Monday, May 7, 2012
Sunday, May 6, 2012
பஞ்சதஶீ, 1-23
ஐந்து கர்ம இந்திரியங்கள் ஐந்து ஞான இந்திரியங்கள் ஐந்து ப்ராணன்கள் மனம் புத்தி ஆகியன பதினேழும் சேர்த்து சூக்ஷ்ம சரீரம் எனப்படுகின்றன.
பல வித வேலைகளால் இவத பதிவு வேலை பாதிக்கப்பட்டது. இனி தொடரும் என எண்ணுகிறேன்.
Wednesday, April 11, 2012
முன்வினை...
ஆசான் ஜீவ்ஸ் சமீபத்தில நல்ல நண்பர்களா இருந்தவங்க காணாமல் போறதைப்பத்தி வருத்தப்பட்டு இருந்தார்.
பல வருஷங்கள் முன்னே பி.வி. ராமனின் ஜோதிட பத்திரிகையில் இதே போல ஒத்தர் கேள்வி எழுப்பி இருந்தார். உசுருக்குசிரா இருந்த நண்பன் ஏன் இப்ப பாரா முகமா இருக்கான்?
இதுக்கு ஜோதிடர் ஒருத்தரோட பதில் : க்ரஹ அமைப்புகள் மாறிவிட்டன. உங்க ஜாதகம் இப்படி, நண்பர் ஜாதகம் இப்படி. இன்னின்ன க்ரஹங்கள் ஆட்சியில இருந்தப்ப ஒத்துப்போச்சு; இப்ப அவை இடம் மாறி போனதால நட்பும் போயிடுத்து. திரும்பி வர சான்ஸ்? ஹும், சாதகமான அமைப்பு திருப்பி வர இத்தனை வருஷமாகும். அப்போ நடக்கலாம்.
பின்னால் பல விஷயங்களை யோசித்துக்கொண்டு வரப்ப இன்னும் சில விஷயங்கள் புரிய வந்தது.
க்ரஹங்களேவா ஒரு பலனை கொடுக்கின்றன?
இல்லை. அவை போஸ்ட் மேன் மாதிரி. நமக்கு வர வேண்டிய தபாலை போஸ்ட் மேன் வர வேண்டிய நேரத்தில கொடுத்துட்டுப் போற மாதிரி. நமக்குன்னு விதிச்சு இருக்கிறதை தகுந்த நேரத்தில அவை கொடுத்துட்டுப் போயிடும். அப்படி சொல்கிறது கூட தப்புன்னு நினைக்கிறேன்.
பதஞ்சலி தன் யோக சாஸ்த்திரத்துல சொல்கிறார்: ஒருவர் பிறக்கும் போதே அவருடைய ஆயுசு, போகம் ஆகியன நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது அவருக்கு இருக்கும் கர்மாவில இந்த ஜன்மாவில அவர் அனுபவிக்கப்போறது என்ன? அது எப்போ? எவ்வளவு நாள்? இதெல்லாமே பிறவியின் போது நிர்ணயிக்கப்படும்.
வர வேண்டியதும் போக வேண்டியதும் அதனதன் நேரத்தில நடக்கும். அது எந்த நேரம் என்பதை ஜோதிட வல்லுனர்கள் சொல்ல முடியும்.
அது சரி. நமக்கு வர வேண்டிய கர்மாவை நாமேதான் நிர்ணயித்து இருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' இல்லையா?
அது சரி, இதுக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்பந்தம்?
என்னன்னா இவர்கள் அந்த கர்மாவில சம்பந்தப்பட்டு இருக்காங்க.
போன ஒரு ஜன்மத்தில ஒத்தரை கஷ்டப்படுத்தினோம். இப்ப அவர் நம்மை கஷ்டப்படுத்த இருவர் கர்மாவும் பாலன்ஸ் ஆயிடும். முன்னொரு ஜன்மத்தில நல்லது செய்திருக்க அவர் அதை இப்ப திருப்பி செய்ய கர்மா பாலன்ஸ் ஆகும். ஆக முன் ஜன்மங்களில தொடர்பு இருந்தவங்கதான் இப்பவும் நம் தொடர்புக்கு வராங்க! (விடாது கருப்பு!)
இப்படி ஜனங்கள் ஜன்மா ஜன்மாவா தொடர்போட இருக்காங்ன்னு ஒரு தியரியை முன் வைத்தவர் Dr. Brian Weiss என்கிற சைக்கியாட்ரிஸ்ட். அவர் அவரோட நோயாளி நர்ஸ் ஒருத்திக்கு ஹிப்னாடிஸ மருத்துவம் கொடுக்கப்போய் பல ஆச்சரியமான விஷயங்களை கண்டு பிடிச்சார். ஹிப்னாடிஸ தூக்கத்தில அந்த நர்ஸ் தன் முந்தைய பல பிறவிகளில் நடந்ததை அனுபவிச்சு சொல்ல அதை எல்லாம் அவர் டாக்குமென்ட் செய்தார். இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து அவர் எழுதினதுலதான் அவர் பல பிறவிகளும் ஒண்ணா பிறந்து ஊடாடி முன்னேறுகின்றன ன்னு தியரைஸ் செய்தார். ( souls evolve in groups)
அப்ப, நண்பர்களாகட்டும் எதிரிகளாகட்டும் கர்மாவை தீர்க்கவே நம் வாழ்கைக்குள்ள வராங்க! ஒரு வேளை கொஞ்ச நாட்களில கர்மா தீர்ந்து போச்சுன்னா, அனேகமா விலகிவிடுவாங்க! பல்மான கர்மாவா இருந்தா கூட இருந்துகிட்டே இருப்பாங்க!
ஆக இந்த பதிவை நீங்க படிச்சீங்கன்னா உங்களுக்கும் எனக்கும் இருக்கிற முன் தொடர்பு ஒரு காரணம். படிச்சுட்டு என்னை திட்டினீங்கனா, அது முன் வினைப்பயன்! ரோஜாப்பூ கொடுத்தாலும் அது முன் வினைப்பயனே!
Friday, March 23, 2012
உரத்த சிந்தனை: கடவுளோட ஒரு லிங்க்
ஒரு வேலையை செய்யப்பார்க்கிறோம்.
இதை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்யலாம்.
சிலர் 'நானே' செய்து விடுவேன் ன்னு செய்யலாம்.
சிலர் கடவுளே இதை செய்து கொடுன்னு சொல்லிட்டு சும்மா இருக்கலாம்.
சிலர் கடவுளே உதவி பண்ணுன்னு சொல்லிட்டு செய்ய முனையலாம்.
'நானே செய்வேன்' ஆசாமிங்க செய்து முடிக்கவும் முடிக்கலாம்; கஷ்டப்பட்டும் முடிக்கலாம்; முடிக்க முடியாமலும் போகலாம்.
வெகு சுலபமா செய்து முடிக்கக்கூடிய காரியங்கள் கூட சமயத்தில தலை கீழா நின்னாலும் செய்ய முடியறதில்லை!
ஒரு காரியம் முடியுமா இல்லையா என்கிறது கர்மா சம்பந்தப்பட்டதா இருந்தாலும் பல சமயம் இந்த 'நான்' வராவிட்டா காரியம் முடிஞ்சுடும். இந்த ப்ரீவில் (freewill) பத்தி முன்னாலேயே எழுதியாச்சு. 'நான் செய்வேன்' ன்னு நினைச்சா 'சரி செஞ்சுக்கோ' ன்னு கடவுள் விட்டுடுவார். அப்புறமா முடியறது முடியாதது எல்லாம் நம்ம முயற்சியை சார்ந்ததா ஆகிடும்.
சரி. 'கடவுளே நீயே செய், நான் செய்ய மாட்டேன்னு' சொல்கிற சோம்பேறிங்களுக்கு அது நடக்கவே நடக்காது. புருஷ யத்னம் இல்லாமல் வேலை நடக்காது. மிகச்சில எக்சப்ஷனே பார்க்கலாம். அவை முழுக்க முழுக்க சரணாகதி செய்த கேஸா இருக்கும்.
'என் முழு உழைப்பையும் கொடுக்கிறேன், உதவி பண்ணு' ன்னு சொல்கிறவங்களுக்கு கொஞ்சம் சுலபமாவே வேலை முடிஞ்சுடும்.
ஒரு விஷயம் எப்படி நடக்கணும்ன்னு கடவுள் ப்ளான் ஒண்ணு இருக்கும். அதை ஒட்டி நம்ம வேலை அமைஞ்சுதுன்னா அது சுலபமா பூர்த்தி ஆகும். எதிரா அமைஞ்சா பூர்த்தியே ஆகாது. அதாவது இந்த 'நான்' இல்லாம கடவுளை வேலை செய்ய விட்டுட்டா நாம் வெறும் கருவியா உழைச்சா வேலை நடந்துடும்.
கடவுள் எங்கிருந்தோ ஏணி ஏறி வர வேண்டிய அவசியமில்லை. அவர் உள்ளேயேத்தான் இருக்கார். அதாவது இறைத்தனம் எல்லார் உள்ளும் இருக்கு. அது வெளிப்பட்டு வேலை செய்ய நாம் விடுவதில்லை. நான், என் என்கிற அஹங்காரம் அதை வெளிப்படாம தடுக்குது. இந்த தடை நீங்கினா நம் ஒவ்வொரு காரியத்திலும் கடவுள் தன்மை வேலை செய்து எல்லாத்தையும் சரியாகவே நடத்திக்கொண்டு போகும்.
அதெப்படி தடையை நீக்கி கடவுள்தன்மையை வேலை செய்யவிடறது?
அதுக்குத்தான் இந்த கடவுளோட ஒரு லிங்க் இருக்கணும்.
லௌகீக வேலைகளிலே கடவுளோட லிங்க் வெச்சுக்கிறது கஷ்டம். அதனால இந்த லிங்க்கை உருவாக்கி பராமரிக்கவே தனியா நேரம் ஒதுக்கணும்.
இதுக்காகவேதான் பல கர்மாக்களை விதிச்சு இருக்காங்க.
பூஜை செய்கிறோம். ஒரு மணி நேரம் செய்கிற பூஜையில் நம்ம மனசு லயிச்சு கடவுளோட ஒரு லிங்க் கிடைக்கிறது சில நொடிகளாகத்தான் இருக்கும். பழகப்பழக இது அதிகமாகும்.
ஒரே மாதிரி முயற்சி அலுத்துப்போய் 'ச்சே, நமக்கு இது கிடைக்கவே கிடைக்காது' ன்னு ஒரு நிராசை உருவாக வாய்ப்பு இருக்கு. அதனால வித விதமான கர்மாக்களாலே இதை சாதிக்க வித விதமான பூஜைகள், சடங்குகள் உருவாக்கி வெச்சு இருக்கு. இன்ன இன்ன சமயத்தில இப்படி இப்படி செய் ன்னு சொல்லி வெச்சு இருக்கு.
இது வருஷத்தை ஒட்டி ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி ன்னு இருக்கலாம். அல்லது நம் தினசரி கர்மாவா சந்தியாவந்தனம், தினசரி பூஜைன்னு இருக்கலாம். அல்லது நம் வாழ்கையை ஒட்டி ஜாதகர்மா, சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ன்னு இருக்கலாம். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வித பலனும் இருக்கும். ஆனா எதா இருந்தாலும் இந்த கடவுளோட லிங்க் உருவாக்கிக்கற சமாசாரம்தான்.
எந்த பேரைச்சொல்லி எந்த கடவுளுக்கான சடங்கு செய்தாலும் குறிக்கோள் ஒண்ணேதான்.
Thursday, March 22, 2012
உரத்த சிந்தனை -புண்ணியம் பாபம் -3
போன பதிவிலே "ஒத்தர் ரொம்ப சுலபமா சொல்லிட்டார்: புண்ணியம் பாபம் ஏதுன்னு கேக்கறீயா? ” ன்னு எழுதி இருந்தேன். அது மஹாபாரதத்தில வருகிறது. ரந்தி தேவர் சொன்னதா சாந்தி பர்வத்திலே வ்யாஸர் எழுதி இருக்கிறதா நினைவு.
"ஸ்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி: பரோபகாராய புண்யாய பாபாய பரபீடணம்.”
--
சரி, நிறைய பாபம் பண்ண ஆசாமி கோவில் கோவிலா போய் பூஜை அபிஷேகம் எல்லாம் செஞ்சா செய்த பாபம் எல்லாம் போயிடுமா ன்னு கேட்டா...
நல்ல கேள்விதான்! நிறைய அரசியல்வியாதிங்க அப்படித்தானே செய்து கொண்டு இருக்காங்க?
இது அடிப்படையில கர்மா பலன் கொடுக்கிறது பத்திய சமாசாரம். சில ப்ராயசித்தங்கள் செய்தா கர்மாவோட பலனை அது கொஞ்சம் பாதிச்சு தற்காலிக நிவாரணமோ அல்லது தாக்கத்தை கம்மியாக்குவதோ நடக்கக்கூடியதுதான். ஆனா பலனை எப்படியுமே அனுபவிச்சே ஆகணும். இது கூட்டல் கழித்தல் கணக்கு மாதிரி புண்ணியம் 2 கிலோ பண்ணேன், பாபம் 2 கிலோ பண்ணேன்; தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. இந்த இரண்டு கணக்கு புத்தகங்களும் வேற வேற. புண்ணியம் பண்ணியா, பிடி சுகம். பாபம் பண்ணியா, பிடி கஷ்டம்!
இந்த சுகமும் கஷ்டமும் எப்போ வரும் எப்ப அனுபவிக்கணும்ன்னு பிறக்கும்போதே தீர்மானம் ஆயிடும். அதுக்கு தகுந்தாப்போல வாழ்கையில சூழ்நிலைகள் அமையும். நல்ல ஜோதிடர்கள் இதை அடையாளம் கண்டு இன்ன இன்ன காலகட்டத்தில இப்படி இப்படி அமையும்ன்னு சொல்லுவாங்க. நமக்கு காரணமே இல்லாம சில நாட்கள் சோறு கிடைக்க மாட்டேங்குது. என்னதான் வசதி இருந்தாலும், ஹோட்டல்ல போய் சாப்பிட த்ராணி இருந்தாலும் எங்கேயாது மாட்டிக்கிட்டு சோறு கிடைக்காம திண்டாடுவோம்! அது கர்மாவோட பலன்தான். மத்த நாட்களில கிடைக்கறதும் கர்மாவோட பலன்தான். அது ஒரு கர்மாவோட பலன்; இது இன்னொரு கர்மாவோட பலன்!
அதனால நாம ஒழுங்கா நடந்துக்கற வழியை பார்க்கணும். உடனடியா அதோட பலன் இல்லைன்னாலும் பின்னால் கஷ்ட படாம இருக்க அது உதவலாம். செய்யற பாபத்தை செய்துகிட்டு உடனடி தண்டனைதான் இல்லையே என்கிற தைரியத்துல மேலே மேலே தப்பு செய்து கர்ம மூட்டை பளுவை அதிகமாக்கிக்கறதுல அர்த்தமே இல்லை.
அடிப்படையில உலகத்தைப்பத்திய நம்மோட ஆட்டியூட் மாறணும். மாறலைன்னா எந்த ஆன்மீக சாதனையும் கொஞ்சம் கூட முன்னேறலைன்னு அர்த்தம். எந்த பூஜை புனஸ்காரமும் பலிக்கலைன்னு அர்த்தம். அதுல நம்ம மனசு சரியா ஈடுபடலைன்னு அர்த்தம்.
யோசிப்போம்!
Subscribe to:
Posts (Atom)