Pages

Friday, August 3, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 9


சாந்தராயணத்துக்கு சமமானவை: ம்ருகாரேஷ்டி, பவித்ரேஷ்டி, மித்ராவிந்தா பசு, மூன்று மாதங்கள் அனுஷ்டிக்கும் க்ருச்சிரம், பத்தாயிரம் தில ஹோமம், இரண்டு பராக க்ருச்சிரம், லக்ஷம் காயத்ரீ, இவை சமமாகும்.

ப்ரத்யாம்னாய விஷயத்தில் ப்ராஜாபத்யத்துக்கு ஒரு பசு தானம் கொடுப்பது, சாந்தராயணத்துக்கு இரண்டு, பராக, தப்த க்ருச்சிரங்களில் மும்மூன்று என சொல்லி இருக்கிறது.

இப்படி பசு தானம் செய்ய சக்தி இல்லை என்றால் என்ன செய்வது? 12 ஆயிரம் முஷ்டி (பிடி) புல்லை பசு மாட்டுக்கு கொடுக்க வேண்டும். சக்தி இருக்கிறது, ஆனால் சரியாக வாய்ப்பு அமையவில்லை என்றால் (இந்த பிரச்சினை இப்போது அதிகமாகவே இருக்கிறது!) பசுவுக்கான விலையை கொடுக்கலாம்.

மஹாநதியில் ஸ்நாநம் என்றால் எவை மஹாநதிகள்?

பட்டியல் இதோ: கங்கை, ஸரஸ்வதீ, யமுனா, நர்மதா, பிபாசா, விதஸ்தா, கௌசிகீ, நந்தா, விரஜா, சந்த்ரபாகா, ஸரயூ, சராவதீ, ஸிந்து, க்ருஷ்ணவேனீ, சோணா, தாபினீ, பாஷாணகா, கோமதீ, கண்டகீ, பாஹுதா, பம்பா, தேவிகா, காவேரீ, துங்கபத்ரா, ஸுசக்ஷு, அருணா.
(இதெல்லாம் எங்கே இருக்குன்னு பாத்து சொலுங்கப்பா!)

ப்ராயச்சித்தம் விதிக்கும் போது நபரை பார்த்து விதிக்கப்படும். (விபரீத பொருள் செய்து கொள்ளக்கூடாது!) வேத பராயணம், ஹோமங்கள் செய்யக்கூடியவர்களுக்கு அவற்றை விதிக்க வேண்டும். தர்மம் இல்லாதவர்களுக்கும் வித்யை இல்லாதவருக்கும், ப்ராம்ஹணன் என்று பெயருக்கு மட்டும் இருப்பவர்களுக்கு ப்ராஜாபத்யாதி க்ருச்சிரங்கள்; பணம் உள்ளவர்களுக்கு அபராதம் - இப்படி ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டும்.

சாதாரண பாபங்களுக்கு ஸ்நாநம், ஸந்த்யோபாசனம், ப்ராணாயாமம், உபவாஸம், பஞ்சகவ்யம் உட்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யலாம். நித்தியம் செய்யணும்  என்கிற அனுஷ்டானங்களிலேயே பல பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் வந்து விடுகிறது.

க்ரியா ப்ராயச்சித்தங்கள்: இதெல்லாம் இல்லாமல் ஜபம் ஹோமம் போன்றவற்றை செய்யணும் போதே கூட சில தவறுகள் நடக்கலாம். மந்தர லோபம், க்ரியா லோபம் , சிரத்தா லோபம் என்றெல்லாம் சொல்வார்கள். இதற்கெல்லாம் அந்தந்த கர்மாவை சொல்லும் கல்பத்திலேயே –புத்தகத்திலேயே-  ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டு இருக்கும்.

ப்ராஜாபத்ய ப்ரதிநிதிகள்: ஒரு கன்னுக்குட்டியுடன் கூடிய பால் கறக்கும் பசுவை நான்கு மாதத்துக்கு தேவையான உணவு (வைக்கோல்), பால் பாத்திரம், மணி, கயிறு போன்றவற்றுடன் தானம் செய்வது ஒரு ப்ராஜாபத்ய க்ருச்சிரத்துக்கு ப்ரதிநிதி ஆகும். இப்படி கொடுக்க முடியாதவர்கள் அதற்கான விலையாக ஒரு நிஷ்கம் கொடுக்கலாம். இந்த நிஷ்கம் தங்கத்தின் அளவு என்று தெரிகிறது. எவ்வளவு என்று தெரியவில்லை. ப்ராயச்சித்தம் செய்யும் நபரின் சக்தியை பொருத்து முடியாவிட்டால் அரை நிஷ்கம், அதுவும் முடியாவிட்டால் கால் நிஷ்கம் என்று கோமூல்யத்தை கொடுக்கச்சொல்லி இருக்கிறது. இந்த அனுகல்ப ப்ராஜாபத்யம் முழுக்க முழுக்க சாஸ்த்ர சம்மதம். சிஷ்டர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. இதுவே இந்த காலத்தில் சகலருக்கும் ப்ரயோஜனமாகக் கூடியது என்று தோன்றுகிறது.

 
 

Thursday, August 2, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 8



இந்த சுலபமானதெல்லாம் அந்தணர்களுக்கு இல்லை; ஹோமங்கள் கூடிய கடுமையான க்ருச்சிரம்தான் செய்யணும் என்கிறார் கௌதமர். ஸூர்யன் குறித்து ஹோமங்கள் தர்பணங்கள், சில வேத மந்திரங்கள் ஜபங்கள்; அந்த மிஞ்சின ஹவிஸ் (ஹோமம் செய்து மிஞ்சிய அன்னம்) மட்டுமே சாப்பிடலாம். மத்தபடி அதே 3 நாள் பகல், இரவு, கிடைத்தது, பட்டினி கதைதான். பகலில் நிற்க வேண்டும். இரவில் உட்காரலாம், படுக்கக்கூடாது, அதிகம் பேசக்கூடாது. பேசினாலும் உண்மையே பேச வேண்டும், இன்னாருடன் மட்டும் பேச வேண்டும் என சட்ட திட்டங்கள். 13 ஆம் நாள் ஹோமங்கள் செய்து ப்ராம்ஹணர்களுக்கு அன்னமிட்டு பூர்த்தி செய்ய வேண்டும்.

அதி க்ருச்சிரம் என்பது ப்ராஜாபத்ய க்ருச்சிரம் போல. ஆனால் ஒரு கபளம் (சக்தி இல்லாதவனுக்கு ஒரு கையளவு என்றும் ஒரு வெர்ஷன்) மட்டுமே சாப்பிடலாம்.
க்ருச்ராதி க்ருச்சிரம் என்று ஒன்று. ப்ராஜாபத்ய க்ருச்சிரம் போலவே நாள் கணக்கு. ஆனால் சாப்பாடே கிடையாது. தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். பட்டினி என்று சொன்ன 3 நாட்களுக்கு அதுவும் இல்லை. அசக்தனுக்கு 21 நாள் பால் மட்டும் குடித்து என்று யாக்ஞவல்கியர்.

இதே போல ஸாந்தபன க்ருச்சிரம் (பஞ்ச கவ்யம் செய்யும் பொருட்களை ஒவ்வொன்று ஒரு நாள் மட்டும் உண்ணுதல்) பராக க்ருச்சிரம் (12 நாள் முழு பட்டினி) பர்ண க்ருச்சிரம் ( இலைகளை கொதிக்க வைத்த நீர் மட்டும் அருந்தலாம்- 5 நாட்கள்), பல க்ருச்சிரம் (ஒரு மாதம் பழங்கள் மட்டும் உண்ணுதல்) மேலும் வாருண, ஸ்த்ரீ, ஸௌம்ய, துலா புருஷ க்ருச்சிரம், அகமர்ஷண க்ருச்சிரம், தைவத க்ருச்சிரம், யக்ஞ க்ருச்சிரம், யாவக, ப்ரஸ்ருதி யாவக, என பல வகைகள் உள்ளன.

சாந்த்ராயண க்ருச்சிரம் என்று ஒன்று. அமாவாசைக்கு பட்டினி. அடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கபளம் கூடுதல். பௌர்ணமி முடிந்தால் அதே போல குறைத்துக்கொண்டே வந்து நிறைவு. அதே போல பௌர்ணமிக்கு 15 கபளத்துடன் ஆரம்பித்து குறைத்து என்ற ரீதியில் செய்வதும் உண்டு. இதிலும் பல நியமங்கள் உண்டு.பல வகைகளும் உண்டு.
ப்ராஜாபத்யம் முதலான க்ருச்சிரத்துக்கு சமமானதாக சிலது சொல்லப்படுகின்றன. இவை "ப்ரத்யாம்நாயம்" எனப்படும். எக்காரணத்தாலாவது ப்ராஜபத்யாதி க்ருச்சிரங்களை அனுஷ்டிக்க முடியாத நில ஏற்பட்டால் இவற்றை விதிக்கக்கூடும். பதினாயிரம் காயத்ரி ஜபம்; ஜலத்தில் வசிப்பது, ஒரு ப்ராம்ஹணனுக்கு கோதானம் செய்வது. இவை ப்ராஜாபத்யத்துக்கு சமமாகும்.

மேலும் காயத்ரியால் ஆயிரம் தில ஹோமம், வேதபாராயணம், 12 ப்ராம்ஹணர்களுக்கு போஜனம், பவமான இஷ்டி, பாவகேஷ்டி, 200 ப்ராணாயாமம், புண்ய தீர்த்தத்தில் காய்ந்த தலையுடன் 12 முறை ஸ்நாநம் இவையும் சமமாக கருதப்படும். ஒரு முறை மூழ்கி எழுந்த பின் துவட்டிக்கொண்டு தலை காய காத்திருக்க வேண்டும். பின் மீண்டு முழுக வேண்டும். 12 ப்ராம்ஹண போஜனம் என்றது பணமில்லாதவனைப்பற்றியது. பணமுள்ளவன் 12 நாட்களுக்கு தினம் ஐந்து பேர் வீதம் 60 ப்ராம்ஹணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். இன்னும் சிலது உண்டு. மேலும் பார்ப்போம்.


 

Wednesday, August 1, 2012

Rik upakarma 2012


Rik veda upakarma is not much different from that of yajur veda but for an exception. So use the same links as the previous post on it.
The difference is that for Rik vedies the star rather than the thithi is important and so the upakarma is done on shravana star date. It comes along with the gayatri japa this year on 2nd august.

A tamil notice used for these occasions  can be found here for the basic structure. The mantras are of course different for samita dhanam but of course you must know them.

https://plus.google.com/u/0/115022468360331789897/posts/LA2gvmC4tw3

For the maha sankalpa in nagari, tamil and ISO English see this document. But for the date etc - the variation is given below-  it is applicable still. This document also tells you the meaning of the sankalpa.
 
2012 Sankalpa variation For kamokarisheen japa:
...
நந்தன நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே சுக்ல பக்‌ஷே பௌர்ணமாஸ்யாம் (காலை சுமார் 9- 40  மணி வரை, அதற்கு பின்னால் ப்ரதமாயாம்) சுபதிதௌ குரு வாஸர யுக்தாயாம் ஷ்ரவண நக்‌ஷத்ர யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக பவ கரண யுக்தாயாம் ஏவம் குண சகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்  பௌர்ணமாஸ்யாம் (/ ப்ரதமாயாம்) ... தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத்சர்ஜன அகரண ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்ர சத ஸங்க்யயா காமோகார்ஷீத் மன்யுர கார்ஷீதிதி மஹா மந்தர ஜபம் கரிஷ்யே.

காமோகார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நம: என
108 ஜபம் செய்க.

Sankalpa variation for 2/8/2012 gayatri japa sankalpam


நந்தன
நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே சுக்ல பக்‌ஷே பௌர்ணமாஸ்யாம் (காலை சுமார் 9- 40  மணி வரை, அதற்கு பின்னால் ப்ரதமாயாம்) சுபதிதௌ குரு வாஸர யுக்தாயாம் ஷ்ரவண நக்‌ஷத்ர யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக பவ கரண யுக்தாயாம் ஏவம் குண சகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்  பௌர்ணமாஸ்யாம் (/ ப்ரதமாயாம்)  சுபதிதௌ மித்யாதீத அபதனீயாதி ஸம்வத்ஸர தோஷ ப்ராய்ச்சித்தார்த்தம்  அஷ்டோத்ர ஸஹஸ்ர  ஸங்க்யயா காயத்ரீ  மஹா மந்தர ஜபம் கரிஷ்யே.


 

பாபங்கள் ப்ராயச்சித்தங்கள் - 7


பாபங்களுக்கு சாத்திரங்களால் விதிக்கப்பட்ட எல்லா ப்ராயச்சித்தங்களையும் சொல்லியது போல அனுசரிக்க கலியில் சாத்தியமில்லை என்று சொல்லி மஹரிஷி பராசரர் எளிய ப்ராயச்சித்தங்களை விதித்துள்ளார். இந்த காலத்தில் இவை அனுசரிக்கக்கூடியவை. சாந்த்ராயணம் என்பது ஒரு மாதம் வரையில் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இது போல பலவும் பல நாட்கள் விரதமிருந்து செய்யக்கூடியவை. இலகுவாக நினைக்கும் ப்ராஜாபத்ய க்ருச்சிரமே 12 நாட்கள் செய்ய வேண்டிய விரதம்.அதை சரியான முறையில் அனுஷ்டிப்பதும் கடினம்.

கலிக்காக சொல்லிய ப்ராயச்சித்தங்களின் பிரதிநிதியாக சொன்னது ஒன்று திரவியத்தை தானமாக கொடுத்துவிடுவது. யத் கலுவாவ தப இத்யாஹுஹு யத் ஸ்வயம் ததாதீதி….. ஸ்ருதியே இதை ஒரு தபஸ் என்கிறது. பணம் அபராதமாக விதிப்பது எல்லா நாடுகளிலும் நீதி மன்றங்களில் நடப்பதை பார்க்கிறோம்.

இந்த காலத்துக்கு பல நாள் சாத்தியமான தபஸ் களை ப்ராயச்சித்தமாக அனுஷ்டிக்க கடினம் என்பதால், ஜபம், ஹோமம், உபவாஸம், பிராணாயாமம், த்ரவ்யதானமாகிய இலகுவானவற்றை செய்து சுத்தியடைய சாத்திரங்கள் அனுமதிக்கின்றன.

ப்ராஜாபத்யம் என்னும் க்ருச்சிரத்தை ப்ராயச்சித்தத்தை- சகல பாபங்களுக்கும் பிரதிநிதியாக அனுஷ்டிக்க சாத்திரம் அனுக்ரஹித்து இருக்கிறது.உசநஸ் என்ற மஹரிஷியும் வேறு சில ரிஷிகளும் இதை கூறுகிறார்கள். மஹாபாதகமானாலும் அல்லது வேறு எந்த தண்டனை விதிக்கப்படாத பாபத்துக்கும் ப்ராயசித்தமாக இதையே பெருக்கி கணக்கு செய்து அனுஷ்டிக்கலாம் என மிதாக்‌ஷரையில் விக்ஞானேஸ்வரர் சொல்லி இருக்கிறார். இது இந்த காலத்துக்கு மிகவும் உபகாரமானது. இவ்வளவு இளக்கிக் கொடுத்த இந்த ப்ராயச்சித்தத்தை எப்படி அனுஷ்டிப்பது?

பிச்சை எடுத்து 3 நாட்கள் பகலில் மட்டும் உண்ண வேண்டும்.
அந்தபடியே இரவில் மட்டும் 3 நாட்கள் உண்ண வேண்டும்.
யாசிக்காமலே இருந்து கிடைத்ததை மட்டுமே 3 நாட்கள் உண்ண வேண்டும்.
3 நாட்கள் முழுக்க பட்டினியாக இருக்க வேண்டும்.

இப்படி இருப்பது உடல் ரீதியாக முடியாது சிறுவர்கள், வியாதியுள்ளவர், மிக வயதானவர் போல இருந்தால் இதே க்ரமத்தில் தொடர்ந்து மும்மூன்று நாட்களாக இல்லாமல் ஒவ்வொரு நாளாக 3 முறை செய்யலாம்.

இங்கு "பகல் மட்டும்தானே உண்ண வேண்டும்? சரி!" என்று இஷ்டத்துக்கு உண்ண முடியாது.
ஒரு கோழி முட்டை அளவு அல்லது வாய்க்குள் போகும் அளவு என்பது ஒரு கபளம். பகலில் மட்டும் சாப்பிடும் போதும் மொத்தம் 26 கபளங்கள் சாப்பிடலாம். இரவில் மட்டும் சாப்பிடும்போது 22 மட்டும். யாசிக்காமல் கிடைத்ததை உண்ணும்போது 22. இப்படி ஆபஸ்தம்பர் சொன்னார். ஆனால் சதுர்விம்சதி மதத்தில் இதையே முறையே 12, 15, 16 என்று சொல்லப்பட்டது. (இது பற்றி பின்னால் எழுத உத்தேசம்)

இந்த க்ருச்சிரத்தில் கால் அளவு, பாத க்ருச்சிரம் எனப்படும். பகலில் மட்டும் புசிப்பது என்பது ஒரு கால் பாகம்; இரவில் மட்டும் என்பது கால் பாகம்; கிடைத்ததை மட்டும் என்பது கால் பாகம். முழு பட்டினி என்பது கால் பாகம்.
ப்ராக்டிகலாக யோசித்த மஹரிஷிகளின் சாத்திரம் பகலில் மட்டும் புசிப்பது என்பது சூத்திரனுக்கு; இரவில் மட்டும் என்பது வைச்யனுக்கு; கிடைத்தது என்பது க்‌ஷத்ரியனுக்கு முழு பட்டினி அந்தணனுக்கு என விதித்தது.

இந்த கால் க்ருச்சிரம் போல அரை க்ருச்சிரமும் முக்கால் க்ருச்சிரமும் கூட உண்டு. கணக்கு எப்படி? கிடைத்தது மட்டும், பட்டினி இரண்டையும் மும்மூன்று நாட்கள் அனுஷ்டிக்க அது அரை க்ருச்சிரம். இரவு மட்டும் என்பதை மட்டும் தவிர்கிறது முக்கால் க்ருச்சிரம்.

கங்கா ஸ்தோத்ரம் -6


(11)

वरम् इह नीरे कमठो मीनः किं वा तीरे शरटः क्षीणः ।
अथवा श्वपचो मलिनो दीनः तव न हि दूरे नृपतिः कुलीनः ॥

வரம் இஹ நீரே கமடோ² மீந:
கிம்ʼ வா தீரே ஶரட: க்ஷீண:
அத²வா ஶ்வபசோ மலிநோ தீ³ந:
தவ ந ஹி தூ³ரே ந்ருʼபதி: குலீந:

(தேவீ!) உன் நீரில் ஆமையாகவோ, மீனாகவோ அல்லது உன் கரையில் ஒரு மெலிந்த பச்சோந்தியாகவோ ஒரு தீனமான அழுக்கடைந்த சண்டாளனாகவோ வசிப்பது உன்னை விட்டு தூரத்தில் பெருங்குடியில் உதித்த அரசனாக இருப்பதைவிடச் சிறந்தது.

varam iha nīre kamaṭho mīnaḥ kiṁ vā tīre śaraṭaḥ kṣīṇaḥ
athavā śvapaco malino dīnaḥ tava na hi dūre nṛpatiḥ kulīnaḥ


(12)

भो भुवनेश्वरि पुण्ये धन्ये देवि द्रवमयि मुनि-वर-कन्ये ।
गङ्गा-स्तवम् इमम् अमलं नित्यं पठति नरो यः स जयति सत्यम् ॥

போ⁴ பு⁴வனேஶ்வரி புண்யே த⁴ந்யே
தே³வி த்³ரவமயி முநி-வர-கந்யே
க³ங்கா³-ஸ்தவம் இமம் அமலம்ʼ நித்யம்ʼ
பட²தி நரோ ய: ஸ ஜயதி ஸத்யம்

ஓ உலகுக்கெல்லாம் தலைவியே! புண்ணியமானவளே, பாக்கியம் நிறைந்தவளே! உருகிய தன்மை படைத்த தேவி! சிறந்த (ஜஹ்நு) முனிவரின் புதல்வியே! பவித்திரமான இந்த (உனது) கங்கா ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பவர்கள் நிச்சயம் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவர்!

bho bhuvaneśvari puṇye dhanye devi dravamayi muni-vara-kanye
gaṅgā-stavam imam amalaṁ nityaṁ paṭhati naro yaḥ sa jayati satyam