என்
உலகில்....
ஒரு
உலகம் இருக்கா? இல்லை
நிறைய உலகங்கள் இருக்கா?
நிறையவே
இருக்கு! இருக்கிற
வஸ்து ஒண்ணுதான்; ஆனாலும்
பார்க்கிறவர் பார்வைக்கு
தக்கபடி அது பல ரூபங்களாக
இருக்கு. அதனால
பல உலகங்கள் இருக்கணும்.
ஒவ்வொரு
ஜீவனுக்கும் தக்கபடி ஒவ்வொரு
உலகம். உலகத்தில்
மனித ஜாதியில் மட்டுமே ஏழு
பில்லியன் ஜீவர்கள்.
மத்த இனங்களை
எடுத்துக்கொண்டா நிறையவே
அதிகமாயிடும்!
அவரவர்
பார்வைப்படி உலகங்கள் இருக்கு.
கூகுள் சர்கிள்
மாதிரி, பலர்
அதை பெரிசு பண்ணிக்கிறோம்.
சிலர் சின்னது
செய்து கொள்வாங்க. நம்ம
செயல்கள் இந்த வட்டத்தைத்தான்
பெரும்பாலும் பாதிக்குது.
நான் தொடர்பில
இருக்கும் நபர்களை என் செயல்கள்
உடனடியா பாதிக்குது.
அதுக்கு அடுத்த
படி இருக்கிற வட்டத்தில்
குறைவா பாதிக்கும்.
அதுக்கு அடுத்து
இன்னும் குறைவாக.
இருந்தாலும்
உலகத்தின் எதோ ஒரு மூலையிலிருந்து
முகம் தெரியாத நபர் 'குருஜி
' ன்னு
அஞ்சல் எழுதறப்ப பயமாவே
இருக்கு!
என்
உலகம் எப்படி இருக்கு?
இதுக்கு ஒரு
முன் யோசனையும் இல்லாம் ஏழுத
ஆரம்பிச்சு இருக்கேன்.
என்ன எழுதப்போறேன்னு
தெரியாது. ஏனோ
இன்னைக்கு இப்படி எழுதி என்
குறைகள் நிறைகள் என்னன்னு
ஆராய ஒரு எண்ணம் தோன்றியதன்
கோளாறு, இந்த
கோளாறான சிந்தைனைகளும்
வந்தாச்சு.
காலை
எழுந்திருக்கிறேன். பல
நாட்கள் நாலு மணிக்கே தூக்கம்
கலைகிறது. அப்புறமா
போராட்டம்தான். எப்படியும்
எழுந்து பாத்ரூம் போன பிறகு,
திருப்பிப்படுக்கவே
மனசு யோசிக்கும். பிடிவாதமா
'வா ஜபம்
பண்ணலாம்ன்னு' இழுக்க
வேண்டி இருக்கு! முக்காவாசி
தூக்கம் தோத்துடும்.
சில நாட்கள்
படுக்க நேரம் ஆனாலோ அல்லது
உடல் நலம் குறைவா இருந்தாலோ
தூக்கம் ஜெயிச்சுடும்.
கொஞ்ச நாளா
ஜபம் கொஞ்சம் ஒரு மாதிரி
சுலபமா இருக்கு! ஒன்னும்
செய்யாம வேடிக்கை பார்க்க
வேண்டியதுதான்.
மனசை
பார்க்க ஆரம்பிச்சா அது
படிப்படியா கொய்யட் ஆகிடுது.
ஜபம் தானா மேலே
வந்து அது பாட்டுக்கு ஓடுது.
அதையே கவனிக்கிற
வரை ஒன்னும் பிரச்சினை இல்லை.
ஓடிக்கொண்டே
இருக்கும். ஆனா
பிரச்சினையே கவனிக்கிறதுதான்!
கவனிப்பு
கொஞ்சம் சிதறினாலும் ஏதேனும்
எண்ணங்கள் தலைதூக்கிக் கொண்டு
அது பாட்டுக்கு ஓட ஆரம்பிக்கும்.
எப்ப
பிச்சிக்கொண்டதுன்னு தெரியாமலே
பிச்சிக்கும். அதனால
அதிக கவனம் வேண்டி இருக்கு.
மனசு...இந்த
மனசுதானே பல அர்த்தங்களுக்கு
அனர்த்தங்களுக்கும் காரணமா
இருக்கு?
குருவருளால
அது கொஞ்சம் பண் பட்டு இருக்கு.
யாரை பாத்தாலும்
ஒரு கம்பெஷந்தான் இருக்கு!
மலினமான
எண்ணங்கள் வரதில்லை.
பொதுவா யார்
மேலேயும் கோபம் வரதில்லை.
சமீபத்தில
மொபைல் போனை திருட்டு கொடுத்த
பின்னும் திருடின நபர் மேல
எவ்வளோ சாமர்த்யம்ன்னு
ஒரு வியப்பு இருந்ததே தவிர
கோபம் வரலை. இது
எனக்கே ஆச்சரியமாத்தான்
இருக்கு! இந்த
காமமும் குரோதமும் போனதுக்கு
இறைவனுக்குத்தான் நன்றி
சொல்லணும்.
காமமும்
குரோதமும் போன பின் உலகே சுகமா
இருக்கு. சிலர்கிட்ட
இன்னும் அப்பப்ப கோபம் வரத்தான்
செய்யுது., ஆனா
ஒரு நிமிஷத்துக்குள்ள காணாமல்
போயிடும்! அப்புறம்
இவனா கோபப்பட்டான்ன்னு
வியக்கிற மாதிரி இருக்கும்!
யார் அந்த
சிலர்ன்னு கேக்கறீங்களா? :-))))
8 comments:
உங்கள் உலகம் யதார்த்தமான பண்பட்டுக்கொண்டு இருக்கிற உலகம்..
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்
மனசை பார்க்க ஆரம்பிச்சா அது படிப்படியா கொய்யட் ஆகிடுது. //
கொடுத்து வைச்சிருக்கீங்க. வாழ்த்துகள்.
//சிலர்கிட்ட இன்னும் அப்பப்ப கோபம் வரத்தான் செய்யுது., ஆனா ஒரு நிமிஷத்துக்குள்ள காணாமல் போயிடும்! அப்புறம் இவனா கோபப்பட்டான்ன்னு வியக்கிற மாதிரி இருக்கும்! யார் அந்த சிலர்ன்னு கேக்கறீங்களா? :-))))//
நான் இல்லையே இந்த லிஸ்ட்லே! :)))))
நன்றி சிவா!
அக்கா எல்லாருக்குமே அது கொயட் ஆகும். பிரச்சினையே அதை தொடர்ந்து வைத்துக்கொள்ளரதுதான்.
அக்கா இல்லாம வேறு யாரு லிஸ்ட்ல இருக்க முடியும்? :P:P:P
அடிக்க, அடக்க துடங்கினா இன்னும் எரியறத பாத்து யோசிச்சேன். நமக்கு இந்த பீலிங் , எண்ணம் வரதுன்னு பிரஞை யோட ஓவ்வொரு நடப்பையும் accept பண்ணிண்டு அதன் போக்கிலே விடறச்சே ஏதோ சுவற்றை ஊடுருவி போறமாதிரி மாதிரி இருக்கு.weird ai ?உங்களுக்கு பயமே இல்லைனா எனக்கு பயத்தை தவிற ஒண்ணும் இல்லை. ஆனா எப்பவும் நான் பயப்படற விஷயங்களில் எல்லாமே எப்படி ஊடுருவி போய் முழுசா வெளில வந்துடறேன்னு ஆச்சர்யமா இருக்கு: கார்ல போட்டு கேட்டுண்டே போற ருத்ரமும் சிவபுராணமும் பயம் attachment desire ல நாலா புறமும் மனசு தாவும் சமயம் தவிற இயல்பா பாதிப்பு இல்லாம காரியங்கள் செய்யும் போது உள்ள தானே போயிண்டு இருக்கறதை பாக்க, அனுபவிக்க முடியறது. இப்ப சமீபமா desire என்பதும், கோபம் என்பதும் தப்பில்லை அதுவும் ஹெல்ப் பண்ணற tool அதை கவனிக்கும் விதமா கவனிக்கும்போதுன்னு தெரிஞ்சப்போ வியப்பா இருக்கு . Started to read a book .You may like as well. Online free e-book pdf is available இன்னும் அந்த புஸ்தகத்தை முடிக்கலை. ஓஷோ வோட Book of secrets , Vigyan Bhairav Thanthra - ஒரு eye opener . ம். வாஸ்தவம் .. க ..வ..ன ..ம் அது சுகம் தான். அந்த சுகமும் அனுபவமே !! W(ord) A(ction) T(hought)C(haracter) H(eart) ல இருக்கு வித்தை !!
அக்கா இல்லாம வேறு யாரு லிஸ்ட்ல இருக்க முடியும்? :P:P:P//
:))))))
ஜெயஸ்ரீ அக்கா! ஏன் பயம்? ம்ம்ம்ம் ஒவ்வொத்தருக்கு ஒரு மாதிரி இருக்கலாம். when you accept something as such you stop giving importance to it.that is all. so i shd not affect you!
Post a Comment