2. நான் யார்?
இந்த கேள்விக்கு விடை காண முயற்சி பண்ணுவதே ஆன்மீகம்.
நான் இந்த உடம்புதானேங்க, இதென்ன கேள்வி அப்படீங்கிறீங்களா?
காலம் காலமாக நம் பேச்சு பழக்கத்தில் இருக்கிறது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். சாதாரணமாக என்ன சொல்லுறோம்? இது என் பென்சில் ,இது என் புத்தகம். அப்போ பென்சிலும் புத்தகமும் நான் இல்லை. நான் வேற என் பென்சில்/ புத்தகம் வேற. அதே போல என் கால் என் கை என்கிறோம். என் உடம்பு வலிக்குது என்கிறோம். அப்ப நாம் வேறு நம் உடம்பு வேறதானே?
ஒருவர் இறந்து போகிறார். நாம துக்க படுகிறோம். அவர் இருந்தார் இப்ப இல்லை என்கிறோம். ஆனால் அந்த உடம்பு இங்கேதானே இருக்கு? உயிர் பிரிஞ்சு போளதால “அவர்” போயிட்டார் என்கிறோம். அப்ப “அவர்” அந்த உடம்பு இல்லை. போன உயிர் என்றது எது? அது எங்கே போச்சு?
ஒரு வேளை மனசுதான் நாமா? “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று சில அறிஞர்கள் சொல்றாங்க. மனசு புத்தி என்று ரெண்டாக சொன்னாலும் ரெண்டும் ஒரே விஷயத்தின் வேறு வேறு பக்கம்தான். உணர்வுகள் மேலோங்கி சலனப்பட்டால் அது மனசு. சலனமில்லாமல் செயல்படுவது புத்தி.
நாம் தூங்கும் போது என்ன ஆகிறது. மனதின் செயல் என்ன?
தூக்கத்தில ரெண்டு நிலைகள். ஒன்று கனவு காண்கிற நிலை. இதை சொப்னம் என்கிறோம். இதில் மனசு ஏதேதோ நினைக்கிறது. நனவில் நடக்க முடியாத பல விஷயங்களை நடப்பதாக நினக்கிறோம். அப்போதைக்கு அது நிரம்பவே நிஜமாகவே தோணுது. கனவுதான் என்ற உணர்வோட யாரும் கனவு காணலை. அப்படி ஒரு வேளை உணர்ந்தா அது ஒரு தற்காலிகமான விழிப்புதான். காண்கிற விஷயம் சலனமானதால புத்தியும் இல்ல.
ரெண்டாவது ஆழ்ந்த தூக்கம். இதுல கனவு இல்ல. அதனால மனசும் செயல்படல. காண்கிற, அறிகிற விஷயம் இல்ல. அதனால புத்தியும் இல்ல.
இந்த சமயம் நாம இருக்கிறோமோ இல்லையோ? நாம் இல்லைன்னா எங்கே போனோம்? எங்கிருந்து திரும்பி வந்தோம்?
தூங்கி எழுந்து “ஒண்ணுமே தெரியாம சுகமா தூங்கினேன்” அப்படின்னு சொல்றோமே அந்த சுகம் அனுபவிச்சது யார்?
இருக்கோம்ன்னா மனசு நாம இல்ல. அப்ப நாம் யார்?
உடம்பு மனசு/புத்தி அல்லாத ஏதோதான்.
இந்த மனசு அல்லாத புத்தி அல்லாத உடம்பு அல்லாத நம்மை தெரிஞ்சுகிறது எப்படி?
அதற்கு நம் பெரியவங்க ஒரு நாலு வழி போட்டு கொடுத்துருக்காங்க.
ஏன் நாலு இருக்கணும்னு கேட்டா மனுஷன் குணங்கள் வேற வேற. புத்தி கூர்மை வேற வேற. சிலரால ரொம்ப யோசிக்க முடியாது. சிலரால சும்மா உக்காந்து ஆராய்ச்சி செய்ய முடியாது. நிறைய பேரால மனச அடக்க முடியாது. மூச்சு பிடிக்க முடியாது.
அதனால நாலு வழிகள்.
நமக்கு தகுந்தா போல ஒரு வழியை தேர்ந்து எடுத்துக்கலாம்.
எல்லாமே கடேசில போற இடம் ஒண்ணுதான். அது எப்படின்னா.....
8 comments:
நல்ல ஆரம்பம். கலக்குங்க திவா!
ஆசீர்வாதத்துக்கு நன்றி மௌலி சார்!
மௌலி சொல்லியது போல,
தீவிர ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறீர்கள். மேலும் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
வாங்க வல்லி அக்கா! உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இறைவன் அருள் புரியட்டும்!
// உணர்வுகள் மேலோங்கி சலனப்பட்டால் அது மனசு. சலனமில்லாமல் செயல்படுவது புத்தி.//
சலனமில்லாம் செயல்படுவது எப்போனு தெரியலை!
//ஆசீர்வாதத்துக்கு நன்றி மௌலி சார்!//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., மெளலிக்கு நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க சார்! :P
அதுக்கு வழிகளும் பின்னால வரும் கீதா அக்கா. கொஞ்சம் பொறுங்க.
சூப்பர் திவா கலக்குங்க!
Post a Comment