Pages

Friday, January 20, 2012

காமம் -1


காமம்

முன்னே கோபத்தைப்பத்தி பார்த்தோம். இப்போ இந்த கோபத்துக்கு காரணமான காமத்தை பார்க்கலாம்.

அதெப்படி கோபத்துக்கு காமம் காரணம் ன்னா,

ஒரு பொருள் வேண்டும் ன்னு ஆசை படுகிறோம். அது கிடைக்கவில்லை. இது காமம்.

சிலது இப்படி இப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறோம். அதுவும் ஒரு ஆசை - காமம். அது அப்படி நடக்காம போனால் நமக்கு 'ப்ரஸ்ட்ரேஷன்' - நிராசை - உண்டாகிறது. அதற்கு காரணமா இருந்த நபர் மேலே கோபம் வருகிறது. ஆரம்பநிலையிலேயே காமம் இல்லைன்னா நடக்காத விஷயத்தால மன பாதிப்பும் வராது; கோபமும் வராது.

காமம் ஏன் வருகிறது?

இதுக்கு நம்மோட வாசனைகளே காரணம். முன்னே - அது இந்த பிறவியோ முன்னால கிடைச்ச பிறவியோ- நம்மில ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இது நம்மோட ஆழ் மனதில இருக்கும். இவை இப்ப நம்மோட இச்சைகளை தூண்டுகின்றன. அனுபவிக்காத ஒரு விஷயம் நமக்கு வேணும்ன்னு தோணாதில்லையா? முன்னே பயணம் செய்த போது பசித்தது. இன்ன இடத்திலே சாப்பிட்டோம். அங்கே கேசரி ரொம்ப நல்லா இருந்தது. இது நினைவிலே இருக்கும். மறு முறை அந்த பக்கம் போகும்போது பசிக்கிறதோ இல்லையோ முன்னே சாப்பிட்ட இடத்துக்கு திருப்பியும் போய் கேசரி வாங்கி சாப்பிடத்தோணும். பசிக்கு சாப்பிடணும்ன்னு தோணுவது இயற்கை உந்துதல். அது உயிர் வாழ வேண்டி இருக்கு. உயிரை தக்க வைச்சுக்கொள்ளணும் என்கிற ஆசை என்றாலும் அதை காமம்ன்னு சொல்ல முடியாது. பசிக்கும்போது வாங்கி சாப்பிடுவதை காமம்ன்னு சொல்ல முடியாட்டாலும் பசி இல்லாதப்ப இப்படி வாங்கி சாப்பிடறது காமம் இல்லாம வேறென்ன?

பசிக்கு சாப்பிடுவது என்பது நிச்சய தேவையாக போயிடுத்து. அதுக்கு மேலே அந்த தேவையை வளர விடக்கூடாது. இதைத்தான் ஆங்கிலத்துல சீலிங் ஆன் டிசயர் (ceiling on desire) என்கிறாங்க. இருக்க ஒரு இடம், உடுக்க ஒரு துணி, சாப்பாடு இவை மட்டுமே அடிப்படை தேவைகள். இவையே எப்படி இருக்கலாம்ன்னும் இருக்கு. மழைக்கு பாதுகாப்பான வீடா இருந்தா போதும். மாடி வீடு, கான்க்ரீட் வீடா இருக்கணும்ன்னு இல்லை. கிழியாததா ஒரு கீழ் துணி, ஒரு மேல் துணி இருந்தா போதும். மாற்று உடையா - இருக்கறதை துவைத்து காய வைத்து போட - இன்னொரு செட் இருக்கலாம்.

உடம்பை கெடுக்காத ஒரு அல்லது இரண்டு வேளை சாப்பாடே போதும். ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி; இரு வேளை சாப்பிடுகிறவன் போகி; மூணு வேளை சாப்பிடுகிறவன் ரோகி ன்னு சொல்கிறாங்க!

ஆனால் சாதாரணமா நாம் இதுக்கு மேஏஏஎலேயே எல்லாம் வெச்சு இருக்கோம். குடிசை வீடு இருந்தா ஓட்டு வீடு வேணும்ன்னு ஆசை; ஓட்டு வீட்டிலே இருந்தா கான்க்ரீட் கூரை வீடு வேணும்ன்னு ஆசை; அது இருந்தா மாடி வீடா இருக்கலாமேன்னு தோணும். இப்படி இல்லாததுக்கு ஆசை படுகிறவங்களே அதிகம். இருக்கிறதை வைத்துக்கொண்டு திருப்தி அடைகிறவங்க வெகு சில பாக்கியசாலிகளே. ஒவ்வொருத்தர் வாட்ரோபையும் பாருங்க. எத்தனை ட்ரெஸ் இருக்கு? வீட்டு சாப்பாடு போர் அடிக்கிறது. ஓட்டலுக்கு போய் வித விதமா சாப்பிடலாம்ன்னு நினைக்கிறவங்க எத்தனை பேர்?

ஒரு வருஷம் முன் ஒத்தர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அது குறிப்பாக இளம் பெண்களை இலக்காக கொண்டது....

தொடரும்....

1 comment:

sury siva said...

// வீட்டு சாப்பாடு போர் அடிக்கிறது. ஓட்டலுக்கு போய் வித விதமா சாப்பிடலாம்ன்னு நினைக்கிறவங்க எத்தனை பேர்?//

சத்யமான வார்த்தை. தினப்படி சாப்பிடற சாப்பாடே ஒடம்பு ஒத்துக்காத வயசாயிடுத்து அப்படி இருக்கும்பொழுது
துளசி அம்மா வலைக்குப்போய், அங்கே பருப்பு உசிலி பண்ரதைப் பாத்து, அதைப்பண்ணுடி கிழவி அப்படின்னு
ஆத்துக்காரியை தொந்தரவு பண்ணி, கோபபட்டு, அந்த கோபம் தாங்கம் முடியாம அவளும் அதப்பண்ணி, அதை ஒரு மொக்கு மொக்கி விட்டு, அதனாலெ ஏகப்பட்ட பிரச்னை ஏற்பட்டாலும், அடுத்து பலாப்பழம் பாயசம் அப்படின்னு போட்டிருக்கே, நம்ப தஞ்சாவூர் ஆத்துலே பலாப்பழம் காய்ச்சிருக்கே
அதுலே பாயசம் பண்னினா எத்தனை நன்னா இருக்கும் அப்ப்டின்னு மனசு குதிக்கிறதே !!

அது தான் காமம். ..

சுப்பு ரத்தினம்.
http;//vazhvuneri.blogspot.com