Pages

Thursday, February 21, 2013

என் உலகில் -2


யார் அந்த சிலர்ன்னு கேக்கறீங்களா? பாவப்பட்ட துணைவிதான். பையன் வளர்ந்தாச்சு. அவன் மேலே கோபப்பட முடியாதுன்னு விட்டுட்டேன். தோளுக்கு மேலே வளந்தா தோழன் ன்னு ஒரு சொலவடை இருக்கு இல்லே? கோபப்பட்டுக்கரா மாதிரி சிஷ்யர்கள் இல்லை. எஞ்சியது துணைவிதானே?
ஏன் இவங்க மட்டும்ன்னா சாஸ்திரம் அப்படி சொல்லுது. இவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை ஒண்ணு இல்லறத்தானுக்கு இருக்கு. செய்யாம இருக்கிறது பாபம். இதுவே பல பிரச்சினைகளுக்கும் இன்னைக்கும் காரணம்!

இன்னைக்கும் பலர் இணையத்தில பொங்கல் வெச்சுகிட்டே இருக்காங்க. இதை அனேகமா தள்ளிடுவேன். ஒரு வேளை படிச்சாலும் விவாதத்தில இறங்கறதில்லை. எனக்குத்தெரிஞ்சு யாரும் விவாதங்களுக்கு அப்புறம் கூட தன் கருத்துக்களை மாத்திக்கொண்டதில்லை.
எல்லா சமாசாரத்துக்கும் பகவான் ஒவ்வொத்தரை அனுப்பி இருக்கான். அவங்க அவங்க வேலையை செய்யட்டும். நமக்கு சம்பந்தமில்லைன்னு தோன்றதுனால் நான் கண்டுக்கிறதில்லை. இப்போ ஒத்தரை ஒரு வன்முறைக்காக திட்டறாங்கன்னா கர்மா தியரி படி அது இந்த ஜன்மத்தில திருப்பி செய்யப்படுகிற வினை. அதுல சொல்ல என்ன இருக்கு?
நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அதை வேடிக்கை மட்டுமே பார்கிறேன். அதுல என் பங்கு ஏதாவது இருக்கும்ன்னு தோணினால் மட்டுமே எதுவும் செய்கிறேன். முக்காலே மூணு வீசம் ஒண்ணுமில்லைதான்!

உலகத்தில இருக்கிற மனுஷர்கள் மட்டுமே எனக்கு பிரச்சினை செய்கிறவங்களா இருக்காங்க. பிராணிகள் மேலே அன்பே ஏற்படுது. பாம்பு வந்தால் கூட பதட்டமில்லாம வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன். பல சமயம் தோட்டத்தில பார்க்கிற பாம்பு பத்தி யாருக்கும் சொல்லாமலே இருப்பேன். அது பாட்டுக்கு அதோட வேலையை பாத்துட்டு போயிடும்! பாத் ரூமில் பூரான் ப்ரென்ட் ஒத்தர் அப்பப்ப வருவார். குழந்தைகள் வீட்டில் இல்லை என்றால் அவருக்கு ஒரு பிரச்சினையும் தருவதில்லை. இருந்தாலும் அப்பப்போது வேலைக்காரி கண்ணில் பட்டு போய் சேர்ந்து விடுவார்கள். வருத்தமாக இருக்கும்! 

தோட்டத்துக்கு வரும் பறவைகளுக்கு குறைச்சலில்லை. எப்போதுமே இருக்கும் காக்கா தவிர குருவிகள், பான்ட் ஹெரான், கிளிகள், புறாக்கள், குயில், மைனாக்கள் ன்னு எதேனும் இருந்து கொண்டே இருக்கும். இவற்றோட சப்தங்கள் பாதிக்கிறதே இல்லை. ஆனால் வீட்டுக்கு வருகிற மனிதர்கள் பேச்சு அப்படியில்லை! வர வர மனிதர்கள் என்றாலே அலர்ஜி ஆகிவிடும் போல இருக்கு! குழந்தைகள் தவிர..... அஞ்சு வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக்கொள்கின்றன! எங்க உலகம் தனி உலகம்!

4 comments:

Geetha Sambasivam said...

பான்ட் ஹெரான், //

படம் போடுங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

உள்ளத்தில் குழந்தை உள்ளமும் வந்து விட்டால் மனிதருக்குள் இந்தக் கண்ணோட்டம் வராது...

Kavinaya said...

//வர வர மனிதர்கள் என்றாலே அலர்ஜி ஆகிவிடும் போல இருக்கு! குழந்தைகள் தவிர..... அஞ்சு வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக்கொள்கின்றன! எங்க உலகம் தனி உலகம்!//

அதே மனநிலையில்தான் இருக்கேன். மனுஷங்க யாரோடயும் பேசாம இருந்தா பிரச்சனையே இல்லை. ஆனா உலகமும் கடமைகளும் ஒவ்வொண்ணுலயும் எப்படியாவது இழுத்து விட்டுடுது :(

திவாண்ணா said...

நன்றி தனபாலன்!
கவி, :-))))) வேற வழியில்லை. நம் கர்மாவை தீர்க்க இவங்களோட இன்டர் ஆக்ட் பண்ணித்தான் ஆகணும்!