Friday, April 7, 2017
Thursday, April 6, 2017
கிறுக்கல்கள் - 193
வியாபாரி
ஒருவரின் வாழ்க்கை துன்பங்கள்
மிகுந்ததாயிற்று. அதனால்
வியாபாரத்திலும் பணம்
பண்ணுவதிலும் மட்டுமே கவனத்தை
செலுத்தினார்.
அவரை
சந்தித்த போது மாஸ்டர் சொன்னார்:
”ஒரு காலத்தில்
தன் கால் தடங்களை பார்த்து
பயந்த ஒருவன் இருந்தான்.
அதனால்
நடப்பதை விட்டுவிட்டு ஓட
ஆரம்பித்தான். ஓட்டம்
கால்தடங்களை இன்னும் ஆழமாக
ஆக்கிற்று. அதற்கு
பதில் நின்றிருக்கலாம் இல்லை?”
Wednesday, April 5, 2017
கிறுக்கல்கள் - 192
ஏன்
நிறைய பேர் ஞானிகள் ஆவதில்லை
என்று ஒருவர் கேட்டார்.
”அவர்கள்
லாபத்தை நஷ்டமாக பார்க்கிறார்கள்.
அதனால்”
என்றார் மாஸ்டர்.
கேள்வி
கேட்டவருக்கு புரியவில்லை.
மாஸ்டர்
வியாபாரத்தில் இறங்கிய தன்
நண்பர் பற்றி சொன்னார்.
சிறியதாக
துவங்கிய வியாபாரம் நல்ல
சூடு பிடித்தது. பொருட்களை
வாங்க மக்கள் வந்து கொண்டே
இருந்தனர். மாஸ்டர்
நண்பருக்கு பாராட்டுகள்
தெரிவித்தார்.
Tuesday, April 4, 2017
கிறுக்கல்கள் - 191
'போட்டி
என்பது கொடியது; தீமையானது' என்றார் மாஸ்டர்.
"ஏன்?
போட்டி
நம்மில் இருந்து அதிக பட்ச
திறமையை வெளிக்கொண்டு
வருவதில்லையா?"
"அது
வெளிக்கொண்டு வருவதெல்லாம்
நமது மோசமான பக்கத்தைத்தான்!
ஏனென்றால்
அது வெறுப்பை வெளிக்கொண்டு
வருகிறது!"
"யாரிடம்
வெறுப்பை?"
"முதலில்
உன்னிடமே! உனது
செயலை உன் போட்டியாளர்
நிர்ணயிக்கிறார் இல்லையா?
உன் தேவையோ
உன் ஆற்றலோ உன் முனைப்போ
இல்லை. இரண்டாவது
மற்றவர்களிடம். ஏனென்றால்
அவர்களை விஞ்ச நீ நினைக்கிறாய்.
அதற்கு
இடமில்லையானால் வெறுப்பு
ஏற்படுகிறது."
"ஆனால்
நீங்கள் சொல்வது மாற்றங்களுக்கும்
வளர்ச்சிக்கும் சாவு மணி
அடித்துவிடும்!"
"வளர்ச்சி
இருக்க வேண்டியது அன்பால்
மட்டுமே. தேவையான
மாற்றம் நம் இதயத்தில் மட்டுமே! "
Monday, April 3, 2017
கிறுக்கல்கள் - 190
சீடர்களுக்கு
ஒரு சோதனை வைத்தார் மாஸ்டர்.
ஒவ்வொருவரிடமும்
ஒரு பேப்பரை கொடுத்து தன்
கேள்விக்கு உண்மையான பதில்
எழுதச்சொன்னார்.
கேள்வி?
இந்த ஹாலின்
நீள அகலங்கள் என்ன?
ஏறத்தாழ
எல்லாரும் 50 அடி
போல ஒரு எண்ணிக்கையை
குறிப்பிட்டார்கள்.
சிலர் தோராயமாக
என்னும் வார்த்தையை
சேர்த்துக்கொண்டார்கள்.
எல்லா
விடைகளையும் பார்த்துவிட்டு
மாஸ்டர் சொன்னார் “உண்மையான
விடையை யாருமே எழுதவில்லை!”
உண்மையான
விடை என்ன என்று யாரோ கேட்டார்கள்.
மாஸ்டர்
சொன்னார்: “உண்மையான
விடை ‘எனக்குத்தெரியாது’
என்பதே!”
Subscribe to:
Posts (Atom)

