Pages

Monday, August 15, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - கற்பூரம்





ரைட், இப்பபதிவிலே விளக்குத்தண்டை வடிவம் மாத்தினது பத்தி பாத்துடலாம்.
எண்ணை கேப்பிலரி ஆக்‌ஷனால உரியப்பட்டு எரியுதுன்னு பாத்தோம். இந்த கேப்பிலரி ஆக்‌ஷனுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதாவது கொஞ்சம் உயரம்தான் இதால எண்ணையை தூக்கிவிட முடியும். அதுக்கு மேலே முடியாது. எவ்வளோ உயரம் என்கிறது அந்த எண்ணை, திரி இழைகள் நடுவில இருக்கிற இடைவெளி எவ்வளவு குறுகலானது போன்றவற்றால நிர்ணயிக்கப்படும். இதை கணக்கு போடத்தெரியாத காலத்திலேயே அனுபவத்தால் இவ்வளவு உயரம்தான் எண்ணை இழுக்கப்படும்ன்னு தெரிஞ்சு விளக்கை வடிவமைச்சு இருக்காங்க. அதனாலத்தான் விளக்கு பெரிசா ஆனா அது இன்னும் அகலமாகுமே தவிர ரொம்ப ஆழமாகாது. எங்க வீட்டில் இதை மறு வடிவமைச்சப்ப விளக்குத்தண்டு இந்த உயரத்தை ஏறத்தாழ தொட்டுடுத்து. அதனால எண்ணைக்கு பதிலா திரியே அதிகமா எரியும்; அதனால சீக்கிரம் அணைஞ்சும் போகும்.

அடுத்து எரியற இன்னொரு சமாசாரமான கற்பூரத்தை பாத்துடலாம். முன்னே இதை கற்பூரமரத்தில இருந்து - அதன் மரம், பட்டை - டிஸ்டில் பண்ணி எடுத்தாங்க. இப்ப டர்பெண்டைன் எண்ணையிலேந்து தயார் செய்யறாங்க. முன்னே கடையிலேந்து வாங்கி வந்த உடனே பயன்படுத்தினா ஆச்சு. இல்லைன்னா காத்திலேயே கரஞ்சுடும். இத ஆங்கிலத்தில சப்ளிமேஷன்னு சொல்வாங்க. அதாவது அது அறை சூட்டிலேயே நிறைய ஆவியாகுது. வேப்பர் ப்ரஷர் அதிகமா இருக்கும். இந்த சுட்டில ‘கூல்’ எக்ஸ்பெரிமெண்ட் ஒண்ணை பாருங்க. அப்படியே அது எந்த மொழின்னு கண்டுபிடிங்க! (மொழி தெரியாட்டாலும் பார்க்கலாம்.) https://www.youtube.com/watch?v=8qCdxh5a58Q

காலங்காலமா இதை மருத்துவ குணத்துக்காக பயன்படுத்தி இருக்காங்க. விக்ஸ் வேபரப்ல இருக்கறது இதான். வித விதமா விளம்பரம் செஞ்சாலும் பெரும்பாலான ‘ரப்’ மருந்துகள்ல இது இருக்கும்! இந்த சூடம் மிட்டாய் சிலதுல கூட இது இருந்தாலும் இருக்கும். யூஎஸ்ஏ ல 
கற்பூர எண்ணை மருந்தோட விற்பனையை தடுத்து இருக்காங்க. இருந்தாலும்…..

சில சமயம் கற்பூரம் ஏத்தின உடனேயே அணைஞ்சுடும். அப்ப அந்த சூட்டில அதோட ஆவி மேலெழறதை பார்க்கலாம். இதை திருப்பி கொளுத்தறது சுலபமே. இந்த ஆவி ஏதாவது ஒரு தழல்ல பட்டா போதும். குப் ந்னு பிடிச்சுக்கும். இதை வெச்சு சின்ன வயசுல சில பல சோதனை எல்லாம் பண்ணி இருக்கேன். இந்த ஆவியை ஒரு கண்ணாடி குழாய் மூலமா ஒரு அடி தூரம் கடத்தி அங்கே ஒரு வத்திக்குச்சியை கொளுத்திக்காட்டி… அப்ப கூட பிடிச்சுக்கும்!

இப்ப வர ‘கற்பூரம்’ நிறையவே அசுத்தமா இருக்கு. கற்பூரம் எரிஞ்சு முடிஞ்சப்பறம் கற்பூரத்தட்டை பாத்தா தெரியும். ஆனாலும் இதை பாத்து பாத்து அது வர பாலிதீன் பையிலேயே பொத்தி பொத்தி வைக்க வேண்டி இருக்கு. இதனாலேயே இப்பல்லாம் கோவில்களில கற்பூரம் ஏத்தாம நெய்தீபத்தையே பயன்படுத்தறாங்க.
எங்கூருக்கு பக்கத்தில பண்ணுருட்டில ஒத்தர் இதை செஞ்சு விற்க ஆரம்பிச்சார். எரிஞ்சு முடிச்சா தட்டு அவ்ளோ பளீச்ன்னு இருக்கும். ஆனா அது கொஞ்சம் ஆபத்தானதாவே இருந்தது, பட்டுன்னு பிடிச்சுக்கும். இப்ப கொஞ்சம் கலப்படம் செஞ்சு சமப்படுத்தி இருக்காங்க!
இதெல்லாம் சொன்னது பூஜை சமயத்துல கவனமா இருங்கன்னு சொல்லத்தான்!

No comments: