Pages

Friday, February 24, 2017

கிறுக்கல்கள் -180




பிரசங்கி மீண்டும் ’நல்ல செய்தி’என்று ஆரம்பித்த போது இடைமறித்து மாஸ்டர் கேட்டார்: ஒருவனை சொர்கத்துக்கு போவதை கடினமாக்கி நரகத்துக்கு போவதை சுலபமாக்கும் அது எப்படி நல்ல செய்தியாக இருக்க முடியும்?

Thursday, February 23, 2017

அந்தணர் ஆசாரம் - 12




ஸந்த்யாவந்தனம்
நக்ஷத்திரங்களின் ஒளி மறைவதில் இருந்து ஸூர்யோதயம் ஏற்படும் வரை உள்ள காலம் ப்ராதஸ் ஸந்த்யா எனப்படும். ராத்ரியின் கடைசி யாமத்தில் கடைசி 2 நாழிகைகள் ஸந்த்யையின் ஆரம்ப காலம் என்றும் சொல்லப்படுகிறது. வானத்தில் ஸூர்யனின் மேல் நோக்கிய கிரணங்கள் தெரிந்தால் அது ஸந்த்யையின் முடிவாகும். ஸந்த்யா என்பது காலத்தின் பெயரானாலும் அந்த நேரத்தில் உபாசிக்கப்படும் தேவதையும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
காலை ஸூர்யன் உதித்த பிறகும் மாலை அஸ்தமித்தப்பிறகும் சந்த்யா உபாஸனம் செய்யலாகாது. (அது முக்ய காலமில்லை எனக்கருத்து) “ப்ரம்மா, விஷ்ணு, சங்கரன் ஆகியோரே இந்த முக்கிய காலத்தில் சந்த்யையை உபாசிக்கிறார்கள். ப்ராஹ்மணன் எவ்வாறு உபாசிக்காமல் இருப்பான்?” என்கிறார் யோக யாக்ஞவல்கியர்.
ப்ரஹ்ம ஞானிகள் மூன்று வேளை ஸந்த்யானுஷ்டானம் செய்யச்சொல்லுகிறார்கள். இரு ஸந்த்யா வேளைகளும் மாத்யான்ஹிகமும் என்கிறார் அத்ரி. வ்யாஸரோ ஸந்த்யா வேளையில் அனுஷ்டானத்தை செய்யாமல் வேறு எந்த தர்ம காரியத்தையும் செய்யும் ப்ராஹ்மணன் ஆயிரக்கணக்கான நரகங்களில் துக்கத்தை அனுபவிப்பான் என்கிறார். விவேகம் இல்லாமல் சந்த்யையை விடுத்து வேறு காரியத்தில் ஈடு படுபவனை ப்ராஹ்மணர்கள் செய்யும் சகல வைதிக காரியங்களில் இருந்தும் விலக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
ஸந்த்யையை த்ருடமாக நியமத்துடன் உபாஸிப்பவன் சகல பாபங்களில் இருந்தும் விடுபட்டு ப்ரம்ம லோகத்தை அடைவான் என்று எமன் சொல்லுகிறார். சரீரத்தாலும் மனதாலும் வாக்காலும் பகலில் செய்யும் பாபம் ப்ராணாயாமத்துடன் செய்யும் ஸாயம் ஸந்த்யா அனுஷ்டானத்தால் விலகுகிறது. அதே போல இரவு செய்யும் பாபங்கள் காலை செய்யும் சந்த்யா அனுஷ்டானத்தால் விலகுகிறது.
ஸந்த்யா அனுஷ்டான கர்மாவில் அர்க்யம், த்யானம், ஜபம், உபஸ்தானம் ஆகிய நான்கு காரியங்களும் ப்ரதானமானவை, மற்றவை அங்கங்கள் எனப்படுகிறது.
முக்கிய காலத்துக்கு பின் வரும் அரை யாம நேரம் (84 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரம்) சந்த்யைக்கு கௌணகாலமாகும். மோசமான சூழ்நிலை, ஜலம் கிடைப்பதில் பிரச்சினை, உடம்பு அசௌகரியம், ஆபத்து ஆகிய காலங்களுக்கு இது பொருந்தும். சோம்பேறித்தனத்தால் முக்ய காலத்தை தவறவிட்டு இந்த நேரத்தில் செய்யலாகாது. வ்யாதி இல்லாமல் நன்றாக இருக்கும் ப்ராஹ்மணன் முக்ய காலத்தில் செய்யாமல் இருந்தால் அவன் பரம பாபியாகிறான். ஸூர்யனை ஹிம்சித்தவனாவான்.
தாரையாக விழும் ஜலத்தில் (இக்காலத்தில் தண்ணீர் குழாய் போல) செய்யக்கூடாது. இரு கைகளாலும் ஜலத்தை எடுத்து காயத்ரியால் அபிமந்திரித்து பசு மாட்டுக்கொம்பு அளவு உயரே எடுத்து அர்க்யம் விட வேண்டும். பொதுவாக ஜலத்திலேயே அர்க்யம் விட வேண்டும். அப்படி இடமில்லையானால் (இந்த காலத்தில் துர்லபமாகிவிட்டது), சுத்தமான தரையில் முன் கூட்டியே ப்ரோக்ஷித்து அங்கே விட வேண்டும். காலையிலும் மாத்யான்ஹிக வேளையிலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

ஸந்த்யா என்பது ஸூக்ஷ்மமான நேரம். ஆகவே எப்போதும் ப்ராயச்சித்த அர்க்யம் கொடுக்க வேண்டும். பின் ஆசமனம் செய்து ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்து பின் சற்று ஆத்ம த்யானம் செய்ய வேண்டும். பின் நவக்ரஹங்களுக்கும் கேசவாதி 12 தேவதைகளுக்கும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

Wednesday, February 22, 2017

கிறுக்கல்கள் -179





மாஸ்டர் தத்துவ ஞானியானாலும் உலகின் தன்மையை அறியாதவர் அல்ல.

அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் : உலகில் நல்லதோ கெட்டதோ இல்லை; நம் நினைப்பே அப்படி ஒன்றை உருவாக்குகிறது!

இதை விளக்கும்படி கேட்டார்கள்.
மாஸ்டர் சொன்னார்: “ட்ரெய்னில் போகிறீர்கள்; கூட்ட நெரிசல் என்று புகார் செய்கிறீர்கள். இதே நெரிசலை இரவு விடுதியில் அருமையான சூழ்நிலை என்கிறீர்கள்!” 

Tuesday, February 21, 2017

கிறுக்கல்கள் -178




தன் நம்பிக்கையில் வீறாப்புடன் அமர்ந்து இருந்த பிரசங்கியை பார்த்து மாஸ்டர் சொன்னார்: “நண்பரே, நீங்கள் இறக்கும் நேரம் வரும்போது கொஞ்ச நேரம் கூட வாழாமலே போய்விடுவீர்கள் போலத்தோன்றுகிறது. ம்ம்ம் வாழ்க்கை உங்களை ஒதுக்கிவிட்டு தாண்டிப் போய் விட்டது போல…… ம்ம்ம்…. அப்படிக்கூட இல்லை. வாழ்க்கை ஒரு பக்கம் நோக்கியும் நீங்கள் எதிர்பக்கம் நோக்கியும் பயணித்தது போல!”

Monday, February 20, 2017

கிறுக்கல்கள் -177





கடவுளை குறிக்க போதுமான திருப்திகரமான குறியீடு எதுவும் இல்லை என்பதை மாஸ்டரின் எண்ணம். அதை உணர்த்த ஒரு கதை சொன்னார்.

நெரிசலான ஒரு தெருவில் மாஸ்டரின் மனைவி கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். வழியில் இன்னொரு கார் மீது இடித்துவிட்டார்.

மோதப்பட்ட கார் ட்ரைவர் கண்ணாடியை கீழே இறக்கி கத்தினார். “ ஏம்மா நீ என்ன செய்ய போறேன்னு சிக்னல் கொடுக்கக்கூடாதா?”


மாஸ்டரின் மனைவி திருப்பிக்கத்தினார் “ நான் செய்ய நினைச்சதுக்கு சிக்னல் கிடையாது!”