Pages

Thursday, May 31, 2012

பஞ்சதஶீ, 1 -35

  ஸாத்த்விகைர்தீ⁴ந்த்³ரியை​: ஸாகம்° விமர்ஷாத்மா மநோமய​: |
தைரேவ ஸாகம்° விஜ்ஞாநமயோதீ⁴ர்நிஶ்சயாத்மிகா || 35|| 

சலனமாகும் மனதும் ஐம்பொறிகளும் சத்வமாகும். இவை மனோ மய கோசமாகும். ஞான இந்திரியங்கள் பக்குத்தறியும் புத்தியுடன் சேர்ந்து விஞ்ஞான மய கோசமாகும்.
 

Wednesday, May 30, 2012

பஞ்சதஶீ, 1 -34


 ஸ்யாத்பஞ்சீக்ரு«தபூ⁴தோத்தோ² தே³ஹ​: ஸ்தூ²லோ'ந்ந ஸம்°ஜ்ஞக​: |
லிங்கே³ து ராஜஸை​: ப்ராணை​: ப்ராண​: கர்மேந்த்³ரியை​: ஸஹ || 34||

பஞ்சீகரணத்தால் ஐம் பூதங்களால் ஆன பரு சரீரம் அன்ன கோசம் எனப்படும். ஐந்து வாயுக்களும் ஐந்து கர்ம இந்திரியங்களும் சேர்ந்த சூக்ஷ்ம சரீரம் ப்ரக்ருதியின் ரஜஸ பாகமாகும். இது ப்ராண மய கோசம். 

Monday, May 21, 2012

பஞ்சதஶீ, 1-33


அந்நம்° ப்ராணோ மநோ பு³த்³தி⁴ராநந்த³ஶ்சேதி பஞ்ச தே |  
கோஷாஸ்தைராவ்ரு«த​: ஸ்வாத்மா விஸ்ம்ரு«த்யா ஸம்°ஸ்ரு«திம்° வ்ரஜேத் || 33||

 தன்னை (ஆத்மாவை) மூடியிருக்கும் ஐந்து கோசங்கள் அன்னம். ப்ராணன், மனம், புத்தி, ஆனந்தம் ஆகியன. இவற்றில் சிக்குண்ட ஜீவன்கள் தான் யார் என்பதை மறந்து அடுத்தடுத்த பிறவிக்கு ஆளாகின்றன.

Saturday, May 19, 2012

பஞ்சதஶீ, 1-32


உபதே³ஶமவாப்யைவமாசார்யாத் தத்த்வ த³ர்ஶிந​: |
 பஞ்சகோஷ விவேகேந லப⁴ந்தே நிர்வ்ரு«திம்° பராம் || 32||

 அதே போல சம்சார சுழலில் சிக்கிய ஜீவர்கள் ப்ரமத்தை அறிந்த – ஆகவே தானே ப்ரம்மமாகிய- நல்ல குருவால் பொருத்தமான உபதேசத்தை பெறுகிறார்கள். தன்னிலிருந்து ஐந்து கோசங்களையும் பிரித்து அறிந்து பரமமான விடுதலை பெறுகிறார்கள்.
 

Friday, May 18, 2012

பஞ்சதஶீ, 1-31

 
ஸத்கர்மபரிபாகாத்தே கருணாநிதி⁴நோத்³த்⁴ரு«தா​: |
 ப்ராப்ய தீரதருச்சா²யாம்° விஶ்ராம்யந்தி யதா²ஸுக²ம் || 31||

 நல்ல கர்மாக்களை அவை செய்து, அவற்றின் பலன் கிடைக்கும்போது இவை கருணை கொண்டவனால் எடுக்கப்பட்டு நதியின் கரையில் மர நிழலில் விச்ராந்தியாக இருக்க வைக்கப்படுகின்றன.