ஸ்னானத்துக்கு உகந்த ஜலங்கள்:
மனிதர்கள்
வெட்டி உருவாக்கியது குளம்,
தடாகம்.
இயற்கையாக
அமைந்தது தேவகாதம்,
ரிஷிகள்
சேவித்த ஜலம் ஸரஸ்.
8000 கோல்
தூரம் ஓடியது நதி ஆகும்.
அதற்கும்
குறைவான ஓடும் நீர் கர்த்தம்
(வாய்க்கால்).
அரசர்கள்,
ரிஷிகள்,
தேவர்கள்
நிமானித்த கிணறு குளங்களில்
தினமும் ஸ்னானம் செய்யலாம்.
கிணற்றில்
இருந்து எடுத்து ஸ்னானம்
செய்வதைவிட பூமியில் உள்ள
நீர்நிலையில் மூழ்கி ஸ்னானம்
செய்வது உத்தமம்.
இதே போல
வரிசையில் ஒன்றை விட ஒன்று
உகந்தது என்பதாக:
மலை அருவி.
ஸரஸ்.
நதி,
தீர்த்தம்,
கங்கை
இவை ஒன்றை விட ஒன்று உத்தமம்.
பிறர்
நிர்மாணம் செய்த ஜலங்களில்
குளிப்பதானால் மூன்று மண்
பிண்டங்களை ஜலத்தில் இருந்து
எடுத்து கரையில் போட்டுவிட்டு
குளிக்கலாம்.
(இது தானும்
அதற்கு உபகாரம் செய்ததாக
ஆகிறது.) பிறரது
கிணற்றில் ஸ்னானம் செய்வதானால்
மூன்று குடங்கள் நீரை
இறைத்துவிட்டு செய்க.
தர்மத்துக்கு
என கட்டிவிடப்பட்ட கிணறு
குளங்களுக்கு இந்த நியமங்கள்
இல்லை. ஆனால்
இவற்றை நிர்மாணம் செய்தவர்
நாஸ்திகராகவோ பதிதராவோ
இருப்பின் ப்ராஜாபத்ய கிருச்சரம்
செய்து கொள்ள வேண்டிய தோஷம்
உண்டு. பெரிய
ஜலாசயம் இருக்கையில் சிறியதில்
ஸ்னானம் செய்யலாகாது.
நதி
இருக்கையில் கிணறு முதலியவற்றில்
ஸ்னானம் செய்யலாகாது.
ராம
சேதுவைத்தவிர மற்ற இடங்களில்
கடல் நீரில் ஸ்னானம் செய்வது
அமாவாசை பௌர்ணமி அன்று மட்டுமே.
பிற
நாட்களில் கூடாது.
அதுவும்
மனைவி கர்ப்பமாக இருக்கையில்
ஒருவன் கடலில் ஸ்னானம்
செய்யலாகாது.
அக்னி
சம்பந்தம் பெற்ற ஜலம் விசேஷமானது.
ஆகையால்
உடல் நோய்வாய்ப்பட்டவர்
அதில் ஸ்னானம் செய்வது
விசேஷமானதாகும்.
வீட்டு
விலகானவள்,
பிரஸவித்தவள்,
பதிதன்,
பிணம்,
பிணத்தை
தொட்டவன்,
இவர்களை
தொட்டவன் உடனே கட்டிய துணியுடன்
ஸ்னானம் செய்ய வேண்டும்.
நாய் மேலே
பட்டாலும் ஸ்னானம் செய்யவேண்டும்.
கெட்ட
கனவு கண்டவன்,
வாந்தி
எடுத்தபின்,
மைத்துனம்
முடிந்த பின்,
சவரம்
செய்தபின்,
தன் உடம்பில்
பிணம் எரிக்கும் புகை பட்டாலும்
உடனே ஸ்னானம் செய்க.
நகரத்தில்
செல்லும் போது,
நெருக்கமான
இடங்கள்,
கடைத்தெரு
போன்ற இடங்களில் மற்றவர்
மேலே படாமல் முடிந்த வரை -
மாடு வாலை
வீசும் தூரமாவது -
ஒதுங்க
வேண்டும்.
தேவதை
உற்சவம் தரிசித்தபின்னும்,
மங்களமான
காரியங்கள் செய்தபின்னும்,
பந்துக்கள்/
சினேகிதர்களை
வழி அனுப்பிய பின்னும் ஸ்னானம்
செய்யக்கூடாது.
சாப்பிட்ட
உடனோ பாதி ராத்திரியிலோ
கூடாது.
No comments:
Post a Comment