Pages

Friday, April 24, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 26






ௐ விரிஞ்ஜாய நம: ।? பிரம்ம சொரூபினனே
ௐ வரவக்ஷணாய நம: ।உயர்ந்த மார்பினனே
ௐ விஜ்ஞாநகலிகாப்³ருʼந்தா³ய நம: ।அறிவுக்கொழுந்தே
ௐ விஶ்வரூபப்ரத³ர்ஶகாய நம: ।விஸ்வரூபத்தை காட்டியவனே
ௐ ட³ம்ப⁴க்⁴நாய நம: । 630டம்பத்தை அடக்குபவனே
ௐ த³மகோ⁴ஷக்⁴நாய நம: ।அடக்கிய கர்ஜனையால் கொல்பவனே
ௐ தா³ஸபாலாய நம: ।தாசர்களை காப்பவனே
ௐ தபௌஜஸாய நம: ।? தவத்தால் ஒளியுள்ளவனே
ௐ த்³ரோணகும்பா⁴பி⁴ஷிக்தாய நம: ।த்ரோண கும்பத்தால் அபிஷேகம் செய்யப்பட்டவனே
ௐ த்³ரோஹிநாஶாய நம: ।துரோகிகளை நாசம் செய்பவனே
ௐ தபாதுராய நம: ।?தவத்தால் பீடிக்கப்பட்டவனே
ௐ மஹாவீரேந்த்³ரவரதா³ய நம: ।மஹா வீரனான இந்திரனுக்கு வரம் தந்தவனே
ௐ மஹாஸம்ஸாரநாஶநாய நம: ।பெரும் சம்சாரத்தை அகற்றுபவனே
ௐ லாகிநீஹாகிநீலப்³தா⁴ய நம: ।
லாகினி, ஹாகினி எனப்படும் தேவியரால் அடையப்பட்டவனே
ௐ லவணாம்போ⁴தி⁴தாரணாய நம: । 640உவர் நீர் கடலை தாண்டுவிப்பவனே
ௐ காகிலாய நம: ।மணிகண்டனே
ௐ காலபாஶக்⁴நாய நம: ।கால பாசத்தை நசித்தவனே
ௐ கர்மப³ந்த⁴விமோசகாய நம: ।கர்ம கட்டிலிருந்து விடுவிப்பவனே
ௐ மோசகாய நம: ।விடுவிப்பவனே
ௐ மோஹநிர்பி⁴ந்நாய நம: ।மோகத்தை உடைத்தெறிபவனே
ௐ ப⁴கா³ராத்⁴யாய நம: ।சூரியனால் ஆராதனை செய்யப்பட்டவனே
ௐ ப்³ருʼஹத்தநவே நம: ।பெரிய உடம்பு கொண்டவனே
ௐ அக்ஷயாய நம: ।அழியாதவனே
ௐ அக்ரூரவரதா³ய நம: ।அக்ரூரருக்கு வரமளித்தவனே
ௐ வக்ராக³மவிநாஶநாய நம: । 650தவறான வழியில் செல்வோரை அழிப்பவனே


    சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:


628. விரிஞ்ச: பிரம்மன்.
629. வரவக்ஷஸ: ஸ்ரேஷ்டமான மார்பு உடையவன்.
630. விக்ஞான கலிகாப்ருந்த : மிகவும் பிரகாசமான மலர் மொக்குகளைக் கொண்டவன்.
631. விஸ்வரூப ப்ரதர்சக: பெரிய உருவம் காண்பிப்பவன். விஸ்வரூப தரிசனம் கொடுப்பவன்.
632. டம்பக்ன : கர்விகளின் கர்வத்தை அடக்குபவன்.
633. தாமகோஷக்ன: தமம் என்ற வாத்தியத்தின் கோஷத்தினால் சத்ருக்களை கொல்லுபவன்.
634. தாஸபால : அண்டினவர்களை காப்பாற்றுபவன்.
635. தபௌஜஸ: க்ரீஷ்ம காலத்தில் பலம் உள்ளவன்.
636. த்ரோண கும்பா பிஷிக்த: துரோண முனிவரால் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றவன். (அல்லது) நான்கு படிநீர் கொள்ளக் கூடிய குடத்திற்கு 'த்ரோணம்' என்று பெயர். அப்படிப்பட்ட குடத்தினால் நீராடியவன்.
637. த்ரோஹிநாச: துரோகிகளை நாசம் செய்கிறவன்.
638. தபாதுர: சத்ருக்களை உஷ்ணத்தினால் பீடிப்பவன்.
639. மஹாதீரேந்த்ர வரத: மஹா தீரனான இந்திரனுக்கு வரம் அளித்தவன்.
640. மஹா சம்சார நாசன: பெரிய சம்ஸார பந்தத்தை அகற்றுபவன்.
641. லாகினி ஹாகினி லப்த : லாகினி ஹாகினி என்னும் தேவியரால் அடையப்பட்டவன்.
642. லவணாம் போதி தாரண: உப்புக் கடலைத் தாண்டியவன்.
643. காகின: காகினி என்ற சக்தி யோடு ஸ்வாதிஷ்டானத்தில் விளங்குபவன்.
644. காலபாசக்ன: காலனுடைய பாசத்தை த்வம்ஸம் செய்தவன்.
645. கர்ம பந்த விமோசக : முன்பிறவியில் செய்யப்பட்ட பாவங்களினால் ஏற்படும் தீமைகளைப் போக்கடிப்பவன்.
646. மோசக: விடுவிப்பவன்.
647. மோஹநிர்பன்ன: மோகமற்றவன்.
648. பகாராத்ய: சூரியனால் ரகசியமாகப் பூஜிக்கத் தகுந்தவன்.
649. ப்ருஹத்தனு: பெரிய சரீரம் உள்ளவன்.
650. அக்ஷய: நாசமற்றவன்.
651. அக்ருர வரத: குரூரம் அற்றவர்களுக்கு அல்லது அக்ரூரருக்கு வரமளித்தவன்.
652. வக்ராகம விநாசன: கெட்ட வழியில் செல்லுபவர்களை நாசம் செய்கிறவன்.

Thursday, April 23, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 12





வைரஸ் பரவிக் கொண்டே இருக்கு என்று சொல்லியபடி பத்திரிகையை மூடினார் கணேசன்.
ஏன் பாட்டி உங்க காலத்தில் எல்லாம் வைரஸ் பிரச்சனை எல்லாம் கிடையாதா பாட்டி?” என்று கேட்டான் பேரன்.
 இல்லாம என்னடா இருந்ததே! நா சின்ன பொண்ணா இருந்தப்ப பாத்திருக்கேன்.
அப்படியா அதுக்கு என்ன பேர் கொரோனாவா?” என்று கேட்டான் பேரன்.
கொரோனாவா? என்று சிரித்தாள் பாட்டி. “அதுக்கு அம்மைன்னு பேரு.. சின்னம்மை பெரியம்மைன்னு ரெண்டு உண்டு.”
சின்னம்மைன்னா ஸ்மால் பாக்ஸா பாட்டி? அப்படி எதோ என் காதில விழுந்திருக்கே?
இல்லடா. பெரியம்மைதான் ஸ்மால் பாக்ஸ்ன்னு அப்பறமா பேர் வெச்சா. “
அட! ஏன் பாட்டி?”
தெரிலடா”
அது எப்படி பரவும் பாட்டி? கொரோனா மாதிரி யாரும் தும்மி, இருமி…?
இல்லடா. அது காத்துலயே பரவும்
சரி, அதுக்கு என்ன வைத்தியம் பண்ணினாங்க?” 
ஏதோ நாட்டு வைத்தியர் வந்து மருந்து கொடுத்து பாத்திருக்கேன். ஆனா முக்கியமா வாசல்ல ஒரு வேப்பெல கொத்த தொங்க விட்டுடுவா. அத பாத்தா யாருமே வீட்டுக்குள்ள வர மாட்டா. ஒரு கரண்டி பருப்பு இருக்குமான்னு கடன் கேட்டுண்டு யாரும் வர மாட்டா
யாருக்கு அம்ம போட்டித்தோ அவாள தனியா ஒரு ரூமில இருக்கச்சொல்லிடுவா. அந்த ரூமுக்குள்ள வேற யாரும் போக்கூடாது. யாரானா ஒத்தரே ஒத்தர் மட்டும் அவாள கவனிச்சுப்பா. முன்னயே அம்ம போட்டி பொழச்சு இருந்தா அவாதான் கவனிச்சுப்பா. அவாளுக்கு திரும்பி அது வராதாம்.
அது வந்தா என்ன ஆகும் பாட்டி. இந்த கொரோனாக்கு மூச்சு கஷ்டம் வரதாமே? அந்த மாதிரி?
மொதல்ல ஜொரம் அடிக்கும். ரொம்பவே. ரெண்டு நா கழிச்சு நாக்கில மூஞ்சில சின்ன சின்னதா முத்து முத்தா கட்டி வரும்டா. அப்ப ஜொரம் கொஞ்சம் கம்மி ஆயிடும். கட்டி வர ஆரம்பிச்சா ஒரு நா க்குள்ள ஒடம்பு முழுக்க கட்டி கட்டியா வந்துடும். நாலு நாள்ள எல்லாம் ஒடஞ்சு புண்ணாயிடும். இந்த சமயம்தான் ரொம்ப ஜாக்கரதயா இருக்கணும். தொத்திக்கும். அப்பறம் புண்ணான எடம் கொப்புளிக்கும். பாக்க பட்டாணி பட்டாணியா இருக்கும். இப்படீஈஈ பத்து நா இருக்கும்அப்பறமாத்தான் அது காஞ்சு பொருக்கு தட்டும். அது ஒரு வாரம் இருக்கும்.
பொழச்சு கெடந்தா எல்லா கொப்பளமும் காய்ஞ்சு பொருக்கு தட்டினப்பிறகுதான் தண்ணி விடுவா.
தண்ணியா
ஆமாடா மஞ்சள கரைச்சு அந்த தலல ஒடம்பு முழுக்க படறா மாதிரி விடுவா.
அப்பறம்?
அதுக்கப்பறம்தான் அவா எல்லாம் வெளியே வரலாம். அம்ம போட்டி முடிஞ்சாச்சுன்னு அர்த்தம்
நீ சொல்லறத பாத்தா பயமா இருக்கே பாட்டி?
ஆமாடா. அஞ்சு பேர்ல ஒத்தர் ரெண்டு பேர் செத்துப்போயிடுவா.
ஒரு ஊர்ல அது இருக்கறதா தெரிஞ்சா யாருமே அந்த ஊருக்கு போ மாட்டா. ஒரு மாசம் போல யாருக்கும் போட்டலைன்னு தெரிய வந்த பெறகுதான் போவா.
கேள்விப்பட்டு இருக்கோமே தவிர அது பாத்தி எங்களுக்கு தெரியவே தெரியாதே அம்மா. இப்ப கொரோனாவுக்கும் இதையேத்தான் செய்யணும் போலிருக்கு.” என்றார் கணேசன்.




ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 25





ௐ ஸஹஸ்ராராம்பு³ஜாவாஸாய நம: ।ஸஹஸ்ரார தாமரையில் வசிப்பவனே
ௐ ஸவித்ரே நம: ।சூரியனே
ௐ ஸாமவாசகாய நம: ।சாமவேதம் ஓதுபவனே
ௐ முகுந்தா³ய நம: ।முகுந்தனே
ௐ கு³ணாதீதாய நம: ।குணங்களை கடந்தவனே
ௐ கு³ணபூஜ்யாய நம: ।(நல்ல) குணமுள்ளவர்களால் பூஜிக்கப்படுபவனே.
ௐ கு³ணாஶ்ரயாய நம: ।(நல்ல) குணமுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுபவனே.
ௐ த⁴ந்யாய நம: ।செல்வம் அளிப்பவனே/ மகிழ்ந்திருப்பவனே
ௐ த⁴நப்⁴ருʼதே நம: ।செல்வத்தை தாங்கி இருப்பவனே
ௐ தா³ஹாய நம: । 610எரிப்பவனே
ௐ த⁴நதா³நகராம்பு³ஜாய நம: ।செல்வத்தை அளிக்கும் தாமரை கரத்தினனே
ௐ மஹாஶயாய நம: ।பெருந்தன்மை உள்ளவனே
ௐ மஹாதீதாய நம: ।மஹத் தத்துவத்தை தாண்டியவனே
ௐ மாயாஹீநாய நம: ।மாயை இல்லாதவனே
ௐ மதா³ர்சிதாய நம: ।மகிழ்வுடன் பூஜிக்கப்பட்டவனே
ௐ மாட²ராய நம: ।பிரம்மமே
ௐ மோக்ஷப²லதா³ய நம: ।மோட்சத்தை பலனாக அளிப்பவனே
ௐ ஸத்³வைரிகுலநாஶநாய நம: ।சத்ருக்களின் குலத்தையே நாசம் செய்பவனே
ௐ பிங்க³லாய நம: ।பொன் நிறத்தோனே
ௐ பிஞ்ச²சூடா³ய நம: । 620நிலவை அணிந்தவனே
ௐ பிஶிதாஶபவித்ரகாய நம: ।மாமிசம் உண்ணுவோரை தூய்மையாக்குபவனே
ௐ பாயஸாந்நப்ரியாய நம: ।பாயச அன்னத்தில் ப்ரியம் வைத்தவனே
ௐ பர்வபக்ஷமாஸவிபா⁴ஜகாய நம: ।பர்வம், பட்சம், மாதம் ஆகியவற்றை பிரிக்கிறவனே
ௐ வஜ்ரபூ⁴ஷாய நம: ।வயிரம் பூண்டவனே
ௐ வஜ்ரகாயாய நம: ।வயிர உடல் கொண்டவனே


  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:


602. பரத்வாஜேன பூஜித: பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்டவன்.
603. ஸஹஸ்ராராம் புஜவாஸ: ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் வசிப்பவன்.
604. ஸவிதா : சூரியன். எல்லாவற்றையும் உண்டு பண்ணுபவன்.
605. ஸாம வாஸக: ஸாம வேதம் ஓதுபவன்.
606. முகுந்த முகுந்தன் என்னும் பெயர் உள்ளவன்.
607. குணாதீத குணங்களுக்கு அப்பாற்பட்டவன்.
608. குணபூஜ்ய: நல்ல குணமுள்ளவர்களால் பூஜிக்கத் தகுந்தவன்.
609. குணாச்ரய:குணவான்களால் ஆஸ்ரயிக்கப்பட்டவன்.
610. தன்ய: க்ருதார்த்தன்.
611. தனப்ருத்: தனங்களைக் கொண்டவன்.
612. தாஹ: தஹிக்கிறவன்.
613. தனதான கரம்புஜ: தனம் அளிக்கும் தாமரை போன்ற கைகளை உடையவன்.
614. மஹாசய: பெரிய அபிப்பிராயம் உள்ளவன். பெரியகையன்.
615. மஹாதீத:'மஹத்' தத்துவத்தைக் கடந்தவன்.
616. மாயாஹீன: மாயை இல்லாதவன்.
617. மதர்சித: சந்தோஷமாக பூஜிக்கப்பட்டவன்.
618. மாடர : பாரிபார்சுவன், சூரியன் அருகில் இருப்பவன். மடங்களில் எஜமானனாக விளங்குபவன்.
619. மோக்ஷபலத: முக்தி இன்பம் அளிப்பவன்.
620. மத்வைரி குல நாசன: மதம் கோண்ட சத்ரு குலத்தை நாசம் செய்கிறவன்.
621. பிங்கள : பிங்கள முனிவரின் வடிவன். பிங்கள வருஷத்துக்கு அதிதேவதை.
622. பிஞ்சசூட: மயில் இறகு சூடியவன்.
623. பிசிதாச பவித்ரஹ : மாமிசம் உண்ணுபவர்களை சுத்தி செய்கிறவன்.
624. பாயஸான்னப்ரிய: பாயஸ அன்னத்தில் பிரியம் உள்ளவன்.
625. பர்வ பக்ஷ மாஸ விபாஜக : பர்வம், பக்ஷம், மாதம் இவைகளைப் பிரிக்கிறவன்.
626. வஜ்ர பூஷ: வயிரம் பூண்டவன்.
627. வஜ்ர காய: வஜ்ரம் போன்ற தேகம் உடையவன்.


Wednesday, April 22, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 11




 சர்ரென்று மாடிப்படி கைப்பிடி மேல் சறுக்கியபடியே வந்து கீழே குதித்தான் கண்ணன்.
 உள்ளூர அவன் செய்கையை ரசித்து கொண்டு "என்னடா இது? என்ன சொன்னாலும் கேக்க மாட்டியே?" என்று கண்டித்தாள் பாட்டி.
இடி இடி என்று சிரித்தான் கண்ணன்.
ஏன் பாட்டி என்ன ஆச்சு?
ஒன்னும் இல்லடா. இப்போ அந்த கைப்பிடி மேல இருந்த தூசி அத்தனையும் ஒன் ட்ராயர்ல்ல" என்றாள் பாட்டி.
 பரவால்ல பாட்டி என்று சொன்னபடியே புத்தக அலமாரியை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த அப்பாவுக்கு நானும் உதவி பண்ணுகிறேன் என்று பேர் பண்ண போனான் பேரன்.
 "ஆமாடா இந்த வைரஸ் களேபரம் வந்தாலும் வந்துதுஇந்த அலமாரிகளுக்கு நல்ல காலம் பொறந்துடுத்து. இல்லாட்டா எவ்வளவுதான் சொன்னாலும் இதெல்லாம் தொட மாட்டயே?" என்றாள் பாட்டி.
 கொஞ்ச நேரத்தில்  கண்ணனின் கையிலிருந்த  நாலைந்து புத்தகங்கள் கைநழுவி கீழே விழுந்தன.
 அதிலிருந்து தூசி பறக்க ஹச்சென்று தும்மினான் கண்ணன்
 "டேய் எல்லார் மேலேயும் படறா மாதிரி தும்மக் கூடாது. துண்டு கர்சிப் எதுவும் இல்லைன்னா கையால பொத்திண்டு தும்மணம்" என்றாள் பாட்டி.
 "நான் என்ன பண்ணட்டும் பாட்டி அது சட்டுனு வந்துடுத்து" என்றான் கண்ணன்
 "அது தெரியாதா ஒனக்கு?" என்று சொல்லியபடியே உள்ளிருந்து வந்தாள் சித்ரா .
"தோ பார், இப்படி மூக்குத் தண்டு கீழ மேலுதட்ட பலமா எந்த வெரலாவது வெச்சு பலமா அழுத்தணும்" என்று செய்து காட்டினாள்.
 அப்ப தும்மல் வராதா அம்மா?
 "சட்டுனு அடங்கிடும் டா. அடுத்த தரம் செஞ்சு பாரு" என்றாள் சித்ரா.
 யாரும் கவனிக்காத போது ஒரு கர்சிப் மூலையை சுருட்டி மூக்குக்குள் விட்டு தும்மல் வர வைத்து அம்மா சொன்னதை சோதித்துப் பார்த்தால் கண்ணன். அட ஆமா! நின்னு போச்சு!
 ஆனால் இந்தத் தூசி தன் வேலையைக் காட்டிவிட்டது. சாயங்காலம் கண்ணன் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.
 "மூக்க உறிஞ்சாதே!" என்றாள் பாட்டி
 ன் பாட்டி? சளி வரதே, என்ன பண்ணட்டும்?
 அதை சிந்தணும்டா. சிந்தரா மாதிரி இடத்தில இல்லைன்னா கர்சிப் மாதிரி ஏதாவது வெச்சிண்டு அதை தொடச்சுக்கணும். அத உள்ளே இழுக்கக் கூடாது.
ஏன் பாட்டி இழுத்தா என்ன ஆயிடும்?
 நீ இழுத்தா இப்போ மூக்குல இருக்கிற பிரச்சனை ரொம்ப சுலபமா தொண்டைக்கு போயிடும். நான் சொன்ன மாதிரி செஞ்சா சில சமயம் பிரச்சனை தொண்டைக்குப் போகாமலே தப்பிச்சுக்கலாம்.
 ன் பாட்டி, திடீர்னு சளி வெளி வரது. கர்சிப் துண்டு எதுவும் பக்கத்துல இல்ல. சிந்தவும் முடியாது. என்ன பண்ணலாம்?
 "வேற வழி இல்ல டா, முழுங்க வேண்டியதுதான்எப்படியானாலும் அதை மூக்குள்ள இழுத்து காறித் துப்பக் கூடாது" என்றாள் பாட்டி
பாட்டி சரி வயத்துக்கு போனா அது ஒன்னும் பண்ணாதா?
 வயத்துல ஆசிட் இருக்குடா. அதனால அது சளியை கரச்சுடும். அதுல ஒரு வேளை ஏதாவது பாக்டீரியா எல்லாம் இருந்தா அதையும் ஆசிட் கொன்னுடும்" என்று விளக்கம் கொடுத்தாள் சித்ரா "ஓஹோ அப்படியா? சரி மா இனிமே அப்படியே பண்றேன் ஒரு கர்சிப் கொடு" என்று கேட்டான் கண்ணன்.