இந்த சுலபமானதெல்லாம்
அந்தணர்களுக்கு இல்லை; ஹோமங்கள் கூடிய
கடுமையான க்ருச்சிரம்தான் செய்யணும் என்கிறார் கௌதமர். ஸூர்யன்
குறித்து ஹோமங்கள் தர்பணங்கள், சில வேத மந்திரங்கள் ஜபங்கள்;
அந்த மிஞ்சின ஹவிஸ் (ஹோமம் செய்து மிஞ்சிய
அன்னம்) மட்டுமே சாப்பிடலாம். மத்தபடி
அதே 3 நாள் பகல், இரவு, கிடைத்தது, பட்டினி கதைதான். பகலில்
நிற்க வேண்டும். இரவில் உட்காரலாம், படுக்கக்கூடாது,
அதிகம் பேசக்கூடாது. பேசினாலும் உண்மையே பேச வேண்டும்,
இன்னாருடன் மட்டும் பேச வேண்டும் என சட்ட திட்டங்கள். 13 ஆம் நாள் ஹோமங்கள் செய்து ப்ராம்ஹணர்களுக்கு அன்னமிட்டு பூர்த்தி செய்ய
வேண்டும்.
அதி க்ருச்சிரம் என்பது
ப்ராஜாபத்ய க்ருச்சிரம்
போல. ஆனால் ஒரு கபளம் (சக்தி இல்லாதவனுக்கு ஒரு கையளவு என்றும் ஒரு வெர்ஷன்) மட்டுமே சாப்பிடலாம்.
க்ருச்ராதி க்ருச்சிரம்
என்று ஒன்று. ப்ராஜாபத்ய
க்ருச்சிரம் போலவே நாள் கணக்கு. ஆனால் சாப்பாடே கிடையாது.
தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். பட்டினி என்று
சொன்ன 3 நாட்களுக்கு அதுவும் இல்லை. அசக்தனுக்கு
21 நாள் பால் மட்டும் குடித்து என்று யாக்ஞவல்கியர்.
இதே போல ஸாந்தபன
க்ருச்சிரம் (பஞ்ச கவ்யம் செய்யும் பொருட்களை
ஒவ்வொன்று ஒரு நாள் மட்டும் உண்ணுதல்) பராக க்ருச்சிரம் (12
நாள் முழு பட்டினி) பர்ண க்ருச்சிரம் (
இலைகளை கொதிக்க வைத்த நீர் மட்டும் அருந்தலாம்- 5 நாட்கள்), பல க்ருச்சிரம் (ஒரு
மாதம் பழங்கள் மட்டும் உண்ணுதல்) மேலும் வாருண, ஸ்த்ரீ, ஸௌம்ய, துலா புருஷ
க்ருச்சிரம், அகமர்ஷண க்ருச்சிரம், தைவத
க்ருச்சிரம், யக்ஞ க்ருச்சிரம், யாவக,
ப்ரஸ்ருதி யாவக, என பல வகைகள் உள்ளன.
சாந்த்ராயண க்ருச்சிரம்
என்று ஒன்று. அமாவாசைக்கு பட்டினி.
அடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கபளம் கூடுதல். பௌர்ணமி முடிந்தால் அதே போல குறைத்துக்கொண்டே வந்து நிறைவு. அதே போல பௌர்ணமிக்கு 15 கபளத்துடன் ஆரம்பித்து
குறைத்து என்ற ரீதியில் செய்வதும் உண்டு. இதிலும் பல
நியமங்கள் உண்டு.பல வகைகளும் உண்டு.
ப்ராஜாபத்யம் முதலான
க்ருச்சிரத்துக்கு சமமானதாக சிலது சொல்லப்படுகின்றன. இவை "ப்ரத்யாம்நாயம்"
எனப்படும். எக்காரணத்தாலாவது ப்ராஜபத்யாதி க்ருச்சிரங்களை அனுஷ்டிக்க முடியாத நில
ஏற்பட்டால் இவற்றை விதிக்கக்கூடும். பதினாயிரம்
காயத்ரி ஜபம்; ஜலத்தில் வசிப்பது, ஒரு ப்ராம்ஹணனுக்கு கோதானம் செய்வது. இவை ப்ராஜாபத்யத்துக்கு சமமாகும்.
மேலும் காயத்ரியால் ஆயிரம்
தில ஹோமம், வேதபாராயணம், 12 ப்ராம்ஹணர்களுக்கு போஜனம்,
பவமான இஷ்டி, பாவகேஷ்டி, 200 ப்ராணாயாமம், புண்ய தீர்த்தத்தில் காய்ந்த தலையுடன்
12 முறை ஸ்நாநம் இவையும் சமமாக கருதப்படும். ஒரு முறை மூழ்கி எழுந்த பின்
துவட்டிக்கொண்டு தலை காய காத்திருக்க வேண்டும். பின் மீண்டு முழுக வேண்டும். 12
ப்ராம்ஹண போஜனம் என்றது பணமில்லாதவனைப்பற்றியது. பணமுள்ளவன் 12 நாட்களுக்கு தினம்
ஐந்து பேர் வீதம் 60 ப்ராம்ஹணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். இன்னும் சிலது
உண்டு. மேலும் பார்ப்போம்.
4 comments:
""அமாவாசைக்கு பட்டினி. அடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கபளம் கூடுதல். பௌர்ணமி முடிந்தால் அதே போல குறைத்துக்கொண்டே வந்து நிறைவு. அதே போல பௌர்ணமிக்கு 15 கபளத்துடன் ஆரம்பித்து குறைத்து என்ற ரீதியில் செய்வதும் உண்டு. இதிலும் பல நியமங்கள் உண்டு.பல வகைகளும் உண்டு""
சில பேர் இப்படி விரதமும் இருக்காளே அது இதுல சேத்தியா
ஆமாம். இப்படி விரதம் இருக்கிறது ப்ராயச்சித்தம்தான். ஆனால் யாரும் அப்படி இருப்பத நான் கேள்விப்பட்டதே இல்லை.
இந்த முறை fasting பத்தி sathya sai speaks volume 30 ல படித்திருக்கிறேன். "26. Transcending the mind to realise God" ல இது பத்தி சொல்லியிருக்கார்.
பௌத்த மத சன்யாசிகளில் ஒரு வகுப்பினரும் , ஜைன மத சன்யாசிகளில் சிலரும் இந்த முறை கையாண்டதாக படித்திருக்கிறேன்.எனக்கு தெரிந்த ஜைன வகுப்பை சேர்ந்த ஒரு முதியவர் இப்படி விரதமிருப்பதையும் பர்த்திருக்கிறேன் . இப்ப எடை குறைக்கும் டயட் பிளான் ஒன்று கூட இதை பேஸ் பண்ணினதுன்னு நினைச்சேன்.
அஹ!
Post a Comment