Thursday, May 31, 2012
Wednesday, May 30, 2012
பஞ்சதஶீ, 1 -34
ஸ்யாத்பஞ்சீக்ரு«தபூ⁴தோத்தோ² தே³ஹ: ஸ்தூ²லோ'ந்ந ஸம்°ஜ்ஞக: |
லிங்கே³ து ராஜஸை: ப்ராணை: ப்ராண: கர்மேந்த்³ரியை: ஸஹ || 34||
பஞ்சீகரணத்தால் ஐம் பூதங்களால் ஆன பரு சரீரம் அன்ன கோசம் எனப்படும். ஐந்து வாயுக்களும் ஐந்து கர்ம இந்திரியங்களும் சேர்ந்த சூக்ஷ்ம சரீரம் ப்ரக்ருதியின் ரஜஸ பாகமாகும். இது ப்ராண மய கோசம்.
Monday, May 21, 2012
பஞ்சதஶீ, 1-33
அந்நம்°
ப்ராணோ மநோ
பு³த்³தி⁴ராநந்த³ஶ்சேதி
பஞ்ச தே |
கோஷாஸ்தைராவ்ரு«த:
ஸ்வாத்மா
விஸ்ம்ரு«த்யா
ஸம்°ஸ்ரு«திம்°
வ்ரஜேத் ||
33||
தன்னை
(ஆத்மாவை)
மூடியிருக்கும்
ஐந்து கோசங்கள் அன்னம்.
ப்ராணன்,
மனம்,
புத்தி,
ஆனந்தம்
ஆகியன. இவற்றில்
சிக்குண்ட ஜீவன்கள் தான்
யார் என்பதை மறந்து அடுத்தடுத்த
பிறவிக்கு ஆளாகின்றன.
Saturday, May 19, 2012
பஞ்சதஶீ, 1-32
உபதே³ஶமவாப்யைவமாசார்யாத்
தத்த்வ த³ர்ஶிந:
|
பஞ்சகோஷ
விவேகேந லப⁴ந்தே நிர்வ்ரு«திம்°
பராம் ||
32||
அதே போல
சம்சார சுழலில் சிக்கிய
ஜீவர்கள் ப்ரமத்தை அறிந்த
– ஆகவே தானே ப்ரம்மமாகிய-
நல்ல குருவால்
பொருத்தமான உபதேசத்தை
பெறுகிறார்கள். தன்னிலிருந்து
ஐந்து கோசங்களையும் பிரித்து
அறிந்து பரமமான விடுதலை
பெறுகிறார்கள்.
Friday, May 18, 2012
Subscribe to:
Posts (Atom)