Pages

Friday, February 27, 2009

மீள் பார்வை - பஞ்ச பூதங்கள்



முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான்.
அதிலேந்து வாயு.
வாயுலேந்து அக்னி.
அக்னிலேந்து நீர்.
நீரிலேந்து மண்.

இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.
இதுக்கெல்லாம் இப்ப பேர் சூக்கும பஞ்ச பூதங்கள் அல்லது தன் மாத்திரைகள்.

மாத்திரைகள்? இல்லை இல்லை நம்ம சாப்பிடற மாத்திரை இல்லை. குழப்பமா இருந்தா இந்த தன்மாத்திரையை விட்டுடலாம். பஞ்ச பூதங்கள் நமக்கு ஏற்கெனெவே தெரிஞ்சதால அதையே வெச்சுக்கலாம். இவை சூக்கும பஞ்சபூதம் நாம பாக்கிற பஞ்சபூதம் இல்லைன்னு நினைவிருந்தா போதும்.
ஆனா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இவை இருக்கும்.
ஆகாசத்திலே வாயு முதலான மத்தது நாலும் இருக்கும். வாயுவிலே அக்னி முதலா மத்தது மூணும் இருக்கும்...இப்படியே...
இப்படி ஒண்ணுலேந்து ஒண்ணு வந்ததாலே ஒவ்வொன்னும் அது வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன்மாத்திரைகளோட குணமும் கொண்டு இருக்கும்.
குழப்பிட்டேனா?

ஆகாசத்தின் குணம் எல்லாத்துக்கும் இடம் தருவது.
வாயுவுக்கு இந்த குணமும் உண்டு. மேலும் அதோட இயற்கையான சலன குணமும் உண்டு.
அக்னிக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல் கூட அதோட குணமான உருவமும் உண்டு.
நீருக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் கூட அதோட குணமான ருசியும் உண்டு.
மண்ணுக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் ருசி, கூட அதோட குணமான மணம் உண்டு.

இவற்றினால அனுபவிக்கிற சாதனமான தநு - சூட்சும உடல்கள் உண்டாகும்.

36.
விட்சேப சக்தியில் தன் மாத்திரையான சூட்சும பூத உற்பத்தி கூறல்.

தோற்றமாஞ் சத்திதன்னிற் சொல்லிய விண்ணாம் விண்ணிற்
காற்றதாங் காற்றிற்றீயாங் கனலினீர் நீரின்மண்ணாம்
போற்றுமிவ் வைந்துநொய்ய பூதங்களென்று பேராம்
சாற்றுமற் றிவற்றிற்போக சாதனதநு வுண்டாகும்

[முன்] சொல்லிய தோற்றமாம் சத்திதன்னில் (விட்சேபசக்தியில்) (சத்தத்தின் மாத்திரையான) விண்ணாம்; விண்ணிற் (ஸ்பரிசத்தின் மாத்திரையான) காற்றதாம்; காற்றின் (ரூபத்தின் மாத்திரையான) தீயாம்; கனலின் (ரஸத்தின் மாத்திரையான) நீர்; நீரின் (வாசனையின் மாத்திரையான) மண்ணாம். போற்றும் இவ்வைந்தும் (இந்த 5 தன் மாத்திரைகளும்) நொய்ய (சூட்சுமமான) பூதங்கள் என்று பேராம். சாற்றும் இவற்றில் போக சாதன[மான] தநு (சூட்சும தேகங்கள்) உண்டாகும்.

[விட்சேப சக்தியில் இருந்து பஞ்ச பூதங்களின் தன்மைகள் உண்டாகும்]
--
தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும் இந்த சூக்கும பஞ்ச பூதங்கள் (அதாவது இந்த தன்மாத்திரைகள்) ஐந்திலும் தொடர்ந்து கூடி நிற்கும்.

அதாவது சத்வம் ரஜஸ் தமஸ் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும்.

முன்னே சத்வத்திலே சத்வம் விஷ்ணு, சத்வத்திலே ராஜசம் ப்ரம்மா, சத்வத்திலே தாமசம் ருத்திரன் ன்னு சொன்னது போல..

இப்ப தாமசத்தின் ஒரு பகுதியான விட்சேபத்திலேயும் இதே போல வித்தியாசம். ஒவ்வொரு தன்மாத்திரையுடனும் இந்த சத்வ, ரஜ, தமஸ் குணங்கள் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும்.

அதோட இல்லாம 5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.




Thursday, February 26, 2009

மீள் பார்வை- தாமச குணத்திலே படிகிற ப்ரம்ம சாயை




சரி அடுத்து தாமசம் என்கிற தமஸ்.

[மூல புத்தகத்திலே கொஞ்ச தூய தமிழா இருக்கு. ராசதம் ன்னு சொன்னா ராஜசம். மூலத்தை மாத்துக்கூடாது என்கிற கொள்கையாலே அப்படியே போடறேன். குழம்ப வேண்டாம்.]

சத்வ ஈசன் ஜீவர்களை படைச்சுட்டான். இந்த ஜீவர்களுக்கு புழங்கவும் வேலை செய்யவும் அனுபவிக்கவும் ஏதோ ஒரு களம் (field) வேணுமே! அந்த களம் இந்த தமஸாலதான் உருவாகும்.
ஆமாம் தமஸோமா ஜ்யோதிர் கமய ´தமஸ்´ தான்.

இந்த தமோ குணத்திலே பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை இரண்டா பிரியும். ஒண்ணு ஆவரணம். இரண்டாவது விட்சேபம். (விக்ஷேபம்)
ஆவரணம் என்கிறது மறைப்பு. விட்சேபம் என்கிறது பல வகையா தோன்றுகிற விஷயம்.

ஆவரணம்ன்னா மறைப்பு. எந்த சக்தி நாம நம்மை சரியா, உண்மையா பாக்க முடியாம மறைக்கிறதோ அதுதான் ஆவரண சக்தி. இதோட சேட்டையாலதான் நாம ப்ரம்மம்ன்னு தோணாம வேற மாதிரி தோணுது. என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த நினைப்பை நீக்க முடியலியே! அது அவ்வளோ பவர்புல்! அனுபவத்திலே நம்ம மனசிலே இருக்கிற ஆசாபாசங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இதுவே காரணம்,
இந்த ஆவரணம் போச்சுனாலே ஞானம் வந்துடும். ஆனா அவ்வளோ சுலபமில்லையே!



இரண்டாவதான விட்சேபம் சுவாரசியமானது!
ஆங்கிலத்துல multiplicity of phenomenon.
இந்த உலகம் பலவிதமா இருக்கு. மனிதர்களையே எடுத்துக்கலாம். ஒத்தர் மாதிரி ஒத்தர் இல்லே. தோற்றத்துல அப்படி இருந்தாக்கூட குணத்தில அப்படி இல்லே. இரட்டையர்கள் கூட கொஞ்சமாவது வித்தியாசமானவர்கள்தாம்.
அப்புறம் எத்தனை எத்தனை மிருகங்கள், தாவரங்கள்... தெரிந்தது, தெரியாதது. உலகம் பலவிதமா இருக்கு. அதோட...

இந்த உலகம் மாறிட்டே இருக்கு. ஒரு கணத்திலே இருந்தது அடுத்த கணம் இல்லை. மாலை சூரியன் அஸ்தமிக்கிறப்ப பாருங்க. வண்ணக்கோலங்களை மாறிட்டே இருக்கிறதை!
நாமும் ஒரு செகண்ட் இருக்கிறாப்பல அடுத்த செகண்ட் இல்லை. உடம்பில பல செல்கள் செத்து பலது புதுசா உருவாகிகிட்டு இருக்கு!
இன்னிக்கி பாத்த வானம் நாளை அதே போல இல்லை. தாவரம் அதே போல இல்லை.

உலகம் பலவிதமா தோணுகிறதும் இப்படி எல்லாமே புதுசு புதுசா விதவிதமா மாறிகிட்டே இருக்கிறதும் விட்சேப சக்தியாலதான்.
ரெண்டுமே தாமசத்திலேந்து வந்தாலும் ஆவரணம் பொல்லாது விட்சேபம் நல்லது. ஏன்னு அப்புறம் பாக்கலாம்.

35.
சீவ ஈஸ்வரர்களுக்கு சூட்சும சரீராதி உண்டான முறைமை கூறத்துவங்கி முதலில் சக்திகளின் தோற்றம் சொல்லல்:

ஏமமா யாவினோ தவீசனா ரருளி னாலே
பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுண் டாகத்
தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்
வீமமா மூட லென்றும் விவிதமாந் தோற்ற மென்றும்.

ஏம மாயா வினோத ஈசனார் அருளினாலே, பூமலி (பொலிவு மிகுந்த) உயிர்கட்கு எல்லாம் போக சாதனம் (ஆன சூக்கும தேகம்) உண்டாக தாமத குணம் இரண்டு சக்தியாய் பிரிந்து தோன்றும். வீமமா (பயங்கரமான) மூடல் (ஆவரணம்) என்றும் விவிதமாம் தோற்றம் (விட்சேபம்) என்றும்.
தாத்பர்யம்: சித்தின் நிழல்தங்கிய தமோ குணமானது அறிவு விளங்காததாகிய ஆவரண சக்தியாகவும் அறிவு விளங்குவதாகிய விட்சேப சக்தியாகவும் தோன்றியது.

சரி, சீவன் வந்தாச்சு. அவனுக்கு வேலை செய்ய சக்திகளும் சாதனங்களும், விஷயங்களை உணர ஞான புலன்களும் வந்தாச்சு. ஆனா எதை உணர முடியும்? எதில எப்படி எதுக்கு வேலை செய்யணும். அதுக்கு ஏதோ சமாசாரம் வேணுமே? அதுக்குத்தான் விட்சேப சக்தி இருக்கு.
அப்படி என்ன படைச்சு இருக்கு? நம்மோட உடம்பு (சுவரை வெச்சுதானே சித்திரம் எழுத?) அந்தக்கரணங்கள் (இது வழியாதான் மோட்சத்துக்கு வழியை தேடணும்) புவனங்கள் - அதாங்க உலகங்கள் (இல்லாட்டா எங்கே வாழறது?) போகங்கள் (உடல்லே உயிர் தங்கணுமே?) இந்த விட்சேப சக்தியால சீவர்கள் அஞ்ஞானம் ஒழிஞ்சு மோக்ஷம் அடைய எது தேவையோ அதை எல்லாம் பகவான் படைச்சு இருக்கான். இதனால்தான் ஆவரணம் மோசம்; விட்சேபம் நல்லதுன்னு சொல்கிறது.

சரி. இப்ப இதெல்லாம் எப்படி தோன்றியது? இதுக்கு ப்ரம்மத்தோட சங்கல்ப மாத்திரத்திலேயே எல்லாமே பட்டுனு வந்துடுத்து என்கிறவங்கலும் இருக்காங்க. சிலர் வெவ்வேறு விதமா பதில் சொன்னாலும் இப்ப பாக்க போகிறது பரவலா ஒத்துகிட்டது.
முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான். அதிலேந்து வாயு. வாயுலேந்து அக்னி. அக்னிலேந்து நீர். நீரிலேந்து மண்.
இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.


Wednesday, February 25, 2009

மீள் பதிவு -பரப்பிரம்மத்திலேந்து வருகிற ராஜச குணம்



அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாம மாற்றம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.
சிவனே ன்னு கிடக்கிற சத்வம் இறைவனாகவும், எப்பவும் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கிற ராஜசம் இந்த இயல்புடைய மனிதர் (ஜீவன்கள்) ஆகவும் ஆகிறது புரிஞ்சுக்க முடியுதுதானே?

33.
ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே

ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.

இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).

இப்படி உண்டாகிற சீவர்களுக்கு அந்த ராஜஸ குணமே ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். அதாவது சீவர்கள்தான் ராஜசம்; ராஜசம்தான் சீவர்கள்.

வித் என்பது ஞானம். அவித்தை ஞானமல்லாதது, அதாவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திலேயே இருக்கிறதுதானே சீவர்களாகிய நம்மோட இயல்பு? அவித்தை கணக்கில்லாம இருக்கிறது. உண்மை ஒண்ணுதான். பொய் பலவாகவும் இருக்குமில்லையா? அது போல. இப்படி கணக்கில்லாம இருக்கறதால கணக்கில்லாத வகை சீவர்களையும் நாம் பாக்கலாம்.

ஈசன் சத்வத்திலே விஷ்ணு, ப்ரம்மா, ருத்திரன் ஆக சத்வ, ராஜச, தாமசம் வெளிப்பட்டாப்போல சீவர்களிலேயும் இதே போல பிரிவுகளை பாக்கலாம்.
சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)
ராஜசம் அதிகமாகும் போது சீவர்கள் எப்பவும் வேலை செய்கிறவங்களா இருப்பாங்க. உலகமே இவங்களாலதான் இயங்குது!
தாமசம் அதிகமாகும் போது சோம்பி திரிஞ்சு மயக்கத்தோட காலம் போக்கறவங்களா இருப்பாங்க.

முன்னம் சொன்னது போல எல்லாருக்குமே ஒரு குணம் அதிகமானாலும் மற்ற 2 குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும்.

34
அழுக்கொடு பற்றுஞ்சீவர்க் கதுவேயா நந்தகோசம்
சுழுத்திகா ரணசரீரஞ் சொன்னதிம் மட்டுமோக
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவாரோபஞ் சொன்னோம்
வழுத்துசூக் குமவாரோப வழியுநீ மொழியக்கேளாய்

அழுக்கொடு (அவித்தையுடன்) பற்றும் (அவித்தையில் பொருந்தும்) சீவர்க்கு அதுவே (அந்த அவித்தையே) ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். சொன்னது இம் மட்டும் (இவ்வளவும்) மோக (மயக்கமாக தோன்றிய பிரக்கிருதியின்) முழுக்குணத்து இரண்டால் (சத்துவ, ரஜோ குணங்கள்) வந்த மூல ஆரோபம் (காரண அத்தியாசம்) சொன்னோம். வழுத்து (கூறாத) சூக்கும ஆரோப வழியும் மொழிய நீ கேளாய்.

{ஸ்படிகம் அடுத்த வண்ணம் ஆவது போல அவித்தை. அவித்யா காரியங்களில் பொருந்துதலால் அது சீவனின் இயல்பும் ஆனதால் "அழுக்கொடுபற்றும்”. சுழுத்தி சுகத்தையும் ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் பிரியம், மோதம், பிரமோதம் முதலான சகத்தை அனுபவிப்பதால் "ஆனந்த மய கோசம்”. ஜக்ரத் ஸ்வப்ன அவத்தை அடங்கியிருத்தலால் "சுழுத்தி". சீவன் தோன்றினதற்கும் ஸ்தூல சூட்சும சரீரம் உண்டாவதற்கும் மூலம் ஆகையால் "காரண சரீரம்".}




Tuesday, February 24, 2009

மீள் பதிவு -ஈசன்



உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் இதை எல்லாம் பாக்க முடியாதே! ஆனா ஆது எல்லாமே இருந்தது, செத்து போன பிறகு காணோம்ன்னு நமக்கு தெரியும். இப்படி பாக்க முடியாம இருக்கிறதை சூக்ஷுமமா இருக்கு என்பாங்க. இவை எல்லாமா சேர்ந்து ஒரு பேர். சூக்ஷ்ம சரீரம்.
---
இந்த சூக்ஷ்ம உடம்பு நாம் விழிச்சுகிட்டு இருக்கிறப்ப இருக்கும். செத்து போன பிறகு இருக்காது.
நடுவிலே தூங்கி கனவு காணும்போதும் இருக்கும். கனவு காணும்போது நம்ம எங்கோ போகிறோம், வரோம், ஆனா உடம்பு இங்கேயேதான் இருக்கு. அப்ப அன்ன மய உறை- தூல உடம்பு சும்மாதான் கட்டை மாதிரி கிடக்கு. ஆனா உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் எல்லாம் சேத்து- என்ன பேர் சொல்லுங்க? ஆங்! சூக்ஷ்ம சரீரம், அது இருக்கும். கனவிலே எங்கோ போகிறோம். கை கால்கள் வேலை செய்வதா உணர்கிறோம். நான் என்கிற நினைப்பும் இருக்கு. மூச்சு விட்டுகிட்டுதான் இருக்கோம்.
இந்த கனவு நிலையிலே - அவஸ்தையிலே- சூக்ஷ்ம - சூக்கும சரீரம் இருக்கும்.

தூங்கி கனவு கூட இல்லாத நிலையிலே நாம ஆனந்தமா இருப்போம். கனவிலே அப்படி சொல்ல முடியாது. பயங்கர கனவு வந்து கஷ்டப்பட்டாலும் படுவோம். சுகமான கனவுகளும் வரலாம். ஆனா ஆழ் துயிலுக்கு பின்னே முழுச்சுகிட்டு அருமையான தூக்கம் சொகம் என்போம். இதுவே ஆனந்த மய கோசம்..
============
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இது ஆழ்துயில் போல- சுசுப்தி நிலை. இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு ஆனந்தமா இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...

சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். சினிமாதான் பாக்கிறோம், இது உண்மையில்லை என்கிறது போல. நமக்கு அப்படி தெரியாது, சினிமாலேயே ஒடுங்கி போனது போல.

இனிப்பிலேயே சர்க்கரை இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, மாவு பண்டங்களோட அசட்டு இனிப்பு ன்னு பலவிதமா இருக்கே! முதலாவது திகட்டிடும். இரண்டாவது நிறையவே சாப்பிடலாம். திகட்டாது. மூணாவது இனிப்பிலே சேத்தியாங்கிற அளவு கம்மியாவே இனிப்பு.

அது போல இந்த சத்துவத்திலேயே இன்னும் அதிக பிரிவா சத்துவம் ராஜசம் தாமசம் ன்னு பிரியும்.
முன்னேயே ஒரு வாக்கியம் பாத்தோம். முக்குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொண்ணு தலைதூக்கும்.
ஈஸ்வரனா இருக்கிற பிரம்மம் ஒண்ணேதான். இருந்தாலும் ஈஸ்வரன் நேரம் செயல்களுக்கு தகுந்தாப்போலே பலதா இருப்பான்.

ராஜசம் அதிகமாகும் போது பிரம்மனா இருந்து படைக்கிறான்.
சத்துவம் அதிகமாகும் போது விஷ்ணுவா இருந்து காக்கும் தொழில் செய்யறான்.
தாமசம் அதிகமாகும் போது சிவனா இருந்து அழிக்கும் தொழில் செய்கிறான்.

[சைவர்கள் சிவனுக்கே 5 தொழில்ன்னு சொல்லி இதை எல்லாமே சேத்துடுவாங்க. அப்படி சொல்கிறபோது அவங்க சிவன் என்கிற பேரிலே பரம்பொருளைத்தான் சொல்கிறாங்க. அதே போல சாக்தர்களூம், வைணவர்களும். அழைக்கிற பொருள் ஒண்ணே; பெயர்தான் வேற வேற. விநாயக புராணம் பாத்தா அவரே முழுமுதற் கடவுள்ன்னு சொல்லும். சிவ புராணம் பாத்தா சிவன்தான் முதல்லே. இப்படியே மத்தது எல்லாமும். படிக்கிறவங்களுக்கு புரியணும், குழம்பக்கூடாதுன்னு இப்படி சொல்லி இருக்கு. ஆனா நாமோ எல்லாத்தையுமே படிச்சுட்டு குழம்பறோம்! பல வழிகளிலே ஒரே நேரத்துக்கு போகப்பாக்கிற மாதிரி இது!]

{பரப்பிரம்மத்தின் சத்துவ பாகத்தில் இருந்து ஈஸ்வரன் என்கிற கடவுள் தோன்றினார். அவரே மூன்று விதமாக செயல்படுகிறார். அப்போது அவருக்கு பெயரும் மாறுகிறது.}


Monday, February 23, 2009

சூக்ஷ்ம சரீரம்.


சாதாரணமா நாம முழிச்சிட்டுதான் இருக்கோம். வாத்தியார் கணக்கு போட சொல்கிரப்பவும், டாமேஜர் வேலையை முடிச்சுட்ட இல்லன்னு கேட்கிரப்பவும் முழிக்கிற முழிப்பு இல்லே! நனவு! விழிப்பு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிகிறது. ஆபத்து வராம ஜாக்கிரதையா இருக்கோம்.
அஹா! அதான் ஜாக்ரத் என்கிறது.

அப்புறம் வாத்தியார் பாடம் நடத்தறப்ப போர் அடிச்சுதுன்னாலும் ஆபீஸ்லேயும் சொகமா தூங்கறோம். அப்ப நம்ம அபிமான தேவதைகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடறாங்க. இப்படி கனவு காண்றோம்! பின்ன நனவுலேயா வந்து ஆடுவாங்க? அம்பி, யாருப்பா நீ ன்னு கேப்பாங்க. இது கனவு நிலை.

நாலு நாள் முழிச்சி கோட் எழுதி ப்ராஜக்ட் முடிச்சு கொடுத்திட்டு ஒரு வழியா அப்பாடான்னு போய் தூங்கறோம். செம தூக்கம். ஒரு வழியா முழிச்ச பிறகு ரூம் மேட் என்னடா எப்படி இருக்கேன்னு கேக்கிறான். அடடா! செம தூக்கம். சொகமா தூங்கினேன் ஒரு கனா கூட கிடையாதுங்கிறோம். ம்ம்ம்ம்ம்...விஞ்ஞானிகள் சொல்கிறாங்க; கனா காணாம யாருமே இருக்க மாட்டாங்க. அதை மறந்து போயிடுவாங்க. நம்ம ஜீவா மாதிரி முழுச்சுகிட்ட உடனே என்ன கனவு கண்டோம்ன்னு எழுதி வைக்கலைனா அது RAM ல இருந்த தரவு ஷட் டவுன் பண்ண கணினியிலே மறைஞ்சு போற மாதிரி மறந்து போயிடும்.
கனவு காணாமலும் பல நேரம் இருப்போம். இது ஆழ் துயில். இதுக்கு புரியாத மாதிரி பேர் வைக்கணும்நு சுசுப்தி என்கிறாங்க. சுழுத்தின்னும் சொல்வாங்க.

ஜாக்கிரதையோட இருக்கிற சமயம் நாம எதிரே ஆளை பாக்கிறோம். ஆளா? சாப்பாடால வளந்த உடம்புதான் முக்கியமா கண்ணுல படுது. அது என்ன? பாக்கிற ஆள் ராமன் நு வெச்சுப்போம். அந்த கை ராமனா? இல்லை. அந்த கால்? இல்லை. பின்னே? அந்த உடம்பை முழுக்க விவரிச்சாலும் அது ராமன் இல்லை. பின்னே? அது ராமனோட உடம்பு. அதாவது நாம பாக்கிரது சாப்பாட்டால வளர்ந்த ராமனோட உடம்பு. அன்ன மய கோசம். அன்னம் னா உணவு. ஆந்திரால இன்னும் சமைத்த அரிசி அன்னம்தான். தமிழ் வார்த்தையானாலும் நாம பயன்படுத்தறதில்லே! கோசம் ன்னா உறை. Cover.
இந்த பார்க்கக்கூடிய தொடக்கூடிய கண பரிமாணம் இருக்கிற உடம்பை தூல (ஸ்தூல) சரீரம் அப்படின்னும் சொல்கிறாங்க.

ஒருவர் இறந்து போனால் இந்த உடம்பு அப்படியேதான் இருக்கு, கொஞ்ச நேரமாவது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அழுகி சிதைந்துபோகும். அதுக்கு முன்னாலே அதை கொண்டு எரிச்சுடுவோம் அல்லது புதைச்சுடுவோம். டாக்டர் வந்து பரிசோதனை பண்ணி பாத்துட்டு சினிமால வர மாதிரி கண்ணாடியை கழட்டிட்டு ஐ ஆம் சாரி ன்னுட்டு போயிடுவார். ஏன் நாம அழறோம்? ராமனோட உடல் அங்கேயே இருக்கே?
உடல் அங்கதான் இருக்கு. ஆனா இந்த உடல் பாக்க முடியாது, மூச்சுவிடாது, கை கால்கள் அசையாது. இந்த உடலால சிந்தனை பண்ண முடியாது.
அப்ப ஏதோ காணாம போச்சு! என்ன அது?
இப்ப செத்து போனா தூய தமிழ்லே டெத் ஆயிடிச்சுங்கிறோம். முன்னேயெல்லாம் ப்ராணன் போயிடுத்து ம்பாங்க. இந்த ப்ராணன் என்கிறது நம்ம உடம்பிலே சில வேலைகள் நடக்க தூண்டுதலா இருக்கிற சக்தி. அது செய்கிற வேலையை பொறுத்து அதுக்கு 5 அல்லது 10 பேர் உண்டு. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதையே பிராண மய கோசம் - ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை என்கிறோம்.
இந்த ப்ராணன் போகு முன்னே கூட கை கால்கள் எல்லாம் செயலிழந்து போயிடும். இப்படி செயல் செய்கிரதெல்லாம் கர்ம இந்திரியங்கள் என்கிறாங்க. செத்துப்போனது என்ன சூப்பர் படமா இருந்தாலும் பாக்க முடியாது; ஓல்ட் ஸ்பைஸ் சென்டா இருந்தாலும் வாசனை நுகர முடியாது, டேய் ராமா ராமான்னு கரடியா கத்தினாலும் கேட்க முடியாது. அதாவது உணர்கிற -தெரிஞ்சுகிற சக்தி போச்சு. இப்படி உணர்கிறது ஞான புலன்கள். ஞான இந்திரியங்கள்.
செத்து போனது எதுவோ அது யோசிக்க முடியுமா? செத்து போயிட்டோம்ன்னு அழுமா? அடுத்த பிறவி எடுப்போம்ன்னு நிச்சயமா இருக்குமா? என்னென்ன இந்த வாழ்க்கையிலே சாதிச்சோம்ன்னு எண்ணுமா? நான் ன்னு ஒரு நினைப்பு அதுக்கு இருக்குமா?
ஏதும் இராது. இந்த விஷயங்களை அந்தக்கரணம் என்கிறோம். இந்த அந்தக்கரணம் காணாமல் போயிடும்.
இப்படி இருக்கிற உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் இதை எல்லாம் பாக்க முடியாதே! ஆனா ஆது எல்லாமே இருந்தது, செத்து போன பிறகு காணோம்ன்னு நமக்கு தெரியும். இப்படி பாக்க முடியாம இருக்கிறதை சூக்ஷுமமா இருக்கு என்பாங்க. இவை எல்லாமா சேர்ந்து ஒரு பேர். சூக்ஷ்ம சரீரம்.




Saturday, February 21, 2009

சத்துவ குணத்திலே படிகிற ப்ரம்ம சாயை


முதல்லே பாக்கபோறது சத்துவ குணத்திலே படிகிற சாயை என்ன ஆகிறது ன்னு.

நல்லா தெளிஞ்ச தண்ணீர் போல இது தோன்றும்.
சத்துவ குணத்தோடே விரவி கலந்து இருந்தாலும் குணங்களோடேயும் மாயையுடனும் ஒட்டாது. ஒரு க்ரிஸ்டல் துண்டு இருக்கு. அதுக்குன்னு ஒரு நிறமும் கிடையாது. பக்கத்திலே இருக்கிற பொருளோட வண்ணம் அதிலே தெரியும். அது போல இந்த நிழலும். தெரியும்; ஆனா ஒட்டாது.

இதுக்கு அந்தர்யாமி ன்னு பெயர். இது எல்லா சரீரங்கள் உள்ளேயும் இருக்கும். அதனாலதான் அந்தர்யாமின்னு பேர். ஜடமா இருக்கிற உடம்புக்கு உயிரோட்டம் கொடுத்து ஆட்டுகிறவன் இவனே. இவனை முன்னிட்டுதான் எல்லா செயல்களும் நடக்குது. இவனுக்கு பெயர் ஈசன் (ஈஸ்வரன்.)

இந்த ஈஸ்வரன் சிவன் இல்லை. அப்படி இங்கே தமிழ் நாட்டிலேதான் ஒரு மாயை இருக்கு. மத்த எல்லா இடத்திலேயும் இப்படி சொன்னா கடவுள் அப்படின்னுதான் புரிஞ்சுப்பாங்க.

32. முக்குணங்களால் ஜகஜீவ பரன் உற்பத்தி. முதலில் பரன் உற்பத்தி:

இக்குணங்களிலே விண்போன் றிருக்குஞ் சிற்சாயை தோன்றும்
முக்குணங்களி னுந்தூயதா முதற்குண மாயையாகும்
அக்குணப் பிரமச் சாயை யந்தரி யாமி மாயை
எக்குணங்களும்பற் றாதோ னிமித்தகா ரணனா மீசன்.

இக்குணங்களிலே (இந்த சத்துவம் முதலான குணங்களிலே) விண் போன்று (ஆகாயம் போல பிரியாமலும், எங்கும் நிறைந்தும், அதிசூக்குமமாயும், பற்றறும்) இருக்கும் சிற்சாயை (சித்தின் பிம்பம்) தோன்றும். முக்குணங்களினும் தூயதான முதற் குணம் மாயையாகும் [சத்துவம் மாயை எனப்படும்]. அக்குண (அந்த சத்துவத்தில்) பிரமச்சாயை (பிரதிபலிக்கும் பிரம சைதன்யத்தின் சொரூபம்) அந்தரியாமி [எனப்படும்]. {இந்த அந்தரியாமி காரண சரீரத்தை அபிமானித்துக் கொண்டு சகல சரீர உள்ளீடாக இருந்துகொண்டு ஆட்டுகிறவன்.} மாயை(யிலும்) எக்குணங்களும் (களிலும்) பற்றாதோன் (சம்பந்தப்படாதவன்) நிமித்த காரணனாம்; (யாருடைய சக்தியால் நடக்கிறதோ அவன் நிமித்த காரணன்) இவன் பெயர் ஈசன்.

கீழே ப்ரமத்திலேந்து மூல ப்ரக்ருதியும் அதிலேந்து 3 குணங்கள் வரது, சத்வ குணத்திலேந்து மூன்று விதமா ஈசனின் வெளிப்பாடும் பரிசோதனையா போட்டு இருக்கேன். எப்படி வருமோ பாக்கலாம்.




Friday, February 20, 2009

கேள்வியும் பதிலும்



வாசகர் கடிதம் ஒன்று வந்தது. அருமையான கேள்வி எழுப்பட்டு உள்ளது. கேள்வியும் பதிலும் இதோ:
கேள்வியும்

பொறிதுயில் ஆழ்த்துனருக்கு ஒரு கேள்வி -

தூங்கும்போது 'நான்' இல்லை, ஆனா 'நல்லாத் தூங்கினேன்' ன்னு சொல்றதுக்கு ஏதோ ஒண்ணு இருக்கு, அதுதான் consciousness -னு சொல்றோமே -

அப்படின்னா, நீங்க ஒருத்தரை பொறிதுயில்ல ஆழ்த்தும்போது அந்த consciousness கூட இல்லாம போயிடுதே. அப்ப அது எங்கே போகுது? என்ன ஆகுது? தூங்கும்போதும் ஐம்புலன்களும் விழிப்பாதானே இருக்கு? அதாவது வலியையோ வாசனையையோ அப்பவும் உணர முடியுமே. ஆனா அனஸ்தீஸியாவில் இருக்கும்போது ஒண்ணுமே தெரியறதில்லையே.

விளக்குங்களேன்...

பதிலும்
அருமையான கேள்வி!
பொதுவாகவே பதில் போட்டுட்டலாமா?
ஜாக்ரத், சொப்னம், சுசுப்தி - இது ஒரு மாதிரி வகைப்படுத்தல்தான். இதுக்கும் மேலே துரியம், துரியாதீதம்ன்னு எல்லாம் உண்டு.  பின்னால அஞ்ஞான பூமி ஏழும் ஞான பூமி ஏழும் வரப்போறது. அப்பவும் இந்த மாதிரி சிலது சரியா பொருந்தாது.

ஒத்தர் மயக்கம் போட்டு விழுந்துட்டா இது என்ன நிலை?
ப்ரம்ஹ சூத்திரத்துல என்ன சொல்றாங்கன்னா இது ஒரு ¨பாதி சுசுப்தி-ஆழ்துயில்¨ நிலை. இதோட தாத்பர்யம் என்னன்னா இது ஒரு ஸ்பெக்ட்ரம். நிச்சயமா இவ்வளவுதான்னு சரியா பிரிக்க முடியாது.
 ஆழ்துயில்- சுசுப்தி  நிலையிலே அந்தக்கரணமும் (அகங்காரமாய்),  பிராணனும் மட்டுமே இயங்கும். மத்ததெல்லாம் இயங்காது. அதனால வலி தெரியாது. ரிப்லெக்ஸ் இருக்காது.
அனெஸ்தீசியா ஆழ்துயில் போலத்தான். சாதாரணமா அதிலேந்து வெளி தூண்டுதலை அதிகமாக்கி எழுப்ப முடியும். இங்கே மருந்தோட விளைவால எழுப்ப முடியாது என்பதே வித்தியாசம்.
சிந்தனையை தூண்டியதுக்கு நன்றி!

திவா


Thursday, February 19, 2009

உலகம் எப்படி வந்தது?



சில நூல்களிலே இதே உற்பத்தி வேற விதமாயும் சொல்லப்படுது. சீவர்கள்கிட்டே இருக்கிற பிரிக்க முடியாதது எதுவோ அதை மக தத்துவம் (மஹத்) என்கிறாங்க. இதேதான் அகங்காரம் ஆகும். இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதை அகங்காரத்தில் இருந்து வருகிற வைகரி, தைசதன், பூதாதி தத்துவங்களாக சொல்கிறங்க. இதை மேலே விசாரிக்க வேண்டுமானால் இங்கேயும் இங்கேயும் போய் பாத்து படிச்சு மெய்கண்ட சித்தியார் சுபக்கத்திலே என்ன சொல்கிறார்ன்னு புரிஞ்சதை இங்கே சொல்லலாம்.


ஜகத் உற்பத்தி வேறு வழியாக சொல்லப்படுவது:

31. ஒருவழி யிதுவா மித்தை யொருவழி வேறாச் சொல்வர்
மருவுமவ் வியத்தந் தானே மகதத்துவ மாகு மந்த
அருண்மக தத்துவந்தா னகங்கார மாகு மென்றும்
கருவகங் காரமூன்றாக் காட்டிய குணமா மென்றும்

(சிருஷ்டி கிரமங்களில்) ஒரு வழி இதுவாம். இதை ஒரு வழி வேறாய் [உம் பெரியோர்] சொல்வர். [சீவர்களிடம்] மருவும் (அடங்கியுள்ள) அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் [என்றும்] அந்த அருண் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ (செகத்துக்கு காரணமான அகங்கார தத்துவம்) அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் (வைகரி, தைசத, பூதாதி என மூன்று அகங்காரங்களாகும்) என்றும் [சொல்வர்]

முதலிலே இருக்கிறது சத் சித் ஆனந்தமான பரம்பொருள் மட்டுமே. சத் ன்னா இருப்பு. existence. சித் அறிவு- knowledge. ஆனந்தம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

பிரம்மம் எப்போதுமே அப்படியே இருக்கத்தான் இருக்கும். மாறவே மாறாது.

பின்னே இந்த உலகங்கள் எல்லாம் எப்படி வந்ததுன்னா ஒரு சினிமா படம் போல. இருக்கு, ஆனா உண்மையில்லை. உண்மை இல்லைனாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கு. சில விஷயங்கள் எதிர் பார்த்தபடி நடக்குது. அதால சில பாதிப்பு இருக்கு.
சினிமா பாத்துட்டு வந்த ஆசாமியை என்னப்பா சினிமான்னு கேக்கிறோம். அவரும் கதை சொல்லறார். எப்படி சொல்லறார்?

ஒரு பையன் இருந்தான். இங்கே போனான், இப்படி பண்ணான்னு சொல்கிறார். நாமும் அது அத்தனையும் நடக்கலைன்னு தெரிஞ்சாலும் ஆர்வமா கேக்கிறோம். சொல்கிற கதை கொஞ்சம் உருப்படியா இருந்தா அதுல ஒரு லாஜிக் இருக்கும். சொன்ன விதம் நம்மை பாதிக்கும். முன் காலத்திலே எல்லாம் சினிமா பாத்து பெண்கள் அழவே அழுதுடுவாங்க!

அது போலவே பிரம்மம் எப்போதுமே இருக்கு, இருக்கும் ன்னு தியரில தெரிஞ்சாலும் சினிமா கதை கேட்கிறா மாதிரி இதையும் விசாரிக்கலாம் - உலகம் எப்படி வந்ததுன்னு!
இந்த ப்ரம்மத்திலேந்து மூன்று குணங்கள் வரும்ன்னு பாத்தோம். இந்த குணங்களில சித் - இருப்போட நிழல் - சாயல் படியும். இந்த சாயலை குணத்திலேந்து நம்மால தனியா பிரிக்க முடியாது; குணத்திலே முழுமையா பரவி இருக்கும்; பாக்க முடியாதபடி சூக்குமமா இருக்கும்.

முதல்லே பாக்கபோறது சத்துவ குணத்திலே படிகிற சாயை என்ன ஆகிறது ன்னு.


Wednesday, February 18, 2009

மீள் பார்வை - மூன்று குணங்கள்



சரி சரி, லயத்திலேந்து பிறப்புன்னா அது எப்படி நடந்ததுன்னு கேட்கலாம்.
ஆ! அதுக்கு விடை இருக்கு. இப்படி நடந்ததுன்னு வேதத்திலே, புராணங்களிலே, பாகவதத்திலே எல்லாம் சொல்லி வெச்சு இருக்காங்க. சில வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவா சில வழிகளை அறிஞர்கள் ஒத்துக்கிறாங்க.

மூல ப்ரக்ருதியிலேந்து ஒரு கால கட்டத்திலே ஈஸ்வரனோட உள் நோக்கிய பார்வையாலே மூன்று குணங்கள் தனித்தனியா வெளிப்படும்.
இது முன் பதிவுகளிலே கொஞ்சம் குழப்பி இருக்க வாய்ப்பு இருக்கு. இங்கே சொல்கிற ஈசன் பின்னாலே வருகிற சத்துவ குண பாகமான ஈசன் இல்லை. குழம்பாம இருக்க இதை ப்ரம்மம் னே கூட வெச்சுக்கலாம். ஆனா அப்ப ப்ரம்மத்துக்குன்னு சங்கல்பம் உண்டான்னு எல்லாம் வாதம் பிறக்கும் என்கிறதாலே ஈஸ்வரன்னு சொல்கிறோம்.

இந்த 3 குணங்களைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கிறோம். சத்வம், ரஜஸ், தமஸ். இதை வெளுப்பு, சிவப்பு, கருப்புன்னு உருவகப்படுத்தி இருக்காங்க! வேற விதமா சுத்தம், அழுக்கு, இருட்டு என்கிறார்கள். தெளிஞ்ச தண்ணீர், கலங்கலான தண்ணீர், அழுக்கு தண்ணீர் மாதிரியும் சொல்கிறதுண்டு.
சத்துவம் சில விஷயங்களோட சம்பந்தப்பட்டது. சுத்தம், சாந்தம், ஜீவ காருண்யம், ஈஸ்வர பக்தி, மோக்ஷ நாட்டம், தெய்வ சிந்தனை. நுட்பம் - subtle- என்கிறது இதை குறிக்கும்ன்னு வெச்சுக்கலாம்.
ரஜஸ் - ஒரே வார்த்தை சொல்லனும்னா action. எல்லா உலக விஷயங்களிலும் அனுபவிப்பதிலும் நாட்டம் இருக்கும். துவேஷம், ரோஷம், சாதாரண கோபம், ஆசை இப்படி அடுக்கலாம். இதெல்லாமே ராஜஸ குணங்கள்.
தாமஸம்- தூங்கு மூஞ்சி,heavy, dull, lethargy, தன்னை மறந்த கோபம், அதிகமான ஊண் சாப்பிடறது, அதிக தூக்கம், கனம், அழுக்கு... புரியுதில்லை?

தியானம் செய்கிற ஆசாமி சத்வம்;
சுறு சுறுப்பா ஆக்ரோஷமா விளையாடுகிற ஆசாமி ராஜஸம்;
நல்லா சாப்பிட்டு தூங்கற ஆசாமி தாமசம்.

நண்பரை ¨என்னடா, இன்னிக்கு டல்லா இருக்கே¨ன்னு சில சமயம் கேக்கிறோம். இல்லை ¨என்ன அவ்வளோ சுறு சுறுப்பு இன்னிக்கு¨ என்கிறோம். நாமே சில நாள் சாந்தமா இருக்கிறோம்; சில சமயம் கோபமா இருக்கிறோம். சில சமயம் அழுது வடிகிறோம். ஒரே ஆசாமிதான்!
அதே போல
எல்லாருக்கும், எல்லாத்திலேயும் இந்த 3 குணங்களும் உண்டு. எந்த ஒரு நேரத்திலேயும் ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைவா இருக்கும். அவ்வளவுதான். அதிகமா இருக்கிற விஷயத்தை வெச்சு அதை பேர் சொல்கிறோம்.

29.அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே

அதுதான் (அக்கற்பனை) எப்படி [உண்டாயிற்று] என்றக்கால் (என கேட்பாயானால்) அநாதியாஞ் (ஆதியில்லாத)  சீவர் எல்லாம் பொதுவான  சுழுத்தி [அவஸ்தை] போல அவ்வியந்தன்னில்  (மூலப்பிரகிருதியில்) பொருந்தும் (கருமவாசனையுடன்அடங்கியிருக்கும்).  இது காலதத்துவப் பேர் [அடைந்து] ஈசன் உட்பார்வையாலே முது மூல (முன்னுள்ள பிரகிருதி) சுபாவம் விட்டு (தன்மை விட்டு) முக்குணம் வியத்தமாமே. (முக்குணங்களாய் வெளிப்படும்)

30.
அந்த முக்குணங்களின் பெயர் முதலியன:
உத்தம வெளுப்புச் செம்மை  யுரைத்திடு கறுப்பு மாகும்
சத்துவ குணத்தி னோடு ரசோகுணந் தமோகு ணந்தான்
சுத்தமோ  டழுக் கிருட்டாச் சொல்லுமுக் குணமு மூன்றாய்
ஒத்துள வேனுந் தம்மு ளொருகுண மதிகமாமே

உத்தம (முதலாவதாக) வெளுப்பு, செம்மை,  [அதமமாக] உரைத்திடும் கறுப்பும்
ஆகும். [முறையே] சத்துவ குணத்தினோடு, ரசோகுணம், தமோ குணந்தான் [அவற்றின்
பெயர்]. சுத்தமோடும், அழுக்கு (உடனும்), இருட்டாக[வும்] சொல்லும் [இந்த]
முக் குணமும் மூன்றாகி ஒத்துளவேனும் (ஒத்து இருப்பினும்) தம்முள்
(அவற்றுள்) ஒரு குணம் அதிகமாமே. (மேலானது)


Tuesday, February 17, 2009

மூலப்ரக்ருதி மீள் பார்வை-2



அஹா! காரியம் நடந்துன்னு சொன்னா அது கர்மா ஆயிடுத்து.
அப்ப அதுக்கு எதிர்வினை இருக்கும், பலன் இருக்கும். அதை அனுபவிச்சு தீர்க்கணும் என்கிறது இயற்கை விதி. அப்படி தீர்க்காட்டா?

தீர்க்காட்டா திருப்பி பிறப்போம். அப்படி பிறக்கும்போது மேலும் பல காரியங்களை பண்ணுவோம்; திருப்பி பிறப்போம்.
இப்படி திருப்பி திருப்பி பிறக்கிறதை விடணும் என்கிறதுதான் நம்ம குறிக்கோள். அப்பதான் கஷ்டமில்லாம ஆனந்தமா இருக்கலாம். ஏன்னா பிறப்பில்லாத நிலை பூரணமான நிலை. அங்கே இருப்போம்; எல்லாமே அறிஞ்சு இருப்போம்; ஆனந்தமாயும் இருப்போம். இதைத்தவிர வேற ஒண்ணுமில்லை.
சரி அப்படி ஆகலை, திருப்பி திருப்பி பிறந்தா இப்படியே முடிவில்லாம போய் கொண்டு இருக்குமா?
-----
இல்லை, படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பகல் பொழுது ஆனதும் தூங்க போயிடுவாராம்! அப்போ சிருஷ்டி எல்லாம் நின்னு போயிடும். பிறப்பு எல்லாம் இடை நிறுத்தம் ஆகிடும். பூ,புவ, சுவர் லோகங்கள்லே இருக்கிற அத்தனையும் ஒண்ணா போயிடும். பிரம்மா விழிச்சுக்கொண்டு திருப்பி படைக்க ஆரம்பித்தால் திருப்பி சீவர்கள் தோன்றி தோன்றி... இப்படி ஒரு பகல் என்கிறது ஒண்ணும் அதிகமில்லை ஜென்டில்மென்! நம்ம கணக்கிலே 4,320,000,000 வருஷங்கள்தான்! இரவு அதே நேரம். இந்த நேரத்திலே சிருஷ்டி இருக்காது. இப்படி 360 நாட்கள் ப்ரம்மாவுக்கு ஒரு வருஷம். இப்படி 100 வருஷம் அவரோட ஆயுசு!

அப்புறம் பிரம்மாவோட காலமும் முடிஞ்சு போயிடும். எல்லா சீவர்களும் திருப்பியும் ஒடுங்கிடுவாங்க. இப்படி ஆனது முடிஞ்சு சிருஷ்டி திருப்பி ஆரம்பிக்க அடுத்த பிரம்மா தோன்றணும்.

முன்னே சொன்னதுக்கு அவாந்தர பிரலயம் ன்னும் பின்னாலே சொன்னதுக்கு மகா ப்ரலயம்ன்னும் சொல்கிறாங்க. இப்ப இந்த 2 போதும்!

அவாந்தரத்திலே இந்த 3 லோகங்கள்லே இருக்கிற சீவர்கள் எல்லாம் பிரம்மத்தோட ஐக்கியமாகிடும். அதே போல மகா ப்ரலயத்திலே 14 லோகங்களில் உள்ளதும் லயமாயிடும்.

லயம்ன்னா ஒரு தனித்தன்மையும் இல்லாமன்னு இல்லை. ஒரு செயலும் இல்லாம.

மெழுகு உருண்டையிலே பொன் துகள் போல லயமான பொருளிலே சீவர்களோட ஒரு தன்மை இருக்கும். அது அந்த சீவனோட கர்மாவை பொறுத்தது. அது திருப்பியும் சீவன் பிறப்பெடுக்கும்போது தனி சீவனா பிறக்க காரணமாகும். காரணம்... ஆமாம், பிறவிக்கு காரணம்தான். அதனால இதுக்கு காரண சரீரம்ன்னு பேர். இது என்னன்னு அப்புறம் பாக்கலாம்.

முதல் முதல்லே கர்மா இல்லாம எப்படி சீவர்கள் பிறந்தாங்க?
இதுக்கு விடை கிடையாது.

மேலை விஞ்ஞானத்திலே ஆந்த்ரபோமார்பிக் பிரின்சிபிள்ன்னு ஒரு விஷயம். இந்த உலகம் இருக்க ஒரு சின்ன வாய்ப்புதான் இருக்கு. அது இருக்கிறதாலேதான் இந்த உலகமும் இருக்கு; இதைப்பத்தி பேசிகிட்டு நாமளும் இருக்கோம். இது எப்படி வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணா விடை இல்லை.
அப்ப இதை ஒத்துக்க முடியாதுன்னா சொல்ல முடியும்? எப்படியோ நடந்து இருக்கிறதாலதானே இதைப்பத்தி பேசறோம்?
அதனால எப்படி நடந்ததுன்னு தெரியலைனா அது நடக்கவே இல்லைன்னு சொல்ல முடியாது. நடந்ததோட அத்தாட்சிதான் - ரிசல்ட் தான் எதிரிலியே இருக்கே!

சரி சரி, லயத்திலேந்து பிறப்புன்னா அது எப்படி நடந்ததுன்னு கேட்கலாம்.
ஆ! அதுக்கு விடை இருக்கு.


Monday, February 16, 2009

மூலப்ரக்ருதி மீள் பார்வை



முதலிலே ஒரு நிலையை எடுத்துப்போம்.

எல்லாமே ஒரே குழம்பா இருக்கு. – மேட்டர் எனர்ஜி காம்ப்லெக்ஸ் (matter energy complex)- ன்னு சொல்லலாமா?
க்வான்டம் பிஸிக்ஸ் போனா அப்படித்தான் சொல்லாட்சி இருக்கு.
இது சக்தின்னும் சொல்ல முடியாம, இது பருப்பொருள்ன்னும் சொல்ல முடியாம.

ரொம்ப நாள் முன்னே ஒளியை ஆராய்ஞ்சப்பவும் இப்படித்தான் சொன்னாங்க. அதை சக்தின்னு நினைச்சு சோதனைபண்ணா சக்தி மாதிரியும் இருக்கும். இல்லை பருப்பொருள்ன்னு சோதனைப்பண்ண அதுக்கும் ஆதாரம் இருக்கும். குழம்பிப்போனாங்க.
பின்னால க்வாண்டம் பிசிக்ஸ் வந்தது. பல விஷயங்கள் மாறிப் போச்சு.
முதல்லே ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான்னு சொன்னாங்க. பிறகு அதுக்கும் உள்ளே போய் க்வார்க் ன்னு பாத்து அதெல்லாம் இப்படி இருந்தா அது ந்யூட்ரான், இப்படி இருந்தா ப்ரோட்டான் ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போ தனித்தனியா இருந்தது உண்மையிலே ஒண்ணே; வெளிப்பாடு வேறேன்னு ஆச்சு. இதுக்குள்ளே போகப்போக ஆச்சரியங்கள்தான் அதிகமாச்சு. இதோட தர்க்கரீதியா மேலே என்னன்னு யோசிச்சு பாத்தா எல்லாம் ஒண்ணே என்கிற நம்ம பிரம்ம கோட்பாடு வந்துடும். எல்லாம் சக்தி மயம். கிடக்கட்டும்.

இங்க சொல்ல வந்தது ஒரே விஷயம் - சக்தியா இல்லை பொருளான்னு தெரியாத ஒரு குழம்பா இருந்தது. எல்லாமே ஒண்ணா லயமாகி இருந்தது. இதுக்கு மூல ப்ரக்ருதி ன்னு பேர்.
இதிலேந்து சீவர்கள் தோன்றி இந்த உலகம் தோன்றி காரியங்கள் நடந்து...
அஹா! காரியம் நடந்துன்னு சொன்னா அது கர்மா ஆயிடுத்து.
அப்ப அதுக்கு எதிர்வினை இருக்கும், பலன் இருக்கும். அதை அனுபவிச்சு தீர்க்கணும் என்கிறது இயற்கை விதி. அப்படி தீர்க்காட்டா?

தீர்க்காட்டா திருப்பி பிறப்போம். அப்படி பிறக்கும்போது மேலும் பல காரியங்களை பண்ணுவோம்; திருப்பி பிறப்போம்.
இப்படி திருப்பி திருப்பி பிறக்கிறதை விடணும் என்கிறதுதான் நம்ம குறிக்கோள். அப்பதான் கஷ்டமில்லாம ஆனந்தமா இருக்கலாம். ஏன்னா பிறப்பில்லத நிலை பூரணமான நிலை. அங்கே இருப்போம்; எல்லாமே அறிஞ்சு இருப்போம்; ஆனந்தமாயும் இருப்போம். இதைத்தவிர வேற ஒண்ணுமில்லை.
சரி அப்படி ஆகலை, திருப்பி திருப்பி பிறந்தா இப்படியே முடிவில்லாம போய் கொண்டு இருக்குமா?



Sunday, February 15, 2009

தொடர்கதை



டமர டமர டம்!
டமர டமர டம்!

இதனால் சகலருக்கும் தெரிவித்து கொல்வது (சரியாதான் எழுதி இருக்கேன்!)
என்னவென்றால் நாளை துவங்கி தேடல் என்கிற தொடர் கதை இங்கே வெளியாகும்.
எல்லாரும் படிச்சு பயன்பெறுங்க! பக்கத்திலேயே இருக்கிற காபி,
மாத்திரையும் வேணுமானா எடுத்துகிடலாம்!


நன்னி!
திவா

Saturday, February 14, 2009

சந்திர கிரஹணம்



போன பௌர்ணமி அன்று ஆஸ்திகர் மத்தியில் சிறு குழப்பம் ஏற்பட்டது. சந்திர கிரஹணம் என்று ஊடகங்கள் சொல்ல பஞ்சாங்கத்தை பார்த்தால் இல்லை. பின்னே கிரஹண அனுஷ்டானம் உண்டா இல்லையா? சாதாரணமாக பஞ்சாங்கத்தை பார்த்து அனுஷ்டிபவர்கள் குழம்பினார்கள். சமீபத்தில் பிரபலமாகி வரும் ஒரு வைதிக மாதப்பத்திரிகை கிரஹணம் உண்டு என்று போட்டது. அப்புறம் அனுஷ்டானம் இல்லை என்று சதுர்தசி அன்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்ததாக கேள்வி.

அன்று உண்மையில் விஞ்ஞான ¨கிரஹணம்¨ இருந்தது. ஆனால் அனுஷ்டானம் இல்லை.
ஏன் என்றால் சந்திரன் சூரியனின் ஒளியில் இருந்து முழுமையாக மறைக்கப்படவில்லை. ஆங்கிலத்தில் இதை பெனம்ப்ரல் எக்லிப்ஸ் என்கிறார்கள். அப்படிப்பட்டது கிரஹணம் ஆகாது.
இதை குறித்து ஆங்கிலத்தில் என் பையர் எழுதிய கட்டுரையை கீழே கொடுத்து இருக்கிறேன். மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் படிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Penumbral Lunar Eclipses and Grahaṇa Anuṣṭhāna


There has recently been much debate on whether the penumbral lunar eclipse ‘visible’ on 2009-Feb-09 should be taken for grahaṇa anuṣṭhāna or not. There was a similar debate for the similar eclipse on 2006-Mar-14. In this article, I clarify that penumbral lunar eclipses are NOT instances for doing grahaṇa anuṣṭhāna.

The word grahaṇa is only applicable when there is a visible darkening of the face of the sun or moon. Penumbral lunar eclipses do not cause such visible darkening of the moon. Therefore though they may be called eclipses by scientists, they are NOT called grahaṇa-s in the light of the śāstra-s and thus NO anuṣṭhāna will apply in their case.

The two shadows - umbra and penumbra


Whenever an object is placed in the field of a light source, it casts a shadow. There are usually two parts to that shadow. Where the object totally blocks the light coming from the light source, the shadow is darker, and it is called the umbra. Where the object blocks only part of the light, the shadow is lighter, and it is called the penumbra.

This is the case with ordinary light sources. However, the sun is a very powerful light source. Where even a little light from the sun directly falls, there can be no darkness or shadow to speak of. Therefore, when an object is in the field of the sun, only things in the object’s umbra are darkened. The penumbra is there, but in name only. Objects in the penumbra will be for all purposes as bright as the objects outside the penumbra.

Now let us consider what a lunar eclipse is. The earth is always in the field of the sun’s light. Therefore the earth always casts a shadow, consisting of a dark umbra and a namesake penumbra. The moon, while revolving around the earth, sometimes comes into the earth’s shadow. Here four things are possible. The moon may:
1.come partially into the penumbra
2.come fully into the penumbra, but not touch the umbra at all
3.come fully into the penumbra and then partially into the umbra
4.come fully into the penumbra and then fully into the umbra

In cases 1 and 2, which are called penumbral lunar eclipses, the moon while going out of the earth’s shadow will be merely leaving the penumbra. In case 3, called a partial lunar eclipse, and 4, called a total lunar eclipse, it must leave the umbra, and then later leave the penumbra.

This (not-to-scale) diagram shows a penumbral lunar eclipse in which the moon has fully come into the penumbra of the earth.

Why a penumbral lunar eclipse is not a grahaṇa

It is clear that when the moon does not touch the umbra at all, even when it comes fully into the penumbra, there will be no visible darkening of the face of the moon. Though scientists call it an eclipse, and even may detect a decrease in the brightness of the moon by means of instruments, as far as the śāstra-s and hence grahaṇa anuṣṭhāna is concerned, there is no grahaṇa and thus there is no grahaṇa anuṣṭhāna.

This is because the śāstra is written with humans in mind and only what humans can see or know by their God-given senses can be a cause for them to do any anuṣṭhāna prescribed by the śāstra-s. Thus if a few invisible molecules of liquor enter someone’s body through the air the śāstra does not consider him to have committed the sin of surāpāṇa and does not require him to do prāyaścitta.
Further, the meaning of the word grahaṇa is ‘grabbing’ or ‘catching’. When the shadow of the moon or the earth, called Rāhu at some times and Ketu at others, ‘catches’ the light of the sun or the moon, then it is called a grahaṇa. One can only say “shadow catches light” when the shadow clearly darkens any object illuminated by that light. Thus without a visible darkening one cannot say that there is a grahaṇa.

Even in the case of umbral lunar eclipses, when only such a small fraction of the moon enters the umbra so that the darkening is not visible, the śāstra-s do not consider it to be a grahaṇa. So obviously a mere penumbral eclipse cannot be considered a grahaṇa.

The Sūrya Siddhānta, perhaps the oldest and certainly the most revered work of the Jyautiṣa Śāstra, does not at all consider the penumbra in the case of lunar eclipses. Anyone who has the technical knowledge to verify this in the calculations of the Sūrya Siddhānta is welcome to do so. Yet another reason for a penumbral eclipse to not be a grahaṇa.

In an eclipse where the moon enters the umbra fully or partially, grahaṇa starts only with the entry into the umbra and ends with the exit from the umbra. The moon would have entered the penumbra over an hour before it enters the umbra, and it will exit the penumbra only over an hour after it exits from the umbra. But those periods are not considered part of the grahaṇa. If they were considered for grahaṇa:
1.ārambha-snāna should be done immediately after entry into the penumbra,
2.mokṣa-snāna should be done only after exit from the penumbra
3.if the moon sets before exit from the penumbra (which will happen only over an hour after exit from the umbra), then it will be considered as grastāstamaya, and one must do upavāsa till seeing the moon 12 hours later.

Nowhere among āstika-s do such practices exist. Even the pañcāṅga books list only the times of entry and exit of the umbra as the start and end times of those eclipses where the umbra is touched. (This may be verified by cross-checking the lunar eclipse timings given in pañcāṅga books with the visible start and end of the darkening.) This further confirms that the penumbra is not considered for grahaṇa-s.

Therefore we request our readers not to totally equate the word ‘grahaṇa’ in the context of Dharma Śāstra to the word ‘eclipse’ in English.

Grahaṇa anuṣhāna in penumbral lunar eclipses will cause demerit

Now though we have shown that penumbral lunar eclipses are not considered as grahaṇa-s, one may think “let us do the anuṣṭhāna nevertheless”, just for one’s little nagging doubt. We reply to this in three parts:

1) In the case of grahaṇa-s we must do ārambha-snāna and mokṣa-snāna. Some of us must also do pitṛ-tarpaṇa. However, snāna and pitṛ-tarpaṇa are specifically forbidden in the night except in some special cases, of which grahaṇa is one. Thus performing them in the night during penumbral lunar eclipses which are not grahaṇa‑s is certainly cause for demerit. (If needed snāna may be done in the evening after sunset to purify oneself for one’s daily evening anuṣṭhāna-s – that is one of the exceptions.)

2) Japa and dāna done during grahaṇa-s are said to be many times more fruitful, but exception cases like grahaṇa-s, night is not the time advised in the śāstra-s for these. Thus performing them in the night during penumbral lunar eclipses may be a cause for demerit.

3) That which should not be done during grahaṇa-s includes eating in the few hours preceding a grahaṇa, eating and sleeping during the grahaṇa, and pregnant women allowing the light of the eclipsed body to fall on them or even seeing that light. However following these don’t-s in the case of a penumbral lunar eclipse will only be meaningless effort and will not give you any merit. It is also meaningless to perform upavāsa in case of the moon’s setting before the end of the penumbral (phase of a) lunar eclipse.

Thus in sum, grahaṇa anuṣṭhāna in penumbral lunar eclipses is clearly a cause for demerit or meaningless effort and hence is not to be done.
However, there is no need to despair for what has already been done. Bhagavān Śaṅkara-Nārāyaṇa is dayālu. Those who feel very repentant may do some prāyaścitta like nāma-saṅkīrtana or japa or pārāyaṇa.

Responsibility of the publishers of pañcāṅga books


The responsibility for giving the general āstika public a proper answer lies chiefly with those who publish pañcāṅga books, since even the purohita-s in whom ordinary people believe often do not know the nuances of jyautiṣa which we have presented in this article. It is the publishers of the pañcāṅga books who are supposed to know all this. Without knowing all this they would not at all be qualified to publish pañcāṅga books.

Those publishers who carelessly publish penumbral lunar eclipses in their list of grahaṇa-s are clearly merely copying the list of eclipses presented in the modern scientific journals, without bothering to examine whether eclipse always means grahaṇa or not. Some of these publishers later issue public ‘clarifications’ but none of these ‘clarifications’ seem to be a frank admission of their mistake. They are almost always of the form of “This eclipse which was published will occur but it is not visible in (this part of) India”, which is true, though, since it is not going to be visible anywhere to the human eye!

But what assurance is there that everyone who read the original entry in the grahaṇa list will read the ‘clarification’ too? Do not the publishers bear the responsibility of the improper anuṣṭhāna done by a trusting reader who did not read the ‘clarification’? The saying “Caveat emptor” (“Buyer beware!”) seems now to apply to pañcāṅga books too!

Further verification

To those who would wish for further verifications, I present the following list of 26 penumbral lunar eclipses from the last 100 years, which were supposedly ‘visible’ in India, and in which the moon entered into the penumbra either fully or to a great extent. With these dates, one can open up old pañcāṅga books from times when publishers were more careful with their professional responsibility and verify that there were no entries in the list of grahaṇa‑s for anuṣṭhāna. If at all there should be some freak entry in some pañcāṅga book it must be a mistake. I am confident that the majority, if not all, of these eclipses will not be listed as grahaṇa‑s.

The dates in the modern calendar are given, with the traditional saṃvatsara name and the name of the lunar month in which the full moon of the penumbral eclipse occurs:

14-06-1908 Kīlaka-Jyaiṣṭha
07-12-1908 Kīlaka-Mārgaśīrṣa
06-11-1911 Virodhikṛt-Kārtika
17-12-1918 Kālayukti-Mārgaśīrṣa
15-05-1919 Siddhārthin-Vaiśākha
11-04-1922 Durmati-Caitra
23-05-1929 Śukla-Vaiśākha
29-12-1944 Tāraṇa-Pauṣa
18-10-1948 Sarvadhārin-Āśvayuja
15-09-1951 Khara-Bhādrapada
08-01-1955 Jaya-Pauṣa
17-09-1959 Vikārin-Bhādrapada
09-01-1963 Śubhakṛt-Pauṣa
08-12-1965 Viśvāvasu-Mārgaśīrṣa
04-05-1966 Parābhava-Vaiśākha
29-10-1966 Parābhava-Āśvayuja
25-09-1969 Saumya-Bhādrapada
18-01-1973 Paritāpin-Pauṣa
20-12-1983 Rudhirodgārin-Mārgaśīrṣa
08-11-1984 Raktākṣa-Kārtika
08-10-1995 Yuvan-Āśvayuja
06-09-1998 Bahudhānya-Bhādrapada
31-01-1999 Bahudhānya-Māgha
30-12-2001 Vṛṣa(/Viṣu)-Mārgaśīrṣa
26-05-2002 Citrabhānu-Vaiśākha
20-11-2002 Citrabhānu-Kārtika

Contact address for any and all constructive comments:

Shriramana Sharma,
Kanchi Shankara Matham, Nerur Agraharam,
Karur District, Tamil Nadu - 639004.
e-mail: jamadagni utt gmail daut com

Friday, February 13, 2009

மீள்பதிவுகள்



நேத்து பாட்டி ஆகிட்டேன்!
-------------
பலருக்கும் மூலப்ப்ரக்ருதி முதலாக வந்த பதிவுகள் கடினமாக இருப்பதாக சொல்கிறார்கள். பதிவின் நோக்கமே புரியவைக்க வேண்டும் என்பதால் இவற்றை மீள் பதிவு செய்ய உத்தேசம்.
இரண்டு நாட்கள் பொறுக்கணும்.


Wednesday, February 11, 2009

அபவாதம்



46.
அதிட்டானத்தை தவிர ஆரோபமில்லை என அபவாத இலக்கணம் கூறல்:

அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்

அரவு (பாம்பு) அன்று, கயிறு என்றால் போல்; ஆளன்று தறி (மரம்) என்றாற் போல், குரவன் சொல்லும் உபதேசத்தால் கூறு நூல் ஒளியைக் கொண்டும் (ஆசாரியன் வாக்கியத்தையும் உறுதி செய்யும் ஞான சாஸ்திர நூல்கள் வலிமையை கொண்டும்) புரமன்று (சரீரம் அன்று) புவனமன்று (உலகங்கள் அன்று) பூதங்களன்று (பஞ்ச பூதங்கள் அன்று) ஞான ஸ்திரம் என்னும் பிரமம் என்று தெளிவதே அபவாதம் காண்.

47.
படமுநூ லும்போற் செய்த பணியும் பொன்னும் போற்பார்க்கில்
கடமுமண் ணும்போ லொன்றாங் காரிய கார ணங்கள்
உடன்முதற் சுபாவமீறா வொன்றிலொன் றுதித்த வாறே
அடைவினி லொடுக்கிக் காணப தபவாத வுபாயமாமே

காரிய காரணங்கள் பார்க்கில் (காரியமான சகசீவ பரத்தையும், காரணமாகிய பிரமத்தையும், உத்தியால் விசாரிக்குமிடத்து) படமும் (காரியமான துணியும்) [காரணமாகிய] நூலும் போல், செய்த பணியும் (காரியமான ஆபரணமும்) [காரணமாகிய] பொன்னும் போல், கடமும் (காரியமான குடமும்) [காரணமாகிய] மண்ணும் போல் ஒன்றாம். உடன் முதல் சுபாவம் ஈறாக (தூல தேகம் முதல் பிரகிருதி முடிய) ஒன்றில் ஒன்று உதித்தவாறே அடைவினில் (முறையே) ஒடுக்கிக் காண்பது அபவாத உபாயமாமே. (உத்தியாமே)



Tuesday, February 10, 2009

அபவாதம்



சீவன் வியக்தி. ஈசன் சமஷ்டி.
கடல் அலையும் கடலும் போல. ரெண்டுக்குமே கடலோட தன்மை- உப்பு கரிக்கிற தண்ணீர் ன்னு இருந்தாலும் கடல் அலை கடலா ஆகாது இல்லையா?

44.
மரங்கள்போல் வியட்டிபேதம் வனமெனல் சமட்டிபேதம்
சரங்கடா வரங்கள்பேதத் தனியுடல் வியட்டியென்பார்
பரம்பிய வெல்லாங்கூட்டிப் பார்ப்பதே சமட்டியாகும்
இரங்கிய பல சீவர்க்கு மீசர்க்கும் பேதமீதே

மரங்கள் போல் (கருதுவது) வியட்டி (வியஷ்டி) பேதம். வனமெனல் சமட்டி பேதம். சரங்கள் தாவரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார். பரம்பிய (விரிந்துள்ள) எல்லாம் (சகல தேகங்களையும்) கூட்டிப் பார்ப்பதே சமட்டியாகும். இரங்கிய (வருந்துகின்ற) பல சீவர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.

இப்பதான் இவ்வளோ பேசினதுக்கு பாய்ன்டுக்கு வரோம்.
இந்த பஞ்ச கோசங்களும் உண்மையிலே நாம் இல்லைன்னு புரிஞ்சு உணர்ந்து வெளியே வந்தா ஆத்மாவை உணரலாம். ஞானம் வந்துடும்.
யார் இந்த பரந்து விரிந்த உலகத்தை எல்லாம் கனவு போல நிலையற்றது - மாயை ன்னு புரிஞ்சுக்கிறாங்களோ அவங்க ஞானியா ஆவாங்க.
இதற்கான உத்தி அபவாதம் எனப்படும்.

45.
அத்தியாரோப உத்தியினால் தன்னிடத்து ஆரோபமாகத் தோன்றிய சகசீவ பரங்கள் மித்தை என உணர மித்தையா திருஷ்டியைக்கூறி, அதத்துவா விருத்தி இலக்கணையால் அவை உண்டான கிரமப்படி லயிக்கும் அபவாத உத்தியை சுருக்கமாக கூறல்:

கற்பனை வந்தவாறு காட்டினோங் காண்ப வெல்லாஞ்
சொற்பனம் போலுமென்றே துணிந்தவன் ஞானியாவன்
செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்தவா காசம் போல
வற்புத முத்திசேரு மபவாத வழியுங்கேளாய்

கற்பனை (அத்தியாரோபம்) வந்தவாறு (வந்த வழியை) காட்டினோம். காண்ப எல்லாம் (காணும் சீவேஸ்வர ஜகத் முழுதும்) சொற்பனம் (கனவு) போலும் என்றே துணிந்தவன் (நிச்சயித்தவன்) ஞானியாவன். செற்புதை (மேகம் நெருங்கிய) மழைக்காலம் போய்த் தெளிந்த ஆகாசம் போல அற்புத முத்தி (நிரதிசய ஆநந்த மோட்சம்) சேரும் (அடைய காரணமாகும்) அபவாத வழியும் கேளாய்.

அப வாதம் என்ன? முடக்கு வாதம், கீல் வாதம் மாதிரின்னா.....
மாயையை நீக்குகிறதுதான் அபவாதம்.

கயிறுதான் இது; பாம்பா பாத்தது நம்மோட பிரமை.
இது மரம்தான். அரைகுறை வெளிச்சத்துலே பாத்து ஆளுன்னு தப்பா நினைச்சுட்டோம்.

இப்படி தெளிவா ஆகிறாப்போல

இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; ப்ரம்மம் ஒண்ணுதான் இருக்கு ன்னு தெளிவதே அபவாதம். இதுக்கு சாதனமா இருக்கிறது குருவோட உபதேசமும் சாத்திர நூல்களும்.
சொல்லறது ரொம்ப சுலபமா சொல்லியாச்சு! அனுபவத்துக்கு வரணுமே!

Monday, February 9, 2009

ஈசனும் சீவனும்



இனிமே சுலபம்தான். கிடு கிடுன்னு போகலாம்.

தமஸிலே கூட்டு (சமஷ்டி) தனி (வியஷ்டி) யார்?
தமஸின் சமஷ்டி விராட் புருஷன்; வியஷ்டி விஸ்வஜன்.

42.
தூலதேகத்தில் சீவேஸ்வரருக்கு அபிமான நாமாதிகள்:
தூலமே மருவுஞ்சீவன் சொல்லிய விசுவனாகும்
தூலமே மருவுமீசன் சொலும்விராட் புருடனாகும்
தூலமே யன்னகோசந் துன்னுஞ்சாக் கிரவவத்தை
தூலகற் பனையீதென்று தொகுத்தது மனதிற்கொள்வாய்

[முன்] சொல்லிய தூலமே (ஸ்தூலதேகத்தில்) மருவும் (பொருந்தும்) சீவன் விசுவனாகும். தூலமே மருவும் ஈசன் சொலும் விராட் புருடனாகும். [அன்ன வீரியத்தால் உண்டாகி அன்னத்தால் விருத்தியாவதால்] தூலமே அன்னகோசம்; துன்னுஞ் சாக்கிர அவத்தை; தூல கற்பனை (தூலப் பிரபஞ்சத்தின் அத்தியாசம்) ஈது என்று தொகுத்தது (சுருக்கமாக கூறியதை) மனதில் கொள்வாய்.

அட, அப்ப ஈசனும் சீவனும் ஒண்ணா?
இருப்பு ஒண்ணுதான். ஆனா உபாதியால வேற வேற. உபாதி? போட்டு இருக்கிற வேஷம்ன்னு சொல்லமோ என்னவோ! Role.
யார் சில விஷயங்கள் தோன்ற காரணமோ அவர் காரண உபாதி. அது ஈசன்.
யார் தோன்றினாரோ அவர் காரிய உபாதி. அது சீவன்.

43.
சீரிய வீசனார்க்குஞ் சீவர்க்கு முபாதியொன்றேல்
ஆரிய குருவேபேத மறிவதெப்படி யென்றக்கால்
காரிய வுபாதிசீவன் காரணவுபாதி யீசன்
வீரியமிகு சமட்டி வியட்டியாற் பேதமாமே

சீரிய (சிறந்த) ஈசனார்க்கும் சீவர்க்கும் உபாதியொன்றேல் (உபாதி ஒன்றாக இருக்குமானால்) ஆரிய குருவே, பேதம் அறிவது எப்படி என்றக்கால் (என கேட்பாயானால்) [ஸ்தூல சூட்சும] காரிய உபாதி [உடையவன்] சீவன்; [ஸ்தூல சூட்சும] காரண உபாதி [உடையவன்] ஈசன். வீரிய மிகு சமட்டி வியட்டியால் பேதமாமே.



Friday, February 6, 2009

பிஜி பாய்ன்ட்ஸ்!



அப்பாடா! இதுக்கு மேலே பிஜி பாய்ன்ட் தான். வேணான்னா விட்டுடலாம்.
5 ஸ்தூல பூதங்கள் - நாம பாக்கக்கூடிய ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் - லேந்து 25 தத்துவங்கள் வந்தன. எப்படி? ஒவ்வொண்ணும் மத்த நாலோடேயும் சம்பந்தப்பட்டதால.
ஆகாயத்தில் ஆகாயம் ன்னு ஆரம்பிச்சு இப்படியே அஞ்சும் முடிச்சு அடுத்து வாயுவில் ஆகாயம்ன்னு ஆரம்பிச்சு.... பெர்முடேஷன் காம்பினேஷன் புரியுது இல்லையா?

50% இருக்கிற ஆகாயம். இதில உண்டானாது மோகம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% வாயு கூடி உண்டானது வெட்கம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% அக்னி கூடி உண்டானது பயம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நீர் கூடி உண்டானது த்வேஷம்.
50% இருக்கிற ஆகாயம். இதோட 12.5% நிலம் கூடி உண்டானது ஆசை.

இதே போல மீதி பாக்கலாமா?
வாயு + ஆகாயம் = தத்தல்
வாயு = ஓடல்
வாயு + அக்னி = இருத்தல்
வாயு + நீர் = நடத்தல்
வாயு + நிலம் = கிடத்தல்

அக்னி + ஆகாயம் = சங்கமம்
அக்னி + வாயு = ஆலஸ்யம்
அக்னி = நித்திரை
அக்னி + நீர் = தாகம்
அக்னி + நிலம் =பசி

நீர் + ஆகாயம் = சுக்கிலம்
நீர் + வாயு = ரத்தம்
நீர் + அக்னி = வியர்வை
நீர் = சிறுநீர்
நீர் + நிலம் = உமிழ்நீர்

நிலம் + ஆகாயம் = உரோமம்
நிலம் + வாயு = நரம்பு
நிலம் + அக்னி = தோல்
நிலம் + நீர் = மாமிசம்
நிலம் எலும்பு

அப்பாடா! இதெல்லாம் எங்கேயிருந்து உரை ஆசிரியர் குப்புசாமி முதலியார் பிடிச்சாரோ தெரியலை.

இப்ப அவஸ்தைகள் மூணுன்னு நமக்கு தெரியும். ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி.
நனவு, கனா, சுழுத்தின்னு தமிழ்ல.

இது வரை நாம படிச்சதை இதுக்கு தொடர்பு படுத்தி பாக்கலாமா?
ஸ்தூல உடம்பிலே ஜாக்ரத் இருக்கும். சூக்கும உடம்பிலே ஸ்வப்னம். காரண உடம்பிலே சுசுப்தி.

பஞ்ச கோசங்களை கொஞ்சம் ரிவைஸ் பண்ணலாம்.

அன்ன மயம் - சுக்கில/ சுரோணிதங்களால ஆன இந்த – என்ன புரியலையா? விந்து, கரு முட்டையால ஆன- தோல், ரத்தம், மாமிசம், நரம்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்களால ஆக்கப்பட்டு அன்னத்தால வளர்ந்து, கடைசியிலே பூமியில் அழிகிற இந்த பருப்பொருளான உடம்பே அன்ன மய கோசம்.

கர்ம இந்திரியங்களோடு கூடின ப்ராணன்களே ப்ராணமய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின மனமே மனோ மய கோசம்.
ஞான இந்திரியங்களோடு கூடின புத்தியே விஞ்ஞான மய கோசம்.

காரண தேகமே (அஞ்ஞானம்) ஆனந்த மய கோசம்.



Thursday, February 5, 2009

test

இது மின்னஞ்சல் வழி பதிவு இடுகைக்கு ஒரு சோதனை
--
My blogs: (all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

பஞ்சீகரணம்




கொஞ்சம் கவனமா பாத்துகிட்டே வாங்க.
சூக்ஷ்ம பஞ்ச பூதம் 10 ஆச்சு. அதாவது எல்லாம் பாதி பாதியா பிரிஞ்சது. 50% -50%
இதில ஒரு பாதி நாலா பிரிஞ்சது. ஒவ்வொண்ணும் 12.5 %. 12.5 *4 =50% சரிதானே!
இப்ப ஒவ்வொரு பூதமும் தன்னோட 50% + மத்த நாலிலே ஒவ்வொண்ணிலேந்தும் 12.5% சேத்துகிட்டு ஸ்தூல பூதமாகும். ரிசல்ட் டுக்கு எது 50% இருக்கோ அதோட பேர் வரும்.
ரிசல்ட் என்னன்னு பாக்கலாமா?
ஸ்தூல பூதத்திலே இருக்கிற தமோ குண சூக்ஷ்ம பூதம்:


கணக்கு சரியா போச்சா? ஒவ்வொண்ணுத்திலேயும் 100% சரியா இருக்கு.
ஐந்தும் மத்ததோட சேந்து சமஷ்டியா இருக்கு.

இந்த பஞ்ச பூதங்கள்தான் சாதாரணமா அடிபடறவை.
இவற்றிலேந்து நாலு வகை யோனி - பிறப்பிடம், ஏழு வகை தோற்றமா தூல (solid) உடம்புகள் வந்தன.
நாலு வகை யோனி?
1. சராயுஜம். ஒரு கர்பப்பை. அதில இருந்து வளர்ந்து உரிய காலத்திலே பிறக்கிறது. பாலூட்டிகள்.
2. அண்டஜம். முட்டையிலேந்து பிறக்கிறது. பறவைகள், மீன்கள் போல
3. ஸ்வேதஜம் வேர்வையிலேந்து பிறக்கிறது. இது கொஞ்சம் புதிராதான் இருக்கு. விஞ்ஞான ரீதியா பாத்தா வியர்வை சுரப்பிகள்ள இருக்கிற சில பாக்டீரியாதான் சொல்லலாம். பேன் போன்றதுன்னு நான் பாக்கிற உசாதுணை நூல்லே இருக்கு. சில உயிரினங்கள் இருந்து காலப்போகிலே மறைந்து போயிடுத்தோ என்னவோ!
4. உத்பிஜம் - விதையிலேந்து வருபவை. தாவரங்கள்.

ஏழு வகை பிறப்பு?
1.தேவர்
2.மனிதர்
3.விலங்குகள்
4.பறவைகள்
5.ஊர்வன
6.நீர் வாழ்வன
7.தாவரங்கள்

ஏழு வகை பிறப்பு அனைத்தும் உத்தம ஜாதி, (1,2) மத்திம ஜாதி (3,4,5) மற்றும் அதம ஜாதி(7) ன்னு பிரியும்.
-----------
41.
ஐந்து பூதமும் பத்தாக்கி யவைபாதி நன்னான் காக்கி
நந்துதம் பாதிவிட்டு நான்கொடு நான்குங்கூட்ட
வந்தன தூலபூத மகாபூத மிவற்றினின்றுந்
தந்தன நான்காந்தூல தநுவண்ட புவனபோகம்.

ஐந்து பூதமும் பத்தாக்கி (ஒவ்வொன்றையும் இரண்டாக்கி) அவை பாதி நன்னான்காக்கி (அவற்றின் ஒரு பாதியை வைத்து மற்ற பாதியை ஒவ்வொன்றையும் நான்கு ஆக்கி) நந்து தம் பாதி விட்டு (பெரிய அரைப்பாகங்களில் தத்தம் பாகத்தை விட்டு ) நான்கொடு நான்கும் கூட்ட (மற்ற 4 பூதங்களின் அரைக்கால் பாகத்துடன் கூட்ட) வந்தன தூல பூதம். மகாபூதம் இவற்றினின்றும் தந்தன (சிருட்டிக்கப்பட்டன) நான்காம் (சராயுசம், அண்டசம், சுவேதசம், உற்பீசம் ஆகிய 4 யோனிகளில் பிறக்கும்) தூல தநு (பரு உடல்) அண்ட (பிரமாண்டங்கள்) புவன (பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்திய ஆகிய7 மேல் உலகங்கள் + அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதால ஆகிய7 கீழ் உலகங்கள்) போகம் (அன்னம் முதலானவை).


Wednesday, February 4, 2009

தூல சரீரம்



ம்ம்ம்.. அப்பாடா! நிறையவே கவர் பண்ணிட்டோம் போன கொஞ்ச நாட்கள்ளே! பல விஷயங்கள் புதுசு என்கிறதால நிதானமாவே போறோம். அப்பப்ப ரிவிஷனும் பண்ணிகிட்டு போறோம்.
இப்போதைக்கு இதெல்லாம் குண்ட்ஸா புரிஞ்சா கூட போதும். இன்னும் கொஞ்சம் மேலே போகப்போக நல்லாவே புரியும்.

இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.
சரீரங்கள்ளே காரண சரீரமும் சூக்கும சரீரமும் பாத்தாச்சு. மீதி ஸ்தூல சரீரம்.
அதே போல கோசங்கள்ளே ஆனந்த, பிராண. மனோ, விஞ்ஞான மய கோசங்களை பாத்தாச்சு. இன்னும் அன்ன மய கோசம் பாக்கி.
இப்ப இந்த சரீரங்கள், கோசங்கள், தன் மாத்திரைகள் - இதுக்கெல்லாம் ஒரு தொடர்பு தெரியுது இல்லையா?

சத்வம்- ஆனந்த மய கோசம்- காரண சரீரம்
ரஜஸ் - பிராண, மனோ, விஞ்ஞான மய கோசங்கள் - சூக்ஷ்ம சரீரம்.
இப்ப வரது தமஸ் - அன்ன மய கோசம் - ஸ்தூல சரீரம்.

ஒரே விஷயங்கள் வெவ்வேற மாதிரி- வார்த்தைகள்ளே சொல்லப்படுது. அவ்வ்ளோதான். இதை சரியா புரிஞ்சுகிட்டா இனிமே குழப்பம் இருக்காது.

தமோ குணத்து சமாசாரம் என்னன்னா ஈஸ்வரன் அதை ஒரு வடிவம் கொடுத்து நாம் பாக்கிறாப்பல செய்யறான். சூக்குமமா இருந்த அத்தனையும் இப்ப நாம பாக்கிறாப்போல ஸ்தூலமா இருக்கு.

என்னவா பாக்கிற மாதிரி ஆயிடுது?
ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண்.
அட இதையே முன்னால சொல்லல்லை?
அப்ப சொன்னது இதே பேர்கள்தான். ஆனா அதெல்லாமே வெறும் தத்துவமா இருந்தது- சூக்ஷுமமா. பாக்கிறாப்பல இல்லை.
இப்ப தமோ குணத்திலேந்து பாக்கிறாப்பல வருது. ஆனா அதே பேர்கள்தான்.

இது நடக்கிறது ஒரு ப்ராஸஸ்ஸாலே. அதுக்கு பஞ்சீகரணம் ன்னு பேர்.

40.
சூக்குமசகமிம் மட்டுஞ் சொல்லினோ மிப்பாற்றூலம்
ஆக்குமா ரோபந்தானு மடைவினின் மொழியக்கேளாய்
தாக்குமிவ் வுயிர்க்குத்தூல தநுவும்போகமு முண்டாகக்
காக்குமவ் வீசன்பஞ்சீ கரணங்கள் செய்தான்றானே

சூக்கும சகம் இம்மட்டும் (இது வரை) சொல்லினோம். இப்பால் தூலம் ஆக்கும் (தூல தேகம் முதலான பிரபஞ்சம் உண்டாகும்) ஆரோபந்தானும் (அத்தியாசத்தையும்) அடைவினில் (கிரமமாக) மொழிய கேளாய். [சூட்சும தேகத்தில்] தாக்கும் (சம்பந்தமான) இவ்வுயிர்க்கு (இந்த சீவர்களுக்கு) [கர்மத்துக்கு தக்க] தூல தநுவும் (தேகமும்) [விஷய] போகமும் உண்டாக, காக்கும் அவ்வீசன் (தமோ குண அம்சம் ஐந்தினையும்) பஞ்சீகரணங்கள் (ஐந்தாக பிரித்தல்) செய்தான்.



Tuesday, February 3, 2009

மீள் பார்வை - சூக்ஷ்ம சரீரம்




அடுத்து போலாமா?

சீவனோட சூக்ஷ்ம சரீரத்துக்கு ஒரு பேர்: தைசதன் (ஸம்ஸ்க்ருதம்: தைஜஸன்)
ஈசனோட சூக்ஷ்ம சரீரத்துக்கு ஒரு பேர்: ஹிரண்ய கர்ப்பன். (அப்பாடா கொஞ்சம் தெரிஞ்ச பேரா இருக்கு!)

சூக்ஷ்ம சரீரம் = பிராணமய, மனோமய, விஞ்ஞானமய கோசங்கள். ஒண்ணேதான்.

[மேலே சொன்ன மூணும் ரஜோ குண பாகம். ஆனந்த மய கோசம் என்கிறது முன்னேயே பாத்தோம். அது சத்வ பாகம்; காரண சரீரம்.]
ஒரு பூர்த்திக்காக பாடலையும் புத்தகத்தில கொடுத்த பொருளையும் கொடுக்கிறேன். புரிஞ்சா நல்லது, புரியலைனா ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். கருத்து எப்படியும் பதிவிலே வந்துடும்.

39.
சூட்சும தேகத்தால் சீவ ஈஸ்வரர்களுக்கு உண்டாகும் பெயர்கள்:

இவ்வுடன் மருவுஞ் சீவனிலங்குதை சதனென் றாவன்
இவ்வுடன் மருவுமீசனிரணிய கர்ப்பனாவன்
இவ்வுட லிரண்டு பேர்க்கு மிலிங்கசூக்குமச ரீரம்
இவ்வுடற்கோச மூன்றாமிது கனாவவத் தையாமே

இவ்வுடல் [உடன்] மருவும் (சேரும்) சீவன் இலங்கு தைசதன் (ஸம்: தைஜஸன்) என்றாவன். இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன். இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்க சூக்கும சரீரம். இவ்வுடல் கோச மூன்றாம் (பிராணமய, மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) இது கனா அவத்தையாமே.

வியட்டி (வியஷ்டி) சூட்சும சரீரத்தை அபிமானித்துக்கொண்டு பிரகாசமாக உள்ள அந்தக்கரணத்துடன் சம்பந்தப்பட்டவன் -தைசதன்; சமட்டி (சமஷ்டி) சூட்சும சரீரத்தை அபிமானித்துக்கொண்டு ஞான சக்தியுடன் கூடி சகல அந்தக்கரணத்தையும் பிரகாசிபிக்கிறவன் -ஹிரண்யகர்பன்;

இந்த சூக்ஷ்ம சரீரம் காரண சரீரம் போல தெரியாது இருக்காது, ஸ்தூல சரீரம் போல பிரத்தியட்சமாகவும் தெரியாது.

ஒரு கை தேர்ந்த சித்திரக்காரர் துணியில் ஒரு படம் வரையுமுன்னே என்ன செய்வார்? இங்கேயும் அங்கேயும் சில கோடுகளை கிழிப்பார். நாம அத பாத்து அட ஒரு ஆனை படம் போடப்போறார் ன்னு கண்டுபிடிச்சுடுவோம். கிழிக்கும் கோடுகள் வரையவிருக்கும் படத்தை அனுமானிக்க உதவுவது போல (-லாஞ்சன படம்): சூக்கும சரீரம் தெளிவா இருக்காது, ஆனா அது இருக்கணும் ன்னு அநுமானத்தால் அறியப்படுது.

நான் செயலாற்றுபவன், இச்சை உள்ளவன், பலமானவன், ஞானம் உள்ளவன், சங்கற்பம் செய்பவன், மதிமான் என பலவிதமாக சீவன் தன் யதார்த்த ஸ்வரூபம் தெரியாது சீவனிடத்தும், ஈஸ்வரன் இத்தகையவன் என சீவன் அறியாதவாறு ஈஸ்வரனிடத்தும் உள்ள பிராண, மனோ, விஞ்ஞான மறைப்பை 3 கோசங்களாக சொல்லப்பட்டது.

நான் செயல் செய்பவன்னு நினைச்சாலும் இந்த வெத்து உடம்பால -ஸ்தூல சரீரத்தால- அது நடக்காது; அதுல வேற ஏதோ சக்தி இருந்துதான் அதை செய்விக்கிறதுன்னு நமக்கு தெரியும். இது அனுமானம். இந்த சக்திகள் எங்கே இருக்கு? அதான் சூக்கும சரீரம். இந்த சூக்கும சரீரத்தில இருக்கிற மனசு செயலை செய்ய நினைக்கனும்; ப்ராணன் அதுக்கு ஒத்துழைச்சு சக்தி தரனும்; கை கால்கள் மனசு நினைச்ச வேலையை செய்யனும். இருந்தாலும் இதெல்லாம் ஈஸ்வரனால நடக்குது நம்மால இல்லைன்னு நமக்கு தெரியறது இல்லை. இதான் மறைப்பு.

வாசனா ரூபமாய் சூட்சுமமாயிருந்து மனோ ராஜ்யம் செய்தல் ஜீவ ஈஸ்வரர்களுக்கு ஸ்வப்னம் என்பதால் கனா அவத்தை எனப்பட்டது.

நினைவுறுத்தல்: சரீரங்கள் மூன்று: ஸ்தூல சரீரம் - நாம் பார்க்கக்கூடியது. சூக்சும சரீரம் = பார்க்க முடியாதது ஆனால் அநுமானிக்கூடியது. காரண சரீரம் = இவற்றுக்கு காரணமாக உள்ளது; ஆணவம், கன்மம், மாயை சேர்ந்தது.

இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.


கர்ம இந்திரியங்கள்



தனித்தனியா நின்னு வேலை செய்கிற தன் மாத்திரைகளோட ரஜோ குணம் என்ன ஆகுது?
கர்ம இந்திரியங்களா. தனித்தனியா என்கிறதால வெவ்வேற இடங்கள்ல இருந்து கொண்டு வேலை செய்யும்.
திருப்பியும் நினைவு படுத்திக்கலாம். இவை நாம பாக்கிற கை, கால் இல்லை. அவற்றை இயக்கற சக்திதான். வாய் இருந்தும் பேச  முடியாம, காது இருந்தும் கேட்க முடியாம சிலார் இருக்கிறதை நினைவுக்கு கொண்டு வந்தா புரியும்.

கர்ம இந்திரியங்கள் ஐந்து:
1.வாக் - ஆகாய ரஜோ குணம். ஆதனால ஆகாயத்திலே பேச்சு பரவும்.
2. கை - வாயுவோட ரஜோ குணம். சலித்துகிட்டே இருக்கணும். ஏண்டா கை வெச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதுன்னா, ஆமாம்! அதோட இயல்பான குணம் அது!
3.கால் - அக்னியோட ரஜோ குணம்.
4.பாயுரு - ஜல மலம் கழிக்கிற வேலை. நீரோட குணம். ஓடிகிட்டே இருக்கணும். அதே போல கழிவுப்பொருள் வெளீயே போய்கிட்டே இருக்கணும். இல்லாட்டா பிரச்சினைதான்!
5. உபஸ்தம் - ஆண் குறி/ பெண் குறி : மண்ணோட ரஜோ குணம். ஆனந்தத்தை உண்டாக்கும்.

இந்த பதினேழும் அதாவது ஐந்து ஞானேந்திரியங்கள் +மனம்+ புத்தி+ ஐந்து வாயுக்கள் + ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும், சுரர் அசுரர் நரர் விலங்குன்னு தோன்றி இருக்கிற உயிர்களுக்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) சூட்சும சரீரங்கள்.

போச்சுடா, அது என்ன சூக்ஷ்ம சரீரம்? இதை எல்லாம் காரண சரீரம்ன்னு சொல்லலை?
இல்லை.

காரண சரீரத்திலே பிராணன்கள் இல்லை.
நாம இறந்தா பிராணன் போயிடும். மீதி இருக்கிறதை ஆணவம், கன்மம் , மாயை என்கிற காரண சரீரம் தூக்கிகிட்டு போய் அடுத்த பிறவி எடுக்க வைக்கும். (அடுத்த பிறவிக்கு காரணமானதாலே அந்த மூணும் காரண சரீரம் ஆகும்.) சரிதானே? :-)

38.
இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்து மைந்தும்
பிராணவா யுக்களென்றும் பெருந்தொழிற் கருவியென்றும்
பராவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகம்
சுராசுரர்நரர் விலங்காய்த் தோன்றியவுயிர் கட்கெல்லாம்.

இராசத (ரஜோ) குணத்தில் எடுத்த (எடுத்து ஒன்றாக்கிய) கூறு ஐந்தும் பிராண வாயுக்கள் என்றும், வேறிட்டு எடுத்த (தனித்தனியே எடுத்து வைத்த) ஐந்தும் பெருந் தொழிற் கருவி (கர்மேந்திரியங்கள்) என்றும் பராவிய (பரவிய) பெயராம். இந்த பதினேழும் (ஞானேந்திரியங்கள் ஐந்து+மனம்+ புத்தி+ஐந்து வாயுக்கள்+ ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும்) சுரர் அசுரர் நரர் விலங்காய் தோன்றிய உயிர்கட்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) இலிங்கதேகம். (சூட்சும சரீரங்கள்)



Monday, February 2, 2009

ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகள் - பஞ்ச ப்ராணன்கள்



சரி, அப்ப ரஜோ குணம்?
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து ப்ராணன் முதலான 5 வாயுக்களும் உண்டாகும்.
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து கர்ம இந்திரியங்கள் உருவாகும்.

பிராணன் முதலான வாயுக்கள் 5.
கூட்டால உண்டானாலும் அந்த அந்த தன் மாத்திரையோட குணம் இருக்கும்ன்னு பாத்தோம் இல்லையா?

1.வியானன் - ஆகாயத்தின் ரஜோ குணத்தில பிறந்த இது ஆகாயம் எல்லா இடத்திலேயும் வியாபித்து இருக்கிறது போல உடம்பு முழுக்க வியாபித்து, ரத்தத்தை பரவ செய்து உடம்பை தாங்கி நிற்கும்.

2.பிராணன் - வாயுவோட ரஜோ குணத்தில உற்பத்தியானது. அதனால எப்போதும் உள்ளும் வெளியும் போய் வந்து கொண்டே இருக்கும். ஹ்ருதயத்திலே தங்கி எப்பவும் நகர்ந்து கொண்டு பசி, தாகம் இதையெல்லாம் உண்டாக்கும். இன்னும் சாப்பிடவே இல்லை; பசி பிராணன் போகிறது ன்னு கேட்டு இருக்கோம் இல்லையா? வெளியேந்து காற்றை உள் வாங்குகிறதும் இதுவே. மொத்தத்திலே மெடபாலிஸம் கவனிக்கறது முக்கியமா இதே.

3.அபானன் - நெருப்பின் ரஜோ குணம். அதோட ஒரு குணம் எதானாலும் சுத்தப்படுத்தறது இல்லையா? அதே போல இது மல ஜலாதிகளை வெளியே தள்ளி சுத்தப்படுத்திடும். மலச்சிக்கல் வராம இருக்க இது சரியா வேலை செய்யணும்.

4.சமானன் - நீர் தத்துவம். இதோட இடம் நாபி (தொப்புள்). நாம சாப்பிட்ட உணவு, குடிச்ச நீர் இதை எல்லாம் உள்வாங்கி செரிக்க வைக்கும். இது சரியா இல்லைனா அஜீரணம்தான், உடம்பு சரியா வளரவும் வளராது.

5.உதானன் மண்ணோட ரஜோ குணத்திலேந்து வந்தது. கண்டம் (தொண்டை) யிலே இருந்து காத்து உள்ளே வெளியே போவதை கட்டுப்படுத்தும். அதுதான் பேச்சுக்கு முக்கியம் இல்லையா?

இந்த அஞ்சு தவிர இன்னும் அஞ்சு உபவாயு இருக்குன்னு ஒரு பார்வை.
நாகன் - உடம்பை முறுக்கி ஆவ் ன்னு கொட்டாவி விடறப்ப இது வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
கூர்மன் -விக்கலும் ஏப்பமும் வந்தா இதோட வேலைன்னு அறிவோம்.
கிரிகரன் - ஹச் (இல்லைனா செல் போன் கம்பெனி இல்லை, தும்மல்) உண்டாக்கறது இது.
தேவதத்தன் - சிரிக்கிறப்பவும், சோகப்படறப்பவும் சினிமாவிலே கதாநாயகி அழுது மூக்கை சிந்தி போடறப்பவும் - இது சுறுசுறுப்பா இருக்கு.
தனஞ்செயன்- நம்ம பிராணன் போன பிறகு உடம்பிலே தங்கி இருந்து 5 ஆவது நாள்ல அதை வீங்கி வெடிக்கப்பண்ணுவது.

இந்த 5 உபவாயுக்களும் பிராண வாயுவோடா வெவ்வேற நிலைதான், அதனால வாயுக்கள் அஞ்சுதான் ன்னும் சொல்கிறாங்க.