைவன். கந்தரூபன்.
112. தேஜ: தேஜஸ்வரூபன்.
113. தேஜோராசி : ஒளி மிகுந்தவன்
114. தசானன: பத்து முகங்கள் உள்ளவன். பத்து முகம் கொண்ட சாஸ்தா உருவம் மந்த்ர சாஸ்த்திரங்களில் கூறப்படுகிறது. தசத்வம் த்வகராம் போஜ த்ருதபாச கசாயுதம் ஸமாரூடம் மஹாபீடம் த்யாயேத் ஹரிஹராத்மஜம் என்றும் கூறுதல் உண்டு.
115. தாருண:(எதிரிகளுக்கும், தீயவர்களுக்கும்) கொடுமையானவன்.
116. தோஷஹந்தா: தோஷங்களை போக்குபவன்.
117. தோர்தண்ட: கோல் போன்ற கைகளை உடையவன்.
118. தண்ட நாயக : சிக்ஷைகளுக்கு அல்லது தண்டனை வழங்குவதற்கு அதிபதி, அல்லது தண்ட வனத்திற்கு அரசன்.
119. தனுஷ்பாணி :வில்லைக் கையில் ஏந்தியவன்.
120. தராத்யக்ஷ: பூபதியானவன்.
121. தனிக: ஐஸ்வர்யம் உள்ளவன். பொருளாளி.
122. தர்ம வத்ஸல: தர்மத்தில் பிரீதி உள்ளவன்.
123. தர்மக்ஞ : தர்மத்தை அறிந்தவன்.
124. தர்மநிரத: தர்மம் செய்பவன்.
125. தனுச்சாஸ்த்ர பராயண: வில்வித்தையைக் கொண்டவன்.
126. ஸ்தூல கர்ண: பெரிய காதுகளை உடையவன்.
127. ஸ்தூலதனு: பெருத்த சரீரம் உடையவன்.
128. ஸ்தூலாக்ஷ: பெருங் கண்களை உடையவன்.
129. ஸ்தூலபாஹுக: பெரிய கரங்களை உடையவன்.
130. தநூத்தம : உயர்ந்த சரீரம் உள்ளவன். அடியவர்கள் அளிக்கும் பொருள்கள் அல்பமாயினும் அதையே உத்தமமாக, மேலாகக் கொள்பவன்.
131. தனுத்ராண: மிகக்குறைந்த அளவு போற்றினாலும், அதாவது ஒரு கணம் நினைந்துருகினாலும் கூட ரக்ஷிப்பவன்.
132. தாரக : கரை ஏற்றுபவன். தன்னை வேண்டியவர்களுக்கு இறுதிக் காலத்தில் தாரகப் பொருளைக் கூறுபவன்.
133. தேஜஸாம்பதி : ஒளிகளை விளக்குபவன்.
134. யோகிச்வர: யோகம் பயின்றவர்களுக்கு ஆசான்.
135. யோகநிதி :யோகத்தை நிதியாகக் கொண்டவன்.
136. யோகின :யோகிகள் உருவன்.
137. யோகஸம்ஸ்தித: யோகத்தில் அமர்ந்திருப்பவன்.
138. மந்தார வாடிக: மந்தார உத்யாவனத்தில் இருப்பவன்.
139. மத்த: செருக்கு உள்ளவன்.
140. மலயாசல வாச பூ: மலய மலையில் இருப்பவன்.
141. மந்தார குஸும ப்ரக்ய: மந்தார புஷ்பம் போன்றவன்.
142. மந்த மாருத ஸேவித: தென்றல் காற்றால் ஸேவிக்கப்பட்டவன்.
143. மஹாபாஸ: பேரொளி படைத்தவன்.
144. மஹாவக்ஷா: பெரிய பரந்த மார்பை உடையவன்.
145. மனோஹர மதார்ச்சித : ருசிகரமான வஸ்துக்களால் பூஜிக்கப்பட்டவன்.
146. மஹோன்னத: மிகவும் உயர்ந்தவன்.
147. மஹாகாய: பெரிய சரீரம் கொண்டவன்.
148. மஹா நேத்ர: பெரிய கண்களை உடையவன்.
149. மஹாஹனு: பெரிய தாடைகளை உடையவன்.
150. மருத்பூஜ்ய: காற்றினால் பூஜிக்கத் தகுந்தவன்.

 


Monday, March 30, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -5
#ஐய்யப்பன்1008 - 5
ௐ ஶோணவாஸகாய நம: ।சிவந்த உடை அணிந்தவனே
ௐ ஸுராதி⁴பாய நம: ।தேவர்களின் தலைவனே
ௐ ஶோகஹந்த்ரே நம: ।சோகத்தை கொல்பவனே
ௐ ஶோபா⁴க்ஷாய நம: ।ஒளிரும் கண்களை உடையவனே
ௐ ஸூர்யதைஜஸாய நம: । 80சூரியனின் தேஜசை உடையவனே
ௐ ஸுரார்சிதாய நம: ।தேவர்களால் பூஜிக்கப்படுபவனே
ௐ ஸுரைர்வந்த்³யாய நம: ।தேவர்களால் வணங்கப்படுபவனே
ௐ ஶோணாங்கா³ய நம: ।சிவந்த அங்கங்களை உடையவனே
ௐ ஶால்மலீபதயே நம: । ஶால்மலீ தீவீபத்தின் அரசனே
ௐ ஸுஜ்யோதிஷே நம: ।நல்ல ஜோதியே
ௐ ஶரவீரக்⁴நாய நம: ।அம்பை தாங்கியவனே
ௐ ஶரத்³சந்த்³ரநிபா⁴நநாய நம: ।சரத் கால சந்திரனை ஒத்தவனே
ௐ ஸநகாதி³முநித்⁴யேயாய நம: ।ஸநகர் முதலான முனிவர்களால் த்யானிக்கப்படுபவனே
ௐ ஸர்வஜ்ஞாநப்ரதா³யாய நம: ।அனைத்து ஞானத்தையும் அருள்பவனே
ௐ விப⁴வே நம: । 90அனைத்திலும் நிறைந்தவனே
ௐ ஹலாயுதா⁴ய நம: ।கலப்பையை ஆயுதமாக கொண்டவனே
ௐ ஹம்ஸநிபா⁴ய நம: ।அன்னத்தை ஒத்தவனே
ௐ ஹாஹா ஹூஹூ முக²ஸ்துதாய நம: ।ஹாஹா ஹூஹூ என்னும் கந்தர்வ இசை கலைஞர்களால் முக துதி செய்யப்படுபவனே
ௐ ஹரிப்ரியாய நம: ।ஹரிக்கு பிரியமானவனே
ௐ ஹரப்ரியாய நம: ।ஹரணுக்கு பிரியமானவனே
ௐ ஹம்ஸாய நம: ।அன்னமே; ஹம்ஸ நிலை துறவியே
ௐ ஹர்யக்ஷாஸநதத்பராய நம: ।அரியணையில் அமர்ந்தவனே
ௐ பாவநாய நம: ।புனிதனே
ௐ பாவகநிபா⁴யே நம: ।நெருப்பை ஒத்தவனே
ௐ ப⁴க்தபாபவிநாஶநாய நம: । 100பக்தர்களின் பாவங்களை ஒழிப்பவனே
--
சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
75. சோணாக்ஷ : சிவந்த கண்களை உடையவன்.
76. சோணவாஸஸ: சிவந்த ஆடை தரித்தவன்.
77.ஸுராதிப: தேவர்களுக்கு அதிபதி.
78. சோக ஹந்தா: துயரங்களை அகற்றுபவன்.
79. சோபாக்ஷ: அழகான விழிகளை உடையவன்.
80. ஸூர்யதேஜஸ: சூரியனைப் போல் காந்தி உள்ளவன்.
81. ஸுரார்ச்சித: தேவர்களால் பூஜிக்கப்பட்டவன்.
82. ஸுரைர்வந்த்ய: தேவர்களால் வணங்கத் தக்கவன்.
83. சோணாங்க: சிவந்த அவயங்களை உடையவன்.
84. சல்மலிபதி: சல்மல் என்ற வ்ருக்ஷத்துக்கு பதியானவன்.
85. ஸஜ்யோதி: நல்ல பிரகாசம் உள்ளவன்.
86. சரவீரக்ன: பாணத்தால் வீரர்களைக் கண்டிப்பவன்.
87. சரத்சந்த்ர நிபானன: சரத்கால சந்தரன் போன்ற முகம் உள்ளவன்.
88. ஸனகாதி முனித்யேய: ஸனகர் முதலிய முனிவர்களால் கருதத்தகுந்தவன்.
89. ஸர்வக்ஞானப்ரத: எல்லா ஞானங்களையும் அளிப்பவன்.
90. விபு: எங்கும் இருப்பவன்.
91. ஹலாயுத: கலப்பையை ஆயுதமாகத் தரித்தவன்.
92. ஹம்ஸநிப: அன்னம் போன்றவன்.
93. ஹாஹா ஹூஹூ முகஸ்துத : ஹாஹா ஹூஹூ என்று கந்தவர்களால் போற்றப்பட்டவன்.
94. ஹரி : திருமாலின் வடிவானவன்.
95. ஹரப்ரிய: சிவனிடம் பிரியம் உள்ளவன்.
96. ஹம்ஸ : அன்ன பக்‌ஷி வடிவானவன், அல்லது ஸன்யாஸி என்றும் கூறலாம்.
97. ஹர்ய க்ஷாஸனதத்பர: சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளவன்.
98. பாவன : பரிசுத்தன்.
99. பாவகநிப:அக்னி போன்றவன்.
100. பக்தபாபவிநாசன: பக்தர்களின் பயங்களை அகற்றுபவன்.

Saturday, March 28, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -4
#ஐய்யப்பன்1008 - 4
ௐ கு³ணாகு³ணநிரூபகாய நம: ।குணம் அகுணம் ஆகியவற்றை ஆராய்பவனே
ௐ கு³ணாத்⁴யக்ஷாய நம: ।குணத்துக்கு தலைவனே
ௐ கு³ணநித⁴யே நம: ।குணநிதியே
ௐ கோ³பாலேநாঽபி⁴பூஜிதாய நம: ।கோபாலனும் பூஜித்தவனே
ௐ கோ³ரக்ஷகாய நம: ।பசுக்களை காப்பவனே
ௐ கோ³த⁴நாய நம: ।பசு செல்வத்தை உடையவனே
ௐ க³ஜாரூடா⁴ய நம: ।யானையில் ஏறி பயணம் செய்பவனே
ௐ க³ஜப்ரியாய நம: ।யானை மீது பிரியம் கொண்டவனே
ௐ க³ஜக்³ரீவாய நம: । யானை கழுத்தனே
ௐ க³ஜஸ்கந்தா⁴ய நம: । 60 யானையை ஒத்த (வலிமை கொண்ட) தோள்களை கொண்டவனே
ௐ க³ப⁴ஸ்தயே நம: ।(வலிவான) கைகளை உடையவனே
ௐ கோ³பதயே நம: ।பசுக்களுக்கு தலைவனே
ௐ ப்ரப⁴வே நம: ।பிரபுவே
ௐ க்³ராமபாலாய நம: ।கிராமத்தை காப்பவனே
ௐ க³ஜாத்⁴யக்ஷாய நம: ।யானைகளுக்கு தலைவனே
ௐ தி³க்³க³ஜேநாঽபி⁴பூஜிதாய நம: ।திக் கஜங்களால் பூஜிக்கப்படுபவனே
ௐ க³ணாத்⁴யக்ஷாய நம: ।கணங்களுக்கு தலைவனே
ௐ க³ணபதியே நம: ।கணங்களுக்கு தலைவனே
ௐ க³வாம்பதயே நம: ।பசுக்களின் தலைவனே
ௐ அஹர்பதயே நம: । 70 பகலின் தலைவனே
ௐ ஜடாத⁴ராய நம: ।ஜடையை தாங்கியவனே
ௐ ஜலநிபா⁴ய நம: ।நீரை ஒத்தவனே
ௐ ஜைமிந்யாத்³ ருʼஷி பூஜிதாய நம: ।ஜைமினி முதலன ரிஷிகளால் பூஜிக்கப்படுபவனே
ௐ ஜலந்த⁴ரநிஹந்த்ரே நம: ।ஜலந்தரனை கொன்றவனே
ௐஶோணாக்ஷாய நம: ।சிவந்த கண்களை உடையவனே
 

51. குணா குணநிருபக: மூன்று குணங்களோடு கூடியதும், அவைகள் அற்றதுமான பொருள்களைக் காட்டுபவன்.
52. குணாத்யக்ஷ: மூன்று குணங்களையும் அறிந்தவன்.
53. குணநிதி: குணங்களுக்கு இருப்பிடமானவன்.
54. கோபாலேனாபி பூஜித: கண்ணனால் பூஜிக்கப் பட்டவன்.
55. கோரக்ஷக: பசுக்களைக் காப்பாற்றுபவன். கோரக்ஷகன் என்ற சித்த உருவானவன். 56. கோதன : பசுக்களையே செல்வமாகக் கொண்டவன்.
57. கஜாரூட : யானையை வாகனமாகக் கொண்டவன். இந்த வடிவத்தை ஜகன் மோகன சாஸ்தா என்று கூறுவர்.
58.கஜப்ரிய :யானையிடம் அன்பு கொண்டவன். வேழ முகம் கொண்ட விநாயகப் பெருமானிடம் பிரியமானவன்.
59. கஜக்ரீவ : யானையின் கழுத்தைப் போன்று கழுத்து உள்ளவன்.
60.கஜஸ்கந்த: யானையின் தோளைப் போன்ற திண்தோள் படைத்தவன்.
61.கபஸ்தி : சூரிய வடிவானவன்.
62. கோபதி : பசுக்களுக்கு பதி: பசுக்களை உடையவன்.
63. ப்ரபு: வல்லமை உள்ளவன். ரக்ஷகன்.
64. கிராமபால : கிராமங்களைக் காப்பாற்றுபவன்.
65. கஜாத்யக்ஷ: யானைகளுக்கெல்லாம் அரசன்.
66. திக்கஜேனாபி பூஜித: எட்டுத்திக்குகளிலும் உள்ள யானைகளால் பூஜிக்கப்பட்டவன். (திக்கஜங்களாவன: ஐராவதம், புண்டரீகம்,வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், ஸர்வபௌமம், ஸுப்ரதீகம்)
67. கணாத்யக்ஷ :பரமசிவனின் பிரதம கணங்களுக்கும் கட்டளையிடுபவன்.
68. கணபதி : கணங்களுக்கு அரசன்.
69. கவாம்பதி: பசுக்களுக்கு பதியானவன்.
70.அஹர்பதி : சூரியன்.
71. ஜடாதர : ஜடைதரித்தவன், வேதங்களில் ஜடை என் கின்ற உச்சாரண பேதத்தைத் தரித்தவன். ஓதுகிறவன். வேத ஐடா பாராயணத்தில் பிரியம் உள்ளவன்.
72. ஜலநிப: தண்ணீ ரைப் போன்றவன்.
73. ஜைமின்யைரபி பூஜித: வேதத்தில் ஜைமினி சாகையை ப்ரதானமாகத் தங்கள் வேதமாகக் கொண்ட அந்தணர்களால் பூஜிக்கப்பட்டவன். (ஆயிரம் பிரிவுகள் கொண்ட ஸாம வேதத்தில் ஜைமினி சாகை என்று ஒரு பிரிவு உள்ளது)
74. ஜலந்தர நிஹந்தர :ஜலந்தரன் என்னும் அரக்கனை அழித்தவன்,
75. சோணாக்ஷ : சிவந்த கண்களை உடையவன்.

Friday, March 27, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 3
#ஐய்யப்பன்1008 - 3

ௐ ஜிதேந்த்³ரியாய நம: ।இந்திரியங்களை ஜெயித்தவனே
ௐ ஜிதக்ரோதா⁴ய நம: ।சினத்தை வென்றவனே
ௐ ஜிதஸேவாரி ஸங்க²காய நம: ।தேவர்களின் பகைவர்களை வென்றவனே
ௐ ஜைமிந்யாத்³ ரூʼஷி ஸம்ஸேவ்யாய நம: ।ஜைமினி முதலான ரிஷிகளால் வணங்கப்படுபவன்.
ௐ ஜராமரணநாஶகாய நம: । 30கிழட்டுத்தனத்தையும் மரணத்தையும் நாசம் செய்பவனே.
ௐ ஜநார்த³நஸுதாய நம: ।ஜனார்த்தனின் மகனே
ௐ ஜ்யேஷ்டா²ய நம: ।மூத்தவனே
ௐ ஜ்யேஷ்டா²தி³க³ண ஸேவிதாய நம: ।மூத்தவன் (விநாயகன்) முதலான கணங்கள் வணங்குபவனே
ௐ ஜந்மஹீநாய நம: ।பிறப்பை வலுவிழக்கச்செய்பவனே
ௐ ஜிதாமித்ராய நம: ।வயதானவர்களுக்கு நண்பனாக இருப்பவனே
ௐ ஜநகேநாঽபி⁴பூஜிதாய நம: ।ஜனகனால் பூஜிக்கப்பட்டவனே
ௐ பரமேஷ்டி²நே நம: ।மிக உயர்ந்தவனே
ௐ பஶுபதயே நம: ।பசுக்களின் (ஜீவன்களின்) தலைவனே
ௐ பங்கஜாஸநபூஜிதாய நம: ।பிரம்மன் பூஜை செய்பவனே
ௐ புரஹந்தாய நம: । 40புரனை வதம் செய்தவனே
ௐ புரத்ராதயே நம: ।புரனை காத்தவனே
ௐ பரமைஶ்வர்யதா³யகாய நம: ।உயர்ந்த ஐஸ்வர்யத்தை அருள்பவனே
ௐ பவநாதி³ஸுரை: ஸேவ்யாய நம: ।வாயு முதலான தேவர்களால் சேவிக்கப்படுபவனே
ௐ பஞ்சப்³ரஹ்ம பராயணாய நம: ।ஐந்து ப்ரம்ம மந்திரங்களையும் ஓதுபவன்.
ௐ பார்வதீதநயாய நம: ।பார்வதியின் மகனே
ௐ ப்³ரஹ்மணே நம: ।ப்ரம்மமே
ௐ பராநந்தா³ய நம: ।ஒப்பற்ற மகனே
ௐ பராத்பராய நம: ।உயர்விலும் உயர்நதவனே
ௐ ப்³ரஹ்மிஷ்டா²ய நம: ।பிரம்மத்தில் நிலை பெற்றவனே
ௐ ஜ்ஞாநநிரதாய நம: 50ஞானத்தில் திருப்தி பெற்று இருப்பவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

26.ஜிதேந்த்ரிய : அடக்கப்பட்ட இந்திரிய வியாபாரங்களை உடையவன். (கர்மேந்திரியம் 5- ஞானேந்திரியம் 5)
27.ஜிதக் ரோத : குரோதத்தை - கோபத்தை - அகற்றியவன்.
28.ஜிததேவாரி ஸங்கக : தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கர்களை வென்றவன்.
29. ஜைமின் யாதி முனிஸேவ்ய:
ஜைமினி முதலான முனிவர்களால் பூஜிக்கப்பட்டவன். ஜைமினி என்பவர் வேதவ்யாஸரின் சிஷ்யர்களில் ஒருவர். ஸாம வேதத்தை வெளியிட்டவர், கர்ம காண்ட நூலை (மீமாம்ஸ ஸுத்ரங்கள்) இயற்றியவர். வியாஸரின் அருளால் ஞானம் பெற்று சிதம்பர க்ஷேத்திரம் வந்து வேத பாதஸ்தவம் என்னும் ஸ்தோத்ரத்தால் ஸ்ரீ நடராஜரைத் துதித்துப் பரமனின் அருளைப் பெற்றவர். அந்த முனிவராலும் சிதம்பரத்தில் ஹரிஹரபுத்திரன் பூஜிக்கப்பட்டவன் ஆவான் என்பது கருத்து.
30. ஜராமரண நாசக : மூப்பு, நரை, மரணம் இவைகளை அகற்றுபவன்.
31. ஜனார்த்தன ஸுத: திருமாலின் புதல்வன். விஷ்ணு மோகினியின் குமாரன்.
32. ஜ்யேஷ்ட : முதன்மையானவன்
33. ஜ்யேஷ்டாதி கணா ஸேவிதா: பெரியண்ணன் முதலான கணங்களால் ஸேவிக்கப்பட்டவன்
34. ஜன்மஹீன : பிறவியற்றவன்
35. ஜிதாமோஹ : மோஹத்தை வென்றவன். ஆமோஹன் என்ற அசுரனை அல்லது காமனை வென்றவன்.
36. ஜனகேனாபி பூஜித: ஜனகராஜனால் பூஜிக்கப்பட்டவன். ஜனகன் தனது மிதிலா நகரத்தின் எட்டுத்திக்குகளிலும் சாஸ்தாவை ப்ரதிஷ்டை செய்து சத்ருக்கள் அணுகாமல் இருப்பதற்காக பூஜித்தான் என்பது புராணம். (ஜனகன் என்றால் தந்தை என்று பொருள். எனவே தந்தையாலும் பூஜிக்கப்பட்டவன் என்பது பொருள். சபரிமலையில் ஸ்ரீ தர்மசாஸ்தாவாக மணிகண்டனை ஆவாஹனம் செய்து ஐயப்பனின் தந்தை பந்தள ராஜபாண்டியன் பூஜித்து முக்தியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
37. பரமேஷ்டி: உன்னதமான நிலையில் இருப்பவன்.
38. பசுபதி: கால் நடை பிராணிகளுக்கு இறைவன்.
39. பங்கஜாஸன பூஜித: பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டவன்
40. புரஹம்தா : முப்புரங்களையும் வென்றவன். சிவரூபி.
41. புரத்ராதா: அடியவர்கள் வேண்டும் போது முன் நின்று காப்பவன்.
42. பரமைஸ்வர்ய தாயக: மிகுந்த ஐஸ்வர்யங்களை அளிப்பவன்.
43. பவனாதி ஸுரைஸ்ஸேவ்ய: வாயு முதலான தேவர்களால் துதிக்கப்பட்டவன்.
44. பஞ்சப்ரஹ்ம பராயண: ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோ ஜாதம் என்று ஐந்து பிரம்ம மந்திரங்களை ஓதுபவன்.
45. பார்வத தனய : பார்வதியின் புதல்வன். திருமால் பார்வதியின் உருவமானதால் பார்வதி தனயன் என்று கூறப்படுகிறான்.
46. ப்ரஹ்மா : ப்ரும்மரூபன்.
47. பரானந்த: உத்க்ருஷ்டமான ஆனந்தம் உள்ளவன்.
48. ப்ருமிஷ்ட: எல்லாவற்றுக்கும் மேம்பட்டவன்.
49.பராத்பர : பிரமத்தோடு இரண்டறக் கலந்து இருப்பவன்.
50. ஞான நிரத: சிவஞானப்பேறு பெற்றவன்.

Thursday, March 26, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -2

 ஶ்ரீ த⁴ர்மஶாஸ்தா அத²வா ஶ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமாவளீ
ௐ நமோ ப⁴க³வதே பூ⁴தநாதா²ய ।


ௐ ஶிவபுத்ராய நம: ।
சிவனின் புத்திரனே
ௐ மஹாதேஜஸே நம: ।பெரும் ஒளியே
ௐ ஶிவாகார்யது⁴ரந்த⁴ராய நம: ।சிவாவின் வேலைக்கு உறுதுணையாய் இருப்பவனே
ௐ ஶிவப்ரதா³ய நம: ।சிவனால் அளிக்கப்பட்டவனே
ௐ ஶிவஜ்ஞாநிநே நம: ।சிவனை முற்றும் அறிந்தவனே
ௐ ஶைவத⁴ர்மர்ஸுரக்ஷகாய நம: ।சைவ தர்மத்தை நன்கு காப்பவனே
ௐ ஶங்க²தா⁴ரிணே நம: ।சங்கை ஏந்தியவனே
ௐ ஸுராத்⁴யக்ஷாய நம: ।தேவர்களை மேலாளுபவனே
ௐ சந்த்³ரமௌலயே நம: ।சந்திரனை முடியில் சூடிக்கொண்டவனே
ௐ ஸுரோத்தமாய நம: । 10மிக நல்ல தேவனே
ௐ காமேஶாய நம: ।காமத்தை கட்டுப்படுத்தியவனே
மன்மதனுக்கு ஈசனே
ௐ காமதேஜஸ்விநே நம: ।காமத்தின் சக்தியால் உண்டானவனே
ௐ காமாதி³ ப²லஸம்யுதாயே நம: ।
காமம் முதலியவற்றின் பலனுடன் சம்பந்தப்பட்டவனே
ௐ கல்யாணாய நம: ।உவகை கொண்டவனே
ௐ கோமலாங்கா³ய நம: ।மென்மையான அங்கங்களை உடையவனே
ௐ கல்யாணப²லதா³யகாய நம: ।நல்ல பலன்களை கொடுப்பவனே
ௐ கருணாப்³த⁴யே நம: ।கருணை மேகமே
ௐ கர்மாத்³க்ஷாய நம: ।செயல்களை மேற்பார்வையிடுபவனே
ௐ கருணாரஸஸாக³ராய நம: ।கருணை ரச கடலே
ௐ ஜக³த்ப்ரியாய நம: । 20உலகுக்கு பிரியமானவனே
ௐ ஜக³த்³ரக்ஷாய நம: ।உலகை காப்பவனே
ௐ ஜக³தா³நந்த³தா³யகாய நம: ।உலகிற்கு ஆனந்தம் தருபவனே
ௐ ஜயாதி³ஶக்தி ஸம்ஸேவ்யாய நம: ।இந்திரன் முதலான சக்திகளால் துதிக்கப்படுபவனே
ௐ ஜநாஹ்லாதா³ய நம: ।ஜனங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுபவனே
ௐ ஜிகீ³ஷுகாய நம: ।அனைவரும் அடைய விரும்புபவனே


ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளியின் பாஷ்யம் (சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே. யம். இராஜ கணபதி தீஷிதர் அவர்களால் எழுதப்பட்டது)
1. சிவபுத்ர :
சிவனுக்குப் புதல்வன். மங்கள கரமான, மிகவும் அழகான வடிவுள்ளவன். சிவம் என்னும் சொல்லுக்குப் பொருள் பல. அந்தப் பல பொருள்களும் நிறைந்த வடிவானவன் - விநாயகர் சுப்ரமண்யரைப் போல, சிவனுக்குப் பிரியம் வாய்ந்த குமாரன். ஆகையால் எங்கும் எப்போதும் எல்லோராலும் போற்றப்படுகின்றனன்.
2. மஹாதேஜா :
அதிக காந்தி (ஒளி) படைத்தவன். ஒப்பற்ற பலம் உள்ளவன்.
3.சிவகார்ய துரந்தர :
பரமசிவனின் கட்டளைப்படி சகல காரியங்களையும் நடத்துபவன்; அல்லது அந்தக் காரிய பாரங்களை வகித்தவன். மங்களகரமான கிரியைகளை கொண்டவன். ஆகவே அமங்கல கார்ய மற்றவன்.
4. சிவப்ரத :
சிவனுக்கு இஷ்டத்தை அளிப்பவன். எல்லோருக்கும் மங்களத்தை அளிப்பவன்.
5. சிவஜ்ஞானி : சிவனை அறிந்தவன், மங்களகரமான அறிவுள்ளவன்
6. சைவ தர்ம ஸுரக்ஷித :
சிவனது தர்மங்களைக் காப்பாற்றுபவன். அதாவது சிவனது காயில் குளம் பூஜை அவைகளுக்குரிய பொருள்கள் எல்லாம் இவனால் தான் ரக்ஷிக்கப்படுகின்றன. 7. சங்கதாரீ :
சங்குதரித்தவன், வனபதியான படியால் தனது வரவைத் தெரிவிப்பதற்கென சங்கை கைக்கொண்டவன்.
8. ஸுராத்யக்ஷ : தேவர்களுக்கு முன்னுள்ளவன். தேவர்களால் போற்றப்படுகிறவன்.
9. சந்த்ர மௌளி : தனது தந்தையைப் போல மதியைச் சூடியவன்.
10. ஸுரோத்தம : மேலான தேவர்களைக் கண்டவன். மேலான தேவன்.
11. காமேச: மன்மதனுக்கு ஈசன். மன்மதனால் போற்றப்படுபவன்.
12. காம தேஜஸ்வி : மன்மதனுக்கு ஒப்பானவன்.
13. காமாதி பல ஸம்யுத :
அடியவர்களுக்கு அனுக்ரஹிக்க வேண்டி காமம், அர்த்தம், தர்மம், மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களைக் கைக் கொண்டவன். இச்சா ரூபிணிகளான ஸ்திரீகளால் அளிக்கப்படும் பலனோடு கூடியவன்.
14. கல்யாண : மங்கள ரூபன்.
15. கோமளாங்க : அழகான கை கால் முதலிய அவயங்கள் உடையவன்.
16. கல்யாண பலதாயக : மங்களத்தை அளிப்பவன். திருமணம் ஆகாத கன்னியர்க்கும் புருஷர்களுக்கும் விவாஹத்தை நடத்தி வைப்பவன். ஆகையால் விவாஹத்துக்கு முன் இவனை உலகம் போற்றுகிறது. (ஓர் வெள்ளித் தகட்டில், ஊஞ்சல் மீது ஓர் தம்பதியர் அமர்ந்துள்ளது போல் உருவாரம் செய்து, அதை முறைப்படி பூஜித்து சபரிமலைக்குக் காணிக்கையாக செலுத்தினால் நீண்ட காலமாகத் தடைப்படும் திருமணங்களும் கை கூடிவரும்)
17. கருணாப்தி : கடல் போன்ற தயை உள்ளவன்.
18. கர்மதக்ஷ : உலக காரியங்களை நடத்துவதில் வல்லவன்.
19. கருணாரஸ ஸாகர : சிருங்காரம் முதலான ஒன்பது ரஸங்களில் கருணாரஸத்தையே கடலாக, அதாவது அதிகமாகக் கொண்டவன்.
20. ஜகத்ப்ரிய : உலகிற்கு ப்ரியமானவன். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு கொண்டவன்.
21. ஜகத்ரக்ஷக: உலகத்தைக் காப்பவன்.
22. ஜகதானந்த தாயக: உலகுக்கு ஆனந்தம் அளிப்பவன்.
23. ஜயாதி சக்தி ஸம்ஸேவ்ய : ஜயை, விஜயை முதலான சக்திகளால், அல்லது ஜயாதி என்னும் சக்தி மந்திரங்களால் நன்றாக ஸேவிக்கப்பட்டவன். யுத்தத்தில் வெற்றி பெற முதலிலும் முடிவிலும் தனது பரிவாரங்களால் போற்றப்படுபவன்.
24. ஜனாஹ்லாத : ஜனங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பவன்.
25. ஜிஷுக : வெற்றியை விரும்புகிறவன்.

Wednesday, March 25, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -1
என் யூரோ சர்ஜன் நல்ல ஐயப்ப பக்தர். 2 வருஷம் முன் தீபாவளி சமயத்தில் ஆரம்பித்த யூரிடரிக் ஸ்டோன் பிரச்சினை முதல் பலதுக்கும் உதவி இருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு உதவின்னு கேட்கிறப்ப.... மறுக்க முடியுமா?
ஒரு நாள் அசிஸ்டண்ட் சர்ஜன்கிட்டேந்து மெசேஜ் - இவருக்கு சஹஸ்ரநாமம் உரை வேணும்ன்னு. அப்படி கேள்விப்பட்டா சாதாரணமா நினைவுக்கு வரது விஷ்ணு சஹஸ்ரநாமந்தானே?
ஆனா எதோ சந்தேகம் தட்டி எந்த சஹஸ்ரநாமம் ன்னு கேட்டேன். அதானே பிஜி கேள்வி கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு அப்பறமா ஐயப்பன் சஹஸ்ரநாமம் ன்னு மெய்ல் அனுப்பினார்! அட அப்படி ஒரு சஹஸ்ரநாமம் கூட இருக்கானான்னு ஆச்சரியப்பட்டு வழக்கமா சம்ஸ்க்ருத சமாசாரம் தேடற sanskritdocuments.org  போய் பாத்தா, அட ஆமா இருக்கு!
ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி
சரின்னு இறக்கியாச்சு. ஆனா அவர்கேட்டது அர்த்தம்தானே?
இது எனக்கு ஒரு பிரச்சினை. நிறைய பேர் எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியும்ன்னு நினைக்கிறாங்க. வேத அத்யயனம் செஞ்சதால போலிருக்கு. இந்த கால் கட்டத்தில முக்காவாசி வேத அத்யயனம் செய்யறவங்களுக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. இப்பத்தான் ஶ்ரீ மடத்தில வேதம் அத்யயனம் செஞ்சவங்க சம்ஸ்க்ருதமும் பாஸ் பண்ணனும்ன்னு விதி கொண்டு வந்து இருக்காங்க.
எங்கயோ போய்ட்டேன். 
சரி கூகுளார் தயவு பண்ணுவார்ன்னு தொடர்ந்து தேடினா ஒண்ணும் கிடைக்கலை. பேஸ்புக் குருசாமி மோகன்கிட்ட எனி எல்பு ன்னு கேட்டா கொடுக்கலை. 
சரி கஷ்டமான வழில இறங்கிட்டேன்.
இணைய சம்ஸ்க்ருத டிக்‌ஷனரி திறந்து வெச்சுகிட்டு வார்த்தைகளை உடைச்சு பொருள் பாக்க ஆரம்பிச்சேன். ஒரு பாதி தேறித்து. மீதி? பையரை கன்சல்ட் பண்ணலாம்ன்னு கூப்டு விவரம் சொன்னா "அட, நீ ஏன்பா கஷ்டப்படறே? அது செஞ்சிருப்பாங்க" ன்னு சொன்னார். ரெண்டு நண்பர்கள் இருக்காங்க. கேட்டுச்சொல்லறேன்னார். அது படியே கேட்டு "இருக்கு. ஆனா நண்பர் காலை உடைச்சுண்டு ஆபரேஷன் செஞ்சு ஆஸ்பத்திரில இருக்கார். வீட்டுக்கு போனதும் அனுப்புவார்" ன்னு ... அப்பாடா!
ஒரு வாரத்தில புத்தகம் வீடு தேடி வந்துது. நல்ல தடிமனான புத்தகம். அதுல ஐயப்பன் சம்பந்தமா பலதும் இருந்தது.
கொண்டு போய் கொடுத்தேன்; யூரோ சர்ஜன் அப்படியே புளகாங்கித வசப்பட்டுப்போயிட்டார். ரொம்ப மரியாதையோடவாங்கி புரட்டிப்பாத்து அங்க இருந்தஐயப்ப படத்துகிட்ட வெச்சு... இந்தமாதிரி பக்தி நமக்கு இல்லியேன்னு நினைச்சுண்டேன்!
சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் அவர்கள் பாஷ்யம் எழுதி இருக்கார்.
அடுத்த பதிவுலேந்து வரிசையா போடலாமா?