Tuesday, March 25, 2008
வழி 1
இப்ப சிதம்பரத்திலேந்து சென்னை போகணும்.
சுலபமா பாண்டிச்சேரி போய் ஈசிஆர் வழியா போகலாம்.
பாண்டிச்சேரி பெர்மிட் இல்லாத டாக்ஸியா? கடலூர், பண்ணுருட்டி போய் திண்டிவனம் வழியா போகலாம்.
அல்லது பாண்டிச்சேரி போய் திண்டிவனம் போய் போகலாம்.
எப்படி போனாலும் சேருகிற இடம் சென்னைதான்.
அத போல இந்த எல்லா வழிகளும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்.
1. பக்தி வழி:
நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவழிதான் இது. நம்மை மீறிய, எல்லாம் வல்ல சக்தியை கடவுள் ன்னு ஒரு பெயர் கொடுத்து சொல்றோம். அவருக்கு எந்த பேர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுக்குன்னு ஒரு தனி வழி பாட்டு முறை இருக்கலாம். அந்த கடவுளுக்கு ஒரு புராண கதை இருக்கலாம். நெறைய கோவில்கள் இருக்கலாம். நடைமுறைகள், திருவிழாக்கள், பூஜைகள், தேரோட்டங்கள் ...பெரிய கடல் இது!
நில்லுங்க! நில்லுங்க!
என்னங்க?
நீங்க என்ன சொல்லி ஆரம்பிச்சீங்க? நம்மை நாமே அறிஞ்சுக்கிறதுதானே?
ஆமா.
“நம்மை நாமே புரிஞ்சுக்கனுமா இல்லையா? அதுதாங்க ஆன்மீகம்.” அப்படின்னுதானே ஆரம்பிச்சீங்க?
ஆமான்யா ஆமா!
பின்ன இப்ப கடவுள் அப்படின்னு ஆரம்பிச்சா என்ன அர்த்தம்?
நாம்தான் கடவுள்னு அர்த்தம்!
என்னது?
ஆமாம். நாமும் கடவுளும் ஒண்ணுதான். நாம பிரம்மத்தின் வேற வேற வெளிப்பாடுதான்.
தலைய சுத்துதே!
அதுக்குத்தான் லெவல் ஜம்ப் பண்ணக்கூடாதுங்கிறது. நீங்க சொல்லவச்சுட்டீங்க.
நீங்க சென்னை போகணும்னு சொன்னீங்க. சரின்னு நான் பாண்டிச்சேரி பக்கம் வண்டிய திருப்பறேன். இது ஒரு வழிங்க. இது எப்படி இருக்குன்னு பாருங்க. பிடிச்சா வச்சுப்போம். இல்லாட்டா... அடுத்த வழி சரி படுதான்னு பாப்போம்.
பிரம்மம் என்கிற புரிதல் மட்டம் வேற. அது ஞான யோகம். மனிதன் கடவுள் ங்கிற மட்டம் வேற. அது பக்தியோகம். ஒண்ணாங்கிளாஸ் படிச்சுட்டுதான் ரெண்டாங்கிளாஸ் போகணும். கோவில்ல, ஒரு சிலைல, படத்துல, கடவுளை பாக்க ஆரம்பிச்சு மெதுவா முன்னேறி எல்லா உயிர்களிலும் கடவுளை பாக்க ஆரம்பிச்சு பின்னால எல்லாத்துலேயும் பாக்க ஆரம்பிச்சா சரியான முன்னேற்றம் னு சொல்லலாம். இதுவே மேலே மேலே போய் நாமும் எல்லாமும் ஒண்ணுன்னு கொண்டுவிடும்.
சரி அப்படினா ஏன் பக்தி யோகம்? எல்லாரும் ஞானத்துக்கு போனா என்ன?
Labels:
நுழைவாயில்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இப்பதான் பார்க்கிறேன் திவா, நிதானமா வந்து படிக்கணும்...
நல்வரவு ஜீவா! நிதானமாவே படிச்சு பின்னூட்டம் போடுங்க.
இப்படி எழுதினால் நல்லாத் தான் இருக்கு, புரியறாப்பலேயும் இருக்கு!
வாங்க தி.ரா.ச!
ஊக்கு விக்கறதுக்கு நன்றி!
//இந்த எல்லா வழிகளும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்.
//
சூப்பர், அதாவது சைவம் என்ன வைணவம் என்ன, கெளமாரம், சாக்தம்னு எதை பின்பற்றினாலும் அடைய போவது பிரம்மம்னு சொல்றீங்க இல்லையா? :)))
First time coming here. :)
@ அம்பி
இதே ஜன்மத்துல இல்லைனாலும் பாதைல இறங்கியாச்சுன்னா போற இடம் ஒண்ணேதான் - பிரம்மானுபவம். பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம், ஞானயோகம் இதுல எதுல போனாலும் போகிற இடம் ஒண்ணே. முக்கியமா இதுதான் சொல்ல வந்தது.
welcome ambi, keep coming here!
Post a Comment