வைரஸ்
பரவிக் கொண்டே இருக்கு என்று
சொல்லியபடி பத்திரிகையை
மூடினார் கணேசன்.
“ ஏன்
பாட்டி உங்க காலத்தில் எல்லாம்
வைரஸ் பிரச்சனை எல்லாம்
கிடையாதா பாட்டி?”
என்று
கேட்டான் பேரன்.
இல்லாம
என்னடா இருந்ததே!
நா
சின்ன பொண்ணா இருந்தப்ப
பாத்திருக்கேன்.
“
அப்படியா
அதுக்கு என்ன பேர் கொரோனாவா?”
என்று
கேட்டான் பேரன்.
கொரோனாவா?
என்று
சிரித்தாள் பாட்டி.
“அதுக்கு
அம்மைன்னு பேரு..
சின்னம்மை
பெரியம்மைன்னு ரெண்டு உண்டு.”
சின்னம்மைன்னா
ஸ்மால் பாக்ஸா பாட்டி?
அப்படி
எதோ என் காதில விழுந்திருக்கே?
இல்லடா.
பெரியம்மைதான்
ஸ்மால் பாக்ஸ்ன்னு அப்பறமா
பேர் வெச்சா.
“
“அட!
ஏன்
பாட்டி?”
“தெரிலடா”
அது
எப்படி பரவும் பாட்டி?
கொரோனா
மாதிரி யாரும் தும்மி,
இருமி…?
இல்லடா.
அது
காத்துலயே பரவும்.
“சரி,
அதுக்கு
என்ன வைத்தியம் பண்ணினாங்க?”
ஏதோ
நாட்டு வைத்தியர் வந்து
மருந்து கொடுத்து பாத்திருக்கேன்.
ஆனா
முக்கியமா வாசல்ல ஒரு வேப்பெல
கொத்த தொங்க விட்டுடுவா.
அத
பாத்தா யாருமே வீட்டுக்குள்ள
வர மாட்டா.
ஒரு
கரண்டி பருப்பு இருக்குமான்னு
கடன் கேட்டுண்டு யாரும் வர
மாட்டா.
யாருக்கு
அம்ம போட்டித்தோ அவாள தனியா
ஒரு ரூமில இருக்கச்சொல்லிடுவா.
அந்த
ரூமுக்குள்ள வேற யாரும்
போக்கூடாது.
யாரானா
ஒத்தரே ஒத்தர் மட்டும் அவாள
கவனிச்சுப்பா.
முன்னயே
அம்ம போட்டி பொழச்சு இருந்தா
அவாதான் கவனிச்சுப்பா.
அவாளுக்கு
திரும்பி அது வராதாம்.
அது
வந்தா என்ன ஆகும் பாட்டி.
இந்த
கொரோனாக்கு மூச்சு கஷ்டம்
வரதாமே?
அந்த
மாதிரி?
மொதல்ல
ஜொரம் அடிக்கும்.
ரொம்பவே.
ரெண்டு
நா கழிச்சு நாக்கில மூஞ்சில
சின்ன சின்னதா முத்து முத்தா
கட்டி வரும்டா.
அப்ப
ஜொரம் கொஞ்சம் கம்மி ஆயிடும்.
கட்டி
வர ஆரம்பிச்சா ஒரு நா க்குள்ள
ஒடம்பு முழுக்க கட்டி கட்டியா
வந்துடும்.
நாலு
நாள்ள எல்லாம் ஒடஞ்சு
புண்ணாயிடும்.
இந்த
சமயம்தான் ரொம்ப ஜாக்கரதயா
இருக்கணும்.
தொத்திக்கும்.
அப்பறம்
புண்ணான எடம் கொப்புளிக்கும்.
பாக்க
பட்டாணி பட்டாணியா இருக்கும்.
இப்படீஈஈ
பத்து நா இருக்கும்.
அப்பறமாத்தான்
அது காஞ்சு பொருக்கு தட்டும்.
அது
ஒரு வாரம் இருக்கும்.
பொழச்சு
கெடந்தா எல்லா கொப்பளமும்
காய்ஞ்சு பொருக்கு தட்டினப்பிறகுதான்
தண்ணி விடுவா.
தண்ணியா?
ஆமாடா
மஞ்சள கரைச்சு அந்த தலல ஒடம்பு
முழுக்க படறா மாதிரி விடுவா.
அப்பறம்?
அதுக்கப்பறம்தான்
அவா எல்லாம் வெளியே வரலாம்.
அம்ம
போட்டி முடிஞ்சாச்சுன்னு
அர்த்தம்.
நீ
சொல்லறத பாத்தா பயமா இருக்கே
பாட்டி?
ஆமாடா.
அஞ்சு
பேர்ல ஒத்தர் ரெண்டு பேர்
செத்துப்போயிடுவா.
ஒரு
ஊர்ல அது இருக்கறதா தெரிஞ்சா
யாருமே அந்த ஊருக்கு போ மாட்டா.
ஒரு
மாசம் போல யாருக்கும் போட்டலைன்னு
தெரிய வந்த பெறகுதான் போவா.
“கேள்விப்பட்டு
இருக்கோமே தவிர அது பாத்தி
எங்களுக்கு தெரியவே தெரியாதே
அம்மா.
இப்ப
கொரோனாவுக்கும் இதையேத்தான்
செய்யணும் போலிருக்கு.”
என்றார்
கணேசன்.
No comments:
Post a Comment