நாய்
உடம்பில் பட்டால் கட்டிய
துணியுடன் ஸ்னானம் செய்ய
வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர்.
அல்லது
பட்ட இடத்தை/
உறுப்பை
அக்னியில் காட்டிவிட்டு
கால்களை அலம்பி ஆசமனம் செய்ய
வேண்டும்.
சிலர்
ஒருவன் நாபிக்கு கீழ் பட்டால்
ஆசமனம் போதும்;
நாபிக்கு
மேல் பட்டால்தான் ஸ்னானம்
என்கிறார்கள்.
க்ரஹணம்,
ஸங்கரமணம்,
விவாஹம்,
ஜனனம்
இவற்றில் ராத்திரியிலும்
ஸ்னானம் தானம் செய்யலாம்.
இவற்றை
தவிர்த்த மற்ற நேரங்களில்
இரவில் ஸ்னானம் கூடாது.
ஒரு
வேளை அப்படி செய்ய நிர்பந்தம்
இருந்தால் பகலில் கொண்டு
வந்த ஜலத்தால் ஸ்வர்ண
சம்பந்தத்துடன் செய்யலாம்.
அல்லது
அக்னியை சாட்சியாக வைத்துக்கொண்டு
குளம் நதிகளில் செய்யலாம்.
க்ரஹண
புண்ய காலத்தில் எல்லா
தீர்த்தங்களும் கங்கைக்கு
சமம். எல்லா
ப்ராஹ்மணர்களும் விஷ்ணுவுக்கு
சமம். எல்லா
தானங்களும் பூமி தானத்துக்கு
சமம்.
அந்த
நேரத்தில் கங்கையிலேயே ஸ்னானம்
செய்தால் கோடிக்கணக்கான
பசுக்களை தானம் செய்த பலன்
உடனேயே கிடைக்கிறது.
சகல புண்ய
தீர்த்தங்களிலும் ஸ்னானம்
செய்த புண்ணியம் கிடைக்கிறது.
க்ரஹண
புண்யகாலத்தில் ஸ்னானம்,
தானம்,
பித்ருக்களை
உத்தேசித்து ஹிரண்ய ச்ராத்தம்
இவற்றை அவசியம் செய்ய வேண்டும்.
இதனால்
அளவற்ற புண்ணியத்தை பெறுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை
சூரிய க்ரஹணமும் திங்கட்
கிழமை சந்திர க்ரஹணமும்
சம்பவித்தால் அதற்கு சூடாமணி
புண்ய காலம் என்று பெயர்.
ஜனன
மரண ஆசௌசம் இருந்தாலும் க்ரஹண
நேரத்தில் சுத்தி இருக்கிறது.
அதனால்
ஸ்னானம் செய்து தர்ப்பணம்
செய்யலாம்.
சூர்ய
பகவான் ஒரு ராசியிலிருந்து
இன்னொரு ராசிக்கு ப்ரவேசம்
செய்யும் நேரமே சங்க்ரமணம்,
சங்க்ராந்தி
எனப்படுகிறது.
அந்த
நேரத்தில் செய்யும் ஸ்னானம்,
தானம்,
ஹவ்யம்,
கவ்யம்
ஆகியவற்றுக்கு சூரிய பகவான்
7 வருஷம்
நல்ல பலன்களை தருகிறார்.
க்ரஹணம்
தெரியும் வேளையில் மட்டுமே
புண்ய காலம்.
முன்னும்
பின்னும் இல்லை.
ஆனால்
சங்க்ரமணம் சூஷ்மமானது.
எப்போது
நடக்கிறது என்பதை நிச்சயமாக
சொல்ல முடியாது.
ஆகையால்
முன்னும் பின்னும் 30+30
நாழிகைகள்
புண்ய காலமாகும்.
இரண்டு அயனங்கள், 4 ஷடசீதிகள், 4 விஷ்ணுபதிகள், 2 விஷுக்கள் சங்க்ராந்தி ஆகும். உத்திராயணம் மகர மாசத்திலும் தக்ஷிணாயனம் கர்க்கட மாசத்திலும் வரும்., மேஷமாசத்திலும் துலா மாசத்திலும் விஷூ வரும். அயனத்துக்கு பின்னும் விஷுவுக்கு பின்னும் விஷ்ணுபதி, ஷடசீதி என்பன கிரமாக வரும்
அயனம்
கோடி புண்ணியம்;
விஷு
ஆயிரம் புண்ணியம்;
ஷடசீதி,
விஷ்ணுபதி
இரண்டும் ஆயிரம் ஆயிரம்
புண்ணியம் என புகழப்படுகிறது.
No comments:
Post a Comment