16. तापत्रयविनिर्मुक्तो देहत्रयविलक्षणः ।
अवस्थात्रयसाक्ष्यस्मि चाहमेवाहम् अव्ययः ॥
tāpatrayavinirmukto dehatrayavilakṣaṇaḥ |
avasthātrayasākṣyasmi cāhamevāham avyayaḥ ||
தா¹ப¹த்¹ரயவிநிர்முக்¹தோ¹ தே³ஹத்¹ரயவிலக்ஷண: |
அவஸ்தா²த்¹ரயஸாக்ஷ்யஸ்மி சா¹ஹமேவாஹம் அவ்யய: ||
மூன்று வகை தாபங்களும் என்னை அணுக மாட்டா; மூன்று வகை உடல்களைக்காட்டிலும் நான் வேறானவன்; மூன்று நிலைகளுக்கும் நான் சாட்சியாவேன்; நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.
17. दृग्दृश्यौ द्वौ पदार्थौ स्तः परस्परविलक्षणौ ।
दृग् ब्रह्म दृश्यं मायेति सर्ववेदान्तडिण्डिमः ॥
dṛgdṛśyau dvau padārthau staḥ parasparavilakṣaṇau |
dṛg brahma dṛśyaṁ māyeti sarvavedāntaḍiṇḍimaḥ ||
த்³ருʼக்³த்³ருʼஶ்யௌ த்³வௌ ப¹தா³ர்தௌ² ஸ்த¹: ப¹ரஸ்ப¹ரவிலக்ஷணௌ |
த்³ருʼக்³ ப்³ரஹ்ம த்³ருʼஶ்யம்ʼ மாயேதி¹ ஸர்வவேதா³ந்த¹டி³ண்டி³ம: ||
காண்பவனும் காணப்பட்டதும் வேறானவை; காண்பவன் ப்ரஹ்மம், காணப்பட்டது மாயை. வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.
18. अहं साक्षीति यो विद्याद् विविच्यैवं पुनः पुनः ।
स एव मुक्तः सो विद्वान् इति वेदान्तडिण्डिमः ॥
ahaṁ sākṣīti yo vidyād vivicyaivaṁ punaḥ punaḥ |
sa eva muktaḥ so vidvān iti vedāntaḍiṇḍimaḥ ||
அஹம்ʼ ஸாக்ஷீதி¹ யோ வித்³யாத்³ விவிச்¹யைவம்ʼ பு¹ந: பு¹ந: |
ஸ ஏவ முக்¹த¹: ஸோ வித்³வாந் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³ம: ||
மீண்டும் மீண்டும் விசாரித்து நான் சாட்சி மட்டுமே என்று எவன் புரிந்து கொள்கிறானோ, அவனே விடுதலையடைந்தவன்; அவனே ஞானி. வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.
5 comments:
மூன்று வகை உடல்கள் என்றால் வாதம், பித்தம், கபம் உள்ள உடல்களைச் சுட்டுமா?
அப்போ தாபங்கள் என்னென்ன?? ம்ம்ம்ம்ம்ம்ம்???? காமம், குரோதம், மதம் போன்றவையா? தப்பாய்ப் புரிஞ்சுக்கறேனோ?
மூன்று வகை நிலைகள், பிரமசரியம், கிரஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம்???
மூன்று வகை உடல்கள்: ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள்.
தாபங்கள்: ஆத்யாத்மிக, ஆதி பௌதிக, ஆதி தைவிக. > தன்னிடமிருந்தே எழுவன, வெளியிலிருந்து வருவன, தெய்வ சங்கல்பத்தால் வருவன.
மூன்று நிலைகள்: ஜாக்ரத், ஸ்வப்ன, சுசுப்தி.
நான் இன்னமும் கீழ்நிலையிலேயே இருப்பதைக் காட்டுகிறது. :)))))) ஆனால் உடலுக்குஒருவேளை இப்படி இருக்குமோனு இதை யோசிச்சேனாக்கும். மத்தது நினைச்சுப் பார்க்கலை. அதிலும் தாபங்கள், சான்ஸே இல்லை. :))))
தப்பில்லை.
நீங்க பக்தி மார்கத்தை விட்டு அடுத்த நிலைக்கு வர மாட்டேங்கிறீங்க!
Post a Comment