Pages

Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Wednesday, February 17, 2016

நான் யார்? - 24



முக்தி என்கிறது எது?
இப்ப நாம ஒரு மாயக் கட்டுக்குள்ள இருக்கோம். நாமல்லாத எதையோ நாம்ன்னு நினைச்சுக்கொண்டு இருக்கோம். அதனால நான் யார்ன்னு உண்மையா தீர விசாரிச்சு நம்மோட உண்மை சொரூபத்தை கண்டு பிடிச்சு அதிலேயே நிக்கறதுதான் முக்தி.

28. முக்தி யென்றா லென்ன?
பந்தத்தி லிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி.   

-நிறைந்தது- 

Monday, February 15, 2016

நான் யார்? - 23


ஆரம்பத்திலேந்து அடிக்கடி விசாரணைன்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே; அதுக்கு த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?
விசாரணை என்கிறது தன்னிலேயே மனசை வெச்சுக்கொண்டு இருக்கறது.
த்யானம் என்கிறது தன்னை ப்ரம்மம், சச்சிதானந்தம்ன்னு பாவிக்கிறது.
ஒரு விஷயத்தை ஒரு கருத்தும் இல்லாம பார்த்துக்கொண்டு இருக்கிறதுக்கும் ஒரு விஷயமா கருதி பாவிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?

27. விசாரணைக்கும் தியானத்திற்கும் பேதமென்ன?
விசாரணையாவது தன்னிடத்திலேயே மனதை வைத்துக் கொண்டிருப்பது. தியானமாவது தன்னை பிரம்ம மென்றும் சச்சிதானந்த மென்றும் பாவிப்பது.

Friday, February 12, 2016

நான் யார்? - 22



நிராசைந்னு சொல்லறாங்களே அதுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?
ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணேதான். ஒண்ணுத்தோட இன்னொரு பரிணாமம்தான் இன்னொன்னு. நிறைய பொருட்கள் வெச்சு இருக்கு. அது எதுலேயும் நமக்கு மனசு போகலைன்னா அது நிராசை. இதேதான் வைராக்கியமும்; பற்றற்ற தன்மை. மனசு போகலை, சரி. அது தோன்றவே இல்லைன்னா? அதாவது தன்னைத்தவிர வேற எதுவுமே தோன்றலைன்னா? அதுதான் ஞானம். தன்னை விடாமலே இருக்கறதுதான் ஞானம்.


26. நிராசைக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமென்ன?
நிராசையே ஞானம். நிராசை வேறு ஞானம் வேறன்று; உண்மையில் இரண்டு மொன்றே. நிராசை யென்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது. ஞான மென்பது ஒரு பொருளும் தோன்றா திருப்பது. என்றால், அன்னியத்தை நாடா திருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம்.

Wednesday, February 10, 2016

நான் யார்? - 21


அந்த லெவலுக்கு போயிட்டா ஞான த்ருஷ்டி எல்லாம் வந்துடும் இல்ல? மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்; எதிர் காலத்துல என்ன நடக்கும்ன்னு தெரியும்; கடந்த கால ரகசியங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்; எங்கேயோ தூர தேசத்தில என்ன நடக்குதுன்னு இங்கிருந்தே சொல்ல முடியும். இல்லையா?
இல்லை.
! பின்னே?
அதெல்லாம் சில சித்திகள். உண்மையான ஞான த்ருஷ்டி சும்மா இருக்கறதுதான்.
அது என்ன கஷ்டம்?
கஷ்டம்தான். இருந்து பாத்தா தெரியும்! ஒரு கோவிலுக்கு புதுசா ஒரு நிர்வாகி வந்தார். கணக்கு வழக்கெல்லாம் கவனிச்சார். அதுல சும்மா இருக்கறவனுக்கு ஒரு பட்டை சாதம்ன்னு எழுதி இருந்தது. இது என்னன்னு விசாரிச்சார். இது ப்ரசாதத்தை யார் யாருக்கு கொடுக்கறோம்ன்னு பட்டியல் போட்டு இருக்குன்னு சொன்னாங்க.
சும்மா இருக்கறவன்னு போட்டு இருக்கே? அவர் வேலை ஒண்ணும் செய்ய மாட்டாரா?
ஆமா, அவர் சும்மா ஒரு தூண்ல சாஞ்சுகிட்டு இருப்பார்.
அப்ப அவனுக்கு எதுக்கு சாப்பாடு? இனிமே கொடுக்காதீங்க.
வேற வழியில்லை. அடுத்த நாள் அந்த நபருக்கு சாப்பாட்டுப் பட்டை கிடைக்கலை. அந்தப்பக்கம் போன ஆசாமியை ஏன்னு விசாரிச்சார். புது மணியக்காரர் உத்திரவுன்னாங்க. ஓஹோ அவரை இங்க கொஞ்சம் வரச்சொல்ல முடியுமான்னு கேட்டார். இதோ தற்செயலா அவரே வரார்; கேட்டுக்கோங்கன்னு சொன்னாங்க.
நீங்கதான் எனக்கு சாப்பாடு கொடுக்க வேணாம்ன்னு சொன்னீங்களா?
ஆமாம். சும்மா உக்காந்து இருக்க எதுக்கு சாப்பாடு?
சும்மா உக்காந்து பாத்தா புரியும்.
அதுல என்ன கஷ்டம்?
சரி; இங்க இந்த தூண்ல சாஞ்சுகிட்டு பத்து நிமிஷம் சும்மா இருங்க பாக்கலாம். ஒரு அசைவும் இருக்கக்கூடாது. ஒண்ணும் பேசக்கூடாது. சைகை காட்டக்கூடாது.
, என்ன கஷ்டம்ன்னு மணியக்காரர் உக்காந்தார். அஞ்சு நிமிஷத்துக்கு மேல உக்கார முடியலை! எழுந்துட்டார். இவருக்கு இனிமே ரெண்டு பட்டை பிரசாதம் கொடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.
தமாஷ் கதைதான்னாலும் சும்மா இருக்கறதை போல கஷ்டமானது ஒண்ணுமில்லை. என்ன நடந்தாலும் எதிர்வினை இல்லாமல் எப்படி இருக்க முடியும்? மனசுல எண்ணங்கள் ஓடற வரை அவை ஏதேனும் செயலை தூண்டிகிட்டேத்தான் இருக்கும்.
உடம்பால சும்மா இருக்க முடிஞ்சாலும் மனசால சும்மா இருக்கணுமே; அது முடியுமா? கடந்த காலத்தை நினைச்சு அசை போட்டு திருப்பித்திருப்பி நடந்து முடிஞ்சு போன சமாசாரங்களூக்கு எல்லாம் வருத்தப்படறது; கோபப்படறது… இப்படி எத்தனை வீணான காரியம் எல்லாம் செய்யறோம். கடந்த காலம் பத்தி இல்லைன்னா எதிர் காலத்தை பத்திய பயம்! நாளைக்கு படுக்கையை விட்டு எழுதிருப்போமான்னு கூட நிச்சயமா சொல்ல முடியாது. இப்ப ரெண்டு வயசு இருக்கிற குழந்தையோட கல்யாணத்தைப்பத்தி கவலை படுவோம்!
இப்படி சும்மா இருக்கறது என்பது ரொம்ப ரொம்பவே கஷ்டம்! எது வேணா நடக்கட்டுமே; அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு யாரால சும்மா பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியறதோ அவங்களுக்கு மட்டுமே ஞானம் பொருந்திய த்ருஷ்டி இருக்கு!

25. ஞானதிருஷ்டி என்றால் என்ன?
சும்மா விருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மா விருப்பதாவது, மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே; அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பன வறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டி யாகமாட்டா.


Monday, February 8, 2016

நான் யார்? - 20



சுகமா இருந்தேன்னு சுசுப்தில இருந்தவங்க சொல்வாங்கன்னு சொன்னிங்களே, அந்த சுகம் என்கிறது என்ன?
ஆத்ம சொரூபமா இருக்கிறதே சுகம். அவை ரெண்டும் வேறு வேறு இல்லை. வெளியே இருக்கிற லோகத்து சமாசாரங்களில சுகம் இல்லை. அப்படி இருக்கிறதா நாமதான் தப்பா நினைக்கிறோம். அவற்றுக்கான நம்மோட ரிஆக்‌ஷன்லதான் அந்த சுகம் இருக்கு.
ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட பொம்மை வேணும்ன்னு பிடிவாதம் பிடிக்கறது. அது கிடைக்கும் வரை அதுவே அதோட எண்ணமா இருக்கு. அது கிடைச்சதும் அதோட சந்தோஷத்தை பாக்கணுமே! அதை வெச்சுண்டு விளையாடறது. அடுத்த நாள் பாத்தா அந்த பொம்மை ஒரு மூலையில கிடக்கும்! குழந்தை அதை பாத்தாக்கூட உதாசீனம் பண்ணிட்டு போய் கொண்டு இருக்கும். ஏன்? அப்ப அதுக்கு அந்த பொம்மை தேவையில்லை; அது வேணும்ன்னு தோணலை.
அப்ப சந்தோஷம் அந்த பொம்மையில இல்லை. அது நம்கிட்டே தோற்றுவிக்கற ரிஆக்‌ஷன்லதான் இருக்கு! இது போலத்தான் நம்மோட எல்லா ஆசைகளுமே! வேலை கிடைக்கணும்; ப்ரொமோஷன் வேணும், நிறைய பணம் வேணும்… இதுப்போல பலதும்.
நினைச்சது கிடைச்சது, வெறுத்தது நீங்கினது, ஆசை பூர்த்தியாறது இப்படி சிலதுல சுகம் இருக்குன்னா, அப்போ எண்ணதோட குறிக்கோள் பூர்த்தி ஆகிடறது. அந்த நேரத்துக்கு மனசு தன்னோட இருப்பிடத்துக்கு திரும்பறது. இருப்பிடம் ஆத்மா என்கிறதால அப்ப அனுபவிக்கறது ஆத்ம சுகமே!
ஆனா நாம் இந்த சுகத்திலேயே திளைச்சு இருந்துடறதில்லை. அடுத்த ஆசை ஆரம்பிக்கறது!
மனசு எப்போவெல்லாம் வெளியே அலையுமோ அப்ப துக்கம் ஏற்படறது. எப்பல்லாம் உள்நோக்கி திரும்புமோ அப்பல்லாம் சந்தோஷப்படுது! சுகமும் துக்கமும் மாறி மாறி வாழ்க்கையில வரும் என்கிறதுக்கு அர்த்தம் என்னன்னா மனசு உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி திரும்புது என்பதே!
கோடை காலத்தில வெளியே ஒரே சூடா இருக்கு. அப்படி இருக்கிறப்ப ஒத்தன் வெளியே அலைஞ்சான்னா சீக்கிரத்தில சூடு தாங்காம கஷ்டப்படுவான். அவன் ஒரு மரத்தடியை அடைஞ்சு அங்கே இளைப்பாறினா…. ஆஹா! என்ன சுகம்! இதுலேயே இருக்காம அவன் ஏதோ வேலை இருக்கிறதா நினைச்சு வெளியே திரும்பவும் போவான்னா திருப்பி துக்கத்தை அனுபவிப்பான்.
ஞானி எப்பவும் இந்த ஆத்ம சுகத்திலேயே இருக்கான். அஞ்ஞானி பிரபஞ்சத்தில உழலுவதால துக்கப்படறான். அப்பப்ப மனசு உள்முகமா திரும்பி கொஞ்சமே கொஞ்சம் சுகம் அனுபவிக்கிறான், திருப்பி வெளியே பார்க்க ஆரம்பிக்கறான்.
உலகம் என்கிறது நினைவுகள்தான். நினைவுகள் நீங்க சுகம் ஏற்படுது. அதாவது உலகம் தோன்றும் போது துக்கமும் அது மறையும் போது சுகமும் உண்டாகிறது.


24. சுகமாவது யாது?
சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே; சுகமும் ஆத்ம சொரூபமும் வேறன்று. பிரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுக மென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாகநாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம். மனம் வெளி வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போ தெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது. அப்படியே, தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்தபொருளுக்குக் கேடுண்டாகும்போதும், மனம் அந்தர்முகமாகி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளேதிரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது. மரத்தடியில் நிழல் சுகமா யிருக்கிறது. வெளியில் சூரிய வெப்பம் கொடுமையா யிருக்கிறது. வெளியி லலையு மொருவன் நிழலிற் சென்றுகுளிர்ச்சி யடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக் காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலினின்று வெயிலிற் போவதும், வெயிலினின்று நிழலிற் செல்வதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் அவிவேகி. ஆனால் விவேகியோ நிழலை விட்டு நீங்கான். அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தி லுழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுக மடைவதுமா யிருக்கிறது. ஜகமென்பது நினைவே. ஜகம் மறையும்போது, அதாவது நினைவற்ற போது, மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றதுஜகம் தோன்றும் போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.

Saturday, February 6, 2016

நான் யார்? - 19



தீவிரமான ஆத்ம சாதகர் புத்தகங்களை படிக்கிறதால பிரயோசனம் உண்டா?

எந்த புத்தகத்தை படிச்சாலும் முக்திக்கு மனசை அடக்கணும்ன்னுதானே சொல்லி இருக்கு? இதை புரியற வரைக்கும் படிக்கலாம். அதுக்கு அப்புறம் மேலும் மேலும் புத்தகங்கள் படிச்சு பிரயோசனம் இல்லை. மனசை நாசம் செய்யறதுக்கு நாம யார்ன்னு அறியணும். அதுக்கு நான்யார்ன்னு விசாரிக்கணுமே தவிர எந்த புத்தகத்தையும் படிச்சு பிரயோசனமில்ல. அந்த புத்தகத்தில எப்படி விசாரிக்க முடியும்? நாமேதான் நம்மை ஞானக்கண்ணால கண்டு அறியணும்.

புத்தகத்தை படிக்கிறோம். அதாவது எழுத்துக்களை கண்ணால பார்க்கிறோம். பார்க்கிறதுக்கு மனசு ஒரு அர்த்தம் கொடுத்து சில நினைவுகளை தோற்றுவிக்குது. ஓஹோ! இது இப்படி ந்னு அறியறோம். இங்க வேலை செய்யறது அன்னத்தால் ஆன இந்த உடம்பில இருக்கிற சில கருவிகளும், விஞ்ஞான மய கோசத்தில இருக்கிற சில புலன்களும், மனோ மய கோசத்தில இருக்கிற மனம்/ அறிவு - இவ்வளவுதான். ஆனா ‘தான்’ என்கிறது இந்த கோசங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கு. இந்த அஞ்சு கோசங்களையும் கடந்து போகும் வரைக்கும் அதை உணர முடியாது. இந்த அஞ்சு கோசங்களில சிலது இல்லாம நூல்களால நமக்கு எதையும் உணர்த்த முடியாது. ஆகவே நூல்களால ஒரு நிலைக்கு மேல பிரயோசனம் இல்லை. அந்த நிலையில் உண்மையில கத்துக்கிட்டது எல்லாத்தையும் மறந்து புறம் தள்ள வேண்டி இருக்கும்!


23. முமுக்ஷுக்களுக்கு நூற்படிப்பால் பிரயோஜனமுண்டா?
எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதாற் பயனில்லை.
மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் விசாரிக்க வேண்டுமே யல்லாமல், எப்படி நூல்களில் விசாரிப்பது? தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணாற் றானே யறிய வேண்டும். 'தான்' பஞ்ச கோசங்களுக்குள் ளிருப்பது; நூல்களோ அவற்றிற்கு வெளியி லிருப்பவை. ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே. கற்றவை யனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.

Thursday, February 4, 2016

நான் யார்? - 18



நனவுக்கும் கனவுக்கு வித்தியாசம் இல்லையா?

கனவு சிறிய கால அளவில நடக்கும். நனவில கால அளவு நீண்டது. இதனால இவற்றோட தாக்க பலம் வித்தியாசமா இருக்கும். நனவில நடக்கிறதா தோன்றது ரொம்ப ரொம்ப பலமானது. இதைத்தவிர வேற வித்தியாசம் கிடையாது. நனவில நடக்கிறதெல்லாம் எவ்வளவு உண்மையா தோண்றதோ அவ்வளோ உண்மையா கனவில அந்த நேரத்துக்கு தோணும். கனவு காண்கிறபோது மனசு வேற ஒரு உடம்பை கல்பித்துக்கொள்ளும். நாம் காண்கிற கனவை நினைவுக்கு கொண்டு வந்து ஆராய்ஞ்சுபாத்தா இது தெளிவா தெரியும். 

நனவிலும் சரி, கனவிலும் சரி. ஒரு பெயரோ அதன் வடிவமோ நினைவு எழுந்த அதே நேரத்தில எழும். அப்ஸ்ட்ராக்ட்டா யோசிக்கிறது என்கிறது அரிதாவே இருக்கும். உதாரணமா மைசூர் பாகு ந்னு ஒரு நினைவு வந்த உடனே அது எப்படி இருக்கும் என்கிற படம் நம்மோட மனக்கண் முன்னால வந்துடும்.

22. நனவிற்கும், கனவிற்கும் பேதமில்லையா?
நனவு (ஜாக்ரம்) தீர்க்கம், கனவு (சொப்பனம்) க்ஷணிகமென்பது தவிர வேறு பேதமில்லை. ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. ஜாக்ரம் சொப்பன மிரண்டிலும், நினைவுகளும் நாமரூபங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.

Tuesday, February 2, 2016

நான் யார்? -17


முக்தியில விருப்பம் இருக்கறவனுக்கு தத்துவங்களின் விசாரணை இருக்கணும்,  இல்லையா?

96, 36, 24 தத்துவங்கள் என அந்தந்த தர்சனங்களை பொருத்து சொல்லப்படுது. அதாவது மனுஷன் இத்தனை தத்துவங்களால செய்யப்பட்டு இருக்கான். அது ஒவ்வொண்ணும் இதை செய்யறது அதை செய்யறது என்று ஆராய்ச்சியும் விளக்கங்களும் பெருகிக்கொண்டே போகும். இத்தனையும் பிரபஞ்சத்தில இருக்கற விஷயங்கள்தானே? அதை விட்டு ஆத்மாவை பார்க்கத்தானே நாம் முயற்சி செய்யறோம்? அதனால இதை எல்லாம் கத்துக்கொண்டா அப்புறமா அதை தள்ள வேண்டி இருக்கும். இதில பயனே இல்லையே? எதுக்கு ஒண்னை கத்துக்கணும் அப்புறமா அதை மறக்கணும்? கத்துக்காமலே இருந்துடலாம்.

21. முக்தியில் விருப்ப முள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமா?
குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதையாராய்வதா லெப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னையறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தத்துவங்க ளனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனை யென்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை யாராய்வதாலும் பயனில்லை.
பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போலெண்ணிக் கொள்ள வேண்டும்.

Friday, January 29, 2016

நான் யார்? - 16


எதுக்கு இவ்வளோ கஷ்டப்படணும்? கடவுளையோ குருவையோ பலமா பிடிச்சுக்கொண்டு வேண்டிக்கொண்டா அவங்க நம்மளை ஜீவன் முக்தனாக்க மாட்டாங்களா?

மாட்டாங்க. இதோ பாருப்பா இதான் வழின்னு காட்டுவங்களே தவிர அவங்களா நம்மை ஜீவன் முக்தனாக்க மாட்டாங்க.
குரு வேற கடவுள் வேறன்னு ரெண்டா இல்ல. இருவரும் ஒருவரே. புலி வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்பும்? வாய்ப்பே இல்லை. இது போல குருவோட அருள் கிடைச்சாச்சுன்னா அவர் கைவிடப்பட மாட்டார். ஆனாலும் அவர் காட்டற வழியில நாம்தான் நடக்கணும். அந்த பாதையில் கல்லு இருகோ முள்ளு இருக்கோ எல்லாத்தையும் நாம்தான் எதிர்கொள்ளணும். நான் யார்ன்னு நம்மை நாமே அறியாம இன்னொருத்தர் மூலமா எப்படி அறிய முடியும்? பாதையை தெரிஞ்ச பிறகு நாமேதான் அது வழியா போய் நம்மை நாமே அறிஞ்சுக்கணும். நம்மோட கண்ணை நாமேதான் திறக்கணும். ஞான ஒளியில நாம் நம்மையே அறியலாம். அதுக்கு நம்மோட புலன்களே வேண்டாம்; மனசே வேண்டாம்ன்னா, கண்ணாடி ஒண்ணு வேணுமான்னா?


20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?
கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார். கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தியடைய வேண்டும். தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால், தானே யறியவேண்டுமே யல்லாமல், பிறராலெப்படியறியலாம்? ராமனென்பவன் தன்னை ராமனென்றறிவதற்குக்கண்ணாடி வேண்டுமோ?


Wednesday, January 27, 2016

நான் யார்? - 15


இந்த வைராக்கியம், வைராக்கியம்ன்னு சொல்றாங்களே அது என்ன?
பற்றின்மையே வைராக்கியம். எப்படியோ பழக்கத்துல இது உறுதித்தன்மை- டிடர்மினேஷன் - என்கிற பொருள்ள மட்டுமே வழங்கப்பட ஆரம்பிச்சுடுத்து.
கிளம்புகிற நினைவுகளில ஒரு பற்றையும் வைக்காம கிளம்பற இடத்திலேயே நசுக்கிப்போடணும். இதுவே வைராக்கியம்.
சாதாரணமா உடம்பு மிதக்கும். அது தண்ணிக்குள்ள போகணும்ன்னா வேற ஒரு உதவி தேவைப்படும். அதுக்காக கனமான கல்லை கால்ல கட்டிகிட்டு முத்து குளிக்க குதிப்பாங்க. முத்தை கண்டு எடுக்கிறதே லட்சியம். அத கண்டுபிடிச்சு சேர்த்தவுடன் கல்லை கழட்டி விட்டுட்டா சுலபமா மேலே வந்துடலாம்.
அது போல ஆத்மாவை தரிசிக்கணும் என்கிற ஒரே ஒரு பற்றை மட்டும் வெச்சுக்கொண்டு உள்ளே ஆழ்ந்து முழுகி லட்சியத்தை அடந்தவுடன் அந்த பற்றும் நீங்கி ஆத்மாவிலேயே நிலையாக நிக்கலாம்.

19. வைராக்கியமாவது எது?
எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படிஎடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ளாழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.


Monday, January 25, 2016

நான் யார்? - 14



அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?


நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மா பத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும் இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!

பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?

முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஶ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்பரமேஶ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான் இந்த மூட்டையை தூக்கிகிட்டு போறேன்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ட்ரெய்ந்தான் நம்மை சுமக்குது. நாம் மூட்டையை தூக்கி மேலே வெச்சுகிட்டா அதையும் சேத்து தூக்கிக்கும், மூட்டையை கீழே வைச்சாலும் வைக்காட்டாலும் மூட்டையை சுமக்கறது ட்ரெய்ந்தானே? அப்ப அதை நாம் ஏன் தலையில தூக்கி வெச்சுக்கணும்?

அது போலத்தான் எல்லா காரியங்களையும் அதே பரமேஶ்வர சக்தி நடத்தறபடி நடத்திகிட்டு போகட்டும்ன்னு விட்டுடணும். நாம நம்ம வாசனைப்படி இயங்கி நம்முடைய கர்மாவை தீர்த்துப்போம். புதுசா எதையாவது செஞ்சு கர்மாவை மேலும் சம்பாதிச்சுக்காம இருந்தாலே போதும்.

18. பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், 'இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு'மென்று சதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?

Friday, January 22, 2016

நான் யார்? -13



அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?

நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மா பத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும் இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!

பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?

முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான் இந்த மூட்டையை தூக்கிகிட்டு போறேன்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ட்ரெய்ந்தான் நம்மை சுமக்குது. நாம் மூட்டையை தூக்கி மேலே வெச்சுகிட்டா அதையும் சேத்து தூக்கிக்கும், மூட்டையை கீழே வைச்சாலும் வைக்காட்டாலும் மூட்டையை சுமக்கறது ட்ரெய்ந்தானே? அப்ப அதை நாம் ஏன் தலையில தூக்கி வெச்சுக்கணும்?

அது போலத்தான் எல்லா காரியங்களையும் அதே பரமேஸ்வர சக்தி நடத்தறபடி நடத்திகிட்டு போகட்டும்ன்னு விட்டுடணும். நாம நம்ம வாசனைப்படி இயங்கி நம்முடைய கர்மாவை தீர்த்துப்போம். புதுசா எதையாவது செஞ்சு கர்மாவை மேலும் சம்பாதிச்சுக்காம இருந்தாலே போதும்.

18. பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், 'இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு'மென்று சதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?


Wednesday, January 20, 2016

நான் யார்? - 12


நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?

சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல் முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும் கிடையாது.
நிஷ்காம்ய கர்மம் பத்தி தெரியுமில்லே? முன்னேயே அது பத்தி பாத்து இருக்கோம். மனுஷனுக்கே இயற்கையா செய்கிற கர்மாவுடைய பலன் அவனுக்கு ஒட்டாதுன்னா ஈஸ்வரனோட சன்னிதான விசேஷத்தால மட்டுமே நடக்கும் கர்மாவுக்கும் அவருக்கும் எப்படி சம்பந்தம் வரும்?
சூரியனோட முன்னிலையில் வெளிச்சத்தில நடக்கிற தாமரை மலர்வது போன்ற விஷயங்களுக்கும் சூரியனுக்கும் எப்படி சம்பந்தமில்லையோ; எப்படி மண், நெருப்பு, தண்ணீர், காற்றுக்கும் இது எல்லாத்துக்கும் இடம் தர ஆகாயத்துக்கும் சம்பந்தமில்லையோ, அது போலவே ஈஸ்வரனுக்கும் மனிதர் செய்யும் காரியங்களுக்கும் சம்பந்தமில்லை.

17 எல்லாம் ஈசன் செய லன்றோ?
இச்சா ஸங்கல்ப யத்தன மின்றியெழுந்த ஆதித்தன் சன்னிதி மாத்திரத்தில் காந்தக்கல் அக்கினியைக் கக்குவதும், தாமரை யலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தங்காரியங்களிற் பிரவிருத்தித்து இயற்றி யடங்குவதும், காந்தத்தின் முன் ஊசி சேஷ்டிப்பதும்போல, ஈசன் சன்னிதான விசேஷ மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது பஞ்சகிருத்தியங்கட் குட்பட்ட ஜீவர்கள் தத்தம் கர்மானுசாரம் சேஷ்டித் தடங்குகின்றனர். அன்றி, அவர் சங்கல்ப ஸஹிதரல்லர்; ஒரு கருமமும் அவரை யொட்டாது. அது, லோககர்மங்கள் சூரியனை யொட்டாததும், ஏனைய சதுர் பூதங்களின் குணா குணங்கள் வியாபகமான ஆகாயத்தை யொட்டாததும் போலும்.


Monday, January 18, 2016

நான் யார்? - 11



அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம் சீவன் கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியு.
அது போலத்தான் இதுவும். சீவன் ஈஸ்வரன் உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.

16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதிற்கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றனநான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத விடமே சொரூபமாகும். அதுவே மௌன மெனப்படும். சொரூபமே ஜகம்; சொரூபமே நான்; சொரூபமே ஈச்வரன்; எல்லாம் சிவ சொரூபமே.

Friday, January 15, 2016

நான் யார்? - 10


ம்ம்ம்...  ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?

எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்ல நசுக்கி போட்டுகிட்டே இருந்தா ஒரு வழியா வாசனைகள் எல்லாம் போய் அவை வரது நின்னுடும். சொரூபத்தையே த்யானம் செய்து கொண்டு இருப்பதே போதும். சொரூபத்தை அடைஞ்சுடுவான்.


15. விசாரணை எதுவரையில் வேண்டும்?
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத்தோன்ற அப்போதைக்கப்போதே அவற்றை யெல்லாம் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும். ஒருவன் சொரூபத்தை யடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின், அதுவொன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகளுள்ள வரையில்அதிலிருந்து வெளியே வந்துகொண் டிருப்பார்கள்; வரவர அவர்களை யெல்லாம் வெட்டிக் கொண்டே யிருந்தால் கோட்டை கைவசப்படும்.

Wednesday, January 13, 2016

நான் யார்? - 9



குதிரை மாதிரி தாவுதுன்னு நல்லாச்சொன்னீங்க! அது மட்டுமா? முடிவே இல்லாம கடல் அலை போல எண்ணங்கள் வந்துகிட்டேதானே இருக்கு? அது எப்ப ஓயறது; எப்ப மனசு ஏகாக்கிரதையை அடையறது? எண்ணமே வராம இருக்கறதை அப்பறமா பாத்துக்கலாம்!

நம்மோட உண்மை சொரூபத்தை பாத்து அதுல லயம் ஆக ஆக நினைவுகள் எல்லாம் நீங்க ஆரம்பிச்சுடும்.

13. விஷயவாசனை (நினைவு)கள் அளவற்றனவாய்க் கடலில் அலைபோலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?
சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.

அது சரி! எவ்ளோ வருஷமா இந்த எண்ணங்கள் எல்லாம் இருக்கு! ஒண்ணே திருப்பித்திருப்பி வேற வரது…. என்னை ஏமாத்தினவனைப் பத்தி, அடிச்சவங்களைப்பத்தி, திட்டினவங்களை பத்தி…. இதெல்லாம் கொஞ்சமா நஞ்சமா? அதோட இந்த ஜன்மத்துலதான் இதுன்னா இன்னும் ஏகப்பட்ட முன் ஜன்மங்களில எத்தனை விஷயங்களில ஈடு பட்டு வாசனை எல்லாம் சம்பாதிச்சு இருக்கேனோ! இதெல்லாம் ஒடுங்கிப்போய் சொரூபத்திலேயே இருக்கிறதுன்னா சாத்தியமா என்ன?
அப்படி சந்தேகம் எல்லாம் வரக்கூடாது! வெளியுலகத்தில நமக்கு ஏதாவது வேணும்ன்னா எவ்வளோ சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஒரு சின்ன வேலை நடக்கணும்; அதுக்காக நடையா நடக்கிறோம். உழைக்கிறோம். என்னென்னவோ த்யாகம் எல்லாம் செய்து அதை அடைய தயாரா இருக்கோம். ஆனா சும்மா இரு ந்னு சொன்னா அதுக்கு ஏன் இவ்வளோ ஆட்சேபணை எல்லாம் வரது? சந்தேகமே இல்லாம விடாப்பிடியா சொரூபத்யானத்தை கடை பிடிக்கணும்.

உம்… நான் எவ்வளோ பாபங்கள் செஞ்சு இருக்கேன் தெரியுமா?

அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! பாப புண்ணியங்கள் செஞ்சது எல்லாம் கடந்த காலம். பாபியோ புண்ணியம் செஞ்சவனோ, யாரா இருந்தாலும் அதையே நினைச்சு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காம மேலே நடக்க வேண்டியதை பார்க்கலாம். ஊக்கத்தோட சொரூப த்யானம் செய்யறதுதான் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.
மனசு என்கிறது ஒண்ணுதான். நல்ல மனசு கெட்ட மனசுன்னு ரெண்டு மனசு இல்லை. அந்த மனசு எது கூட நிற்கிறது என்கிறதை பொருத்து நல்லது கெட்டதாகிறது. நம்மோட வாசனைகள் -பழக்க வழக்கங்கள் - நல்லதா இருந்தா அது நல்ல மனசு; கெட்டதா இருந்தா கெட்ட மனசு.
நம்ம மனசை கவனிச்சு சரி பண்ணவே நமக்கு முடியலை. இதுல எதுக்கு அனாவசியமா மத்தவங்க காரியத்திலேயும் லோக விஷயங்களிலேயும் மனசை அலைய விடணும்? லோகத்தோட விஷயத்தை லோகமே பாத்துக்கட்டும். மத்தவங்க அவங்கவங்க விஷயத்தை பாத்துக்கட்டும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நமக்கு எதுக்கு சிந்தனை? எவ்வளோதான் கெட்டவங்களா இருந்தாலும் அவங்ககிட்ட ஒரு வெறுப்பு வைக்கக்கூடாது. விருப்போ, வெறுப்போ அது தேவையில்லாத இன்னொரு சம்பந்தத்தை ஏற்படுத்துது இல்லையா? இப்படிப்பட்ட பற்றை விடணும்.

யார் யாருக்கு எதை கொடுத்தாலும் அது தனக்கேதான் கொடுக்கப்படுது. தன்னை விட அந்நியமா வேற யாரும் இல்லையே?
ம்ம்ம் இன்னொரு விஷயம் நினைவுக்கு வரது. யாகம் முடிந்து தக்‌ஷிணை கொடுக்கற சமயத்துல சொல்லற மந்திரம். யாகம் செய்தவர் அதோட பலன் தனக்கு வரணும்ன்னு தக்‌ஷிணை கொடுக்கறாராம். செய்து வைத்தவர் ’ரைட்டு; அதுக்கு பதிலா பணம் வரட்டும்’ ன்னு வாங்கிக்கறாராம்! எப்படியோ எதை கொடுத்து வாங்கினாலும் ஒவ்வொத்தருக்குமே ஒவ்வொண்ணு கிடக்கறது. இது புரிஞ்சா யாரும் கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.
நான் என்னுது ந்னு ஒரு நினைவு எழுந்தாத்தான் உலகமே எழுகிறது; இது அடங்கினா எல்லாமே அடங்கறது! எவ்வளவுக்கு எவ்வளோ நாம அடங்கி தாழ்ந்து போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளோ நல்லது. அப்படி இருந்தா எங்கே இருந்தா என்ன? அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ, குச்சு வீடு, குடிசையோ எதானாலும் பிரச்சினை இல்லை! வெள்ளத்துக்கு நடுவிலே இருக்கோமோ நல்ல வெய்யிலோ ஒரு பொருட்டு இல்லை. எங்கே இருந்தாலும் நலமாவே இருப்போம்.

14. தொன்றுதொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா?
'முடியுமா, முடியாதா?' வென்கிற சந்தேக நினைவுக்குமிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப்பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும், 'நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?' என்றேங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி என்னுமெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்திலூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை; மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம். மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்? தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.

Monday, January 4, 2016

நான் யார்? - 8


என்னவோ தியரடிகலா சொல்லறீங்க. எனக்கே அது புரியணும். அது எப்படி நடக்கும்?

சரி, இப்படி வெச்சுக்கலாம். நம்ம உடம்பில ’நான்’ ந்னு ஒண்ணு கிளம்பறது இல்ல? அதுவே மனம். இந்த நான் என்கிற நினைவு எங்கேந்து வருதுன்னு பார்க்கப்பார்க்க அது ஏதோ ஒரு இடம்ன்னு தெரிய வரும். அதுக்கு இதயம் ந்னு பெயர் சொல்லறாங்க. (இல்ல இல்ல, மருத்துவ ரீதியா சொல்கிற இதயம் இல்லை. இது பாப்புலரா புழங்கற இதயம்.) சுய நலம்ன்னு தோணினாக்கூட ’நான் நான்’ ந்னு நினைச்சுக்கொண்டே இருந்தாக்கூட நாளடைவில் இந்த இடத்துக்கு கொண்டு விட்டுடும்.
தூங்கி எழுந்துக்கறோம்; மனசில வர முதல் எண்ணம் என்ன? நான் இருக்கேன்
அப்புறமா கொஞ்சம் மெதுவா நாம எங்க எந்த ஊர்ல இருக்கோம்; இப்ப காலையா மாலையா; அடுத்து இருக்கிற வேலை என்னன்னு நினைவுக்கு வர ஆரம்பிக்கும். அப்பறமாத்தான் இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, இன்னும் கொஞ்ச நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடலாம்ன்னு எல்லாம் நினைப்பு வரும்! நான் ந்னு ஒரு எண்ணம் வந்த பிறகுதான் கிட்டே இருக்கிற அடுத்த மனுஷரோ தூரத்தில இருக்கிறவங்களோ நினைவுக்கு வர ஆரம்பிப்பாங்க. இப்படி நான் ந்னு ஒண்ணு இல்லாம முன்னிலை, படர்க்கை எல்லாம் இல்லை. தூக்கத்திலன்னு இல்லாம விழிப்பில கூட இப்படி நான் ந்னு ஒண்ணு இல்லாம போனால் அப்ப நமக்கும் மற்றவற்றுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாது.

9. மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன?
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவ தெதுவோ அஃதே மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்தவிடத்திற் றோன்றுகிற தென்று விசாரித்தால், ஹ்ருதயத்திலென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்திற்கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகளெல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.