Pages

Wednesday, September 30, 2015

சம்மனஸ்ய ஸூக்தம்.


இது கலிகாலம். மக்கள் மனதில் அதன் தாக்கம் இந்த கால கட்டத்தில் நிறையவே காணப்படுகிறது. அநேகமாக எல்லாக்குடும்பங்களிலுமே பரஸ்பரம் அன்பின்மையும் சண்டை சச்சரவும் நிலவுகிறது. முக்கியமாக கவலை தருவது தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமையே. அகங்காரம் மேலெழ ”யார் பெரியவர்? நீ யா நானா?” என்று ஆரம்பித்து ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய பார்ப்பதில் மனசு போகிறதே ஒழிய இரட்டை மாட்டு வண்டி போல வாழ்கையை இழுத்துச்செல்லௌம் மனப்பாங்கு இல்லை.
வேதம் என்றாலே பலருக்கும் பிலாசபிதான் நினைவுக்கு வருகிறது. அதனாலேயே “இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று ஒதுங்குகிற போக்கே காணப்படுகிறது.

மன ஒற்றுமை நிலவ வேதம் சொல்லுவதை காணுங்கள்:
இது மனிதர்களுக்கிடையே ஒற்றுமையும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலையும் அன்பையும் வலியுறுத்துகிற ஸூக்தம். இது அதர்வண வேதத்தின் ஶௌநக ஶாகை 3ம் காண்டம் 30வது ஸூக்தமாக காணப்படுகிறது.

    (3-30-1-1) सहृदयं सांमनस्यम् अविद्वेषं कृणोमि वः |

    (3-30-1-2) अन्यो अन्यम् अभि हर्यत वत्सं जातम् इवाघ्न्या ||1||


(3-30-1-1) ஸஹ்ருʼ³யம்ʼ ஸாம்ʼமனஸ்யம் அவித்³வேஷம்ʼ க்ருʼணோமி வ: |
  (3-30-1-2) அன்யோ அன்யம் அபி ஹர்யத வத்ஸம்ʼ ஜாதம் இவாக்ன்யா || 1||

ஒரே உள்ளத்தவராக ஒரே மனத்தினராக வெறுப்பு அற்றவர்களாக உங்களை ஆக்குகிறேன். புதிதாப்பிறந்த கன்றினை தாய்ப்பசு நேசிப்பது போல ஒருவரை ஒருவர் நேசியுங்கள்

    (3-30-2-1) अनुव्रतः पितुः पुत्रो मात्रा भवतु संमनाः |
    (3-30-2-2) जाया पत्ये मधुमतीं वाचं वदतु शन्तिवाम् ||2||


(3-30-2-1) அனுவ்ரத: பிது: புத்ரோ மாத்ரா பவது ஸம்ʼமனா: |
  (3-30-2-2) ஜாயா பத்யே மதுமதீம்ʼ வாசம்ʼ வத³து ஶந்திவாம் || 2||

மகன் தந்தையைப் பின் தொடர்பவனாகவும், தாயுடன் ஒரே மனதுடனும் இருக்கட்டும்.
கணவனிடம் மனைவி இனிமையான அமைதி தரும் வார்த்தைகளைப் பேசட்டும்
.

    (3-30-3-1) मा भ्राता भ्रातरं द्विक्षन् मा स्वसारम् उत स्वसा |
    (3-30-3-2) सम्यञ्चः सव्रता भूत्वा वाचं वदत भद्रया ||3||

   (3-30-3-1) மா ப்ராதா ப்ராதரம்ʼ த்³விக்ஷன் மா ஸ்வஸாரம் உத ஸ்வஸா |
  (3-30-3-2) ஸம்யஞ்ச: ஸவ்ரதா பூத்வா வாசம்ʼ வத³த பத்³ரயா || 3||

சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. எல்லோரும் ஓன்று சேர்ந்து ஒரே நோக்கத்துக்காக பாடுபடுங்கள். அனைவருக்கும் நன்மை தரும் வார்த்தைகளை பேசுங்கள்.

    (3-30-4-1) येन देवा न वियन्ति नो च विद्विषते मिथः |
    (3-30-4-2) तत् कृण्मो ब्रह्म वो गृहे संज्ञानं पुरुषेभ्यः ||4||

  (3-30-4-1) யேன தே³வா ந வியந்தி நோ ச வித்³விஷதே மித²​: |
  (3-30-4-2) தத் க்ருʼண்மோ ப்³ரஹ்ம வோ க்³ருʼஹே ஸஞ்ஜ்ஞானம்ʼ புருஷேப்: || 4||

எதனால் தேவர்கள் ஒருவருக்கொருவர் பிரியாமலும் வெறுக்காமலும் இருக்கிறார்களோ, புரிந்துகொள்ளல் என்ற அந்த மேலான பண்பு வீட்டில் உறுப்பினர்களிடம் நிலவ ப்ரார்த்திக்கிறேன்.

    (3-30-5-1) ज्यायस्वन्तश् चित्तिनो मा वि यौष्ट संराधयन्तः सधुराश् चरन्तः |
    (3-30-5-2) अन्यो अन्यस्मै वल्गु वदन्त एत सध्रीचीनान् वः संमनसस्

क्र्णोमि ||5||
  (3-30-5-1) ஜ்யாயஸ்வந்தஶ் சித்தினோ மா வி யௌஷ்ட ஸம்ʼராதயந்த: ஸதுராஶ் சரந்த: |
  (3-30-5-2) அன்யோ அன்யஸ்மை வல்கு³ வத³ந்த ஏத ஸத்ரீசீனான் வ: ஸம்ʼமனஸஸ் க்ர்ணோமி || 5||

இளையவர்கள் பெரியவர்களைத் தொடர்ந்து செல்வது போல, ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்பவர்களாக, ஒரே மனத்தினராக, சேர்ந்து வழிபடுபவர்களாக, இனிமையாக பேசுபவர்களாக சேர்ந்து வாழுங்கள். ஒரு போதும் ஒற்றுமை குலையாதீர்கள். வாருங்கள், உங்களை ஒற்றுமையுடன் செயலாற்றுபவர்களாக ஒன்று பட்ட மனத்தினராக ஆக்குகிறேன்.

    (3-30-6-1) समानी प्रपा सह वो 'न्नभागः समाने योक्त्रे सह वो युनज्मि |
    (3-30-6-2) सम्यञ्चो 'ग्निं सपर्यतारा नाभिम् इवाभितः ||6||

  (3-30-6-1) ஸமானீ ப்ரபா ஸஹ வோ (அ)ந்னபா³​: ஸமானே யோக்த்ரே ஸஹ வோ யுனஜ்மி |
  (3-30-6-2) ஸம்யஞ்சோ (அ)க்³னிம்ʼ ஸபர்யதாரா நாபிம் இவாபி: || 6||

உங்கள் கிணறும் (நீரும்) உணவும் இருக்கட்டும். அன்புக்கயிற்றினால் உங்களை
கட்டுகிறேன். ஆரங்கள் சக்கரத்தின் அச்சில் சேர்வது போல ஒரே நோக்கத்துடன் புனித
அக்னியை வழிபடுங்கள்.

    (3-30-7-1) सध्रीचीनान् वः संमनसस् कृणोम्य् एकश्नुष्टीन्त् संवननेन सर्वान् |

    (3-30-7-2) देवा इवामृतं रक्षमाणाः सायंप्रातः सौमनसो वो अस्तु ||7||

  (3-30-7-1) ஸத்ரீசீனான் வ: ஸம்ʼமனஸஸ் க்ருʼணோம்ய் ஏகஶ்னுஷ்டீந்த் ஸம்ʼவனனேன ஸர்வான் |
  (3-30-7-2) தே³வா இவாம்ருʼதம்ʼ ரக்ஷமாணா: ஸாயம்ப்ராத: ஸௌமனஸோ வோ அஸ்து || 7||

உங்கள் அனைவரையும் ஒரு மனதினராக ஒரு செயல்பாடு உடையவராக ஆக்குகிறேன்.
அன்பினால் ஒன்றுபட்டு உணவருந்துங்கள். தேவர்கள் ஒன்றுபட்டு அமுதத்தை காப்பது போல இரவும் பகலும் உங்களுக்கு மன ஒருமைப்பாடு இருக்கட்டும்.

1.2 MB ஒலிக்கோப்பு தரவிறக்கி கேட்டு மகிழ: http://tinyurl.com/ph5rj93


கிறுக்கல்கள்! - 37


கடவுள்கிட்டே வரம் வேண்டியோ அல்லது அவரை நண்பனாக்கிக்கொள்ளவோ நல்லவனாக இருக்கும் மக்கள் பற்றி மாஸ்டர் இப்படிச் சொன்னார்.

ஒரு சோப் உற்பத்தியாளர் கடிலாக் கார் பரிசு என்று அறிவித்த போட்டியில் நிறைய பேர் பங்கெடுத்துக்கொண்டார்கள். போட்டி என்ன என்றால் நான் ஏன் சொர்க சோப்பை பயன்படுத்துகிறேன் என்று ஸ்லோகம் எழுத வேண்டும்.

ஒரு பெண்மணி எழுதிய நேர்மையான வரி: ஏன் என்றால் எனக்கு கடிலாக் கார் வேண்டும்!

Tuesday, September 29, 2015

கிறுக்கல்கள்! - 36


ஒரூ தீவிர சாதகருக்கு மாஸ்டர் சொன்னார்:”ஒரு நாள் உனக்கு புரிய வரும். அட நாம தேடறது ஏற்கெனெவே நம்மகிட்ட இருக்கேன்னு ஆச்சரியப்படுவே!”

அப்படின்னா இப்ப ஏன் அது தெரிய மாட்டேங்குது?”

ஏன்னா, நீ ரொம்ப முயற்சி பண்ணிகிட்டு இருக்கே!”

அப்ப எந்த முயற்சியும் செய்யக்கூடாதா?”

அப்படி இல்லை. முயற்சி தொடர்ந்து செய். ஆனா அது தன்னை காட்டிக்கிற காலத்துல காட்டிக்கும். அதுக்கு நேரம் கொடு!”

Monday, September 28, 2015

கிறுக்கல்கள்! - 35


ஆன்மீகத்தில்ஈடு பட்டு இருந்தஒரு பெண்மணி தான் அன்று காலை பாவமன்னிப்பு கேட்க போயிருந்ததாக மாஸ்டரிடம் சொன்னார்.

அட! நீங்க அப்படி எந்த பாவமும் பண்ண முடியும்ன்னு தோணலையே? என்ன சொல்லி பாவமன்னிப்பு கேட்டீங்க?”
ம்ம்ம்! சோம்பேறித்தனத்தால ஒரு ஞாயித்துக்கிழமை சர்ச்சுக்கு போகலை. ஒரு முறை தோட்டக்காரனை திட்டினேன்.”

அவ்ளோதானே?”
ம்ம்ம் அஞ்சு வருஷம் முன்னே என் மாமியாரை ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு துரத்திட்டேன்!”

அது ஆகி அஞ்சு வருஷமாச்சே?”
ஆமாம். ஆனா அதை ஒவ்வொரு வாரமும் சொல்லி பாவமன்னிப்பு கேட்பேன். அத திருப்பித்திருப்பி நினைவு படுத்திக்கறது பிடிக்குது!”

Friday, September 25, 2015

கிறுக்கல்கள்! - 34


அந்த மாஸ்டர் மிக எளிய வேலைகளைக்கூட நேர்த்தியாக செய்வதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அமர்வதோ, நடப்பதோ, டீ குடிப்பதோ, ஒரு கொசுவை விரட்டுவதோ ஏதானாலும்அதில் ஒரு நேர்த்தி, அழகு! அவர் செய்வதை எல்லாமே இயற்கையோட இயைந்த்தாகத் தோன்றும். அவர் ஏதுமே செய்யவில்லை ப்ரபஞ்சமே செய்கிறது என்று தோன்றும்.


ஒரு முறை அவருக்கு ஒரு பார்சல் வந்தது. சீடர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க  அதை வாங்கி, கட்டி இருந்த நூலை அவிழ்த்து, பேப்பரை பிரித்து உள்ளிருக்கும் பொருளை மெதுவாக விடுவித்தது ஒரு உயிருள்ள பொருளை கையாளுவது போல இருந்தது!

மஹாளய சிராத்தம் - 2


சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு. சாதாரண சிராத்தத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹவிர் பாகம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளய சிராத்தத்தில் கர்தா சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் கொடுக்கலாம்.

பிதா மாதா இறந்த திதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதாவது அப்பாவின்/ அம்மாவின் சிராத்தம் அஷ்டமியில் வரும் என்றால் அஷ்டமி அன்றுதான் சிராத்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

மஹாளய பக்‌ஷத்தில் ஒரு நாள் மட்டும் சிராத்தம் கொடுப்பதாக இருந்தால் சதுர்தசி நீங்கலாக பஞ்சமி முதல் அமாவாசை வரை என்று வேண்டுமானாலும் செய்யலாம். திதி வார நக்‌ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும். அமாவாசை, வ்யதீபாதம், அபபரணீ, த்வாதசி. அஷ்டமீ, வருஷ சிராத்த திதி இவற்றில் செய்ய இப்படி தோஷம் பார்க்க வேண்டியது இல்லை. கர்தா சந்ததி இல்லாத விதுரனாகவோ; சந்ததி இல்லாத விதவையாகவோ, ப்ரஹ்மசாரியாகவோ இருந்தால் அமாவாசை அன்று செய்யவும்.

கௌண காலத்தில் செய்வதாக இருந்தால் நந்தை, வெள்ளிக்கிழமை, ப்ரதமை, சதுர்தசீ ஆகியவற்றை விலக்கவும். (நந்தை? அது முஹூர்த்தம் சம்பந்தப்பட்டது.)
மேலே ’திதி வார நக்‌ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும்’ என்று சொன்னோமல்லவா? அவை என்ன?

ப்ரதமை, ஷஷ்டி,ஏகாதசி; வெள்ளிக்கிழமை; கர்தா, பத்னீ, ஜேஷ்டபுத்ரன் ஆகியோருடைய நக்‌ஷத்திரம்; வ்யதீபாதம் சம்பந்தப்படாத ரோஹிணீ; ரேவதி; த்ரயோதசி சம்பந்தமில்லாத மகம் ஆகியவை தோஷமுள்ளவை.

சந்ததி இல்லாதவர்கள் – பத்னி, புத்திரன் இல்லாத விதுரன், விதவை ; ப்ரம்மச்சாரி - அமாவாசை அன்று செய்ய வேண்டும். சந்ததி உள்ளவர்கள் அமாவாசை அன்று செய்யலாகாது. பிதா இல்லாத புத்திரர்கள் எல்லோருமே செய்ய வேண்டும். குடும்பம் பிரிந்து இருந்தால் தனித்தனியாகவே செய்ய வேண்டும்.

ச்ராத்தம் / தர்ப்பணம் செய்ய உசித காலம் மாத்யாஹ்ணிக காலத்துக்கு பின் அபராஹ்ண காலத்துக்குள். அதாவது 12-30 க்கு மேல் 3-30 க்குள். இந்த சரியான நேரத்தில் செய்பவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.

பக்‌ஷ தர்ப்பணம் செய்வோர் அமாவாசை அன்று அமாவாசை தர்ப்பணம் செய்த பிறகே மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளயத்தில் இன்னொரு விசேஷம் சாதாரணமாக செய்யும் சிராத்தம் போல் இல்லாமல் மற்றவர்களுக்கும் இதில் பங்கு கொடுக்கலாம் என்பதே. அவர்கள் காருணிக பித்ருக்கள் எனப்படுவர். அவர்களது பட்டியல் பின்னால் வருகிறது, இவர்களில் யாருடைய கோத்திரமும் பெயரும் தெரியுமோ அவர்களுக்கு அவர்கள் இறந்து போயிருந்தால் வஸு ரூபமாக வரித்து சிராத்தம் / தர்ப்பணம் கொடுக்கலாம்; தனித்தனியாக செய்ய வேண்டும். 

ஸபத்னீ மாதா (தந்தையின், தன் அம்மாவல்லாத இன்னொரு மனைவி), பெரியப்பா, சித்தப்பா, அண்ணா தம்பிகள், பிள்ளைகள்; அப்பாவுடன் கூடப்பிறந்த தமக்கை, தங்கைகள்; மாப்பிள்ளைகள்; அக்கா, தங்கை, பெண், மனைவி, மாமனார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, ஆசார்யன். காப்பாற்றின யஜமானன்; நண்பர்கள் – இப்படி பலருக்கும் தர்ப்பணம் செய்யலாம். பெயர் கோத்திரம் தெரியாதவர்களுக்கும் பொதுவாக காருண்ய பித்ரு என்று சொல்லி செய்யலாம்.

இப்படி காருண்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கையில் தனியாக கூர்ச்சம் வைத்து ஆவாஹணம் செய்ய வேண்டும்.

வருஷ சிராத்தத்தின் சிராத்தாங்க (பரேஹணி) தர்ப்பணம் அடுத்த நாள் காலையில் விடிவதற்குள் செய்யப்பட வேண்டும், ஆனால் மஹாளய சிராத்தத்தின் பரேஹணி தர்ப்பணம் அன்றே செய்யப்பட வேண்டும், இந்த காலத்தில் வருஷ சிராத்தத்திலேயே மிக அரிதாகவே அடுத்த நாள் செய்கிறார்கள். இதற்கு சமாதானம் இந்த விதியில் இருந்தது எடுத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது!

இன்னும் பல விஷயங்கள் இருந்தாலும் அவை மேலும் ‘டெக்னிகல்’ ஆகையால் இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது.

Thursday, September 24, 2015

மஹாளய சிராத்தம்-1


எல்லா பித்ருக்களும் யமதர்ம ராஜனால் பூலோகத்துக்கு ஒவ்வொரு வருடமும் பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் (ஆவணி மாத பௌர்ணமியை அடுத்த பிரதமை முதல்) பூமிக்கு  அனுப்பப்படுகின்றனர். ஆச்வயுஜ சுக்லபக் (புரட்டாசி அமாவாசையை அடுத்த) ப்ரதமை வரையான 16 நாட்கள் அவர்கள் புத்திரன் பெயரன் ஆகியோரால் கொடுக்கப்படும் அன்னம் நீர் ஆகியவற்றை ஏற்று ஆனந்திக்கின்றனர். இவை முக்கிய நாட்கள். கௌண காலமாக (தவறும் பக்ஷத்தில் அடுத்து செய்யும் காலமாக) விருச்சிக ராசியை சூரியன் அடையும் காலம் சொல்லப்படுகிறது (கார்திகை மாத பிறப்பு) இதுவே மஹாளய சிராத்த அனுஷ்டான காலம்.

இந்த காலத்தில் செய்யும் பித்ரு பூஜையானது யாகத்துக்கு சமமானது. இந்த கன்யா மாத்ததில் செய்யும் ஒரு நாள் சிராத்தத்தாலேயே பித்ருக்கள் ஒரு வருஷம் த்ருப்தி அடைகிறார்கள். ஆகவே 16 நாளும் செய்யக்கூடிய கர்மாவுக்கு பலன் அபரிமிதமாகும்.
இந்த 16 நாட்கள் முழுவதும் தினசரி பார்வண விதியாக (அதாவது ஹோமத்துடன்) சிராத்தம் செய்வது சிலாக்கியமாகும். அவ்வளவு நாட்கள் செய்ய சக்தியில்லை எனில் பஞ்சமி முதலோ அஷ்டமி முதலோ அதுவும் முடியாவிட்டால் தசமி முதலோ அமாவாசை வரை செய்யலாம். இதற்கும் சக்தி இல்லை எனில் விலக்கப்பட்ட நாள் இல்லாத ஒரு நாளிலாவது செய்ய வேண்டும்.

சிராத்தமாக செய்ய சக்தி இல்லாதவரே தர்ப்பணமாக செய்யலாம். அமாவாசை முடிய என்றும் பிரதமை முடிய என்று இரண்டு விதமாக முனிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவரவர் க்ருஹ்ய ஸூத்திரத்தை பார்த்து செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட 16 நாட்களில் தின க்ஷயம் ஏற்பட்டால் 15 நாட்கள் மட்டுமே முக்கிய காலமாகும். ஸங்கல்ப சமயத்தில் உள்ள பக்ஷம் திதி இவற்றையே ஸங்கல்பத்துக்கு உபயோகிக்க வேண்டும். வழக்கமாக பஞ்சாங்கத்தில் சிராத்த திதி என்று பார்த்து செய்வது போலில்லை.

தெய்வாதீனமாக மேற்கூறிய முக்கிய காலத்தில் செய்ய முடியவில்லை எனில் கார்த்திகை பிறப்பு வரை கௌண காலம் இருப்பதால் கூடிய வரை சீக்கிரமாக செய்ய வேண்டும். அப்படியும் செய்யாவிட்டால் பித்ருக்கள் பெரு மூச்சு விட்டுக்கொண்டு வருத்தத்துடன் இவ்வுலகைவிட்டு கிளம்புகின்றனர். அப்படி அவர்கள் வருத்தப்பட்டாலே ஒருவன் பித்ரு சாபத்துக்கு உள்ளாகிறான். ’என் அப்பாவுக்கு என் மேல் மிகவும் பிரியம்; அவர் எனக்கு சாபம் கொடுக்க மாட்டார்’ என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தனியாக சாபம் என்று கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் வருத்தமே போதும்; சாபம் ஏற்படும்.
இந்த சாபத்தால் ஐஸ்வர்யம், ஆயுசு, புத்திரன், பெயரன் ஆகியோருக்கும் குறைவு ஆகியன ஏற்படும்.

இதிஹாஸங்களில் இதை புகழ்ந்து சொல்லி இருக்கிறது. மாஹாளய பக்‌ஷத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம் கயா சிராத்தத்துக்கு சமம்; மஹா பரணியில் செய்யும் சிராத்தம் 5 மடங்கு பலன் தரும்; வ்யதீபாத புண்ய காலத்தில் செய்வது 10 மடங்கு பலன்; மத்யாஷ்டமிக்கு 20 மடங்கு; த்வாதசியில் 100 மடங்கு; அமாவாசை சிராத்தத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று சொல்லி இருக்கிறது.

ஒவ்வொரு திதியிலும் கொடுக்கப்படும் சிராத்தத்துக்கு தனி பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.
ப்ரதமை – தன லாபம்
த்விதீயை – சந்ததி
த்ருதீயை – இஷ்டமான வரன்
சதுர்த்தி – சத்ருக்களை அகற்றும்
பஞ்சமி – ஐஸ்வர்யத்தை அடைவான்
ஷஷ்டி- புகழத்தகுந்தவன் ஆவான்.
ஸப்தமி – கூட்டத்துக்கு தலைவனாவான்
அஷ்டமி – சிறந்த புத்தியை அடைவான்
நவமி – அழகுள்ள கன்னிகையை அடைவான்
தசமி – எல்லா இஷ்டங்களையும் அடைவான்
ஏகாதசி – எல்லா வேதங்களையும் அடைவான்
த்வாதசி – ஸ்வர்ண லாபம்
த்ரயோதசி – ப்ரஜை, மேதா சக்தி, தேஹ புஷ்டி, பசுக்கள், ஸ்வதந்திர தன்மை, சிறந்த வ்ருத்தி (தொழில்) தீர்க்கமான ஆயுஸ், ஐஸ்வர்யம் – இப்படி சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் நிச்சயமாக கிடைக்கும்.

சதுர்தசி சிராத்தம் சிறு வயதில் ஆயுதத்தால் அடி பட்டு இறந்த பித்ருக்களுக்கு சிறந்ததாகும்.

அமாவாசை – இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான்.

சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு....

(தொடரும்)

கிறுக்கல்கள்! - 33


புதிதாக வந்த சீடன் மூத்த சீடரிடம் கேட்டார்: எனக்கு ஆன்மீகத்தில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லையே?

ம்ம்ம்ம்! நீ அவரிடம் ஆன்மீகத்தை கற்வந்ததால் இருக்கலாம்!

! அப்படியானால் நீங்க ஏன் இவர்கிட்ட வந்தீங்க?

அவர் செருப்போட வாரை போட்டுக்கிற அழகை பார்க்க!

Wednesday, September 23, 2015

கிறுக்கல்கள்! - 32


அந்த மாஸ்டருக்கு தன்னை வழிபடுவது என்பது பிடிக்காது. இது புதிதாக அவரை சந்திப்பவர்களுக்கு அதிர்ச்சியைத்தரும்.


உன்னை வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் முக்கியமானதை இழந்து விடுகிறார்கள்; அன்புக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வைஎன்பார்,

ஏசு அவரை ”கோமானே கோமானே” என்று அழைத்துக்கொண்டு தான் செய்யும் கெட்ட செயல்களை அறியாதவர்களை வெறுத்தார் என்று சுட்டிக்காட்டுவார்.

ஒரு முறை தன்னை பார்க்க வந்தவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டவருக்கு இன்ப அதிர்ச்சி தாங்கவில்லை! இவ்வளவு பெரியவர்; நமக்கு வாழைப்பழம் தந்து இருக்கிறாரே? அதை என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். மாஸ்டர் சொன்னார்: ”அந்த முட்டாளை அந்த பழத்தை சாப்பிடச்சொல்லு!”


Tuesday, September 22, 2015

கிறுக்கல்கள்! - 31வெளியூர் போய் திரும்பி வந்த மாஸ்டர் தான் பாடம் கற்றுக்கொண்டதாக கதை சொன்னார்.

பஸ்ஸில் பயணித்துக்கொண்டு இருந்தபோது நடுவில் உணவுக்காக நிறுத்தினார்கள்.
பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்துக்குப்போனார். வகை வகையான உணவுப்பொருட்கள் இருந்தன.

இவர் சூப் வேண்டும் என்று கேட்டார்.

நீங்க அந்த பஸ்ல வந்தீங்களா?

ஆமா.

அப்ப சூப் கிடையாது!

குழப்பத்துடன் கேட்டார்: அப்ப அதோ இருக்கிற கலந்த சாதம்?

ம்ஹும்! பஸ்ல வரவங்களுக்கு அதெல்லாம் கிடையாது. சாண்ட்விச் வாங்கிக்குங்க!

ஏன்?

பஸ் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். உங்களுக்கு சாப்பிட பத்து நிமிஷத்துக்கு மேலே கிடைக்காது. காலை முதல் மெனக்கெட்டு இத்தனையும் செய்திருக்கேன். ரசிச்சு ருசிச்சு சாப்பிடாம அவசர அவசரமா அள்ளி தின்னுட்டு போறவங்களுக்கு இதெல்லாம் கொடுக்க மாட்டேன்!

Monday, September 21, 2015

கிறுக்கல்கள்! - 30குருவுக்கு எப்போதும் தலை கனம் கிடையாது. எப்போதும் சாந்தமாக இருப்பார் என்று எதிர்பார்த்து வருபவர்கள் அவருடைய வெடிச்சிரிப்பை கண்டு அதிர்ந்து போவார்கள்
.
அப்படி எதிர்பார்த்து ஏமாந்த ஒருவர் சொன்னார்: இவர் ஒரு கோமாளி!

ஒரு சீடர் அவரைத் திருத்தினார்: இல்லை இல்லை. கோமாளியை பார்த்து நாம் சிரிக்கிறோம். இவரோ நாமே நம்மை பார்த்து சிரிக்க சொல்லித்தருகிறார்!

Friday, September 18, 2015

கிறுக்கல்கள்! - 29


எதைத்தேடுகிறீங்கள்?


வந்தவர் அமைதிஎன்றார்.

அகங்காரம் போகாமல் அமைதி வந்தால் பிரச்சினைதான் வருகிறது!

குருவை வேடிக்கை பார்க்க வந்து ஆசீர்வாதம் கேட்டவர்களுக்கு இப்படி ஆசீர்வதித்தார்: கடவுள் தரும் அமைதி உங்களை எப்போதும் தொந்திரவு செய்யட்டும்!


Thursday, September 17, 2015

பிள்ளையார் ஸ்பெஷல்!பிள்ளையாரைப்போல எல்லாருக்கும் பிடிச்ச தெய்வம் வேற இல்லை. சைவரோ வைணவரோ ஸ்மார்த்தரோ இல்லை இன்ன மதம்ன்னு இல்லாவரோ அனேகமா எல்லாருக்குமே இவரை ரொம்ப பிடிக்கும். பக்தனோட கற்பனைக்கு ஏற்ப வளைஞ்சு கொடுக்கறவர் இவர். பிடிச்சு வெச்சா பிள்ளையார் ந்னு சாணியோ களிமண்ணோ மஞ்சள் பொடியோ எதை பிடிச்சு வெச்சு இதுல வான்னு கூப்டாலும் வந்துடுவார். நம்மால் முடிஞ்ச அளவுக்கு எவ்வளோ எளிய பூஜைன்னாலும் ஏத்துப்பார். நம் பக்திக்கு ஏற்ப பலனும் கொடுத்துடுவார்!

பூஜை பண்ணமுடியாம அமீரகத்துல ஒட்டகம் மேய்க்கறவங்க, ஒபாமாவகத்துல பொட்டி தட்றவங்க போல சிலருக்கு இந்த பதிவு, பூஜைன்னு தனியா பண்ண முடியலைன்னாலும் கீழே கொடுத்து இருக்கற நாமாவளியை படிச்சு வேண்டிக்குங்க! போதும்!
நேத்து கொடுத்த பைல்ல இருக்கறது சித்திவிநாயக அஷ்டோத்திரம்.
இது வேற.

அதுக்கு முன்ன நம் ப்ரெண்ட்ஸ் க்கு பிடிச்ச மாதிரி ஒரு வித்தியாசமான பிள்ளையார். பக்தன் கற்பனைக்கு தக்கபடி வருவார்ன்னு சொன்னேன் இல்லையா? :-) நன்றி: தினமலர்.
ஶ்ரீக³ணேஶாஷ்டோத்தரஶதநாமாவலீ ॥
ௐ அகல்மஷாய நம: ।
ௐ அக்³னிக³ர்பச்சிதே³ நம: ।
ௐ அக்³ரண்யே நம: ।
ௐ அஜாய நம: ।
ௐ அத்³புத மூர்திமதே நம: ।
ௐ அத்யக்க்ஷாய நம: ।
ௐ அனேகாசிதாய நம: ।
ௐ அவ்யக்த மூர்தயே நம: ।
ௐ அவ்யயாய நம: ।
ௐ அவ்யயாய நம: ।
ௐ ஆஶ்ரிதாய நம: ।
ௐ இந்த்³ர ஶ்ரீப்ரதா³ய நம: ।
ௐ இக்ஷு சாப த்ருʼதே நம: ।
ௐ உத்பலகராய நம: ।
ௐ ஏகத³ந்தாய நம: ।
ௐ கலிகல்மஷ நாஶனாய நம: ।
ௐ காந்தாய நம: ।
ௐ காமினே நம: ।
ௐ காலாய நம: ।
ௐ குலாத்³ரி பேத்த்ரே நம: ।
ௐ க்ருʼதினே நம: ।
ௐ கைவல்ய ஶுக²தா³ய நம: ।
ௐ க³ஜானனாய நம: ।
ௐ க³ணேஶ்வராய நம: ।
ௐ க³தினே நம: ।
ௐ கு³ணாதீதாய நம: ।
ௐ கௌ³ரீ புத்ராய நம: ।
ௐ க்³ரஹ பதயே நம: ।
ௐ சக்ரிணே நம: ।
ௐ சண்டா³ய நம: ।
ௐ சதுராய நம: ।
ௐ சதுர் பா³ஹவே நம: ।
ௐ சதுர் மூர்தினே நம: ।
ௐ சந்த்³ரசூடா³மண்யே நம: ।
ௐ ஜடிலாய நம: ।
ௐ துஷ்டாய நம: ।
ௐ த³யாயுதாய நம: ।
ௐ த³க்ஷாய நம: ।
ௐ தா³ந்தாய நம: ।
ௐ தூ³ர்வா பி³ல்வ ப்ரியாய நம: ।
ௐ தே³வாய நம: ।
ௐ த்³வி ஜப்ரியாய நம: ।
ௐ த்³வை மாத்ரீயாய நம: ।
ௐ தீராய நம: ।
ௐ நாக³ராஜ யஜ்ஞோபவீதவதே நம: ।
ௐ நிரங்ஜனாய நம: ।
ௐ பரஸ்மை நம: ।
ௐ பாபஹாரிணே நம: ।
ௐ பாஶாங்குஶ தராய நம: ।
ௐ பூதாய நம: ।
ௐ ப்ரமத்தாதை³த்ய பயதாய நம: ।
ௐ ப்ரஸன்னாத்மனே நம: ।
ௐ பீ³ஜாபூர ப²லா ஸக்தாய நம: ।
ௐ பு³த்³தி ப்ரியாய நம: ।
ௐ ப்³ரஹ்மசாரிணே நம: ।
ௐ ப்³ரஹ்ம த்³வேஷ விவர்ஜிதாய நம: ।
ௐ ப்³ரஹ்ம விது³த்தமாய நம: ।
ௐ பக்த வாஞ்சி²த தா³யகாய நம: ।
ௐ பக்த விக்ன விநாஶனாய நம: ।
ௐ பக்திப்ரியாய நம: ।
ௐ மாயினே நம: ।
ௐ முனி ஸ்துத்யாய நம: ।
ௐ மூஷிக வாஹனாய நம: ।
ௐ ரமார்சிதாய நம: ।
ௐ லம்போ³³ராய நம: ।
ௐ வரதா³ய நம: ।
ௐ வாகீ³ஶாய நம: ।
ௐ வாணீப்ரதா³ய நம: ।
ௐ விக்னராஜாய நம: ।
ௐ விதயே நம: ।
ௐ விநாயகாய நம: ।
ௐ விபுதே³ஶ்வராய நம: ।
ௐ வீத பயாய நம: ।
ௐ ஶக்தி ஸம்யுதாய நம: ।
ௐ ஶாந்தாய நம: ।
ௐ ஶாஶ்வதாய நம: ।
ௐ ஶிவாய நம: ।
ௐ ஶுத்³தாய நம: ।
ௐ ஶூர்பகர்ணாய நம: ।
ௐ ஶைலேந்த்³ர தனுஜோத்ஸங்க³ கேலனோத்ஸுக மானஸாய நம: ।
ௐ ஶ்ரீகண்டா²ய நம: ।
ௐ ஶ்ரீகராய நம: ।
ௐ ஶ்ரீதா³ய நம: ।
ௐ ஶ்ரீப்ரதயே நம: ।
ௐ ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம: ।
ௐ ஸமஸ்த ஜக³தா³ தாராய நம: ।
ௐ ஸமாஹிதாய நம: ।
ௐ ஸர்வ தனயாய நம: ।
ௐ ஸர்வரீ ப்ரியாய நம: ।
ௐ ஸர்வ ஸித்³திப்ரதா³ய நம: ।
ௐ ஸர்வ ஸித்³திப்ரதா³யகாய நம: ।
ௐ ஸர்வாத்மகாய நம: ।
ௐ ஸாம கோஷ ப்ரியாய நம: ।
ௐ ஸித்³தார்சித பதா³ம்பு³ஜாய நம: ।
ௐ ஸித்³திதா³யகாய நம: ।
ௐ ஸ்ருʼஷ்டி கர்த்ரே நம: ।
ௐ ஸோம ஸூர்யாக்³னி லோசனாய நம: ।
ௐ ஸௌம்யாய நம: ।
ௐ ஸ்கந்தா³க்³ரஜாய நம: ।
ௐ ஸ்துதி ஹர்ஷிதாய நம: ।
ௐ ஸ்து²ல கண்டா²ய நம: ।
ௐ ஸ்து²ல துண்டா³ய நம: ।
ௐ ஸ்வயங்கர்த்ரே நம: ।
ௐ ஸ்வயம் ஸித்³தாய நம: ।
ௐ ஸ்வ லாவண்ய ஸுதாஸாரஜித மன்மத² விக்³ரஹாய நம: ।
ௐ ஹரயே நம: ।
ௐ ஹ்ரூʼஷ்டா²ய நம: ।
ௐ ஜ்ஞானினே நம: ।
இதி ஶ்ரீ வினாயக அஷ்டோத்தரஶத நாமாவலீ ஸம்பூர்ணம் ॥