Pages

Tuesday, December 10, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 46





43 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஆனந்தகணேந்திர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: துங்கபத்ரா நதிக்கரையில்
பூர்வாஶ்ரம பெயர்: ஶங்கர பண்டிதர்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: சுதேவ பட்டா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 36
சித்தி: 4114 ப்ரமாதி சைத்ர சுக்ல நவமி (பொ.ஆ. 1013-மார்ச்-29) பகல் நேரத்தில்

Monday, December 9, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 45





42 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பிரம்மானந்தகணேந்த்ர ஸரஸ்வதி
பெயர்: நரசிம்ம பட்டா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: சுப்ரமணியா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 28
சித்தி: 4078 ஈஶ்வர கார்த்திக கிருஷ்ண அஷ்டமி (பொது ஆண்டு 0977-நவ -12)

Saturday, December 7, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 44





41 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: வ்ரதி கங்காதர
பிறந்த இடம்: பீமா நதியின் கரைகள்
பூர்வாஶ்ரம பெயர்: அப்பண்ணா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: உமேஷ பட்டர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 35
சித்தி: 4050 சௌம்ய ச்ரவண சுக்ல ப்ரதமை (பொ.ஆ. 0949-Jul-04)
மற்றவை:
தன் மந்திர சக்தி மூலம், இந்த ஆச்சார்யர் பார்வையிழந்த கேரள கவிஞரான ராஜசேகர வர்மாவுக்கு பார்வையை மீட்டுக்கொடுத்தார்.

Friday, December 6, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 43





40 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: ஷோபன மஹாதேவா
பிறப்பு இடம்: கர்நாடகம்
பூர்வாஶ்ரம பெயர்: சிவராம பட்டர்.
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: கன்னய்யா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 42
சித்தி: 4015 பவ வைசாக சுக்ல ஷஷ்டி (பொது ஆண்டு 0914-ஏப் -09) பிரதோஷத்தின் முடிவில்
வேறு:
இந்த ஆச்சார்யரின் உடல் வடிவம் கூட தெய்வீக அழகுடன் பிரகாசிக்கக் கூடியதாக இருந்தது. அதனால் இவரை ஷோபன மஹாதேவா என்று அழைத்தனர்,

Thursday, December 5, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 42





39 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சத்சித்விலசேந்த்ர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: கன்னியகுப்ஜம்
பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீபதி
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: கமலேஶ்வரா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 33
சித்தி: 3973 நந்தன வைசாக சுக்ல சதுர்தசி (கிபி 0872-ஏப்-29) இரவில்
மற்றவை:
இந்த ஆச்சார்யரின் குருவான ஶ்ரீ அபிநவ ஶங்கரர் இமயமலையில் தத்தாத்ரேய குகையில் பிரவேசம் செய்த போது அவர் மீது கொண்டிருந்த அதீத பக்தியினால் இவரும் அவரை பின்பற்றினார். தன் உயிரையும் விட எண்ணினார். ஆனால் உலகிற்கு இவர் ஆற்ற வேண்டிய கடமை பெரிது என்பதால் ஶ்ரீ அபிநவ ஶங்கரர் அவரை திருப்பி அனுப்பினார்.
பிரபலமான ஆனந்த வர்தனா என்னும் ஆலங்கரிகர் (கவிதை மற்றும் இலக்கிய அறிஞர்) (பொது ஆண்டு 820-890), புகழ்பெற்ற த்வன்யலோகாவை இயற்றியவர்; இந்த ஆச்சார்யரின் சமகாலத்தியவர் ஆவார். அவரும் இந்த காலத்திய பல பெரிய அறிஞர்களும் இந்த ஆச்சார்யரை உயர் மதிப்பீட்டில் வைத்திருந்தனர். மேலும் அவரது தரிசனத்தையும் வழிகாட்டுதலையும் நாடினர். அத்தகைய அறிஞர்களால் சூழப்பட்ட ஆச்சார்யர் பத்மபுராவில் (சரியான இடம் தெரியவில்லை) அதிக நேரம் செலவிட்டார்.
இறுதியாக ஆச்சார்யர் காஞ்சிபுர ஶ்ரீமடத்திற்கு திரும்பினார்.