Pages

Wednesday, July 25, 2012

பாபங்கள்- ப்ராயச்சித்தங்கள்


ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அதன் சட்ட திட்டங்களிலும் அதை அமுல் படுத்துவதிலும் இருக்கிறது.செய்யப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்று ஒன்று இல்லாத பக்ஷத்தில் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்சர்வ சாதாரணமாக இப்போது குற்றங்கள் செய்வதும் பல காரணங்களால் அவற்றுக்கு தண்டனை கிடைக்காமல் போவதும் நடந்து கொண்டிருக்கிறதுஇதற்கு சாதிஅரசியல்பணம் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஒன்று இருக்கிறதுபாபம் செய்தவன் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்இது இப்போதெல்லாம் உடனடியாக நடை பெறுவதில்லை என்பதால் மக்கள் மனதில் நம்பிக்கை போய்க்கொண்டே இருக்கிறது.

குற்றங்களை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லைதண்டனைப்பற்றி பயமில்லாத சமூகம் உருப்படாதுசின்னதோ பெரிதோ அதற்கு தகுந்தபடி தண்டனை இருந்தே ஆக வேண்டும்தன் நீதியை ப்ரயோகிக்காவிட்டால் ராஜ்யம் விவஸ்தையற்று (order இல்லாமல்அழிந்துவிடும் என்கிறார் மனுசாதாரணமாக மனித ஸ்வபாவம் மலினமானதுஉள்ளுக்குள் இருக்கும் ஆசாபாசங்கள் அவனை எப்போதுமே தவறை செய்ய தூண்டுகின்றனஅதனால் அநியாய வழியில் இருப்பவன் மீது தண்டத்தை ப்ரயோகிக்க வேண்டும் என்றும் இந்த பயத்தால் ப்ரஜைகள் தர்மத்தின் படி நடப்பர் என்றும் மனு சொல்கிறார்.

சாலையில் காகிதம் போட்டாலே அபராதம் என சட்ட திட்டங்களை அமுல் படுத்தும் சிங்கப்பூரில் ஒழுங்காக இருக்கும் இந்திய நபர் இந்தியா வந்தால் அப்படி இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்ஏனென்றால் இங்கே சட்ட திட்டங்கள் இருந்தாலும் அவை ஒழுங்காக அமுல் படுத்தப்படுவதில்லைகாவல் நிலையத்துக்கு குற்றவாளி போகு முன் உள்ளூர் கட்சிக்காரரிடமிருந்து போன் போகிறதுசரி என்று கிடைத்ததை வாங்கிக்கொண்டு விட்டுவிடும் பழக்கமும் வந்துவிட்டது.

என்டமுரி வீரேந்திரநாத் ஒரு கதையில் எழுதினார். "ஒரு கொலை செய்யப்பட்டால் அதற்கு வழக்கு பதிவாகி தண்டனை கொடுப்பதற்குள் ஏழு முக்கிய படிகள் இருக்கின்றனஅவற்றில் ஒரு படியை கவனிக்கும் ஆசாமியை கவனித்துவிட்டால் கூட தண்டனையில் இருந்து தப்பி விடலாம்.”

தப்பித்தவறி சமுதாய கவனிப்பு பெற்று விடும் வழக்குகளுக்கும் இப்போது ஒரு வேறு வித வழி வைத்து இருக்கிறார்கள்மீடியாக்கள் லபோ திபோ என்று அடித்துக்கொள்ளும் காலகட்டமான ஆரம்ப கட்டத்தில் குற்றவாளியை பிடித்து உள்ளே போட்டு விடுகிறார்கள்மெதுவாக அவர் பெயிலில் வெளியே வந்துவிடுகிறார்வழக்கு சில பல மாதங்கள் நடக்கிறதுகீழ் கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பாகி தண்டனையும் கொடுக்கப்படுகிறதுஇத்ற்குள் சமுதாய கொந்தளிப்பு அடங்கத்தொடங்கி விடுகிறதுஇன்னும் ஒரு வருடம் போனால் எல்லோரும் அதை மறந்தே போவார்கள்இந்த சமயத்தில் பெயிலில் இருக்கும் குற்றவாளி மேல்கோர்ட்டில் செய்த அப்பீலில் தவறான தகவல் அடிப்படையில் தண்டனை தரப்பட்டதாகவும்சட்டத்தை கீழ் கோர்ட் சரியாக கவனிக்கவில்லை என்றும் அது தவறு என்றும் சொல்லி ஆசாமி விடுதலை செய்யப்படுவார்இது எப்படி நிகழ்கிறதுஇது முழுவதும் ஒரு செட் அப்தான்வழக்காடப்படும்போதே ஓட்டை வாதங்களே முன் வைக்கப்படும்நடை முறைகள் சரியாக கடை பிடிக்கப்பட மாட்டாது.இருந்தாலும் குற்றவாளி என்பார்கள்மேல் கோர்டில் இந்த வாதங்களை ஒட்டியே வழக்கு நடக்கும்;நடை முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படும்சாட்சிகள் புதிதாக விசாரிக்கப்படுவதில்லைஓட்டை வாதங்கள் எடுபடாமல் போவதில் என்ன வியப்பு இருக்கிறது?இது போன்ற ஆசாமி எங்கள் ஊரிலேயே இருக்கிறார்.

இந்த குற்றங்களில் இருந்து இப்போதைக்கு தப்பி விட்டாலும் இயற்கையான தர்மம் அதற்கான தண்டனையை கொடுத்தே தீரும்டாக்டர்கள் சிலர் அவர்களிடம் அடிக்கடி தீராத பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகள் யார் யார் என்று கொஞ்சம் ஆராய்ந்த போது இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

குற்றங்கள் ஏராளமானவையாக இருந்தாலும் அவற்றுக்கான தண்டனையை சாத்திரங்கள் சொல்லியே வைத்து இருக்கின்றனதற்கால சட்ட திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்சாத்திரங்கள் சொன்னவற்றை சற்றே பார்க்கலாம்எவ்வளவு விஸ்தாரமான சிந்தனை இருந்திருக்கிறது என்பதும் விளங்கும்.
அவற்றை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Sunday, July 22, 2012

ஜீவ காருண்யம்.




எங்க வீட்டில பொழுது சாயற வேளைக்கு இருந்தீங்கன்னா பட் பட் ன்னு ஒரு வினோதமான சத்தத்தை கேட்கலாம். அது வேற ஒண்ணுமில்லை. பக்கத்துல வீட்டில இருக்கிற மாமி கொசு கொல்லி பேட்டால கைங்கரியம் செய்கிற சத்தம்தான் அது. கொசுக்கள் எலக்ட்ரோக்யூட் ஆகி செத்து விழற சத்தம்.


கொசு மேலே உக்காந்து கடிக்குது. ஒரு ரிப்லக்ஸ்ல அதை அடிக்கிறோம். அது தப்பிக்கலாம் அல்லது அடிபட்டு செத்துப்போகலாம். அதோட தலைவிதியை பொறுத்து அது இருக்கு. இது கொஞ்சம் புரிஞ்சுக் கொள்ளக்கூடியதே! கவனியுங்க, புரிஞ்சுக்கொள்ளக் கூடியது. ஒத்துக்கொள்ளக்கூடியது இல்லே.

ஆனா வேணும்ன்னு இப்படி வெளியே போய் உட்கார்ந்துகிட்டு பேட்டாலே கொசுக்களை கொல்லறதை எதில சேர்க்கிறது? இது செல்ப் டிபன்ஸ் இல்லே! எதிர்வினையும் இல்லே. இவங்க என்ன நினைச்சு இப்படி செய்கிறாங்கன்னு தெரியலை! இப்படி தினம் நூறு கொசுக்களை கொன்னா அது இல்லாம போயிடுமா? அது ஆயிரக்கணக்கில இருக்கு. சீக்கிரமா உற்பத்தியும் ஆயிடும். இரண்டு வாரங்களிலே உற்பத்தி ஆகுதாம். அதுவும் வாழ சரியான சூழ்நிலை இல்லை- உறைபனி, வறட்சி ன்னா சரியான தருணத்துக்கு காத்திருக்குமாம்! ஆக கொசுக்களை மொத்தமா ஒழிக்க முடியாது.

மத்த ஜீவ ராசிகளுக்கு வாழ இல்லாத ரைட்ஸ் நமக்கு மட்டும் என்ன இருக்கு? சின்னதோ பெரிசோ அதுவும் ஒரு ஜீவன், நாமும் ஒரு ஜீவன்தான். பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. பின்னே ஏன் அதை அனாவசியமா கொன்னு நம் கர்மா மூட்டையை இன்னும் பெரிசாக்கிக்கணும்?

பின்னே என்ன செய்கிறது? கொசு கடிச்சா வியாதி வருமே ன்னா..
எல்லா கொசுக்களும் மனுஷனை கடிக்கிறதும் இல்லை.
கொசு கடிச்சா வியாதி வர வாய்ப்பு இருக்கே தவிர எப்பவுமே வரும்ன்னும் இல்லை.

சரியான வழி நாம் வாழுகிற பகுதிகளிலே இவை பல்கி பெருகாம பாத்துக்கிறதுதான். தண்ணீர் தேங்காத சாக்கடை, டயர் மாதிரி பொருட்களை சரியா வெச்சுக்கிறது தேவையில்லாம குழிகளை வெட்டுறது- இப்படி தண்ணீர் தேங்காம இருக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யலாம். இது சமூகத்தில செய்ய வேண்டியது. நம்மை பொருத்த வரைக்கும் கொசுக்கள் அதிகமா நடமாடுகிற நேரங்களில உள்ளே வராம கதவு, ஜன்னல்களை மூடி வைக்கலாம். நல்ல தற்காப்பு கொசு வலைதான். ரசாயன கொசு விரட்டிகள் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஆனவை. (அதைப்பத்தி இன்னைக்கு வந்த பதிவுதான் இதை எழுத வெச்சது.) நைலான் கொசு வலைக்குள்ள கொஞ்சம் சூடு அதிகம் இருக்கும். சேலத்து பக்கம் பருத்தி கொசு வலை விக்கிறாங்கன்னு சமீபத்தில பத்திரிகையில் படிச்சேன். அதில இப்படி சூடு அதிகமாகிறது இல்லையாம்.

மேட்ரிக்ஸ் படத்தில வர ஒரு வசனம்தான் நினைவுக்கு வருது. மனுஷன்தான் இருக்கிற உயிரினங்களிலேயே மோசமானவன். வைரஸ் மாதிரி.  எங்கே போனாலும் அங்கே இருக்கிற மற்ற உயிரினங்களை ஒழிக்கறதிலேயே இருக்கான். அப்புறம் பல்கி பெருகி வேற இடங்களுக்கு பரவி…. அங்கேயும் நாசம்தான்.

கொஞ்சம் யோசிப்போம்.

Friday, July 20, 2012

நடந்து கொள்ள வை.....

ஜென் மாஸ்டர் பாங்கி பேசப்போகிறார் என்றால் பெரிய கூட்டமே சேரும். அவருடைய சீடர்கள் என்று மட்டுமில்லை. பலருக்கும் அவருடைய உரைகள் பிடித்து இருந்தது. அவர் பெரிதாக எந்த புத்தகத்தையும் மேற்கோள் காட்டுவது போன்றவற்றை செய்ய மாட்டார். இதயத்தில் இருந்து பேசுவார். அது கேட்போர் உள்ளத்தை தொடும். இது நிச்சிரன் என்ற கோஷ்டியை சேர்ந்த ஒருவருக்கு பொறாமையை கொடுத்தது. ஒரு நாள் அவர் பாங்கியுடன் வம்பு வளர்க்க முடிவு செய்து அவரது உரை நடத்துமிடத்துக்கு போனார். "ஓய் பாங்கி, உமக்கு பெரிய கூட்டம் சேரலாம். அவர்கள் உன் மீது மதிப்பு வைத்திருக்கலாம். நீ சொல்லும்படி நடக்கலாம். ஆனால் எனக்கு உன் மீது மதிப்பு இல்லை. நீ சொல்வது போல நான் நடந்து கொள்ள மாட்டேன். உன்னால் என்னை அப்படி நடந்து கொள்ள வைக்க முடியுமா?" பாங்கி அமைதியாக சொன்னார். "ஓ நடந்து கொள்ள வைக்கலாமே! இப்படி வாருங்கள்" இவரும் போனார். "இங்கே இடது பக்கம் உட்காருங்கள்." உட்கார்ந்தார். "அங்கே வேண்டாம், இங்கே வலது பக்கம் உட்கார்ந்தால் இன்னும் நன்றாக பேச முடியும் போல் இருக்கிறது. வலது பக்கம் வாருங்கள்." இடம் மாறினார். "பரவாயில்லை! நீங்கள் எவ்வளவு நல்லவர்! நான் சொன்ன படி எல்லாம் நடந்து கொள்கிறீர்களே! இப்போது உட்கார்ந்து என் உரையை கேளுங்கள்!" மூலம்: http://www.ashidakim.com/zenkoans/4obedience.html

Sunday, July 15, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை 7


19.
घटकुड्यादिकं सर्वं मृत्तिकामात्रम् एव
तद्वद् ब्रह्म जगत् सर्वम् इति वेदान्तडिण्डिमः
ghaṭakuḍyādikaṁ sarvaṁ mṛttikāmātram eva ca |
tadvad brahma jagat sarvam iti vedāntaḍiṇḍimaḥ ||
¹கு¹ட்³யாதி³¹ம்ʼ ஸர்வம்ʼ ம்ருʼத்¹தி¹கா¹மாத்¹ரம் ஏவ ச¹ |
¹த்³வத்³ ப்³ரஹ்ம ஜக³த்¹ ஸர்வம் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³: ||
குடம், சுவர் எல்லாம் மண்ணே, வேறில்லை. அது போல ப்ரம்மமே உலகெல்லாம்; வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.


20.
ब्रह्म सत्यं जगन्मिथ्या जीवो ब्रह्मैव नापरः
अनेन वेद्यं सच्छास्त्रम् इति वेदान्तडिण्डिमः
brahma satyaṁ jaganmithyā jīvo brahmaiva nāparaḥ |
anena vedyaṁ sacchāstram iti vedāntaḍiṇḍimaḥ ||
ப்³ரஹ்ம ஸத்¹யம்ʼ ஜக³ந்மித்²யா ஜீவோ ப்³ரஹ்மைவ நாப¹: |
அநேந வேத்³யம்ʼ ஸச்¹சா²ஸ்த்¹ரம் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³: ||
ப்ரம்மமே ஸத்யம்; ப்ரபஞ்சம் மித்யை (உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாதது.) ஜீவன் ப்ரம்மமே, வேறொன்றுமில்லை. இவ்வாறே சாத்திரத்தின் பொருளைச் புரிந்துகொள்ளவேண்டும். வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.


21.
अन्तर्ज्योतिर् बहिर्ज्योतिः प्रत्यग्ज्योतिः परात् परः
ज्योतिर्ज्योतिः स्वयंज्योतिः आत्मज्योतिः शिवोऽस्म्यहम्
antarjyotir bahirjyotiḥ pratyagjyotiḥ parāt paraḥ |
jyotirjyotiḥ svayaṁjyotiḥ ātmajyotiḥ śivo'smyaham || 

அந்த¹ர்ஜ்யோதி¹ர் ப³ஹிர்ஜ்யோதி¹: ப்¹ரத்¹யக்³ஜ்யோதி¹: ¹ராத்¹ ¹: |
ஜ்யோதி¹ர்ஜ்யோதி¹: ஸ்வயம்ʼஜ்யோதி¹: ஆத்¹மஜ்யோதி¹: ஶிவோ`ஸ்ம்யஹம் ||
உள்ளும் புறமும் ஜ்யோதியாய் இருப்பவன் நானே! மனதில் ஒளிரும் ஜ்யோதியும் நானே! எந்த ஜ்யோதியுக்கும் உயர்ந்ததாய், ஜ்யோதிக்கும் ஜ்யோதியாய், சுயம் ஜ்யோதியாய் ஆத்ம ஜ்யோதியாய் மங்களமாய் இருப்பவன் நானே!



அத்வைதம் மங்களம்

Saturday, July 14, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை 6

  
16. तापत्रयविनिर्मुक्तो देहत्रयविलक्षणः ।
 अवस्थात्रयसाक्ष्यस्मि चाहमेवाहम् अव्ययः ॥

 tāpatrayavinirmukto dehatrayavilakṣaṇaḥ |
 avasthātrayasākṣyasmi cāhamevāham avyayaḥ ||

 தா¹ப¹த்¹ரயவிநிர்முக்¹தோ¹ தே³ஹத்¹ரயவிலக்ஷண: |
 அவஸ்தா²த்¹ரயஸாக்ஷ்யஸ்மி சா¹ஹமேவாஹம் அவ்யய: || 

மூன்று வகை தாபங்களும் என்னை அணுக மாட்டா; மூன்று வகை உடல்களைக்காட்டிலும் நான் வேறானவன்; மூன்று நிலைகளுக்கும் நான் சாட்சியாவேன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன். 

17. दृग्दृश्यौ द्वौ पदार्थौ स्तः परस्परविलक्षणौ । 
दृग् ब्रह्म दृश्यं मायेति सर्ववेदान्तडिण्डिमः ॥ 

dṛgdṛśyau dvau padārthau staḥ parasparavilakṣaṇau |
 dṛg brahma dṛśyaṁ māyeti sarvavedāntaḍiṇḍimaḥ || 

த்³ருʼக்³த்³ருʼஶ்யௌ த்³வௌ ப¹தா³ர்தௌ² ஸ்த¹: ப¹ரஸ்ப¹ரவிலக்ஷணௌ |
 த்³ருʼக்³ ப்³ரஹ்ம த்³ருʼஶ்யம்ʼ மாயேதி¹ ஸர்வவேதா³ந்த¹டி³ண்டி³ம: ||

 காண்பவனும் காணப்பட்டதும் வேறானவை; காண்பவன் ப்ரஹ்மம், காணப்பட்டது மாயை. வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.

 18. अहं साक्षीति यो विद्याद् विविच्यैवं पुनः पुनः ।
 स एव मुक्तः सो विद्वान् इति वेदान्तडिण्डिमः ॥

 ahaṁ sākṣīti yo vidyād vivicyaivaṁ punaḥ punaḥ |
 sa eva muktaḥ so vidvān iti vedāntaḍiṇḍimaḥ ||

 அஹம்ʼ ஸாக்ஷீதி¹ யோ வித்³யாத்³ விவிச்¹யைவம்ʼ பு¹ந: பு¹ந: |
 ஸ ஏவ முக்¹த¹: ஸோ வித்³வாந் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³ம: ||

 மீண்டும் மீண்டும் விசாரித்து நான் சாட்சி மட்டுமே என்று எவன் புரிந்து கொள்கிறானோ, அவனே விடுதலையடைந்தவன்; அவனே ஞானி. வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.