Friday, March 28, 2008
வழி1-2
4. அப்படிப்பட்ட அறிவு எல்லாருக்கும் இல்லை. தனக்கு மீறின சக்தி இருக்குன்னு எல்லாரும் அனுபவத்தாலே ஒத்துக்கிறது சுலபம். அதுக்கு கடவுள்ன்னு ஒரு பேர் கொடுத்து வழி படறது சுலபம். கடவுளுக்கும் நமக்கும் இருக்கிற தொடர்பை மனசு சொல்றபடி நிர்ணயம் பண்ணுவது சுலபம். இப்படியே போகிற போது நாம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிடுவோம்.
ஆனா எனக்கு தெரிஞ்ச யாரும் இப்படி முன்னேறக்காணோமே?
கொஞ்சம் கம்மிதான். ஆனா இல்லாம இல்லை. நாம் பாக்கிறதும் இல்லை. இப்ப சாதாரணமா இருக்கிறது பக்தி இல்லை. பயம்/ ஆசை. முன்னே எல்லாம் கடவுள் தப்பு பண்ணா தண்டிப்பாரோ ங்கிற பயம் இருந்தது; இது கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. தப்பு பண்ணிட்டு கோவிலுக்கு போய் நிறைய பூஜை எல்லாம் பண்ணி பாவத்தை தொலைச்சுடலாம்னு நினைக்கிறாங்க. அதே போல ஆசை அதிகமாயிடுச்சு. எனக்கு நிறைய காசு வேணும், பதவி வேணும், குழந்தைக்கு ஸ்கூல்ல இடம் கிடைக்கணும், நிறைய மார்க் வாங்கணும் - இப்படியே ஆசை வளந்துகிட்டே போகுது.
இது தப்பா?
தப்பில்லை. ஆசைக்காகதான் முதல்ல கடவுள்கிட்ட வராங்க. இது கொஞ்ச நாள்லேயே ஆசைப்பட்டு இது வேணும் அது வேணும்னு கேக்காத பக்தி ஆகணும்.
இந்த பக்தி வகைவகையா இருக்கா?
இப்ப நான் சொல்றேன். நீங்க கொஞ்சம் நில்லுங்க! (எனக்கு கால் வலிக்குது :-)) பக்திய பத்தி விரிவா இப்ப பேச ஆரம்பிச்சா அது போய்கிட்டே இருக்கும். அதனால மத்தது பத்தி கொஞ்சம் பேசிட்டு திருப்பி வரலாம் சரிதானா?
அடுத்த வழி பாண்டிச்சேரி- ஈசிஆர் வழியா!
வழி-௨
அதுக்கு கர்ம யோகம் ன்னு பேர் வெச்சிருக்காங்க. கர்மான்னா வேற ஒண்ணுமில்லை- வேலை அவ்ளோதான். அதாவது ஒத்தர் செய்யற வேலை வழியாவே தன்னை புரிஞ்சுக்கிறது. இதுலேயும் கடவுள் வராரு. செய்யற வேலையை ஒழுங்கா செய்யுடா; உன்னோட சாமர்த்தியமெல்லாம் காட்டி முடிஞ்சவரை நல்லா செய்யனும். அப்புறம் அத கடவுளுக்கே அர்ப்பணம்ன்னு சொல்லி விட்டுடு. அப்படி செஞ்சா பலன் இப்படி இப்படிதான் இருக்கணும்ன்னு நினைக்க மாட்டே. சுருக்கமா இதுதான் கர்ம யோகம்.
ஓஹோ! கீதைல இததானே சொன்னதா சொல்றாங்க? “கர்மாவை செய். பலனை எதிர்பார்க்காதே”
அப்படி நிறைய பேர் சொல்றாங்க. ஆனா அப்படி கிருஷ்ணன் சொல்லவே இல்ல.
பின்னே?
அவன் சொன்னதெல்லாம் “ கர்மாவ செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கு. பலன் இப்படிதான் இருக்கணும்கிறதுல எப்பவுமே அதிகாரம் இல்ல.”
என்ன பெரிய வித்தியாசம்?
நாளன்னைக்கு பாக்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//பயம்/ ஆசை. முன்னே எல்லாம் கடவுள் தப்பு பண்ணா தண்டிப்பாரோ ங்கிற பயம் இருந்தது; இது கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. தப்பு பண்ணிட்டு கோவிலுக்கு போய் நிறைய பூஜை எல்லாம் பண்ணி பாவத்தை தொலைச்சுடலாம்னு நினைக்கிறாங்க.//
இங்கே கொஞ்சம் நான் முரண்படுகிறேன், கடவுளிடம் பக்தி இருக்கணுமே தவிர, "பய பக்தி" கூடாது என்பதே என் கருத்து. நமக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியும்னு எதுவுமே கேட்காமல் கடவுளை அணுகுவதே சிறந்ததுனு நினைக்கிறேன். சரியா?
//அவன் சொன்னதெல்லாம் “ கர்மாவ செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கு. பலன் இப்படிதான் இருக்கணும்கிறதுல எப்பவுமே அதிகாரம் இல்ல.”//
இது கட்டாயமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. காத்திருக்கேன்.
//கடவுளிடம் பக்தி இருக்கணுமே தவிர, "பய பக்தி" கூடாது என்பதே என் கருத்து. நமக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியும்னு எதுவுமே கேட்காமல் கடவுளை அணுகுவதே சிறந்ததுனு நினைக்கிறேன். சரியா?//
வாங்க அக்கா.
அது மக்களோட மனச பொறுத்தது.
எளிய ஜனங்கள் நேர்மையா இருந்ததுக்கு காரணம் ஒரு பயம் கூடிய பக்திதான்.
நல்லது செஞ்சா தெய்வம் சந்தோசப்படும். கெட்டது செஞ்சா தண்டிக்கும் கிற பயம் அவங்களை சரியா இருக்க வச்சது.
நீங்க சொல்லறது நாம கடவுள்கிட்ட ஏதாவது
வேணும்னு கேக்கலாமா கூடாதாங்கிறது. அது இப்போதைக்கு கேள்வி இல்லை. அத பத்தி பின்னால சொல்றேன்.
@கீதா அக்கா
இது கட்டாயமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. காத்திருக்கேன்.//
விவரமா கர்ம வழியை பத்தி பேசறப்போ வரும். நீங்க சொல்றா மாதிரி அவசியம் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியது அது.
ஆன்மீகம் for dummies...அட்டகாசமா இருக்கு தலைப்பு!
பக்தியில் ஆரம்பிச்சு, கர்மாவுக்குப் போய், திரும்பவும் பக்திக்கு திரும்பி வருமா பஸ்?
கர்ம யோகம் பற்றி தேவையான விளக்கம் - எல்லோரும் தவறாக புரிந்து கொள்வதை சரியாக சொல்லி இருக்கீங்க. கர்ம யோகம் பற்றி விளக்கமா அதிகம் பேசப்படுவதில்லையாதனால், இப்பதிவுகளின் அவசியம் கண்கூடு.
தொடர்ந்து பயணிக்கலாம்!
//கொஞ்ச நாள்லேயே ஆசைப்பட்டு இது வேணும் அது வேணும்னு கேக்காத பக்தி ஆகணும்.
//
சுருக்கமா சொல்லனும்னா ப்ரஸாத புத்தி வரனும். இல்லையா?
@அம்பி
// சுருக்கமா சொல்லனும்னா ப்ரஸாத புத்தி வரனும். இல்லையா?//
அதே அதே.
வேலை அதிகமா இருக்கிறப்போ உங்களையே எழுத சொல்லலாமான்னு நினைக்கிறேன்.
ஆட்டத்துக்கு ரெடியா?
@ ஜீவா. வாங்க ஜீவா,
//திரும்பவும் பக்திக்கு திரும்பி வருமா பஸ்//
நிச்சயம் வரும். இப்ப இருக்கிறது ஒரு முன்னுரைதான்.
மாத்தி மாத்தி பக்தி, கர்மம், ஞானம் பத்தி எழுதலாம்னு யோசனை. விவரங்கள், அவற்றில் நான் புரிந்து கொண்டவற்றின் கண்ணோட்டம் எல்லாம் தனித்தனி பதிவுகளாக வரும்.
இது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
//தொடர்ந்து பயணிக்கலாம்!//
நன்னி!
பிகு.
ஒன்னுமில்லை எ.பி. யாரான வி.எ விட்டுக்கிட்டு சுட்டறதுக்கு முந்தி நானே தூக்கிட்டேன்.
//மாத்தி மாத்தி பக்தி, கர்மம், ஞானம் பத்தி எழுதலாம்னு யோசனை//
ஒன்றுக்கு அப்புறம் இன்னொன்று என்பது ஒரு natural flow-வில் இருந்தால் நன்றாக இருக்கும். (with a connection)
@ ஜீவா
வேற வேறயா சொன்னாலும் பல இடங்கள்ல அவை ஒண்ணை ஒண்ணு தொடும். அவரவருக்கு தகுந்த வழியை தேர்ந்தெடுத்து படியுங்கன்னு சொல்லபோறேன். அப்ப ஞான மார்கம் னு ஒத்தர் முடிவு பண்ணா அவர் மத்த இழையெல்லாம் முடியறவரை காத்து இருக்கணும்.அதுக்காக மூணுமே தனித்தனி லேபிள்ல வந்தா சரியா இருக்கும். இப்ப 2 நாட்களுக்கு ஒரு பதிவு போடுகிறேன். அப்படி பாத்தா 6 நாட்களுக்கு ஒரு பதிவா? காணாம போயிடுவாங்களோ? மத்தவங்களும் யோசனை சொல்லட்டும், முடிவு பண்ணுகிறேன்.
யோசனை சொன்னதுக்கு நன்றி!
திவா
இப்ப தான் விட்டுப் போன பஸ்ஸை ஒவ்வொன்னாப் பிடிச்சிக்கிட்டு வாரேன்!
இந்த வழி தொடர் ரொம்பவே நல்லா இருக்கு! நடுநடுவில் கதையும் சொல்லி பஸ்ஸை ஓட்டுங்க! சூப்பரா இருக்கும்.
//இங்கே கொஞ்சம் நான் முரண்படுகிறேன், கடவுளிடம் பக்தி இருக்கணுமே தவிர, "பய பக்தி" கூடாது என்பதே என் கருத்து//
கீதாம்மாவோடு உடன்படுகிறேன்.
விளக்கேற்றும் போது பயமென்னும் பரபரப்பு முதலில் தோன்றலாம்!
ஆனால் பக்தியின் திரி தூண்டத் தூண்ட, பயமென்னும் பரபரப்பு அடங்கி, பக்தியென்னும் தீபம் பிரகாசிக்கும்!
@KRS
நல்வரவு. உங்களுக்கு இருக்கற விசிறிகள் எண்ணிக்கை பாத்தா சீக்கிரமே இங்க வந்துட்டீங்க போலிருக்கு. இந்த பஸ் எப்ப வேணா ஆளை ஏத்திக்கும், கவலை இல்லை.
கதைதானே, நிறையவே வாய்ப்பு இருக்கு. முன்னோட்டம் முடிஞ்ச பிறகு அதுவும் வரும்.
வந்ததுக்கு நன்னி. மீண்டும் வாங்க!
Post a Comment